Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, கந்தப்பு said:

இல்லை காலைக்கதிர் முதல் பக்கத்தில் ‘இரகசியம் பரகசியம்’ என்ற தலைப்பில் வந்த பெட்டி செய்தியும் , அதைதொடர்ந்து 4 பக்கத்தில் வந்த முழு செய்தியும் இணையுங்கள்

வலது பக்க மேல் மூலைப்பகுதியில் உள்ளதே? தொடர்ச்சி 2ஆம் பக்கம் எனப் போட்டிருக்கிறதே?

  • Replies 76
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நியாயம்

துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன்.  அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது.  சிவத்தமிழ்ச்செல்வி தங்

Kavi arunasalam

தவறான புரிதல் தமிழ் சிறி. சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும்  சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவ

கந்தப்பு

தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகன

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஏராளன் said:

வலது பக்க மேல் மூலைப்பகுதியில் உள்ளதே? தொடர்ச்சி 2ஆம் பக்கம் எனப் போட்டிருக்கிறதே?

படங்களை எப்படி இணைப்பது என்று சொல்லுங்கள். நான் இணைத்துவிடுகிறேன்

https://postimg.cc/gallery/NcwY1B0

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கந்தப்பு said:

படங்களை எப்படி இணைப்பது என்று சொல்லுங்கள். நான் இணைத்துவிடுகிறேன்

https://postimages.org/

மேலுள்ள இணைப்பில் சென்று அப்லோட் செய்தபின் Direct Link இங்கே இணையுங்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது காலை முரசு போல!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவ சிவ என்று கூறி பட்டை அடித்துவிட்டால் அவர்கள் என்ன அயோக்கியத்தனம் புரிந்தாலும் முண்டு கொடுக்க சிலர் வருவார்கள். இது யாழ்பாணத்தில் இயல்பானது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ஏராளன் said:

இது காலை முரசு போல!

வயது போயிட்டுது. 😄. காலை முரசுக்கு பதிலாக காலைக்கதிர் என்று எழுதிவிட்டேன்

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, சுண்டல் said:

உங்களை மாதிரி ஒருத்தன் பூட்டிட்டு இல்லது பூட்டவைச்சு சதி செய்திட்டு பாவம் அந்தாள சாட்டினா ….. 

உங்களுக்கு எழுத வாசிக்க கற்பித்த ஆசான் பரிதாபத்திற்குரியவர். 

🤣

  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/7/2024 at 19:22, அக்னியஷ்த்ரா said:

இவர்க்கெதிராக மறவன் புலவு போராட்டத்தில் குதிப்பாரா...? இல்லை போர்த்துக்கீச பறங்கிப்படை தமிழர்கள் மட்டும் தான் கண்ணுக்குத்தெரியுமா  

அவருக்குத்தான் எத்தனை சோலி, பாவம்  அவர். நேற்றுத்தான் ஆளுநர் காரியாலயத்துக்கு முன்னால் கல்வி பணிப்பாளருக்கு எதிராக கோஷம் போட்டவர், நாளைக்கு ஆளுநருக்கு எதிராக ருத்திரத்தாண்டவம் ஆடப்போறார். ஆளுநர் சாள்ஸ்தான்  சச்சியரின் கண்ணில் தெரிவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kandiah57 said:

ஆமாம் நானும் பார்த்தேன்    மிகவும் கவலையளிக்கிறது 

கந்தையருக்கு சுட்டுவிட்டதோ? 

-1 போட்டிருக்கிறீர்கள்? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

உங்களுக்கு எழுத வாசிக்க கற்பித்த ஆசான் பரிதாபத்திற்குரியவர். 

🤣

இதை கண்டிக்கிறேன்.  காரணம் இங்கு கதைப்பது சுட்டலைப்  பற்றி இல்லை  அவர் படித்திருக்கலாம். அல்லது பள்ளிகூடம்  போகமாலும். இருந்திருக்கலாம். 

இங்கே ஆறுதிருமுருகன்.   சரபணபவன். [உதயன் பத்திரிகை உரிமையாளர் ]  அரச அதிபர்   சிறுவர்கள் இல்லம்  அங்கு வாழும் பிள்ளைகள்  ... ...பற்றி தான்  கதைக்கிறோம்.   முடிந்ததால் உதயன் பத்திரிகை உரிமையாருக்கும்.  ஆறுதிருமுருகனுக்கும் தனிப்பட்ட பிரச்சனை,.காணிப்பிரச்சனை இல்லை என்று நிறுவுங்கள்  

1 minute ago, Kapithan said:

கந்தையருக்கு சுட்டுவிட்டதோ? 

-1 போட்டிருக்கிறீர்கள்? 

😏

இல்லை  தம்பி. 🤣🤣  சுண்டல். என்ற. யாழ் கள உறுப்பினர்  பற்றி   இங்கு கருததாடவில்லை. என்பதையும்  தலைப்பையும். கவனத்தில் கொள்ளுங்கள் 🙏

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kandiah57 said:

இதை கண்டிக்கிறேன்.  காரணம் இங்கு கதைப்பது சுட்டலைப்  பற்றி இல்லை  அவர் படித்திருக்கலாம். அல்லது பள்ளிகூடம்  போகமாலும். இருந்திருக்கலாம். 

இங்கே ஆறுதிருமுருகன்.   சரபணபவன். [உதயன் பத்திரிகை உரிமையாளர் ]  அரச அதிபர்   சிறுவர்கள் இல்லம்  அங்கு வாழும் பிள்ளைகள்  ... ...பற்றி தான்  கதைக்கிறோம்.   முடிந்ததால் உதயன் பத்திரிகை உரிமையாருக்கும்.  ஆறுதிருமுருகனுக்கும் தனிப்பட்ட பிரச்சனை,.காணிப்பிரச்சனை இல்லை என்று நிறுவுங்கள்  

இல்லை  தம்பி. 🤣🤣  சுண்டல். என்ற. யாழ் கள உறுப்பினர்  பற்றி   இங்கு கருததாடவில்லை. என்பதையும்  தலைப்பையும். கவனத்தில் கொள்ளுங்கள் 🙏

கந்ஸ்,

சைவப் பெண்  பிள்ளைகள் மேல் வராத அக்கறை சைவப் பழத்தின் மேல் வருகிறது? 

உங்கள் வீட்டுப் பெண்கள் இதில்  பலியாகியிருந்தால் அவர்களைப் பற்றிக் கதைப்பீர்களா அல்லது வீடியோ எடுத்தவனைப் பற்றிக் கதைப்பீர்களா? 

உங்களைப் போன்ற உழுத்துப்போன மரமண்டைகளால்தான் சமூகத்தில் இத்தனை சீர்கேடு. 

பிழையை பிழை என்று சொல்லத் தெரியாத கோழைகள் எல்லோரும் இப்படித்தான் எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோவார்கள். 

😡

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kapithan said:

கந்ஸ்,

சைவப் பெண்  பிள்ளைகள் மேல் வராத அக்கறை சைவப் பழத்தின் மேல் வருகிறது? 

உங்கள் வீட்டுப் பெண்கள் இதில்  பலியாகியிருந்தால் அவர்களைப் பற்றிக் கதைப்பீர்களா அல்லது வீடியோ எடுத்தவனைப் பற்றிக் கதைப்பீர்களா? 

உங்களைப் போன்ற உழுத்துப்போன மரமண்டைகளால்தான் சமூகத்தில் இத்தனை சீர்கேடு. 

பிழையை பிழை என்று சொல்லத் தெரியாத கோழைகள் எல்லோரும் இப்படித்தான் எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோவார்கள். 

😡

இந்த குளிக்கும் இடம்  கட்டத்துக்கு உள்ளே இருக்கிறதா.??? அல்லது   வெளியில்   தெருக்கோடியில்,....கரையில். இருக்கிறதா??    மற்றும் ஏன். எங்கள் பெண்களை  இழுத்தீர்கள்.    ......??   அவர்களுக்கும் இந்த திரிக்கும். என்ன சம்பந்தம்.???     எனது மண்டை  மர மண்டை என்று  ஆராய்ந்து கண்டு பிடித்த உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்     ..இயற்கையான மண்டை ஒரு தடவை தான் பாவிக்கலாம். மர மண்டை  மீண்டும் மீண்டும்  புதியன பாவிக்கலாம்.....அது பெறுமதி மிக்கது     இங்கு நான் மதத்தை பார்க்கவில்லை    கோவில்களுக்கும் போவதில்லை   விரதமும். இருப்பதில்லை   வெள்ளிக்கிழமையிலும். மச்சம். தான்   எனவே… மதத்தை இழுக்காதீங்கள். . காணி பிரச்சனை இருக்க??அல்லது இல்லையா??    இதற்க்கு பதில் தந்துவிட்டு மேற்கொண்டு எழுதவும்  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்பும் ஒருமுறை ஒரு கிறீஸ்தவ அமைப்பு/போதகர் இருபாலையில் நடத்திக்கொண்டிருந்த சிறுவர் இல்லத்தின் சீர்கேடுகளை உதயன் வெளிக்கொண்டுவந்திருந்தது.  சைவப் பெருமக்களின் பக்தியுணர்வை சாதகமாக்கி ஒரு அச்சு ஊடகம் உதயனுக்கெதிராக கிடைச்ச காப்பில கடா வெட்டிவருகின்றது.  

இப்படியான சமூகச் சீர்கேடுகளை வெளிக்கொண்டுவரும் உதயனுக்குப் பாராட்டுக்கள்!

குறிப்பிட்ட சிறுவர் இல்லம் சீல்வைக்கப்பட்டு முடக்கப்படவேண்டும்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kandiah57 said:

இந்த குளிக்கும் இடம்  கட்டத்துக்கு உள்ளே இருக்கிறதா.??? அல்லது   வெளியில்   தெருக்கோடியில்,....கரையில். இருக்கிறதா??    மற்றும் ஏன். எங்கள் பெண்களை  இழுத்தீர்கள்.    ......??   அவர்களுக்கும் இந்த திரிக்கும். என்ன சம்பந்தம்.???     எனது மண்டை  மர மண்டை என்று  ஆராய்ந்து கண்டு பிடித்த உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்     ..இயற்கையான மண்டை ஒரு தடவை தான் பாவிக்கலாம். மர மண்டை  மீண்டும் மீண்டும்  புதியன பாவிக்கலாம்.....அது பெறுமதி மிக்கது     இங்கு நான் மதத்தை பார்க்கவில்லை    கோவில்களுக்கும் போவதில்லை   விரதமும். இருப்பதில்லை   வெள்ளிக்கிழமையிலும். மச்சம். தான்   எனவே… மதத்தை இழுக்காதீங்கள். . காணி பிரச்சனை இருக்க??அல்லது இல்லையா??    இதற்க்கு பதில் தந்துவிட்டு மேற்கொண்டு எழுதவும்  

உங்கள் வீட்டுப் பெண்டுகள் என்றால் பத்தரை மாற்ருத் தங்கம்,  ஊரான் வீட்டுப் பிள்ளைகளென்றால் கிள்ளுக் கீரைகளோ ? நல்லா வாயில வருகிறது  😏

பாதிக்கப்பட்ட பிள்ளைகளையிட்டு கவலை தெரிவிக்க வக்கில்லை, சிறுவர் இல்லங்களை இறுக்கமான கண்காணிப்பின்கீழ் கொண்டுவர வேண்டும்  என்று கூறுவதற்கு  ப்துப்பில்லை,  சமயப் பிரச்சனையை இங்கே இழுப்பவர்களுக்கு ஆதரவு வேறு? 

சிறுவர்களையும் பெண்களையும் ஆதரவற்ற ஏதிலிகளையும் துன்புறுத்துவோருக்கும் (உங்களைப்போன்ற) அதற்கு சப்பைக்கட்டு கட்டி ஆதரவு வழங்குவோருக்கும்  மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். 

😡

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Kapithan said:

இதுவரை நீங்கள் பிரச்சனை தொடவில்லை    கருத்துகள் எழுதவில்லை   ஆனால்  சும்மா போற வறவனைப் பற்றி  நிறையவே எழுதுகிறீர்கள்    

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உரிய விளக்கம் கோரல்...

நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, ஈஸ்வரபாதம்‌ சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌

யசோதை சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌
லிமிடெட்‌, லக்ஷ்மி சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌
லிமிடெட்‌

நால்வரும்‌ 361, கஸ்தூரியார்‌ வீதி, யாழ்ப்பாணம்‌

கேள்விக்‌ கடிதம்‌

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன்‌ ஆலய முகாமைத்துவ சபையின்‌ தலைவர்‌ கலாநிதி ஆறு. திருமுருகன்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலில்‌ எழுதும்‌ கேள்விக்‌ கடிதமாவது,

04.07.2024 அன்று தங்களது நிறுவனத்தினால்‌ பிரசுரிக்கப்படும்‌ உதயன்‌ நாளிதழின்‌
முன்பக்கத்தில்‌ “மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு! 

ஆறு.திருமுருகனால்‌ நடத்தப்படும்‌ சிறுவர்‌ இல்லம்‌ இழுத்துமூடல்‌ எனும்‌ தலைப்பில்‌ செய்தியொன்று தலைப்புச்‌ செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்ட 04.07.2024 இற்கு முன்பதாக அவ்வாறான எந்தவொரு உத்தரவும்‌ வடமாகாண கெளரவ ஆளுனரினால்‌ வழங்கப்பட்டிருக்கவில்லை. 

மேலும்‌ மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு எனும்‌
முற்றிலும்‌ பொய்யான விடயம்‌ குறித்த செய்தியில்‌ உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேற்படி முகவரியில்‌ தங்கள்‌ நிறுவனம்‌ அமைந்துள்ள ஆதனமானது எனது கட்சிக்காரர்‌
தலைவராக கடமையாற்றும்‌ சிவபூமி அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கப்பட்டு விட்டது
என்பதாலும்‌ 

குறித்த ஆதனத்திலிருந்து தங்களை வெளியேற்ற எனது கட்சிக்காரர்‌
நடவடிக்கை எடுத்து வருகின்றார்‌ என்பதனாலும்‌ அவர்‌ மீதுள்ள குரோதத்தின்‌ காரணமாக
குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதென எனது கட்சிக்காரர்‌ கருதுகின்றார்‌.

எனது கட்சிக்காரர்‌ கடந்த இரு தசாப்த காலத்தில்‌ தனது நாவன்மையின்‌ மூலம்‌ சேகரித்த
நிதியைக்‌ கொண்டு பல்வேறு சமய சமூகப்‌ பணிகளை செய்து வருவதோடு ஈழ சைவ
சமயிகளினுடைய குறிப்பிடத்தக்க தலைவராகவும்‌ இருந்து வருகின்றார்‌. 

தங்களது பத்திரிகையில்‌ வெளியிடப்பட்ட முற்றிலும்‌ பொய்யான செய்தியானது பொதுப்பணிகளில்‌ ஈடுபட்டு வரும்‌ எனது கட்சிக்காரரை இழிவுபடுத்தும்‌ தன்மையானது என்பதோடு அவரது நற்பெயருக்கு இழுக்கேற்படுத்தும்‌ தீய நோக்கம்‌ கொண்டதுமாகும்‌.

எனவே இக் கடிதம் கிடைத்து 48 மணத்தியாலங்களிற்குள் தங்ளால் பிரசுரிக்கப்படும் உதயன் நாளிதழில் 04.07.2024ம் திகதி வெளி வந்த செய்திக்கு நிகரான வடிவத்தில் எனது கட்சிக்காரரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதுடன்,

இக் கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் ரூபா 300 மில்லியன் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என எனது கட்சிக்காரர் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

மேற்குறித்த விடையங்களை உரிய காலத்துள் செய்ய தவறுமிடத்து தங்களுக்கு எதிராக பொருத்தமான நீதிம்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இத்தால் தங்களிற்கு அறியத்தருகின்றேன்.

கலாநிதி குமாரவடிவேல் குருபரன்
LL.B (Hons) (Colombo) 
B.C.L (Oxford) Ph.D (London)
Attomey-at-Law (Sri Lanka)
Notary Public and 
Commissioner for Oaths.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, Kandiah57 said:

இதுவரை நீங்கள் பிரச்சனை தொடவில்லை    கருத்துகள் எழுதவில்லை   ஆனால்  சும்மா போற வறவனைப் பற்றி  நிறையவே எழுதுகிறீர்கள்    

கந்ஸ்,

ஆரம்பம் முதல் இந்த விடயத்திற்கு கருத்தெழுதாமல் தவிர்த்ததற்குக் காரணம் செய்தியில் முழுமையாக விடயங்கள் வெளியிடப்படவில்லை என்று கருதியதால்தான். ஆனால் கண்காணிப்புக் கமரா விடயத்தில் பொருள் இருக்கிறது என்று நம்புகிறேன். 

பிரச்சனையைத் தொடாதது தாங்களும் சுண்டலுமே. 

திருமுருகன் அல்லது அங்குள்ள வேலையாட்களோ நிர்வாகிகளோ பிள்ளைகள்நீராடுவதையும் உடை மாற்றுவதையும் பார்த்தார்கள் அல்லது பதிவு செய்தார்கள்  என்று எங்குமே எவருமே குற்றம் சுமத்தவில்லை. நிர்வாகம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதுதான் பிரச்சனையின் சாராம்சம். 

பெட்டிசன் போட்டது உண்மையாக இருந்தால்  அதைச் செய்தது  சைவர்களே. அங்குள்ள சிறார்களும் சைவர்களே,  விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தது அப்பிரதேசத்திற்குரிய AGA Office. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது ஆளுனர். 

இதில் சமயத்திற்கு எங்கே  இடம்? 

ஆனால் சைவப் பழங்களுக்கு பெயர் கெட்டுவிடும் என்று விடையத்தை திசைதிருப்பி மூடி மறைக்க முற்படுவது தாங்களும் சுண்டல் போன்ற உசார் மடையர்களுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கந்தப்பு said:

உரிய விளக்கம் கோரல்...

நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, ஈஸ்வரபாதம்‌ சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌

யசோதை சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌
லிமிடெட்‌, லக்ஷ்மி சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌
லிமிடெட்‌

நால்வரும்‌ 361, கஸ்தூரியார்‌ வீதி, யாழ்ப்பாணம்‌

கேள்விக்‌ கடிதம்‌

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன்‌ ஆலய முகாமைத்துவ சபையின்‌ தலைவர்‌ கலாநிதி ஆறு. திருமுருகன்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலில்‌ எழுதும்‌ கேள்விக்‌ கடிதமாவது,

04.07.2024 அன்று தங்களது நிறுவனத்தினால்‌ பிரசுரிக்கப்படும்‌ உதயன்‌ நாளிதழின்‌
முன்பக்கத்தில்‌ “மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு! 

ஆறு.திருமுருகனால்‌ நடத்தப்படும்‌ சிறுவர்‌ இல்லம்‌ இழுத்துமூடல்‌ எனும்‌ தலைப்பில்‌ செய்தியொன்று தலைப்புச்‌ செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்ட 04.07.2024 இற்கு முன்பதாக அவ்வாறான எந்தவொரு உத்தரவும்‌ வடமாகாண கெளரவ ஆளுனரினால்‌ வழங்கப்பட்டிருக்கவில்லை. 

மேலும்‌ மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு எனும்‌
முற்றிலும்‌ பொய்யான விடயம்‌ குறித்த செய்தியில்‌ உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேற்படி முகவரியில்‌ தங்கள்‌ நிறுவனம்‌ அமைந்துள்ள ஆதனமானது எனது கட்சிக்காரர்‌
தலைவராக கடமையாற்றும்‌ சிவபூமி அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கப்பட்டு விட்டது
என்பதாலும்‌ 

குறித்த ஆதனத்திலிருந்து தங்களை வெளியேற்ற எனது கட்சிக்காரர்‌
நடவடிக்கை எடுத்து வருகின்றார்‌ என்பதனாலும்‌ அவர்‌ மீதுள்ள குரோதத்தின்‌ காரணமாக
குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதென எனது கட்சிக்காரர்‌ கருதுகின்றார்‌.

எனது கட்சிக்காரர்‌ கடந்த இரு தசாப்த காலத்தில்‌ தனது நாவன்மையின்‌ மூலம்‌ சேகரித்த
நிதியைக்‌ கொண்டு பல்வேறு சமய சமூகப்‌ பணிகளை செய்து வருவதோடு ஈழ சைவ
சமயிகளினுடைய குறிப்பிடத்தக்க தலைவராகவும்‌ இருந்து வருகின்றார்‌. 

தங்களது பத்திரிகையில்‌ வெளியிடப்பட்ட முற்றிலும்‌ பொய்யான செய்தியானது பொதுப்பணிகளில்‌ ஈடுபட்டு வரும்‌ எனது கட்சிக்காரரை இழிவுபடுத்தும்‌ தன்மையானது என்பதோடு அவரது நற்பெயருக்கு இழுக்கேற்படுத்தும்‌ தீய நோக்கம்‌ கொண்டதுமாகும்‌.

எனவே இக் கடிதம் கிடைத்து 48 மணத்தியாலங்களிற்குள் தங்ளால் பிரசுரிக்கப்படும் உதயன் நாளிதழில் 04.07.2024ம் திகதி வெளி வந்த செய்திக்கு நிகரான வடிவத்தில் எனது கட்சிக்காரரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதுடன்,

இக் கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் ரூபா 300 மில்லியன் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என எனது கட்சிக்காரர் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

மேற்குறித்த விடையங்களை உரிய காலத்துள் செய்ய தவறுமிடத்து தங்களுக்கு எதிராக பொருத்தமான நீதிம்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இத்தால் தங்களிற்கு அறியத்தருகின்றேன்.

கலாநிதி குமாரவடிவேல் குருபரன்
LL.B (Hons) (Colombo) 
B.C.L (Oxford) Ph.D (London)
Attomey-at-Law (Sri Lanka)
Notary Public and 
Commissioner for Oaths.

நானும் வாட்ஸப்பில் இப்போது பார்த்தேன்.. 

கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் சரவணபவான், அதைத் கேட்ட ஆறு திருமுகன் மேல் சேறு பூச உதயனில் செய்தி போட்டிருக்கின்றார் என்கின்றார்கள். ஊடக அடியாட்களின் வேலையா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

கட்சிக் காரருக்கு "ஜூலை 4 ஆம் திகதிக்கு முன்பாக மூடும் உத்தரவு கிடைக்கவில்லை" என்கிறார். வடமாகாண சபை தளத்தில் ஜூலை 4 ஆம் திகதிக்குரிய செய்தியில் மூடும் உத்தரவு பற்றிய செய்தி இருக்கிறது. அதையே ஒரு பத்திரிகை பிரசுரிக்கலாம். ஆணை புறாவின் காலில் கட்டி கட்சிக் காரருக்கு கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டிய சட்டத் தேவை இல்லை.

அனேகமாக இது நீதிமன்றம் போய் இழுபடும் கேஸாக தெரிகிறது. இனி கொடுக்கும் நன்கொடையில் ஒரு பகுதி சட்டத்தரணிகளிடம் போய்ச் சேருமென நினைக்கிறேன். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள்.
1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது, 
யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள்
“ உண்மையை “ எழுதுங்கள்,
“உண்மையாய் “ எழுதுங்கள் என ….
பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று  கூற ஏன்  இப்படி கஷ்டப்பட வேண்டும்.  வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை. 

https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@Kandiah57 வும் @சுண்டல்லும்  ஆளாழுக்கு மாறி மாறி ❤️💕 போட்டுக்கொள்ளுங்கோ. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Kapithan said:

சிறுவர்களையும் பெண்களையும் ஆதரவற்ற ஏதிலிகளையும் துன்புறுத்துவோருக்கும் (உங்களைப்போன்ற) அதற்கு சப்பைக்கட்டு கட்டி ஆதரவு வழங்குவோருக்கும்  மிகக் கடுமையான தண்டனை

 செல்வி  தங்கம்மா அப்பகுட்டி என்பவரும்.  எனது ஊருக்கு பக்கத்து ஊர் நாவற்குழியை. சேர்ந்த ஒரு நபரும் ஆசிரியர்கள்   இருவரும் ஒருவரையொருவர் காதலித்தவர்கள்  திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோர்களும். கடுமையான எதிர்ப்பு   காரணம் சாதிப்பாகுபாடு  இருபகுதியும். வேளாளர் தான்  அதற்குள்ளும் பாகுபாடுகள்   எனவே… இருவரும் முடிவு செய்தார்கள்  திருமணம் செய்தால் நாம் இருவருமே இல்லையென்றால் திருமணம் வேண்டாம்,.செய்வதில்லை,..அதன்படியே இருவரும் வாழ்ந்து இறந்து விட்டார்கள்    

அந்த நாவற்குழி மனிதனின் தம்பியார். மகேந்திரன் மாஸ்டர்  எனக்கு தமிழ் இலக்கியம் படிப்பித்தவர் அப்போ 

தமிழ்மொழி,..தமிழ் இலக்கியம்   என. தமிழில் இரண்டு பாடங்களுண்டு    இவர்களை  யாழ் கள உறவு   சசி க்கு தெரியலாம். மேலும் தங்கம்மா அப்பகுட்டி. நேர்மையானவர். 

அவருடைய சீடன். தான் ஆறு திருமுருகன்   இவரும் மிகவும் நேர்மையானவன் என்று அறிந்து உள்ளேன்   நாவற்குழியில். கண்டி றேட்டில்.  பெரிய அளவில்  சைவசமயம். பற்றிய தகவல்கள் கொண்ட நிலையம் உண்டு”  அங்கே ஆறு அல்லது ஏழு மொழிகளில் விளக்கம் உண்டு   இது ஆறுதிருமுருகன். கட்டி நிர்வாகம் செய்கிறார்கள்    ஊருக்கு போனால் போய் பார்க்கவும்” 🤣🤣🤣🙏

சரவணபவனில் எனக்கு நம்பிக்கை இல்லை   ஆறுதிருமுருகனில்  நம்பிக்கை உண்டு”    அமைதியாக இருங்கள்’ வழக்கின் முடிவை பார்ப்போம்   ......

குறிப்பு,....சரவணபவன்.  சமாதானமாகப் போகக்கூடிய.  வாய்ப்புகள் அதிகம் உண்டு”   இது என கருத்துகள்    

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.