Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”

இலங்கையின் ஆதிக்குடிகள் என நம்பப்படும் வேடுவ இன மக்கள், ஐந்து இந்திய பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .

இவர்கள் ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட மொழி பேசும் பழங்குடியினருடனும் இலங்கையின் வேடுவர்கள் வலுவான மரபணு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாக இந்திய மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.

மைட்டோகாண்ட்ரியன் என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த வாரம் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வு கட்டுரையில் இலங்கையின் சிங்கள அல்லது தமிழ் மக்களை விடவும், இந்த ஐந்து பழங்குடியினருடன் வேடுவ இனத்தவருக்கு அதிக மரபணு ஒற்றுமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/299759

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

அப்ப ஜாவா கச்சேரி  காரர்தான் ..இந்த இலங்கைக்கு சொந்தக்காரரோ...அதுதான் ரணிலு கிழக்கு ஆளுனரையே மாற்ற வெளிக்கிடுதோ?😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புத்த பிக்குகளும், இலங்ககை  தோ(தொ)ல்  பொருள் திணைக்களமும்... 
வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதிக்கப் போகிறார்களே.... 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, alvayan said:

அப்ப ஜாவா கச்சேரி  காரர்தான் ..இந்த இலங்கைக்கு சொந்தக்காரரோ...அதுதான் ரணிலு கிழக்கு ஆளுனரையே மாற்ற வெளிக்கிடுதோ?😁

சாவகச்சேரி என்பது முதலில் ஜாவகர் -சேரி எனப்பட்டதாம்?

ஆனால் இது இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இருந்து ஒல்லாந்தர் கொண்டு வந்தமர்த்திய ஜாவகர்கள்.

ஆனால் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் என்ற ஆதிகுடிகள் இருந்தன என சொல்கிறார்கள். 

இவர்களுடன் இருளருக்கும், பள்ளருக்கும் தொடர்பு இருக்கிறதாயின், விஜயனுக்கு முந்திய இலங்கையின் ஆதி குடிகள் திராவிட/தொல் தமிழரே என்பதை நிறுவ உதவியாக இருக்க கூடும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

நீங்கள் என்னத்தை நிறுவினாலும், அவங்கள் சம்மதிக்க வேணுமே. 😂
மகா வம்சத்தையே... அடிக்கடி திருத்திக் கொண்டு இருக்கிற ஆட்கள் அல்லவா அவர்கள். 🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, தமிழ் சிறி said:

இலங்ககை தோல் பொருள்

இதற்கு பொறுப்பான அமைச்சர் டயனா கமகேயா🤣

4 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் என்னத்தை நிறுவினாலும், அவங்கள் சம்மதிக்க வேணுமே. 😂
மகா வம்சத்தையே... அடிக்கடி திருத்திக் கொண்டு இருக்கிற ஆட்கள் அல்லவா அவர்கள். 🤣

ம்ம்ம்…..அதுவும் உண்மையே.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, goshan_che said:

இதற்கு பொறுபான அமைச்சர் டயனா கமகேயா🤣

அந்த மனிசி சுவிசிலை இருந்தது. டீசன்ரான பொம்பிளை என்று பார்த்தால்...
பாராளுமன்றத்தில் நடந்த ஒரு சண்டையில்... "சோடா மூடி" ரேஞ்சிலை நின்று சண்டை பிடிக்குது. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மைய நாட்களில், இலங்கையருக்கும் குறிப்பாக சிங்களத்திற்கும்  இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்துச் செல்கிறது. 

மறைமுக நிகழ்ச்சிநிரல் ஏதேனும்? 

😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"சிங்களத்திற்கும் [இலங்கை வேடருக்கும்]  [தென்] இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்பது எதிர்பார்த்த ஒன்றே. இது ஒரு புதுமையும் அல்ல மறைமுக நிகழ்ச்சிநிரலும் அல்ல"    

டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்கு தெரியும். ஆகவே ஆஃப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள். மற்ற இன்றைய மக்கள் அனைவரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆஃப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும். முன்னைய ஆப்பிரிக்க மக்களின் ஆதி  இடப் பெயர்வு நடைபெறவில்லை என்றால், மனித இனம் உடல் அமைப்பில் நீக்ரோ இனத்தைப் போன்றே இருந்து இருப்பார்கள். அது மட்டும் அல்ல, ஆப்பிரிக்காவை தவிர்ந்த மற்ற உலகின் பகுதிகளில் மனித இனம் என்று ஒன்று இருந்து இருக்காது. மனித இனம் பல கட்டங்களாக ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததாக பெரும் பாலான மானுட வியலாளர்கள் நம்புகிறார்கள். ஒரு மில்லியன் சகாப்தத்திற்கு முன், ஆசுத்திராலோ பித்தேக்கசு அஃபெரென்சிசு  [Australopitheus Afarensis] க்குப் பிறகே, ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழு நிலை தொல்முன்மாந்தன் அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள் என அழைக்கப்படும் மனித இனத்தின் பழமையான மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியே நடந்து சென்று ஐரோப்பா மத்திய கிழக்கு, ஆசியா போன்ற பகுதிகளில் குடியேறினார்கள் என்பதில் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதன் பின், நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால் [Neanderthal] மனிதனை தொடர்ந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், ஹோமோசேப்பியன்ஸ் [Homo sapiens] என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தும் மனிதன், மரபணு அடையாளம் காட்டி அல்லது குறியீடு M168 கொண்ட இவ் மனிதன்,  இரண்டாவது அலையாக ஆப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தது. இவன், அதற்கு முன் இடம் பெயர்ந்த தனது முன்னைய மூதாதையர்களை வெற்றி கொண்டான் என்கின்றனர். இந்த கருதுகோளின் படி இன்றைய நவீன மனிதன், இந்த ஹோமோ சேப்பியன்ஸின் சந்ததி ஆகும். இவர்கள் காட்டில் விலங்குகளை வேட்டையாடி காய் கனிகளை சேகரித்து உண்டு வாழ்ந்தனர். இந்நிலையில் இருந்த கற்கால மனிதன் ஒரு பகுதியாக நடந்தும் இன்னும் ஒரு பகுதியாக கட்டு மரம் போன்ற சிறு படகிலும் பயணம் செய்து இடம் பெயர்வு நடந்து இருக்கலாம் என கருதப் படுகிறது. இந்த முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்கள் [beachcombers], ஆப்ரிக்காவின் கடற்கரையோரமாக  தென் இந்தியா, இலங்கை, அந்தமான் வழியாக இடம் பெயர்ந்தார்கள். இவர்கள் தான் இந்திய, இலங்கையின் முதலாவது குடியிருப்பாளர்கள் 

இது இலங்கை வேடர்களிடமும் காணப்பட்டது!. இன்று இந்த  கடற்கரையோர அடையாளம் காட்டி , இந்தியாவின் குடித்தொகையில் ஆக 5% மட்டுமே. அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே காணப்படுகின்றது. இறுதியாக, இவர்கள்  விரைவாக இந்தியாவின் கடற்கரையோரமாக பயணித்து தென்கிழக்கு ஆசியாவையும் அவுஸ்ரேலியாவையும் பெரும்பாலும் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு அடைந்தார்கள். அதன் பிறகு, கொஞ்சம் காலம் கடந்து, இரண்டாவது குழு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்கு, தெற்கு மத்திய ஆசியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். 

[இலங்கை அன்று பிரிபடாத ஒரு பகுதியாக தென் இந்தியாவுடன் ஒட்டி இருந்தது, கடந்த பத்து இலட்சம் வருட காலப்பகுதியில், இலங்கை பல சந்தர்ப்பங்களில் இந்திய உப கண்டத்துடன் இணைந்து இருந்தது. கடைசியாக இடம்பெற்ற பிரிவு கி மு 5000, அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் கடைசியாக ஒரே பகுதியாக இருந்துள்ளது. எனவே இலங்கையின் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி ஆராய்வது இயலாத விடயம் ஆகும். இலங்கையும் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்ததனால், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் கூட இரு நாடுகளிலும் ஒரே விதமாக இருந்ததாகவும் கருதப் படுகிறது.] 

இந்தியாவில்,குறிப்பாக தென் இந்தியாவில் குடியேறிய  முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்களின் வழித்தடம் - M130 (M168-M 130) ஆகும். இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் pre-Dravidian] என அழைக்கலாம்.

இவைகளை தொடர்ந்து M89, 45,000 ஆண்டு அளவிலும் பின் ஈரான் சமவெளியில் அல்லது தென் மத்திய ஆசியாவில் M9, 40,000 ஆண்டு அளவிலும் தோன்றின. அங்கு இருந்த இந்து குஷ் (Hindu Kush), இமயமலை (Himalayas), தியன்-சான் (Tian-Shan) போன்ற பெரிய மலைத் தொடர்கள் இவர்களின் இடம் பெயர்தலுக்கு மிக இடைஞ்சலாக இருந்தன. இதனால் இந்த யூரேசிய மரபுக்குழு [Eurasian Clan M9] இரண்டு தொகுதியாக பிரிவு பட்டு இருக்கலாம்? ஒன்று இந்து குஷ்ஷினது வடக்கு பக்கமாகவும் மற்றது தெற்கு பக்கமாக பாகிஸ்தானுக்கும் இடம் பெயர்ந்து இருக்கலாம். இந்த தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பழைய கற் காலத்தின் இறுதி பகுதி [Upper Palaeolithic, Late Stone Age / (40,000-10,000 B.C.)] மக்களின் Y-குரோமோ சோம்மில் [chromosome / மரபணுச் சரம் / மரபணுத் தாங்கி]  திடீர் மாற்றம் ஏற்பட்டு மரபணு அடையாளம் காட்டி M20 தோன்றியது. இது இந்தியா தவிர வெளியில்  கணிசமான அளவு இல்லை-மத்திய கிழக்கு மக்களில் ஒரு வேளை 1-2 சத வீதம் இருக்கலாம் என்றாலும் துணைக்கண்டத்தில், தென் இந்தியாவில் இது கிட்டத்தட்ட  50 சத வீதத்திற்கு அதிகமாக  உள்ளது. இந்த M20 (M168-M9-M20) மரபணு அடையாளம் காட்டியை காவும் கூட்டம் கிட்டத் தட்ட 30,000 ஆண்டுகளுக்கு முன் பெரும் அளவில் இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து உள்ளது. இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-Dravidian] என அழைக்கலாம்.

[இப்படி இந்த யூரேசிய மரபுக்குழு M9 இன் சில உறப்பினர்கள் இந்தியா நோக்கி குடிபெயரும் போது மற்ற உறுப்பினர்கள் வடக்கு நோக்கி மத்திய ஆசிய, ஐரோப்பா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இந்த கூட்டத்தில் இருந்து படிப்படியாக M173 மரபணு அடையாளம் காட்டி தோன்றி, அது முதலாவது பெரிய மனித குடி பெயர்தலாக ஐரோப்பாவிற்குள் நுழைந்தார்கள். எப்படியாயினும் எதிர்பாராத சில காரணங்களால், M173 கூட்டத்தின் சில உறுப்பினர்கள் திரும்பி தெற்கு ஆசிய நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இது காலநிலைகளால் ஏற்பட்டும் இருக்கலாம்? இந்த திரும்பிய கூட்டத்தில் இருந்தே [M168 > M89 > M9 > M45 > M207 > M173 > M17] M17 என்ற இந்தோ – ஐரோப்பியர் குறியீடு [Indo-European marker] தோன்றியது. இது முதலாவதாக 10,000-15,000 ஆண்டுகளுக்கு முன் உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் [Ukraine or southern Russia] தோன்றியது. பின் கூர்கன் மக்கள் (Kurgan people) மூலம் யுரேசியா [Eurasia], ஸ்டெப்பி [steppe] பகுதி முழுதும் பரவி, அங்கிருந்து கிழக்கு, மத்திய ஐரோப்பா பகுதிகளுக்கும், ஈரானின் ஊடாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் வட இந்தியாவிற்கும் பரவியது என கண்டு பிடித்து உள்ளனர். மேலும் தேர் / ரதம் கி மு 3000 ஆண்டளவில் இவர்களால் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் இந்த அகன்று பரந்த மரங்கள் அற்ற புல்வெளியான ஸ்டெப்பி பகுதியில் தான், இதற்கு ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன், குதிரைகள் இவர்களால் பழக்கப்படுத்தப்பட்டன (domesticated). இன்று 35% க்கும் அதிகமான இந்தி (Hindi / ஹிந்தி] மொழி பேசும் இந்தியா ஆண்கள், இந்த மரபணு குறியீட்டை கொண்டுள்ளார்கள். ஆனால் திராவிட மொழி பேசுபவர்களில் இது 10% க்கும் குறைவாகவே உள்ளது. இது 10,000 ஆண்டுகளுக்குள் தான், அதிகமாக 5000 ஆண்டுகளுக்குள், ஸ்டெப்பியில் [புல்வெளி] இருந்து கணிசமான இந்த குழு இந்தியாவிற்குள் வந்ததை காட்டுகிறது]

அதாவது, 

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப் படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. ஸ்பென்சர் வெல்ஸ் [Spencer Wells] [இவரை நான் பத்தாவது உலகத் தமிழ் மகாநாட்டில் [10 th World Tamil Conference, Chicago / 4 th to 6 th July 2019] ஒரு முறை சந்தித்தேன்] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்"[Indian marker] என அழைக்கப்படும் M 20, திராவிடர்களின் மூதாதையர் வழி  L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி, 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறியமுடிகிறது. இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் [Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள். இந்த மலைத் தொடர் இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது. அங்குதான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன, இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-dravidian] என அழைக்கலாம். இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு, தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட  ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது. இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம், முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்தன. இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு பிறந்தது. மரபுக் காட்டி M 20 கூடுதலாக தெற்கு மக்களிடம் மட்டும் காணப்படுவதுடன் சிலவேளை 50 வீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இங்கும் அங்கும்மாக மட்டுமே காணப்படுகிறது. அதே வேளையில் மரபுக் காட்டி M 130 இந்தியாவில் தெற்கில் மட்டுமே முதன்மையாக காணப்படுவதுடன் அதுவும் 5 வீதம் அளவிலேயே காணப்படுகிறது.

மேலும் இந்த இரண்டு மரபுக் காட்டிகளின் கலப்பில் கரையோர மக்கள் கூட்டத்தின் ஆண் வழி பங்களிப்பு குறைவாக இருப்பது அறியமுடிகிறது. ஆகவே தென் இந்தியா புகுந்த மரபுக் காட்டி M 20 கூட்டத்தினர், அங்கு ஏற்கனவே குடியிருந்த மரபுக் காட்டி M 130 கூட்டத்தினரிடம் இருந்து தமக்கு மனைவிமாரை அல்லது ஒரு வாழ்க்கைத் துணைவியை பெற்றனர் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இவர்கள் கரையோர ஆண்களை பெரும்பாலும் துரத்தி, அல்லது கொலைசெய்து, அல்லது அவர்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருக்கலாம். என நம்பப்படுகிறது. மேலும் விந்திய மலைத் தொடரின் தெற்கில் வாழ்ந்த இந்த முந்திய திராவிட குழு, முதனிலைத் திராவிடர் குழுவின் பேச்சை ஏற்றுக் கொண்டு இருக்கலாம். அத்துடன் இமயமலை இந்தியா உபகண்டத்தை வட மத்திய ஆசியாவில் இருந்து பிரிக்கிறது. ஆகவே இது ஆதி தென் இந்தியா மக்களின் வடக்கிற்கான நடமாட்டத்தை கடினமாக்கிறது. அதே போல சிந்து நதியும் தார் பாலைவனமும் மேற்கிற்கான இயற்கை தடையாக உள்ளது. அரக்கன் மலைத் தொடர்கள் இந்தியா உப கண்டத்திற்கும் தென் கிழக்கு ஆசியாவிற்குமான பயண முட்டுக் கட்டையாக உள்ளது. இதனால் ஏற்பட்ட நீண்ட கால தனிமை, நாளடைவில், தனித்துவமான திராவிட இனத்திற்குரிய பண்புகள் தோன்ற வழிவகுத்தது எனலாம்.

உதாரணமாக 

இந்தியாவின் பழமையான மக்கள் நெகிரிட்டோ (Negrito) க்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன் வந்த இனக் குழுக்களில் முதன்மையானவர்கள் அவர்கள் தான். அவர்கள் கேரளா மற்றும் அந்தமான் தீவுகளின் மலைப்பகுதிகளில் குடியேறினர். ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற சில பழங்குடியினர் [Kadar, Irula and Puliyan tribes] நெகிரிட்டோக்களுடன் அதிக அளவில் ஒத்திருக்கிறார்கள். அவை  ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அவற்றின் அண்டை தீவுகளுடன் தொடர்புடையவை. நெகிரிட்டோக்கள் கருப்பு (கருமையான) தோல், கம்பளி முடி, அகன்ற மற்றும் தட்டையான மூக்கு மற்றும் சற்று நீண்டு சென்ற தாடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பலாங்கொடை மனிதன் தெற்காசியாவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட மறுக்க முடியாத பழமையான ஹோமோ சேபியன்ஸ் புதை படிவமாகும். அவை குறைந்தது 28,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும் அவை கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அந்த காலத்தில் இலங்கை தென் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அதாவது மகாவம்ச விஜயன் இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது 25,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும்.  

எனவே, 
 
மரபுக் காட்டி M 130 யை குறிப்பிட்ட அளவு கொண்ட இலங்கை வேடரும்
இந்தியாவின் பழங்குடியினருக்கும் இடையில் ஒற்றுமை இருப்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றே! 

சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று, ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள் தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான ஆய்வு மையத்தினர் [‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ / 'the Centre for Cellular and Molecular Biology / Hyderabad].

இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது. இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து  இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டு பிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர், பிபிசி [BBC] தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எனது முன்னைய கட்டுரைகளில் இருந்து தொகுத்தது

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

No photo description available. No photo description available.No photo description available. No photo description available. 217628547_10219562471835173_5849850544804892974_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fN48NuHRPlYAb46qBSO&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA3eofsBRYfBUaLdkcBcG6KAiyMh1ge1w9dV-uVpDgh2g&oe=662B6426No photo description available.

Edited by kandiah Thillaivinayagalingam
  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

நன்றி.

இந்த மரபணு சுட்டிகளில் ஒன்று மதுரையிலும், அதேபோல் அபர்ஜினிகளிடமும் பரவலாக உள்ளது என 2000 ஆண்டுகளில் ஒரு ஆராய்சியும் நிறுவியுள்ளது.

இனத்தூய்மை வாதம் இங்கே எவரும் பேச முடியாதது என்பதை இது காட்டுகிறது. சுத்தி சுத்தி பார்த்தால் எல்லாரும் ஆபிரிக்கரே.

அதே போல் ஆபிரிக்காவின் ரிட் வெளியில் இருப்போரை தவிர மிகுதி இடங்களில் உள்ள மிச்சம் எல்லாரும், வந்தேறிகளே.

இந்திய தீபகற்பகத்துள் முதலில் வந்த குழுக்கள் இரெண்டை திராவிட குடிகள் என வகைப்படுத்தின், அதன் பின் வந்தோரை ஆரியர் எனலாம் என நினைக்கிறேன்.

இதில் திராவிட குழுக்கள் கடைசி பனிக்காலம் முடியும் முன் தரை வழியாக இலங்கை வந்து அங்கே யக்கர், நாகர், வேடராக பரவி இருக்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, kandiah Thillaivinayagalingam said:

"சிங்களத்திற்கும் [இலங்கை வேடருக்கும்]  [தென்] இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்பது எதிர்பார்த்த ஒன்றே. இது ஒரு புதுமையும் அல்ல மறைமுக நிகழ்ச்சிநிரலும் அல்ல"    

இலங்கை ஒரு தீவு. அதைச் சுற்றி இந்திய துணைக் கண்டத்தைத் தவிர சூழ வேறு நிலப்பரப்பு ஏதும் இல்லாத போது, இலங்கையர் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இந்தியக் கண்டத்திலுள்ளவர்களுடன் மொழிவழி, பண்பாட்டு, கலை கலாச்சார, மரபணு ஒற்றுமை இருப்பது சிறு குழந்தைய் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே. இதை புரிந்துகொள்வத்ற்கு PhD முடித்திருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. 

எனது கேள்வி அதுவல்ல.

எனது கேள்வி, இந்த ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு  அதன் முடிவுகளை அடுத்தடுத்து வெளியிட வேண்டிய தேவை /காரணம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதன் பின்ணணியில் இருப்பது யார்? அதற்கான் தேவை என்ன? அந்தத் தேவை  ஏன் தற்போது எழுகிறது என்பதே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையில் முன்னமே, குறைந்தது 1976 இல் இருந்து - Genetic distance analysis by Dr R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia - மற்றும் பலரால்  'சிங்களவர்கள் பற்றிய மரபணு ஆய்வுகள்' வெளிவந்து விட்டன.  

ஆனால் இங்கு விவாதிக்கப்பட்டது அல்லது வெளியிடப்பட்டது 

Sri Lanka's only indigenous population Vedda share genetic link with ethnic populations in India Vedda, the only indigenous population in present-day Sri Lanka, is believed to be the direct descendants of the island’s early inhabitants.
[இலங்கையின் ஒரே பழங்குடி மக்கள்தொகையான வேடர்  இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களுடன் மரபணு தொடர்பைப் கொண்டுள்ளது. 

எனவே இன்றைய இலங்கையில் உள்ள இந்த வேடர்கள் , தீவின் ஆரம்பகால மக்களின் நேரடி வழித்தோன்றல்கள் என்று இதனால் நம்பப்படுகிறது.

அவ்வளவுதான்!! . 

அதாவது இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த, ஜோதிமாணிக்கம் என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும், திரு விருமாண்டிக்கு கிடைத்தது போல அல்லது ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற பழங்குடியினர் போன்றோர் போல 

எனவே உங்கள்  கேள்வி, 

இந்த ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு  அதன் முடிவுகளை அடுத்தடுத்து வெளியிட வேண்டிய தேவை /காரணம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதன் பின்ணணியில் இருப்பது யார்? அதற்கான் தேவை என்ன? அந்தத் தேவை  ஏன் தற்போது எழுகிறது என்பதே. 

இங்கு தேவையற்ற , பொருத்தமற்ற ஒன்றே என்பது என் தாழ்மையான எண்ணம்.

மேலும் இதே வலைத்தளத்தில் / யாழ் இணையத்தில் 

nunavilan என்பவரால்  

இலங்கையில் சிங்களவர்
 
நூல் திறனாய்வு: முனைவர்.க.சுபாஷிணி

[இலங்கையில் சிங்களவர்
 - இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும் - 
நூலாசிரியர்: பக்தவச்சல பாரதி]

பதியப்பட்டது October 20, 2021 இல்

இலங்கை மானுடவியல் ஆய்வுகளில் குறிப்பாக மரபணு ஆய்வு எனும் பொழுது இந்த நூலில் நூலாசிரியர் 6 ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றார் என்றும் அதன் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது 

எனவே 

அண்மைய நாட்களில், இலங்கையருக்கும் குறிப்பாக சிங்களத்திற்கும்  இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்துச் செல்கிறது.  என்பது முற்றிலும் பிழை 

இது எப்பவோ முடிந்த முடிவு.

இங்கு குறிப்பாக கூறியது இலங்கை 'வேடர்கள்  தான் இலங்கைத்தீவின்  தீவின் ஆரம்பகால மக்களின் நேரடி வழித்தோன்றல்கள்' என்பதே 

இறுதியாக 

இலங்கையர் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இந்தியக் கண்டத்திலுள்ளவர்களுடன் மொழிவழி, பண்பாட்டு, கலை கலாச்சார, மரபணு ஒற்றுமை இருப்பது சிறு குழந்தைய் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே.

சொல்ல இலகுவாக இருக்கும். அங்கு ஆராயும் பொழுது தான் சிக்கல்கள் தெரியும் 

உதாரணமாக 

இந்தியாவிலேயே, ஒரே நிலப்பரப்பிலேயே,  வட இந்தியர்  தென்  இந்தியர் - இவர்களுக்கிடையில் வேறு பாடு உண்டு 

அதேபோல 

சுமேரியருக்கும், அவர்களை சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய  மக்களுக்கும் தொடர்பு இல்லை 

நன்றி 

srilanka2.jpg 350px-Sri_Lankan_migration.png 350px-Genetic_admixture_of_Sinhalese_by_Papiha.PNG 350px-Genetic_admixture_of_Sinhalese.PNG

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

எனது கேள்வி, இந்த ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு  அதன் முடிவுகளை அடுத்தடுத்து வெளியிட வேண்டிய தேவை /காரணம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதன் பின்ணணியில் இருப்பது யார்? அதற்கான் தேவை என்ன? அந்தத் தேவை  ஏன் தற்போது எழுகிறது என்பதே. 

வேறென்ன பாலம் போடத்தான் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, goshan_che said:

சாவகச்சேரி என்பது முதலில் ஜாவகர் -சேரி எனப்பட்டதாம்?

அப்புறம் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கிபோர்டும் இணையமும் இருந்தால் காணும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பெருமாள் said:

அப்புறம் ?

Know the Etymology: 39
Place Name of the Day: Saturday, 03 June 2017

Cāvakac-cēri

சாவகச்சேரி
Cāvakac-cēri

Cāvakar+cēri

The Javanese settlement

சொல்வது நானல்ல - சாட்சாத் தமிழ்நெற்.கொம்

https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22810

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
1 hour ago, goshan_che said:

Know the Etymology: 39
Place Name of the Day: Saturday, 03 June 2017

Cāvakac-cēri

சாவகச்சேரி
Cāvakac-cēri

Cāvakar+cēri

The Javanese settlement

சொல்வது நானல்ல - சாட்சாத் தமிழ்நெற்.கொம்

https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22810

நானறிந்தது, உங்கே சந்திரபானு அரசனின் காலத்தில் சாவகர்கள் வந்திருந்தவர்களாம். அதனால் தான் உதற்கு சாவகச்சேரி என்ற பெயர் வந்தது என்று.

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, நன்னிச் சோழன் said:

நானறிந்தது, உங்கே சந்திரபானு அரசனின் காலத்தில் சாவகர்கள் வந்திருந்தவர்களாம். அதனால் தான் உதற்கு சாவகச்சேரி என்ற பெயர் வந்தது என்று.

தகவலுக்கு நன்றி.

ஜாவாவிற்கு அருகில் உள்ள சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகரில் ஐரோப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் குடியிருப்புகளும் கோவில்களும் இருந்தனவாம்.  இப்போதும் உள்ளன. 

கடாரம் வரை தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்த தமிழ் பேரரசுகள் இந்த நாடுகளின் முக்கிய நகர்களில் எல்லாம், chamber of commerce போல ஒரு அமைப்பை, தமிழரை கொண்டு நிறுவி அதன் வழி, வரி மட்டும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தினார்களாம். அதேபோல் கோவில்களும், அதை சுற்றி தமிழ் குடியிருப்புக்களும் அமைத்துள்ளார்கள்.

வெள்ளையர் வெள்ளயருக்கென இலங்கை காலி கோட்டை, சென்னையில் அமைத்த நகர்கள் போல என நினைக்கிறேன்.

ஆகவே தமிழர்கள் அங்கே போனது போல ஜாவாகாரர் இங்கேயும் வந்திருப்பர் என்பது அத்தனை நடக்கவியலாத காரியம் அல்ல.

https://en.m.wikipedia.org/wiki/Kampung_Madras
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
3 minutes ago, goshan_che said:

தகவலுக்கு நன்றி.

ஜாவாவிற்கு அருகில் உள்ள சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகரில் ஐரோப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் குடியிருப்புகளும் கோவில்களும் இருந்தனவாம்.  இப்போதும் உள்ளன. 

கடாரம் வரை தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்த தமிழ் பேரரசுகள் இந்த நாடுகளின் முக்கிய நகர்களில் எல்லாம், chamber of commerce போல ஒரு அமைப்பை, தமிழரை கொண்டு நிறுவி அதன் வழி, வரி மட்டும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தினார்களாம். அதேபோல் கோவில்களும், அதை சுற்றி தமிழ் குடியிருப்புக்களும் அமைத்துள்ளார்கள்.

வெள்ளையர் வெள்ளயருக்கென இலங்கை காலி கோட்டை, சென்னையில் அமைத்த நகர்கள் போல என நினைக்கிறேன்.

ஆகவே தமிழர்கள் அங்கே போனது போல ஜாவாகாரர் இங்கேயும் வந்திருப்பர் என்பது அத்தனை நடக்கவியலாத காரியம் அல்ல.

ஓம், இந்த சந்திரபானு அரசன் சாவகத் தீவிலிருந்து படையெடுத்து இலங்கைக்கு வந்தவன் தான். அவனுடைய மகன் பெயர் கூட "சாவக மைந்தன்" தான். அவன் இலங்கையில் தான் பிறந்தவன். அவனை தென்னிலங்கை சிங்கள அரசன் ஒருவர் தான் பின்னர் விரட்டியடித்தவன் என்று வரலாற்றில் படித்துள்ளேன். 

இது 13/14ம் நூற்றாண்டுகளில் நடந்ததாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரபானு (ஆங்கிலம்: Chandrabhanu அல்லது Chandrabhanu Sridhamaraja; தாய்: จันทรภาณุ ศรีธรรมราช) என்பவர் தாய்லாந்து நாட்டில் இருந்த தாமிரலிங்க இராச்சியத்தை 1230-ஆம் ஆண்டில் இருந்து 1263-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அரசராவார்.

தென் தாய்லாந்தில் இவர் கட்டிய கோயில் மூலமும் பாண்டியர் கீழ் சில ஆண்டுகள் இலங்கையை ஆண்டதன் மூலமும் அதிகம் அறியப்படுகிறார்.

இவர் 1247-ஆம் ஆண்டில் இரண்டாம் பராக்கிரம்மபாகு என்னும் சிங்கள் அரசனை எதிர்த்து தோல்வி அடைந்தார். பின்னர் பாண்டியர் உதவியுடன் சில ஆண்டுகள் வட இலங்கையை ஆண்டான்.

எனவே அவனுடன் போர்வீரர்களாகவோ, உதவியாளராகவோ கட்டாயம் 
அவன் ஆண்டுகொண்டு இருந்த தாமிரலிங்க இராச்சியத்தில் இருந்து, அவனின் தமிழ் போர்வீரர்கள் மற்றும் உதவியாளர்களுடன் சிலரோ , பலரோ வந்திருக்கலாம். அவர்களின் மொழி, பண்பாடு  வித்தியாசம் என்பதால், அதிகமாக அந்த சமூகம் எங்கேயோ ஓரிடத்தில் தனியாக 
குடியமர்த்தப்பட்டு இருக்கலாம். அதுவே  சாவகச்சேரி [Cāvakac-cēri.] யாக இருந்து இருக்கலாம் என்று ஊகிக்கிறேன் .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏற்கனவே இருக்குற மக்கள் தொகை காணாது  இதுல இது வேறையா..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@நன்னிச் சோழன் @kandiah Thillaivinayagalingam

வேறு ஒரு விடயத்தை பற்றி தேடும் போது இந்த சாவகர் என்பதற்கு இன்னொரு அர்த்தம் கிடைத்தது.

பண்டைய தமிழ் நம்பிக்கைகளில் ஒன்றான சமணத்தின் உட்பிரிவுகளில் ஒன்றுக்கு பெயர் சாவகம்/உலகாயதம். இதன்வழி ஒழுகியோரும் சாவகர் என அழைக்கப்பட்டுள்ளனராம்.

இது இறை நம்பிக்கை மறுப்பு, ஆசார மறுப்பு, பகுத்தறிவுவாதம் என கிட்டதட்ட இன்றைய பகுத்தறிவு/சுயமரியாதை/பெரியார் கொள்கைகளை சிலதை ஒத்து இருந்துள்ளது போல் தெரிகிறது.

சிலசமயம் இவர்கள் கூடி வாழ்ந்த இடமே சாவகர்-சேரி ஆமியும் இருக்கலாம்.

 https://ta.m.wikipedia.org/wiki/உலகாயதம்

இந்த இணைப்பு - சாவக நம்பிக்கையின் சாரம் என கீழ் கண்டவாறு உள்ளது.

வானுலகு, மோட்சம், நரகம், மறு உலகில் உயிர், வினைக் கோட்பாடு என்பன ஒன்றும் இல்லை. நால்வகை வருணப்பாகுபாடு, அவர்களுக்குரிய தொழில்கள், நியதிகள் என்பன ஒருவித உண்மை விளைவினையும் பயனையும் உண்டாக்கா. ஆண்மைத்திறமும் அறிவாற்றலும் இல்லாதவர்களின் பிழைப்பின்பொருட்டுத்தான் வேதங்கள், வேள்விகள், முத்தீ வளர்த்தல் உடம்பில் நீறுபூசுதல் என்பன உண்டாகி உள்ளன....உயிர் உள்ளவரைக்கும் மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும். கடன்பட்டாவது நெய்யுணவு கொள்ளட்டும். ஒருமுறை உடம்பு சாம்பாலான பின்னர், மீண்டும் அது எப்படி எப்பொழுது இங்குத் திரும்பும்? சடங்குகள் எல்லாம் பிராமணர்களின் பிழைப்புக்காக உண்டாக்கப்பட்டவை.

@கிருபன் @பாலபத்ர ஓணாண்டி உங்கள் பார்வைக்கும்.

ஐய்னே, இது புதிய தகவல். மிக்க நன்றி

ஆனால், அங்கே சமணம் இருந்தது தொடர்பாக நானறிந்ததில்லை. நீங்கள்?

அவர்கள் அங்கிருந்திருந்தால் இதுவும் நீங்கள் கூறியது போன்று ஒரு பொருளாக இருக்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐய்னே, இது புதிய தகவல். மிக்க நன்றி

ஆனால், அங்கே சமணம் இருந்தது தொடர்பாக நானறிந்ததில்லை. நீங்கள்?

அவர்கள் அங்கிருந்திருந்தால் இதுவும் நீங்கள் கூறியது போன்று ஒரு பொருளாக இருக்கலாம்.

நானும் அறிந்ததில்லை. ஆனால் சமணத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிட்ட படியால் - இருந்து சுவடழிந்து போயிருக்கலாம். ஊகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
39 minutes ago, goshan_che said:

நானும் அறிந்ததில்லை. ஆனால் சமணத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிட்ட படியால் - இருந்து சுவடழிந்து போயிருக்கலாம். ஊகம்தான்.

இருக்கலாம்!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.