Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Covishield-2-750x375.jpg

கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சித்த நிலையில், ஒரு சில நாடுகள் அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்தன.

இதில் பிரித்தானியாவைச் சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.

இந்த தடுப்பூசி இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.

இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்திருந்தார்.

மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் எதிராக நஷ்டஈடு கோரி சுமார் 51 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இவ்வழக்குகள் மீதான விசாரணைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த ஆவணத்தில், “தன் நிறுவனம் உருவாக்கிய கொவிஷீல்ட் கொவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும்“ என ஒப்புக்கொண்டதாக த டெலிகிராப் (the telegraph) ஊடகம் தெரிவித்துள்ளது.

இரத்த உறைவு மற்றும் இரத்தில் காணப்படும் குருதிச் சிறு தட்டுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1380347

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, தமிழ் சிறி said:

கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !

ஐய்யையோ நாலு ஊசி போட்டேனே...... என்ன கோதாரி நடக்கப்போகுதோ 😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஐய்யையோ நாலு ஊசி போட்டேனே...... என்ன கோதாரி நடக்கப்போகுதோ 😡

அவசரப் பட்டுட்டியே... குமாரு. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஐய்யையோ நாலு ஊசி போட்டேனே...... என்ன கோதாரி நடக்கப்போகுதோ 😡

75-80 ஆகுது. ஐயாவுக்கு போதாதோ?

3 hours ago, தமிழ் சிறி said:
8 hours ago, குமாரசாமி said:

ஐய்யையோ நாலு ஊசி போட்டேனே...... என்ன கோதாரி நடக்கப்போகுதோ 😡

அவசரப் பட்டுட்டியே... குமாரு

அமெரிக்காவுக்கு ஏதும் பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஐய்யையோ நாலு ஊசி போட்டேனே...... என்ன கோதாரி நடக்கப்போகுதோ 😡

என்னப்பா ஜேர்மனியில் இருந்து கொண்டு பைசர் போடாமல் அஸ்ரா ஷெனிக்கவைப் போட்டிருக்கிறீர்கள்.நான் 3 பைசர் போட்டேன்.என்க்குத் தெரிந்த வரையில் ஸ்ரோக்க வந்த பலரும் அஸ்ரா ஷெனிக்கா போட்டவர்களாக இருந்தார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

75-80 ஆகுது. ஐயாவுக்கு போதாதோ?

கட்டின பெஞ்சன் காசை அனுபவிக்க வேணுமெல்லோ

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

கட்டின பெஞ்சன் காசை அனுபவிக்க வேணுமெல்லோ

நீங்க இல்லாவிட்டால் குடும்பத்துக்கு போகும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இதை பற்றிய விவாதங்களை சமூக ஊடகங்களில் விவாதிப்பதை தடை பண்ணனும் குறிப்பிட்ட ஊசியை போட்டு நன்றாக இருப்பவனும் பயத்திலே மேலே போய் சேரப்போகிறார்கள்.

ஊரில் இருக்கும்வரை முணுக் என்றால் சாதாரண காய்ச்சலுக்கும் போடும் பென்சிலின் ஊசி யில் இருந்து போலியோ ஊசி வரை கண்ட  கண்ட  ஊசிகளை போட்டது உண்டு அவற்றுக்கும் பத்தில்  ஒன்றுக்கு அல்லது ஆயிரத்தில் நாலுக்கு  பக்க விளைவுகள் இருந்திருக்கலாம் இருந்தது .சிலருக்கு பென்சிலின் ஒவ்வாமை காரணத்தினால் மேலே போனவர்களும் உண்டு பெரிதாக செய்தி எடுபடாது  என்ன அப்போ டிஃடொக் வாட்சப் முகநூல் கிடையாது அபோது வாழ்ந்த மனுஷர்களும் நிம்மதியாய் வாழ்ந்து நிம்மதியாய் போய் சேர்ந்தனர் .

 

  • கருத்துக்கள உறவுகள்

 

முள்ளை  முள்ளால் தான் எடுக்கணும் வேற வழியே  கிடையாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேண்டாம் ப்ரோஸ்.

பக்க விழைவு அரிதானது. Rare. 

சில வேளை ஊசி போட்டிருக்காவிட்டால், இப்ப நாங்கள் எவராவது ஒருவரை நினைவு திரியில்…நல்லவர்…வல்லவர் என எழுதிகொண்டிருப்பம்.

அதிகம் நியூரொபின் எடுத்தாலும் பக்க விழைவு வரும். எல்லா மருந்து பக்கெட்டிலும் எழுதி இருக்கும்.

நாமிருக்கும் நாடுகளில்தான் எத்தனை இறப்புகள் -  இருப்பினும் யாழ்களத்தில் அத்தனை உறவுகளும் பத்திரமாக கொவிட்டை தாண்டி வந்துள்ளோம் எண்டால் அதன் மிக பெரிய காரணி, தக்க பாதுகாப்பை எடுத்தது + ஊசி போட்டது.

#Just chill 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகும் பக்கவிளைவு ஏற்படுமா?

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

2020, 2021ஆம் ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா, மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் தான்.

கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தங்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகவும், இந்த பக்க விளைவுகள் ஆபத்தை விளைவிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சிலர், தங்கள் உறவினர்கள் பலரை இழந்தற்கு கொரோனா தொற்று காரணம் இல்லை என்றும் , மாறாக கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசியால்தான் என்றும் கூறுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி பலருக்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக சிலர் வாதிடுகின்றனர்.

இந்த விவகாரத்தில் இரண்டு முக்கிய கேள்விகள் எழுகின்றன. முதலாவது, இந்த பக்க விளைவுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பது. இரண்டாவது, தடுப்பூசி செலுத்துக்கொண்ட ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அது தொடர்பாக பயப்பட வேண்டிய அவசியம் உள்ளதா என்பது.

முதலில் இந்த முழு விவகாரமும் எப்படி தொடங்கியது என்பதை தெரிந்து கொள்வோம்.

 
கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஏப்ரல் 2021 இல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தனது மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தனது மூளை சேதமடைந்ததாகவும் ஜேமி ஸ்காட் கூறினார்.

பிரச்னையின் தொடக்கப்புள்ளி

இந்த விவகாரம் முதன் முதலில் பிரிட்டனில் தொடங்கியது. அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி பாதிப்புக்கு எதிரான முதல் வழக்கு , இரண்டு குழந்தைகளின் தந்தையான ஜேமி ஸ்காட் என்பவரால் கடந்த ஆண்டு தொடரப்பட்டது.

அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி மூளை பாதிப்பை ஏற்படுத்தியதாக ஜேமி ஸ்காட் வாதிட்டார்.

ஏப்ரல் 2021 இல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தனது மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தனது மூளை சேதமடைந்ததாகவும் கூறினார். இதனால் தன்னால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என்கிறார்.

தடுப்பூசி போட்ட பலர் சேர்ந்து இந்த மருந்து நிறுவனத்திற்கு எதிராக தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.

சிலர் தங்கள் உறவினர்களில் பலரை இழந்ததாகவும், பலர் தங்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

தடுப்பூசி நிறுவனமே ஒப்புக்கொண்டது

ஜேமி ஸ்காட்டின் வழக்கறிஞர் பிபிசியிடம் பேசும்போது, நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா சமர்ப்பித்த ஆவணங்களில், சிலருக்கு சில அசாதாரண பக்கவிளைவுகள் இருக்கலாம் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்ட ஆவணத்தில், அந்த நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசி 'சில மிக அரிதான சந்தர்ப்பங்களில் TTS ஐ ஏற்படுத்தக்கூடும்' என்று ஒப்புக்கொண்டது என்றார்.

"சில மிக அரிதான சந்தர்ப்பங்களில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி TTS ஐ ஏற்படுத்தலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இது எப்படி நடக்கிறது என்பது இன்னும் தெரியவில்லை" என அஸ்ட்ராஜெனெகா கூறியுள்ளது.

இந்நிலையில் தங்களது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசிகளை (இந்தியாவில் கோவிஷீல்டு) திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

 
கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு TTS ஏற்படுவதை V.I.T.T அதாவது Vaccine Induced Immune Thrombosis with Thrombocytopenia என கூறுகிறார்கள்.

என்ன பக்க விளைவுகள் ஏற்படலாம்?

பக்கவிளைவுகள் பற்றி பேசும்போது, TTS/VITT syndrome பற்றி அறிவது முக்கியம். இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் TTS என்பது Thrombosis with Thrombocytopenia Syndrome என கூறுகின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு TTS ஏற்படுவதை V.I.T.T அதாவது Vaccine Induced Immune Thrombosis with Thrombocytopenia என கூறுகிறார்கள். TTS/VITT என்பது அசாதாரணமான ஒரு சின்ட்ரோம். இது திராம்போசிஸ் (Thrombosis) மற்றும் திராம்போசைட்டோபீனியா (thrombocytopenia) ஒருசேர நிகழ்வதன் காரணமாக ஏற்படுகிறது.

இன்னும் விளக்கமாக எளிமையாக சொல்வதெனில், திராம்போசிஸ் என்பது ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்த உறைதல், திராம்போசைட்டோபீனியா என்பது பிளேட்லட் குறைபாடு.

பிளேட்லட் எனும் வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும்.

ரத்தம் என்பது நான்கு முக்கிய பொருட்களை உள்ளடக்கியது. சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், பிளாஸ்மா மற்றும் பிளேட்லட்.

எலும்பு மஜ்ஜையில் சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களோடு பிளேட்லட்டும் உருவாகும்.

பிளேட்லட் சிறியதாகவும், நிறமற்றதாகவும் இருக்கும். நமது உடலில் ஒரு துளி ரத்தத்தில் லட்சக்கணக்கான பிளேட்லட்கள் இருக்கும்.

 
கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரத்த உறைவும், பிளேட்லட் குறைபாடு பிரச்னையும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால் அதன் விளைவுகள் மிக மிக அபாயகரமானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நமது உடலில் எங்கேயாவது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால், உடனே அந்தப்பகுதிக்கு பிளேட்டுகள் ஓடிவந்து ஒன்றுசேர்ந்து ரத்தப்போக்கை நிறுத்த உதவும். உடலில் இது இயல்பாகவே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாடோ அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் ஏதேனும் நோய் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் மருந்தின் பக்கவிளைவு காரணமாகவோ உடலில் பிளேட்லட் எண்ணிக்கை குறைந்துவிட்டால் அந்த நிலைமையைத்தான் திராம்போசைட்டோபீனியா (Thrombocytopenia) என மருத்துவ மொழியில் குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே, திராம்போசிஸ் (Thrombosis) எனும் ரத்த உறைவும் ஏற்பட்டு திராம்போசைட்டோபீனியா (Thrombocytopenia) எனும் பிளேட்லட் குறைபாடு பிரச்னையும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால் அதன் விளைவுகள் மிக மிக அபாயகரமானதாக இருக்கும், சில சமயங்களில் உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மாரடைப்பு, மூளையில் ரத்த உறைவு, நுரையீரலுக்குச் செல்லும் ரத்த குழாயில் ரத்த உறைவு (Blood Clot) காரணமாக உடலின் எந்த பாகத்துக்கு வேண்டுமானாலும் ரத்த ஓட்டம் தடைபடலாம்.

ரத்த உறைவு வெவ்வேறு வடிவங்களில் நிகழலாம். தடுப்பூசி போடாத நபர்களுக்கும் இது நிகழக்கூடும்.

எனினும், தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகுதான் VITT எனும் அரிய பிரச்னை ரத்தம் உறைவு காரணமாக ஏற்படுகிறது.

 
கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"நமக்கு காலில் ரத்த உறைவு ஏற்பட்டால் வலி, வீக்கம் ஏற்படும். மார்பில் ரத்த உறைவு ஏற்பட்டால் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி இருக்கக்கூடும்" என்கிறார் எய்ம்ஸ் பேராசிரியர் முகுல் அகர்வால்.

மருத்துவர்கள் கூறுவது என்ன?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், மருத்துவ இரத்தவியல் துறையின் இணைப் பேராசிரியராக உள்ள மருத்துவர் முகுல் அகர்வால், இது குறித்து பேசும்போது, விரிவாக விளக்கினார்.

"மருந்தோ தடுப்பூசியோ எடுத்துக்கொண்ட பிறகு, சில சமயங்களில் உடலில் உருவாகும் சில Anti Bodies ரத்த உறைதல் மற்றும் பிளேட்லட் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. எனினும் இது அரிதினும் அரிதான சின்ட்ரோம்" என்றார்.

மேலும், "'ஹெப்பரின்' என்ற மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்த TTS பிரச்னை தொடர்புபடுத்தப்படுகிறது. தடுப்பூசியோடும் இந்த பக்கவிளைவு தொடர்புபடுத்தப்படுகிறது."

"பொதுவாக ஹெப்பரின் மருந்தோ, தடுப்பூசியோ எடுத்துக்கொண்டால், சுமார் ஒன்றரை மாதங்கள் வரை ஏதேனும் தீவிர பக்கவிளைவு ஏற்படுகிறதா என கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்."

"இந்நாட்களில் ஹெப்பரின் மருந்து காரணமாக சிலருக்கு இந்த பக்கவிளைவு பிரச்னை வருவதை பார்க்கிறோம். ஆனால் தடுப்பூசியால் அல்ல."

"ஹெப்பரின் மருந்து யாருக்காவது கொடுக்கிறோம் எனில், அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிலருக்கு ரத்த உறைதலை தடுக்கும் மருந்தும் தரப்படும்" என்றார்.

ரத்த உறைவு, பிளேட்லட் குறைபாட்டின் அறிகுறியை பற்றி மருத்துவர் விளக்கினார்.

"நமக்கு காலில் ரத்த உறைவு ஏற்பட்டால் வலி, வீக்கம் ஏற்படும். மார்பில் ரத்த உறைவு ஏற்பட்டால் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி இருக்கக்கூடும்."

"மூளையில் ரத்த உறைவு ஏற்படுகிறது எனில் தலைசுற்றல், தலைவலி, பார்வை பிரச்னை, வலிப்பு, சுய நினைவை இழப்பது போன்றவை ஏற்படலாம். பிளேட்லட் குறைபாடு ஏற்பட்டால் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்" என்றார் மருத்துவர் முகுல் அகர்வால்.

 
கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எனவே சிலருக்கு ஒவ்வாமை, பக்க விளைவுகள் போன்றவை ஏற்படக் கூடும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர்.

தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் பயப்பட வேண்டுமா?

இப்போது அடுத்த முக்கியமான கேள்வி என்னவென்றால் – தடுப்பூசி போட்டு ஓரிரு ஆண்டுகள் ஆன பிறகும் அது தொடர்பாக பயப்பட வேண்டிய தேவை இருக்கிறதா? என்பதுதான்.

2023 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம், கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய Thrombotic Thrombocytopenia Syndrome என்ற ஒரு அரிய பக்க விளைவு பற்றி பேசியது.

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய பொது சுகாதார கொள்கை நிபுணர் டாக்டர் சந்திர காந்த் லஹரியா, ` "தடுப்பூசியின் கூறுகள் நமது ரத்தத்தில் சென்று, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தி, ஆன்டிபாடிகளை உருவாக்கி, நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன மற்றும் நோயை எதிர்த்து போராட தயார்படுத்துகின்றன" என்று கூறுகிறார்.

"ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எனவே சிலருக்கு ஒவ்வாமை, பக்க விளைவுகள் போன்றவை ஏற்படக் கூடும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்."

"உடல் வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம், சில சமயங்களில் அரிதினும் அரிதான நிகழ்வுகள் ஏற்படக்கூடும். ஆனால், யாருக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிந்துகொள்வது கடினம்."

"எந்தவொரு அரிதான பக்க விளைவும் கூட பொதுவாக 6 வாரங்களுக்குள்ளாகவே தெரிந்துவிடும். ஆறு வாரங்களுக்குப் பிறகு உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது மருந்து அல்லது தடுப்பூசி காரணமாகதான் ஏற்படுகிறது என்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு."

எனவே, யாராவது ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பூசியைச் எடுத்துக்கொண்டிருந்தால், கவலைப்பட தேவையில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் சந்திரகாந்த் லஹரியா, "ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது, நடனமாடும்போது என மக்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும் பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்தேன். இதற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பதாக கூற இதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது."

 
கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோவிட் பொதுமுடக்கத்திற்கு பிறகு பலரும் தங்களை சுறுசுறுப்பாக மாற்றிக்கொண்டுள்ளனர்.

"கோவிட் பரவல், ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். கோவிட்டுக்கு பிறகு, சிலர் தங்களை சுறுசுறுப்பாக மாற்றிக்கொண்டனர். இது அவர்களின் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தியது."

"ஒருசிலருக்கு அவர்களுக்கு தெரியாமலேயே உடலில் ஏதாவது மருத்துவப் பிரச்னைகள் இருக்கக்கூடும்."

"தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் பெரியளவில் உள்ளன. எனவே, அதுபோன்ற வீடியோக்களை தொடர்ச்சியாக காண்கிறோம்."

"எந்த ஒரு விஷயத்தையும் முற்றிலும் புறந்தள்ளக் கூடாது என்பது உண்மைதான். ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டிருந்தால், அது குறித்து அறிவியல்பூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் நாங்கள் அது குறித்து கருத்து எதையும் சொல்ல முடியாது" என்றார்.

உங்கள் உடலில் ஏதேனும் விசித்திரமாக உணர்ந்தால், அதை அலட்சியம் செய்ய வேண்டாம். உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c4n1y5py47qo

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ஜேமி ஸ்காட்டின் வழக்கறிஞர் பிபிசியிடம் பேசும்போது, நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா சமர்ப்பித்த ஆவணங்களில், சிலருக்கு சில அசாதாரண பக்கவிளைவுகள் இருக்கலாம் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

 

 

பாவனையில் இருந்து விலகும் ஒரு தடுப்பூசிக்கு ஆதரவு அவசியமில்லையென்றாலும், இந்த தடுப்பூசி மீது வழக்குப் போட்டிருக்கும் குழுவின் நோக்கத்தைச் சுட்டிக் காட்ட இதை எழுத வேண்டியிருக்கிறது. மேலே "ஊசியால் பாதிக்கப் பட்டேன்" என்று கூறும் நபரின் வழக்கறிஞரின் கூற்று, கீழே தடுப்பூசி பாவனைக்கு வந்த போதே வெளியிடப் பட்ட product insert இன் இணைப்பு:

https://www.ema.europa.eu/en/documents/product-information/vaxzevria-previously-covid-19-vaccine-astrazeneca-epar-product-information_en.pdf

பக்கம் 4 இல் coagulation disorders என்பதன் கீழ், TTS எச்சரிக்கை வழங்கப் பட்டிருக்கிறது. பிறகெப்படி "AZ முதன் முறையாக இப்போது தான் ஒத்துக் கொண்டிருக்கிறது" என்கிறார்கள்?

இப்படியான "அறிவுக் கோமாவில்" இருக்கும் கட்சிக் காரர்களை ஒன்று திரட்டி வழக்குப் போட்டு மருந்துக் கம்பனிகளிடம் பணம் சுருட்ட அலையும் வழக்கறிஞர்களை அமெரிக்காவில் ambulance-chasing வக்கீல் என்று அழைப்பர். அப்படிப் பட்ட ஒரு கேஸ் இது.

என் அபிப்பிராயம், இவர்கள் போன்ற சட்ட துஷ்பிரயோகம் செய்வோரை AZ நேரடியாக வழக்கில் எதிர் கொண்டு, தோற்கடித்து சில மில்லியன் பவுண்ஸ் வழக்குச் செலவை உருவி விட்டு தெருவில் விட வேண்டும்.

ஆனால், கம்பனிப் பெயர் கெட்டு விடுமென்பதால் அப்படிச் செய்யாமல் தவிர்ப்பார்கள், சமரசமாகப் போவார்கள். இந்த ஊக்கத்தில் இன்னும் கள்ள லோயர் குழுக்கள் கிளம்பி அடுத்த வக்சீன் கம்பனிகளைக் குறி வைக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

‘கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு – ஆய்விதழில் தகவல்!

17 MAY, 2024 | 10:08 AM
image
 

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 

வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவர்களில் 10.5% பேருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளும், 10.2% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8% பேர் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/183749

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

‘கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு – ஆய்விதழில் தகவல்!

17 MAY, 2024 | 10:08 AM
image
 

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 

வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவர்களில் 10.5% பேருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளும், 10.2% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8% பேர் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/183749

மிகவும் தரம் குறைந்த ஒரு ஆய்வு இது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்தியாவில் தயாரிக்கப் பட்ட இந்த BBV152 கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டோர் 1000 பேரை ஒரு வருடம் அவதானித்து சில நோய், ஆரோக்கிய நிலைமைகளை (Adverse Effects of Special Interest, AESI) பதிவு செய்திருக்கிறார்கள். ஆய்வை நடத்தியவர்களே சுட்டிக் காட்டியிருப்பது போல, இந்த நோய் நிலைமைகள் கோவாக்சினை எடுத்துக் கொள்ளாத ஒரு குழுவில் கணிக்கப் படவில்லை.

உதாரணமாக, "வயிற்றுக் கோளாறுகள் (Gastrointestinal disturbances)"  , தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத (அல்லது வேறு வகைத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட) குழுவில் அதேயளவு இருந்ததா? என்று கணித்திருக்க வேண்டும். இதைச் செய்வது அவ்வளவு கடினமல்ல, ஆனால் செய்து, முடிவு "வித்தியாசமில்லை" என்று வந்தால் எப்படி பேப்பர் போடுவது என்று அஞ்சி செய்யாமல் விட்டிருப்பார்களென ஊகிக்கிறேன்😂. யாரோ தரங் குறைந்த peer reviewers , கேள்வியே கேட்காமல் பிரசுரத்தை அனுமதித்திருக்கிறார்கள்.

வாசிக்க விரும்புவோருக்கு கீழே இணைப்பு:

https://link.springer.com/article/10.1007/s40264-024-01432-6

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

மிகவும் தரம் குறைந்த ஒரு ஆய்வு இது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்தியாவில் தயாரிக்கப் பட்ட இந்த BBV152 கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டோர் 1000 பேரை ஒரு வருடம் அவதானித்து சில நோய், ஆரோக்கிய நிலைமைகளை (Adverse Effects of Special Interest, AESI) பதிவு செய்திருக்கிறார்கள். ஆய்வை நடத்தியவர்களே சுட்டிக் காட்டியிருப்பது போல, இந்த நோய் நிலைமைகள் கோவாக்சினை எடுத்துக் கொள்ளாத ஒரு குழுவில் கணிக்கப் படவில்லை.

உதாரணமாக, "வயிற்றுக் கோளாறுகள் (Gastrointestinal disturbances)"  , தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத (அல்லது வேறு வகைத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட) குழுவில் அதேயளவு இருந்ததா? என்று கணித்திருக்க வேண்டும். இதைச் செய்வது அவ்வளவு கடினமல்ல, ஆனால் செய்து, முடிவு "வித்தியாசமில்லை" என்று வந்தால் எப்படி பேப்பர் போடுவது என்று அஞ்சி செய்யாமல் விட்டிருப்பார்களென ஊகிக்கிறேன்😂. யாரோ தரங் குறைந்த peer reviewers , கேள்வியே கேட்காமல் பிரசுரத்தை அனுமதித்திருக்கிறார்கள்.

வாசிக்க விரும்புவோருக்கு கீழே இணைப்பு:

https://link.springer.com/article/10.1007/s40264-024-01432-6

கோவேக்சின் தடுப்பூசி & பக்கவிளைவுகள் ஆய்வு குறித்த விளக்கம் 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை 

கொரோனா பெருந்தொற்று 
காலத்தில் உலகின் முக்கிய நாடுகள்  பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு தீவிர தொற்றுகளைத் தவிர்த்து அதனால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் பொருட்டு அவசர நிலையெனக் கருதி தடுப்பூசிகளைத் தயார் செய்தன. 

அமெரிக்கா - மாடர்னா மற்றும் ஃபைசர் ( கோமிர்நாட்டி)  தடுப்பூசி 

ரஷ்யா - ஸ்புட்னிக் தடுப்பூசி 

சீனா - சைனோஃபார்ம்

பிரிட்டன் - வேக்ஸ்செர்வியா  

இந்தியா - கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின்
 
கோவேக்சின் தொழில்நுட்பம் 

வைரஸை செயலிழக்கச் செய்து 
அதன் நோய் தொற்று உண்டாக்கும் ஆற்றலை இல்லாமல் செய்து 
உடலில் செலுத்துவதன் மூலம் 
நோய் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெறுவது கோவேக்சின் தடுப்பூசியின் தொழில்நுட்பமாகும். 
இது பழமையான காலத்தால் பரிசோதிக்கப்பட்ட குறைவான பக்கவிளைவுகளைக் கொண்ட தொழில்நுட்பமாகும். 

இந்த தடுப்பூசியை இந்திய அரசின் ஐசிஎம்ஆர் தொழில்நுட்பத்தை வழங்க அதைத் தயாரிக்கும் பொறுப்பை பாரத் பயோடெக் நிறுவனத்தார் ஏற்றனர். 

இந்தியாவில் இதுவரை 36  கோடி பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கள ஆய்வுகளில் ஏனைய கொரோனா தடுப்பூசிகளை வைத்து ஒப்பீடு செய்ததில்  மிகக் குறைவான பக்கவிளைவுகள் மற்றும் மிகக் குறைவான தீவிர பக்க விளைவுகள் கொண்ட தடுப்பூசியாக கோவேக்சின் தேறி இருப்பது உண்மை. 

எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு மருத்துவ ஆய்வில் 
கோவேக்சினுக்கு பக்கவிளைவுகள் இருப்பதாக முடிவு வெளியிடப்பட்டு 
அது பரபரப்பாகி வருகிறது. 

இந்தக் கட்டுரையில் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் தரம் மற்றும் முறைகளை சீர்தூக்கிப் பார்ப்போம். 

மருத்துவ ஆய்வுகளைப் பொருத்தவரை சிறந்த தரம் கொண்டவை என்றும் ஆய்வின் முடிவு அதிக நம்பகத்தன்மை கொண்டவையாக இருப்பது 
"இருபுறமும் மறைக்கப்பட்ட - ஆய்வில் கலந்து கொள்வோரிடத்தே பாரபட்சமின்றி சார்பில்லாமல் நடந்து கொள்ளும் ஆய்வுகளாகும். இதை DOUBLE BLINDED RANDOMISED CONTROL TRIALS என்போம். 

ஆய்வுகளில் பலம் குன்றியவை -  OBSERVATIONAL STUDIES நோக்குற்குரிய ஆய்வுகள் 
இத்தகைய ஆய்வுகளில் நடக்கும் நிகழ்வுகளை  நோக்க மட்டுமே முடியுமே அன்றி 
நிச்சயமாக எதனால் இவை நேர்ந்தன? என்பதை விளக்க இயலாது. 

மருத்துவ ஆய்வுகளை கூர்நோக்குவதில் பிரபலமான சொலவடை உண்டு.. 

OBSERVATIONS ARE NOT CAUSATIONS 

அதாவது ஆய்வில் நாம் கண்ட அத்தனை விசயங்களும் உண்மை ஆனால் அது எதனால் நடந்தது என்பதை கூற இயலாது என்பதால் 
அவற்றைக் காரணிகளாக அறிவிக்க இயலாது. 

இந்த ஆய்வும் ஒரு நோக்குற்குரிய ஆய்வு தான். 

இந்த ஆய்வு செய்யப்பட்ட விதம் :-
 
கோவேக்சின் தடுப்பூசி பெற்றவர்கள் 926 பேரை அவர்கள் தடுப்பூசி பெற்ற நாளில் இருந்து சரியாக ஒரு வருடம் கழித்து அலைப்பேசி மூலம் அழைத்து அவர்களுக்கு நேர்ந்த அல்லது அவர்களுக்கு அப்போது இருக்கும் நோய் குறித்து கேட்டறியப்பட்டது. 

இதில் தோராயமாக 50% பேருக்கு அந்த வருடத்தில் 
சுவாசப் பாதை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 

10.5% பேருக்கு தோல் சார்ந்த நோய்கள் 

10.2% பேருக்கு பொதுவான நோய்கள்

5.8% பேருக்கு தசை வலி 

5.5% பேருக்கு நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் 

4.6% பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு

2.7% பேருக்கு கண் சார்ந்த நோய்கள் 

0.6% பேருக்கு ஹைப்போதைராய்டிசம்

0.3% பேருக்கு பக்கவாதம் 

0.1% பேருக்கு குல்லியன் பாரி சிண்ட்ரோம் எனும் நரம்பு மண்டலத்தை தாக்கி பக்கவாதம்/நரம்பு தளர்ச்சி  ஏற்படுத்தும் நோய்  
வந்ததும் கண்டறியப்பட்டது. 
ஆயிரம் பேரில் ஒரு நபருக்கு கண்டறியப்பட்டது என்று பொருள். 

இதில் மேலே குறிப்பிட்ட நோய்கள் 
சாதாரணமாக தடுப்பூசி பெறாத மக்களுக்கும் அந்த வருடத்தில் ஏற்பட்டிருக்கும். 

ஆனால் இந்த ஆய்வில் CONTROL என்று கூறப்படும் "தடுப்பூசி பெறாத மக்களையும் ஒரு சேர ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களிடத்தில் இத்தகைய நோய்கள் அந்த வருடத்தில் எந்த விகிதத்தில் உண்டாகின என்பதையும் அறிந்து வெளியிட வேண்டும். 
அப்போது தான் அது தரத்தில் சிறந்த ஆய்வு. 

இந்த ஆய்வில் கண்ட்ரோல் ஆர்ம் என்று கூறப்படும் தடுப்பூசி பெறாதவர்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. 

மேலும் தடுப்பூசி பெற்ற ஒரு வருடத்திற்குள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டோரில்  நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் மூன்று பேருக்கு நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு ஏற்கனவே இருந்துள்ளது. 
ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

எனவே நிகழ்ந்த மரணங்களை நேரடியாக தடுப்பூசிகளினால் தான் நிகழ்ந்தன என்று அறுதியிட்டு கூற இயலாது என்று ஆய்வை செய்தவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள். 

உதாரணமாக  
இந்த ஆய்வில் நீங்களும் ஒருவராக இருந்திருந்தால்
உங்களுக்கு ஒரு வருடம் கழித்து அழைப்பு வந்திருக்கும்

"சார் இந்த ஒரு வருசத்துல
உங்களுக்கு சளி இருமல் ஏற்பட்டுச்சா?"

"ஆமா சார்.. ரெண்டு தடவ வந்துச்சு"

"உடம்பு கை கால் வலி?"

"இருந்துருக்கு சார்"

உடனே ஆய்வாளர் 
தடுப்பூசி பெற்றவர்களில் அந்த ஒரு வருடத்தில் சளி இருமல் உடல் வலி ஏற்பட்டவர்கள் லிஸ்ட்டில் உங்களையும் சேர்த்து அதை தடுப்பூசியின் பக்கவிளைவாக இருக்கலாம் என்று வெளியிடுவார்.

ஆனால் உண்மையில் 
தடுப்பூசி பெறாத உங்களின் நண்பருக்கும் அதே வருடத்தில் நான்குமுறை காய்ச்சல் சளி உடல் வலி ஏற்பட்டிருக்கலாம்
அதை ஆய்வாளர் கணக்கில் கொள்ள மாட்டார் .

மீண்டும் கூறுகிறேன் 
எந்த ஒரு விளைவுக்கும் பக்கவிளைவுகள் உண்டு
அதே போல மருந்துகளுக்கும் பக்கவிளைவுகள் உண்டு 

மருந்தின் நன்மை தரும் விளைவை அதன் பக்கவிளைவுகளோடு சீர்தூக்கிப் பார்த்தே மருந்துகள் புலக்கத்துக்கு வருகின்றன. 

எனினும் மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருந்து அதன் மூலம் ஆதாயம் தேடி 
மக்களிடம் தடுப்பூசிக்கு எதிரான ஒவ்வாமையை அதிகரிப்பதில் இது போன்ற ஆய்வுகள் முன்னிலை வகிக்கின்றன. 

இவ்வாறாக 
வலு குறைவான 
தரத்தில் குறைந்த 
கண்ட்ரோல் எனப்படும் தடுப்பூசி பெறாதவர்களையும் கணக்கில் சேர்க்காத
ஆய்வாளரின் சார்புத்தன்மை கேள்விக்குறியான 
இந்த ஆய்வின் முடிவுகளை 
மக்கள் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. 

கோவேக்சின் பெற்றுக் கொண்ட மக்கள் அச்சப்படத் தேவையில்லை. 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

https://www.facebook.com/100002195571900/posts/7906446342771806/?mibextid=xfxF2i&rdid=Jq78XUuAfp0A7sQc

May be an image of text that says "அச்சம் தேவையில்லை கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்! பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்படலாம் என பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஓராண்டாக 1,024 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சுவாசக் குழாய் தொற்று, நரம்பு மண்டல பாதிப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக பதின்ம வயதைச் சேர்ந்தவர்களிடம் இந்த பாதிப்புகள் அதிகம் காணப்பட்டதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது!"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.