Jump to content

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

05-1.jpg?resize=750,375&ssl=1

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ், ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து கடுமையான வசைமொழியை பயன்படுத்தியுள்ளமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புனித நகரமான வத்திக்கான் (vatican) திருச்சபையில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி, பாப்பரசர் பிரான்சிஸ்க்கும், பேராயர்களுக்கும் (bishops) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வத்திகானில் புரோசியாஜினே (Frociaggine) காற்று வீசி வருவதாகவும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களை செமினரிக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது எனவும் பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

புரோசியாஜினே (Frociaggine) என்பது ஓரினச்சேர்க்கையாளர்களை குறிக்கும் இத்தாலிய வசை மொழி என குறிப்பிடப்படுகினறது.

புரோசியாஜினே (Frociaggine) என்ற சொல் ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும். இந்த வார்த்தை “இயற்கையை மீறிய மயக்கம்” என்ற பொருளில் ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது.

இந்நிலையில், பாப்பரசரின் இந்த கருத்து தற்போது இத்தாலிய ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸ் இதற்கு முன்னரும் இந்த வசைமொழியை பயன்படுத்தியிருந்த நிலையில், அது சர்சையை ஏற்படுத்தியதையடுத்து, அதற்கு அவர் கடந்த மாதம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் அவர் Frociaggine என்ற வசைமொழியை பயன்படுத்தியுள்ளார்.

87 வயதாகும் பாப்பரசர் பிரான்சிஸ், கடந்த 11 ஆண்டு காலமாக திருத்தந்தையாகவுள்ள நிலையில், LGBT சமூகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் கொண்டவர் என விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1387440

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

kandiah Thillaivinayagalingam

"ஒருபால் திருமணம்"   [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக

ரஞ்சித்

உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால

Kavi arunasalam

கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில்,   இரயிலில் பயணிப்பதற்காக,  இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின்  இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது ஒரு குற்றமல்ல. ஆனால் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது நிச்சயம்  கண்டிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

12 minutes ago, Kapithan said:

ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது ஒரு குற்றமல்ல. ஆனால் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது நிச்சயம்  கண்டிக்கப்பட வேண்டும்.

ஊக்குவிப்பது என்றால் எப்படி? அப்படி ஊக்குவிப்பது ஏன் தவறானது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஊக்குவிப்பது என்றால் எப்படி? அப்படி ஊக்குவிப்பது ஏன் தவறானது?

ஊக்குவிக்காமல் இருப்பது என்றால், வெளிப்படையாக இருக்காமல் ஒளிந்திருத்தல்😎. தமிழ் கல்யாண வீடுகளில் துணையிழந்தவர்கள் முன்னே வராமல் ஒளிந்து நிற்பது போல! அல்லது 83 கலவரத்தின் பின்னர் கொழும்பில் பஸ்ஸில் பயணம் செய்த தமிழ் பெண்கள் நெற்றிப் பொட்டு இல்லாமல் பயணம் செய்ததைப் போல!

ஓரினச்சேர்க்கையாளர்கள் இப்படி மறைவாக இருந்தால், இந்த homophobic ஆக இருப்பவர்களுக்கு மனக்கிலேசம் ஏற்படாது, எனவே அவர்கள் "நாம் நோர்மலான ஆட்கள்" என்று பெருமிதமும் அமைதியும் கொள்வர்.

இங்கே யாருக்கு உளவள ஆலோசனை / சிகிச்சை தேவை என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது இப்போது😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

“இயற்கையை மீறிய மயக்கம்”

இயற்கைக்கு மாறான எல்லாவற்றையும் தடை செய்யக்கூடாதுஅல்ல மாறாக அவைகள் அழிக்கப்படணும்.ஓட ஓட விரட்டப்படணும். :cool:

  • Like 2
Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

இயற்கைக்கு மாறான எல்லாவற்றையும் தடை செய்யக்கூடாதுஅல்ல மாறாக அவைகள் அழிக்கப்படணும்.ஓட ஓட விரட்டப்படணும். :cool:

இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளில் இருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் வந்து வாழ்கின்ற ஜேர்மன் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான உரிமைகளுக்கு மிகவும் வலுவாக சட்ட ரீதியிலான அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஹிட்லரின் நாசிகள் ஓரினச்சேர்க்கையாளர்களையும் கொன்று குவித்து இறுதியில் தோற்கடிக்கப்பட்டபின் (இரண்டாம் உலகப் போரின் பின்) இவர்களுக்கான உரிமைகள் வழங்குவதில் ஜேர்மனி முன்னனி வகிக்கின்றது

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு registered partnerships எனும் வகையில் 2001 இல் சட்ட ரீதியில் வழங்கிய ஜேர்மனி, பின்னர் 2017 இல் அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மேலும் தளர்வுகளை கொண்டு வந்து ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு மேலும் மேலும் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் நீங்கள், அந்த நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, அந்த நாட்டின் சட்டங்களை மதிக்காமல் அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்றும், அதாவது கொல்லப்பட்ட வேண்டும் என்றும் விரட்டப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றீர்கள்.

தனக்கு அபயம் அளித்த ஒரு நாட்டில் உள்ள, சட்ட ரீதியிலான அங்கீகாரம் உள்ள ஒரு சமூகத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கின்றீர்கள்.

இது தான் ஜேர்மன் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கைமாறு!

நன்றி கெட்ட உலகம் இது.

Edited by நிழலி
ஒரு வரி சேர்க்க
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இயற்கைக்கு மாறான எல்லாவற்றையும் தடை செய்யக்கூடாதுஅல்ல மாறாக அவைகள் அழிக்கப்படணும்.ஓட ஓட விரட்டப்படணும். :cool:

இப்ப விளங்குதா? ஏன் மேற்கு நாடுகள் உங்களைப் போன்றவர்களை உள்ளே எடுக்க அச்சப் படுகிறார்கள் என?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 minutes ago, Justin said:

இப்ப விளங்குதா? ஏன் மேற்கு நாடுகள் உங்களைப் போன்றவர்களை உள்ளே எடுக்க அச்சப் படுகிறார்கள் என?

இப்ப விளங்குதா நான் ஏன் பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மன் அயர்லாந் என வலதோ இடதோ நடுவோ அந்த அந்த மண்ணின் மக்களின் அரசியல் தெரிவை ஆதரிக்கிறேன் என..

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஊக்கு

7 hours ago, நிழலி said:

ஊக்குவிப்பது என்றால் எப்படி? அப்படி ஊக்குவிப்பது ஏன் தவறானது?

ஓர்பால் தெரிவை ஊக்குவிப்பதற்கான காரணங்களாக கீழே  வருபவைகளை Copilot  அடையாள காட்டியுள்ளது 👇

என்னைப்பொறுத்தவரை குடும்ப அமைப்பு முதான் குழந்தைகளுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானது என்பது என் நம்பிக்கை..  அதனை பலவீனப்படுத்தும் எதனையும் ஆதரிக்கவ்முடியாது. 

மேற்கில் குடும்ப அமைப்பை ஊக்குவிக்கும் எந்த ஒரு விளம்பரத்தையும் யாரேனும் பார்த்ததுண்டா?  கண்டவர்கள் பதில் கூறவும்”. 

The support for same-sex relationships in Western countries is influenced by a variety of factors, including cultural values, economic development, and political systems. Here are some key reasons why Western societies may encourage and support same-sex relationships:

  1. Human Rights and Equality: Western countries often emphasize human rights and equality for all individuals, including those in the LGBTQ+ community. The recognition of same-sex relationships is seen as an extension of these rights1.

  2. Democratic Values: Democracies promote freedoms such as freedom of expression and assembly, which extend to supporting the rights of minority groups, including LGBTQ+ individuals1.

  3. Economic Development: There is a correlation between economic development and the support of LGBTQ+ rights. Wealthier nations tend to be more tolerant and supportive of diversity, including sexual orientation2.

  4. Separation of Church and State: In many Western countries, there is a clear separation between religious institutions and government policies, which allows for the support of same-sex relationships regardless of religious views on the matter2.

  5. Cultural Shifts: Over time, Western societies have experienced cultural shifts that lead to a broader acceptance of different lifestyles and family structures, including those of same-sex couples3.

  6. Legal Recognition: Many Western countries have legalized same-sex marriage or recognize civil unions, providing legal support and recognition for same-sex couples1.

It’s important to note that attitudes towards same-sex relationships can vary widely even within Western countries, and there is still ongoing debate and discussion on this topic. However, the general trend in many Western societies has been towards greater acceptance and support for same-sex relationships.

பின்குறிப்பு:

மேற்கில் வசிப்பதால் மேற்கில் கூறப்படும் எல்லாவற்றையும் தலைமேற் சுமந்து,  காலால் இட்ட கட்டளையை தலையால் செய்ய என்னால் முடியாது.  

சிலருக்கு அதுதான் தொழிலே. 

(நிழலியைக் குறிப்பிடவில்லை)

Edited by Kapithan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் ஆணுக்கு ஒரு பெண்தான் துணை. ஒரு பெண்ணுக்கு ஒர் ஆண்தான் துணை. இதை மாற்ற வெளிக்கிட்டால் அந்தக் கடவுளே வந்தாலும் எதிர்ப்பேன்.

வெல் செய்ட் போப்!👏

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ஊக்குவிப்பது என்றால் எப்படி? அப்படி ஊக்குவிப்பது ஏன் தவறானது?

இதை பற்றி தெரியாது 

ஆனால்  உடலுறவு கொள்வதால்   

குழந்தை கிடைக்கும் 

ஆரோக்கியம் அதிகரிக்கும் 

ஆயுள் கூடும் 

மன அழுத்தம் குறையும்   

இனம் அதாவது உயிரினம் அழிவது தடுக்கப்படும் 

சொந்த பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன். கதைப்பது விளையாடுகிறது,.சுற்றுலா செல்லுதல்    சிறந்த பொழுதுபோக்கு    ஆகும்  ........ இப்படிப்பட்ட நன்மைகள் ஒரினசேர்க்கையளார்களல். என்ன நன்மைகள் உண்டு”???

Link to comment
Share on other sites

34 minutes ago, Kapithan said:

என்னைப்பொறுத்தவரை குடும்ப அமைப்பு முதான் குழந்தைகளுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானது என்பது என் நம்பிக்கை..  அதனை பலவீனப்படுத்தும் எதனையும் ஆதரிக்கவ்முடியாது. 

இதே குடும்ப அமைப்பு முறையில், பெண் துணையை ஆண் கொல்வதும், குழந்தைகள் மீதான வன்முறையும், குடும்ப வன்முறையும் (domestic violence) உள்ளது. அண்மையிலும் ஒன்ராரியோ மாகாணசபையில் இந்த domestic violence  எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட சீர்திருத்தத்தை என்.டி.பி. கட்சியினர் கோரி அதை டக் போர்ட்டும் ஆதரித்து இருந்தார்.

ஆகவே குடும்ப அமைப்பு முறைதான் பாதுகாப்பானது என்றும், ஓரினச்சேர்க்கை பாதுகாப்பற்றது என்றும் கூற முடியாது

41 minutes ago, Kapithan said:

ஊக்கு

மேற்கில் குடும்ப அமைப்பை ஊக்குவிக்கும் எந்த ஒரு விளம்பரத்தையும் யாரேனும் பார்த்ததுண்டா?  கண்டவர்கள் பதில் கூறவும்”. 

இங்கு காண்பிக்கப்படும் அநேகமான விளம்பரங்களில், ஆண் - பெண் உறவைச் சார்ந்த குடும்பத்தையும், பிள்ளைகளையும் தான் காட்டுகின்றனர். நான் பார்த்த எந்த விளம்பரத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்களை காட்டவில்லை.

41 minutes ago, Kapithan said:

The support for same-sex relationships in Western countries is influenced by a variety of factors, including cultural values, economic development, and political systems. Here are some key reasons why Western societies may encourage and support same-sex relationships:

  1. Human Rights and Equality: Western countries often emphasize human rights and equality for all individuals, including those in the LGBTQ+ community. The recognition of same-sex relationships is seen as an extension of these rights1.

  2. Democratic Values: Democracies promote freedoms such as freedom of expression and assembly, which extend to supporting the rights of minority groups, including LGBTQ+ individuals1.

  3. Economic Development: There is a correlation between economic development and the support of LGBTQ+ rights. Wealthier nations tend to be more tolerant and supportive of diversity, including sexual orientation2.

  4. Separation of Church and State: In many Western countries, there is a clear separation between religious institutions and government policies, which allows for the support of same-sex relationships regardless of religious views on the matter2.

  5. Cultural Shifts: Over time, Western societies have experienced cultural shifts that lead to a broader acceptance of different lifestyles and family structures, including those of same-sex couples3.

  6. Legal Recognition: Many Western countries have legalized same-sex marriage or recognize civil unions, providing legal support and recognition for same-sex couples1.

இதே காரணங்களால் தான் நான் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கின்றேன். நாசிக்கள் போல், அவர்களை கொல்ல வேண்டும் என்றோ, விரட்டப்பட வேண்டும் என்றோ கூறவில்லை

27 minutes ago, வாலி said:

ஓர் ஆணுக்கு ஒரு பெண்தான் துணை. ஒரு பெண்ணுக்கு ஒர் ஆண்தான் துணை. இதை மாற்ற வெளிக்கிட்டால் அந்தக் கடவுளே வந்தாலும் எதிர்ப்பேன்.

வெல் செய்ட் போப்!👏

நீங்கள் கனடாவில் வாழ்வதாக ஒரு முறை குறிப்பிட்டு இருந்தீர்கள் என நினைக்கின்றேன். அங்கு இப்படியான ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டவுடன் எப்படி உங்கள் எதிர்ப்பை காட்டுகின்றீர்கள்? கடவுளே வந்தாலும் எதிர்ப்பவர், நிச்சயம் அவர்களைக் கண்டவுடன் சும்மா இருந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கேட்டால் இதை எதிர்க்கவும் தேவை இல்லை ஆதரிக்கவும் தேவை இல்லை.. இதை கலாச்சாரமாக ஊக்குவிப்பது நிச்சயம் தவறு.. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. அவரவர் தெரிவு அவரவர்க்கு.. இதை ஊக்குவித்து ஒரு பஷன் ஆக்கி ரெண்ட் ஆக்குவது புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பதுபோல் மிகத்தவறான செயற்பாடு.. அதே நேரம் இதை இயற்கையின் தெரிவாக அமைந்தவர்களை நாம் ஏற்றுக்கொண்டு அரவணைத்து செல்லவேண்டும்.. எங்களைப்போல் அவர்களுக்கும் தம் ஆசைபோல் வாழ எல்லா உரிமையும் உண்டு.. அதே நேரம் இயற்கையாக உடலில் இந்த ஹோர்மோன் மாற்றங்கள் இல்லாத பிள்ளைகளுக்கும் மூளைச்சலவை செய்வதுபோல் இதை ரெண்ட் ஆக்குவது பல்வேறு பால்வினை நோய்களுக்கும் சமூக மற்றும் குடும்ப கட்டமைப்புகளின் சீர்குலைவுக்கும் காரணமாகிவிடும்..

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

15 minutes ago, Kandiah57 said:

இதை பற்றி தெரியாது 

ஆனால்  உடலுறவு கொள்வதால்   

குழந்தை கிடைக்கும் 

ஆரோக்கியம் அதிகரிக்கும் 

ஆயுள் கூடும் 

மன அழுத்தம் குறையும்   

ஓரினச்சேர்க்கையாளர்கள் உடலுறவு கொள்ளும் போது இவை நடக்கவில்லை என்று யார் உங்களுக்கு சொன்னது?

மாறாக, ஓரினச்சேர்க்கையாளர்களை அவர்களின் விருப்புக்கு எதிராக எதிர் பாலினத்தவர்களுடன் உடலுறவு கொள்ள செய்தால் தான் மேற்சொன்ன எதுவும் நிகழாது.

15 minutes ago, Kandiah57 said:

இனம் அதாவது உயிரினம் அழிவது தடுக்கப்படும் 

சொந்த பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன். கதைப்பது விளையாடுகிறது,.சுற்றுலா செல்லுதல்    சிறந்த பொழுதுபோக்கு    ஆகும்  ........ இப்படிப்பட்ட நன்மைகள் ஒரினசேர்க்கையளார்களல். என்ன நன்மைகள் உண்டு”???

இதெல்லாம் சாக்கு போக்குதானே?

1. ஓரினச்சேர்க்கையாளர்கள் மிகவும் குறைந்த விகிதமானோர். அவர்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது விடின், மனித குலம் அழிந்து போகப் போவதில்லை. 

2. ஓரினச்சேர்க்கையாளர்களும் adoption இப்போ மூலமும் வாடகை தாய் முறை மூலமும் பிள்ளைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

அத்துடன் சொந்த பிள்ளைகள், பேரக்குழந்தைகள் இல்லாவிட்டால் சந்தோசம் இல்லாமல் ஆகிவிடுமா? 

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னைக்கேட்டால் இதை எதிர்க்கவும் தேவை இல்லை ஆதரிக்கவும் தேவை இல்லை.. இதை கலாச்சாரமாக ஊக்குவிப்பது நிச்சயம் தவறு.. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. அவரவர் தெரிவு அவரவர்க்கு.. இதை ஊக்குவித்து ஒரு பஷன் ஆக்கி ரெண்ட் ஆக்குவது புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பதுபோல் மிகத்தவறான செயற்பாடு.. அதே நேரம் இதை இயற்கையின் தெரிவாக அமைந்தவர்களை நாம் ஏற்றுக்கொண்டு அரவணைத்து செல்லவேண்டும்.. எங்களைப்போல் அவர்களுக்கும் தம் ஆசைபோல் வாழ எல்லா உரிமையும் உண்டு.. அதே நேரம் இயற்கையாக உடலில் இந்த ஹோர்மோன் மாற்றங்கள் இல்லாத பிள்ளைகளுக்கும் மூளைச்சலவை செய்வதுபோல் இதை ரெண்ட் ஆக்குவது பல்வேறு பால்வினை நோய்களுக்கும் சமூக மற்றும் குடும்ப கட்டமைப்புகளின் சீர்குலைவுக்கும் காரணமாகிவிடும்..

சட்ட ரீதியிலான அங்கீகாரத்தினை, பாடசாலைகளில் அவர்களுக்கான அங்கீகாரத்தையா trend நீங்கள் என்று சொல்கின்றீர்கள்?

Edited by நிழலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

ஓரினச்சேர்க்கையாளர்கள் உடலுறவு கொள்ளும் போது இவை நடக்கவில்லை என்று யார் உங்களுக்கு சொன்னது?

மாறாக, ஓரினச்சேர்க்கையாளர்களை அவர்களின் விருப்புக்கு எதிராக எதிர் பாலினத்தவர்களுடன் உடலுறவு கொள்ள செய்தால் தான் மேற்சொன்ன எதுவும் நிகழாது.

இதெல்லாம் சாக்கு போக்குதானே?

1. ஓரினச்சேர்க்கையாளர்கள் மிகவும் குறைந்த விகிதமானோர். அவர்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது விடின், மனித குலம் அழிந்து போகப் போவதில்லை. 

2. ஓரினச்சேர்க்கையாளர்களும் இப்போ மூலமும் வாடகை தாய் முறை மூலமும் பிள்ளைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

அத்துடன் சொந்த பிள்ளைகள், பேரக்குழந்தைகள் இல்லாவிட்டால் சந்தோசம் இல்லாமல் ஆகிவிடுமா? 

எனது சொந்த அனுபவம்    மற்றும் உடலுறவு என்றால் என்ன?? ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் செய்ய முடியுமா?? 

Link to comment
Share on other sites

Just now, Kandiah57 said:

எனது சொந்த அனுபவம்    மற்றும் உடலுறவு என்றால் என்ன?? ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் செய்ய முடியுமா?? 

சொந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் எதனையும் எழுத வேண்டும் என்றால், இங்கு எவரும் பரந்துபட்டு உரையாடவும் முடியாது.

ஆணும் ஆணும், மற்றும் பெண்ணும் பெண்ணும் எப்படி உடலுறவு கொள்கின்றார்கள் என்பது ஒரு 15 வயது பிள்ளைக்கே இன்று தெரிந்திருக்கும் போது, உங்களுக்கு தெரியாது என்று சொல்கின்றீகள்! அதுவும் ஜேர்மனில் இருந்து கொண்டு! 

அல்லது ஆண் குறியும் பெண் குறியும் சம்பந்தப்பட்டால் மாத்திரமே அது உடலுறவு என நீங்கள் வரையறை செய்து வைத்துள்ளீர்கள் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

சொந்த அனுபவத்தின் அடிப்படையில் தா

சொந்த அனுபவம் என்பது  பிள்ளைகள் பேரப்பிள்களால். மகிழ்ச்சி உண்டு”  இது விலைக்கு வேண்டா முடியாது   வீடு திரும்பும்  ஒவ்வொரு சமயத்திலும். சிறு குழந்தை   கதவை திறந்தவுடன்   சிரித்து கொண்டு வரும் போது  அனைத்து கவலைகளும் இல்லாமல் போய்விடும்   இதை நீங்கள் அனுபவிக்க இல்லை என்றால்   .....உணரவில்லை எனில்   எனது கருத்தை எற்க வேண்டாம்’    

முன்னாள் ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ஒருபால்க்காரர்.  50 வயதில் இறந்து விட்டார்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்ட் ஆக்குவது சட்டம் இயற்றுவதை அல்ல குறிப்பிடுவது.. தனது ஒவ்வொரு பிரசையையும் காக்கவேண்டியது அரசின் கடமை..

ஆனால் எல் ஜீ பி ரி பிரைட் மார்ச் சோ ஏதோவொண்டு ரீவி சமூகவலைத்தள விளம்பரங்களுடன் பெருமெடுப்பில் பேரணியாக நடத்துகிறார்கள்.. பல்வேறு ஆதரவு பிரச்சாரங்களை நடத்துகிறார்கள்.. உடுப்புகள் அடையாளங்கள் எல்லாம் விக்கிறார்கள்.. பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் பேசுகிறார்கள்..

ஓரின சேர்க்கை என்றால் என்ன..? அது தானாக உடலில் ஹோர்மன்களின் மாற்றங்களால் வருவது.. ஆணும் பெண்ணும் எப்படி பிறப்பால் ஹோர்மன்களால் தீர்மானிக்கப்படுகிறோமோ அதுபோல் அவர்களும்.. நாம் திணிக்கக்குடாது..

ஆகவே

குமாரச்சமியோ கப்பிதனோ போன்ற பெற்றோர்கள் இந்த ரெண்டாக்கலை பார்க்கும்போது தமது பிள்ளைகளுக்கும் சமூக அக்கறை இருந்தால் சமூகத்துக்கும் இது உன் உடம்பில் இயற்கையாக வரவேணும் நீயாக திணிப்பதோ விரும்பி ஈடுபடுவதோ அல்ல என்பதை எழுத பேச எல்லா உரிமையும் இருக்கு.. உங்களுக்கு ஓரினசேர்க்கையை விளம்பரப்படுத்த உரிமை இருக்கு என்றால் இவர்களுக்கும் இயற்கையாக ஹோர்மன்களினால் நீ ஓரினச்சேர்க்கையாளனாக இல்லாமல் இயற்கைக்கு மாறாக நீ உனக்குள் அந்த எண்ணத்தை திணித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறு அதனால் வரும் நோய்கள் குடும்ப கட்டமைப்பு சிதைவு ஆகியவற்றைன்பேசவும் எழுதவும் உரிமை இருக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது காலத்தில் எமது பிள்ளைகள் ஒரு எமது இனத்தவரை கொண்டு வந்தால் போதும் இருந்தது. 

இன்று ஓரினச்சேர்க்கையாக இருந்து விடக்கூடாது என்று கலங்குவதாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

12 minutes ago, Kandiah57 said:

சொந்த அனுபவம் என்பது  பிள்ளைகள் பேரப்பிள்களால். மகிழ்ச்சி உண்டு”  இது விலைக்கு வேண்டா முடியாது   வீடு திரும்பும்  ஒவ்வொரு சமயத்திலும். சிறு குழந்தை   கதவை திறந்தவுடன்   சிரித்து கொண்டு வரும் போது  அனைத்து கவலைகளும் இல்லாமல் போய்விடும்   இதை நீங்கள் அனுபவிக்க இல்லை என்றால்   .....உணரவில்லை எனில்   எனது கருத்தை எற்    

கந்தையா அண்ணை,

எனக்கு இரண்டு பிள்ளைகள், இங்கிருக்கும் ஓணாண்டி, விசுகு மற்றும் பலருக்கு தெரியும் நான் அவர்களுடன் போடும் கும்மாளம்.

ஆனால் என் மகிழ்ச்சிக்குரிய விடயங்கள் மட்டுமே எல்லாருக்கும் மகிழ்ச்சியை தரும் என நான் நம்பவில்லை.

ஓரினச்சேர்க்கையாளர்கள் அவரவருக்கு தெரிந்த முறையில் மகிழ்வாக வாழ்கின்றனர்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

ஆனால் என் மகிழ்ச்சிக்குரிய விடயங்கள் மட்டுமே

ஒ.கே. ரொம்ப சரி   எற்றுக். கொள்கிறேன்   நன்றி வணக்கம் 🙏

Link to comment
Share on other sites

8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரெண்ட் ஆக்குவது சட்டம் இயற்றுவதை அல்ல குறிப்பிடுவது.. தனது ஒவ்வொரு பிரசையையும் காக்கவேண்டியது அரசின் கடமை..

ஆனால் எல் ஜீ பி ரி பிரைட் மார்ச் சோ ஏதோவொண்டு ரீவி சமூகவலைத்தள விளம்பரங்களுடன் பெருமெடுப்பில் பேரணியாக நடத்துகிறார்கள்.. பல்வேறு ஆதரவு பிரச்சாரங்களை நடத்துகிறார்கள்.. உடுப்புகள் அடையாளங்கள் எல்லாம் விக்கிறார்கள்.. பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் பேசுகிறார்கள்..

ஓரின சேர்க்கை என்றால் என்ன..? அது தானாக உடலில் ஹோர்மன்களின் மாற்றங்களால் வருவது.. ஆணும் பெண்ணும் எப்படி பிறப்பால் ஹோர்மன்களால் தீர்மானிக்கப்படுகிறோமோ அதுபோல் அவர்களும்.. நாம் திணிக்கக்குடாது..

ஆகவே

குமாரச்சமியோ கப்பிதனோ போன்ற பெற்றோர்கள் இந்த ரெண்டாக்கலை பார்க்கும்போது தமது பிள்ளைகளுக்கும் சமூக அக்கறை இருந்தால் சமூகத்துக்கும் இது உன் உடம்பில் இயற்கையாக வரவேணும் நீயாக திணிப்பதோ விரும்பி ஈடுபடுவதோ அல்ல என்பதை எழுத பேச எல்லா உரிமையும் இருக்கு.. உங்களுக்கு ஓரினசேர்க்கையை விளம்பரப்படுத்த உரிமை இருக்கு என்றால் இவர்களுக்கும் இயற்கையாக ஹோர்மன்களினால் நீ ஓரினச்சேர்க்கையாளனாக இல்லாமல் இயற்கைக்கு மாறாக நீ உனக்குள் அந்த எண்ணத்தை திணித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறு அதனால் வரும் நோய்கள் குடும்ப கட்டமைப்பு சிதைவு ஆகியவற்றைன்பேசவும் எழுதவும் உரிமை இருக்கிறது..

இங்கே வருடத்தில் ஒரு முறை இப் பேரணி நடக்கும். இப் பேரணிகளை, பாடசாலைகளில் வைக்கப்படும் rainbow flags களை LGBTQ சமூகத்தை சக சமூகமாக அங்கீகரியுங்கள் என்பதை வலியுறுத்த, அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என காட்ட இவற்றை நடாத்துகின்றனர். 

இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

ஓரினச்சேர்க்கை அவரவர் விருப்பு சம்பந்தமானது. எவராலும் திணிக்கப்பட முடியாது. Trend இனை பார்த்து ஒருவர் மாறினால், அவரைப் பார்த்து ஐயோ பாவம் என்று சொல்லிப் போட்டு கடந்து போகத்தான் முடியும்.

கபிதன் கூறியது வேறு, குமாரசாமி கூறியது வேறு. 

சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகத்தை அழிக்கப்பட வேண்டியவர்கள் என எழுவது எல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் வகைக்குள் வராது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளில் இருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் வந்து வாழ்கின்ற ஜேர்மன் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான உரிமைகளுக்கு மிகவும் வலுவாக சட்ட ரீதியிலான அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஹிட்லரின் நாசிகள் ஓரினச்சேர்க்கையாளர்களையும் கொன்று குவித்து இறுதியில் தோற்கடிக்கப்பட்டபின் (இரண்டாம் உலகப் போரின் பின்) இவர்களுக்கான உரிமைகள் வழங்குவதில் ஜேர்மனி முன்னனி வகிக்கின்றது

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு registered partnerships எனும் வகையில் 2001 இல் சட்ட ரீதியில் வழங்கிய ஜேர்மனி, பின்னர் 2017 இல் அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மேலும் தளர்வுகளை கொண்டு வந்து ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு மேலும் மேலும் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் நீங்கள், அந்த நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, அந்த நாட்டின் சட்டங்களை மதிக்காமல் அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்றும், அதாவது கொல்லப்பட்ட வேண்டும் என்றும் விரட்டப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றீர்கள்.

தனக்கு அபயம் அளித்த ஒரு நாட்டில் உள்ள, சட்ட ரீதியிலான அங்கீகாரம் உள்ள ஒரு சமூகத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கின்றீர்கள்.

இது தான் ஜேர்மன் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கைமாறு!

நன்றி கெட்ட உலகம் இது.

நீங்கள் தனி மனித கருத்துக்திற்கும்
நன்றி விசுவாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தள்ளாடுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

நான் தற்போது வாழும் நாட்டில் தங்க வசதி தந்த நாட்டில் தலையாட்டும் மாடு போல் நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டுமாயின்.....

நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கும் நன்றி விசுவாசத்துடன் மாற்றுக்கருத்தில்லாமல் வாழ்ந்திருக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

56 minutes ago, குமாரசாமி said:

தங்க வசதி மட்டுமல்ல வாழ்வையே தந்த நாட்டின் எல்லாவற்றையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எமக்கு பிடிக்காத விடயங்களை எதிர்த்து எம் கருத்தை முன்வைக்கலாம், அவற்றில் இருந்து தனிப்பட விலகி இருக்கலாம், ஏன் எதிராக்ல் போராட்டங்களைக் கூட செய்யலாம்.

ஆனால் எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, பலர் ஏற்றுக் கொண்டு சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகத்தினரை அழித்தொழிக்க வேண்டும் என்பது எந்த விதமான நியாயம்? தனக்கு ஒவ்வாத விடயம் எனில் அதை அழித்தொழிக்க வேண்டும் என்பது எந்தவகை அறம்?

உங்களின் இரண்டாவது கேள்விக்கு என் பதில்: இலங்கை போன்ற இனமொன்றில் பிறந்த் காரணத்திற்காக உயிர் வாழும் உரிமை பறிக்கப்படும் தேசத்துக்கு அதே இனத்தில் பிறந்த ஒருவர் விஸ்வாசமாக இருக்க வேண்டும் என நினைப்பதே மகா தவறு என்பேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இதே குடும்ப அமைப்பு முறையில், பெண் துணையை ஆண் கொல்வதும், குழந்தைகள் மீதான வன்முறையும், குடும்ப வன்முறையும் (domestic violence) உள்ளது. அண்மையிலும் ஒன்ராரியோ மாகாணசபையில் இந்த domestic violence  எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட சீர்திருத்தத்தை என்.டி.பி. கட்சியினர் கோரி அதை டக் போர்ட்டும் ஆதரித்து இருந்தார்.

ஆகவே குடும்ப அமைப்பு முறைதான் பாதுகாப்பானது என்றும், ஓரினச்சேர்க்கை பாதுகாப்பற்றது என்றும் கூற முடியாது

இங்கு காண்பிக்கப்படும் அநேகமான விளம்பரங்களில், ஆண் - பெண் உறவைச் சார்ந்த குடும்பத்தையும், பிள்ளைகளையும் தான் காட்டுகின்றனர். நான் பார்த்த எந்த விளம்பரத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்களை காட்டவில்லை.

இதே காரணங்களால் தான் நான் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கின்றேன். நாசிக்கள் போல், அவர்களை கொல்ல வேண்டும் என்றோ, விரட்டப்பட வேண்டும் என்றோ கூறவில்லை

நீங்கள் கனடாவில் வாழ்வதாக ஒரு முறை குறிப்பிட்டு இருந்தீர்கள் என நினைக்கின்றேன். அங்கு இப்படியான ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டவுடன் எப்படி உங்கள் எதிர்ப்பை காட்டுகின்றீர்கள்? கடவுளே வந்தாலும் எதிர்ப்பவர், நிச்சயம் அவர்களைக் கண்டவுடன் சும்மா இருந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

ஒப்பீட்டு அளவில் குடும்ப முறை மேன்மையானதா இல்லையா? 

(ஒரு உதாரணத்திற்காக மாத்திரம்) உங்கள் குழந்தைகளை ஓரினச் சேர்க்கையாளர்கள் தத்தெடுத்து வளர்க்க ஒப்புதல் தருவீர்களா? 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரில் ஒருவர் கைது! Published By: VISHNU 21 JUN, 2024 | 12:52 AM   நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் தேடி கைது செய்யும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186607
    • 20 JUN, 2024 | 07:48 PM   (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல ஆரம்ப வகுப்பு பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழி மூல பாடசாலைகள் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது. இவ்வாறான நிலைமையில் எப்படி இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என  சுயாதீன எதிரணியின் உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) மகளிர் வலுப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, யுனெஸ்கோ பிரகடனத்தில் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால், 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளேன்.  கடந்த 5 வருடங்களை எடுத்துக்கொண்டால் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும்போது 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியாகின்றன. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள்  நிறைவடைந்துள்ள பின்னரும் கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சிங்கள வெட்டுப்புள்ளிகள் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழிமூலம் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் இல்லை என்பதனையே காட்டுகிறது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே உங்களின் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்... யுத்த காலத்திலும் கூட கொழும்பு ரோயல் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் வகுப்புகள் இடம்பெற்றன. ஆனால், வடக்கு, கிழக்கில் சிங்கள மொழிமூலம் வகுப்புகள் ஏதும் இல்லை. மட்டக்களப்பில் எத்தனையோ சிங்கள கிராமங்கள் உள்ளன. எத்தனையோ சிங்கள பாடசாலைகள் பிரபுக்களால் அமைக்கப்பட்டன. ஆனால், அவை இல்லாது இருக்கின்றன. இப்படி இருக்கையில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/186596
    • டி20 உலகக் கோப்பை: மிரட்டிய ஆப்கானிஸ்தானை வியூகம் வகுத்துச் சுருட்டிய இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஜூன் 2024, 03:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் மாறிவிட்டதால் இனிமேல் டி20 போட்டிகளுக்கே உரிய ரன் குவிப்பை பார்க்கலாம் என்று கூறப்பட்டது. ஆடுகளங்கள் ரன்குவிப்புக்கு சாதகமாக இருப்பதுபோல் தெரிந்தாலும், பேட்டர்கள் பந்தைக் கவனித்து ஷாட்களை அடிக்க வேண்டியுள்ளது. இதுதான் நேற்றை இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் தாத்பரியமாக இருந்தது. அனுபவ பேட்டர்கள், தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் பொறுமையாக, நிதானமாக பேட் செய்யாமல் விக்கெட்டை இழந்தனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் நிதானமாக, அதேநேரம் எந்தப் பந்தை பெரிய ஷாட்டாக மாற்றலாம் எனத் தெரிந்து அடித்து ஹீரோவாக ஜொலித்தார். பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் குருப்- ஏபிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம், இந்திய அணி குரூப்-1 பிரிவில் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 2.350 என்று வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 சர்வதேச போட்டிகளை இந்திய அணி வென்று சாதனையை தக்கவைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் ரன்ரேட் மைனஸ் 2.350 என்று குறைவாக இருக்கிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் நடந்தது என்ன? இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும்தான். அதிலும் புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்திய அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இந்திய அணியை தாங்கிப்பிடித்து பெரிய ஸ்கோருக்கு கொண்டுவந்தவர் சூர்யகுமார் யாதவ். 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் கணக்கில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். அணியைச் சரிவிலிருந்து மீட்ட சூர்யகுமார் ஆட்டநாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூர்யகுமார்-ஹர்திக் பாண்டியா கூட்டணி நேற்றைய ஆட்டத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், பெரியஸ்கோருக்கும் வழிவகுத்தது. ஹர்திக் பாண்டியாவும் 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் பும்ராவின் திறமை ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறிக் கொண்டே செல்கிறது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து பும்ரா பந்துவீச்சில் எக்கானமி 3 ரன்களைக் கடக்கவில்லை. இந்த ஆட்டத்திலும் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறனை வெளிப்படுத்தினார். அதிலும் புதிய பந்தில் பும்ராவாவின் பந்துவீச்சை சமாளிக்க ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் கடும் சிரமப்பட்டு விக்கெட்டையும் இழந்தனர். அதேபோல அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட், சிராஜுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட குல்தீப் யாதவ் 4 ஓவர்களிலி் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் என அற்புதமாகப் பந்துவீசினர். அக்ஸர் படேலும், ஜடேஜாவும் தங்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு துணை செய்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித் சர்மான கூறியது என்ன? வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் “கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இங்கு டி20 போட்டிகளை விளையாடியிருக்கிறோம் என்பதால், சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட முடிந்தது. அதனால்தான் 180 ரன்களை எட்ட முடிந்தது.” என்றார். “பேட்டர்களின் பங்கு அசாத்தியமானது. எங்களிடம் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது, பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். ஸ்கை, ஹர்திக் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ஆட்டத்தை ஆழமாகக் கொண்டு செல்ல இருவரின் ஆட்டம் அவசியமானதாக இருந்தது. பும்ராவின் பந்துவீச்சு குறித்து நமக்குத் தெரியும். அவர் பந்துவீச்சில் என்ன செய்வார் என்பதும் தெரியும். சூழலையும், ஆடுகளத்தையும் சாதகமாக பயன்படுத்தி பந்துவீசக்கூடியவர். பொறுப்பெடுத்து தனது பங்களிப்பை பல ஆண்டுகளா அளித்து வருகிறார் பும்ரா. இந்த ஆடுகளத்தின் தன்மையைப்புரிந்து கொண்டுதான் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அடுத்த ஆட்டத்தில் இருந்தால், அதிகமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் வருவோம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித், கோலி 2 ஆண்டுகளாக விளையாடவில்லை ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணித்து ரோகித் சர்மா, கோலி பேட் செய்து கையைச் சுட்டுக்கொண்டனர். 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் கடந்த ஜனவரி மாதம் வரை சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாடவில்லை. ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்களுடன் பரூக்கி பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை இழந்தார். இன்றைய டி20 போட்டிகளில் பந்துவீச்சில் ஒவ்வொரு வீரரும் எவ்வாறு வேரியேஷன்களை கொண்டு வருகிறார்கள். 145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஒரு பந்துவீச்சாளர் அடுத்த பந்தை அப்படியே வேகத்தைக் குறைத்து 110 கி.மீ வேகத்தில் வீசுகிறார். இதை கவனிக்காமல் விட்டதுதான் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா செய்த தவறாகும். ஐபிஎல் தொடரில் பலமுறை லெக் ஸ்பின்னுக்கு கோலி ஆட்டமிழந்துள்ளார். இதை உணர்ந்த ரஷித் கான் தனது பந்துவீச்சில் கோலியை பெரிய ஷாட்டுக்கு மாற்றும் வகையில், ஆசையைத் தூண்டும் வகையில் பந்துவீசினார். இதை கவனிக்காத கோலி, சிக்ஸருக்கு முயன்று கேட்சாகினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங் சூர்யகுமாரின் பேட்டிங் நேற்றைய ஆட்டத்தில் மாஸ்டர் கிளாஸாக இருந்தது. சூர்யகுமார் 3வது வீரராக வழக்கமாகக் களமிறங்கிய நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு 4வது இடம் தரப்பட்டது. ஆனாலும், தனக்குரிய பணியை இந்தத் தொடரில் சிறப்பாகவே செய்து வருகிறார். சூர்யகுமார் ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான, ஸ்பெஷல் ஷாட்களை ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆப்சைட் சென்ற பந்துகளை ஸ்வீபுக்கு மாற்றியது, ஃபுல்டாஸ் பந்தை ஸ்வீப்புக்கு மாற்றியது என எதிரணி பீல்டர்கள் கணிக்க முடியாத வகையில் ஷாட்களை விளையாடினார். அதாவது இடதுபுறம் பவுண்டரி எல்லை குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து பெரும்பாலான ஷாட்களை சூர்யாக இடதுபுறம் அடித்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை ஆடினார். சூர்யகுமார் அடித்த 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸரில் பந்து அரங்கத்தின் மேற்கூரையில் விழுந்தது. ஸ்லோவர் பந்துகளை எவ்வாறு கணித்து ஆட வேண்டும் என்பதற்கு பிரத்யேகப் பயிற்சி எடுத்த சூர்யா, நேற்று ஸ்லோவர் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பந்துவீச்சு வேரியஷன்கள் சூர்யாவிடம் தோல்வி அடைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆடுகளம் மந்தமாக இருந்தால், பந்து வரும் திசையை பேட்டர்கள் கணிப்பது சிரமம். இதற்கு நீண்டநேரம் களத்தில் இருந்து பந்தை கணித்தால்தான் ஆட முடியும். ஆனால், இதை சூர்யகுமார் வந்தவுடன் புரிந்து கொண்டு ஆடுகளத்துக்கு ஏற்றபடி ஆட்டத்தை மாற்றிக்கொண்டார். வழக்கமாக ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்றவற்றை அதிகமாக ஆடக்கூடிய சூர்யா நேற்று பெரிதாக ஆடவில்லை.இந்த ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டுமே கீப்பருக்கு பின்னால் அடித்து சூர்யா சேர்த்தார். இதுபோன்று ஆடுவது சூர்யாவின் பேட்டிங்கில் குறைந்த சதவீதம் என்றாலும், ஆடுகளத்தின் மெதுவான தன்மை, பந்தின் வேகக் குறைவால் அதிகமான சக்தியை செலுத்திதான் இந்த ஷாட்களை ஆட முடியும் என்பதால் பெரியாக மெனக்கெடவில்லை. ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட சூர்யா, அதை ஹர்திக் பாண்டியாவிடம் கூறி, அவர் அடித்த அதே ஷாட்களுக்கு அடிக்க மாற்றினார். இருவருமே பீல்டர்கள் கணிக்க முடியாத பகுதியில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். ரன் சேர்ப்பதற்கு கோலி, ரோஹித், ரிஷப் பந்த், துபே ஆகியோர் சிரமப்பட்ட நிலையில், சூர்யகுமார் 27 பந்துகளில் அரைசதம் அடித்தது சகவீரர்களுக்கே வியப்பாக இருந்திருக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் பரூக்கி வீசிய ஸ்லோவர் பந்துக்கு சூர்யா இரையாகினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா சிறப்பான பந்துவீச்சு புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு வேகம் அற்புதமானது. புதிய பந்தில் பும்ரா பந்துவீசினாலே 75 சதவீதத்துக்கும் மேல் விக்கெட் வீழ்த்தும் சாதனையை டி20 போட்டியில் வைத்துள்ளார். அதை நேற்றைய ஆட்டத்திலும் பும்ரா நிரூபித்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ்(11), ஜசாய்(2) விக்கெட்டுகளை காலி செய்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் அதிகமான ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் குர்பாஸ் விக்கெட்டை அனாசயமாக எடுத்தார் பும்ரா. குர்பாஸ் இறங்கி வந்ததும் பந்தை ஆஃப் சைடில் விலக்கி பும்ரா வீசவே, அதை அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்தார் குர்பாஸ். ஆடுகளத்தன் தன்மையை உடனடியாகக் கணித்து அதற்கு ஏற்றார்போல் பும்ரா பந்துவீசுவதால்தான் அனைத்து ஃபார்மெட்டுகளின் ராஜா என்று புகழப்படுகிறார். இந்த ஆட்டத்தில் பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அனுபவமில்லாத ஆப்கானிஸ்தான் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் உடனடியாக மாற்றாததன் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் நேற்று விலை கொடுத்தது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் முதல் நடுவரிசை வரை பெரிய ஷாட்களுக்குதான் பெரும்பாலும் முயன்றார்களே தவிர, களத்தில் நிலைத்திருக்க முயலவில்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் அணியில் ஓமர்சாய் தவிர, மற்ற எந்த பேட்டரும் 20 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை. பந்துவீச்சிலும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் ரஷித் கான், பரூக்கி இருவர் மட்டுமே பந்துவீசினர். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்துவீசவில்லை. அதிலும் குறிப்பாக நவீன் உல் ஹக் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. ரஷித் கான் தவிர அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். https://www.bbc.com/tamil/articles/cy99zwqqpkno
    • இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது செய்தனர்.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.