Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, இணையவன் said:

சீமான் ஆதரவை நியாயப்படுத்த ஐரோப்பிய அரசியலை ஒப்பிட்ட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு கதைக்கு உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவர் பாடசாலையில் சக மாணவரோடு விளையாடும்போது அவர்கள் வந்தேறு குடி என்று விளித்திருந்தால் அதனை உங்கள் மகன் உங்களிடம் முறையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் மகனிடம், மகனே அவர்கள் திட்டியது நியாயமானது. வந்தேறு குடிகளான நாம் அதைப் பொறுத்துக் கொண்டு அதிகம் படித்து புத்திசாலியாகி பெரிய பதவிகளிலோ அரசியல் பதவிகளிலிருந்தோ ஐரோப்பியரை ஆளாமல் கொஞ்சமாகப் படித்து அவர்களுக்குக் கீழ்படிந்து வாழ்வதே நியாயமானது என்று சமாதானம் செய்வீர்களா ?

சீமானின் இனவாதத்தை வரவேற்றால் அடிமையாக வந்து அமெரிக்காவை ஆண்ட கறுப்பினத்தவர் முதல் புலம்பெயர்ந்த  தமிழர்களின் அடுத்த சந்ததியின் அரசியல் பிரவேசம் வரை எதிர்ப்பவராக இருக்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்ட பிரெஞ்சுப் புரட்சி இந்தத் தூய ஆட்சியை எதிர்த்து உருவானது. புரட்சி முடிந்து அடுத்த வருடம் 1790 ஆம் ஆண்டு அவர்கள் இயற்றிய சட்ட வரைபில் வெளிநாட்டு நபர் ஒருவர் 5 வருடம் பிரான்சில் இருந்து பிரெஞ்சு ஆணையோ பெண்ணையோ திருமணம்  செய்திருந்தால் அல்லது பிரான்சில் சொத்து வைத்திருந்தால் அவர் பிரெஞ்சுப் பிரஜையாகக் கணிக்கப்படுவார் என்று எழுதியுள்ளனர். 1804 இல் நெப்போலிய மன்னன் பிரெஞ்சுக் கல்வியறிவு உள்ளவரும் பிரெஞ்சுப் பிரஜையாவார் என்று சில மாற்றங்களைச் செய்திருந்தார்.

மரின் லுபெனின் தந்தை இரண்டாம் உலகப் போரில் இறந்த இராணுவத்தினர் பொதுமக்களுக்கான நினைவு நாளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட பிரெஞ்சு மக்கள் விரும்பவிலை. காரணம் ஹிட்லரின் செயல்களை இவர் தொடர்ச்சியாக ஆதரித்து வந்தவர்.

அண்மையில் இறந்த முன்நாள் அமைச்சர் Robert Badinter இன் அரச மரியாதையோடு நடந்த இறுதிக் கிரியையில் மரின் லுபென் கலந்து கொள்வதை Badinter குடும்பத்தினர் விரும்பவில்லை என்று அறிவித்திருந்தனர். இவர் பிரான்சில் சமத்துவம் தொடர்பான பல சட்டங்களை இயற்றக் காரணமானவர். நாம் பிரெஞ்சுப் புரட்சி முதல் இன்று வரை பல உயிர்களைத் தியாகம் சமத்துவத்திற்காக உழைத்து வந்திருக்கிறோம். ஆனால் இந்த இனவாதிகள் இவற்றையெல்லாம் உதறித் தள்ளக் கூடியவர்கள் என்று இவரது மனைவி தெரிவித்திருந்தார்.

இனத் துவேசம் அழிவை நோக்கியே செல்லும்.

நீங்கள் மரின் லு பென்னையும், லு பென்னையும் போட்டு குழப்பி உள்ளீர்கள்.. மரின் லு பென், லு பென் வழி சென்றிருந்தால் நிச்சயம் அவர் இந்த எலெக்சனில் தூக்கி வீசப்பட்டிருப்பார் மாறாக மரின் லு பென் எப்பவோ அறிவித்துவிட்டார் பிரெஞ்சுக்காரர் வேறு பிரெஞ்சு குடியேற்றகாரர்கள் வேறு என்று. நீங்கள் என்ன கலராகவும் இருக்கலாம் அதுவல்ல பிரச்சினை நீங்கள் பிரெஞ்சு குடி உரிமை உள்ளவரா அல்லது பிரெஞ்சில் வதிவிட உரிமை உள்ளவரா என்பதுதான் பிரச்சினை. பிரெஞ்சின் கடல் கடந்த நிர்வாகப்பிரதேசங்களான ரீயூனியன் பிரென்ச் கஜானா இங்கெல்லாம் பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் மரின் லு பென் வாக்குகளை வாங்க முன்னரே கடந்த பல தேர்தலிகளிலேயே மரின் லு பென் மிக மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் அந்த பிரதேசங்களில் வென்று இருந்தார். அந்த பிரதேச மக்கள் ஒட்டுமொத்தமாக மரின் லு பென்னை ஆதரித்திருந்தனர். இத்தனைக்கும் அங்கு வசிப்பவர்கள் பெரும்பான்மை கருப்பர்கள் மற்றும் இந்தியவமசாவளி தமிழர்கள்தான். மரின் லு பென் இனவாதத்தை எப்பொழுதோ கைவிட்டுவிட்டார். அவர் இப்பொழுது முன்வைத்திருப்பது பிரென்ச் பிரென்ச் காரருக்கே என்பதே. இதில் பிரான்சில் வாழும் பிரெஞ்சு முஸ்லீம்களுக்கு கூட சம்மதம் இருப்பதை பல சமூக வலைத்தள காணொளிகளில் பாத்திருக்கிறேன். நிறவேறுபாடு இனவாதம் வேறு கட்டற்ற புலம்பெயர்தலை கட்டுப்படுத்து என்பது வேறு; நீங்கள் இரண்டையும் போட்டு குழப்புகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, Kandiah57 said:

வெளிநாட்டவர்கள் வெளியோறினால். 50 வீதமான. தொழிற்சாலைகள். மூட வேண்டும்   வேலைக்கு ஆள்கள். இல்லை   கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல  மருத்துவர் பொறியாளர்,.......போன்றோருக்கும் தட்டுப்பாடு    எமது பிள்ளைகள் சொல்லுகிறார்கள்   இங்கே படித்தவர்கள். தேவைக்கேற்பப் இல்லை மிகவும் குறைவு.   இவர்கள் பிள்ளை பெறவும் தெரியாது  வேலை செய்யவும் தெரியாது  எப்படி நாடு முன்னேற்றம் அடையும் ??

 

நீங்கள் இங்கு வரமுன்னமே அவர்கள் முன்னேறிவிட்டார்கள். அவர்கள் முன்னேறியதால்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள். நீங்கள் அவர்களுக்கு உழைக்கவும் பிள்ளைபெறவும் பாடம் எடுக்க அவசியம் இல்லை. நீங்கள் இல்லாமலே அவர்கள் உலகின் வல்லரசு ஆனவர்கள். பத்து பிள்ளை பெத்தவளுக்கு ஒத்த பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டினாளாம் என்டமாதிரி இருக்கு உங்கட கதை.. ஆட்டை மேச்சுதாம் கோழி அண்னாந்து பாத்துதாம் சேவல்.. ஆருக்கு ஆர் வகுப்பு எடுக்கிரது.. ஒன்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிச்சாம்.. அந்த நாட்டில வாழ்ந்து கொண்டு அவனுக்கு பிள்ளை பெறத்தெரியாது உழைக்க தெரியாது என்டு நக்கலும் நையாண்டியும்..

இப்ப விளங்குதே சீமானும் ,மரின் லு பென்னும்,பிரிக்சிற் காரரும் ஏன் வாக்கு வீதத்தில் முன்னேறி இருக்கின்றனர் இனியும் முன்னேறுவார்கள் என்டு..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் இங்கு வரமுன்னமே அவர்கள் முன்னேறிவிட்டார்கள். அவர்கள் முன்னேறியதால்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள். நீங்கள் அவர்களுக்கு உழைக்கவும் பிள்ளைபெறவும் பாடம் எடுக்க அவசியம் இல்லை. நீங்கள் இல்லாமலே அவர்கள் உலகின் வல்லரசு ஆனவர்கள். பத்து பிள்ளை பெத்தவளுக்கு ஒத்த பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டினாளாம் என்டமாதிரி இருக்கு உங்கட கதை.. ஆட்டை மேச்சுதாம் கோழி அண்னாந்து பாத்துதாம் சேவல்.. ஆருக்கு ஆர் வகுப்பு எடுக்கிரது.. ஒன்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிச்சாம்.. அந்த நாட்டில வாழ்ந்து கொண்டு அவனுக்கு பிள்ளை பெறத்தெரியாது உழைக்க தெரியாது என்டு நக்கலும் நையாண்டியும்..

இப்ப விளங்குதே சீமானும் ,மரின் லு பென்னும்,பிரிக்சிற் காரரும் ஏன் வாக்கு வீதத்தில் முன்னேறி இருக்கின்றனர் இனியும் முன்னேறுவார்கள் என்டு..

இரண்டாவது உலக மாக யுத்ததின். பின்  இத்தாலியர்களும் துருக்கியர்களும். வந்து உழைத்து தான்  ஜேர்மன் முன்னேற்றம் அடைத்தது என்று நான் சொல்லவில்லை இங்கே சொல்லுகிறார்கள்  வரலாறு சொல்கிறது   போலந்து   நாட்டின் குடி மக்கள கார் தொழில்சாலைகளில். சம்பளமின்றி வேலை வங்கி உள்ளதாக படித்து உள்ளேன்      ஜேர்மன் மக்களின் பிறப்பு வீதத்தை பார்த்து விட்டு கதையை அளவுங்கள்.  மேலும்  சீமான்  20% மேல் வாக்கு பெற முடியாது    ஒவ்வொரு தேர்தலிலும் 2% ஆக 5வருடங்களுக்கு  4%  வாக்கு உயரும்போது 10 தடவைகள் 10*4=40  இப்ப இருப்பதுடன்   40 +8=48  ஆகும். ஆனால்  10 தடவைகள் 10*5=50 ஆண்டுகள்    சீமானின் வயது 100  மேல் வநது விடும்   ஆளப்போவதில்ல தமிழ்நாட்டை   ஏதோ  தமிழ்நாடு  தனிநாடு என்ற. கற்பனை  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, இணையவன் said:

இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஜேர்மனி இனவாதக் கட்சியான AfD இந்த வருட ஆரம்பத்தில் இரகசிய கூட்டம் ஒன்றில் தாம் ஆட்சிக்கு வந்தால் ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்கள் அனைவரையும் வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசித்தது. இதற்கு எதிராக ஜேர்மனி மக்கள் இலட்சக்கணக்கில் (14 இலட்சம் என்று கூறப்படுகிறது) நாடெங்கிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பலர் AfD கட்சியினைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரினர். 

இவர்கள் வாக்கு வேட்டைக்காக இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள் என நினைக்கின்றேன்.
தேர்தல் மூலம் முக்கிய பதவிகளுக்கு இவர்கள் வந்தாலும் அரசியல் சாசனங்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடமுடியுமா என தெரியாது. ஆனால் இனவாத கட்சிகளின் வெற்றி பழைய/முக்கிய கட்சிகள் தமது இன்றைய நடவடிக்கைகளை மாற்றியமைக்க சாத்தியங்கள் உண்டு.
முக்கியமாக அகதிகள் வருகை, உக்ரேன் போர் நடவடிக்கைகள் , வெளிநாட்டவர்களின்  சோசல் உதவி வாழ்க்கை என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். 
அதுடன் இன்னுமொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இனவாத கட்சிகளின் வெற்றியை போல் வெளிநாட்டவர்களுக்கு சார்பான கட்சிகளும் வென்றுள்ளன.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

அவர் கொல்லப்படவில்லை. முகத்தில் கத்திக்குத்து காயத்துடன் தப்பி விட்டார்.அவர் Afd கட்சியை சேர்ந்தவர். இஸ்லாத்திற்கு எதிராக பேசியவர் என கேள்விப்பட்டேன்.
Afd  கட்சி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக  சீனாவிற்கும் ரஷ்யாவிற்குமாக ஒற்றர் வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார்கள். அதனால் கொஞ்சம் இறங்கு முகத்துடன் இருந்தவர்கள் இந்த கத்திக்குத்துடன்  மீண்டும் ஏறு நிலைக்கு வந்துவிட்டார்கள். 😂

இந்த மதவாத முட்டாள்களும், AfD போன்ற இனவாத முட்டாள்களும் ஒரே ஆட்கள்தான், பெப்சியும், கொக்கோ கோலாவும் போல.

அவர்கள் இல்லாட்டில் இவர்களையும், இவர்கள் இல்லாட்டில் அவர்களையும் நாயும் சீண்டாது🤣.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

இந்த மதவாத முட்டாள்களும், AfD போன்ற இனவாத முட்டாள்களும் ஒரே ஆட்கள்தான், பெப்சியும், கொக்கோ கோலாவும் போல.

அவர்கள் இல்லாட்டில் இவர்களையும், இவர்கள் இல்லாட்டில் அவர்களையும் நாயும் சீண்டாது🤣.

One-Woman-Show in Italien: Giorgia Meloni siegte mit ihrer Fratelli d’Italia bei der Europawahl

இந்தா புட்டின் விசுவாசியான இவர் ஆட்சிக்கு வந்தால் பெரிய எடுப்புகள் எடுப்பார்,அதை செய்வார் இதை செய்வார் என்றார்கள்.நான் உட்பட.... ஆட்சிக்கு வந்தார்.ஆட்சி கதிரையில் அமர்ந்தார். வெளிநாட்டவருக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை.அவர்களுக்கு விசா வழங்குவதையும் நிறுத்த முடியவில்லை. அவர்களுக்கு சிற்றிசன் வழங்குவதையும் நிறுத்தவில்லை. அதிக பட்சம் இவர் நாட்டுக்கு தினசரி ஆயிரக்கணக்காக வரும் ஆபிரிக்க அகதிகளையும் நிறுத்த முடியவில்லை.

இருந்தும் ஐரோப்பிய தேர்தலில் வெற்றி  ஈட்டியுள்ளார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, குமாரசாமி said:

தேர்தல் மூலம் முக்கிய பதவிகளுக்கு இவர்கள் வந்தாலும் அரசியல் சாசனங்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடமுடியுமா என தெரியாது

மிகவும்  கஸ்ரம் .....கடினம்    ஏனெனில்  Bundes. Rat.  என்ற ஒன்று உண்டு இல்லையா??   அது அனுமதிக்க வேண்டும்   அதற்கு இவர்கள்  பல  மாநிலங்களை ஆள வேண்டும்   புண்டாஸ் ரட்டில். பல இல்லாமல் ஆட்சி செய்யும் கட்சி கூட  தங்கள் விரும்பும் சட்டங்களை இயற்ற முடிவதில்லை   

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, nunavilan said:

16 வீத வாக்குகளை எடுத்து 2 ம் இடத்தை எப்படி எடுக்கலாம்???

நான் தெரிந்து கொண்டது இந்த இனவாத கட்சி ஐரோப்பா பாரளுமன்றத்தில் 15 இருக்கைகளை பெற்று கொண்டுள்ளது. யேர்மன் எதிர் கட்சி இவர்களை விட அதிகம் இருக்கைகள் பெற்றுள்ளது .  ஆளும் கூட்டணி கட்சிகள் தனி தனியாக இவர்களைவிட குறைய பெற்று கொண்டதால் இவர்கள் இரண்டாவது இடம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் மரின் லு பென்னையும், லு பென்னையும் போட்டு குழப்பி உள்ளீர்கள்.. மரின் லு பென், லு பென் வழி சென்றிருந்தால் நிச்சயம் அவர் இந்த எலெக்சனில் தூக்கி வீசப்பட்டிருப்பார் மாறாக மரின் லு பென் எப்பவோ அறிவித்துவிட்டார் பிரெஞ்சுக்காரர் வேறு பிரெஞ்சு குடியேற்றகாரர்கள் வேறு என்று. நீங்கள் என்ன கலராகவும் இருக்கலாம் அதுவல்ல பிரச்சினை நீங்கள் பிரெஞ்சு குடி உரிமை உள்ளவரா அல்லது பிரெஞ்சில் வதிவிட உரிமை உள்ளவரா என்பதுதான் பிரச்சினை.

மரின் லு பென்னுக்கும், அவரின் தந்தை லு பென்னுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், அவர் எல்லா இன-பிரான்சியர் அல்லாத, வெள்ளை தோல் அல்லாதவரையும் எதிர்த்து அரசியல் செய்தார்.

ஆனால் அது வெறி அவுட் ஆகாது என தெரிந்து கொண்டு - packaging மாத்தி, பிரெஞ்சு குடிகள் இல்லாதோருக்கு எதிரான அரசியல் செய்கிறார் மெரின்.

இது யூகே யில் வெற்றிகரமாக பரீட்சித்து பார்க்கப்பட்ட பாலிசிதான்.

எப்படி?

இப்படி👇

1. 70, 80,90 களில் National Front, British National Party என சகல பிரித்தானியர், ஐரிஷ் அல்லாதோருக்கும் எதிரான வெளிப்படையான இனதுவேச அரசியல் செய்து மூக்குடைபட்டார்கள்.

2. 2000 களில் நாம் இனத்துவேசிகள் அல்ல, ஐரோப்பிய மட்டற்ற குடிவரவு, ஐரோப்பிய யூனியனுக்கு எதிரானோர் மட்டுமே என UKIP ஐ ஆரம்பித்து - சிறுக சிறுக, கிழக்கு ஐரோப்பியர் மீது வெறுப்பை வளர்த்து - பிரெக்சிட்டை ஸ்தாபித்தார்கள்.

பிரெக்சிட் வாக்கு நேரம், இவர்கள் பல ஆசிய, ஆபிரிக்க வம்சாவழி வாக்காளரையும் கவர்ந்தார்கள்.

என்ன சொல்லி? நாம் உங்களுக்கு அல்ல, கிழக்கு ஐரோப்பியருக்கு மட்டுமே எதிரானோர். பிரெக்சிட்டின் பின் உங்களுக்கு சம்பளம் கூடும், உங்கள் நாட்டில் இருந்து ஆட்களை எடுப்பது இலகுவாகும் என பூச்சுற்றி.

3. இவ்வாறு பிரெக்சிட்டை நடத்தி முடித்த கையோடு, UKIP ஐ கலைத்து விட்டு, அடுத்து Reform UK என ஒரு பார்ட்டியை ஸ்தாபித்து இப்போ பழமைவாத கட்சியை hostile takeover செய்யும் நிலைக்கு வளர்ந்து விட்டார்கள்.

இப்போ இவர்களின் பிரதான எதிரி சட்ட, சட்டபூர்வமற்ற வகையில் நடக்கும் குடிவரவு. அதாவது ஆசிய, ஆபிரிக்க நாட்டில் இருந்து வருவோர், வந்து இன்னும் நிரந்தர வதிவுரிமை அடையாமல் இருப்போரே இப்போ இவர்களின் இலக்கு.

4. இதையும் பிரெக்சிட் போல் முடித்த பின் - அடுத்த இவர்களின் இலக்கு? இங்கே குடியேறி, பிரஜையும் ஆகி விட்ட வெள்ளை அல்லாதோர். 

அதாவது நீங்களும், நானும், ரிசி சுனாக்கும், சஜித் கானும்🤣.

இங்கே படிமுறை 1 முதல் 4 வரை இந்த கட்சிகளை நடத்தியோர், பணம் கொடுத்தோர் எல்லாரும் ஒரே இனவாத சிந்தனை உள்ளோரே. காலத்துக்கேற்ப தம் packaging ஐ மாற்றி கொள்கிறனர்.

பிரான்சில், தந்தை லிபென் நின்றது படிமுறை 1 இல். மகள் மெரின் நிற்பது படிமுறை 2இல்.

ஆகவேதான் இந்த விஷ கிருமிகளை அது யூகே, பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, தமிழ் நாடு, இலங்கை எங்கேயும் எந்த காரணத்துக்காகவும், அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஆதரிக்கவே கூடாது.

இந்த இனவாத கிருமிகளை விட ஊழல் வாதிகள் பரவாயில்லை.

9 minutes ago, குமாரசாமி said:

One-Woman-Show in Italien: Giorgia Meloni siegte mit ihrer Fratelli d’Italia bei der Europawahl

இந்தா புட்டின் விசுவாசியான இவர் ஆட்சிக்கு வந்தால் பெரிய எடுப்புகள் எடுப்பார்,அதை செய்வார் இதை செய்வார் என்றார்கள்.நான் உட்பட.... ஆட்சிக்கு வந்தார்.ஆட்சி கதிரையில் அமர்ந்தார். வெளிநாட்டவருக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை.அவர்களுக்கு விசா வழங்குவதையும் நிறுத்த முடியவில்லை. அவர்களுக்கு சிற்றிசன் வழங்குவதையும் நிறுத்தவில்லை. அதிக பட்சம் இவர் நாட்டுக்கு தினசரி ஆயிரக்கணக்காக வரும் ஆபிரிக்க அகதிகளையும் நிறுத்த முடியவில்லை.

இருந்தும் ஐரோப்பிய தேர்தலில் வெற்றி  ஈட்டியுள்ளார். 🤣

ஓம்…நீங்கள் கூட கொஞ்சம் ஆவலுடன் யாழில் எழுதி இருந்தீர்கள்.

நான் கொஞ்சம் பயந்துதான் இருந்தேன்.

நல்லவேளையாக யாருக்கோ இவரை ஆப் செய்யும் ரகசியம் தெரிந்துள்ளது. அதனால் இத்தாலியும், ஐரோப்பாவும் கொஞ்சம் நிம்மதியாக உள்ளன.

அல்லது இவர் வாக்குக்காக இனவாதம் பேசும் ஆளாகாவும் இருக்கலாம்.

ஆனால் எல்லாரும் இவரை போல் இருக்க மாட்டாகள். கிட்டதட்ட நூறு வருடம் முன் அடோல்ப் என்ற ஒருவருக்கு இதே வாய்ப்பு கிடைத்த போது நடந்ததை மறக்க கூடாது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

இந்த இனவாத கிருமிகளை விட ஊழல் வாதிகள் பரவாயில்லை.

🤣 ச்...சா....ச்..சா இந்தா பார் சிங்கன் சிங்கிளாய் தேர் இழுத்து எங்கை கொண்டு வந்து நிப்பாட்டியிருக்கான் பார்....? 😜
உன்னால் முடியுமா தம்பி? :cool:

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்ப விளங்குதே சீமானும் ,மரின் லு பென்னும்,பிரிக்சிற் காரரும் ஏன் வாக்கு வீதத்தில் முன்னேறி இருக்கின்றனர் இனியும் முன்னேறுவார்கள் என்டு..

மறி லீ பென் பிரெஞ்காரர்களாக மாறிய மற்றய  இனத்தவர்களையும் அணைத்து செல்பவர் என்று நீங்களே சொல்லிவிட்டு  இனவெறி பிடித்த சீமானோடு எப்படி அவரை ஒப்பிட்டீர்கள்

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் இங்கு வரமுன்னமே அவர்கள் முன்னேறிவிட்டார்கள். அவர்கள் முன்னேறியதால்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள். நீங்கள் அவர்களுக்கு உழைக்கவும் பிள்ளைபெறவும் பாடம் எடுக்க அவசியம் இல்லை. நீங்கள் இல்லாமலே அவர்கள் உலகின் வல்லரசு ஆனவர்கள்.

உண்மை.

Edited by விளங்க நினைப்பவன்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் மரின் லு பென்னையும், லு பென்னையும் போட்டு குழப்பி உள்ளீர்கள்.. 

குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களில் முதலாவதை மரின் லுபெனின் தந்தை என்றே குறிப்பிட்டுள்ளேன்.

இரண்டாவது Badinter பற்றிய சம்பவம் உண்மையானது.

இது தவிர மரின் லுபெனுக்கு வெற்றியைத் தேடித் தந்த ஜோர்டன் பார்தெலாவின் மறுபுறத்தைத் தேடிப் பாருங்கள் நாசிகளின் தொடர்பு கிடைக்கும். 

மரின் லுபென் ஜேர்மன் AfD கட்சியோடு நடத்தவிருந்த இரகசிய சந்திப்பும் அண்மையில் கைவிடப்பட்டு செய்திகளில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் தமிழர் அரசியலையும்  ஐரோப்பிய இனவாத அரசியலையும் எப்படி ஒன்றோடு ஒன்றாக இணைத்து ஒப்பிடுகின்றார்கள் என விளங்கவில்லை.

நாம் தமிழர் கொள்கையில் இந்தியாவின் ஏனைய  மொழி வாரியான மாநிலங்களை போல் அந்தந்த மொழியாளர்களே அவர் தம் மாநிலத்தை ஆள வேண்டும் என்கின்றனர். உதாரணத்திற்கு கேரளா,கன்னடா,தெலுங்கா போல்..... மற்றும் படி நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாட்டில் வசிக்கும் ஏனைய மாநிலத்தவர்களையோ அல்லது வேலை நிமித்தம் குடியிருப்பவர்களையோ வெளியேற சொல்லவில்லையே? அல்லது வெளி மாநிலத்தவர்களை வெளியேற்றுவோம் என்றும் சொல்லவில்லை.

ஆனால் இன்றைய ஐரோப்பிய தேர்தலில் வெற்றி பெற்ற மாற்றுக்கட்சியினரின் கொள்கை அதுவல்லவே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, குமாரசாமி said:

🤣 ச்...சா....ச்..சா இந்தா பார் சிங்கன் சிங்கிளாய் தேர் இழுத்து எங்கை கொண்டு வந்து நிப்பாட்டியிருக்கான் பார்....? 😜
உன்னால் முடியுமா தம்பி? :cool:

நான் சொல்லியது

இனவாதிகள் தந்தை, மகள் லுபென்

 Vs

ஊழல்வாதி நிகலோய் சார்கோசி போன்றோர்

பற்றி.

நீங்கள் எதை நினைத்தீர்கள்🤣.

பிகு

இந்த இன்வாதிகளின் நதிமூலம், ரிசி மூலத்தை நோண்டினால் அவர்களே “வந்தேறிகள்” ஆக இருப்பது வழமை.

உதாரானமாக பிரெக்சிற் நாயகன் Nigel Farage. Farage என்ற பெயர் பிரஞ்-லக்சம்பேர்க் எல்லை பகுதியினரது. இவரின் மனைவியிம் ஜேர்மன்காரி.

(எதையோ நினைத்து பூட்டை ஆட்ட வேண்டாம்🤣)

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் இங்கு வரமுன்னமே அவர்கள் முன்னேறிவிட்டார்கள். அவர்கள் முன்னேறியதால்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள். நீங்கள் அவர்களுக்கு உழைக்கவும் பிள்ளைபெறவும் பாடம் எடுக்க அவசியம் இல்லை. நீங்கள் இல்லாமலே அவர்கள் உலகின் வல்லரசு ஆனவர்கள்.

ஐரோப்பியர்கள் வாழ,வளர்ச்சி பெற ஆசிய ,ஆபிரிக்க வளங்கள் தேவைப்பட்டது. மத்திய கிழக்கு எண்ணை வளம் தேவைப்பட்டது.
வட அமெரிக்கர்கள் வாழ,வளர்ச்சி பெற ஆபிரிக்க அடிமைகள்  கப்பல் கப்பல்களாக தேவைப்பட்டார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, goshan_che said:

நீங்கள் எதை நினைத்தீர்கள்🤣.

நாம் இருவரும் ஒரே ராசியில் பிறந்தவர்கள் என நினைக்கின்றேன். ஏனென்றால் நானும் அதையே நினைத்தேன். என்னதொரு ஆச்சரியம்.அபூர்வம் 😂

Vadivelu Memes Vadivelu Gif GIF - Vadivelu memes Vadivelu gif Vadivelu -  Discover & Share GIFs in 2024 | Vadivelu memes, Cool gifs, Comedy

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பியர்கள் வாழ,வளர்ச்சி பெற ஆசிய ,ஆபிரிக்க வளங்கள் தேவைப்பட்டது. மத்திய கிழக்கு எண்ணை வளம் தேவைப்பட்டது.
வட அமெரிக்கர்கள் வாழ,வளர்ச்சி பெற ஆபிரிக்க அடிமைகள்  கப்பல் கப்பல்களாக தேவைப்பட்டார்கள்.

ஆமாம்   இதுதான் உண்மை   எங்கள். பிள்ளைகள் மாதம் 1500. யூரோ க்கு மேல். காப்புறுதி. எனக் காட்டுகிறார்கள்   இது ஒருவகை  அரசு வருமானம்   எண்ணை   தேயிலை.  வருமானம் போன்றது   

Posted
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் தெரிந்து கொண்டது இந்த இனவாத கட்சி ஐரோப்பா பாரளுமன்றத்தில் 15 இருக்கைகளை பெற்று கொண்டுள்ளது. யேர்மன் எதிர் கட்சி இவர்களை விட அதிகம் இருக்கைகள் பெற்றுள்ளது .  ஆளும் கூட்டணி கட்சிகள் தனி தனியாக இவர்களைவிட குறைய பெற்று கொண்டதால் இவர்கள் இரண்டாவது இடம்.

blitzanalyse-wen-waehlten-jungen-100~240

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kandiah57 said:

ஆமாம்   இதுதான் உண்மை   எங்கள். பிள்ளைகள் மாதம் 1500. யூரோ க்கு மேல். காப்புறுதி. எனக் காட்டுகிறார்கள்   இது ஒருவகை  அரசு வருமானம்   எண்ணை   தேயிலை.  வருமானம் போன்றது

போற வண்டில்ல கந்தையர் தன்ர மனப்பாரத்தையும் இஞ்சை இறக்கி விட்டிருக்காரு...



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.