Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN

24 MAY, 2024 | 07:46 PM
image
 
காசாவின் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வேதேச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் உடனடியாக ரபா மீதான தாக்குதலையும் ஏனைய நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்வதற்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் உள்ள ரபா எல்லையைதிறக்கவேண்டும் விசாரணையாளர்களும் காசாவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்எனவும் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/184416

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'ரஃபா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தவும்' - சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

இஸ்ரேலுக்கு ஐநா சர்வதேச நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

16 நிமிடங்களுக்கு முன்னர்

ரஃபா நகரில் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனுடன் இஸ்ரேலுக்கு பல்வேறு உத்தரவுகளையும் அந்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ஹமாஸ் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவில் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறு ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமை (மே 24) அன்று சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதிபதி நவாஃப் சலாம் தலைமையேற்று நடத்தினார்.

அப்போது, “காஸா முனையில் மக்களின் பேரழிவுகரமான வாழ்க்கை நிலை மேலும் மோசமடைந்துள்ளது," எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக நீடித்த மற்றும் பரவலான உணவுப் பற்றாக்குறையை நீதிமன்றம் வருத்தத்துடன் கவனித்ததாகத் தெரிவித்தார்.

மேலும், ரஃபாவில் நடக்கும் ராணுவத் தாக்குதல் நடவடிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டிய பல்வேறு ஐ.நா. அதிகாரிகளை நீதிபதி மேற்கோளிட்டு காட்டினார்.

ரஃபாவில் மே 7 அன்று இஸ்ரேல் ராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், மே 18 வரை சுமார் 8 லட்சம் பாலத்தீன மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

ரஃபா, காஸா, இஸ்ரேல், சர்வதேச நீதிமன்றம்
படக்குறிப்பு, சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதிபதி நவாஃப் சலாம் தீர்ப்பை வாசிக்கிறார்

நீதிமன்றம் கூறியது என்ன?

விசாரணையை தொடர்ந்து, பாலத்தீன மக்களுக்கு 'உடனடி ஆபத்து' எனக்கூறி, ரஃபாவில் இஸ்ரேல் ராணுவ தாக்குதல் மற்றும் மற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அங்கு நிலவும் தற்போதைய சூழல், 'காஸாவில் உள்ள மக்களின் உரிமைகளுக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும்' என நீதிபதி சலாம் தெரிவித்தார்.

மேலும், இன்றைய உத்தரவின் அடிப்படையில் அங்கு ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இஸ்ரேல் இன்னும் ஒரு மாதத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர, மனிதாபிமான உதவிகள் நுழைவதற்காக எகிப்து-காஸா இடையிலான ரஃபா எல்லையைத் திறக்க வேண்டும் என்றும், விசாரணை அமைப்புகள் மற்றும் உண்மை கண்டறியும் குழுக்கள் காஸாவுக்குச் செல்வதற்கான அணுகலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாதது குறித்தும் நீதிபதி சலாம் கவலை தெரிவித்தார்.

"பணயக்கைதிகளின் நிலை குறித்து நீதிமன்றம் மிகுந்த கவலையை வெளிப்படுத்துகிறது. மேலும் அவர்களை உடனடியாக, நிபந்தனையின்றி விடுவிக்க அழைப்பு விடுக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

"இன்னும் பலர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது," என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலுக்கு ஐநா சர்வதேச நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு என்ன?
படக்குறிப்பு,நீடித்த மற்றும் பரவலான உணவுப் பற்றாக்குறையை நீதிமன்றம் வருத்தத்துடன் கவனித்ததாக நீதிபதி தெரிவித்தார்  
இஸ்ரேலுக்கு ஐநா சர்வதேச நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு என்ன?

ஹமாஸ், இஸ்ரேல் கூறியது என்ன?

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு “(தாக்குதல்) நிறுத்தத்திற்கான தெளிவான அழைப்பு" என தென்னாப்பிரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பண்டோர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறுகையில், "சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ரஃபா நகரில் எங்கள் மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இந்த தீர்ப்பு கோருகிறது," என தெரிவித்தார்.

இதற்கிடையில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் கூறுகையில், “ரஃபாவில் ராணுவ நடவடிக்கையின் முடிவை, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கும் சர்வதேச நீதிமன்றம் நேரடியாக இணைக்கவில்லை என்பது ஒரு மோசமான தார்மீகத் தோல்வியாகும்," என அதிருப்தி தெரிவித்தார்.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே, ரஃபா நகரின் மையத்தில் உள்ள ஷபூரா முகாம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

இஸ்ரேலுக்கு ஐநா சர்வதேச நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு என்ன?
படக்குறிப்பு, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகள் சட்டபூர்வமானது என்றாலும், நடைமுறையில் உத்தரவுகளை அந்நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாது

வழக்கு விவரம்

இந்த வழக்கு விசாரணையின் போது, தென்னாப்பிரிக்கா தரப்பு வழக்கறிஞர்கள், பாலத்தீன மக்களின் வாழ்க்கையை உறுதி செய்வதற்கு தேவையான தற்காலிக நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

மேலும், காஸாவுக்குள் நிவாரண பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், விசாரணையாளர்களுக்கு 'தடையற்ற அனுமதியை' வழங்க இஸ்ரேலை வலியுறுத்தினர்.

தென்னாப்பிரிக்காவின் இந்த வழக்கை 'முற்றிலும் ஆதாரமற்றது' என்று கூறியுள்ள இஸ்ரேல், அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு மீதமுள்ள ஹமாஸ் படையினரை அழிக்க ரஃபாவில் தங்கள் நாடு மேற்கொண்டுள்ள தாக்குதல் முக்கியமானது என தெரிவித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகள் சட்டபூர்வமானது என்றாலும், நடைமுறையில் உத்தரவுகளை அந்நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாது.

காஸாவில் பாலத்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்துவதாகவும் தென்னாப்பிரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 26 அன்று வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவில், காஸாவில் நடந்துவிடக்கூடிய இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேறொள்ளுமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு உலகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினரால் உற்றுநோக்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cw44xggnn1go

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்காலை ஒத்த தாக்குதல். முள்ளிவாய்க்காலில் முடியட்டும் என்று விடுப்பு பார்ப்பு. காசாவுக்கு அறிக்கை.. ஏனெனில்.. மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளின்..  ஆதரவு வளங்கள்.. சில முக்கிய மேற்கு நாடுகளுக்கு அவசியம் என்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, nedukkalapoovan said:

முள்ளிவாய்க்காலை ஒத்த தாக்குதல். முள்ளிவாய்க்காலில் முடியட்டும் என்று விடுப்பு பார்ப்பு. காசாவுக்கு அறிக்கை.. ஏனெனில்.. மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளின்..  ஆதரவு வளங்கள்.. சில முக்கிய மேற்கு நாடுகளுக்கு அவசியம் என்பதால்.

நெத்த‌னியாக்கு எங்கை போர‌ நிப்பாட்ட‌ போரான்

அமெரிக்காவின் ஆத‌ர‌வு இருக்கும் வ‌ரை நெத்த‌னியாகுவை ஒன்றும் செய்ய‌ முடியாது......................................யூத‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் அமெரிக்காவில் அதிக‌ம் அது தான் பெரிய‌ அண்ண‌ன் நெத்த‌னியாகுவுக்கு ந‌ல்லா முட்டு கொடுக்கிறார்............................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – பிபிசி

Published By: RAJEEBAN   25 MAY, 2024 | 10:20 AM

image
 
சர்வதேச நீதிமன்றம் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள போதிலும் இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடக்கூடாது என இஸ்ரேல் எதிர்பார்த்தது ஹமாசினை தோற்கடிப்பதற்கு இராணுவ நடவடிக்கை அவசியம் என இஸ்ரேல் கருதுகின்றது என பிபிசி தெரிவித்துள்ளது.

எனினும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று இஸ்ரேல் தனது பாதையை மாற்றும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் நண்பர்கள் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர். சர்வதேச நீதிமன்றம் யூதஎதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்துகின்றது ஹமாசிற்கு ஆதரவாக செயற்படுகின்றது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான நவாப்சலாம் லெபனானை சேர்ந்தவர் இஸ்ரேலிற்கு சார்பாக தீர்ப்பை வழங்கினால் அவரால் அவரது நாட்டிற்கு பாதுகாப்பாக செல்ல முடியாது  இஸ்ரேலின் முன்னாள் அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிக்கொண்டிருந்த வேளை ரபாவிற்குள் இஸ்ரேலிய டாங்கிகள் தொடர்ந்தும் முன்னேறிக்கொண்டிருந்தன என பிபிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலிய பிரதமரை விமர்சிப்பவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பினை இஸ்ரேல் தொடர்ந்தும் சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்படுவதற்கான அறிகுறியாக கருதுகின்றனர் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/184433

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35க்கும் அதிகமானவர்கள் பலி

Published By: RAJEEBAN

27 MAY, 2024 | 06:19 AM
image
 
ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 35க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் சிறுவர்கள் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டல் அஸ் சுல்தான் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் காசா நகரம் உட்பட வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் காசாவின் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை மேற்கொண்டதை உறுதி செய்துள்ளதுடன் ஹமாஸ் உறுப்பினர்களை துல்லியயமாக தாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி இலக்குவைத்ததாக தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/184566

Posted

நேற்றைய ரபாவின் குண்டு தாக்குதல் கொலைக்கு மன்னிப்பு கேட்ட நத்தனியாகு ( விசாரணை நடக்குமாம்) இன்று 45 பேரை கொன்று குவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரபா மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது - அவுஸ்திரேலியா

Published By: RAJEEBAN

28 MAY, 2024 | 11:43 AM
image
 
ரபா மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தற்போது மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தவேண்டும் அதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பதை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் பயங்கரமான ஏற்றுக்கொள்ள முடியாத விளைவுகளை  ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள பெனிவொங் காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ள ரபாவின் மீது இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை முன்னெடுக்க கூடாது என்பது குறித்து அவுஸ்திரேலியா தெளிவாக உள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் பொதுமக்களை மனித கேடயங்களா பயன்படுத்துவதை  நிறுத்தவேண்டும் தனது ஆயுதங்களை கைவிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/184675

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரபாவில் 45 பேரை பலி கொண்ட தாக்குதல்; - அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குண்டே பயன்படுத்தப்பட்டது என்கின்றது சிஎன்என்

Published By: RAJEEBAN   29 MAY, 2024 | 11:38 AM

image
 
காசாவின் ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் கூடாரங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் அமெரிக்காவின் வெடிமருந்துகளை பயன்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதிவான வீடியோவை சிஎன்என் ஆய்வு செய்த வேளை இது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சிஎன்என் வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்வின் மூலமும் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

காசாவின் தென்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பெரும் தீ மூண்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக 45க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

rafa_35.jpg

ரபாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு வட்டாரங்களும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

சிஎன்என் தன்னிடம் உள்ள வீடியோ காட்சிகள் ரபா முகாம் தீப்பிடித்து எரிவதை காண்பிக்கின்றது என குறிப்பிட்டுள்ளதுடன், இரவு நேரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இருந்து தப்புவதற்கு பலர் முயல்வதையும் காணமுடிவதாக தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் உடல்கள் உட்பட எரிந்த உடல்களை இடிபாடுகளிற்குள் இருந்து மீட்பு பணியாளர்கள் வெளியில் எடுப்பதை அவதானிக்க முடிவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

குவைத் அகதி முகாம் 1 என அழைக்கப்படும் இந்த முகாமின் மீது  இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள  சிஎன்என் தெரிவித்துள்ளது.

சிஎன்என்னின் வீடியோவை ஆராய்ந்த வெடிகுண்டுகள் ஆயுத நிபுணர்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜிபியு 39 குண்டின் ஒரு பகுதியை காணமுடிவதாக தெரிவித்துள்ளனர்.

பொயிங் நிறுவனம் ஜிபியு39 குண்டுகளை தயாரிக்கின்றது.

மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு  இந்த குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என வெடிபொருள் ஆயுத நிபுணர் கிறிஸ்கொப் ஸ்மித்  சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவின் முன்னாள் உறுப்பினரான டிரெவெர் போல் குண்டு சிதறல்களை அடிப்படையாக வைத்து ஜிபியு39 குண்டே பயன்படுத்தப்பட்டுள்ளது என உறுதி செய்துள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/184755

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னாள் ஐநா தூதரின்(நிக்கி கெய்லி) கேவலமான செயல்.

Nikki Haley Writes 'Finish Them!' On Israeli Bomb After Gaza Massacre

Nikki Haley blasted for writing 'finish them' on Israeli shell after Rafah  massacre, 'deport her back to India' - Hindustan Times

அமெரிக்காவினது உண்மையான முகம் இதுதான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவில் வசிக்கும் மக்களது வரிப்பணத்தில்த்தான் இந்தப்படுகொலைகள் நிகழ்த்தப்படுகிறது, இதனை கண்டும் காணாமல் விட்டால் இந்த படுகொலைகளின் பாவம் அவர்களையும் வந்து சேரும். குறைந்த பட்ச மனித பண்புடைய மனிதர்கள் இதனை கண்டிப்பாக அனுமதிக்கமாட்டார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

அமெரிக்காவில் வசிக்கும் மக்களது வரிப்பணத்தில்த்தான் இந்தப்படுகொலைகள் நிகழ்த்தப்படுகிறது, இதனை கண்டும் காணாமல் விட்டால் இந்த படுகொலைகளின் பாவம் அவர்களையும் வந்து சேரும். குறைந்த பட்ச மனித பண்புடைய மனிதர்கள் இதனை கண்டிப்பாக அனுமதிக்கமாட்டார்கள்.

அப்படியானால் முதலில் முள்ளிவாய்க்காலுக்கு பதில் தரவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

முன்னாள் ஐநா தூதரின்(நிக்கி கெய்லி) கேவலமான செயல்.

Nikki Haley Writes 'Finish Them!' On Israeli Bomb After Gaza Massacre

Nikki Haley blasted for writing 'finish them' on Israeli shell after Rafah  massacre, 'deport her back to India' - Hindustan Times

அமெரிக்காவினது உண்மையான முகம் இதுதான்.

எப்ப இருந்து நிக்கி ஹேலி அமெரிக்காவின் முகமானார்😂?

நிக்கி ஹேலி ஒரு அமெரிக்க அரசியல்வாதி. தெளிவாகச் சொல்வதானால் மக்கள் வரிப்பணத்தில் ஏதாவதொரு அரச பதவியை எடுத்து தன் குடும்பத்தின் வயிற்றை வளர்க்கும் நோக்கோடு மாதத்திற்கொரு கொள்கையோடு அலையும் ஒட்டுண்ணி😎!

அண்மையில், ட்ரம்பின் மீது தான் வைத்த எல்லா விமர்சனங்களையும் அம்னீசியாவில் மறந்து விட்டு, உபஜனாதிபதி ரிக்கற்றிற்காக ட்ரம்புடன் சேர முயற்சிக்கும் ஒரு நாடக நடிகை. அவர் கட்சி சார்ந்த மக்களே இவரைத் தூக்கி எறிந்து விட்டனர். எனவே இப்படியான குறளி வித்தை காட்டித் தான் அவர் இனி நிலைத்திருக்க முடியும்.

அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள காசா, இஸ்ரேல் தொடர்பாக அந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். முன்னர் போல இஸ்ரேலை யாராவது கண்டித்தால்  antisemitism என்று சண்டிக் கட்டோடு வரும் Anti-defamation League இப்போது அடக்கி வாசிக்கிறது. பல்கலைகள், மௌனமாக யூத ஆதரவுக் குழுக்களிடம் இருந்து நன்கொடை வாங்கும் செயல்களை தயக்கத்துடன் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. மாணவர்களின் போராட்டங்களால் வந்த ஒரு விளைவு இது.

"இஸ்ரேலைக் கண்டித்தால் அது யூத எதிர்ப்பு துவேசம் தான்" என்று கீழ் சபை இயற்றிய இஸ்ரேல் சார்பான சட்டம், மேல் சபையான செனட்டில் தோற்கப் போகிறது.

மிக முக்கியமாக, ஜனாதிபதித் தேர்தலில் பைடன் அணி இளைய வாக்காளர்களின் ஆதரவை இழக்கப் போகிறது - இது இஸ்ரேல் எதிர்ப்பு அறிக்கையாக இருக்கும்.

சிவப்புக் கட்சி உண்மையிலேயே புத்தி சாலிகளாக இருந்தால், ட்ரம்பை நீக்கி விட்டு ஒரு ட்ரம்ப் சாராத வேட்பாளரை நிறுத்தினால் பைடன் அணி மோசமான தோல்வியைச் சந்திக்க வைக்கலாம். ஆனால், அவர்களிடம் புத்திசாலித்தனம் மிகக் குறைவு.       

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிக்கி ஹெலி ஒரு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்காக போட்டியிட்டவர். அவரின் அரசியல் முகம் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது.உலகில் அவரின் கருத்துகளும் பெரிய கண்ணோடுதான் பார்க்கப்படும்.
 
வீசப்படவிருக்கும் குண்டுகள் மீது தன் கையொப்பத்தை வைக்கின்றார் என்றால் அவரின் அரசியல் பலத்தை ஒருகணம் சிந்திக்க வேண்டும். 😎
 
Nikki Haley blasted for writing 'finish them' on Israeli shell after Rafah  massacre, 'deport her back to India' - Hindustan Times

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

02-11.jpg?resize=750,375&ssl=1

4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்ட ‘All eyes on Rafah’ ஹேஷ்டெக் – பலஸ்தீனத்தின் AI புகைப்படம் !

காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெளியான “All eyes on Rafah” என்ற ஹேஷ்டெக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில், அதிகளவாக பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

அதன்படி, AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” வாசம் பொருந்திய புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

இது, இஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், All eyes on Rafah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 2.75 கோடிக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “All eyes on Rafah” என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் வைரலாகி வருகின்றது.

குறித்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன.

பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் புகைப்படம் அமைந்தது.

All eyes on Rafah என்ற புகைப்படத்தை, சர்வதேசக பிரபலங்கள் தங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1384810

#################    #################   ####################

445197331_853282040170103_42244247461160

445220961_853281133503527_89286763814985

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/5/2024 at 14:31, vasee said:

முன்னாள் ஐநா தூதரின்(நிக்கி கெய்லி) கேவலமான செயல்.

Nikki Haley Writes 'Finish Them!' On Israeli Bomb After Gaza Massacre

Nikki Haley blasted for writing 'finish them' on Israeli shell after Rafah  massacre, 'deport her back to India' - Hindustan Times

அமெரிக்காவினது உண்மையான முகம் இதுதான்.

19 hours ago, குமாரசாமி said:

நிக்கி ஹெலி ஒரு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்காக போட்டியிட்டவர். அவரின் அரசியல் முகம் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது.உலகில் அவரின் கருத்துகளும் பெரிய கண்ணோடுதான் பார்க்கப்படும்.
 
வீசப்படவிருக்கும் குண்டுகள் மீது தன் கையொப்பத்தை வைக்கின்றார் என்றால் அவரின் அரசியல் பலத்தை ஒருகணம் சிந்திக்க வேண்டும். 😎
 
Nikki Haley blasted for writing 'finish them' on Israeli shell after Rafah  massacre, 'deport her back to India' - Hindustan Times

இஸ்ரேலின் ஏவுகணை மீது எழுதப்பட்ட வாசகத்தால் எழுந்துள்ள சர்ச்சை

இஸ்ரேலின் ஏவுகணை மீது எழுதப்பட்ட வாசகத்தால் எழுந்துள்ள சர்ச்சை | Controversy Sparked Text Written Israeli Missiles

இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹாலே, அந்த நாட்டு இராணுவ ஏவுகணை ஒன்றில் எழுதிய வாசகம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஏவுகணையில் “அவர்களின் கதையை முடித்துவிடுங்கள்” என அவர் எழுதும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே காசா பகுதியில் போர் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து பாலஸ்தீனியர்கள் மீது தொடர் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி குறித்த தாக்குதல் மூலம் பாலஸ்தீனத்தில் 36,000 பேர் வரையில் பலியாகியுள்ளனர்.

https://thinakkural.lk/article/302810

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/5/2024 at 23:53, Justin said:

எப்ப இருந்து நிக்கி ஹேலி அமெரிக்காவின் முகமானார்😂?

நிக்கி ஹேலி ஒரு அமெரிக்க அரசியல்வாதி. தெளிவாகச் சொல்வதானால் மக்கள் வரிப்பணத்தில் ஏதாவதொரு அரச பதவியை எடுத்து தன் குடும்பத்தின் வயிற்றை வளர்க்கும் நோக்கோடு மாதத்திற்கொரு கொள்கையோடு அலையும் ஒட்டுண்ணி😎!

அண்மையில், ட்ரம்பின் மீது தான் வைத்த எல்லா விமர்சனங்களையும் அம்னீசியாவில் மறந்து விட்டு, உபஜனாதிபதி ரிக்கற்றிற்காக ட்ரம்புடன் சேர முயற்சிக்கும் ஒரு நாடக நடிகை. அவர் கட்சி சார்ந்த மக்களே இவரைத் தூக்கி எறிந்து விட்டனர். எனவே இப்படியான குறளி வித்தை காட்டித் தான் அவர் இனி நிலைத்திருக்க முடியும்.

அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள காசா, இஸ்ரேல் தொடர்பாக அந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். முன்னர் போல இஸ்ரேலை யாராவது கண்டித்தால்  antisemitism என்று சண்டிக் கட்டோடு வரும் Anti-defamation League இப்போது அடக்கி வாசிக்கிறது. பல்கலைகள், மௌனமாக யூத ஆதரவுக் குழுக்களிடம் இருந்து நன்கொடை வாங்கும் செயல்களை தயக்கத்துடன் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. மாணவர்களின் போராட்டங்களால் வந்த ஒரு விளைவு இது.

"இஸ்ரேலைக் கண்டித்தால் அது யூத எதிர்ப்பு துவேசம் தான்" என்று கீழ் சபை இயற்றிய இஸ்ரேல் சார்பான சட்டம், மேல் சபையான செனட்டில் தோற்கப் போகிறது.

மிக முக்கியமாக, ஜனாதிபதித் தேர்தலில் பைடன் அணி இளைய வாக்காளர்களின் ஆதரவை இழக்கப் போகிறது - இது இஸ்ரேல் எதிர்ப்பு அறிக்கையாக இருக்கும்.

சிவப்புக் கட்சி உண்மையிலேயே புத்தி சாலிகளாக இருந்தால், ட்ரம்பை நீக்கி விட்டு ஒரு ட்ரம்ப் சாராத வேட்பாளரை நிறுத்தினால் பைடன் அணி மோசமான தோல்வியைச் சந்திக்க வைக்கலாம். ஆனால், அவர்களிடம் புத்திசாலித்தனம் மிகக் குறைவு.       

உங்களுக்கே தெரியும் அமெரிக்காவினது ஆதரவின்றி (ஆயுத,  மற்றும் கொள்கை ரீதியானஆசியில்லாமல்) இந்த படுகொலைகள் நடத்தப்பட முடியாது என்று, இந்த திரியில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் இதை ஒரு பேசு பொருளாக்கி விவாதிப்பதற்கு ஏற்ப மனநிலையில் நானும் இல்லை நீங்களும் இல்லை என தெரியும், எனது எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களால்தான் இந்த அழிவைத்தடுத்து நிறுத்த முடியும் அப்படி தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அதற்காக குறைந்த பட்ச முயற்சியினையாவது யாழ்கள உறவுகள் முயற்சிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/5/2024 at 20:20, விசுகு said:

அப்படியானால் முதலில் முள்ளிவாய்க்காலுக்கு பதில் தரவேண்டும். 

முள்ளிவாய்க்கால் போல ரபாவும் ஆகக்கூடாதெனும் நிலையிலேயே நீங்களும் உள்ளீர்கள் என நம்புகிறேன், இதனை திட்டமிட்டு நடத்துபவர்கள் இந்த படுகொலைகள் நிகழ்ந்த பின்பு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த படுகொலை விசாரிப்பு எனும் நாடகத்தினை தொடர்வதை போல் ரபா படுகொல  விசாரிப்பு நாடகத்தினை வருடக்கணக்காகத்தொடர்வார்கள், அவர்களிடமே போய் பதிலை கேட்டால் எந்த பிரயோசனமும் இருக்காது என கருதுகிறேன்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

உங்களுக்கே தெரியும் அமெரிக்காவினது ஆதரவின்றி (ஆயுத,  மற்றும் கொள்கை ரீதியானஆசியில்லாமல்) இந்த படுகொலைகள் நடத்தப்பட முடியாது என்று, இந்த திரியில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் இதை ஒரு பேசு பொருளாக்கி விவாதிப்பதற்கு ஏற்ப மனநிலையில் நானும் இல்லை நீங்களும் இல்லை என தெரியும், எனது எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களால்தான் இந்த அழிவைத்தடுத்து நிறுத்த முடியும் அப்படி தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அதற்காக குறைந்த பட்ச முயற்சியினையாவது யாழ்கள உறவுகள் முயற்சிக்கவேண்டும்.

சில சமயங்களில் நீங்கள் deadpan comedy ஆக எழுதுகிறீர்களா சீரியசாக எழுதுகிறீர்களா என்று எனக்கு விளங்குவதில்லை😂.

யாழ் களத்தில் எதைப் பற்றியும் கருத்துரைக்கும் சாமான்யர்கள் தான் எல்லோரும் என நான் நினைக்கிறேன். அறத் திசைகாட்டி சரியாக இருந்தால் எதைப் பற்றியும் கருத்துரைக்கும் மன நிலை இருக்கும். வேலை செய்யாத அறத்திசைகாட்டியோடு, பலமான நாடுகள் செய்யும் அநியாயங்களை பூசி மெழுகும் மன நிலையில் மிகச் சிலர் இருக்கிறார்கள் தான். யார் என்று உங்களுக்கு ஊகிக்கக் கூடியதாக இருக்கும்.

ஆனால், யாழ் உறுப்பினர்கள் முயல வேண்டுமென்கிறீர்கள். பகிடியா இது? உறவே, நாம் அடைந்த இனப் படுகொலைக்கே நாம் நீதி தேட இயலாமல் முட்டுப் பட்டு நிற்கும் போது எப்படி பலஸ்தீனர்களைக் காப்பாற்ற யாழ் உறவுகளால் முடியும் என நினைக்கிறீர்கள்? மூஞ்சூறும் விளக்குமாறும் போல இருக்கிறது! 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்களது வரிப்பணம் எவ்வாறு செலவழிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தும் கடமை மக்களுக்குண்டு, அந்த கடமையினை தவறினால், அரசுகளின் தவறுகளுக்கு அவர்களும் பங்குதாரர்கள்தான், வியட்னாம் போரில் அமெரிக்க அரசுக்கெதிராக கிளர்ந்த போராட்டங்களும் அமெரிக்க அரசு அதனை நிறுத்துவதற்கு காரணமாக அமைந்தது, 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/5/2024 at 14:56, Justin said:

நாம் அடைந்த இனப் படுகொலைக்கே நாம் நீதி தேட இயலாமல் முட்டுப் பட்டு நிற்கும் போது எப்படி பலஸ்தீனர்களைக் காப்பாற்ற

நான் முன்பு இதை யாழ்களத்தில் தெரிவித்து இருத்தேன். எனக்கும் ஒரு ஈழ தமிழர் நேரே சொன்னவர் பாவங்கள் பலஸ்தீனர்களின் பிரச்னையோடு ஒப்பிட்டால் எங்களின் பிரச்சனை ஒன்றுமே இல்லை. பலஸ்தீனர்கள் மீது அவர் ஏன் இவ்வளவு பாசமாக இருக்கின்றார் என்று நான் அப்போது குளம்பினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நான் முன்பு இதை யாழ்களத்தில் தெரிவித்து இருத்தேன். எனக்கும் ஒரு ஈழ தமிழர் நேரே சொன்னவர் பாவங்கள் பலஸ்தீனர்களின் பிரச்னையோடு ஒப்பிட்டால் எங்களின் பிரச்சனை ஒன்றுமே இல்லை. பலஸ்தீனர்கள் மீது அவர் ஏன் இவ்வளவு பாசமாக இருக்கின்றார் என்று நான் அப்போது குளம்பினேன்.

இது எதோ இஸ்ரேலியர்களாலேயே (மொசாட்) மிருகங்கள் என கழித்துவிடப்பட்டவர்களுக்கு சந்தடி சாக்கில் வெள்ளை அடிக்கும் முயற்சி போல் இருக்கிறது, நீங்களும் உங்கள் நண்பரும் 2009 இற்கு பின் பிறந்தவர்களா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது மாதிரி  தமிழர்களின் பிரபல்யமான நடிகர்கள் சமந்தா, திருசா என்ற இருவரும் இலங்கையில்  கடைசியாக தமிழர்களுக்கு பேரழிவு நடந்த போது  குரல் கொடுக்கவில்லையாம்.  ஆனால் இப்போது பலஸ்தீனர்களுக்காக பொங்கி எழுந்துள்ளனராம். வட்சப் குழுவில் வந்த தகவல்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.