Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சீமானுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்

தினம் தினம் சிங்கள அரசுகளால் எமது மக்கள் படும் துன்பங்களையோ அநிஞாயங்களையோ பற்றி பேசுவதில்லை.

ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் பலர் இருந்தும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு விடயத்தையும் 

குறைந்த பட்சம் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு எழுத கூட மாட்டார்கள்.

கேட்டால் உலகத்துக்கு தெரியாததா என்பார்கள்.

வீட்டில் களவு போனால் கூட முறைப்பாடு செய்தால்த் தான் பொலிசே வருவான்.

எந்த ஒரு பொலிசும் வீடு தேடி வந்து உங்க வீட்டில் களவு போட்டுதா என்று கேட்க மாட்டான்.

  • Replies 99
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    சீமான் மட்டுமல்ல உலகத்தில் வாழும் யாரும் புலிகளையும் தலைவரையும் அதன் கொள்கைகளையும் பேசலாம்.. அது ஒரு தத்துவம்.. தலைவர் தமிழ்தேசிய உலகிற்கு தந்துவிட்டு போனது.. மார்க்சியம் போல லெனினியம் போல் பெரியாரிசம

  • விசுகு
    விசுகு

    வணக்கம் சகோ இந்த கருத்தை பார்த்தபோது சிலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன்.   சிறீலங்கா சிங்களத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பௌத்த மதமே சிறீலங்கா என்று சொல்லி எம்மை அடித்து துரத

  • Eppothum Thamizhan
    Eppothum Thamizhan

    இது பல மரமண்டைகளுக்கு விளங்குதில்லை விசுகர்! தமிழக வாக்காளர்கள் உட்பட!!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கு சீமானுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்

தினம் தினம் சிங்கள அரசுகளால் எமது மக்கள் படும் துன்பங்களையோ அநிஞாயங்களையோ பற்றி பேசுவதில்லை.

ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் பலர் இருந்தும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு விடயத்தையும் 

குறைந்த பட்சம் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு எழுத கூட மாட்டார்கள்.

கேட்டால் உலகத்துக்கு தெரியாததா என்பார்கள்.

வீட்டில் களவு போனால் கூட முறைப்பாடு செய்தால்த் தான் பொலிசே வருவான்.

எந்த ஒரு பொலிசும் வீடு தேடி வந்து உங்க வீட்டில் களவு போட்டுதா என்று கேட்க மாட்டான்.

சீமான் தமிழில் வெளுத்துவாங்கி ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை.

ஆங்கிலத்தில் புலமை பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கோமாளிகளும் ஒன்றும் புடுங்குவதில்லை.

மக்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களையும் கண்டுகொள்ளாமல் விடுகின்றார்கள். 

இதனால்தான் ரணில் தனக்கு தமிழர்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற தைரியத்தில் இருக்கின்றார்.

Edited by கிருபன்
பிழம்பு -> பிழைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

எனக்கு புரிந்த அளவுக்கு இது தவறு, உதாரணத்துக்கு திமுகவின் 27% என்பது அவர்கள் போட்டியிட 21 தொகுதிகளுக்கானதல்ல. அவரகள் கூட்டணி 21 தொகுதிகளில் எடுத்த வாக்குகளை வைத்து 40 தொகுதிகளுக்கு எவ்வளவு என்று கணிக்கப்பட்டது. நீங்கள் மீண்டும் அதை 21ஆல் வகுத்து 40ஆல் பெருக்குகிறீர்கள்   

40  ஆல்  வகுத்து  21. ஆல். பெருக்க  சரி ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சீமான் தமிழில் வெளுத்துவாங்கி ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை.

ஆங்கிலத்தில் புலமை பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கோமாளிகளும் ஒன்றும் புடுங்குவதில்லை.

மக்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் தமிழ்த் தேசியத்தை வைத்து பிழம்பு நடத்துபவர்களையும் கண்டுகொள்ளாமல் விடுகின்றார்கள். 

இதனால்தான் ரணில் தனக்கு தமிழர்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற தைரியத்தில் இருக்கின்றார்.

அடுத்தவர் என்ன புடுங்குகிறார் என்பதிலேயே காலத்தைக் கடத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாழ்த்துக்கள் நாம்தமிழர்.. என்னைப்போன்று உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ்த்தேசியவாதிகளிற்கு இது உற்சாகம் தருகிறது.. 

ஆ!

நீங்கள் தமிழ் தேசியவாதியா?

எப்ப எப்பவில் இருந்து? 

சொல்லவேயில்லை!

இப்பதான் என் மரமண்டைக்கு புரியுது

நீங்கள் எல்லாம் தமிழ் தேசியவாதி என்று மார் தட்டுவதால் தான்

ஊர்ச் சனம் ஏன் தமிழ் தேசியம் என்றாலே வெறுப்பாக 

பார்க்குது என்று!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கு சீமானுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்

தினம் தினம் சிங்கள அரசுகளால் எமது மக்கள் படும் துன்பங்களையோ அநிஞாயங்களையோ பற்றி பேசுவதில்லை.

ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் பலர் இருந்தும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு விடயத்தையும் 

குறைந்த பட்சம் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு எழுத கூட மாட்டார்கள்.

கேட்டால் உலகத்துக்கு தெரியாததா என்பார்கள்.

வீட்டில் களவு போனால் கூட முறைப்பாடு செய்தால்த் தான் பொலிசே வருவான்.

எந்த ஒரு பொலிசும் வீடு தேடி வந்து உங்க வீட்டில் களவு போட்டுதா என்று கேட்க மாட்டான்.

நன்றி நன்றி பெரியவர் ...................................................... நிறைய எனது பாசையில் எழுத கை  குறுகுறுக்குது இன்று வெள்ளி  வேறை தங்களுக்கு பிபிசி யை விட உலக அறிவு கூட எனும் முட்டாள்   தலைகள் இங்கு நிப்பினம் இந்த லொள்ளு வேணாம் இனிய இரவு உங்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நீர்வேலியான் said:

எனக்கு புரிந்த அளவுக்கு இது தவறு, உதாரணத்துக்கு திமுகவின் 27% என்பது அவர்கள் போட்டியிட 21 தொகுதிகளுக்கானதல்ல. அவரகள் கூட்டணி 21 தொகுதிகளில் எடுத்த வாக்குகளை வைத்து 40 தொகுதிகளுக்கு எவ்வளவு என்று கணிக்கப்பட்டது. நீங்கள் மீண்டும் அதை 21ஆல் வகுத்து 40ஆல் பெருக்குகிறீர்கள்   

எல்லாருக்கும் இந்த முறை பிழை என புரிகிறது.

ஆனால் யாருக்கும் சரியான வழிமுறையை பிரேரிக்க முடியவில்லை🤣.

5 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கு சீமானுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்

தினம் தினம் சிங்கள அரசுகளால் எமது மக்கள் படும் துன்பங்களையோ அநிஞாயங்களையோ பற்றி பேசுவதில்லை.

ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் பலர் இருந்தும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு விடயத்தையும் 

குறைந்த பட்சம் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு எழுத கூட மாட்டார்கள்.

கேட்டால் உலகத்துக்கு தெரியாததா என்பார்கள்.

வீட்டில் களவு போனால் கூட முறைப்பாடு செய்தால்த் தான் பொலிசே வருவான்.

எந்த ஒரு பொலிசும் வீடு தேடி வந்து உங்க வீட்டில் களவு போட்டுதா என்று கேட்க மாட்டான்.

நீங்கள் இலங்கையிலே வேலை செய்ததில்லை. ஆகவே வெளிநாட்டில்தான் வேலை செய்திருப்பீர்கள்.

பலதசாப்த அமரிக்க வாசம் - ஆங்கிலம் அத்துப்படி என நினைக்கிறேன்.

வாரிசுகளும் அமேரிக்காவில் உயர் பதவிகளில்.

சீமானை எதிர்ப்போரை நீங்கள் கேட்க்கும் கேள்விகளை ஏன் உங்களை நோக்கியும், உங்கள் வாரிசுகளை நோக்கியும் நீங்கள் கேட்க கூடாது அண்ணை?

4 hours ago, கிருபன் said:

சீமான் தமிழில் வெளுத்துவாங்கி ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை.

ஆங்கிலத்தில் புலமை பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கோமாளிகளும் ஒன்றும் புடுங்குவதில்லை.

மக்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் தமிழ்த் தேசியத்தை வைத்து பிழம்பு நடத்துபவர்களையும் கண்டுகொள்ளாமல் விடுகின்றார்கள். 

இதனால்தான் ரணில் தனக்கு தமிழர்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற தைரியத்தில் இருக்கின்றார்.

நெத்தியடி.

3 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்தவர் என்ன புடுங்குகிறார் என்பதிலேயே காலத்தைக் கடத்துவோம்.

மேலே நீங்கள் கூட, சீமானை எதிர்பவர்கள் என்ன புடுங்குகிறார்கள் என்பதைதானே எழுதி உள்ளீர்கள்?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

தினம் தினம் சிங்கள அரசுகளால் எமது மக்கள் படும் துன்பங்களையோ அநிஞாயங்களையோ பற்றி பேசுவதில்லை.

எப்படி இதை நீங்கள் அறிந்தீர்கள்?

5 hours ago, ஈழப்பிரியன் said:

ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் பலர் இருந்தும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு விடயத்தையும் 

குறைந்த பட்சம் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு எழுத கூட மாட்டார்கள்.

கடிதம் எழுதத்தான் சங்கரி, சிறிதரன் இருக்கிறார்களே.

நாமும் கடித இலக்கியத்தை வளர்ப்பதில் என்ன பயன் அண்ணை?

தவிர, அப்படி யாரும் எழுதவில்லை என நீங்கள் எப்படி கண்டு பிடித்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அதை விட தமிழ்நாட்டை ஆள்பவர்களின் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காமல் சீமானின் பிறப்பை மட்டும் அணு அணுவாக ஆராய்கின்றார்கள். 🤣

நாங்கள் பார்த்து என்ன பிரயோஜனம்   தமிழ்நாட்டு தமிழர்கள் தானே  பதவியில் அமர்த்தி. உள்ளார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ஆங்கிலத்தில் புலமை பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கோமாளிகளும் ஒன்றும் புடுங்குவதில்லை.

மிகவும் கண்டிக்க தக்க கருத்து. 

😪

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

மிகவும் கண்டிக்க தக்க கருத்து. 

😪

கண்டியுங்கள். ஆனால் அவர்கள் 15 வருடமாக கோமாளிவேலைதான் செய்கின்றார்கள். இவர்கள் எந்த ஜனநாயக முறைப்படி தங்களை நாடுகடந்த அரசாங்கம் என்றும் சொல்லமுடிகின்றது?

எப்படியான அழுத்தங்களை, லொபியிங்கை யார்மீது பிரயோகிக்கின்றார்கள்?

இவர்கள் தாயக மக்களின் பிரதிநிதிகளும் இல்லை, புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதிகளும் இல்லை. வெறும் zoom மீற்றிங்கும், தேநீர், வடையோடு நேரடியாக சந்தித்து அறிக்கைவிடும் கோமாளிக்கூட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாபில் இந்திரா காந்தியை கொலை செய்த பியாந்த்சிங் என்பவர் மகன் சரப்ஜீத் சிங் கல்சா வெற்றி பெற்றுள்ளார்.

இவர் ஆம் ஆத்மி கட்சியின் கரம்ஜித் சிங் அன்மோலை 70,053 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

ஏமாந்த தமிழினத்தில்தான் இராஜீவ் காந்தியின் ஒப்பாரி சத்தம் இன்னும் ஓயவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாகி விஜய் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்குமளவுக்கு முன்னேறுவது நல்லதே. எனது வாழ் நாளில் சீமான் அவரது  நடைமுறை சாத்தியமற்ற   கிறுக்குத்தனமான பேச்சுகளைத் தவிர்த்து பொ றுப்புணர்வுடன் அறிவு பூர்வமாக மேடையில் பேசுவதை பார்கக ஆசையாக உள்ளது.    

அவர் பொறுப்புணர்வுடன் செயலாற்றும் போது அவரின் மதிப்பு மனிதர்கள் மத்தியில் கூட   உயரும் வாய்ப்பு உண்டு. 

அவரது கிறுக்குதனமான கொமடிப் பேச்சுகளை பார்தத்து ரசிக்கும் இளவட்டங்கள் அவர்களுக்கு maturity வந்தவுடன் Pokemon ஐ  spongebob பிள்ளைகள்  கைவிட்டு அடுத்த கட்ட மனித வளர்சசிக்கு செல்வதை போல சீமானை கைவிட்டுவிட்டு  சென்றுவிடுவர். ஒரு சில மனவளர்சசி குன்றியவர்கள் அவருடன் தங்கி விடுவதும் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் இன்று சீமான் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருக்கிறார். சீமான் கூட்டணிக்குச் சம்மதித்தால் அனைத்துக் கட்சிகளையும் கழட்டி விட்டு நாம் தமிழரை மட்டுமே கூட்டணி வைத்துக் கொண்டு களம்காண 2 பெரிய கட்சிகளும் தயராக இருக்கின்றன. 2011 இல் விஜயகாந்தை வைத்து திமுகவை படுதோல்வி அடையைச் செய்த வரலாறும் கண் முன்னே இருப்பதுதான். அந்த நேரத்தில் கருணாநிதி ஜெயலலிதா பொன்ற ஆளுமைகள் இருந்தததால் அதன் பின் விஜயகாந்தால் மீள முடியவில்லை. அவரது உடல்நிலையும் இடங்கொடுக்க வில்லை.ஆனால் இப் போது இருக்கும் நிலையில் கூட்டணி இல்லாமல் அரசயலில் சாதிப்பது கல்லில் நார் உரிப்பது போன்ற வேலைதான். ஆனால் இப்போதிருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தங்கள் அழிவுக்கு தாங்களே அழிவுக்கு தாங்களே வழிவகுக்கக் கூடாது விஜய் கட்சியுடன் கூட்டணிவைத்து செயற்படுவது விஜய்க்கும் நல்லது சீமானுக்கும் நல்லது. அல்லது விஜய் காணாமல் போய் விடுவார்.சீமான் கொங்ச கொஞ்சமாகத்தான் முன்னேற முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kandiah57 said:

நாங்கள் பார்த்து என்ன பிரயோஜனம்   தமிழ்நாட்டு தமிழர்கள் தானே  பதவியில் அமர்த்தி. உள்ளார்கள்  

காசு கொடுக்காமலா? 🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

காசு கொடுக்காமலா? 🤪

இருந்தால் கொடுங்கள்      ......எனக்கும் கொஞ்சம் தாருங்கள்”   🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

கண்டியுங்கள். ஆனால் அவர்கள் 15 வருடமாக கோமாளிவேலைதான் செய்கின்றார்கள். இவர்கள் எந்த ஜனநாயக முறைப்படி தங்களை நாடுகடந்த அரசாங்கம் என்றும் சொல்லமுடிகின்றது?

எப்படியான அழுத்தங்களை, லொபியிங்கை யார்மீது பிரயோகிக்கின்றார்கள்?

இவர்கள் தாயக மக்களின் பிரதிநிதிகளும் இல்லை, புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதிகளும் இல்லை. வெறும் zoom மீற்றிங்கும், தேநீர், வடையோடு நேரடியாக சந்தித்து அறிக்கைவிடும் கோமாளிக்கூட்டம்

வணக்கம் @கிருபன் 

கனக்க எழுத வேண்டும். ஆனால் நேரம் தான் இல்லை.

ஆனால் சிலவற்றை கண்டும் காணாமலும் கடந்து போகமுடியாது கூடாது.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்தவர்களால் அண்ணா வாங்க ஏதாவது ஜனநாயக வழியாக முயன்று பார்க்கலாம் என்று கேட்டபோது மறுத்து விட்டேன். 

ஆனாலும் அவர்களுடன் தொடர்பிலும் தோழமையுடன் இருந்ததோடு அங்கத்துவ பணமும் கொடுத்து வந்தேன். அவ்வாறு அவர்களது கூட்டத்தில் கலந்து கொண்டபோது மூட்டை மூட்டையாக பைல்களை கண்டேன். என்ன என்று கேட்டபோது செய்யவேண்டிய பணிகள் என்றார்கள். அன்றிலிருந்து மனதில் ஓர் குற்ற உணர்வு என்னை கொன்றபடி.

ஆனால் உங்களுக்கு வடையும் ரீயும் தெரிந்திருக்கிறது. நமது பார்வையில் தான் எல்லாமே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அவ்வாறு அவர்களது கூட்டத்தில் கலந்து கொண்டபோது மூட்டை மூட்டையாக பைல்களை கண்டேன். என்ன என்று கேட்டபோது செய்யவேண்டிய பணிகள் என்றார்கள்.

பைல்களை வைத்து இந்த 15 வருடங்களில் எவ்வளவு தூரம் முன்நகர்ந்திருக்கின்றார்கள்? சிறிலங்கா அரசை கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்காவிடம், ஐ.நா.விடமும் இல்லாத பைல்களா?

சிதறு தேங்காய் போல சுக்குநூறாகப் பிரிந்து ஒன்றையும் உருப்படியாகச் செய்யாத கூட்டமாக மாறிவிட்டனர் தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் அரசியல் செய்பவர்கள். அதனால் பெரும்பான்மையான மக்கள் இவர்களைக் கண்டுகொள்ளப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நீர்வேலியான் said:

எனக்கு புரிந்த அளவுக்கு இது தவறு, உதாரணத்துக்கு திமுகவின் 27% என்பது அவர்கள் போட்டியிட 21 தொகுதிகளுக்கானதல்ல. அவரகள் கூட்டணி 21 தொகுதிகளில் எடுத்த வாக்குகளை வைத்து 40 தொகுதிகளுக்கு எவ்வளவு என்று கணிக்கப்பட்டது. நீங்கள் மீண்டும் அதை 21ஆல் வகுத்து 40ஆல் பெருக்குகிறீர்கள்   

18 hours ago, Kandiah57 said:

40  ஆல்  வகுத்து  21. ஆல். பெருக்க  சரி ஆகும். 

திமுக பெற்ற 26.93 வீதமான வாக்குகள் அவர்கள் போட்டியிட்ட 22 தொகுதிகளில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்டது. அவர்கள் கிட்டத்தட்ட ஒரு கோடியே 17 இலட்சம் வாக்குகளை 22 தொகுதிகளில் பெற்றிருக்கின்றனர், அது தமிழ்நாட்டில் பதியப்பட்ட மொத்த செல்லுபடியாகும் வாக்குகளின் 26.93%.

large.Election_TN_2024.jpg.6e025520a0be9a50ec0900d28023470f.jpg

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

பைல்களை வைத்து இந்த 15 வருடங்களில் எவ்வளவு தூரம் முன்நகர்ந்திருக்கின்றார்கள்? சிறிலங்கா அரசை கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்காவிடம், ஐ.நா.விடமும் இல்லாத பைல்களா?

சிதறு தேங்காய் போல சுக்குநூறாகப் பிரிந்து ஒன்றையும் உருப்படியாகச் செய்யாத கூட்டமாக மாறிவிட்டனர் தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் அரசியல் செய்பவர்கள். அதனால் பெரும்பான்மையான மக்கள் இவர்களைக் கண்டுகொள்ளப்போவதில்லை.

இது தான் அதி கோமாளித்தனம் 

ஏன் அந்த பைல்களை நாம் எடுத்து செய்யக்கூடாது என்ற கேள்வியை எம்மீது கேட்பதற்கு பதிலாக மற்றவர்களையே குற்றவாளிகளாக்குவது. 

ஏன் பைல்கள் நகரவில்லை என்றால் செய்ய ஆட்கள் இல்லை. டொட். 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

இது தான் அதி கோமாளித்தனம் 

ஏன் அந்த பைல்களை நாம் எடுத்து செய்யக்கூடாது என்ற கேள்வியை எம்மீது கேட்பதற்கு பதிலாக மற்றவர்களையே குற்றவாளிகளாக்குவது. 

ஏன் பைல்கள் நகரவில்லை என்றால் செய்ய ஆட்கள் இல்லை. டொட். 

நாம் ஒரு அமைப்பிலும் இருந்து நாமே தலைவர்கள் என்றும், இடையிடையே நாமே மீண்டும் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டிகின்றோம் என்றும் கோமாளித்தனம் செய்யவில்லையே😃

இவர்கள் பைல்களைக் கட்டி வைத்திருப்பது அதைக் காட்டி விசுகு ஐயா போன்றவர்களிடம் இருந்து மாதா சந்தா வாங்கத்தான் என்று தெரிகின்றது😁. அவர்கள் வேறு ஒருவரிடமும் கொடுக்கவும் மாட்டார்கள். அமைப்பைப் கலைத்துவிட்டு போகவும் மாட்டார்கள்..  பெரிதாகச் செய்ய பெரிய இரகசியத் திட்டம் எல்லாம் இருக்கு என்று சொல்லிச் சொல்லியே இன்னும் சந்தா கறப்பார்கள்!

இங்கு சம்மர் தொடங்கிவிட்டால் ஒவ்வொரு கிழமையும் ஒரு கால்பந்தாட்ட போட்டி நடக்கும். ஆனால் சேர்ந்து செய்யமாட்டார்கள்.

போன கிழமை தமிழீழ அரசியல்துறை என்று தலைமைச் செயலகக்காரர்கள் நடத்தினார்கள். நாடு கடந்த அரசாங்கமும் போன வருடம் நடத்தியது. இந்த வருடமும் நடாத்துவார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் விளையாடுபவர்களைத் தவிர மக்கள் பெரிதாக வருவதில்லை. நிறையப் பணம் செலவு செய்துதான் இப்படியான போட்டிகள் நடாத்தமுடியும். அதை பாங்க்ரோல் செய்ய யாரிடம் போகின்றார்கள் என்று தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

நன்றி

நீங்கள் பார்வையாளர் மட்டுமே.

எனவே இது போன்ற வக்கிரங்களை மட்டுமே உங்களால் கொட்ட முடியும். 

ஆகக் குறைந்தது அந்த கால்பந்தாட்ட மைதானத்தில் சில மணி நேரங்கள் கால்பந்தாட்ட எல்லைகளுக்கு காவலுக்காவது நின்று விட்டு வந்து எழுதுங்கள். அதுவரை......

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

ஆகக் குறைந்தது அந்த கால்பந்தாட்ட மைதானத்தில் சில மணி நேரங்கள் கால்பந்தாட்ட எல்லைகளுக்கு காவலுக்காவது நின்று விட்டு வந்து எழுதுங்கள். அதுவரை......

காவலுக்குப் போய்நின்றால் தேசியம் வளர்ந்துவிடுமாக்கும்😂

அதுக்கு பணம் கொடுத்து நிறுவனங்களை அமர்த்தியுள்ளார்கள்! அந்தளவுக்கு பணம் கொடுக்க ஆட்கள் இருக்கின்றார்கள்! தேசிய சேவை செய்ய இப்ப சம்பளம் கொடுத்தால்தான் உண்டு!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

காவலுக்குப் போய்நின்றால் தேசியம் வளர்ந்துவிடுமாக்கும்😂

அதுக்கு பணம் கொடுத்து நிறுவனங்களை அமர்த்தியுள்ளார்கள்! அந்தளவுக்கு பணம் கொடுக்க ஆட்கள் இருக்கின்றார்கள்! தேசிய சேவை செய்ய இப்ப சம்பளம் கொடுத்தால்தான் உண்டு!

மிகவும் வக்கிரமான பொறுப்பற்ற பதில்கள்

கால்பந்தாட்ட மைதானத்தில் உள்ள சிரமங்கள் தெரியும் என்று மட்டுமே சொல்ல வந்தேன். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

திமுக பெற்ற 26.93 வீதமான வாக்குகள் அவர்கள் போட்டியிட்ட 22 தொகுதிகளில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்டது. அவர்கள் கிட்டத்தட்ட ஒரு கோடியே 17 இலட்சம் வாக்குகளை 22 தொகுதிகளில் பெற்றிருக்கின்றனர், அது தமிழ்நாட்டில் பதியப்பட்ட மொத்த செல்லுபடியாகும் வாக்குகளின் 26.93%.

சரியான கணிப்பு.
அது போன்றே 34 தொகுதிகளில் அதிமுக பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 20.46 %
40 தொகுதிகளில் சீமான் கட்சி பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான  வாக்குகளின் 8.10 %

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.