Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைமையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை குறிப்பிட்டுள்ளது.  

வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை | Katunayake Airport Problem India Explanation

இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

இது தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியில், குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என கூறுவது முற்றிலும் பொய்யானது.

இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும்.

இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும்.” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது .

Gallery

https://tamilwin.com/article/katunayake-airport-problem-india-explanation-1714655948

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை நேற்று முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும் நேற்றையதினம் கணினிகளை சரியாக செயற்படுத்த முடியாமையினால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை | Tense Situation In Katunayake Today Visa Issue

நீண்டநேரம் காத்திருந்தமையை அடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து பயணிகள் கடும் கோபமாக அதிகாரிகளுடன் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர். 

https://tamilwin.com/article/tense-situation-in-katunayake-today-visa-issue-1714634812?itm_source=article

  • Replies 76
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதையும்  வித்தாச்சா??

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதையும்  வித்தாச்சா??

Beggars can’t be choosers , தமிழனிற்கு எதையும் வழங்க விடக்கூடாதென தம் நாட்டையே படுகுழியில் தள்ளி இன்றும் சிந்திப்பதாக தெரியவில்லை. 
பத்திரம் பத்திரம் பானை பத்திரம் என மாதான முத்தாவின் பானையும் போய் ஆடும் போய் விட்ட கதைதான்................

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, விசுகு said:

குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதையும்  வித்தாச்சா??

$50 க்கு கொடுத்த வீசாவை, இப்ப $75 மற்றும் $25 (கம்பனியின் அட்மின் பீஸ்) ஆக மாற்றியுள்ளனர். 

கொள்ளைதான் வேறு என்ன.

இந்த VFS கம்பெனிதான் இலங்கையில் இருந்து யூகே விசா, யூகேயில் இருந்து இந்தியன் வீசா போன்ற பலதை கையாள்கிறது.

ஆனால் இவர்கள் முடிவு எடுப்பதில்லை, அதை அந்த நாட்டு குடிவரவுத்துறையே மேற்கொள்ளும்.

தொடர்பான திரி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய கம்பனியே இதை நடத்துவதாக செய்தியில் கூறும்போது

அவசர அவசரமாக இந்தியாவுக்கும் இதுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஏன் இந்திய உயர்ஸ்தானிகர் அறிக்கை விட்டார்.

எவ்வளவு ஒரு முக்கியமான பொறுப்பு வாய்ந்த துறையை போதிய பரிசோதனைகள் செய்யாமல் எப்படி களமிறக்கிவிட்டனர்.

1 hour ago, விசுகு said:

அதையும்  வித்தாச்சா??

நீங்கள் ஆச்சரியப்பட்டது தான்

எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இன்னும் இன்னும் வரும்.

மயங்கி விழுந்துடாதேங்கோ.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

அந்த சிங்களவர் அகோரமாய் கத்துகிறார் நமக்கு images-7.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக ஒப்படைக்கவில்லை - அரசாங்கம்

02 MAY, 2024 | 09:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.

விசா விநியோகிக்கும் பணிகளுக்கு  உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா விநியோகத்தில் ஏற்பட்ட தாமத நிலைமை தொடர்பில் வெளியாகிய செய்திகள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருகை தரும் போது(உள் வருகையின் போது விசா)  முறைமை ஊடாக விசா விநியோகிக்கும் செயற்பாடு வி.எப்.எஸ்.குளோபல்  நிறுவனத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டது.

2023.09.11 ஆம் திகதி  நாட்டுக்குள் உள் வரும் போது  விசா விநியோகிக்கும் செயற்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்ட  வெளியாள் நிறுவனத்துக்கு  வழங்கும் பத்திரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்திருந்தார்.

இதற்கமைய முறையான விலைமனுகோரலுக்கு அமைய விண்ணப்பம் கோரப்பட்டு,கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களில் இந்த நிறுவனம் மிகச் சிறந்ததாக கருதப்பட்டது.

வெளிநாட்டவர்கள்  நாட்டுக்குள் வருகை தரும் போது விசா விநியோகித்தல் மற்றும் நிகழ்நிலை முறைமை ஊடாக விசாவுக்கு விண்ணப்பம் செய்தல் என்பனவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இந்த நிறுவனம் நவீன தொழில்னுட்பத்தை பயன்படுத்தி சேவைகளை முன்னெடுத்துள்ளது. 3388 மத்திய நிலையங்கள் ஊடாக 151 நாடுகளுக்கு விசா விநியோகிக்கும் வகையில் இந்நிறுவனம் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்துள்ளது.

இருப்பினும் கடந்த நாட்களில் இந்நிறுவனத்தின் சேவையில் சிக்கல் தோற்றம் பெற்றுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் இந்த நிறுவனத்துக்கு பொறுப்பு வழங்கபட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.

விசா விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக  உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி கருத்துக்களை வெளியிடும் அல்லது செயற்படும் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/182525

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியர் சிறீலங்காவின் சர்வதேச விமான நிலையத்தில் சிறீலங்கா  விசா வழங்குகிறார்.

 இப்படி வேறு எங்கேயாவது நடக்குமா? 

மோடி ஜீ வாழ்க…. 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் நிர்வாக சேவை வழமையாகவே சோம்பேறித்தனம். தங்கள் சோம்பேறித்தனத்திற்கு அரச கருமங்களை வெளியாரிடம் கையளிக்கின்றார்களோ?

இவ்வளவு காலமும் வீசா வழங்கினார்கள் தானே. அதி தொழில்நுட்பம் எனக்கூறி சோம்பேறித்தனத்திற்கு காரணம் கற்பிக்கின்றார்களோ?

இலங்கை நிர்வாக சேவையில் உள்ளவர்கள், இதுபற்றிய விடயம் அறிந்தவர்கள் விளக்கம் தர முடியுமா?

இத்தனை லட்சங்கள் படித்த பட்டதாரிகள் உள்ள நாட்டில் சொந்தமாக வீசா வழங்கல் செய்வதற்கு வசதி கிடையாதா?

யாரோ இதன் பின்னால் நின்று நல்ல காசு பார்க்கின்றார்கள் போல?

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
CEO and Founder of VFS Global
 
Born: 1968 (age 56 years)
Nationality: Indian

https://en.wikipedia.org/wiki/VFS_Global

இந்தியாக்காரன் தான்😂 (https://www.independent.co.uk/news/uk/home-news/vfs-global-home-office-outsourcing-visa-applications-a9061476.html)

பிறந்தது, படிச்சது, கக்காபோனது எல்லாமே இந்தியாவிலைதான்  🤣

இந்தியாக்காரனின்ட தூதுவராலயம் வழக்கம் போல புழுகுது, பிடிபட்டவுடனை🤥😏🙄

Edited by நன்னிச் சோழன்
பிற்சேர்க்கை
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைய வீசா நடைமுறை விவகாரம் : நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம்

Courtesy: Sivaa Mayuri

மூன்றாம் தரப்புக்கு(outsourcing) கையளிக்கப்பட்ட இணைய வீசா விண்ணப்ப செயல்முறை மீதான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கையின் அரசாங்க தகவல் திணைக்களம் பதிலளித்துள்ளது.

இது குறித்து முறையான ஆய்வு மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர் உலகம் முழுவதும் 146 மையங்களைக் கொண்ட VFS குளோபல் நிறுவனத்திற்கு அந்த செயல்முறை வழங்கப்பட்டது என்று தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆவண செயலாக்கம்

மேலும், வீசா ஒப்புதல் எப்போதுமே  இலங்கை குடிவரவு நிறுவனத்தால் தக்கவைக்கப்படுகிறது என்று கூறியுள்ள திணைக்களம்,  VFS குளோபல் நிறுவனம், வேறு நாடுகளில் செயற்படுவதை போன்று ஆவண செயலாக்கத்தில் மாத்திரமே ஈடுபடுகிறது என்றும்  தெரிவித்துள்ளது.

இணைய வீசா நடைமுறை விவகாரம் : நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம் | Internet Visa Procedure Issue

இலங்கையர்களான நாங்கள், வேறு எந்த நாட்டிற்கும் பயணிக்க வீசாவிற்கு விண்ணப்பிக்கும்போது VFS குளோபலுக்குச் செல்கிறோம்.

எனவே, உலகெங்கிலும் உள்ள மக்கள் இலங்கைக்கு செல்வதற்கான வீசாவிற்கு விண்ணப்பிக்கும் வசதியையும் குறித்த நிறுவனம் வழங்குகிறது.இது சுற்றுலாவை மேம்படுத்துவதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

இணைய வீசா நடைமுறை விவகாரம் : நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம் | Internet Visa Procedure Issue

அத்துடன், விண்ணப்பதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொடர்புடைய வீசாக் கட்டணங்கள் அரச திறைசேரிக்கானது என்றும், வீசாவிற்கான ஆவணங்களைச் செயலாக்குவதற்கான, சேவைக் கட்டணங்களை மாத்திரமே நிறுவனம் பெறும் என்றும் அரசாங்கம் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://tamilwin.com/article/internet-visa-procedure-issue-1714672589

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

இலங்கையில் நிர்வாக சேவை வழமையாகவே சோம்பேறித்தனம். தங்கள் சோம்பேறித்தனத்திற்கு அரச கருமங்களை வெளியாரிடம் கையளிக்கின்றார்களோ?

இவ்வளவு காலமும் வீசா வழங்கினார்கள் தானே. அதி தொழில்நுட்பம் எனக்கூறி சோம்பேறித்தனத்திற்கு காரணம் கற்பிக்கின்றார்களோ?

இலங்கை நிர்வாக சேவையில் உள்ளவர்கள், இதுபற்றிய விடயம் அறிந்தவர்கள் விளக்கம் தர முடியுமா?

இத்தனை லட்சங்கள் படித்த பட்டதாரிகள் உள்ள நாட்டில் சொந்தமாக வீசா வழங்கல் செய்வதற்கு வசதி கிடையாதா?

யாரோ இதன் பின்னால் நின்று நல்ல காசு பார்க்கின்றார்கள் போல?

இப்போ சற்று முன், பழைய வீசா வழங்கும் IT சிஸ்டத்தை மேற்பார்வை செய்த ஒரு மேலதிகாரியிடம் பேசினேன். 

இது முழுக்க முழுக்க அரச பணத்தை கொள்ளை அடிக்கும் செயல் என்கிறார்.

தாம், இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் 1 டாலருக்கு வழங்கிய, தொடர்ந்தும் வழங்க முன் வந்த சேவையை, புதிய கம்பெனி 18 டாலருக்கு செய்கிறதாம்.

நிச்சயமாக இது கொள்ளைதான்.

இப்போ நான் போனபோது மொத்த வீசா செலவு ஐம்பது டாலர்.

இனிமேல் வீசா கட்டணம் 75 அத்துடன் மேலதிகமாக VFS க்கு 25.

நாட்டிடம்/ பயணிகளிடம் கொள்ளை அடித்து - இந்திய தனியார் கம்பெனிக்கு கொடுக்கிறார்கள். சுளையாக கொமிசன் வரும்.

1 hour ago, MEERA said:

இந்தியர் சிறீலங்காவின் சர்வதேச விமான நிலையத்தில் சிறீலங்கா  விசா வழங்குகிறார்.

 இப்படி வேறு எங்கேயாவது நடக்குமா? 

மோடி ஜீ வாழ்க…. 

புலிகளை தோற்கடித்த பின், இலங்கையில் இந்தியா தனது வகிபாகத்தை இழந்து விட்டது. 

இலங்கையில் இந்தியா ஒரு செல்லாக்காசு. 

இப்படி எல்லாம் யாழில் எழுதியவர்கள் இந்தியாவை குறை மதிப்பீடு செய்துவிட்டார்கள் என்கிறீர்களா?

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொருளாதார மையங்களை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் ! இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு.

1000218649.jpg
பொருளாதார மையங்களை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் ! இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு !
.......................................
 
பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாம் முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.
 
கல்முனை எம்.பி ஹரீஸ் இல்லாமலேயே மோடியின் இலங்கை தூதுவருடன் ஹக்கீம் நேற்று ஒலுவில் துறைமுகத்திற்கு ஆய்வுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
 
இதேவேளை, மோடியின் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவுகள் மற்றும் இந்திய தூதுவருடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

தாம், இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் 1 டாலருக்கு வழங்கிய, தொடர்ந்தும் வழங்க முன் வந்த சேவையை, புதிய கம்பெனி 18 டாலருக்கு செய்கிறதாம்.

புதிய கம்பனி அவைக்கு இவைக்கு கமிசன் கொடுத்து கடைசியில் 5-10 தான் தேறும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இப்போ சற்று முன், பழைய வீசா வழங்கும் IT சிஸ்டத்தை மேற்பார்வை செய்த ஒரு மேலதிகாரியிடம் பேசினேன். 

இது முழுக்க முழுக்க அரச பணத்தை கொள்ளை அடிக்கும் செயல் என்கிறார்.

தாம், இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் 1 டாலருக்கு வழங்கிய, தொடர்ந்தும் வழங்க முன் வந்த சேவையை, புதிய கம்பெனி 18 டாலருக்கு செய்கிறதாம்.

நிச்சயமாக இது கொள்ளைதான்.

இப்போ நான் போனபோது மொத்த வீசா செலவு ஐம்பது டாலர்.

இனிமேல் வீசா கட்டணம் 75 அத்துடன் மேலதிகமாக VFS க்கு 25.

நாட்டிடம்/ பயணிகளிடம் கொள்ளை அடித்து - இந்திய தனியார் கம்பெனிக்கு கொடுக்கிறார்கள். சுளையாக கொமிசன் வரும்.

புலிகளை தோற்கடித்த பின், இலங்கையில் இந்தியா தனது வகிபாகத்தை இழந்து விட்டது. 

இலங்கையில் இந்தியா ஒரு செல்லாக்காசு. 

இப்படி எல்லாம் யாழில் எழுதியவர்கள் இந்தியாவை குறை மதிப்பீடு செய்துவிட்டார்கள் என்கிறீர்களா?

என்னதான் சொல்வது. ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு நாட்டை சூரையாடுகின்றார்கள். பணத்தை சுருட்டுவதற்கு பதவி தேவைப்படுகின்றது. பதவியை பிடிப்பதற்கு அரசியல் அவசியமாகின்றது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, ஈழப்பிரியன் said:

புதிய கம்பனி அவைக்கு இவைக்கு கமிசன் கொடுத்து கடைசியில் 5-10 தான் தேறும்.

அதே

46 minutes ago, நியாயம் said:

என்னதான் சொல்வது. ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு நாட்டை சூரையாடுகின்றார்கள். பணத்தை சுருட்டுவதற்கு பதவி தேவைப்படுகின்றது. பதவியை பிடிப்பதற்கு அரசியல் அவசியமாகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்கள் ஆவணங்களை சரிபார்த்து ஏற்றுக்கொள்வது மட்டும்தான் செய்கின்றார்கள். யூ.கே இற்கும் இவர்கள்தான் கடந்த 20 வருடங்களாக செய்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எவ்வளவுக்கு தான் முட்டு கொடுக்கிறது..

IMG-2121.gif

இரு நாட்டு அரசுகளும் மாறி மாறி அறிக்கை விடுவதிலேயே தெரிகிறது வண்டவாளம். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கம் VFS Global விசா நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என அறிவித்திருந்தது.

அதை இங்கு யாழில் எதிர்க்கவும் இல்லை அல்லது U.K. இந்தியன் விசா என்று உதாரணம் கொடுக்கவும் இல்லை.

ஆனால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பலர் குறிப்பாக சிங்களவர்களே கேள்விக்கு உட்படுத்தி உள்ள நிலையில் “சிறீலங்கா முட்டுக் கொடுப்போர் சங்கம்” மட்டும் தனது முட்டுக் கொடுப்புகளை நிறுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, பெருமாள் said:

விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

முன்னர் போல ETA விசா இல்லையா?

3 hours ago, MEERA said:

சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கம் VFS Global விசா நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என அறிவித்திருந்தது

Posted (edited)

இந்த நிறுவனம் நேற்று கால தாமதம் ஏற்பட விடாமல். காசையும் குறைத்து வாங்கி இருந்தால், வாயையும் *** ம் மூடிக் கொண்டு உல்லாசப் பயணிகளில் இருந்து சிங்களவர்களை வரை பேசாமல் போய் இருப்பார்கள் என்பதுடன் ஏன் இந்தியா (அல்லது இன்னொரு நாடு) என்ற கேள்வி கூட எவருக்கும், முக்கியமாக சிங்களவருக்கு ஏற்பட்டே இருக்காது.

முழு நாட்டையும் தமிழர் அல்லாத எந்த வெளி நாட்டவர்களுக்கு விற்றாலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கவலை இல்லை. ஆனால், அது இலவசமாகவோ அல்லது கட்டணம் குறைவானதாகவோ இருக்க வேண்டும்.

18 hours ago, பெருமாள் said:

பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாம் முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.
 
சவூதிக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ, அவ்வளவு ஏன், ஆப்கனின் தாலிபான்களுக்கோ கொடுப்பதாக இருந்தால், இதே வாய் மாறி கதைத்து இருக்கும்.

21 hours ago, goshan_che said:

இந்த VFS கம்பெனிதான் இலங்கையில் இருந்து யூகே விசா, யூகேயில் இருந்து இந்தியன் வீசா போன்ற பலதை கையாள்கிறது.

இவர்கள் தான் கனடா விசா விண்ணப்பங்களையும் ஏற்பது, மீள கடவுச் சீட்டை ஒப்படைப்பது, கூரியரில் அனுப்பி வைப்பது ஆகிய வேலைகளை கொழும்பில் செய்கின்றனர் (வீசா தகுதி யை கனடிய தூதரகம் மேற்கொள்ளும்)

இங்கும் கனடாவில் ஒன்ராரியோவில் இந்திய பாஸ்போர் விண்ணப்பங்களை ஏற்பதும், விண்ணப்பதாரிகளுக்கு ஒப்படைப்பது தொடர்பான வேலைகளை செய்வதும் இவர்கள் தான் (VFS global)

Edited by நிழலி
இந்திய என்ற சொல் விடுபட்டு விட்டது
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, MEERA said:

அதை இங்கு யாழில் எதிர்க்கவும் இல்லை அல்லது U.K. இந்தியன் விசா என்று உதாரணம் கொடுக்கவும் இல்லை.

யாழில் இதை எதிர்க்க யாழ் என்ன இலங்கை பாராளுமன்றமா🤣.

ஏன் இந்தியன், யூகே உதாரணம் கொடுக்கவில்லை? ஏன் என்றால் அப்போ இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. இப்போ செய்தியாகியபடியால் விபரங்கள் அலசப்படுகிறது.

4 hours ago, MEERA said:

ஆனால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பலர் குறிப்பாக சிங்களவர்களே கேள்விக்கு உட்படுத்தி உள்ள நிலையில் “சிறீலங்கா முட்டுக் கொடுப்போர் சங்கம்” மட்டும் தனது முட்டுக் கொடுப்புகளை நிறுத்தவில்லை.

மேலே திரியில் யாருமே சிறிலங்காவுக்குகோ, VFS ஐ உள்ளே கொண்டு வந்தமைக்கோ முட்டு கொடுக்கவில்லை. 

மாறாக எல்லாருமே முன்னர் இருந்த முறை சீராகவே இயங்கியது, அரசியல்வாதிகள் கொமிசனுக்காக VFS ஐ கொண்டு வந்து கொள்ளை அடிக்கிறார்கள் என்றே எழுதியுள்ளார்கள்.

நீங்களா முட்டு கொடுப்பதாக கற்பனை செய்து காற்றில் கம்பு சுத்துகிறீர்கள் சகோ.

18 hours ago, goshan_che said:

புலிகளை தோற்கடித்த பின், இலங்கையில் இந்தியா தனது வகிபாகத்தை இழந்து விட்டது. 

இலங்கையில் இந்தியா ஒரு செல்லாக்காசு. 

இப்படி எல்லாம் யாழில் எழுதியவர்கள் இந்தியாவை குறை மதிப்பீடு செய்துவிட்டார்கள் என்கிறீர்களா?

இன்னும் இந்த கேள்விக்கு பதில் வரவில்லை @MEERA

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, நிழலி said:

இவர்கள் தான் கனடா விசா விண்ணப்பங்களையும் ஏற்பது, மீள கடவுச் சீட்டை ஒப்படைப்பது, கூரியரில் அனுப்பி வைப்பது ஆகிய வேலைகளை கொழும்பில் செய்கின்றனர் (வீசா தகுதி யை கனடிய தூதரகம் மேற்கொள்ளும்)

இங்கும் கனடாவில் ஒன்ராரியோவில் பாஸ்போர் விண்ணப்பங்களை ஏற்பதும், விண்ணப்பதாரிகளுக்கு ஒப்படைப்பது தொடர்பான வேலைகளை செய்வதும் இவர்கள் தான் (VFS global)

தகவலுக்கு நன்றி. இவர்களை பற்றி கொஞ்சம் ஆராய்ந்ததில் ஆரம்பத்தில் இதை இந்தியர் ஒருவர் தொடக்கி இருந்தாலும் 2021 அமெரிக்க கம்பெனியான Blackstone Inc இதன் 75% பங்குகளை சுமார் 1.1 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

Kuoni எனும் லக்சறி சுற்றுலா முகவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். அதில் சீஈஓ சாக இருந்த இந்தியர் ஒரு side project ஆக ஆரம்பித்த விடயம், இன்று சுமார் 2 பில்லியன் டாலர் நிறுவனம்.

https://en.m.wikipedia.org/wiki/VFS_Global#:~:text=In October 2021%2C Blackstone acquired a majority stake in VFS Global.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சும்மா இருக்கும் இராணுவத்தினை இப்பணிகளில் அமர்த்தலாம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.