Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யூரியூபர்களின் தகரடப்பா சத்தங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், தலைமைத்துவப் பண்பு என்பதைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், படிப்பினைகள் இந்தச் சம்பவங்களுள் அடங்கியிருக்கின்றன.

மேலே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்: "சுகாதார அமைச்சில் பேசி விட்டு வருகிறேன்" என்று உள்ளே நுழையும் மருத்துவர் அர்ச்சுனாவைக் கண்டதும், மருத்துவர் ராஜிவ் எழுந்து நின்று ஆமிக்காரனிடம் பொலிஸ் பதிவு காட்டுவது போல தன் நியமனக் கடிதங்களைக் காட்டுகிறார்😂. அர்ச்சுனா ஒன்றும் காட்டவோ, அமைச்சு என்ன சொன்னதென்றோ வெளிப்படுத்தாமலே, ராஜிவ் கதிரையை விட்டு அகன்று ஒதுங்கி நிற்கிறார். புரிந்து கொள்ள இயலாத நடைமுறையாக இருக்கிறது. "இங்கே பேச எதுவும் இல்லை, நீங்கள் மாகாணப் பணிப்பாளரைப் பாருங்கள்" என்று இருந்த படியே சொல்லியிருக்கலாம். கூட இருக்கும் பொலிஸ்காரர்களிடம் "இந்த வீடியோக் காரர்களை அகற்றுங்கள்" என்று கூட வேண்டுகோள் விடுக்கும் சந்தர்ப்பம் இருந்தது.

என்னைப் பொறுத்தவரை, தலைமைத்துவம் என்பதில் கொஞ்சம் "ரௌத்திரம்" அடங்கியிருக்க வேண்டும். தெளிவாக, வெளியே வரக் கூடிய குரலில் பேசக்கூட இயலாத எதிராளிகளை வைத்துக் கொண்டு அர்ச்சுனா நன்கு எஞ்ஜோய் பண்ணுகிறார் என நினைக்கிறேன்😂

  • Replies 195
  • Views 18.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நியாயம்
    நியாயம்

    மருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்

  • நியாயம்
    நியாயம்

    இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன்.  மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை து

  • Ahasthiyan
    Ahasthiyan

    25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

ஆரம்பத்தில் நிறைய மதிப்பிருந்தது.. நிறைய விமர்சனங்களை பார்க்க முடிந்தது அதன் பின் மற்றவர்களோடு அவரும் ஒருவராகவே எனது மதிப்பீடு .அத்தோடு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் என்பதற்காக மற்றவர்களை தூக்கி வீசலாமா..அவதானித்தீர்களோ தெரியாது வைத்தியர் ரயீவோடு எழும்பி போய் விடு நான் வந்திட்டன் என்பது போல தான் பிகேவ்வியர்….போணில் நிறைய எழுத ஏலாமலுள்ளது.. சந்தர்ப்பம் கிடைத்தால் மறு படியும் எழுதுவன்.. நன்றி🙏

அக்கா அவ‌ர் பேசிய‌ ஒன்னு இர‌ண்டு காணொளிக‌ள் பார்த்தேன் ப‌ல‌ உண்மைக‌ளை வெளியிட்டார்................இவ‌ர்க‌ளுக்குள் ந‌ட‌க்கும் வாய் ச‌ன்டைக‌ளை பெரிசா பார்க்க‌ வில்லை

ப‌ல‌தை த‌ட்டி கேட்டு இருக்கிறார்....................விலை போகும் ம‌னித‌ர்க‌ள் வாழும் உல‌கில் இப்ப‌டியும் ஒரு ம‌னித‌ரா என்று யோசிச்சு பார்த்தேன்...............இவ‌ருக்கு இன்னொரு முக‌ம் இருந்தால் அதை ப‌ற்றி என‌க்கு ஒன்றும் தெரியாது அக்கா.............................

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

இந்த யூரியூபர்களின் தகரடப்பா சத்தங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், தலைமைத்துவப் பண்பு என்பதைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், படிப்பினைகள் இந்தச் சம்பவங்களுள் அடங்கியிருக்கின்றன.

மேலே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்: "சுகாதார அமைச்சில் பேசி விட்டு வருகிறேன்" என்று உள்ளே நுழையும் மருத்துவர் அர்ச்சுனாவைக் கண்டதும், மருத்துவர் ராஜிவ் எழுந்து நின்று ஆமிக்காரனிடம் பொலிஸ் பதிவு காட்டுவது போல தன் நியமனக் கடிதங்களைக் காட்டுகிறார்😂. அர்ச்சுனா ஒன்றும் காட்டவோ, அமைச்சு என்ன சொன்னதென்றோ வெளிப்படுத்தாமலே, ராஜிவ் கதிரையை விட்டு அகன்று ஒதுங்கி நிற்கிறார். புரிந்து கொள்ள இயலாத நடைமுறையாக இருக்கிறது. "இங்கே பேச எதுவும் இல்லை, நீங்கள் மாகாணப் பணிப்பாளரைப் பாருங்கள்" என்று இருந்த படியே சொல்லியிருக்கலாம். கூட இருக்கும் பொலிஸ்காரர்களிடம் "இந்த வீடியோக் காரர்களை அகற்றுங்கள்" என்று கூட வேண்டுகோள் விடுக்கும் சந்தர்ப்பம் இருந்தது.

என்னைப் பொறுத்தவரை, தலைமைத்துவம் என்பதில் கொஞ்சம் "ரௌத்திரம்" அடங்கியிருக்க வேண்டும். தெளிவாக, வெளியே வரக் கூடிய குரலில் பேசக்கூட இயலாத எதிராளிகளை வைத்துக் கொண்டு அர்ச்சுனா நன்கு எஞ்ஜோய் பண்ணுகிறார் என நினைக்கிறேன்😂

டொக்டர் அர்ச்சுனாவை மக்களின் பிரச்சனைகளை தீர்க்க போராடும் ஒருவராகவே இதுவரை பார்த்தேன். வட்சப்பில் அவரை மாபெரும் தலைவன்  என்றும்,  வீரபையன்26   வார்த்தையில் சொல்வதானால்  பெரும் தலைவர் அர்ச்சுனா என்றும் செய்திகள் அடிக்கடி  அனுப்பி  கொண்டிருந்தார்கள்.  அதனால் வேறு எதுவும் நான் நினைக்கவில்லை இப்போது யாயினியும் நீங்களும் சொன்ன பின்பு தான் யோசிக்கின்றேன்🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

டொக்டர் அர்ச்சுனாவை மக்களின் பிரச்சனைகளை தீர்க்க போராடும் ஒருவராகவே இதுவரை பார்த்தேன். வட்சப்பில் அவரை மாபெரும் தலைவன்  என்றும்,  வீரபையன்26   வார்த்தையில் சொல்வதானால்  பெரும் தலைவர் அர்ச்சுனா என்றும் செய்திகள் அடிக்கடி  அனுப்பி  கொண்டிருந்தார்கள்.  அதனால் வேறு எதுவும் நான் நினைக்கவில்லை இப்போது யாயினியும் நீங்களும் சொன்ன பின்பு தான் யோசிக்கின்றேன்🤔

இது மிகவும் சிக்கலான பிரச்சனை. மருத்துவர் அர்ச்சனா தவறானவர் என கூறுவதற்கில்லை. இங்கு சம்மந்தப்பட்டுள்ள பல்வேறு விடயங்களை அணுகுவதில், கையாள்வதில் பலருக்கும் அனுபவம் இல்லை. சமூக ஊடகம் சம்மந்தமாக தெளிவான வரையறைகள் சட்டத்தில் உள்ளதா தெரியவில்லை. சமூகத்தில் ஏற்கனவே புரையோடிப்போயுள்ள காயத்திற்கு அர்ச்சனா ஒரு தனி ஆளாக மருந்து கட்ட முடியாது.

இன்று அர்ச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என செய்தி பார்த்தேன். பொதுநலன் கருதி மக்கள் நலனுக்காக குரல் கொடுத்த ஒருவர் தண்டிக்கப்பட்டால் எதிர்காலத்திலும் அர்ச்சுனா போன்று மற்றையவர்கள் குரல் கொடுக்க முன்வரமாட்டார்கள். எல்லோரும் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்ந்தால் ஊழல்களை ஒழிக்க முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வைத்தியர் அர்ச்சானா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்துகள் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எனினும், வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தடை உத்தரவு

மேலும், வைத்தியர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாளை ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Doctor Ramanathan Archchuna Court Case

சாவகச்சேரி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு அமைய இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதை வைத்தியர் அர்ச்சானா உறுதிப்படுத்தி, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/doctor-ramanathan-archchuna-court-case-1721119677

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிணை; முகநூல் நேரலைக்கும் தடை

Published By: DIGITAL DESK 3   16 JUL, 2024 | 03:48 PM

image
 
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்று 75 ஆயிரம் ரூபாய் ஆள் பிணை மற்றும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுத்துள்ளது. 

சாவகச்சேரி  வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

அவற்றின் மீதான விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை (16) மன்றில் நடைபெற்றது. அதன் போது, வைத்தியர் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

வழக்கு விசாரணைகளை அடுத்து, வைத்தியரை 75ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்த மன்று, வைத்தியசாலைக்கு செல்லவோ, நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் முகநூல் நேரலையிலையோ, பதிவுகள் ஊடாக கருத்து தெரிவிக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளையும் மன்று விதித்துள்ளது. 

அதேவேளை வைத்தியர் அர்ச்சுனா குற்றம் சாட்டிய மற்றைய வைத்தியர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலங்களை வழங்குமாறும் மன்று கட்டளையிட்டது. 

அத்துடன், பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் அளிக்க தவறினாலோ, அல்லது ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறினாலோ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு மன்று பணித்துள்ளது.

https://www.virakesari.lk/article/188616

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு கடும் நெருக்கடி!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றகோரி மீண்டும் இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் அர்ச்சுனாவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராமநாதன் அர்ச்சனாவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நடவடிக்கைகளில் ஈடுபட சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் நேற்று தடை விதித்ததோடு, அவரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில் விடுவித்தது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுமூகமான செயற்பாட்டிற்காக, முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சனாவை வைத்தியசாலையின் நிர்வாக செயல்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இருந்தபோதிலும் வைத்தியசாலையின் விடுதிக்குள் தாங்குவதற்கு மட்டும் நீதிபதி அனுமதி வழங்கினர்.

இந்நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா இன்று காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றவேண்டும் என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர், இல்லையேல் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை விடுதி வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளே அமைந்துள்ளது என்ற காரணத்தை குறிப்பிட்டு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நான்கு மணி நேரத்துக்கு பிற்போடப்ட்டுள்ளது.

நீதிமன்றத்தின் ஊடாக சாதகமான முடிவுகள் கிடைக்கபெறாதவிடத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கிளையினர் மீண்டும் இன்று மதியம் பகிஸ்கரிப்பை மேற்கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.
 
http://www.samakalam.com/வைத்தியர்-அர்ச்சுனாவுக்/

“அர்ஜூனா செல்ல வேண்டும்” மீண்டும் போராட்டம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (17) காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும்.

இல்லை என்றால் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர்,  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

சாவச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டதன் பின்பு ஏற்பட்ட பிரச்சனைகள்  யாவரும் அறிந்த ஒன்று. இவ்விடயம் தொடர்பான தவறான புரிதல்கள் பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதனால் அது பற்றிய தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம்.

தனிப்பட்ட ஒரு மருத்துவரின் நிர்வாகம் சார்ந்த பிரச்சனை ஒட்டுமொத்த வைத்திய சமுகத்தையும் பாதித்துள்ளது. எனவே  உண்மை நிலையை எடுத்துரைப்பதோடு அறிவுக் கண்கொண்டு இவ்விடயத்தை பொதுமக்கள்  அணுக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பதவியேற்ற பின்னர் அங்கு கடமையாற்றிய அனைத்து வைத்தியர்களும் ஒருமித்த குரலில் வைத்தியசாலையை விட்டு வெளியேறி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்றும் காலக்கெடு இன்றி விடுதியில் இருந்து கடமையாற்றிய வைத்தியர்களை உடனடியாக வெளியேற்றும் சர்வாதிகார முறையினை பிரயோகித்தது சரியா எனவும் நீங்கள் ஏன் சிந்திக்க மறந்தீர்கள் ?

ஒரு வைத்தியராக நோயாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பான சிகிச்சையை வழங்க முடியாமல் போகும் பட்சத்தில் தொடர்ந்து அங்கு பணியாற்றுவது என்பது முடியாத ஒன்று.  நோயாளர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத  நிலையில் அங்கு பணியாற்ற முடியாத நிலைக்கு வைத்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரம் உடனடியாக பணிப்புறக்கணிப்பையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. 

தான் கடமையேற்ற இரண்டு மணித்தியாலங்களில் வைத்தியர்கள் தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியேறுமாறு அவர் பணித்துள்ளார்.

மகப்பேற்று விடுமுறையில் இருந்தவர்கள் என்று கூடக் கருதாமல் மனிதாபிமானம் அற்ற முறையில் கட்டாய இடமாற்றத்திற்கு வைத்தியர்களை உள்ளாக்கியுள்ளார்.

வைத்தியர்களது மூடப்பட்டிருந்த  விடுதிகளை உடைத்து தன்னகப்படுத்தியுள்ளார்

இவரது அதிகார தோரணைகளையும் அட்டூழியங்களையும் தட்டிக் கேட்ட வைத்தியர்களை உளரீதியாகப் பாதிப்புக்கு ஆளாகும் படியான தகாத வார்த்தைப் பிரயோகங்களால் பேசியதுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கட்டாய இடமாற்றங்களையும் வழங்கியுள்ளார். இதனால் வைத்தியர்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். 

வைத்தியர்கள் மீது இவர்  கொண்டிருந்த தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளே இவரது சர்வாதிகாரத்தனமான செயற்பாடுகளுக்குக் காரணமாகியுள்ளது. இவற்றை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி பொறுமை காத்து வந்தனர் சாவச்சேரி வைத்தியர்கள்.

அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவுகளை மின் பிறப்பாக்கி வசதியற்ற கட்டடத்திற்கு மாற்ற முற்பட்ட வேளையில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே பாதுகாப்பாக இக்கட்டடத்தை மீள ஆரம்பிப்போம்  இல்லையெனில் அதற்கான மாற்று ஏற் பாடுகளை மேற்கொள்வோம் என வைத்திய நிபுணர்கள் அறிவுரை கூறியபோதும் அவசர அவசரமாக தன்னிச்சையான முடிவுகளை எடுத்து  இடமாற்றியுள்ளார்.

இரண்டாம் மாடிக்கு மாற்றப்பட்ட மகப்பேற்று விடுதிக்குப் பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணியை மின்தடை காரணமாக மேலெடுத்துச் செல்ல முடியாத நிலையில்  சாதாரணமாக மேற்கொள்ள வேண்டிய பிரசவத்தையும் செய்ய முடியாத நிலையில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வழமையாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசவத்தையும் அங்கு நடத்த முடியாதவாறே இவர் பணியாற்றியுள்ளார். 

இவற்றையெல்லாம் ஏற்கனவே எதிர்வுகூறித் தான் வைத்திய நிபுணர்கள் அவருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கியிருந்தனர். இவரது பொறுப்பற்ற செயல்களினால் பாதிக்கப்பட்டது பொதுமக்களே.

இதன் பின்பே வைத்தியர்கள் தங்களது பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளரை அணுகினர். அவர்களும் அங்கு விஜயத்தை மேற்கொண்டு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை மாகாணப் பணிமனைக்கு மாற்றலாகுமாறு பணித்து இருபத்தினான்கு மணி நேரம் நிறைவுற்றும் அதனை செயற்படுத்த முடியாமல் போனதால் தொழிற்சங்கமாகிய அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடப்பாட்டிற்குள்ளாக்கப்பட்டோம்.

நாம் நமது தொழிற்சங்க கூட்டத்தை நடாத்துகின்ற இடத்தில் இவர் காணொளி எடுத்து எமது கூட்டத்தை குழப்பும் நோக்கத்தோடு செயற்பட்டதாலேயே இவரது கைபேசி தட்டி விடப்பட்டு  அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாறாக இவர் கூறுவது போன்று எவரும் அங்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம்.

வைத்தியர்கள் அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை அறிந்து ஆதாரங்களற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை  மேலதிகாரிகள் மீதும் வைத்தியர்கள் சமுகத்தின் மீதும் சுமத்தி மக்களை தன் வசப்படுத்தி தன்னை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இவர் நன்கு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றார். வைத்தியர்கள் மீது சுமத்தப்படுகின்ற ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்துமே  இவரது கபட நாடகமே.

இவர் வன்முறைகள் நடந்ததாக கூறி  பொதுசன ஊடகங்களை தவறான முறையில் பாவித்து தனக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள இவரால் கூறப்பட்டவை இவரது கட்டுக் கதைகளும் கற்பனைகளுமே தவிர எந்தவித வன்முறைச் சம்பவங்களும் அன்று வைத்திய சாலையில் நிகழவில்லை .

வைத்தியர்கள் அவருக்கு எதிரான முறைப்பாடுகளை முன்னெடுப்பதை அறிந்த வைத்தியர் ஆதாரங்கள் அற்ற பிழையான சாத்தியமற்ற குற்றச்சாட்டுகளை தனது மேலதிகாரிகள்மீதும் வைத்தியர்கள் மீதும் சுமத்தி மக்களை திசை திருப்பி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள புத்திசாதுரியமாக முனைக்கின்றார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய நாங்கள் நியாயமான திணைக்கள ரீதியான குற்றச்சாட்டுகளை விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை எப்போதும் மேற்கொண்டு வருவதோடு ஊக்கப்படுத்தியும் வருகின்றோம்.

வைத்தியர்களுக்குள் நடக்கும் உட்பூசல்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் தீய சக்திகள் மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்பி வசை பாடவைத்து தமது அரசியல் கபட நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இன்று வரை எத்தனை நோயாளிகள் அதி தீவிரத்தன்மையுடன் வருகை தந்து தமக்கான மருத்து சிகிச்சைகளைப் பெற்றுச் சென்றுள்ளனர. ஆளணிப் பற்றாக்குறை, கட்டமைப்பு ரீதியிலான சிக்கல் வாய்ந்த தன்மை, பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கு     மத்தியில் அங்கு பணியாற்றி வருகின்ற வைத்தியர்கள் அர்ப்பணிப்புடனும் தம்மை நாடிவரும் நோயாளர்களுக்குத் தேவையான சேவைகளை திறம்பட ஆற்றி வருகின்றனர். 

வைத்திய நிர்வாகியான இராமநாதன் அர்ச்சுனா ஏனைய வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் முன்னுதாரணமாக செயற்படுவதை விடுத்து நோயாளர்களது உணவைத் தான் உண்பது, வேலை நேரங்களில் சமூக வலைத்தளங்களினைப் பயன்படுத்தல், தனது உயர் அதிகாரிகளின் கட்டளைகளை மீறுதல், வைத்தியசாலை  விடுதிகளை தன்னகப்படுத்தல், தனக்கு நியமிக்கப்பட்ட நியமனத்திற்கு செல்லாமல் சாவகச்சேரி வைத்தியசாலையின் சாதாரண செயற்பாடுகளுக்கு ஊறு விளைவித்து வருகிறார்.

தான் இதுவரை பெற்றுக் கொள்ளாத பட்டத்தினை தனது அலுவலக முத்திரையாகவும், அலுவலக ஆவணங்களிலும் பயன்படுத்துவதென்பது சட்டப்படி பாரிய குற்றமாகும்.

இவ்வாறு அரச சேவையில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் செய்வாராயின்  நாட்டின் நிலைமை என்னவாகும்?

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மாற்றப்பட்டு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டதன் பின்பு வைத்தியசாலை நடவடிக்கைகள் யாவும் சுமுகமான நிலைக்குத் திரும்பியுள்ளமை நீங்கள் யாவரும் அறிந்த வொன்று.

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வைத்தியசாலை விடுதியை மீள ஒப்படைக்காமல் அங்கு தங்கியிருந்து வைத்தியசாலைக்குள் வெளியாட்களை  அழைப்பது ,சமூக வலைத்தளப் பதிவுகளூடாக மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்ப முனைவது, போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வைத்தியசாலையில் கடமையில் இருக்கும் வைத்தியர்களும் விடுதியில் உள்ள வைத்தியர்களும் சாதாரண செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாது சிரமங்களை ஏற்படுத்துவதோடு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருகின்றது. 

இவ்விடயம் தொடர்பாக மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் நாம் வைத்தியசாலை நடவடிக்கைகளை சுமுகமாக்குவதற்கும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

இவ்விடயம் தொடர்பாக பொது மக்களாகிய தாங்கள் அறிவுக் கண்கொண்டு சிந்தித்து செயற்படுமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள்  வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிடமிருந்து இன்று 17/7/2024 காலை 8 மணிக்கு முன்பு வைத்தியசாலை விடுதியை பெற்று,  வைத்தியசாலை சேவையை சுமூகமாக இயங்குவதற்கும் வைத்தியர்களிற்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க தவறின் நாம் எமது உறுப்பினர்களாகிய வைத்தியர்கள் அனைவரையும் காலை 8 மணி முதல் வைத்தியர் இராமணாதன் அர்ச்சுனா விடுதியை ஒப்படைத்து வெளியேறும் வரை தொழிற்சங்க போராட்டமாக யாழ் .பிராந்திய சுகாதார பணிமனையில் இணைக்கவுள்ளோம் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். - என்றுள்ளது. R
 
https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அர்ஜூனா-செல்ல-வேண்டும்-மீண்டும்-போராட்டம்/71-340526

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே - சுகாதார அமைச்சர்

Published By: DIGITAL DESK 3   17 JUL, 2024 | 03:07 PM

image
 
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என அமைச்சர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/188677

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா கதையின் நீதி: பத்துப் பேர் சுற்றி நின்று கரகோஷம் செய்கிறார்கள் என்பதற்காக பப்பா மரத்தில் ஏறக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாக்குத்தர் அர்ச்சுனா தான் பாக்க வந்த வேலையை சிவனே எண்டு பார்த்துக் கொண்டிருக்கலாம். கனக்க கதைக்க வெளிக்கிட்டு இப்ப டக்ளஸ் தேவானந்த அரசியலில் வந்து நிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தர்மத்துக்கும் ஊழலுக்குமான் போராட்டத்தில்

இலங்கையில் புரையோடிப் போயுள்ள ஊழல் வென்றுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2368.jpg

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

டாக்குத்தர் அர்ச்சுனா தான் பாக்க வந்த வேலையை சிவனே எண்டு பார்த்துக் கொண்டிருக்கலாம். கனக்க கதைக்க வெளிக்கிட்டு இப்ப டக்ளஸ் தேவானந்த அரசியலில் வந்து நிக்கிறார்.

இனிப்பாருங்க யாழில் அவருக்கு சேரப் போகும் கூட்டத்தை......?

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6873.jpeg.b5b4bb5e76f284ba2404

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

டாக்குத்தர் அர்ச்சுனா தான் பாக்க வந்த வேலையை சிவனே எண்டு பார்த்துக் கொண்டிருக்கலாம். கனக்க கதைக்க வெளிக்கிட்டு இப்ப டக்ளஸ் தேவானந்த அரசியலில் வந்து நிக்கிறார்.

இவ‌ர் ஏன் இதுக்கை அர‌சிய‌லை பற்றி க‌தைக்கிறார்

அவ‌ர் கூப்பிட்டால் அவ‌ரிட‌த்தில் போய் நிக்க‌ வேண்டிய‌து தானே

ட‌க்கிள‌ஸ் சிங்க‌ள‌வ‌னுக்கு பின்னால் நின்று கொண்டு த‌லைவ‌ரை எதிர்த்து நின்ற‌வ‌ர் இது தான் உண்மையான‌ வ‌ர‌லாறு......................இவ‌ரை போய் நேர்மையாள‌ன் என்று சொன்ன‌ என்ர‌ வாயை பினாயி ஊத்தி க‌ழுவ‌னும்........................

நாட்டில் ந‌ட‌க்கும் ஊழ‌ல்க‌ள் முறைகேடுக‌ளை த‌ட்டிக்கேக்கும் ந‌ப‌ர் என்று நினைத்தேன் ஆனால் இவ‌ர் ஒரு ப‌டி மேல‌ போய் ட‌க்ள‌ஸ் புக‌ழ் பாடுகிறார்........................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

மன்னிக்கோணும்! பினாயில் இந்திய பிராண்ட், எங்கள் ஊரில் ஹார்பிக் தான், பரவாயில்லையா😂?

  • கருத்துக்கள உறவுகள்

 ஏற்கனவே   தின்று கொழுத்த பன்றிகள் நடுவே தனியாக ஒரு பசு  சமாளிப்பது கஷ்டம்.  பண பலமும் பதவி பலமும் அதிகம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர் ஏன் இதுக்கை அர‌சிய‌லை பற்றி க‌தைக்கிறார்

அவ‌ர் கூப்பிட்டால் அவ‌ரிட‌த்தில் போய் நிக்க‌ வேண்டிய‌து தானே

ட‌க்கிள‌ஸ் சிங்க‌ள‌வ‌னுக்கு பின்னால் நின்று கொண்டு த‌லைவ‌ரை எதிர்த்து நின்ற‌வ‌ர் இது தான் உண்மையான‌ வ‌ர‌லாறு......................இவ‌ரை போய் நேர்மையாள‌ன் என்று சொன்ன‌ என்ர‌ வாயை பினாயி ஊத்தி க‌ழுவ‌னும்........................

நாட்டில் ந‌ட‌க்கும் ஊழ‌ல்க‌ள் முறைகேடுக‌ளை த‌ட்டிக்கேக்கும் ந‌ப‌ர் என்று நினைத்தேன் ஆனால் இவ‌ர் ஒரு ப‌டி மேல‌ போய் ட‌க்ள‌ஸ் புக‌ழ் பாடுகிறார்........................

அப்பன் நீங்களோ நானோ அரசியல்வாதிகளை சாடுவோம்.குற்றம் சாட்டுவோம்.உலக அரசியல்வாதிகளின் கொள்கைகளை கூட விமர்சிப்போம். அது எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி....
ஆனால் நாம் விமர்சிக்கும் அரசியல் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டும் என்பதிற்கு பதிலாக எம்மை/தனிப்பட்ட வாழ்க்கையை விமர்ச்சிப்பவர்கள் தான் அதிகம்..

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிலாமதி said:

 ஏற்கனவே   தின்று கொழுத்த பன்றிகள் நடுவே தனியாக ஒரு பசு  சமாளிப்பது கஷ்டம்.  பண பலமும் பதவி பலமும் அதிகம். 

ஆனால் பல உண்மைகள் மக்களுக்கு இதனால் கிடைக்க இருக்கின்றன. அது அர்ஜுனா சார்ந்ததாகவும் இருக்கலாம். ??

  • கருத்துக்கள உறவுகள்

டொக்டர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார் 👇

நான் ஒரு யதார்த்தவாதி
நான் ஒரு புலி ஆள் என்று சொல்லவில்லை
செல்வராசா கயேந்திரன் முதலில் சொல்லி பார்த்தவரம் புலி தலைவரை தூக்கினால் பிரச்சனை முடிந்து விடும். இப்படி பட்டவர்கள் தாம் தமிழ் இனம்.
திருந்துங்கோடா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இவ‌ர் ஏன் இதுக்கை அர‌சிய‌லை பற்றி க‌தைக்கிறார்

அவ‌ர் கூப்பிட்டால் அவ‌ரிட‌த்தில் போய் நிக்க‌ வேண்டிய‌து தானே

ட‌க்கிள‌ஸ் சிங்க‌ள‌வ‌னுக்கு பின்னால் நின்று கொண்டு த‌லைவ‌ரை எதிர்த்து நின்ற‌வ‌ர் இது தான் உண்மையான‌ வ‌ர‌லாறு......................இவ‌ரை போய் நேர்மையாள‌ன் என்று சொன்ன‌ என்ர‌ வாயை பினாயி ஊத்தி க‌ழுவ‌னும்........................

நாட்டில் ந‌ட‌க்கும் ஊழ‌ல்க‌ள் முறைகேடுக‌ளை த‌ட்டிக்கேக்கும் ந‌ப‌ர் என்று நினைத்தேன் ஆனால் இவ‌ர் ஒரு ப‌டி மேல‌ போய் ட‌க்ள‌ஸ் புக‌ழ் பாடுகிறார்........................

🤣.........

என்ன பையன் சார்........ இவர் கடைசியில் நியூயோர்க் பிட்ச் மாதிரி ஆகிவிட்டாரா..... தூக்கிப் போட்டிட்டு அடுத்ததிற்கு காத்திருப்போம்........

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

டாக்குத்தர் அர்ச்சுனா தான் பாக்க வந்த வேலையை சிவனே எண்டு பார்த்துக் கொண்டிருக்கலாம். கனக்க கதைக்க வெளிக்கிட்டு இப்ப டக்ளஸ் தேவானந்த அரசியலில் வந்து நிக்கிறார்.

அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறி உள்ளார். இதில் தவறு ஏது? தம்மை அதி தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டு தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களையும், சுய லாபங்களையும் கவனத்தில் எடுப்பவர்களுடன் ஒப்பிடும்போது இவர் எவ்வளவோ மேல் போல் உள்ளதே. 

டக்லஸ் ஆதரவு இவருக்கு உள்ளது என்றால் பிறகு ஏன் சாகவச்சேரியில் வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் பகிரங்கமாக உதவி கேட்கின்றார். தனக்கு யாராவது உதவி செய்யக்கூடிய வழக்கறிஞர் தேவை என ஏன் அறிவித்தார்? இவருக்கு ஏன் வழக்கறிஞர் கிடைக்கவில்லை? 

எமது சமுதாயத்திற்காக குரல் கொடுக்க வந்ததுதான் இவர் செய்த தவறா? நீங்கள் சொல்வதுபோல் வாயை மூடிக்கொண்டு தனது பதவியை தக்கவைக்க தவறிவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்திற்கு ‘Good bye’ கூறினார் வைத்தியர் அர்ச்சுனா!

பொது மக்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றிய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாணத்திற்கு “Good bye” என்றும் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இனி அரசியல்வாதிகள் எவரையும் நம்பக்கூடாது என்பதை தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Oruvan

யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை பயணம் செய்திருந்த சுகாதார அமைச்சர், சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் அத்தியட்சகர் தற்போது நியமனம் பெற்றுள்ளவரே என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, “இன்றிலிருந்து இந்த கறை படிந்த சிஸ்டத்தில் மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக வேலை செய்ய மாட்டேன்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

http://www.samakalam.com/வட-மாகாணத்திற்கு-good-bye-கூறின/
 
  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி வைத்தியசாலையில் அரசால் மக்களுக்கு கொடுக்கபட்ட மருத்துவ வசதிகளை மக்கள் பெற்கொள்ளவிடமால் பன்றிகள் பறித்து தின்று கொழுத்து கொண்டிருந்த போது அதற்கு எதிராக தனி ஒரு ஆளாக போராடிய டொக்டர் அர்ச்சுனா மிகச் சிறந்தவர்.மிகவும் பாராட்டுக்குரியவர் 🙏

4 hours ago, நியாயம் said:

அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறி உள்ளார். இதில் தவறு ஏது? தம்மை அதி தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டு தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களையும், சுய லாபங்களையும் கவனத்தில் எடுப்பவர்களுடன் ஒப்பிடும்போது இவர் எவ்வளவோ மேல் போல் உள்ளதே. 

அது தானே பிரச்சனையே.  டொக்டர் அர்ச்சுனாவும் ஒரு மேற்குலகநாட்டில் குடியேறி இருந்து கொண்டு அப்படி அவர்கள் எதிர்பார்ப்பது போன்று  தன்னை  காட்டி  கொண்டு  சிமாட்போனில் ,  லப்ரொப்பில் தட்டி கொண்டிருந்தால் வாழ்த்துக்கள் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நியாயம் said:

அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறி உள்ளார். இதில் தவறு ஏது? தம்மை அதி தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டு தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களையும், சுய லாபங்களையும் கவனத்தில் எடுப்பவர்களுடன் ஒப்பிடும்போது இவர் எவ்வளவோ மேல் போல் உள்ளதே. 

டக்லஸ் ஆதரவு இவருக்கு உள்ளது என்றால் பிறகு ஏன் சாகவச்சேரியில் வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் பகிரங்கமாக உதவி கேட்கின்றார். தனக்கு யாராவது உதவி செய்யக்கூடிய வழக்கறிஞர் தேவை என ஏன் அறிவித்தார்? இவருக்கு ஏன் வழக்கறிஞர் கிடைக்கவில்லை? 

எமது சமுதாயத்திற்காக குரல் கொடுக்க வந்ததுதான் இவர் செய்த தவறா? நீங்கள் சொல்வதுபோல் வாயை மூடிக்கொண்டு தனது பதவியை தக்கவைக்க தவறிவிட்டார். 

வைத்தியர் அர்ச்சனாவை நான் எங்கும் குறை சொல்லவில்லையே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.