Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vasee said:

சும்மா இருக்கும் இராணுவத்தினை இப்பணிகளில் அமர்த்தலாம்.

ஆங்கிலம்/சிங்களம் தெரியாத புலம் பெயர் தமிழருக்கு ஏர் போர்ட்டில் இருக்கும் பிரச்சனைகளை இது பத்து மடங்கால் கூட்டும்.

  • Replies 76
  • Views 4.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • விசுகு
    விசுகு

    குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் 

  • பெருமாள்
    பெருமாள்

    Beggars can’t be choosers , தமிழனிற்கு எதையும் வழங்க விடக்கூடாதென தம் நாட்டையே படுகுழியில் தள்ளி இன்றும் சிந்திப்பதாக தெரியவில்லை.  பத்திரம் பத்திரம் பானை பத்திரம் என மாதான முத்தாவின் பானையும் போய்

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    Zubin Karkaria CEO and Founder of VFS Global    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

முன்னர் போல ETA விசா இல்லையா?

VFS இன் இணையத்தளத்திற்குள் சென்று மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றை கொடுத்து பதிவு செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும் அண்ணா.

@goshan_che அரசியல் நிலமைகள் ஒருபோதும் நிலையாக இருந்ததில்லை..

1 hour ago, goshan_che said:

யாழில் இதை எதிர்க்க யாழ் என்ன இலங்கை பாராளுமன்றமா🤣.

ஏன் இந்தியன், யூகே உதாரணம் கொடுக்கவில்லை? ஏன் என்றால் அப்போ இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. இப்போ செய்தியாகியபடியால் விபரங்கள் அலசப்படுகிறது.

மேலே திரியில் யாருமே சிறிலங்காவுக்குகோ, VFS ஐ உள்ளே கொண்டு வந்தமைக்கோ முட்டு கொடுக்கவில்லை. 

மாறாக எல்லாருமே முன்னர் இருந்த முறை சீராகவே இயங்கியது, அரசியல்வாதிகள் கொமிசனுக்காக VFS ஐ கொண்டு வந்து கொள்ளை அடிக்கிறார்கள் என்றே எழுதியுள்ளார்கள்.

நீங்களா முட்டு கொடுப்பதாக கற்பனை செய்து காற்றில் கம்பு சுத்துகிறீர்கள் சகோ.

இன்ன @MEERA

திரியை வாசித்து எழுதுங்கள் முன்னுக்கு பின்னுக்கு என்ன உள்ளது என.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆங்கிலம்/சிங்களம் தெரியாத புலம் பெயர் தமிழருக்கு ஏர் போர்ட்டில் இருக்கும் பிரச்சனைகளை இது பத்து மடங்கால் கூட்டும்.

வாயையும் *** ம் மூட வேண்டியது  தான்..

  • கருத்துக்கள உறவுகள்

விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம்

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குறித்த போராட்டத்தை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பினர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக முன்னெடுத்தனர். 

IMG_5244.jpg

IMG_5236.jpg

IMG_5228.jpg

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, MEERA said:

VFS இன் இணையத்தளத்திற்குள் சென்று மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றை கொடுத்து பதிவு செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும் அண்ணா.

@goshan_che அரசியல் நிலமைகள் ஒருபோதும் நிலையாக இருந்ததில்லை..

திரியை வாசித்து எழுதுங்கள் முன்னுக்கு பின்னுக்கு என்ன உள்ளது என.

என்னப்பா இது…திரிக்கையே படுத்து கிடக்கிற “சோஷலிஸ்ட்” - என்னை போய் திரியை வாசிக்க சொல்லிறியள்🤣.

புதிய VFS நடைமுறைக்கு எந்த கருத்தாளராவது முட்டு கொடுத்த உதாராணத்தை போடுங்களேன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

VFS இன் இணையத்தளத்திற்குள் சென்று மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றை கொடுத்து பதிவு செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும் அண்ணா.

@goshan_che அரசியல் நிலமைகள் ஒருபோதும் நிலையாக இருந்ததில்லை..

ஒன்லைனில் பழைய மாதிரி விசா எடுக்கலாம் என்றால் ஏன் இவ்வளவு சனம் வரிசையில் நிற்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒன்லைனில் பழைய மாதிரி விசா எடுக்கலாம் என்றால் ஏன் இவ்வளவு சனம் வரிசையில் நிற்கிறது?

எப்போதும் பஞ்சி பிடிச்ச கூட்டம் சிலது ஒன்லைனில் எடுக்காமல், அதே விசாவை on arrival எடுக்கும்.

ETS ஒன்லைனில் எடுத்தோர் நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போய், உங்கள் பாஸ்போர்ட், நிரப்பிய disembarkation card, ETS email ஐ காட்டினால் - பாஸ்போர்டில் ஸ்டாம் பண்ணி வெளியே விடுவார்கள்.

இதில் ஒன்லைனில் ETS எடுக்காமல் வருவோர் - இமிகிரேசன் கவுண்டர் போக முன், அதன் அருகில் இருக்கும் on arrival கவுண்டருக்கு போய் ETS ஐ எடுத்து கொண்டு பின் இமிகிரேசன் கவுண்டர் போக வேண்டும்.

இந்த on arrival counter இல் தான், VFS வந்த பின் தாமதம் ஏற்படுகிறது. 

நான் நினைக்கிறேன் முன்பு இந்த கவுண்டரில் இருப்பதும் இலங்கை இமிமிரேசன் அதிகாரிகள் என்பதால் அவர்கள் அந்த இடத்தில் வைத்தே ETS ஐ issue பண்ணினார்கள். இப்போ VFS பணியாளர் form ஐ எடுத்து போய் இலங்கை அதிகாரிகளிடம் கொடுத்து, அவர்கள் ETS ஐ issue பண்ணி, திரும்பி VFS இடம் கொடுத்து, அதை மீள பயணிகளிடம் கொடுக்க நேரம் எடுக்கிறது.

ஒன்லைனில் எடுத்து போனால் இந்த கால தாமதத்தை தவிர்க்கலாம்.

34 minutes ago, goshan_che said:

இருவரும் மன்னிக்கவும்..,

தற்போது on arrival visa அவே நடைமுறையில் உள்ளது… இணைய வழி இன்னமும் இயங்கவில்லை…

அதுதான் விமானநிலையத்தில் அமளி…

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இருவரும் மன்னிக்கவும்..,

தற்போது on arrival visa அவே நடைமுறையில் உள்ளது… இணைய வழி இன்னமும் இயங்கவில்லை…

அதுதான் விமானநிலையத்தில் அமளி…

ஒ…சரியான லுச்சா கூட்டம்🤣.

போவோரில் பெரும்பாலானோர் ஒன்லனில் எடுத்து விட்டே போவார்கள். அவ்வளவு பேரையும் ஒன் அரைவல் எடுக்க வைத்தால் - அமளி வந்தே தீரும்🤦‍♂️.

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்னப்பா இது…திரிக்கையே படுத்து கிடக்கிற “சோஷலிஸ்ட்” - என்னை போய் திரியை வாசிக்க சொல்லிறியள்🤣.

அது தானே அதுவும் முந்த நாள் மே 1ம் திகதி வர்க்க புத்துணர்ச்சி பெற்று வந்த பின்பு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ETS ஒன்லைனில் எடுத்தோர் நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போய், உங்கள் பாஸ்போர்ட், நிரப்பிய disembarkation card, ETS email ஐ காட்டினால் - பாஸ்போர்டில் ஸ்டாம் பண்ணி வெளியே விடுவார்கள்.

Disembarkation card உம் on line இல் நிரப்பலாம்.

23 சித்திரையில் போனபோது நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போனோம்.

ஒரு கதையும் இல்லை.குத்திப் போட்டு தந்தார்கள்.

3 hours ago, MEERA said:

இருவரும் மன்னிக்கவும்..,

தற்போது on arrival visa அவே நடைமுறையில் உள்ளது… இணைய வழி இன்னமும் இயங்கவில்லை…

அதுதான் விமானநிலையத்தில் அமளி…

அதுதானே விடயத்தை தெளிவா சொல்லுங்க.

எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

இப்போது தெளிவடைந்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:
3 hours ago, MEERA said:

இருவரும் மன்னிக்கவும்..,

தற்போது on arrival visa அவே நடைமுறையில் உள்ளது… இணைய வழி இன்னமும் இயங்கவில்லை…

அதுதான் விமானநிலையத்தில் அமளி…

ஒ…சரியான லுச்சா கூட்டம்🤣.

போவோரில் பெரும்பாலானோர் ஒன்லனில் எடுத்து விட்டே போவார்கள். அவ்வளவு பேரையும் ஒன் அரைவல் எடுக்க வைத்தால் - அமளி வந்தே தீரும்🤦‍♂️.

தகவலுக்கு நன்றி

எப்படிப்பட்ட கணனியை வைத்திருந்தாலும் இரண்டு விமானங்கள் ஒன்றாக வந்தால் எதிர்காலத்திலும் இப்படி மிக நீண்ட வரிசையில் நிற்க வேண்டி வரும்.

பணம் கூடினாலும் பரவாயில்லை என்று பேசாமல் 5 வருட மல்ரிப்பிள் விசா எடுத்து வைத்திருந்தால் பிரச்சனை இல்லைப் போல.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.srilankaevisa.lk/information

How to Apply for a Sri Lanka eVisa?

  • 1. Visit the official website of Sri Lanka eVisa.
  • 2. Create an account or log in if you already have one.
  • 3. Fill out the online application form with accurate details.
  • 4. Upload the required documents, including a scanned copy of your passport, a recent photograph, and any additional documents specified for your eVisa category.
  • 5. Pay the eVisa fee securely online using the available payment options.
  • 6. Once your application is submitted and payment is confirmed, you will receive an acknowledgment receipt and a unique application reference number.
  • 7. Track the status of your eVisa application online using your reference number.
  • 8. Upon approval, download and print your eVisa to present to the Immigration officer at the port of entry in Sri Lanka.
  • இந்த தளத்தில் போய் பார்த்தால் பழைய மாதிரி சகல விபரங்களையும் போட்டு (கூடுதலாக பாஸ்போர்ட்டும் படமும் கேக்கிறார்கள்)அனுப்பினால் சரி என்கிறார்களே?

    வந்த விசாவை காப்பி எடுத்து கொண்டு போகட்டாம்.

  • @MEERA @goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

Disembarkation card உம் on line இல் நிரப்பலாம்.

23 சித்திரையில் போனபோது நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போனோம்.

ஒரு கதையும் இல்லை.குத்திப் போட்டு தந்தார்கள்.

அப்படியா? தகவலுக்கு நன்றி. இனி பேனை தேடுற அலுப்பும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பிழம்பு said:

விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம்

IMG_5244.jpg

IMG_5228.jpg

சிங்கள மக்களுக்கு எப்பவும் இனவாத புத்திதான். இராணுவ  பாதுகாப்பு  உதவியுடன் தமிழர் பிரதேசங்களில் குடியேறும் இவர்களுக்கு எப்படித்தெரியும்  உலக தாராளவாத பொருளாதார முறையும்,தனியார் மயப்படுத்தல் பற்றியும்......??????

2009க்கு பின் பெரிய பொருளாதார நெருக்கடிகள் வந்தும் திருந்தவேயில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அப்படியா? தகவலுக்கு நன்றி. இனி பேனை தேடுற அலுப்பும் இல்லை.

முன்னர் இந்த காட்டை விமானங்களிலேயே தருவார்கள்.

இப்போது நிற்பாட்டிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

https://www.srilankaevisa.lk/information

How to Apply for a Sri Lanka eVisa?

  • 1. Visit the official website of Sri Lanka eVisa.
  • 2. Create an account or log in if you already have one.
  • 3. Fill out the online application form with accurate details.
  • 4. Upload the required documents, including a scanned copy of your passport, a recent photograph, and any additional documents specified for your eVisa category.
  • 5. Pay the eVisa fee securely online using the available payment options.
  • 6. Once your application is submitted and payment is confirmed, you will receive an acknowledgment receipt and a unique application reference number.
  • 7. Track the status of your eVisa application online using your reference number.
  • 8. Upon approval, download and print your eVisa to present to the Immigration officer at the port of entry in Sri Lanka.
  • இந்த தளத்தில் போய் பார்த்தால் பழைய மாதிரி சகல விபரங்களையும் போட்டு (கூடுதலாக பாஸ்போர்ட்டும் படமும் கேக்கிறார்கள்)அனுப்பினால் சரி என்கிறார்களே?

    வந்த விசாவை காப்பி எடுத்து கொண்டு போகட்டாம்.

  • @MEERA @goshan_che

நானும் account creation page வரைக்கும் போய்விட்டு, விட்டு விட்டேன். விரைவில் ஒரு குடும்ப உறவு போவார். அப்போ சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2321.png

முன்னர் இதே விசாவை 100 கட்டி எடுத்து வைத்திருந்தேன்.

இப்போ 5 மடங்கு கூடிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

IMG_5244.jpg

IMG_5228.jpg

சிங்கள மக்களுக்கு எப்பவும் இனவாத புத்திதான். இராணுவ  பாதுகாப்பு  உதவியுடன் தமிழர் பிரதேசங்களில் குடியேறும் இவர்களுக்கு எப்படித்தெரியும்  உலக தாராளவாத பொருளாதார முறையும்,தனியார் மயப்படுத்தல் பற்றியும்......??????

2009க்கு பின் பெரிய பொருளாதார நெருக்கடிகள் வந்தும் திருந்தவேயில்லை.
 
மிகச் சரியான கூற்று அண்ணை.

இப்பவும் அவர்களில் பலர்.

இந்தியா=இந்து= தமிழ் என்றே பார்க்கிறார்கள்.

 உண்மையில் இப்போதும் விசா கொடுப்பதா இல்லையா என்ற முடிவை எடுப்பது இலங்கை இமிகிரேசன் அதிகாரிகள்தான். 

கவுண்டரில் இருந்து தரும் விண்ணப்பத்தை வாங்கி processing செய்வது மட்டுமே VFS.

ஆனால் இதற்கே இந்த குறி குதிக்கிறார்கள்.

எனது கட்டுரையில் இனவாதம் எப்படி உள்ளது என கேட்ட கேள்விக்கு, அப்படியே உள்ளது, கொஞ்சம் உறங்கு நிலையில் உள்ளது என பதில் எழுதினேன். அதற்கான சாட்சி இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நானும் account creation page வரைக்கும் போய்விட்டு, விட்டு விட்டேன். விரைவில் ஒரு குடும்ப உறவு போவார். அப்போ சொல்கிறேன்.

நாங்கள் Account creation செய்யத் தேவையில்லை.

Information ஐ அழுத்தினால் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

முன்னர் இந்த காட்டை விமானங்களிலேயே தருவார்கள்.

இப்போது நிற்பாட்டிவிட்டார்கள்.

ஓம். முன்னர் ஏனைய நாடுகளிலும் இருந்தது ஆனால் இப்போ வழக்கொழிந்து போய்விட்டது.

கம்போடியாவில் 2017 இல் நிரப்பிய நியாபகம்.

அதுதான் ETA அப்ளிகேசனில் எல்லா தகவலும் கேட்கிறார்களே, மீண்டும் ஏன் இந்த கார்ட் என்பது தெரியவில்லை. Red tape தான்.

அதே போல் விமானம் இறங்க முன்னர் ஸ்பிரே அடிப்பதும் இலங்கையில் மட்டும்தான். ஏதோ ஒரு பழைய சட்டம் இதை கட்டாயம் ஆக்கியுள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஆங்கிலம்/சிங்களம் தெரியாத புலம் பெயர் தமிழருக்கு ஏர் போர்ட்டில் இருக்கும் பிரச்சனைகளை இது பத்து மடங்கால் கூட்டும்.

அங்கு பெருமளவில் சுற்றுப்பயணம் செய்வது எம்மவார்கள், அதனால் இராணுவத்தினர் தமிழில் கதைப்பார்கள் ஏனென்றால் நிலமை அப்படி.

33 minutes ago, ஈழப்பிரியன் said:

முன்னர் இந்த காட்டை விமானங்களிலேயே தருவார்கள்.

இப்போது நிற்பாட்டிவிட்டார்கள்.

இந்த குடிவரவு அட்டையினை நிரப்புவதற்கு பேனா கூட அந்த விமான நிலையத்தில் இருக்காது, பேசாமல் அங்குள்ள கணனியில் ETA இலக்கத்தினை பதிவிட்டால் அனைத்து விபரமும் கணனி திரையில் தோன்றும் தேவையான மாற்றம் (மாற்றம் இருப்பின் மட்டுமே) செய்து அதனை பதிவு செய்தால் இலகுவாக ஒரு நிமிடத்தில் செய்துவிடலாம்.

ஆனால் பெரும்பாலும் குடிவரவு அட்டைகளை நிரப்புவர்களாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

அங்கு பெருமளவில் சுற்றுப்பயணம் செய்வது எம்மவார்கள், அதனால் இராணுவத்தினர் தமிழில் கதைப்பார்கள் ஏனென்றால் நிலமை அப்படி.

47 minutes ago, ஈழப்பிரியன் said:

2009 க்கு பின், முன்னர் ஒரு காலம் இருந்தது - ஓமந்தைக்கு வடக்கே  போக வெளிநாட்டுக்காரர் கொழும்பில் போய் ஆமி கிளியரன்ஸ் எடுக்க வேணும். பாவனையாளர் 100% புலம்பெயர் தமிழர்தான்.

அப்போ ஆங்கிலம்/ சிங்களம் தெரிந்தோருக்கும், தெரியாதோருக்கும் இடையில் கிடைத்த சேவை வேறுபாட்டுக்கும்,

இப்போதும் மொழி தெரியாதோர், மாபிள் பீச், புறாத்தீவு, காங்கேசந்துறை பீச் போனால் கிடைக்கும் அரச படையினரின் உபசரிப்பையும் மனதில் வைத்து சொல்கிறேன்.

வீசா டெஸ்கில் ஆமிக்காரனை இருத்தினால்….கோவிந்தா….கோவிந்தா தான்.

உண்மையில் விமான நிலைய பாதுகாப்பில் கூட விமானப்படையை நீக்கி விட்டு தனியார் துறையை ஈடுபடுத்த போவதாக அண்மையில் வாசித்தேன்.

யுத்தம் இல்லாத நாட்டில் இராணுவம் முகாமுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

இராணுவ பிரசன்னத்தை சிவில் வாழ்க்கையில் குறைக்க கோரும் நாமே - மேலும் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து, அதை “வழமை” என ஆக்குவதை ஊக்குவிக்க கூடாது.

19 minutes ago, vasee said:

ஆனால் பெரும்பாலும் குடிவரவு அட்டைகளை நிரப்புவர்களாக உள்ளார்கள்.

காரணம் அட்டையை நிரப்பாமல் போய் வரிசையில் நிண்டால் - கவுண்டருக்கு போய் பாஸ்போர்ட்+ETA ஐ கட்டினால், அட்டை எங்கே என கேட்டு, மீள போய் நிரப்பி வாருங்கள் என கியூவில் பின்னுக்கு அனுப்புவார்கள்.

எனக்கு முன் நின்ற தம்பதிக்கு இந்த முறை இப்படி நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

2009 க்கு பின், முன்னர் ஒரு காலம் இருந்தது - ஓமந்தைக்கு வடக்கே  போக வெளிநாட்டுக்காரர் கொழும்பில் போய் ஆமி கிளியரன்ஸ் எடுக்க வேணும். பாவனையாளர் 100% புலம்பெயர் தமிழர்தான்.

அப்போ ஆங்கிலம்/ சிங்களம் தெரிந்தோருக்கும், தெரியாதோருக்கும் இடையில் கிடைத்த சேவை வேறுபாட்டுக்கும்,

இப்போதும் மொழி தெரியாதோர், மாபிள் பீச், புறாத்தீவு, காங்கேசந்துறை பீச் போனால் கிடைக்கும் அரச படையினரின் உபசரிப்பையும் மனதில் வைத்து சொல்கிறேன்.

வீசா டெஸ்கில் ஆமிக்காரனை இருத்தினால்….கோவிந்தா….கோவிந்தா தான்.

உண்மையில் விமான நிலைய பாதுகாப்பில் கூட விமானப்படையை நீக்கி விட்டு தனியார் துறையை ஈடுபடுத்த போவதாக அண்மையில் வாசித்தேன்.

யுத்தம் இல்லாத நாட்டில் இராணுவம் முகாமுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

இராணுவ பிரசன்னத்தை சிவில் வாழ்க்கையில் குறைக்க கோரும் நாமே - மேலும் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து, அதை “வழமை” என ஆக்குவதை ஊக்குவிக்க கூடாது.

சர்வதேச விமானநிலையத்தில் வைத்து தரக்குறைவாக ந்டக்குமளவிற்கு முட்டாள்களாகவா இருப்பார்கள்? அவர்களது விமானநிலையத்தில் இராணுவத்தினரை பணிக்கமர்த்துவதனால் இலங்கைக்கு சாதகம்தானே (தண்டமாகத்தானே இருக்கிறார்கள் எதுக்கு வீணா சம்பளம் கொடுத்து முகாமில் வைத்து பராமரிப்பதற்கு)?

அவர்கல் தமிழர் பிரதேசத்தில் இருந்து தொல்லை கொடுக்காமல் அவர்கள் தலைநகரத்தில் இருந்து புலம்பெயர் தமிழருக்கு தொல்லை கொடுத்தால் பரவாயில்லைதானே.

2 hours ago, goshan_che said:

காரணம் அட்டையை நிரப்பாமல் போய் வரிசையில் நிண்டால் - கவுண்டருக்கு போய் பாஸ்போர்ட்+ETA ஐ கட்டினால், அட்டை எங்கே என கேட்டு, மீள போய் நிரப்பி வாருங்கள் என கியூவில் பின்னுக்கு அனுப்புவார்கள்.

எனக்கு முன் நின்ற தம்பதிக்கு இந்த முறை இப்படி நடந்தது.

அண்மையில் ஒரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் (ஒரு துயர நிகழ்வொன்றிற்காக) 4 - 5 நாள்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன் மிக நீண்டகாலத்தின் பின்னர், பேனா எடுத்து செல்லவில்லை கணனியில் பதிவு செய்து சென்றேன், கடமையில் இருந்த பெண்மணி குடிவரவு அட்டையினை கேட்டார் கனனியில் பதிந்தாகக்கூறினேன் எந்த தொல்லையுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

கணனியில் பதிவு செய்து சென்றேன், கடமையில் இருந்த பெண்மணி குடிவரவு அட்டையினை கேட்டார் கனனியில் பதிந்தாகக்கூறினேன் எந்த தொல்லையுமில்லை.

நானும் பதிந்துவிட்டே சென்றேன்.

என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.