Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

இந்த உரையில் சம்பந்தர் சொல்லியிருப்பவை நிகழ்ந்த சம்பவங்கள் தானே? இவையெல்லாம் நிகழ்ந்தை மறந்து, மன்னித்து  விட்டார்களாமா? நடந்தவற்றை ஒலி வாங்கியின் முன்னால் சம்பந்தர் பேசியது தான் மன்னிக்க இயலாமல் இருக்கிறதாமா? யார் இந்த தமிழர் போராட்ட வரலாறு தெரியாது அரைவேக்காடு கேசுகள்😂?

ஒரு மைக்கையும், 30 டொலர் கமெராவையும் தூக்கித் திரிபவரெல்லாம் ஊடகவியலாளர் என்று ஏற்றுக் கொண்டால் இப்படியான கீச்சுக்கள் தான் விளைவாகும்! 

கொலை செய்தவர்களை மன்னிக்கலமாம். கொலை செய்ததை சாட்சி சொன்னவனை மன்னிக்க கூடாதாம்.  😂

  • Replies 328
  • Views 28.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

  • நிழலி
    நிழலி

    சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆகாயக் கோட்டை கட்டி மக்கள் காதில் பூச்சுத்தாமல் இயலக் கூடிய தீர்வை மட்டும் பேசியவர். இந்தக் காரணங்களாலேயே உலக அரசுகளின் பிரதிநிதிகளால் இறுதி வரை மரியாதையோடு நடத்தப் பட்டவர்.

அடுத்த பொங்கலுக்குள் தீர்வு அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று சொல்லி தமிழ்மக்களை ஏமாற்றி சாகும் வரை பதவியிலிருந்து அதனால்ல்வரும் சிறப்புச்சலுகைகளை னெபவித்ததை விட சம்பந்தர் தமிழ்மக்களுக்கு பெற்றுக் கொடுத்த நன்மைகளை பட்டியலிட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

இன்றைய போராட்டம் அற்ற சூழ்நிலையில் பிரபாகரன் தேர்தலில் சம்பந்தனுடன். போட்டி இட்டாலும். தமிழ் மக்கள்  சம்பந்தனை தான்  தெரிவு செய்வார்கள்,.......🙏🙏

முரட்டு முட்டு.. 

  • கருத்துக்கள உறவுகள்

தமித்தேசியக் கூட்டமைப்பை குரங்கின் கையில் கொடுத்த பூமாலையாக ஆக்கியதை;தவிர வேறு என்ன செய்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புலவர் said:

தமித்தேசியக் கூட்டமைப்பை குரங்கின் கையில் கொடுத்த பூமாலையாக ஆக்கியதை;தவிர வேறு என்ன செய்தார்.

இதோ

“பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் தமிழர்களாக இருக்கலாம், சிங்களவர்களாக இருக்கலாம், முஸ்லிமாக இருக்கலாம், அவர்கள் அனைவரும் பொதுமக்களே. 

சிவில் தலைவர்கள் மீது தாக்குதல் நடாத்தி எல்.டி.டி.ஈ பயங்கரவாத அமைப்பாக மாற்றம் பெற்றது. மனித உரிமைகள் தொடர்பில் ஒருபோதும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஜனநாயகம் தொடர்பில் ஒருபோதும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. 

தாமே எல்.டி.டி.ஈ’ ஐ அழித்ததாக பலர் கூறுகின்றனர். ஆனால் நான் கூறுகின்றேன்...

எல்.டி.டி.ஈ தம்மை தாமே அழித்துக்கொண்டனர். 

காலஞ்சென்ற லக்ஸ்மன் கதிர்காமர் எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். 

எமது தலைவர்கள் - எமது சகபாடிகள் எல்.டி.டி.ஈ’இனால் கொல்லப்பட்டனர். 

எல்.டி.டி.ஈ’இன் கொல்லப்படுவோர் பட்டியலில் நானும் இருந்தேன். 

இப்போது எல்.டி.டி.ஈ இல்லை. 

எல்.டி.டி.ஈ அழிக்கப்பட்டுள்ளது.” \\ 

• தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், 

• தமிழரசு கட்சியின் தலைவரும்,

• திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய,

கௌரவ இராசவரோதயம் சம்பந்தன் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் 07.12.2012 அன்று இங்ஙனமாக உரையாற்றியிருந்தார்!

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இதில் இருப்பதெல்லாம் பொய் என்கிறீர்களா? நீலன் திருச்செல்வம் கதை மாதிரி "புலிகள் மட்டும் தான் ஆயுதம் வைத்திருந்தார்களா?" என்று கிறீஸ் போத்தலோடு வர மாட்டீர்களென நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

இதில் இருப்பதெல்லாம் பொய் என்கிறீர்களா? நீலன் திருச்செல்வம் கதை மாதிரி "புலிகள் மட்டும் தான் ஆயுதம் வைத்திருந்தார்களா?" என்று கிறீஸ் போத்தலோடு வர மாட்டீர்களென நம்புகிறேன்.

சீ அப்படியெல்லாம் சொல்லமுடியுமா? ஜயா பெரிய ஜனநாயகவாதி நடுநிலையாளர் மற்றும் மனித உரிமைவாதி முக்கியமாக தமிழர்களின் தலைவர். 

இதையே அதே இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள அரசை நோக்கி அவர் ஏன் சொல்லவில்லை. ???

ஏனெனில் இங்கே தான் அவர் தன் சுய தேவைக்ககாக விலைபோனார். 

புலிகள் பற்றி அவர் சொன்னதில் எனக்கு வருத்தம் இல்லை. அதன் பின்னர் அவர் முக்கிய பதவியை தங்க வைத்தபடி மௌனமாகியது மறக்க மன்னிக்க முடியாத குற்றமாகும்.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

பதவியை தங்க வைத்தபடி மௌனமாகியது மறக்க மன்னிக்க முடியாத குற்றமாகும்.

உங்களை பொறுத்தவரை, சம்பந்தர் ஒரு பத்து பேரை போட்டு தள்ளியிருந்தால் அதை மன்னித்திருப்பீர்கள்.😂  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

முரட்டு முட்டு.. 

நான் சொன்ன கருத்துகள் பொய் .....இப்படி ஒருபோதும் நடக்காது என்று வாதிட முடியவில்லையா?? 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, vasee said:

பொதுவாக இறந்தவர்களை எம்மவர்கள் நிந்திப்பதில்லை,

😂

இறந்தவர்களை நிந்திப்பது தமிழ் பாரம்பரியம் இல்லை பதிலுக்கு இல்லாததை எல்லாம் சொல்லி புகழ வேண்டும் என்பார்கள். அதன்படி புலிகள் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஊழல் மோசடியில் தண்டணை பெற்ற குற்றவாளி ஜெயலலிதாவையே  இறந்த போது அஞ்சலி செலுத்தி புகழ்ந்தார்கள்.இப்போது அந்த தமிழ் பாரம்பரியம் என்னானது என்பது தெரியவில்லை.

21 hours ago, vasee said:

எதற்காக அவர் இறுதிவரை இவ்வாறு செயற்பட்டார் என தெரியவில்லை.

உங்கள் கருத்தை படித்துவிட்டு அவர் இறுதிவரை எவ்வாறு தான் செயற்பட்டார் என்று குழம்பினேன் ஜஸ்டின் அண்ணாவின் கருத்தில் இருந்து தெளிவு கிடைத்தது.

"உயிருக்கு அச்சுறுத்தல் இரு தரப்பிலிருந்தும் வந்த போதும், இந்தியாவைத் தாண்டி எங்கும் போகாமல் நாட்டிலேயே இருந்தவர், போட்டியாளர்களை துப்பாக்கியால் போட்டுத் தள்ளி விட்டு தலைமையை/பதவியைப் பிடித்துக் கொண்டிருக்காதவர், தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆகாயக் கோட்டை கட்டி மக்கள் காதில் பூச்சுத்தாமல் இயலக் கூடிய தீர்வை மட்டும் பேசியவர். இந்தக் காரணங்களாலேயே உலக அரசுகளின் பிரதிநிதிகளால் இறுதி வரை மரியாதையோடு நடத்தப் பட்டவர். "

  • கருத்துக்கள உறவுகள்

தாயக தமிழ் அரசியல் வெறுமை வரட்சி : இடைவெளி : இயலாமை : நம்பிக்கையீனம் இப்படி பல பதங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இவற்றுக்கு சம்பந்தர் காரணமாக முடியாது. 

பொறுப்பு கூறவேண்டியவர்கள் ஆயுதங்களுடன் மெளனித்துவிட்டார்கள். 

மூழ்கிய கப்பலுக்கு சம்பந்தரை கப்டனாக போட்டுவிட்டு கப்பலை சரியாக ஓட்டவில்லை என குறை கூறலாமா?

தமிழர் தாயக சரித்திரத்தில் சம்பந்தர் ஐயா ஒரு வழிப்போக்கன். சுமந்திரன், சிறீதரன், மாவை இவர்களும் இந்த பட்டியலிலேயே அடங்குவார்கள்.

மக்களுக்கு அரசியலில் நம்பிக்கை உள்ளதா என்பதே சந்தேகம்.

இப்போதைக்கு தமிழ் அரசியல்வாதிகள் செய்யக்கூடியது மக்களின் அன்றாட, நாளாந்த பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு தம்மாலான உழைப்பை வழங்குவதே.

பெரிய விடயங்களான தேசிய பிரச்சனைகள், தீர்வு, சமத்துவம், சுய உரிமை இவற்றுக்கான நடைமுறை சாத்தியங்கள், சூழ்நிலை இலங்கையில் உள்ளதாக தெரியவில்லை. இதை இன்னும் ஒரு பத்து இருபது ஆண்டுகளில் தாயக தமிழ் அரசியல்வாதிகள் தீர்த்து வைப்பார்கள் என்றும் நம்பிக்கை இல்லை. அதுவரை உள்ள கோமணம் கழன்று விழாமல் பிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

உலக அரசியல், உலக ஒழுங்கு, போக்கில் வரக்கூடிய எதிர்கால மாற்றங்கள் இலங்கை தமிழர் விடயத்தில் ஏதாவது நல்லதை செய்தால்தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

தமிழர்களுக்காக  கடைசி வரை போராடி மறைந்த ஒரு மனிதனையும் சிங்கள அரசின் அற்ப சலுகைக்களுக்கு கொறட்டை விட்ட மனிதனை யும் ஒரே தட்டில் வைத்து நிறுவ முயலும் அளவுக்கு கருத்து வறட்சி உங்களிடம் .

இல்லையே,..உங்களுக்கு புரியவில்லை,விளங்கவில்லை   நான் சொன்னது தமிழ் மக்கள் பற்றி   அவர்களின் தெரிவு பற்றி  சம்பந்தர் எப்படி பாராளுமன்றம் போனார்??  ஒரே ஒரு  தடவை தான் தோல்வி மற்ற ஆறு தடவைகளும்.  வெற்றி பெற்றுள்ளார்.    எப்படி சாத்தியம்??  எந்த மக்களுக்குக்காக  உயிர் உள்ளவரை போராடினார்களே  அதே தமிழ் மக்கள்   சம்பந்தனை தெரிவு செய்து ஆறு தடவைகள் பாராளுமன்றம் அனுப்பினார்கள்.    இது பிழையா ??? 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை  அவன் இறக்கும்போதுதான்   தெரிய வரும் சமூக ஊடகங்களில் சம்பந்தரின் இறப்பு செய்தி எப்படி கொண்டாடுகிறார்கள்  என்பதை தேடி பாருங்கள் இங்கிருப்பதை விட மோசமாக கழுவி ஊற்றுகிறார்கள்  ]

முகநூல் ருவிட்டரில் இப்படி எல்லாம் வந்துள்ளதாக நானும்  கேள்விபட்டேன்.

தமிழ் மக்களின் சாபக்கேடு தொலைந்தது

தொலைந்தது  சனியன் 

இறைவனுக்கு நன்றி.தமிழனுக்கு இனி விடிவுகாலம் தான்.   இது பொது மக்கள் கருத்தல்ல. இது பற்றி இலங்கை அனுபவம் கொண்ட ஒரு பெரியவர் சொன்னார்   சம்பந்தன் அய்யா ஒரு மோசமானவர் என்று காட்டுவதற்கு திட்டமிட்டு சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.
இலங்கை இந்தியா  தமிழ்நாட்டு தலைவர்கள் நன்றாகவே சொல்லியுள்ளனர்.

முகநூல் ருவிட்டரை பார்த்தால் சீமான் தான் திமுக அதிமுக எல்லாம் கிட்டவும் நெருங்க முடியாத தமிழ்நாட்டு முதல்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் இறப்பின் பின் என்ன நடக்கும் என்பதை புரிந்து இனியாவது தமிழர்களுக்கு இதைய  சுத்தியுடன் செயல்பட்டால் மிக நல்லது .

முடியாது  எப்படி செய்யலாம்??? சொல்லுங்கள் பார்ப்போம்   அல்லது செய்து காட்டுங்கள்    ஆயுதப் போராட்டம் கூட செய்ய முடியாது   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சம்பந்தர் தமிழருக்கு செய்த நாலு நல்ல விடயத்தை எழுதுங்கள்

செய்யவில்லை   முடியவில்லை ஆனால் தொடர்ந்து உழைந்தார். பலதடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் ரணில் எழும்பி வெளியில் போ என்ற போதும் கூட  இருந்து பேச்சுவார்த்தை நடத்தினார்   அரசாங்கம்கள்.  தரவில்லையென்றால் என்ன செய்ய முடியும்??? உங்களை பாராளுமன்றம் அனுப்பினால்   சிங்கள குடியோற்றத்தை   நிறுத்துவிர்களா?? எப்படி?? என்று சொல்லுங்கள் பார்ப்போம்?? 

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்ப இந்தியன் பற்றி நான் இலங்கையன் கதைக்ககூடாது எண்டு மூடிட்டு இருக்கவேணும் நீங்கள்.. 

அதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்    சீமான் விடயத்தில் எனது முடிவை கருத்துகளை மாற்று என்று கேட்பது கண்டிப்பாக கருத்து இல்லை   மூடிட்டு   இரு என்ற சொல்லைஎல்லாம் பைத்தியங்கள் தான் பாவிப்பார்கள்  ஒரு  தமிழன்   கூற மாட்டான்     

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொகுதி பணக்கார தமிழர்கூட்டம் நாட்டை விட்டு வெளியேற இன்னொரு புறம் போராடி இன்றும் ஏழைகளாக வாழவழி இன்றி வாடும் முன்னால் போராளிகள் ஒரு புறம்... தமிழர் பகுதிகளில் கல்வி வேலை வாய்ப்புகள் இன்றி வாடும் ஏழைகள் ஒரு புறம்.. ஏழைகளுக்கு உதவி செய்ய இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒருபோதும் வருவதும் இல்லை அந்த மக்களின் துயரங்களை காது கொடுத்து கேட்பதும் இல்லை.. ஓட்டு கேட்டு வந்ததுக்கு அப்புறம் இவர்களை அந்த மக்கள் பார்த்ததும் இல்லை..  எங்காவது ஆமிக்கு எதிரா எதாவது போராட்டம் என்டால் உசுப்பேத்தல் கதை சொல்லிக்கொன்டு விறைப்பாய் போட்டோக்கு போஸ் குடுத்துகொன்டு நிப்பாங்கள்.. சரி இனப்பிரச்சினைக்காவது ஏதாவது தீர்வு வாங்கி கொடுத்தாங்களா என்றால் இன்று வரை ஒரு துரும்பைகூட செய்யவில்லை...

தமிழர்களுக்கு இருப்பது இனப்பிரச்சினை "மட்டுமே" என்பதுபோல் அதைப்பற்றி மட்டுமே பேசி தமிழ்மக்களை உசுப்பேத்தி சுயலாப அரசியல் செய்யும்  "அரசியல் மாஃபியா" குழு ஒன்றின் தலைவர் இறந்துபோயிருக்கிறார்... அவ்வளவுதான்...
அதுக்கு பந்தி பந்தியா ரைட்டப்பெல்லாம் எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள் மக்களே..
 
இனிமேலாவது இனப்பிரச்சினை தாண்டி அன்றாட பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளை பேசுபொருளாக்குங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சீ அப்படியெல்லாம் சொல்லமுடியுமா? ஜயா பெரிய ஜனநாயகவாதி நடுநிலையாளர் மற்றும் மனித உரிமைவாதி முக்கியமாக தமிழர்களின் தலைவர். 

இதையே அதே இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள அரசை நோக்கி அவர் ஏன் சொல்லவில்லை. ???

ஏனெனில் இங்கே தான் அவர் தன் சுய தேவைக்ககாக விலைபோனார். 

புலிகள் பற்றி அவர் சொன்னதில் எனக்கு வருத்தம் இல்லை. அதன் பின்னர் அவர் முக்கிய பதவியை தங்க வைத்தபடி மௌனமாகியது மறக்க மன்னிக்க முடியாத குற்றமாகும்.

சம்பந்தர் மட்டுமல்ல, இப்போது இருக்கும் தமிழ் பா.உக்கள் சிலரும் கூட சிங்கள அரசின் அநியாயங்களைப் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். பாராளுமன்றிலும் பேசினர், பேசுகின்றனர். ஒரு படி மேலே சென்று, வெளிநாட்டு அரச பிரதிநிதிகளிடமும் பேசுகின்றனர். இதைத் தேடி அறிய இயலாதவரா நீங்கள்?

புலிகள் செய்ததையும், அரசு செய்ததையும் பேசிய சம்பந்தரை தேர்தலில் தெரிவு செய்த மக்கள் கொடுத்த பதவியில் அவர் இருக்க யாருடைய அனுமதியும், ஆதரவும் அவசியமில்லை.

மக்கள் விரும்பா விட்டால் தூக்கி எறிந்திருப்பர், அவரும் பேசாமல் போயிருப்பார். கஜேந்திரன் போல பின் கதவால் வந்திருப்பாரென நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kandiah57 said:

  மூடிட்டு   இரு என்ற சொல்லை எல்லாம் பைத்தியங்கள் தான் பாவிப்பார்கள்  ஒரு  தமிழன்   கூற மாட்டான்     

மூடிட்டு இருக்கவும் என்ற சொல்லை தமிழந்தான் பாவிப்பான் ஆங்கிலேயன்shut up your mouth  என்ற சொல்லை பாவிப்பான்.. 😃

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இனப்பிரச்சினைக்காவது ஏதாவது தீர்வு வாங்கி கொடுத்தாங்களா

யாரிடம் உண்டு”?? யார் தருவார்கள்??  ......இல்லை பெற முடியாது  என்று சொல்லி தான் 30 ஆண்டுகள் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்தினார்   அவரே பலதடவைகள் சொல்லி உள்ளார்  சிங்களம் தீரவைத். தந்திருந்தால். நான் ஆயுதம் துக்கியிருக்க மாட்டேன் ...... ..ஏன் பேச்சுவார்த்தை நடத்தினார்   தொடர்ந்து ஆயுதப் போர் நடத்தி இருக்கலாம் இல்லையா???  முடியாது இந்த சர்வதேசம். விடாது   பேச்சுவார்த்தையில் இரு பகுதியும் ஈடுபடும் படி. அழுத்தம் கொடுத்தார்கள்    தமிழ் பகுதி இதய சுத்தியுடன். பேசிய போதும்    இலங்கை அரசு  பேச்சுவார்த்தையை   தமிழர்களை அழிப்பதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி விட்டது”    

5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மூடிட்டு இருக்கவும் என்ற சொல்லை தமிழந்தான் பாவிப்பான் ஆங்கிலேயன்shut up your mouth  என்ற சொல்லை பாவிப்பான்.. 😃

என்னத்தை மூடுவது. ??? 

15 minutes ago, Justin said:

சம்பந்தர் மட்டுமல்ல, இப்போது இருக்கும் தமிழ் பா.உக்கள் சிலரும் கூட சிங்கள அரசின் அநியாயங்களைப் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். பாராளுமன்றிலும் பேசினர், பேசுகின்றனர். ஒரு படி மேலே சென்று, வெளிநாட்டு அரச பிரதிநிதிகளிடமும் பேசுகின்றனர். இதைத் தேடி அறிய இயலாதவரா நீங்கள்?

புலிகள் செய்ததையும், அரசு செய்ததையும் பேசிய சம்பந்தரை தேர்தலில் தெரிவு செய்த மக்கள் கொடுத்த பதவியில் அவர் இருக்க யாருடைய அனுமதியும், ஆதரவும் அவசியமில்லை.

மக்கள் விரும்பா விட்டால் தூக்கி எறிந்திருப்பர், அவரும் பேசாமல் போயிருப்பார். கஜேந்திரன் போல பின் கதவால் வந்திருப்பாரென நினைக்கவில்லை.

சரியான கருத்துகள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

யாரிடம் உண்டு”?? யார் தருவார்கள்??  ......இல்லை பெற முடியாது  என்று சொல்லி தான் 30 ஆண்டுகள் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்தினார்   அவரே பலதடவைகள் சொல்லி உள்ளார்  சிங்களம் தீரவைத். தந்திருந்தால். நான் ஆயுதம் துக்கியிருக்க மாட்டேன் ...... ..ஏன் பேச்சுவார்த்தை நடத்தினார்   தொடர்ந்து ஆயுதப் போர் நடத்தி இருக்கலாம் இல்லையா???  முடியாது இந்த சர்வதேசம். விடாது   பேச்சுவார்த்தையில் இரு பகுதியும் ஈடுபடும் படி. அழுத்தம் கொடுத்தார்கள்    தமிழ் பகுதி இதய சுத்தியுடன். பேசிய போதும்    இலங்கை அரசு  பேச்சுவார்த்தையை   தமிழர்களை அழிப்பதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி விட்டது”    

அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு தாறம் என்டு சொல்லி வாக்கு கேக்கிறாங்கள்.. பிரியாணியும் 1000 ஓவாயும் கோட்டரும் குடுக்கும் திமுகா அதிமுகா மாதிரி இனப்பிரச்சினை தீர்வை சொல்லியே பேய்க்காட்டி ஓட்டு வாங்குறாங்கள்.. மனநிலை குழம்பியவர்கள் போல் கேள்வி கேட்க வேண்டாம்... கடுப்பாகுது முடியல...

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை  அவன் இறக்கும்போதுதான்   தெரிய வரும் சமூக ஊடகங்களில் சம்பந்தரின் இறப்பு செய்தி எப்படி கொண்டாடுகிறார்கள்  என்பதை தேடி பாருங்கள் இங்கிருப்பதை விட மோசமாக கழுவி ஊற்றுகிறார்கள்  ]

முகநூல் ருவிட்டரில் இப்படி எல்லாம் வந்துள்ளதாக நானும்  கேள்விபட்டேன்.

தமிழ் மக்களின் சாபக்கேடு தொலைந்தது

தொலைந்தது  சனியன் 

இறைவனுக்கு நன்றி.தமிழனுக்கு இனி விடிவுகாலம் தான்.   இது பொது மக்கள் கருத்தல்ல. இது பற்றி இலங்கை அனுபவம் கொண்ட ஒரு பெரியவர் சொன்னார்   சம்பந்தன் அய்யா ஒரு மோசமானவர் என்று காட்டுவதற்கு திட்டமிட்டு சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.
இலங்கை இந்தியா  தமிழ்நாட்டு தலைவர்கள் நன்றாகவே சொல்லியுள்ளனர்.

முகநூல் ருவிட்டரை பார்த்தால் சீமான் தான் திமுக அதிமுக எல்லாம் கிட்டவும் நெருங்க முடியாத தமிழ்நாட்டு முதல்வர்.

அவரவர் தமது மன அழுத்தங்களை கொட்டுகின்றார்கள். நாம் இப்போது புதிய உலகில் வாழ்கின்றோம். தவிர இங்கு நாம் எழுதுபவற்றை தமிழ்மொழி அல்லாதவர்களும் பொழிபெயர்ப்பு செயலிகள் மூலம் வாசித்து விளங்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது.

இங்கும் பல்வேறுவிதமான கருத்துக்கள் உள்ளன. கருத்துக்கள் எழுதியவர்களில் எத்தனை பேருக்கு சம்மந்தரை நேரில் சந்தித்த/உரையாடிய/பணியாற்றிய அனுபவம் உள்ளதோ தெரியாது. அது எனக்கு இல்லை. அதற்காக தெரியாத விடயங்களை நேரில் பார்த்ததுபோல எழுத முடியாது. 

லங்கா வெப் எனும் ஒரு தளத்தில் சம்பந்தர் ஐயா பற்றி விலாவாரியாக எழுதி ஒரு கட்டுரை போட்டுள்ளார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னம் அது பதிப்பிக்கபட்டது என தெரியவில்லை. அதில் பிரிவினைவாதியாக, தமிழ் தனிநாட்டு வாதத்திற்கு கடும் ஆதரவு கொடுத்தவராகவே, தமிழ் இனவாதியாகவே சம்மந்தரை இனம் காட்டி உள்ளார்கள். இதன்படி பார்த்தால் சம்மந்தருக்கு மாமனிதர் பட்டம் கொடுக்கப்படுமோ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நியாயம் said:

சம்மந்தர் ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

ஆயுத போராட்ட காலத்தில் இலங்கையில் அரசியலில் தமிழ் அரசியல்வாதிகள் செல்லாக்காசுகளே. இந்த காலத்தில் ஆயுதங்களே பேசின. நடைபெற்ற தமிழ் அரசியல் ஆயுத முனையிலேயே நடைபெற்றது.  

இந்தவகையில் பார்த்தால் சம்மந்தன் ஐயா தன்னால் முடியுமான அரசியலை தாயகத்தில் செய்துள்ளார். 

சம்பந்தனின் ஆரம்ப அரசியல் தொடக்கம் இன்றைய அரசியல் போக்கு  பற்றியும் எனது சந்ததிகளுக்கு மட்டுமே அனைத்தும் தெளிவாக தெரியும்.

இங்கே சாட்சிகள் இல்லாத இராவணன் வரலாறோ அல்லது சோழர் வரலாறோ பேசப்படவில்லை. கண் முன்னே நடந்த சம்பந்தனின் சோரம் போன அரசியல் பற்றியே பேசுகின்றோம்.

என்னைப்பொறுத்த வரைக்கும் சம்பந்தன் ஈழத்தமிழர் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து தன் அரசியல் வாழக்கையை தக்கவைத்து கொண்டாரே தவிர வேறேதும் இல்லை.

பேச்சு வன்மை குறைந்தும்  சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இல்லையே,..உங்களுக்கு புரியவில்லை,விளங்கவில்லை   நான் சொன்னது தமிழ் மக்கள் பற்றி   அவர்களின் தெரிவு பற்றி  சம்பந்தர் எப்படி பாராளுமன்றம் போனார்??  ஒரே ஒரு  தடவை தான் தோல்வி மற்ற ஆறு தடவைகளும்.  வெற்றி பெற்றுள்ளார்.    எப்படி சாத்தியம்??  எந்த மக்களுக்குக்காக  உயிர் உள்ளவரை போராடினார்களே  அதே தமிழ் மக்கள்   சம்பந்தனை தெரிவு செய்து ஆறு தடவைகள் பாராளுமன்றம் அனுப்பினார்கள்.    இது பிழையா ??? 

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை அவ்வளவுதான் .

1 hour ago, Kandiah57 said:

முடியாது  எப்படி செய்யலாம்??? சொல்லுங்கள் பார்ப்போம்   அல்லது செய்து காட்டுங்கள்    ஆயுதப் போராட்டம் கூட செய்ய முடியாது   

அவர்கள் தானே தமிழருக்கு தீர்வு வாங்கி தருவம் என்று உங்க ஆட்கள் கோதாவில் உள்ளனர் அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்க .😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Kandiah57 said:

நல்லவன் கெட்டவன். துரோகி ......யார் இறந்தாலும் செலுத்துவது அஞ்சலி  அது தமிழரின் குணம் பண்பு  

ஹிட்லருக்கு  உங்களால் வெளிப்படையாக அஞ்சலி செலுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

25 minutes ago, குமாரசாமி said:

பேச்சு வன்மை குறைந்தும்  சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.

சம்பந்தன் திருகோணமலையில் இன்னொரு புதிய அரசியல் பிரதிநிதித்துவம் வருவதற்குத் தடையாய் இருந்த ஒருவர்...பத்து வருசத்துக்கு முதலே செய்திருக்கவேண்டியது...தன் மூப்பு தெரிந்து கடந்த தேர்தலில் ஆவது சம்பந்தன் போட்டியிட்டிருக்ககூடாது...திருகோணமலையில் ஏற்கனவே இருந்த பாஉ ஆக இருந்த நேமிநாதன் எந்தவித செயற்பாடும் இல்லாதவர்... அதுபோலவே சம்பந்தனும் செயல் திறன் அற்ற மனிதர்... தான் ஆளுமையில் இருக்கும்போதே இன்னொரு தலைவரை திருகோணமலைக்கு அடையாளம் காட்டி தூக்கி விட்டிருக்கவேண்டும்.. 70 வருடங்களாக அசையாமல் இருக்கும் தலைவர்கள் சொல்வது மட்டுமே சரி என்ற சிந்தனை மட்டுமே இப்போது வரை தொடர்கிறது மாற்று சிந்தனைகள் இல்லாமே போய்விடுகிறது , புதிய இளம் தலைவர்கள் உருவாகாமலே போய்விட்டது ஆயுத போராட்டத்திலும் ஐனநாயக போராட்டத்தலும் இடம்பெற்ற மிகப்பெரிய பிழை...இதை அடுத்த தலைமுறை தலைவர்களாவது சரிசெய்ய வேண்டும்... 

Edited by பாலபத்ர ஓணாண்டி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.