Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

அப்போதைய புலிகளின் முடிவில் எதை செய்து இருந்தால் சரியாகி இருக்கும் என்று சொல்ல வருகிறீர்கள் ?

ஊகிக்க இயலவியல்லையா? மஹிந்த (சந்திரிக்காவின் பின்னால் மறைந்து வந்தவர் என்ற வகையில்) போரை ஆரம்பிப்பார் என்பது தெரிந்திருக்க வேண்டும். எனவே, ரணிலைத் தோற்கடிக்கும் வகையிலான தேர்தல் புறக்கணிப்பை தமிழ் மக்களிடம் திணித்திருக்கக் கூடாது.

  • Replies 86
  • Views 6.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொ

  • மிகச் சரியான பேச்சுத்தான் அது! சரணடைந்த புலிப்போராளிகளுக்கு, பொது மக்களுக்கு என்ன நடந்ததென தெரியாத, தெரிய மறுக்கும் மக்களின் பேச்சது. பல லட்ஷம் மக்கள் வன்னியில் சிக்குண்டிருந்த போது, வெறும் எழுபத்தையா

  • Kandiah57
    Kandiah57

    தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு”   அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே  என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை   இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம்   பெயர் தான் என்னவோ    த

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அப்போதைய புலிகளின் முடிவில் எதை செய்து இருந்தால் சரியாகி இருக்கும் என்று சொல்ல வருகிறீர்கள் ?

இந்த கேள்வியை நீங்கள் கேட்டதால் கூறுகிறேன். 

 மிக பிந்திய முடிவு என்றாலும் கிளிநொச்சி விழுந்த உடனையாவது   இனி ஆயுத போராட்டம் சரி வாராது தாம் பலவீனமாகி விட்டோம் என்ற  உண்மையைப்  புரிந்து கொண்டு அன்றே  மக்களை  செஞ்சிலுவை  சங்கத்தின் மேற்பார்வையில் விடுவித்து ஆயுத போராட்டத்தை முடித்து  அரசியல் போராட்டத்தை அன்றே ஆரம்பித்திருந்தால் பெருமளவு மக்களையும் அரசியல் போராளிகளையும் காப்பாற்றியிருந்திருக்கலாம். அதுவும் லேட்டான முடிவு தான். என்றாலும் ஏராளமான  பொதுமக்களும் போராளிகளும் உயிரோடு தப்பியிருப்பர்.  இன்று அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டிக் தேவையில்லை.  அரசியல் போராளிகளே போராட்டத்தை தொடர்ந்திருக்கலாம். 

பெருமளவான பொது மக்கள் கிளிநொச்சிக்கு பிறகு அந்த பிரதேசத்தில் இருந்து வெளியேறவே விரும்பினர். அவர்கள் வெளியேற விடாமல் தடுத்து ஒரு சிறிய பிரதேசத்துக்குள் கொண்டு சென்றது மாபெரும் தவறு தான். எவரலும் மறுக்க முடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஊகிக்க இயலவியல்லையா? மஹிந்த (சந்திரிக்காவின் பின்னால் மறைந்து வந்தவர் என்ற வகையில்) போரை ஆரம்பிப்பார் என்பது தெரிந்திருக்க வேண்டும். எனவே, ரணிலைத் தோற்கடிக்கும் வகையிலான தேர்தல் புறக்கணிப்பை தமிழ் மக்களிடம் திணித்திருக்கக் கூடாது.

அப்படியா ரணில் வந்து இருந்தால் தமிழர்களுக்கு நல்லது அப்ப புலி இல்லாத இந்த கால கட்டத்தில் ரணில் தமிழருக்கு செய்த ஒரு நல்ல வேலை ஒன்றை சொல்லுங்கள் ?

1 hour ago, island said:

இந்த கேள்வியை நீங்கள் கேட்டதால் கூறுகிறேன். 

கேள்வி உங்களுக்கானது அல்ல உங்களுக்கானது ..........வேறு இடத்தில் 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

அப்படியா ரணில் வந்து இருந்தால் தமிழர்களுக்கு நல்லது அப்ப புலி இல்லாத இந்த கால கட்டத்தில் ரணில் தமிழருக்கு செய்த ஒரு நல்ல வேலை ஒன்றை சொல்லுங்கள் ?

தமிழருக்கு நல்லது செய்ய வேண்டுமென என்ன தேவை அல்லது அழுத்தம் ரணிலுக்கு இப்போது இருக்கிறது? இல்லையல்லவா? எனவே, ரணில் எதுவும் தரப் போவதில்லை.

ஆனால், கெடுபிடிகளில் ரணில் ஆட்சி இருக்கிற காலங்களில் சில தளர்வுகள் இருக்கும். இது மக்களை நோக்கிய ரணிலின் "இதயம் வெல்லும்" முயற்சி, இது தாயக மக்களிடம் வேலை செய்கிறது.

அது சரி,  "இராசதந்திர ரீதியாக யோசித்து" புலிகள் ஆட்சிக்குக் கொண்டு வந்த பக்ச குழு என்ன நன்மை தமிழருக்குச் செய்திருக்கிறதென்று நீங்கள் சொல்லுங்கள்😎

  • கருத்துக்கள உறவுகள்

8 minutes ago, Justin said:

அந்த தளர்வுகள் சமஸ்ட்டியை விட கூடவாக இருக்குமா ?

அதனால் 3௦ வருட போராட்டத்துக்கு தீர்வு வரும் என்று நினைகிறீர் களா ?

5 minutes ago, பெருமாள் said:

அதனால் 3௦ வருட போராட்டத்துக்கு தீர்வு வரும் என்று நினைகிறீர் களா ?

அதனால் என்பது ரணிலால் என்று புரிந்து கொள்ளனும் .

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

அது சரி,  "இராசதந்திர ரீதியாக யோசித்து" புலிகள் ஆட்சிக்குக் கொண்டு வந்த பக்ச குழு என்ன நன்மை தமிழருக்குச் செய்திருக்கிறதென்று நீங்கள் சொல்லுங்கள்😎

அந்த விபரம் யாழில் பலமுறை பதில் அளிக்கபட்டு விட்டது தேடி படித்து கொள்ளுங்க  மீண்டும் மீண்டும் எழுத லண்டன் யுனிவேர்சளில் இருக்கும் ஆள் நான் அல்ல கொஞ்சம் பிழை விட்டாலும் லண்டன் hmrc காரன்கள்  கண்ணுக்குள் ரில்லர் விடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

தமிழருக்கு நல்லது செய்ய வேண்டுமென என்ன தேவை அல்லது அழுத்தம் ரணிலுக்கு இப்போது இருக்கிறது? இல்லையல்லவா?

அப்படியென்றால்  இங்கே நின்று சுமந்திரனுக்கு காவடி தூக்குவது எதற்காக ?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

தமிழருக்கு நல்லது செய்ய வேண்டுமென என்ன தேவை அல்லது அழுத்தம் ரணிலுக்கு இப்போது இருக்கிறது? இல்லையல்லவா? எனவே, ரணில் எதுவும் தரப் போவதில்லை.

நன்றி நீங்கள் மிகத் தெளிவாக பதில் தந்துள்ளீர்கள்,.....ஆனால் அழுத்தம் இருந்தாலும் ரணில் எதுவும் தர போவதில்லை  என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள் ஏனெனில் அவர்,.ரணில் அழுத்தத்தை   அரவணைத்தால்  அது ஆதரவு ஆக மாறி விடும்   

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Justin said:

அது சரி,  "இராசதந்திர ரீதியாக யோசித்து" புலிகள் ஆட்சிக்குக் கொண்டு வந்த பக்ச குழு என்ன நன்மை தமிழருக்குச் செய்திருக்கிறதென்று நீங்கள் சொல்லுங்கள்😎

செய்ய முடியாது  எப்படி செய்வது??  சந்தர்ப்பங்களில்லை   தமிழ் தலைவர்கள் எவருமே தீர்வு வேண்டாம் என்று சொன்னது இல்லை  எவ்வளவு சிறிய தீர்வையும்  கூடாது  தமிழர்களின் தேவைகளை  விரும்பங்கள பூர்த்தி செய்யவில்லை  என்று சொன்ன போதும்  எற்றுக்கொண்டு உள்ளார்கள் ஆனால்  அரசு  நடைமுறையில் அமுல் படுத்தவில்லை  அரசு மனப்பூர்வமாய் செயலபடும்போது   தமிழ் தலைவர்கள்  எந்தவொரு சிறிய தீர்வையும் எற்ப்பார்கள் இந்த போர் நடப்பதற்கான சந்தர்ப்பங்களை  ஏற்படுத்தியது அரசாங்கம் மட்டுமே    மாறாக தமிழ் தலைவர்கள் தீர்வை பெற்று கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பங்களையும் அரசாங்கம் எற்படுத்தி கொடுக்கவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

அப்படியென்றால்  இங்கே நின்று சுமந்திரனுக்கு காவடி தூக்குவது எதற்காக ?

இன்னொருவரோடு ஒத்த கருத்து ஒரு விடயத்தில் இருப்பது காவடி அல்ல! உங்களுக்கு நடக்கும் உரையாடலில் ஆக்கபூர்வமாக எதுவும் பங்களிக்க இல்லையென்றால் மௌனம் நல்ல தெரிவென நினைக்கிறேன். உங்கள் வெறுமை, வறுமை 😎 என்பனவாவது வெளித்தெரியாமல் இருக்குமல்லவா?

1 hour ago, பெருமாள் said:

அந்த விபரம் யாழில் பலமுறை பதில் அளிக்கபட்டு விட்டது தேடி படித்து கொள்ளுங்க  மீண்டும் மீண்டும் எழுத லண்டன் யுனிவேர்சளில் இருக்கும் ஆள் நான் அல்ல கொஞ்சம் பிழை விட்டாலும் லண்டன் hmrc காரன்கள்  கண்ணுக்குள் ரில்லர் விடுவார்கள். 

அதானே, எங்க உங்களுக்கு ஒரு விடயமாவது தெரிந்திருக்கப் போகுதென்று ஒரு கணம் நானும் நினைத்து ஏமாந்து விட்டேன், Sorry Sir😎!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

செய்ய முடியாது  எப்படி செய்வது??  சந்தர்ப்பங்களில்லை   தமிழ் தலைவர்கள் எவருமே தீர்வு வேண்டாம் என்று சொன்னது இல்லை  எவ்வளவு சிறிய தீர்வையும்  கூடாது  தமிழர்களின் தேவைகளை  விரும்பங்கள பூர்த்தி செய்யவில்லை  என்று சொன்ன போதும்  எற்றுக்கொண்டு உள்ளார்கள் ஆனால்  அரசு  நடைமுறையில் அமுல் படுத்தவில்லை  அரசு மனப்பூர்வமாய் செயலபடும்போது   தமிழ் தலைவர்கள்  எந்தவொரு சிறிய தீர்வையும் எற்ப்பார்கள் இந்த போர் நடப்பதற்கான சந்தர்ப்பங்களை  ஏற்படுத்தியது அரசாங்கம் மட்டுமே    மாறாக தமிழ் தலைவர்கள் தீர்வை பெற்று கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பங்களையும் அரசாங்கம் எற்படுத்தி கொடுக்கவில்லை  

இந்த தமிழ் தலைவர்களுள் புலிகளும் அடக்கமா? அப்படியானால், "சமஷ்டியைப் பிரிசீலிக்கிறோம்" என்று சொன்ன பாலசிங்கத்தாரை ஏன் ஓரங்கட்டினார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா கந்தையர்😂?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

இல்லை தான்  ஆனால் அவர் அதை எடுக்க முடியும் .....முதல் காரணமும்,.முக்கிய காரணமும்.  அந்த திறவுகோலை  அவர் எடுக்க விரும்பவில்லை  ...எப்படி என்றால்,..உதாரணமாக  1983 ஆண்டில்  தமிழ் மக்களை தாக்கிய,வெட்டிய.  ...கொன்ற,.எரித்த     அனைத்து குற்றவாளிகளையும். தேடி கண்டு பிடித்து   நண்பர்கள் உறவினர்கள்  பணக்காரர் என்று பாராது சட்டம் தன் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும்  ...அதாவது ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டும்  ...இதன் மூலம் குற்றவாளிகள் குறைவு அடைவார்கள்.  குற்றவாளிகளின். சொத்துக்கள் பறிமுதல் செய்து  பதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்   இதனால் சிங்களவர் தமிழரை தாக்குதல் வெட்டுதல். கொல்லுதல்   எரித்தால்     என்பன. குறையும்  அல்லது நடைபெறாது     இன்று ஒரு நெருகடியான. நிலை இலங்கையில் தோன்றும் போது  சிங்களவன். தமிழர்களை என்னவும் செய்யலாம்  என்ற எழுதாப்படாத. சட்டம் உண்டு”  இந்த நிலைமையை மாற்றி அமைத்தால். திறவுகோல். இவரிடம் வந்து விடும்   🙏

உங்கள் கருத்திற்கு நன்றி, பொதுவாக ஒரு பிரச்சினையினை அணுகும் போது அதனை தரவுகளினடிப்படையில் அணுகாமல் ஒரு தரப்பிற்கு எதிராக இன்ன்னொரு தரப்பு என இரு அணியாக பிரிந்து (தமிழ் தேசியவாதம் மற்று இலங்கை தீவிரவாதம் எனும் இரு பிரிவாக) தமது தரப்பினை நியாயப்படுத்த கருத்துக்களை உருவாக்கும் போது அது கடைசியில் கிளி யோசிய மட்டத்தில் கருத்துக்கள் வரத்தொடங்குகின்றன.

பிரச்சினைக்கான தீர்வுக்காண அடிப்படைகளை ஆராய்வதற்காக (root cause analysis) முதலில் பிரச்சினை என்ன என்பதனை முதலில் புரிந்து கொள்ளவேண்டும், அதனை கண்டறிய 5 ஏன் என்பதனை வினவவேண்டும் என கூறுகிறார்கள்.

உதாரணமாக புலிகள் தேர்தலை புறக்கணிக்க கூறியமையால்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

1. ஏன் புலிகள் தேர்தலை புறக்கணிக்க கூறினார்கள்?
தேர்தலை புறக்கணிக்காவிட்டால் ரணில் ஆட்சிக்கு வந்து விடுவார் என்பதால்.

2. ஏன் புலிகளுக்கு ரணிலின் மேல் கோபம்?
அவர் புலிகளை பலவீனப்படுத்த முயன்றார்.

3. ஏன் ரணில் புலிகளை பலவீனப்படுத்த முயன்றார்?
புலிகளினை பலவீனப்படுத்தினால் தீர்வுத்திட்டம் எனும் அழுத்தம் இருக்காது தற்போது உள்ளது போல.

4. ஏன் ரணிலிற்கு தமிழர்களுக்கு தீர்வு வழங்குவது விருப்பம் இல்லையா? இப்படியாக நீண்டு செல்லும் ஆனால் பிரச்சினையினை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

5.****************?

இது யாரையும் குறிப்பிடுவதற்காக எழுதவில்லை, ஆனால் உண்மையான சிங்களத்தின் முகத்தினை தெரியாமல் ஒரே வட்ட பாதையில் பயணிப்பதாலேயே 76 வருடங்களாக இலங்கையிலுள்ள சிறுபான்மையின மக்கள் அல்லறுகிறார்கள்.

15 hours ago, Paanch said:

குரங்கு அப்பம் பிரிக்க வந்து தன்வயிற்றை மட்டும் நிரப்பிக் கொள்வதுதான் கதை. இலங்கையில் 76 வருடங்களாக அப்பம் பிரிக்க வருவது குரங்கல்ல நாய்கள். வைக்கல் பட்டடை நாய்கள்.😳

பல நாடுகள் இருந்தாலும் இந்தியாதான் அந்த அப்பம் பிரிக்கும் குரங்காக இருக்கும் எனகருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

மிக பிந்திய முடிவு என்றாலும் கிளிநொச்சி விழுந்த உடனையாவது   இனி ஆயுத போராட்டம் சரி வாராது தாம் பலவீனமாகி விட்டோம் என்ற  உண்மையைப்  புரிந்து கொண்டு அன்றே  மக்களை  செஞ்சிலுவை  சங்கத்தின் மேற்பார்வையில் விடுவித்து ஆயுத போராட்டத்தை முடித்து  அரசியல் போராட்டத்தை அன்றே ஆரம்பித்திருந்தால் பெருமளவு மக்களையும் அரசியல் போராளிகளையும் காப்பாற்றியிருந்திருக்கலாம்

சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொன்னது, "நாம் செய்தது  நமது போரல்ல, அது இந்தியாவின் போர். நாம் கேட்காமலேயே போருக்கான சகல உதவிகளையும் வழங்கியது இந்தியா." என பகிரங்கமாக சொன்னார். இந்தியா  மௌனம்  காத்து அதை ஏற்றுக்கொண்டது. போர் முடிவு பெற்று வெற்றி களிப்போடு மஹிந்தா பாராளுமன்றம் வந்தபோது தங்களையும் அவர்களோடு சேர்த்துக்கொள்ளுமாறு ரணில் கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால் ரணிலே நாட்டைகாட்டிக்கொடுத்து   புலிகளுடன் பேசினார் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம், அந்த வெற்றி தமக்கு மட்டும் உரியது என நிராகரித்து விட்டார். எழுபத்தாறு ஆண்டுகளாக சிங்கள ஜனாதிபதிகளை மாறி மாறி தெரிவு செய்து எதை சாதித்தோம் என்றும் விளக்கி முழங்கினால் கேட்கிறவர்கள் விளங்கிக்கொள்ள வசதியாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இந்த தமிழ் தலைவர்களுள் புலிகளும் அடக்கமா? அப்படியானால், "சமஷ்டியைப் பிரிசீலிக்கிறோம்" என்று சொன்ன பாலசிங்கத்தாரை ஏன் ஓரங்கட்டினார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா கந்தையர்😂?

புலிகள் தமிழர்கள் தான்  கோத்தா சொல்லி இருக்கிறார். உங்களுக்கு தெரியாத?? அவர்களும் தமிழ் தலைவர்கள் தான்   அவர்கள் விட்ட மிகப்பெரிய பிழை  பேச்சுவார்த்தையில் இலங்கை அரசுடன். ஈடுபட்டது   தொடர்ந்து போராடி கொண்டு இருந்து இருக்கலாம்  இலங்கை ஒரு தீர்வு வைக்கும் வரை  முள்ளிவாய்க்காலுக்கு காரணம் பேச்சுவார்த்தை தான்    ஒரு நிலப்பகுதியை அல்லது பிரசேதத்தை ஆள்வாதற்க்கு  என்னன்னா அதிகாரங்கள் வேண்டும் என்று இலங்கைக்கு தெரியும்,...இதில் என்ன பேச இருக்கிறது??  இலங்கையிடம் இலங்கை தமிழருக்கு தீர்வு இருக்கின்றதா??  இல்லையே !! இருந்தால் என்ன மாதிரியான தீர்வு வைத்திருக்கிறார்கள்?? என்பதை நீங்களே சொல்லுங்கள்   இல்லாத ஒன்றை பெற முடியாது மற்றும் பாலசிங்கத்துடன்  முரண்பாடுகள்  இல்லாது விடுன்  தீர்வு கிடைத்து இருக்குமா?? இல்லையே !! இது ஒரு நொண்டி சாட்டு.  தமிழ் தலைவர்களையும்  புலிகளையும். குற்றம் சாட்டுவது அறிவு அற்ற செயல்கள்  இலங்கை இடம் எந்தவொரு தீர்வும் இல்லை ஆகையால் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பது தான் சரியாகும்  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, island said:

இந்த கேள்வியை நீங்கள் கேட்டதால் கூறுகிறேன். 

 மிக பிந்திய முடிவு என்றாலும் கிளிநொச்சி விழுந்த உடனையாவது   இனி ஆயுத போராட்டம் சரி வாராது தாம் பலவீனமாகி விட்டோம் என்ற  உண்மையைப்  புரிந்து கொண்டு அன்றே  மக்களை  செஞ்சிலுவை  சங்கத்தின் மேற்பார்வையில் விடுவித்து ஆயுத போராட்டத்தை முடித்து  அரசியல் போராட்டத்தை அன்றே ஆரம்பித்திருந்தால் பெருமளவு மக்களையும் அரசியல் போராளிகளையும் காப்பாற்றியிருந்திருக்கலாம். அதுவும் லேட்டான முடிவு தான். என்றாலும் ஏராளமான  பொதுமக்களும் போராளிகளும் உயிரோடு தப்பியிருப்பர்.  இன்று அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டிக் தேவையில்லை.  அரசியல் போராளிகளே போராட்டத்தை தொடர்ந்திருக்கலாம். 

பெருமளவான பொது மக்கள் கிளிநொச்சிக்கு பிறகு அந்த பிரதேசத்தில் இருந்து வெளியேறவே விரும்பினர். அவர்கள் வெளியேற விடாமல் தடுத்து ஒரு சிறிய பிரதேசத்துக்குள் கொண்டு சென்றது மாபெரும் தவறு தான். எவரலும் மறுக்க முடியாது.  

கிளிநொச்சியுடன் போரை நிறுத்த யார் மறுத்தார்கள்??

10க்கு மேற்பட்ட நாடுகளின் இராணுவ தளபதிகள் அங்கே நின்று ரீ குடித்தார்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

1. ஏன் புலிகள் தேர்தலை புறக்கணிக்க கூறினார்கள்?
தேர்தலை புறக்கணிக்காவிட்டால் ரணில் ஆட்சிக்கு வந்து விடுவார் என்பதால்.

இதில் என்ன பிழையுண்டு??  ரணில் ஒரு நேர்மை அற்றவர்  சொன்னதை செய்வது இல்லை  ஒப்பந்தங்களை மதிப்பது இல்லை,நடைமுறை படுத்துவதில்லை  அன்று புலிகள் செய்தது சரியென்று இன்று ரணில் தான் ஆட்சி மூலம் நிருபித்துள்ளார்

7 hours ago, vasee said:

2. ஏன் புலிகளுக்கு ரணிலின் மேல் கோபம்?
அவர் புலிகளை பலவீனப்படுத்த முயன்றார்.

நேர்மையற்றவர்  ஏமாற்றிக்காரன்.   தமிழருக்கு தீர்வு வழங்க விரும்பவில்லை 

7 hours ago, vasee said:

3. ஏன் ரணில் புலிகளை பலவீனப்படுத்த முயன்றார்?
புலிகளினை பலவீனப்படுத்தினால் தீர்வுத்திட்டம் எனும் அழுத்தம் இருக்காது தற்போது உள்ளது போல.

ஆமாம் நிச்சயமாக  உண்மை இப்படிப்பட்டவர் எப்படி தீர்வு வழங்குவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

அப்போதைய புலிகளின் முடிவில் எதை செய்து இருந்தால் சரியாகி இருக்கும் என்று சொல்ல வருகிறீர்கள் ?

எதை செய்தாலும் ஒன்று தான்  வாக்கு போட்டாலும் சரி   போடமால் விட்டாலும் சரி  மறுவழமாக சொன்னால்  ரணில் ஐனதிபதி  ஆனாலும் சரி  ஆக விட்டாலும் சரி தான்  தமிழ் மக்களுக்கு  இந்த மனிதனால். எந்தவொரு பயனுமில்லை   எனவே… புலிகள் அன்று செய்ததில் எந்தவொரு பிழையுமில்லை   சரியாது தான்   எந்த தீர்வும்  இல்லாத  ....வைத்திருக்காத,.....இலங்கையுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றியது மிகத் தவறு

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கிளிநொச்சியுடன் போரை நிறுத்த யார் மறுத்தார்கள்??

10க்கு மேற்பட்ட நாடுகளின் இராணுவ தளபதிகள் அங்கே நின்று ரீ குடித்தார்கள்???

இல்லை. கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை வெளியேற அனுமதிக்குமாறும் ஆயுதங்களை கைவிட்டு உடனடியாக பேச்சுவார்ததைக்கு செல்லுமாறு உலக நாடுகள் ஒன றிற்கு பலமுறை  வற்புறுத்தின.  ஒரு கட்டத்தில் ஒபாமா நேரடியாக காணொளி மூலம் இந்த வேண்டுகோளை வைத்தார்இயக்கம் அதற்கு இசையவில்லை.  

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் குறுக குறுக மக்களும. போராளிகளும்  ஒரே இடத்தில் நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது மக்களின் இழப்புகள் அதிகமாகும் என்பதை சாதாரணமாகவே எவராலும் புரிந்து கொள்ள முடியும். அதை புறக்கணித்தது மாபெரும் தவறு அல்லது பொறுப்பற்ற செயல். 

நிலமை கட்டு மீறிய பின்னர் மக்கள் புலிகளை மீறியே இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் சென்றனர். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல  எல்லாம் முடிந்த இறுதி தருணத்தில் சூனிய பொழுதில் அரசியல் போராளிகளை சரணடைய   சொன்னது கோட்டபாயவுக்கு அவர்களை கொல்ல சிறந்த வாய்ப்பை வழங்கியது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

கதை தானே அவிழ்த்து விடுங்க

ஆனால் யாழ் களத்தில் அது சரிவராது..

1 hour ago, விசுகு said:

கதை தானே அவிழ்த்து விடுங்க

ஆனால் யாழ் களத்தில் அது சரிவராது..

போரின் இறுதிக் காலத்தில், இனப்படுகொலை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வர முன்னர் ஒபாமா இவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தார். 

ஆனால் காலம் தாழ்த்திய கோரிக்கை. 

Obama: Sri Lanka must end warfare

President Barack Obama scolded both sides of Sri Lanka's quarter-century-old civil war on Wednesday, demanding that the government stop shelling hospitals and that Tamil Tigers lay down their arms.
 
Sri Lanka Civil War A Tamil man carries an elderly woman as he runs for safety following a shell attack at a makeshift hospital in Mullivaaykaal, Sri Lanka, on Tuesday.AP

  •  
  •  
  •  
  •  
 / Source: The Associated Press

President Barack Obama scolded both sides of Sri Lanka's quarter-century-old civil war on Wednesday, demanding that the government stop shelling hospitals and that Tamil Tiger rebels cease using civilian shields.

Before leaving the White House for a trip to the state of Arizona, Obama told reporters that the situation on the south Asian island could turn from a humanitarian crisis to a full-blown catastrophe. He strongly urged both sides to take steps to alleviate suffering.

"Tens of thousands of innocent civilians are trapped between the warring government forces and the Tamil Tigers in Sri Lanka with no means of escape, little access to food, water, shelter and medicine," Obama said on the White House's South Lawn. "This has led to widespread suffering and the loss of hundreds, if not thousands of lives."

Officials in Sri Lanka said artillery shells on Wednesday tore through a hospital for a second day, killing at least 50 and crippling the medical facility. The government set off a wave of bombardments in the war zone this weekend and has killed as many as 1,000 people.

'Cannon fodder'
The Sri Lanka government says its troops are not responsible for the shelling and that the military has not fired heavy weapons in the area in weeks.

But Human Rights Watch says satellite images and witness testimony contradict that claim and has accused both sides of using the estimated 50,000 civilians packed into the tiny coastal strip controlled by the rebels as "cannon fodder."

Obama said the United States is ready to work to end the conflict.

"Now's the time, I believe, to put aside some of the political issues that are involved and to put the lives of the men and women and children who are innocently caught in the crossfire, to put them first," Obama said.

Amnesty International urged Obama to push for a truce and appealed to the U.N. Security Council to establish a commission of inquiry into violations of international law. Outside the White House, protesters have been chanting in recent days of Obama to take action.

'Indiscriminate shelling'
Obama urged the Tamil Tigers to stop fighting and release civilians as a first step toward peace. "Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out."

He also said the government should stop the "indiscriminate shelling" and the use of heavy weapons in the conflict zone. He asked the government to give the United Nations and Red Cross staff access to the 190,000 displaced civilians.

"Going forward, Sri Lanka must seek a peace that is secure and lasting and grounded in respect for all of its citizens," Obama said. "More civilian casualties and inadequate care for those caught in resettlement camps will only make it more difficult to achieve the peace that the people of Sri Lanka deserve."

On Wednesday afternoon, the area around the hospital came under heavy shell attack, Dr. V. Shanmugarajah told The Associated Press by telephone — the third time it has come under fire this month and just . One shell landed in an administrative office of the hospital, while another hit a ward filled with patients already wounded by previous shelling, he said.

Obama calls for end to violence
Dr. Thurairaja Varatharajah, the top health official in the war zone, said the attack killed at least 50 people, including patients, relatives and a health aide, and wounded about 60 others.

He said heavy shelling continued throughout the day.

"We are unable to treat the people properly because a lot of aides have fled the hospital. We go into bunkers when there is shelling and try to treat them as much as we can when there is a lull," he said by telephone.

Doctors in Sri Lanka say last weekend's warfare alone may have killed 1,000 people.

Bodies left insideMore than 1,000 civilians — many with amputations or chest wounds — were waiting for treatment at the hospital when it was struck, and every 10 minutes or so another one or two died, according to a third hospital official, who spoke only on condition of anonymity because he was not authorized by the government to speak to the media.

Overwhelmed doctors have been reduced to handing out gauze and bandages to the seriously wounded, the official said. More than 100 dead bodies have been left inside the compound because no one will risk burying them amid the constant shelling, he said.

https://www.nbcnews.com/id/wbna30720620

Edited by நிழலி
பிற்சேர்க்கை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கதை தானே அவிழ்த்து விடுங்க

ஆனால் யாழ் களத்தில் அது சரிவராது..

பேச்சுவார்ததையில் இருந்து இயக்கம் தன்னிச்சையாக வெளியேறுவதாக அறிவித்த 2003 காலப்பகுதியில் இருந்து,  மீண்டும் பேச்சுவார்ததைக்கு திரும்புமாறு  இணைத்தலைமை நாடுகளும் நோர்வேயும் பலமுறை  விடுதலைப் புலிகளைக் கேட்டது பொய்யா கோபால். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

Obama: Sri Lanka must end warfare

President Barack Obama scolded both sides of Sri Lanka's quarter-century-old civil war on Wednesday, demanding that the government stop shelling hospitals and that Tamil Tigers lay down their arms.
 
P

May 13, 2009, 9:22 AM EDT / Source: The Associated Press

மே 13

கிளிநொச்சி  விழுந்த காலம்  அல்லவே...

1 minute ago, விசுகு said:

மே 13

கிளிநொச்சி  விழுந்த காலம்  அல்லவே...

அதனால் தான் சொன்னேன், காலம் தாழ்த்திய கோரிக்கை என்று.

புலிகள் ஒபாமா சொன்னதைக் கேட்டு, அவ்வாறு செய்து இருந்தாலும் மகிந்த அரசும் இந்தியாவும் போரை நிறுத்தி இருக்காது. ஏனெனில் முற்று முழுதான வெற்றியை அடைய முடியும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு கிளிநொச்சி வீழ்ந்த பின், வன்னியில் ஒரு சிறு நிலப்பரப்புக்குள் புலிகள் சுற்றிவளைக்கப்பட்ட பின் ஏற்பட்டு இருந்தது.
 
முக்கியமாக ஆனந்தபுர சமர் (மார்ச் 30, 2009) இன் போது புலிகளின் முக்கிய தளபதிகள் எல்லாம் கொல்லப்பட்ட பின் இந்த நம்பிக்கை அவர்களுக்கு 100 வீதம் ஏற்பட்டு இருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.