Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு முன் திரண்ட மக்களின் எண்ணிக்கையானது சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானது.

- நிலாந்தன்! -

சம்பந்தன் போன்றோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று பாராளுமன்றம் சென்றதெல்லாம் பொய்யா கோப்பால்....?

Gopal Goppal GIF

  • Replies 328
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

நிழலி

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

ஈழப்பிரியன்

கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தன் போன்றோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று பாராளுமன்றம் சென்றதெல்லாம் பொய்யா கோப்பால்....?

Gopal Goppal GIF

கடந்த பாராளுமன்ற தேர்தலில், 
யாழ் மத்திய கல்லூரியில் வைத்து  சுமந்திரன் வென்றதாக  அறிவித்த போதும்...
அவரை வாழ்த்துவதற்குப் பதிலாக... "கள்ளா, கள்ளா" என்று கூப்பிட்டு அவமானப் படுத்தியதுதான் நினைவிற்கு வருகின்றது.

ஆசிய நாட்டு தேர்தல்களில்... தில்லுமுல்லுகள் அதிகம். 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, தமிழ் சிறி said:

கடந்த பாராளுமன்ற தேர்தலில், 
யாழ் மத்திய கல்லூரியில் வைத்து  சுமந்திரன் வென்றதாக  அறிவித்த போதும்...
அவரை வாழ்த்துவதற்குப் பதிலாக... "கள்ளா, கள்ளா" என்று கூப்பிட்டு அவமானப் படுத்தியதுதான் நினைவிற்கு வருகின்றது.

ஆசிய நாட்டு தேர்தல்களில்... தில்லுமுல்லுகள் அதிகம். 

எது எப்படியோ.....
ஈழ அரசியலின் முக்கிய அரசியல்வாதி சம்பந்தனின் மரண சடங்கின் நிகழ்வுகள் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நல்ல படிப்பினையாக அமையும். இன்றைய காலகட்டத்தில் வாயில்லா பூச்சிகளான தமிழினம் தாம் கொண்ட கொள்கையில் மாறவில்லை என்பதை சம்பந்தனின் மரண நிகழ்விற்கு வந்த மக்கள் தொகை உணர்த்தி நிற்கின்றது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

சுமந்திரன், ஸ்ரீதரன், மாவை, குகதாசன், டெலோ, புளொட் போன்ற பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் தமிழ் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் குறிப்பிடுகையில்,

சம்பந்தனின் தமிழர் விரோத நிலைப்பாடும் கொள்கைகளும் அவரது மறைவுடன் இல்லாமல் போய்விட்டது. காணாமல் ஆக்கப்படட குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் இந்த மாற்றங்களையும் புதிய தலைமையையும் வரவேற்கிறோம்.

சம்பந்தனின் கீழ் பணியாற்றிய நபர்களை தமிழர்கள் ஆதரிக்கவில்லை. சம்பந்தனின் தமிழர் விரோதக் கொள்கைகளை விமர்சிக்காத எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்று தாய்மார்கள் கோருகின்றனர்.

சம்பந்தனின் இறுதிப் பயணத்தின் போது மரியாதை இல்லாதது அவரது கொள்கைகளை தமிழர் நிராகரிப்பதையே காட்டுகிறது.

அரசியல் சலுகைகளைப் பெறுவதற்கான பயனற்ற முயற்சிகள், சிங்கள அரசாங்கங்களுடனான ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை இல்லாமை, போர்க்குற்றப் பொறுப்புக்கூறலுக்குப் போதிய வாதங்கள் இல்லாமை மற்றும் இடம்பெயர்ந்த தமிழர்கள் புறக்கணிப்பு ஆகியவற்றால் அவரது பதவிக்காலம் குறிக்கப்பட்டது.

சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்ற கொழும்பு தமிழ் அரசியல்வாதிகளை தமிழீழத்தில் இறக்குமதி செய்தமை மற்றும் எதிர்க்கட்சித் தலைமைக்கு சிங்கள அரசாங்கத்தை ஆதரித்தமை, சம்பந்தனுக்கு சிங்கள மாளிகை எடுப்பதற்கு தொடர்பான சுமந்திரன் சம்பந்தன் நாடாளுமன்ற விவாதம் ஆகியன தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தியது என தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

https://athavannews.com/2024/1392938

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1720363166-ranil-6.jpg

சம்பந்தருக்குப் பிறகு? - நிலாந்தன்

சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறாரோ அங்கிருந்துதான் அடுத்த கட்டம் தொடங்கும். சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்?

சம்பந்தர் சிதறிப்போன தன் பலத்தைத் தானே உணராத ஒரு தமிழ்ச் சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

சம்பந்தரின் வழி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதனை இரண்டு தளங்களில் ஆராயலாம். முதலில் அனைத்துலக அளவில். இரண்டாவதாக உள்நாட்டுக்குள்.

அனைத்துலக அளவில் சம்பந்தர் தமிழ்மக்களின் மெய்யான பலம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கவில்லை. தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் எது காரணமோ அதுதான் தமிழ் மக்களின் மெய்யான பலமும். அதுதான் தமிழ் மக்களின் புவிசார் அமைவிடம். அந்த அமைவிடம் காரணமாகத்தான் இனப்பிரச்சினை பிராந்தியமயயப்பட்டது. பின்னர் பூகோளமயப்பட்டது. அந்த அமைவிடம் காரணமாகத்தான் திம்புவிலிருந்து ஒஸ்லோ வரையிலும் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அந்த அமைவிடம் காரணமாகத்தான் ஈழத்தமிழர்கள் பேரரசுகளின்  இழுவிசைகளுக்குள் சிக்கிக் கிழிபடும் மக்களாக மாறியிருக்கிறார்கள். எனவே எது ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கெல்லாம் ஊற்றுமூலமாக இருக்கின்றதோ அதையே வெற்றிக்குரிய அடிப்படையாக மாற்றுவதில் சம்பந்தர் வெற்றி பெறவில்லை. அவர் ஈழத் தமிழ் அரசியலை பெருமளவுக்கு சர்வதேச மயநீக்கம் செய்வதிலும் பிராந்திய மயநீக்கம் செய்வதிலும் ஆர்வமாகக் காணப்பட்டார்.

இந்தியாவிடம் போனால் சிங்களமக்கள் கோபிப்பார்கள் என்று கருதி இந்தியாவின் அழைப்பை நிராகரித்தார். அதுபோலவே ஐநாவில் பரிகார நீதியை கேட்க அவர் விரும்பவில்லை. அதாவது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை அவர் கேட்கவில்லை. மாறாக நிலை மாறு கால நீதியைத்தான் சம்பந்தர் ஆதரித்தார். அதற்குரிய ஐநாவின் தீர்மானத்தில் அவர் பங்காளியாகவும் இருந்தார். ஆனால் ” 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையை செய்தோம் அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்று சுமந்திரன் 2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கூறினார். எனவே பரிகார நீதியும் இல்லை; நிலைமாறுகால நீதியும் இல்லை. இப்பொழுது ஐநாவில் ஒரு பலவீனமான சான்றுகளைச் சேகரிக்கும் அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதுதவிர  புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களால் இயன்றதைச் செய்து இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். குறிப்பாக கனடாவில் குறிப்பிட்ட செல்லக்கூடிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றை எல்லாம் அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துச்செல்லத் தேவையான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை தாயகத்தில் இருந்து சம்மந்தர் வழங்கத் தவறினார். அதனால் அவர் இனப்பிரச்சினையை உள்நாட்டுக்குள் சுருக்க விரும்பிய சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்குத் துணைபோனார் என்பதுதான் சரி. அதாவது சர்வதேச அளவில் சம்பந்தர் தமிழ் மக்களின் அரசியலை குறிப்பிடத்தக்க அளவுக்கு தோற்கடித்து விட்டார்.  இனப்பிரச்சனை எனப்படுவது சாராம்சத்தில் ஒரு அனைத்துலகப் பிரச்சினைதான். அதற்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. உள்நாட்டுத் தீர்வு கிடையாது. எனவே இனப்பிரச்சினையை அதன் சர்வதேச, பிராந்தியப் பரிமாணங்களில் இருந்து வெட்டி எடுப்பது என்பது தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்குச் சமம். சம்பந்தர் அதைத்தான் செய்தார்.

உள்நாட்டில் அவர் என்ன செய்தார்? யாழ்ப்பாணத்தில் அவருடைய இறுதி நிகழ்வு அதற்குச் சான்று. நூற்றுக்கணக்கானவர்கள்தான் அதில் பங்குபற்றினார்கள். அவருடைய கட்சி அவரை ஒரு முதுபெரும் தலைவர் என்று அழைக்கின்றது. ஆனால் ஒரு முதுபெரும் தலைவரின் பூதவுடல் எடுத்துவரப்பட்ட வழிநெடுக மக்கள் காத்திருந்து மலர் தூவவில்லை. அதுமட்டுமில்லை, அவருடைய கட்சித் தொண்டர்கள்கூட ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தவில்லை. அதைவிட முக்கியமாக, சம்பந்தரின் பூத உடல் அடுத்த நாள் விமானத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு இடைப்பட்ட இரவில் தந்தை செல்வா கலையரங்கில் ஓர் அறையில் விடாது சுற்றும் விசிறிகளின் கீழே அனாதையாக வைக்கப்பட்டிருந்தது என்ற செய்தி. அது மிகத் தோல்விகரமானது. சில கட்சி உறுப்பினர்கள் அந்த அறைக்கு வெளியே நின்று இருக்கலாம். ஆனால் ஒரு முதுபெரும் தலைவரின் உடல் ஒர் இரவு முழுவதும் அனாதையாக விடப்பட்டிருந்தமை என்பது சம்பந்தரின் அரசியல் தோல்வியை காட்டுகின்றது.

பொதுவாக ஊரில் ஒரு கிராமவாசி இறந்தால், இரவில் அந்த உடலைத் தனியே விட மாட்டார்கள். அந்த உடலுக்கு அருகே யாராவது உறங்குவார்கள். ஒரு குத்துவிளக்கு அல்லது மெழுகுதிரி கால்மாட்டில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். யாராவது தேவாரம் பாடுவார்கள் அல்லது ஜெபம் பண்ணுவார்கள். இடைக்கிடை பெண்கள் ஒப்பாரி வைப்பார்கள். ஆனால் சம்பந்தருக்கு தந்தை செல்வா கலையரங்கில் இவை எவையும் இருக்கவில்லை. சம்பந்தரின் தோல்வியை மதிப்பிட அது ஒன்றே போதும்.

R.jpg

நவீன தமிழ் அரசியலில் ஆகக்கூடிய ஆசனங்களைப் பெற்ற ஒரு கூட்டணி அவருடைய கையில் கொடுக்கப்பட்டிருந்தது. 22 ஆசனங்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த ஆசனங்களின் தொகை குறைந்து இப்பொழுது மொத்தம் 13 ஆசனங்கள். அவைகூட சம்பந்தரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை. முதலில் ஆயுத மோதல்கள் முடிந்த கையோடு சம்பந்தர்  கூட்டமைப்பைப் புலி நீக்கம் செய்தார். அதன்பின் படிப்படியாக சர்வதேச நீக்கம், பிராந்திய நீக்கம் செய்தார். கஜேந்திரகுமார் அணி வெளியேறத்தக்க சூழ்நிலைகளை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக ஆயுதப் போராட்ட மரபில் வந்த பங்காளிக் கட்சிகள் விலகிப் போகக்கூடிய நிலைமைகளை அவருடைய பட்டத்து இளவரசர் ஏற்படுத்தினார். முடிவில் தமிழரசுக் கட்சி மட்டும் மிஞ்சியது. இப்பொழுது அதுவும் இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கின்றது. அதுமட்டுமல்ல, அவருடைய காலத்தில் கிழக்கில் வடக்கை எதிர்த்துக்கொண்டு தெற்குடன் கைகோர்க்கும் ஒரு கட்சி மேலெழுந்து விட்டது. மேலும் கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின்போது யாருக்கு செயலாளர் பதவி கொடுப்பது என்ற விவாதங்களில் திருகோண மலையா? மட்டக்களப்பா? எது உண்மையாகக் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவது? என்ற ஒரு விவாதமும் எழுந்தது. அதாவது சம்பந்தரின் காலத்தில் கிழக்கில் உப பிரதேசவாதம் ஒன்றும் உற்பத்தி செய்யப்பட்டது. ஆயின், சம்பந்தர் தமிழரசியலை எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்?

இந்த தோல்வி எங்கிருந்து வந்தது? சம்பந்தரின் அரசியல் வழியின் விளைவு அது. சிங்கள மக்களைப் பயமுறுத்தககூடாது என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனால் தமிழ் மக்களின் பயங்களை ; கூட்டுக் காயங்களை; கூட்டுத் துக்கத்தை கூட்டு மனவடுக்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆயுத மோதலுக்கு பின்னரான ஒரு சமூகத்தில் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டுத் துக்கத்துக்கும் கூட்டச் சிகிச்சையாக அமையவில்லை ஒரு அரசியலை; பண்புரு மாற்ற அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டிய ஒரு தலைவர் அவர். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. செய்யத் தேவையான அரசியல் உள்ளடக்கம் அவரிடம் இருக்கவில்லை.

2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் ஒரு விளைவுதான். அது மூல காரணம் அல்ல. மூல காரணம் இன ஒடுக்கு முறைதான். அதாவது இலங்கைத்தீவின் இனப்பல்வகைமையை ஏற்றுக்கொள்ளாமை. யுத்த வெற்றிகளின் மூலம் மூலகாரணம் மேலும் வீங்கித் தடித்தது. அது யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. மாற்றவும் முடியாது. ஏனென்றால் அது ஓர் இனப்படுகொலை.

போரில் வெற்றி பெற்ற ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை அடிப்படையாக வைத்து ஒரு கட்சியைக் கட்டி எழுப்பினார்கள். அதன்மூலம் யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கினார்கள். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது நாட்டைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலே பேணுவதுதான். வென்றவர்களும் தோற்றவர்களுமாக நாடு தொடர்ந்து பிளவுண்டிருக்கும். இவ்வாறு யுத்த வெற்றிவாதிகள் நாட்டைப் பிளவுண்ட நிலையில் பேணும்பொழுது தோற்கடிக்கப்பட்ட தரப்பின் தலைவராகிய சம்மந்தரோ “பிளவுபடாத இலங்கைக்குள்; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று மந்திரம்போல சொல்லிக் கொண்டு, சிங்கள மக்களின் பயங்களைப் போக்குகிறோம் என்று புறப்பட்டு, இறுதியிலும் இறுதியாக யுத்த வெற்றிவாதிகளால் தோற்கடிக்கப்பட்டார்.

யுத்தவெற்றி வாதம் எனப்படுவது, சிங்கள பௌத்த இனவாதத்தின் 2009க்கு பின்னரான “அப்டேட்டட் வேர்சன்” தான். யுத்தவெற்றி வாதமானது தொடர்ந்து ஒடுக்கு முறைகளையும் ஆக்கிரமிப்பையும் முன்னெடுத்துக் கொண்டிருக்க, அதாவது நாட்டைப் பிளவுண்ட நிலையிலே தொடர்ந்தும் பேண, சம்பந்தாரோ நேசக்கரம் நீட்டிக் கொண்டிருந்தார். முடிவில் யுத்த வெற்றி வாதம் சம்பந்தரின் வழியைத் தோற்கடித்தது. அவருடைய விசுவாசத்துக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் மாளிகையை இறக்கும்வரை அவருக்கு வழங்கியது.

இப்படித்தான் சம்பந்தர் தோற்கடிக்கப்பட்டார். தென்னிலங்கையோடு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காக அவர் வகுத்த வழியின் விளைவாக கூட்டமைப்பு உடைந்தது. முடிவில் அவருடைய தாய்க்கட்சியும் உடைந்து விட்டது.சம்பந்தர் தோற்றுப் போனார். தோல்வியுற்ற ஒரு தலைவராகத்தான் அவர் இறந்து போயிருக்கிறார். அவருடைய உடல் யாழ்ப்பாணத்தில் தனித்து விடப்பட்டிருந்த அந்த இரவிலிருந்து எதிர்காலத் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். சம்பந்தர் தமிழ் மக்களைச் சிதறடித்து விட்டார். தமிழ் மக்களின் அடிப்படைப் பலங்களைப் பொருத்தமான விதங்களில் கையாளத் தவறி, தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறார். முடிவில் தானும் தனிமைப்பட்டுப் போனார். எனவே சம்மந்தருக்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது, சம்பந்தர் சிதறடித்தவற்றை சேர்த்துக் கட்டுவதுதான். சம்பந்தர் தமிழ் மக்களின் எந்தெந்த பலங்களைச் சிதறடித்தாரோ, அவற்றை எல்லாம் மீண்டும் ஒன்றிணைப்பதுதான். எந்தெந்த கட்சிகளை சிதறடித்தாரோ, அவற்றை எல்லாம் ஒன்றாக்குவதுதான். சம்பந்தருக்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது ஒன்று திரட்டும் அரசியலாக இருந்தால்தான் அது அதன் கடந்த 15 ஆண்டு கால தோல்வியின் தடத்திலிருந்து வெளியே வரலாம்.

இங்கேதான் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு  கால முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தால், அதில் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசனமான தெரிவுதான் உண்டு. ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது. ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் தமிழ் மக்களை ஒன்றாக்குவது. சம்பந்தரின் வழியிலிருந்து விலகி வருவதென்றால் அதைவிட வேறு வழி இல்லை. சிதறடிக்கப்பட்டவற்றை ஒன்று சேர்ப்பது.

https://www.nillanthan.com/6820/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தனின் இறுதிப் பயணத்தின் போது மரியாதை இல்லாதது அவரது கொள்கைகளை தமிழர் நிராகரிப்பதையே காட்டுகிறது.

விடப்படாது சிறித்தம்பியர் விடப்படாது.... சம்பந்தனை செத்துப்போனார் எண்டு உப்புடியே சும்மா விடப்படாது. ஆட்டுத்திவசம் மட்டுமாவது வைச்சு வைச்சி செய்யணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, குமாரசாமி said:

விடப்படாது சிறித்தம்பியர் விடப்படாது.... சம்பந்தனை செத்துப்போனார் எண்டு உப்புடியே சும்மா விடப்படாது. ஆட்டுத்திவசம் மட்டுமாவது வைச்சு வைச்சி செய்யணும்.

குமாரசாமி அண்ணை... சம்பந்தர் செய்த வேலைக்கு அந்திரட்டி மட்டும் வைச்சு செய்ய வேணும் என்றுதான் யோசித்து இருந்தனான். ஆனால் சம்பந்தரின் தோல்வியைப் பற்றி சமூக ஊடகங்களில் அரசியல் ஆய்வாளர்கள்... நார், நாராக கிழித்து எழுதும் போது... இந்த மனிதன் தனது சுயநலத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலை எல்லாம் செய்திருக்கு என்று வாசிக்க கடுமையான கோவம் ஏற்படுகின்றது.

ஆட்டுத்திவசம் மட்டுமல்ல.... அதுக்குப் பிறகும் சம்பந்தனை கிழித்து தொங்க விட்டால்தான் இருக்கின்ற மிகுதி அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக அமையும்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... சம்பந்தர் செய்த வேலைக்கு அந்திரட்டி மட்டும் வைச்சு செய்ய வேணும் என்றுதான் யோசித்து இருந்தான். ஆனால் சம்பந்தரின் தோல்வியைப் பற்றி சமூக ஊடகங்களில் அரசியல் ஆய்வாளர்கள்... நார், நாராக கிழித்து எழுதும் போது... இந்த மனிதன் தனது சுயநலத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலை எல்லாம் செய்திருக்கு என்று வாசிக்க கடுமையான கோவம் ஏற்படுகின்றது.

ஆட்டுத்திவசம் மட்டுமல்ல.... அதுக்குப் பிறகும் சம்பந்தனை கிழித்து தொங்க விட்டால்தான் இருக்கின்ற மிகுதி அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக அமையும்.

அப்பிடியே சம்பந்தன் பேப்பர் படிச்ச வீடியோ இருந்தால் போட்டு விடுங்கோ.....அவசரத்துக்கு தேடினன் காணேல்லை. 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

அப்பிடியே சம்பந்தன் பேப்பர் படிச்ச வீடியோ இருந்தால் போட்டு விடுங்கோ.....அவசரத்துக்கு தேடினன் காணேல்லை. 😎

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில்...   
சிறைக் கைதிகள் விடுதலை சம்பந்தமாக அவரை, கைதிகள் சார்பில் 
இருவர்  சந்திக்க சென்ற  போது... அவர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல், 
பத்திரிகை படிக்கும் சாட்டில், தனது முகத்தை மறைத்துக் கொண்டு இருந்து 
வந்தவர்களை அவமானப் படுத்தி அனுப்பிய காணொளியை குறிப்பிடுகின்றீர்கள்  
என நினைக்கின்றேன்.  

நானும் அந்தக் காணொளியை தேடினேன் கண்டு பிடிக்க முடியவில்லை.
யாழ் களத்திலும் அந்தக் காணொளி இணைக்கப் பட்டிருந்தது. 
எங்கு உள்ளது என்று தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று இந்த மறைந்த அரசியல்வாதிக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று மக்களை ஒருங்கிணைக்கதவறியமை.

2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வின்  மூலம் தமிழ் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்கிய பின் இங்கு சிட்னியில் இலங்கை தொலைக்காட்சி படப்பிடிப்பினை மேற்கொண்டது (ஒவ்வொரு வளர்ந்த  நாடுக்ளிலும் இவ்வாறு படப்பிடிப்பினை மேற்கொண்டதாக கூறப்பட்டது).

அந்த படப்பிடிப்பின் நோக்கம் இலங்கை உள்நாட்டு போரினை முடிவிற்கு கொண்டு வந்துவிட்டது அடுத்தது இவ்வாறு வளர்ச்சி அடைவதுதான் என்பதாக அவர்களது கருத்தாக இருந்தது.

சிறுபான்மை தமிழர்களின் உரிமையினை இரும்புக்கரம் கொண்டு அடக்கி 15 வருடங்களின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலமையிலிருந்து வெளிவருவது பற்றி கதைப்பதிலேயே காலம் போகிறது.

மக்களை பிளவுபடுத்துவதால் அரசியல் இலாபம் பெறலாம் ஆனால் அதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் தீமைதான் ஏற்படும்.

சிறுபான்மை சமூகமாகிய நாம் பல பிரிவுகளாக பிரிந்திருப்பதால் மேலும் பலவீனமாகிறோம், ஆனால் அதற்கு எமக்குள் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யாமல் குற்றம் சாட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார் அதற்கு பலிக்கடா இந்த அரசியல்வாதி.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vasee said:

விரும்பு அடையாளம் முடிவடைந்து விட்டது. சிறந்த கருத்து.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

விரும்பு அடையாளம் முடிவடைந்து விட்டது. சிறந்த கருத்து.

எனது விருப்பமும் வெறுப்புகளை விட்டு ஒற்றுமையினை உருவாக்குதல்தான், அதற்கு உங்கள் விருப்பு இருப்பது மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, vasee said:

குற்றம் சாட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார் அதற்கு பலிக்கடா இந்த அரசியல்வாதி.

உங்களுடைய கருத்து தமிழர்களின் தலைமை பொறுப்பை அவர் சரியாக செய்து முடித்தார். அவர் மீது குற்றம் சொல்ல எதுவும் இல்லை என்பதாக இருக்கிறது 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

உங்களுடைய கருத்து தமிழர்களின் தலைமை பொறுப்பை அவர் சரியாக செய்து முடித்தார். அவர் மீது குற்றம் சொல்ல எதுவும் இல்லை என்பதாக இருக்கிறது 

இல்லை!

நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தினை நான் பதியமாட்டேன் 😁.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏறக்குறைய 95% க்கு மேற்பட்ட  தமிழ்மக்கள் சம்பந்தரையும் அவர்போன்ற  ஜனநாயககட்சிகள் என்று தம்மை தாமே சொல்லிக்கொள்ளும் தலைவர்களையும் தமது தலைமகள் என்றோ, இவர்களால் எதுவும் முடியும் என்றோ நம்பிக்கை துளியும் இல்லாமல்தான் எம் ஆயுத போராட்டத்தையும் அதனை தலைமை தாங்கி நடத்திய தலைவரையும் ஆதரித்தோம் பூசித்தோம்,

ஆயுதபோராட்டம் முடிவுக்கு வந்ததும் எப்படி மீண்டும் அந்த சம்பந்தர் வகையறா அரசியல் தலைவர்கள்  எமக்கு ஏதும் செய்யவில்லை என்று ஆதங்கபடுகிறோம் கோபபடுகிறோம்?

இயக்கத்தை நேசித்த மனசுக்குள் இவர்களுக்கும் ஒரு ஓரமாய் இடம் கொடுத்திருந்தோமா?

அவர்கள் இனத்துக்கு விசுவாசமில்லையென்று வாதிட்டால் இவர்கள் எதாவது செய்திருந்திருக்கலாம் என்று நம்பி மாரடிக்கும்  நாம் யாருக்கு விசுவாசமாயிருந்திருக்கிறோம்?

தன்னிலை அறிந்து வெக்கப்படவேண்டியது சம்பந்தர் கோஷ்டியா நாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

இல்லை!

நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தினை நான் பதியமாட்டேன் 😁.

இல்லை 

நீங்கள் விட்ட தவறை உணர்ந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அது என் தவறல்ல. எனவே எதிர்பார்ப்பு என்னிடமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

இல்லை 

நீங்கள் விட்ட தவறை உணர்ந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அது என் தவறல்ல. எனவே எதிர்பார்ப்பு என்னிடமில்லை. 

மன்னிக்கவும் நீங்கள் உண்மையாகவே விளங்காமல்தான் வினவுகிறீர்கள் என்ற புரிதலில்ல்லாமல் பதிலளித்தமைக்கு, நான் உட்படவே தவறு செய்தவர்கள் என கூறுகிறேன், மற்றது அந்த அரசியல்வாதியினை பற்றி அனைவருக்கும் தெரிந்த விடயத்தினை இனி கதைப்பதால் எந்த மாற்றமும் இல்லை, மாற்றம் எங்களிலிருந்து வருவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“தோல்வியுற்ற தலைவர்” எனஇரா.சம்பந்தனை நிந்திப்பது நியாயமா?
 
-– நியூசிலாந்து சிற்சபேசன் —

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா சம்பந்தன் அவர்களுடைய மறைவு சொல்லிக்கொள்ளக்கூடிய அதிர்வுகளைத் தமிழ் பொதுவெளியில் ஏற்படுத்தவில்லை. அன்னாருடைய பூதவுடல் அக்கினியில் சங்கமாக முன்னரே, அவருடைய மறைவு குறித்த பிரக்ஞை காணாமல்போய்விட்டது. 

ஏன் இந்த நிலை? என்ற கேள்வியை எளிதில் கடந்துபோகமுடியவில்லை.

தன்னந்தனியனாகவும் தன்னிச்சைப்படியுமே இரா சம்பந்தன் இயங்கிவராகும். அதனால், ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியலை முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்தியவர்.

சமூகத்தின் கூட்டுவலிகளில் கரிசனை கொண்டவரல்ல. மரபுகளிலே நம்பிக்கை கொண்டிருந்தவருமல்ல. வரம்புமீறல்களிலே உச்சம்தொட்டவர். 

சிங்கக்கொடியைத் தூக்குவது, சுதந்திரதினக்கொண்டாட்டம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும், வலிசுமந்த மரபுகளை அனாயாசமாக உதறித்தள்ளியவர். திருமலை நடராஜா உள்ளிட்ட எண்ணிலடங்காதோரின் உயிர்த்தியாகத்தை அர்த்தமற்றதாக்கியவர். 

இத்தகையதொரு 91 வயதுப் பெரியவரின் அரசியலை, நாலுவரிகளில், நறுக்கென்று சொல்லிவிடலாம்.

சிங்கள ஆளும் வர்க்கத்திடம் தோற்றார். 

தமிழ் மக்களிடம் தோற்றார்.

சொந்தக் கட்சியிடம் தோற்றார்.

ஈற்றில், தானும் தோற்றார்.

இவ்வாறு சொல்வதனாலே, பெரியவர் சம்பந்தனைக் குற்றவாளி ஆக்குவதாகப் பொருள் கொள்ள வேண்டியதில்லை.

மக்களாட்சி முறையில், மக்களுடைய பிரதிநிதிகளை மக்களே தெரிவு செய்கின்றனர். மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்த ஒருவரே, அந்த மக்களுடைய தலைவராகப் பரிணமிக்கின்றார். 

1960களில் திருகோணமலையில் பெயர் சொல்லக்கூடிய சட்டத்தரணியாக வலம்வந்தவர். குடும்பப்பின்னணி, செழிப்பான வருமானம் என்பவை அன்னாரை மேட்டுக்குடிமகனாக்கிச் சீராட்டின. மேட்டுக்குடிச்சமூகத்திலே, பெரும்பான்மைச் சமூக அரச, பொலிஸ், இராணுவ அதிகாரிகளுடன் தோழமையில் திளைத்து,ரம்மியமான மாலைப்பொழுதுகளில் இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.

அவ்வாறாக, வாழ்வின் உன்னதங்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தவரை, வலிந்து அரசியலுக்கு அழைத்து வந்தவர்களிலே பெரியவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் முக்கியமானவராகச் சொல்லப்படுகின்றது.   

தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்ட அழுத்தங்களினாலேயே, பெரியவர் சம்பந்தன் அரசியலில் கால்பதித்தவராகும். சுயவிருப்பில் அரசியலுக்கு வந்தவரல்லர்.  

1977 பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலையில் வெற்றி பெற்றார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்தே, தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றது. தனிநாட்டுக் கோரிக்கையில் பெரியவர் சம்பந்தன் நம்பிக்கை கொண்டவரல்ல. இருந்தாலும்கூட, கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு அடக்கி வாசித்தார். தன்னுடைய நம்பிக்கைகளைப் பவுத்திரப்படுத்திக்கொண்டார். “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்” காத்திருந்தார். வாய்ப்புக்கிடைத்தபோது, “பிளவுபடாத இலங்கைக்குள், பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்பதை மந்திரமாகவே உச்சரித்தார்.

பெரியவர் சம்பந்தனுடைய உலகம் மிகவும் சிறியது. அவருடைய உச்சந்தலையிலிருந்து தொடங்குகின்ற உலகம், உள்ளங்காலுடன் முடிந்துவிடுகின்றது. அதனைச் சுயநலம் என்று வெளிப்படையாகவும் சொல்லலாம். ஒரு மனிதர், தன்னுடைய நலனில் மட்டுமே கவனம்கொண்டிருப்பது தவறில்லையே. 

ஆனால், அத்தகையதொரு சுயநல இயல்பைத் தூக்கலாகக் கொண்ட ஒருவர், அர்ப்பணிப்பு மிக்க மக்கள் சேவைக்கு உரியவரா என்பதே இங்கு எழவேண்டிய கேள்வியாகும். அவரை வலிந்து அரசியலுக்கு கொண்டுவந்த “உயர்ந்த” தலைவர்கள் என்போர், அவரது இயல்பைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே வரலாற்றுத் தவறின் ஆரம்பமாகிவிட்டது.

1989 மற்றும் 1994 பாராளுமன்றத் தேர்தலிலே திருகோணமலையில் தோல்வியடைந்தார். 

1997ல் அ. தங்கதுரை  கொல்லப்பட்டபோது பாராளுமன்ற அங்கத்துவம் வசப்பட்டது.

2000ம் ஆண்டு தேர்தலிலே மீண்டும் தோல்வியடைந்தார். 

அதன் பின்னர், 2001லிருந்து பாராளுமன்றத் தேர்தல்களிலே வெற்றி பெற்றார்.

ஆக, 1977 வட்டுக்கோட்டை தீர்மானம் ஏற்படுத்திய அலையிலும், அதன் பின்னர் தமிழ் தேசிய அலையிலும் பாராளுமன்றம் சென்றவராகும். 

அந்தவகையிலே, தனித்துவமான மக்கள் ஆதரவினால் பெரியவர் சம்பந்தன் தேர்தல்களிலே வெற்றிபெற்றவருமல்ல. மக்களின் நாடித்துடிப்பை அறிந்த தலைவருமல்ல. 

மக்களிடமிருந்து எவ்வளவுதூரம் விலகி இருந்தார் என்பதற்கான சான்றுகளை தேடி அலைய வேண்டியதில்லை. 

அரசியல்கைதிகள் விடயத்திலே திறப்பு தன்னிடமில்லை என்று சொன்ன தொனியும், இராணுவ நடவடிக்கைகளினால் வலிந்து இடம்பெயர்ந்த தையிட்டி மக்களிடம் “என்ன காரணத்துக்காக உங்கள் வீடுகளைவிட்டு வந்தீர்கள்” என்ற கேள்வியும் “ஒருபானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்”   போன்றவையாகும். 

யாழ்ப்பாணத்திலே அன்னாருக்கு அஞ்சலிசெலுத்த வந்திருந்த பெண்கள் குழுவொன்று, பூதவுடலுக்கு அருகே நின்று “குரூப்போட்டோ” எடுத்துக்கொண்டதாக, ஓய்வுநிலை மூத்த அரச அதிகாரியொருவர் வேதனையோடு அங்கலாய்த்துக்கொண்டார்.     

மேற்படி சம்பவத்தைக் கேள்வியுற்றபோது, வாழும்போது நெருங்க முடியாதவரை, இறந்த பின்னரேனும் மக்கள் நெருங்க எத்தனித்தனரோ என்னும் குரூரமான எண்ணம் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.

அரசியலுக்கு வந்தபின்னர் சமயோசிதமாகக் காய்களை நகர்த்தினார். தன்னுடைய இருப்பை மட்டுமே பேணிக்கொண்டார். 

அதிலே, மக்கள் நலன் இருக்கவில்லை என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், மக்களுடைய நாடித்துடிப்பில் அக்கறை கொண்டவராக தன்னை என்றுமே அடையாளப்படுத்தியவரல்ல.

ஆக, தலைவர் என தமிழ் சமூகம் கொண்டாடியதற்கு, பெரியவர் சம்பந்தன் எவ்வாறு பொறுப்பாளியாகலாம்?

தமிழ் தேசிய அரசியலின் தலைமைக்கு பெரியவர் சம்பந்தனைக் கொண்டுவந்து சேர்த்ததில், விடுதலைவேண்டிய அமைப்புக்களின் பங்கு முக்கியமாகச் சொல்லப்படுகின்றது. 

ஆக, தானுண்டு – தன்னுடைய குடும்பம், தொழில் என தேமேயென  இருந்தவரை, முதலில் பாராளுமன்ற அரசியலுக்கு வலிந்து கொண்டுவந்து சேர்த்தார்கள். “பெருந்தலைவர்” ரேஞ்சுக்கு “படம்” காட்ட “அத்திவாரக்கிடங்கு” வெட்டிவிட்டார்கள். 2001க்குப் பின்னர் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து வெற்றிபெறச்செய்தார்கள். இவற்றையெல்லாம் செய்தவர்களை விட்டுவிட்டு, “தோல்வியுற்ற தலைவர்” என பெரியவர் சம்பந்தனை நிந்திப்பது எந்தவகையிலே நியாயமாகும்.

https://arangamnews.com/?p=11017

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, கிருபன் said:

இதுவரை சம்பந்தரே சொல்லாத விடயங்களை சொல்லி மக்களை முட்டாளாக்கிறார்கள். என்ன பொம்மையா தூக்கி எடுத்து வைக்க?? 

கொண்டு வந்தார்கள் தூக்கி வைத்தார்கள் என்பதல்ல இங்கே விமர்சனம். அதை எந்த அளவுக்கு தன் சுய நலத்துக்காக மட்டும் அவர் பாவித்தார் என்பதும்  ஏன் வாழ்நாள் முழுவதும் அதில் ஒட்டிக்கொண்டு சுகபோகங்களை மட்டுமே அனுபவித்தார் என்பதும் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, கிருபன் said:

24 minutes ago, விசுகு said:

இதுவரை சம்பந்தரே சொல்லாத விடயங்களை சொல்லி மக்களை முட்டாளாக்கிறார்கள். என்ன பொம்மையா தூக்கி எடுத்து வைக்க?? 

கொண்டு வந்தார்கள் தூக்கி வைத்தார்கள் என்பதல்ல இங்கே விமர்சனம். அதை எந்த அளவுக்கு தன் சுய நலத்துக்காக மட்டும் அவர் பாவித்தார் என்பதும்  ஏன் வாழ்நாள் முழுவதும் அதில் ஒட்டிக்கொண்டு சுகபோகங்களை மட்டுமே அனுபவித்தார் என்பதும் தான். 

விசுகர்... மேலே கிருபன் ஜீ இணைத்த கட்டுரையை  "வஞ்சகப் புகழ்ச்சி"  என்று தமிழில் சொல்வார்கள். கட்டுரையாளர்... "சம்பந்தனை நிந்திப்பது நியாயமா" கேள்வியை கேட்டு,  அவரே... சம்பந்தனை கழுவி ஊத்தியுள்ளார்.  🤣
 "நோகாமல் நொங்கு தின்னுற மாதிரி"  சம்பந்தரை கிழித்து தொங்க விட்ட கட்டுரைதான் அது. 😂
ஆன படியால்... நீங்கள் "ரென்சன்"   ஆகாமல்,  கொடுப்புக்குள் சிரியுங்கள். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தன் எந்த ஒரு முள்ளிவாய்க்கால் நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை. சொந்த இனப்படுகொலையை.. பயங்கரவாத அழிப்பாக நியாயப்படுத்தி இனப்படுகொலையாளர்களைக் காப்பாற்றிய ஒரு கயவர்.

தெந்தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றக் கிடைத்த சேவையையும் இஸ்லாமிய தமிழர்களுக்கு தாரை வார்த்தது தான் செய்த துரோகம். அவர்கள் தங்களை இஸ்லாமிய தமிழர்களாக இப்போ கருதுவதில்லை. அரபு முஸ்லிம்களாகவே கருதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு நாட்டுக்கு வெளியில் இருந்து கடும்போக்கு இஸ்லாமியர்களிடம் இருந்தும் இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் உதவி வருகிறது. 

மேலும் சிங்கக் கொடியை எரித்த பூமியில் இருந்து தெரிவான சம்பந்தன்.. சிங்கக் கொடியை  தூக்கிப் பிடிச்சு.. சொந்த மக்களின் பூமியையும் அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளாகி செய்தது தான் தீபாவளி அரசியல். 

இப்படியாப்பட்ட தோற்றுப் போன ஒரு அரசியல்வாதியான சம்பந்தனுக்கு மக்களின் ஆழ் மனதில் அடைந்து கிடக்கும் அரசியல் ஆசைகளை புரிந்து கொள்ளவோ.. அதனை தாமும்... தாங்கி நின்று முன்னெடுத்துச் செல்லும் சாணக்கியமோ கிடையாது. அவரின் தற்போதைய வாரிசுகளுக்கும் அது கிடையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்­பந்தனின் மித­வாத அர­சி­யல் கொள்­கை பின்­பற்றப்­பட வேண்­டும்

1-750x430.jpg

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரும் முது­பெரும் தமிழ் அரசி­யல்­வா­தி­யு­மான இரா­ஜ­வ­ரோ­தயம் சம்­பந்­தனின் மறைவு இலங்­கையின் தேசி­ய அர­சி­ய­லில் பாரிய வெற்­றி­டத்தைத் தோற்­று­வித்­துள்­ளது என்­பதை அவ­ருக்கு பல்­வேறு தரப்­பு­க­ளி­லி­ருந்தும் முன்­வைக்­கப்­படும் அனு­தா­பங்கள் மற்றும் அஞ்­ச­லி­க­ள் உணர்த்தி நிற்­கின்­ற­ன.

தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகளை வென்­று கொடு­ப்­­ப­தையே தனது ஒரே இலக்­காகக் கொண்டு அர­சியல் செய்த அவரை எந்­த­வொரு சக்­தி­யாலும் விலை­பேச முடி­ய­வில்லை. இறுதி வரை மிக எளி­மை­யான வாழ்க்­கையையே வாழ்ந்து வந்த அவர் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வை மரணிப்­ப­தற்கு முன்­னரே பெற்றுக் கொடுப்பேன் என்ற உறு­தி­யோ­டுதான் அர­சியல் பணியை முன்­னெ­டுத்து வந்தார். எனினும் அவ­ரது முது­மை அதற்கு இடம்­­­­கொ­டுக்­கவில்லை. அதே­­போன்று தென்­னி­லங்­கையின் அர­சியல் மாற்­றங்­களும் சமீ­பத்­திய நிகழ்­வு­களும் அரசியல் தீர்வு பற்­றிய பேச்­சுக்­களை பின்­தள்­ளி­யி­ருந்­த­­ன. கோத்­த­பாய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்பட்ட பின்னர் அர­சியல் தீர்வு பற்­றிய பேச்­சுக்கே இட­மில்லை என்ற நிலையே தோற்றம் பெற்­றது. அவர் பதவி வில­கிய பின்னர் ரணில் விக்­ர­ம­சிங்­க ஜனாதி­பதி­யானார். அவ­ரும் தைப்­பொங்­க­லுக்கு முன் தீர்­வு, சித்­­திரைப் புத்­தாண்­டுக்கு முன் தீர்வு என அறிக்­கை­களை விட்­டாரே தவிர உருப்­ப­டி­யான எந்த முயற்­சி­க­ளை­யும் முன்­­னெ­டுக்­க­வில்லை. தற்­போது சம்பந்தன் உயி­ருடன் இருக்கும் காலத்தில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடி­யாமல் போன­மை கவ­லைக்­கு­ரி­யது என ஜனா­தி­ப­தி தெரி­வித்­தி­ருப்­பது வேடிக்­கை­யா­ன­தாகும். அந்த வகையில் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு என்பது இனி எட்­டாக்­க­னியே என்­ப­தையே சம்பந்­தனின் மறைவு எடுத்­துக் கூறு­வ­தா­க­வுள்­ள­து.

தமிழ் முஸ்லிம் உறவைப் பொறுத்­த­வரை சம்­பந்தன் மிகவும் நிதான­மா­ன­தொரு பாத்­தி­ரத்தை வகித்தார் என்­பதை அனை­வரும் ஏற்றுக் கொள்­வர். விடு­தலைப் புலி­களால் முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யாயம் இழைக்­கப்­பட்­டது என்பதை அவர் ஏற்றுக் கொண்­டி­ருந்தார். முஸ்லிம் மக்­க­ளும் ஏற்றுக் கொள்­ளத்­தக்க அர­சியல் தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் அவர் உறு­தி­யா­­க­­வி­ருந்தார். வடக்கும் கிழக்­கும் இணைக்கப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டிந்த அவர் முஸ்லிம் மக்­களின் ஒத்­து­ழைப்­பின்றி அதனை சாத்­தி­ய­மாக்க முடி­யாது என்ற யதார்த்­தத்­தையும் பகி­ரங்­க­மா­கவே ஒப்புக் கொண்­­டி­ருந்தார்.

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒரு­வரை நிய­மிப்­பதற்கு அவர் முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யி­ருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல் நடந்­த­போது இத் தாக்­கு­த­லுக்­கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் எந்­த­வித சம்­பந்­த­மு­மில்லை என அவர் அடித்துக் கூறி­னார்.

இலங்­கையில் பெரும்­பான்­மை சமூ­கத்­தி­ட­மி­ருந்து பாது­காப்பைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மானால் தமி­­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒன்­று­பட்டுச் செயற்­பட வேண்டும் என்­பதை அவர் எப்போதும் வலி­யு­றுத்தி வந்தார். இதற்­காக அவர் பல தட­வை­கள் முஸ்லிம் தலை­வர்­க­ளுடன் பேச்­சுக்­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தார்.

இவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்­திற்கும் தமிழ் சமூ­கத்­திற்­கு­மி­டையில் உறவுப் பால­மாக விளங்­கிய அன்­னாரின் மறைவு இரு சமூ­கத்­திற்கும் பேரி­ழப்பு என்­பதில் மாற்றுக் கருத்­தி­ருக்க முடி­யா­து.

சம்பந்தன் ஐயாவின் வெற்­றிடம் எந்­த­வ­கை­யிலும் நிரப்­பப்­பட முடி­யா­தது. ஆனால் அவ­ரது சிந்­த­னைகள், அவ­ரது எதிர்­பார்ப்­புகள், அபி­லா­ஷைகள் அவ­ருக்குப் பின் வரும் தமிழ் தலை­மை­களால் முன்­கொண்டு செல்­லப்­பட வேண்டும். அவர் காட்­டிய மித­வாத அர­சி­யல்­பாதை கடைப்­பி­டிக்­கப்­பட வேண்டும். நாட்டைப் பிளவு­ப­டுத்­தாது அனை­வரும் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் சகல உரி­மை­க­ளையும் வளங்­க­ளையும் பெற்று வாழ வேண்டும் என அவர் காட்­டிய அர­சி­யல்­பா­தையில் பய­ணிக்க அனை­வரும் முன்­வர வேண்டும். குறிப்பாக­ அவர் விரும்­பி­யது போன்­றே எதிர்­கா­லத்­திலும் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒன்றுபட்ட அர­சியல் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.
அன்­னாரின் ஆத்­மா சாந்­தி­ய­டைய பிரார்த்­திப்போம்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/17302

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, colomban said:

சோனகனும், சிங்களவனும்…. சம்பந்தனை பாராட்ட விட்டால் தான் அதிசயம். அந்தளவுக்கு தமிழர்களை புறம்தள்ளி  சோனகனுக்கும், சிங்களவனுக்கும் சேவை செய்துள்ளார்.

அதுசரி….  சம்பந்தன் செத்ததுக்கு  நீங்கள் ஏன், காத்தான்குடியில் கறுப்புக் கொடி கட்டவில்லை. 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை!

முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை. அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே தவிர முஸ்லீம் கட்சிகள் அவரை ஹீரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்தார்.

அம்பாறை - கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதலில் இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். எந்த மனிதனும் மரணித்தாலும் இரங்கலை நாங்கள் தெரிவிப்பது சம்பிரதாயம் ஆகும். ஆனால் தற்போது முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதை நாங்கள் தைரியத்துடன் கூற விரும்புகின்றோம். அதனால் தான் எங்கள் கட்சி அவர் தொடர்பிலான எந்தபொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே தவிர தமிழ் முஸ்லீம் உறவிற்கு பங்களிப்பு செலுத்தவில்லை. கல்முனை என்பது எந்த கால பிரச்சினை. சம்பந்தன் தலைவராக இருந்த காலத்தில் இருந்து காணப்படும் பிரச்சினை. நாங்களும் ஊடகங்கள் வாயிலாக பல வருடங்களாக கூறி வருகின்றோம். சம்பந்தன் ஏன் இதில் தலையிடாமல் இருக்கின்றார். அவர் கல்முனையில் உள்ள அரசியல்வாதிகளை அழைத்து கல்முனை பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருக்கலாம்.

ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, கல்முனை உப பிரதேச செயலக விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஹென்றி மகேந்திரன் உட்பட நானும் கலந்து கொண்டிருந்தேன்.

இங்கு சம்பந்தன் கட்சி தலைவர் ஒருவர் வந்திருக்கின்றார். ஏன் இங்கு கலந்துரையாடுவதற்கு முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் (றவூப் ஹக்கீம்) வரவில்லை. அப்போது நான் அங்கு ஒரு பிரச்சினை எழுப்பினேன். இந்த கலந்துரையாடலில் தலைவர்கள் தான் பேச வேண்டும். ஒரு பிரதி தலைவரோ அல்லது உப தலைவரோ கலந்து கொண்டால் சமத்துவமாக அமையாது என்று கூறி வெளிநடப்பு செய்துவிட்டேன்.

அப்போது அந்த நேரத்திலாவது சம்பந்தன் முஸ்லீம் தரப்பின் சார்பாக ஹக்கீமை வரவழைத்திருக்க வேண்டும். அதனூடாக இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்து கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு தீர்வினை பெற்றிருக்க முடியும்.

மிக இலகுவாக தீர்வு காண வேண்டிய பிரச்சினையை ஹக்கீமுடன் இணைந்து சம்பந்தனும் இழுத்தடித்தார் என்பதே கவலைக்குரியதாகும். ஆகவே மறைந்த ஒருவரை நாங்கள் வேண்டும் என குற்றஞ்சாட்டவில்லை. ஆனால் முஸ்லீம் கட்சிகள் அவரை ஹீரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. அத்துடன் தமிழ் முஸ்லீம் உறவிற்கு கூட ஒன்றும் செய்யவில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகின்றோம் என தெரிவித்தார்.

- அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான் -

https://tamil.adaderana.lk/news.php?nid=189776

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, colomban said:

கிழக்கு மாகாணத்தில்... தமிழனுக்கு கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவியை,
சம்பந்தன் முஸ்லீம்களுக்கு தாரை வாரத்துக்  கொடுத்ததன் மூலம், 
கிழக்கு மாகாண தமிழ் மக்கள், அரசியலில் பல பின்னடைவுகளை சந்தித்த போதும்...

முஸ்லீம் சமூகம் சம்பந்தன் மேல் நன்றிக் கடன் இல்லாமல் இருக்குது என்றால்...
சம்பந்தன் தன் வாழ்நாளில்... செய்த  இராஜதந்திரம் அற்ற செயலால்  
எவரிடமும் நன்மதிப்பை சம்பாதிக்காமல், வீணாய் அரசியலில் இருந்து   
ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாமால்... செத்துப் போனதுதான் மிச்சம்.   

சம்பந்தன், தோல்வியுற்ற தலைவர் என்பதை...  
மீண்டும், மீண்டும் பல இடங்களில் நிரூபித்த வண்ணம் உள்ளார். 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.