Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 


ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 


தடை குறித்த அறிவிப்பில், 'விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஒன்றிய அரசு கருதுகிறது. இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், தனி ஈழம் என்ற கருத்தை அவர்கள் கைவிடவில்லை. பரப்புரை மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கைகள் என தனி ஈழத்துக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக நடைபெறுகின்றன. போரில் உயிர் தப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் இலங்கையிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன. இது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்' என்று கூறி தடைக்கான காரணங்களாக இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது. (அ)

த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் இந்திய மத்திய அரசின் முடிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு (Indian Central Government) அறிவித்தல் விடுத்துள்ளது.

இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை (Rajiv Gandhi) கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னரே இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

 

இந்நிலையில், 2009இல் இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை, இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான பிரசாரம்

இதன் ஒரு நடவடிக்கையாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் இந்திய மத்திய அரசின் முடிவு | India S Ban Against Sri Lankan Issue

 

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், குறித்த ஆதரவாளர்கள், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் இந்திய மத்திய அரசின் முடிவு | India S Ban Against Sri Lankan Issue

 

எனவே, அந்த அமைப்பு மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

https://tamilwin.com/article/india-s-ban-against-sri-lankan-issue-1715683197

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டிறைச்சிக் கடையை மூடத் துடிக்கும் அணியினர் தமது எசமானர்களிடம் இதுபற்றி கதைக்கமாட்டினமா?

  • கருத்துக்கள உறவுகள்

பு…லி…கள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்திய அரசு.)அதற்கு கூறும் காரணங்கள் வெறும் நொண்டிச்சாட்டுகள்.இந்த நிலையில் இந்திய அரசுக்கு 23 ஐ நிறைவேற்ற சொல்லி கடிதம் எழுதும் தமிழ் அரசியல் வாதிகளும்.அந்த அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் பத்தி எழுத்தாளர்களும் இந்திய அபிமானிகளும் தொடர்ந்து தமிழ்மக்களை இந்திய மாநைக்புள் வைத்திருக்கப் போகிறார்களா?இனியும் இந்தியாவை நம்ப முடியுமா?

 

புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்திய அரசு நீடித்துள்ளது.

இந்திய அரசு தடையை நீடிப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் தடைக்காக கூறும் காரணங்கள்தான் ஆச்சரியமாக இருக்கிறது.

புலிகள் அமைப்பு இப்பவும் இந்திய மண்ணில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது.

அதைவிட ஆச்சரியமாக இருப்பது வெளிநாடுகளில் இருக்கும் புலி ஆதரவு அமைப்புகள் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக கூறுவது.

 

ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி பாஜக அரசாக இருந்தாலும் சரி அவர்களது ஈழத் தமிழர் மீதான வெளியுறவுக் கொள்கை என்பது ஒன்றாகவே இருக்கிறது.

இனியாவது இந்திய அரசை நம்பும் ஈழத் தமிழ்த் தலைவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து நன்மையானது ஏது வரக் கூடுமோ? 

😏

எரியுண்ட சடலங்களைப் புசிக்கும் நரமாமிச பட்சணிகளை வணங்கும் நாட்டிலிருந்து எதை எதிர்பார்க்க முடியும்? 

😏

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்தாலும் ஆயிரம் பொன் இல்லா விட்டாலும் ஆயிரம் பொன்.

  • இணையவன் changed the title to த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்..., 

தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥
 

  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவ் காந்தியின் மரணத்தில் கவலை  உணர்வுடன் இருந்த ஈழத் தமிழர்களின் மனது தற்போது இந்தியா மீதான வெஞ்சினமாக, வெறுப்பாக  மாறிவிட்டது. 

உலகெங்கிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போன்று ஈழ ஆதரவாளர்களும் இந்தியாவை வெறுப்பது இந்தியாவிற்கு நன்மையல்ல. 

😡😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடையை எடுத்தால் என்ன நடக்கும்?
அல்லது ஈழ தமிழர் பிரச்சனையில் இந்த தடைமூலம் முன்னேற்றங்கள் வர வாய்ப்புண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் இந்திய மத்திய அரசின் முடிவு | India S Ban Against Sri Lankan Issueஇது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், குறித்த ஆதரவாளர்கள், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் இந்திய மத்திய அரசின் முடிவு | India S Ban Against Sri Lankan Issue

யாழில் சிலர்எழுதும் கருத்துக்களை அவர்கள் வாசிக்கினம் போல. 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

யாழில் சிலர்எழுதும் கருத்துக்களை அவர்கள் வாசிக்கினம் போல. 😀

வாய்ப்பிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஏராளன் said:

வாய்ப்பிருக்கு!

70 களில் கொழும்பில் இந்திய தூதகரத்தில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த எனக்கு தெரிந்த தமிழருக்கு வேலை கிடைத்தது. அவருக்கு வேலை , இலங்கை தமிழ் ஆங்கிலப்பத்திரிகையில் வரும்இந்தியா சம்பந்த்மான செய்திகளை வாசித்து அவர்களுக்கு அனுப்புவது. 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீதான தடை அநீதியானது - உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்

Published By: DIGITAL DESK 7   16 MAY, 2024 | 05:37 PM

image

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. இதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. அதற்குரிய காரணங்களாகக் கீழ்க்கண்டவற்றை குறித்துள்ளது.

“2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் நிதித் திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

விடுதலைப்புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் இரகசியமாகச் செயல்படுகிறது. அனைத்துத் தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் நோக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.”

ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப கூறுவதின் மூலம் அதை மெய்யாக்கிவிடும் முயற்சியில் கடந்தகாலங்களில் பதவியிலிருந்த இந்திய அரசுகளும், இப்போது பதவியில் இருக்கும் இந்திய அரசும் செயல்பட்டு வருகின்றன.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்குப் பகுதி மட்டுமே அடங்கிய தமிழீழ கோரிக்கையை தமிழர் விடுதலை கூட்டணி போன்ற அறவழிப் போராட்டங்கள் நடத்திய அரசியல் கட்சிகளும், ஆயுதப் போராட்டம் நடத்திய போராளிகள் அமைப்புகளும் முன்வைத்தனவே தவிர, ஒருபோதும் இந்தியாவில் உள்ள எந்த பகுதியின் மீது அவர்கள் உரிமை கொண்டாடவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கோ, இறையாண்மைக்கோ எதிராக ஒருபோதும் விடுதலைப்புலிகள் செயல்பட்டதில்லை. மேலும் இந்தியாவின் பகை நாடுகளுடன் எந்த வகையான உறவையும் விடுதலைப்புலிகள் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிங்கள அரசு இந்தியாவின் பகை நாடுகளுடன் நெருங்கி உறவாடி, அந்நாடுகள் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான தளங்களை அமைப்பதற்குத் துணையாக நிற்கிறது என்ற உண்மையைக்கூட இந்திய அரசு எண்ணிப்பார்க்க தவறிவிட்டது.  

இந்த உண்மையை உணர்ந்திருந்த காரணத்தினால்தான் இந்தியத் தலைமையமைச்சராக இந்திராகாந்தி அவர்கள் இருந்தபோது, சிங்கள அரசுக்கும், ஈழத் தமிழர் தலைவர்களுக்குமிடையே  பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகாண இந்தியாவின் சிறப்புத் தூதுவராக ஜி. பார்த்தசாரதி அவர்களை அனுப்பினார்.

அந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டினை செயல்படுத்தாமல் சிங்கள அரசு காலம் கடத்தி ஏமாற்றுவதற்கு முயற்சி செய்தபோது, ஈழப் போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து இந்திய இராணுவ முகாம்களிலேயே அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதோடு, ஆயுதங்களும் வழங்கப்பட்டு அவர்கள் இலங்கை திரும்பித் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இந்த உண்மையைச் சிறிதும் உணராமல் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி சிங்கள அரசுடன் உடன்பாடு செய்து, அதன்படி போராளிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்கு இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பினார் என்பதும், அந்த உடன்பாடு படுதோல்வியடைந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே ஆகும்.

1991ஆம் ஆண்டில் இராசீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்தப்பட்டு அவர்களின் இயக்கத்திற்கு முதல் தடை விதிக்கப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

இராசீவ்காந்தியின் கொலை மற்றும் அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதித்திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசினால் நீதிபதி ஜெயின் ஆணையம் அமைக்கப்பட்டது. இராசீவ் கொலையைப் பற்றி விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் செய்த தவறுகளை ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமல்ல, சந்திராசாமி உள்பட 21 நபர்கள் குறித்து தனது ஐயப்பாடுகளை பதிவு செய்து அவர்களையும் விசாரிக்கவேண்டும் என்றும் கூறியது.

தலைமையமைச்சராக பி.வி. நரசிம்மராவ் இருந்தபோது அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையம், தலைமையமைச்சராக வாஜ்பாய் பொறுப்பேற்றப் பிறகு அவரின் அரசிடம் ஜெயின் ஆணையம் தனது இறுதி அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டதற்கிணங்க இராசீவ் கொலைப் பற்றி மீண்டும் முழுமையான புலனாய்வு செய்வதற்காக 1998ஆம் ஆண்டு பல்நோக்குப் புலனாய்வுக் குழு ஒன்றினை அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி அமைத்தார்.

பல்நோக்கு விசாரணைக்குழு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது புலனாய்வை இறுதி செய்து அறிக்கை அளிக்கத் தவறிவிட்டது. ஜெயின் ஆணையம் சுட்டிக்காட்டிய நபர்கள் யாரையும் தனது விசாரணை வளையத்திற்குள் பல்நோக்கு விசாரணைக்குழு கொண்டுவந்து விசாரிக்கவே இல்லை. காலம் கடத்திய இந்த புலனாய்வுக் குழு இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது.

இராசீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 பேர்களும் 31 ஆண்டு கால சட்டபோராட்டத்திற்குப் பின்னால் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். இக்கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள் எனக் கூறுவதைவிட, தப்பிக்க விடப்பட்டார்கள் என்று கூறுவதே சரியானதாகும்.

இராசீவ் கொலையைக் காரணமாகக் காட்டித்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்குப் புலனாய்வுக் குழு 20 ஆண்டு காலமாக யாரையும் கைது செய்யாமல் காலங் கடத்தி இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடையை நீடிப்பது எந்த வகையிலும் நீதியின்பால் பட்டதல்ல. அநீதியான இந்தத் தடை விதிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/183719

  • கருத்துக்கள உறவுகள்

வருடம் 2124, மே மாதம், 15ம் திகதி.

இன்றைய தலைப்பு செய்திகள்

1. செவ்வாய் கிரகத்திற்கு உத்யோக பூர்வ விஜம் மேற்கொண்டுள்ள சீன அதிபருக்கு அமோக வரவேற்பு.

2. இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் அல்பேர்ட்டின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியது. பக்கிங்ஹம் அரண்மனை அதிர்ச்சி.

3. கியவை பிடித்தே தீருவோம். சூளுரைத்தார் ரஸ்ய அதிபர்.

4. விடுதலை புலிகள் மீதான தடையை இந்தியா ஐந்து வருடங்களால் நீடித்தது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை இந்தியா தான் செய்த தவறினை திருத்த கூட தயார் இல்லை. அந்தளவுக்கு எங்களது தேசியத்தலைவரின் ஆத்மாவிலும் கூட பயம் கொண்டுள்ளது. தான் எவ்வள்வு முயன்றும் தன்னால் அவரின் கால் ..... கூட தொடமுடியவில்லை என்ற தோல்விதான் இந்த தடையின் தொடர்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் பொலிஸாரும் இதை நியாயப்படுத்தலாம். இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜுன் 4 ஆம் திகதி வெளியாகவுள்ளன. இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் தலையீட்டை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அடுத்த நாட்டில் இடம்பெற வேண்டியது பாராளுமன்றத் தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்பதை தீர்மானிப்பது இந்தியாவாகக் கூட இருக்கலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் தலையீட்டை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

large.IMG_6504.jpeg.142fad68888710787f4c

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.