Jump to content

நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்

Andrei Kozlov (left) and Alomg Meir (right) after being rescued by Israeli special forces, June 8, 2024. (photo credit: IDF SPOKESPERSON UNIT)

கடந்தவருடம் அக்டோபர் மாதத்தில் ஹமாஸ் அமைப்பினால் இஸ்ரேலினுள் நடத்தப்பட்ட தாக்குதலின்போது பணயக கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் நேற்று விடுவித்திருக்கிறது. இஸ்ரேலிய விசேட படைகளும், பொலீஸாரும் இணைந்தே இந்த மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறார்கள்.

பலஸ்த்தீன அகதிகள் முகாம் ஒன்று அமைந்திருக்கும் நஸ்ரெயிட் பகுதியின் இரு வேறு மறைவிடங்களின்மேல் இஸ்ரேலிய படைகள் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போதே இந்த நான்கு இஸ்ரேலியர்களும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். விசேட படைகள் இப்பகுதிக்குள் நுழையுமுன் இப்பகுதி மீது மிகக் கடுமையான ரொக்கெட் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது. சுமார் 10 நிமிட இடைவேளையில் 150 ரொக்கெட்டுக்கள் இப்பகுதிமீது ஏவப்பட்டிருக்கின்றன. சன அடர்த்தி அதிகமான இந்த அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 210 பலஸ்த்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் பல சிறுவர்களும் அடக்கம். அப்பகுதியில் இருக்கும் கட்டடங்கள் முற்றாக அழிக்கப்பட்டு, ஒரு நரகம் போல் அப்பகுதி காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குண்டுவீச்சில் சிதறுண்ட மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்வதை மக்கள் கண்ணுற்றிருக்கிறார்கள். 

The aftermath of Israeli bombing in Nuseirat refugee camp, Gaza Strip.

பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையின்போது ஹமாஸ் தீவிரவாதிகளுடனான சண்டையில் இஸ்ரேலிய இராணுவத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். 

இஸ்ரேலின் இந்த மீட்புநடவடிக்கையினால், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இஸ்ரேலியர்களின் தவற்றினால் ஏற்பட்ட அவமானத்தை கழுவிவிட முடியாது என்று ஹமாஸ் கூறியிருக்கிறது. மேலும், இந்தத் தாக்குதலின்போது மேலும் சில பணயக் கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அது கூறியிருக்கிறது. மீதமிருக்கும் பணயக் கைதிகளின் பாதுகாப்பினை இஸ்ரேலே இல்லாமலாக்கியிருக்கிறது என்றும் ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலிய கொலையாளிகளின் ஆக்கிரமிப்பிற்கெதிரான எமது மக்களின் போராட்டம் தொடரும், நாம் சரணடையப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான அல் அக்ஸா பிரிக்கேட் கூறியிருக்கிறது. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் கடந்தவருடம் அக்டோபர் மாதத்தில் ஹமாஸ் அமைப்பினால் இஸ்ரேலினுள் நடத்தப்பட்ட தாக்குதலின்போது பணயக கைதிகளாகப் பிடித்துச

குமாரசாமி

பலஸ்தீன் மீது இவ்வளவு தாக்குதல் அழிவுகளை நடத்தும் இஸ்ரேல் நாடும் அங்கு வாழும் மக்களும் இனி வரும் காலங்களில் சுதந்திரமாக பயமில்லாமல் வாழுவார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் உள்ளதா? இன்றைய உலக பல முன

Kapithan

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் விபுகள் மக்களை விடுவித்து  முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம்  என்கிறீர்களா?  கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டும் இல்லையா ?  பெயரில் மட்டும் நி

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன் மீது இவ்வளவு தாக்குதல் அழிவுகளை நடத்தும் இஸ்ரேல் நாடும் அங்கு வாழும் மக்களும் இனி வரும் காலங்களில் சுதந்திரமாக பயமில்லாமல் வாழுவார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் உள்ளதா?

இன்றைய உலக பல முனை போர்க்களங்கள் பலஸ்தீன பிரச்சனையை முன் வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அப்படியிருக்கும் போது இஸ்ரேலின் வீர தீரம் இன்னும் எத்தனை நாட்களுக்கு?

ஏனெனில் முஸ்லீம்கள் ஐரோப்பாவில் மிக வலுவாக காலூன்றி விட்டார்கள் மத்திய கிழக்கு பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் அவலங்கள் நிகழப்போவது ஐரோப்பாவிலும் சேர்த்து தான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
58 minutes ago, நியாயம் said:

பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். 

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் விபுகள் மக்களை விடுவித்து  முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம்  என்கிறீர்களா? 

கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டும் இல்லையா ? 

பெயரில் மட்டும் நியாயம் இருந்து ஒரு பலனும் இல்லை. சிந்தனையிலும் சிறிதளவேனும்  வேண்டும். 

😏

Edited by Kapithan
  • Thanks 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

1 hour ago, நியாயம் said:

பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். 

இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட பல பலஸ்தீனியர்களையும் இஸ்ரேல் விடுவித்திருக்கலாம்.

மக்களுக்கு உதவ என சென்ற அமெரிக்க உதவி நிறுவனம் தாங்களாகவே மக்களுக்கு உதவுவதாக கூறி மக்களுக்குள் மக்களாக நின்று காட்டிக்கொடுத்ததாக பலஸ்தீனிய செய்திகள் கூறுகின்றன.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். 

பயங்கரவாதிகளிடமிருந்து இவ்வாறான விடயங்களை எதிர்பார்க்கமுடியாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர். 

மீண்டும் மீண்டும் வாசிக்கவும்.. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

மக்கள் மீது உண்மையான அக்கறை விபுகள் மக்களை விடுவித்து  முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம் இருந்திருக்குமானால்  என்கிறீர்களா? 

கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டும் இல்லையா ? 

பெயரில் மட்டும் நியாயம் இருந்து ஒரு பலனும் இல்லை. சிந்தனையிலும் சிறிதளவேனும்  வேண்டும். 

😏

கேள்வி : பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். 

பதில்: விபுகள் மக்களை விடுவித்து  முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம்

11 minutes ago, Kapithan said:

விசுகர். 

மீண்டும் மீண்டும் வாசிக்கவும்.. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

கேள்வி : பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். 

பதில்: விபுகள் மக்களை விடுவித்து  முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம்

 

👆இதைத்தான் திருவாளர் " நியாயம் "  அவர்கள் கூற விரும்பியது. 

இதைக்கூட தாங்கள் புரிந்துகொள்ள முடியவில்லையா? ☹️

 

எல்லா அரசுகளுக்குமே பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது. அது இலங்கை அரசாயிருந்தாலென்ன இஸ்ரேலாக இருந்தால் என்ன? 

இஸ்ரேலிய அரசை நியாயப்படுத்துதல் இலங்கை அரசை நியாயப்படுத்துவதாகும். 

  • Like 1
Link to comment
Share on other sites

சியோனிச  அரச பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

👆இதைத்தான் திருவாளர் " நியாயம் "  அவர்கள் கூற விரும்பியது. 

இதைக்கூட தாங்கள் புரிந்துகொள்ள முடியவில்லையா? ☹️

 

எல்லா அரசுகளுக்குமே பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது. அது இலங்கை அரசாயிருந்தாலென்ன இஸ்ரேலாக இருந்தால் என்ன? 

இஸ்ரேலிய அரசை நியாயப்படுத்துதல் இலங்கை அரசை நியாயப்படுத்துவதாகும். 

பணயக்கைதிகளுக்கும் பொது மக்களுக்குமான வித்தியாசம் தெரியாத உங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியாது. நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, விசுகு said:

பணயக்கைதிகளுக்கும் பொது மக்களுக்குமான வித்தியாசம் தெரியாத உங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியாது. நன்றி 

நான்கு பணயக்கைதிகளை மீட்பதற்காக 200க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொல்லலாம் என்றால் 20000 ஆயிரம்,  பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளைக் கொல்வதற்காக 2 லட்சம் தமிழ்ப் பொதுமக்களைக் கொன்றது சரி என்றாகிவிடும். 

உதைக்கூடப் புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லையா? 

🤦🏼‍♂️

உங்கள் குறுகிய அல்லது ஒற்றை,  தட்டையான சிந்தனைமுறை வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை. 

☹️

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

நான்கு பணயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் செய்த மனிதப்படுகொலைகளை கண்டிக்கும் அதேவேளை, ஹமாஸ் பயங்கரவாதிகள் பாலஸ்தீன மக்களை மனிதக் கேடயங்களாக, அதுவும் அகதி முகாம்களைக் கூட பயணக் கைதிகளை சிறை வைக்கும் சிறைக் கூடங்களாக  பயன்படுத்தி வருகின்றனர் என்பதையும் கண்டிக்க படல் வேண்டும்.

போரில் வெல்ல மக்களை மனிதக் கேடயங்களாக எவர் பயன்படுத்தினாலும் அது கண்டிக்கபடல் அவசியம். 

 

  • Like 1
Link to comment
Share on other sites

அமெரிக்கா  இறங்குதுறையை வைத்து  மக்களுக்கு உதவுவது போல் உளவு வேலையை பார்க்க தான் சந்தேகப்பட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பாவி மக்களை கொல்லும் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி மக்கள் பற்றி அகதிகளாக உள்ள எம்மவர் கருத்து தெரிவிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸினால் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்களை மீட்க இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலையும், தமிழர்கள் மீது இலங்கையரசாங்கம் கட்டவிழ்த்த தாக்குதலையும் ஒன்றாகப் பார்ப்பது எப்படிச் சாத்தியம்? தமிழ் மக்கள் யாரால் பணயக் கைதிகளாக பிடித்து அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள்? தமிழ் மக்களைத்தான் மகிந்த மீட்க விரும்பினான் என்றால், அதே தமிழ் மக்களில் ஒன்றரை இலட்சம் பேர் ஏன் கொல்லப்பட்டார்கள்? 

இஸ்ரேல் செய்திருப்பது தனது மக்களை மீட்கிறேன் என்கிற போர்வையில் ஒரு அப்பட்டமான படுகொலை. மகிந்த செய்தது தமிழர்களைப் புலிகளிடமிருந்து  மனிதாபிமான மீட்பு நடவடிக்கை ஒன்றின் மூலம் மீட்கிறேன் எனும் பெயரில் நடத்திய இனக்கொலை. 

பணயக் கைதிகளை அகதி முகாம்களுக்குள் ஒளித்துவைத்திருந்தமையினால்த்தான் இஸ்ரேல் பல நூறு பலஸ்த்தீனர்களைக் கொன்றது என்பது ஏற்புடையதல்ல. ஏனென்றால், பலஸ்த்தீனர்களைக் கொல்வதற்கு இஸ்ரேலியர்களுக்குக் காரணம் எப்போதும் தேவைப்பட்டது கிடையாது. அவ்வாறே, இறுதியுத்தத்தில் புலிகள் தமிழர்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தமையினால்த்தான் ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பாட்டார்கள் என்று கூறுவோர், தமிழர்களைக் கொல்வதற்கு இலங்கை இராணுவத்திற்குக் காரணம் எதுவுமே தேவையில்லை என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர். பணயக் கைதிகள் அகதி முகாம்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டதனால்த்தான் பலநூறு பலஸ்த்தீனியர்களைக் கொன்றோம் என்பதும், புலிகள் தமிழர்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தமையினால்த்தான் இலட்சக் கணக்கில் கொல்லப்பட்டார்கள் என்பதும் இனக்கொலையில் ஈடுபடும் இராணுவங்கள் தமது கொலைகளை நியாயப்படுத்துவதற்காகப் பாவிக்கும் காரணங்களாகும். 

புலிகளை இங்கு இழுத்துவருவது சிலருக்குத் தேவையாக இருக்கிறது. அதனாலேயே எவர் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தாலும் அவர்கள் பயங்கரவாதிகளே என்று அழைக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஹமாஸைக் காரணம் காட்டி பலஸ்த்தீன மக்கள் மீது நடக்கும் இனக்கொலையினை நியாயப்படுத்த, புலிகளைப் பயங்கரவாதிகளாகக் காட்டவேண்டிய நிலைக்கு எம்மில் சிலர் வந்திருப்பது துரதிஷ்ட்டவசமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க 274 அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா?

இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,தனது தந்தையுடன் இணைந்த 27 வயதான நோவா அர்கமனி கட்டுரை தகவல்
  • எழுதியவர், அலெக்ஸ் திரின்
  • பதவி, பிபிசி மத்திய கிழக்கு நிருபர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த சனிக்கிழமை (ஜூன் 8), இஸ்ரேலிய படைகள் நுஸ்ரத் அகதிகள் முகாமுக்கு அருகில் ஹமாஸ் குழுவினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் 274 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழுவால் நடத்தப்படும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகளும் அப்பாவிப் பொதுமக்களும் அடங்குவர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இஸ்ரேல் ராணுவம் இந்த மோதலில் 100-க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டனர் என்று கூறியிருக்கிறது.

இந்த மோதலையடுத்து நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

ஹமாஸின் பிடியில் இருந்த நான்கு பணயக்கைதிகளை இஸ்ரேல் மீட்டிருக்கிறது. பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் ராணுவம் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

அதேசமயம், இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்க மேற்கொண்ட நடவடிக்கையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றொருபுறம் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் சனிக்கிழமையன்று மீட்கப்பட்டதை தொடர்ந்து பின்னர் தங்கள் குடும்பத்தினரை சந்தித்தனர். நோவா அர்கமனி (27), அல்மோக் மிர் (22), ஆண்ட்ரி கோஸ்லோவ் (27), சலோமி ஜீவ் (41) ஆகியோர் சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.

கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று நோவா இசை விழாவில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் இஸ்ரேலிய குடிமக்கள் கடத்தப்பட்டனர். பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட அவர்களை மீட்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருந்தது என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது, நுசெய்ரத் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இஸ்ரேலிய ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவின் அல்-அக்ஸா மற்றும் அல்-அவ்தா ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் 70 சடலங்கள் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மோதலில் அல்-நுஸ்ரத் அகதிகள் முகாமைச் சுற்றி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அரசாங்கத்தால் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 100 பேர் பலியாகியிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இந்தப் பகுதிகளில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் தீவிரமான குண்டுவெடிப்புகள் நடந்ததற்கான தடயங்களைக் காட்டுகின்றன. மருத்துவமனைகள் படுகாயம் அடைந்தவர்களால் நிரம்பியுள்ளன. இறந்த சடலங்களும் காணப்படுகின்றன. இந்தத் தாக்குதலில் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், சிகிச்சை அளிக்கக் கடினமாக இருந்தது. மக்கள் தங்கள் உறவினர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் புகைப்படங்களும் இந்த பகுதிகளில் அதிகம் பகிரப்பட்டது.

இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா?
படக்குறிப்பு,மீட்கப்பட்ட பணயக்கைதிகள் அவர்களது குடும்பத்தினரை சந்தித்தனர்  

'உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் நடவடிக்கை'

இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பல பாலத்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்

உளவுத்துறை துல்லியமாக வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். அதன் கீழ், நஸ்ரத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு கட்டிடங்களில் இருந்து பணயக்கைதிகள் மீட்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மீட்கப்பட்டப் பணயக்கைதிகள் நலமாக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அவர்கள் தங்களின் குடும்பங்களைச் சந்திக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கைக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராணுவத்தினரைப் பாராட்டினார்.

இந்த நடவடிக்கை துணிச்சலுடன் மேற்கொள்ளப்பட்டதாக நெதன்யாகு பாராட்டியுள்ளார். "உயிருடன் இருந்தாலும் சரி, இறந்திருந்தாலும் சரி, கடைசி பணயக்கைதியை மீட்கும் வரைக்கும் நாங்கள் போராடுவோம். அவர்களுக்காக எங்கள் உயிரைத் தியாகம் செய்வோம்,” என்றார்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் படைகள் ஹமாஸின் கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறினார்.

 

மீட்கப்பட்ட பணயக்கைதிகள் யார்?

இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஹமாஸ் சிறையிலிருந்து மீட்கப்பட்ட பிணைக் கைதி

இஸ்ரேல் ராணுவத்தால் மீட்கப்பட்ட பணயக்கைதிகளில், நோவா அர்கமணி (சீன வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேலிய குடிமகன்) அக்டோபர் 7 அன்று நோவா திருவிழாவில் இருந்து கடத்தப்பட்டார். மோட்டார் சைக்கிளில் அவரை ஹைமாஸ் கடத்தி சென்றபோது, 'என்னைக் கொல்லாதீர்கள்!' என்று கூச்சலிட்டார்.

ரஷ்யாவை பூர்விகமாக கொண்ட கோஸ்லோவ் 2022-இல் இஸ்ரேலுக்கு வந்தார்.

ஜீவ் என்பவரும் ஒரு ரஷ்யர். இருவரும் நோவா திருவிழாவில் பாதுகாவலர்களாக வேலை பார்த்து வந்தனர். அந்த நேரத்தில் அவர்கள் கடத்தப்பட்டனர்.

மிர் ஜான் என்பவர் கடத்தப்பட்டதற்கு மறுநாள் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு சேர இருந்தார். ஆனால் அதற்குள் ஹமாஸால் கடத்தப்பட்டார்.

மீட்கப்பட்ட பணயக்கைதிகளின் குடும்பங்கள் இது ஒரு அசாத்திய நடவடிக்கை என்று கூறியுள்ளனர். இஸ்ரேலிய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கைக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், ஹமாஸ் பிடியில் உள்ள 120 பணயக்கைதிகளையும் மீட்க வேண்டும் என்று இந்த குழு இஸ்ரேலிய ராணுவத்திற்கு நினைவூட்டியுள்ளது. மேலும், உயிருடன் இருக்கும் பணயக்கைதிகளுக்கு மறுவாழ்வு அளித்து, இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

ஒருபுறம், பணயக்கைதிகளை விடுவித்ததில் இஸ்ரேலில் கொண்டாட்டச் சூழல் நிலவுகிறது, ஆனால் மறுபுறம், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களின் சடலங்கள்,கோரத் தாக்குதலின் சுவடுகளீன் புகைப்படங்கள் வெளியாகின்றன.

பிபிசி வெரிஃபையின்படி, மத்திய காஸாவில் உள்ள பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் நஸ்ரத் பகுதி மிகவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளும் நஸ்ரத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

அல்-அக்ஸா மருத்துவமனை வெளியிட்டுள்ள காணொளியில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையின் தரையில் படுத்துக் கிடப்பதைக் காண முடிகிறது. மேலும் ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தப் பகுதியில் 400 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹமாஸ் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

சர்வதேசத் தலைவர்கள் சொல்வது என்ன?

இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்யாவை பூர்விகமாக கொண்ட கோஸ்லோவ் 2022 இல் இஸ்ரேலுக்கு வந்தார்.

இஸ்ரேலின் மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பாலத்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அல்-நுஸ்ரத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 'இஸ்ரேலிய ராணுவத்தால் நடத்தப்படும் இனப்படுகொலை' பற்றி ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

"காஸாவில் அரங்கேறி வரும் மற்றொரு படுகொலை சம்பவம் பற்றிய செய்திகள் நெஞ்சை பதற வைக்கின்றன. நாங்கள் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுப் பிரதிநிதி ஜோசப் போரல் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் பணயக் கைதிகளை விடுவிக்கும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை அமல்படுத்த முயற்சிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், பணயக் கைதிகளை விடுவிக்க ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே வழி என்று தீவிர வலதுசாரி கூட்டாளிகள் கூறினர்.

இஸ்ரேலிய ராணுவம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளில் சனிக்கிழமை நடந்த மீட்பு நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் இது அழுத்தத்தில் இருக்கும் நெதன்யாகுவுக்கு அடுத்தக்கட்ட செயல்பாடுகளை எளிதாக்கியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலிய போர் துறை அமைச்சர் பென்னி கான்ஸ் சனிக்கிழமை தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டார்.

கான்ஸ் விரைவில் ராஜினாமா செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக, ஜூன் 8-ஆம் தேதிக்குள் காஸாவில் போருக்குப் பிந்தைய திட்டத்திற்கு நெதன்யாகு ஒப்புதல் அளிக்காவிட்டால், பதவி விலகப்போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

'இஸ்ரேல் சொந்த நிபந்தனைகளை விதிக்க முடியாது'

இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நஸ்ரத் முகாமுக்கு அருகே இஸ்ரேலிய பணயக்கைதிகள் மீட்கப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் சோல்ஸ் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

நஸ்ரத்தில் இஸ்ரேலின் மீட்பு நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹமாஸ் மீது இஸ்ரேல் தனது நிபந்தனைகளை விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். அனைத்து பாலத்தீனியர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதிக்காது என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் பிணைக் கைதிகளாக சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இந்த பணயக்கைதிகளில் 116 பேர் இன்னும் பாலத்தீனத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வார போர் நிறுத்தத்திற்கு ஈடாக 105 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இன்னும் 240 பாலத்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று, ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 36,801-ஐ எட்டியுள்ளது என்று கூறியது.

https://www.bbc.com/tamil/articles/ckrrmxljp57o

Link to comment
Share on other sites

ஹமாஸ் எனும் அதி புனிதர்கள் விடுதலை வேட்கையில் இஸ்ரேல் பெண்கள் மீது நிகழ்த்திய அதி தீவிர கொடூரஙகள் பற்றி கீழே உள்ள திரியில்:

இஸ்ரேல் செய்வது மோசமான இனப்படுகொலை

ஹமாஸ் செய்வது பயங்கரவாதம் (பாலஸ்தீன போராட்டம் அல்ல)

நடுநிலை எனும் பெயரில் இதில் ஒன்றை நியாயப்படுத்தி இன்னொன்றை புனிதர்களாக்குவது அவரவர் அரசியல் நிலைப்பாடு சார்ந்த அறமற்ற செயல்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 hours ago, Kapithan said:

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் விபுகள் மக்களை விடுவித்து  முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம்  என்கிறீர்களா? 

கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டும் இல்லையா ? 

பெயரில் மட்டும் நியாயம் இருந்து ஒரு பலனும் இல்லை. சிந்தனையிலும் சிறிதளவேனும்  வேண்டும். 

😏

 

விடுதலை புலிகள் சிங்கள பிரதேசத்துக்குள் ஊடுறுவல் செய்து சிங்களவர்களை பணயக்கைதிகளாக பிடித்து தமது பகுதிக்குள் கொண்டுவந்து சிறை வைத்தார்கள். எனவே, சிங்கள பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்கத்துடன் சிறீ லங்கா படை தாக்குதல் செய்து அதில் தமிழ்மக்கள் பழியானார்கள்? 

17 hours ago, nunavilan said:

இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட பல பலஸ்தீனியர்களையும் இஸ்ரேல் விடுவித்திருக்கலாம்.

மக்களுக்கு உதவ என சென்ற அமெரிக்க உதவி நிறுவனம் தாங்களாகவே மக்களுக்கு உதவுவதாக கூறி மக்களுக்குள் மக்களாக நின்று காட்டிக்கொடுத்ததாக பலஸ்தீனிய செய்திகள் கூறுகின்றன.

 

ஹமாஸ் இஸ்ரேலினுள் தாக்குதல் செய்ததும், இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக சிறைபிடித்ததும் சரினானது என நீங்கள் எண்ணுகின்றீர்கள் போல?

உங்கள் வாதப்படி இப்படித்தான் பேரம் பேசலாம் என பார்த்தால் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்குள் புகுந்து செய்த அட்டூழியமும் ஹமாஸ் தாக்குதலும் சமன் ஆகின்றது போல?

Edited by நியாயம்
Link to comment
Share on other sites

1 hour ago, நியாயம் said:

 

விடுதலை புலிகள் சிங்கள பிரதேசத்துக்குள் ஊடுறுவல் செய்து சிங்களவர்களை பணயக்கைதிகளாக பிடித்து தமது பகுதிக்குள் கொண்டுவந்து சிறை வைத்தார்கள். எனவே, சிங்கள பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்கத்துடன் சிறீ லங்கா படை தாக்குதல் செய்து அதில் தமிழ்மக்கள் பழியானார்கள்? 

 

ஹமாஸ் இஸ்ரேலினுள் தாக்குதல் செய்ததும், இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக சிறைபிடித்ததும் சரினானது என நீங்கள் எண்ணுகின்றீர்கள் போல?

உங்கள் வாதப்படி இப்படித்தான் பேரம் பேசலாம் என பார்த்தால் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்குள் புகுந்து செய்த அட்டூழியமும் ஹமாஸ் தாக்குதலும் சமன் ஆகின்றது போல?

கடந்த 9 மாதங்களில் 40 ஆயிரம் அப்பாவி பலஸ்தீனிய குழந்தைகள், தாய்மார் (பெரும்பாலும்) கொல்லப்பட்டதற்கு ஒரு வரி கூட எழுதாமல் 4 பணய கைதிகளுக்கு வக்காலத்து வாங்குவதன் நோக்கம் என்ன?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நியாயம் said:

பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். 

இன்றைய கலவரங்களுக்கு முதல் இஸ்ரேல் பலஸ்தீன மண்ணில் செய்த அஜாரகங்களை பேச எவருக்கும் தைரியம் வரவில்லை போல......
 இஸ்ரேலியர்கள்  பலஸ்தீனியர்களின் வீடுகளை அழித்ததும்,வீதிகளை மூடியதும் பொருளாதார தடைகளை செய்ததும்  தமது உரிமைக்காக போராடியவர்களை கண்மூடித்தனமாக கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதையும் ஏன் விவாதிக்கவில்லை?

பலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் அரசு தினசரி செய்த அட்டூளியங்களை யாருமே கணக்கெடுக்காமல் இருந்ததின் விளைவே கமாஸ் இயக்கத்தின் வளர்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இன்றைய கலவரங்களுக்கு முதல் இஸ்ரேல் பலஸ்தீன மண்ணில் செய்த அஜாரகங்களை பேச எவருக்கும் தைரியம் வரவில்லை போல......
 இஸ்ரேலியர்கள்  பலஸ்தீனியர்களின் வீடுகளை அழித்ததும்,வீதிகளை மூடியதும் பொருளாதார தடைகளை செய்ததும்  தமது உரிமைக்காக போராடியவர்களை கண்மூடித்தனமாக கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதையும் ஏன் விவாதிக்கவில்லை?

பலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் அரசு தினசரி செய்த அட்டூளியங்களை யாருமே கணக்கெடுக்காமல் இருந்ததின் விளைவே கமாஸ் இயக்கத்தின் வளர்ச்சி.

இது உண்மை 

அதை கமாஸ் உண்மையில் உணர்ந்திருந்தால் இஸ்ரேலை விட அல்லது இஸ்ரேலே செய்யாத கொடுமைகளை இஸ்ரேலிய மக்கள் மீது முக்கியமாக இஸ்ரேலிய அப்பாவி பெண்கள் மீது செய்திருக்காது அல்லவா?

Link to comment
Share on other sites

 

ஊடக தர்மம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். tw_angry:இப்பணய கைதி விடுவிக்கப்பட்டவுடன்  சொன்னவைக்கும்  மேற்படி காணொளியில் சொல்வதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இது உண்மை 

அதை கமாஸ் உண்மையில் உணர்ந்திருந்தால் இஸ்ரேலை விட அல்லது இஸ்ரேலே செய்யாத கொடுமைகளை இஸ்ரேலிய மக்கள் மீது முக்கியமாக இஸ்ரேலிய அப்பாவி பெண்கள் மீது செய்திருக்காது அல்லவா?

பலஸ்தீன பிரச்சனை நீண்ட கால பிரச்சனை. இதனால் தான் உலகளாவிய ரீதியிலும் பிரச்சனை உள்ளன.

இதனை தீர்க்க வேண்டியவர்கள் தீர்க்காமல் இழுத்தடித்ததின் விளைவே இன்றைய நிகழ்வுகள்.

யசீர் அரபாத்துடன் செய்த ஒப்பந்த நிகழ்வுகளிலேயே பல குளறுபடிகளை செய்தவர்கள் இஸ்ரேலியர்கள்.
இந்த நீண்ட கால ஏமாற்றங்களுக்கு பின்னரே எடுத்தால் மொட்டை வைத்தால் குடுமி எனும் கமாஸ் உதயம்.

இஸ்ரேலில்  கமாஸ் இயக்கத்தின் பெயரால் நடந்த அழிவுகளின் படங்களை இங்கே இணைத்து விடுங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

பலஸ்தீன பிரச்சனை நீண்ட கால பிரச்சனை. இதனால் தான் உலகளாவிய ரீதியிலும் பிரச்சனை உள்ளன.

இதனை தீர்க்க வேண்டியவர்கள் தீர்க்காமல் இழுத்தடித்ததின் விளைவே இன்றைய நிகழ்வுகள்.

யசீர் அரபாத்துடன் செய்த ஒப்பந்த நிகழ்வுகளிலேயே பல குளறுபடிகளை செய்தவர்கள் இஸ்ரேலியர்கள்.
இந்த நீண்ட கால ஏமாற்றங்களுக்கு பின்னரே எடுத்தால் மொட்டை வைத்தால் குடுமி எனும் கமாஸ் உதயம்.

இஸ்ரேலில்  கமாஸ் இயக்கத்தின் பெயரால் நடந்த அழிவுகளின் படங்களை இங்கே இணைத்து விடுங்கள்.
 

கமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  மக்களை விரும்பும் அல்லது மக்கள் விடுதலைக்காக போராடும் எவரும் இவ்வாறு செய்யார். இதற்கு எதற்கு படம் அல்லது ஆதாரம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

கமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  மக்களை விரும்பும் அல்லது மக்கள் விடுதலைக்காக போராடும் எவரும் இவ்வாறு செய்யார். இதற்கு எதற்கு படம் அல்லது ஆதாரம்???

விசுகர்! பலஸ்தீன விடுதலை போராட்டம் ஆரம்பித்து எவ்வளவு காலத்தின் பின் கமாஸ் இந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்?
கமாஸ் இயக்கம் தொடங்கி கன காலமும் இல்லை. இஸ்ரேலியர்கள் அரசியலுக்கு மாறிய யசீர் அரபாத்தையே அழித்தவர்கள். இவர்களுடன் எப்படி நியாயமாக நடக்க முடியும்?

 

May 28 - On This Day - CJPME - English

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகம் பூராவும் இஸ்லாம் பரவ வேணும் என்ற அவர்களின் இன்னொரு நோக்கமும் அடங்கும்.   இதில் ஒர் வித்தியாசம் உண்டு பலஸ்தீனருக்காக ஏனைய முஸ்லீம்கள் போராடினார்கள் ஆனால் எமது மண்ணில் எமது போராளிகள் மட்டுமே போராடினார்கள்....நாம் இனத்திற்காக போராடியவ்ர்கள் அவர்கள் மதத்திற்காக போராடுகிறார்கள் 
    • பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்கிற எனது விருப்பு (எனக்கு வாக்களிப்பில் பங்கில்லை என்கிற போதும்) அவர்களது நிலைப்பாட்டில் இருந்தே உருவானது. இதுவரையில் தமிழர் சார்பாக இருந்த தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகத்தன்மையும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான விடுதலையினை முன்னெடுக்காமையும், சிங்கள் ஆட்சியாளர்கள் தொடர்பான அவர்களின் சிநேகமான பார்வையும்தான். அதனாலேயே தமிழரின் அரசியல் அபிலாஷைகளை மீண்டும் பேசுகின்ற, அவலங்களைப் பேசுகின்ற, உரிமைகளை நினைவுபடுத்துகின்ற ஒருவர் வருகின்றபோது அவரை ஆதரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.மேலும் இதுவரை காலமும் சிங்களத் தலைவர் ஒருவருக்கு தமிழர்கள் கொடுத்துவந்த ஆதரவினால் இதுவரையில் நாம் அடைந்தது எதுவும் இல்லையென்பதும் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உங்களை அண்டி வாழ்வதல்ல என்பதைக் காட்டுவதற்கும் பொதுவேட்பாளர் தேவை என்று எண்ணினேன். அதனாலேயே பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டின் பின்னால் நின்ற அரசியல்வாதிகள் குறித்து நான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் கடந்தகால அரசியலும், பின்னணியும் எப்படியிருப்பினும் நோக்கம் சரியானதாக எனக்குப் பட்டது. அதனாலேயே அக்கோட்பாட்டை ஆதரித்தேன். இப்போதும் அக்கோட்பாட்டினை ஆதரிக்கிறேன், அதில் எனக்கு எந்த ஐய்யமும் இல்லை. ஆனால் இவ்வுன்னத கோட்பாட்டின் பின்னால் ஒளிந்துநின்று தமது சொந்த நலன்களைப் பெற்றுக்கொள்ள முயன்ற அதே அரசியல்வாதிகளின் முகங்களை இப்போது பார்க்கும்போது வருத்தமடைகிறேன். சுரேஷ், விக்கி, சிறீதரன் என்று அதே பழைய முகங்கள். பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு இவர்களின் சுய ரூபங்களைப் புதுப்பிக்கவில்லை, இவர்களை மாற்றவில்லை. பொதுவேட்பாளரின் பின்னால் நின்ற அதே அரசியல்வாதிகளின்  இன்றைய செயற்பாடுகளும், பேரம்பேசல்களும் இவர்களின் இணைப்பினாலேயே பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கருவிற்கான தமிழ் மக்களின் ஆதரவு குறைவடைவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் எண்ணத் தோன்றுகிறது.  இவர்களிடையே உண்மையான இனம் சார்ந்து செயற்பட்டு, பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டிற்கு உயிர் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள், நிலாந்தன் ஆகியோரின் முயற்சிகளை நாம் மறக்கவில்லை. அவர்களின் நோக்கம் உண்மையானது, சமூக நலன் சார்ந்தது. அவர்கள் எடுக்கும் தமிழர் நலன்சார்ந்த எந்த முயற்சிக்கும் எப்போதும் எனது ஆதரவு இருக்கும்.   
    • அங்கேயும் சிவப்பு ஆட்சி  எங்கன்ட காலகஸ்டத்திற்😅கு அமெரிக்காரனை தேடி சீனா வந்திட்டால்
    • ஒருவர் புதிதாக ஆட்சியேற்று மூன்று மாதங்கள் பின்னரே ...... அந்த ஆட்சி பற்றி கருத்து கூறமுடியும். ஒருவர் புதிதாக ஆட்சியேற்று மூன்று மாதங்கள் பின்னரே ...... அந்த ஆட்சி பற்றி கருத்து கூறமுடியும். ஆளும் புதிசு கட்சியும் புதிது ஆட்சியும் புதிசு
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.