Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொன்னாலும் சொல்லாட்டிலும் இவள் தாண்டா இப்ப மொடேர்ன் காதலி!!!

Featured Replies

காதல் கிங்கை மீண்டும் ஒருவர் கவிதை ஒன்றை எழுத உசுப்பேத்தி உள்ளார். நானும் எனது சரக்கை இங்கு அவிழ்த்து விட்டுள்ளேன்.

சொன்னாலும் சொல்லாட்டிலும் இவள் தாண்டா இப்ப மொடேர்ன் காதலி!!!

sunforwebtf9.gif

எல்லாமே நீ தானடி!!

கவனக் குறைவாக நான்

எனது வாழ்க்கை காரை ஓட்டி

அக் சிடண்ட் பட்ட போது

உயிர்ப் பிச்சைதந்த Air Bag..

கயவர்கள் எனைப்பிடித்து

அதளபாதாளத்தில் தள்ளிவிடும்

அகால நேரங்களில்

என் சுவாசத்திற்கு உதவும்

ஒட்சிசன் சிலிண்டர்..

எனக்குள் இருக்கும்

வியாதிகளைக் கண்டுபிடித்து

சிகிச்சை தருகின்ற லேசர் கதிர்..

நான் சோர்வடையும் நிலையில்

instant ஆக

அன்பைப் பொழிகின்ற

ATM மிசீன்..

என் உடலை செழிப்புடன்

வைத்திருக்க ஊக்குவிக்கும்

Fitness கருவி..

டயல் அப் வேகத்தில்

உலகை பிரவுஸ் பண்ணிய என்னை

டிஜிட்டல் கேபிள் வேகத்திற்கு

மாற்றிவிட்ட Modem..

அடுத்து என்ன செய்யப் போறேன்

அடுத்து என்ன செய்யப் போறேன்

என்று வழி தெரியாது நான்

தனித்து நின்று தவித்தபோது..

ஸ்டெப் பை ஸ்டெப் ஆக

என்னை வழிநடத்திச் செல்லும்

ஓர் அழகிய Wizard Window..

என் வாழ்க்கையையும்

ஓர் சரித்திரமாக்கி

மற்றவர் முன்னால்

அழகிய முறையில்

பிரசண்டேசன் செய்யும்

Power point Slides..

உலகத்தில் உள்ள

கண்ட கண்ட குப்பைகள்

எனது மனதினை ஆக்கிரமித்து

சேதப்படுத்தாது இருக்க

என்னை கண்ணிமை போல்

காவல் செய்யும் Firewall..

நான் விரும்பும் நேரங்களில்

எனது இதயத்தில் இனிய

கீதங்களை ஒலிக்கின்ற

media player..

சமயத்திற்கு தகுந்தபடி

எல்லாருக்கும் விளங்கக்கூடிய

யுனிக்கோர்டில் என்

உள்ளத்தின் உணர்வுகளை

வெளிப்படுத்த உதவும் சுரதா Keyman..

விதம் விதமாக தினமும்

நல்ல பல நிகழ்ச்சிகளை

என்மனத்திரையில் காண்பிக்கும்

Satellite channels..

வாழ்வில் நான் செய்யும்

ஒவ்வொரு Transactionஇலும்

எனக்கு போனசாய் கிடைக்கின்ற

Air miles..

மொத்தத்தில்..

இந்த உலகத்தை

எனக்கு சுத்திக்காட்டும்

SAS விமானசேவை..

கண்ணே கண்மணியே காதலியே..

எல்லாமே எனக்கு நீ தானடி!!

எவர் சொன்னாலும்..

சொல்லாவிட்டாலும்..

நீ தானடி இவ்வுலகத்தின்

மொடேர்ன் காதலி!!!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னாலும் சொல்லாட்டிலும் இவள் தாண்டா இப்ப மொடேர்ன் காதலி!!!

எல்லாமே நீ தானடி!!

எடுத்ததில் எல்லாம்

கவனமா இருந்தவனை..

கவனக் குறைவாக்கி

எனது வாழ்க்கை காரை

எல்லை மீறி ஓட வைச்சு

அக்சிடண்ட் பண்ண வைச்சு

பாதியுயிர் போகடிச்ச

பிஞ்சு போன Air bag

உன் சற்றிங்

சகவாசத்தால்

கூட்டுச் சேர்ந்த

கயவர்கள் மத்தியில்

என்னைப் பழகவிட்டு

அதளபாதாளத்தில் தள்ளிவிட்டு

அகால நேரங்களில்

என் சுவாசத்திற்கு

கேடு செய்ய வந்த

expired ஆன ஒட்சிசன் சிலிண்டர்.

எனக்குள் இருக்கும்

வியாதிகளைக் கண்டுபிடித்து

சிகிச்சை தருகின்ற லேசர் கதிராக

பாவனை செய்தபடி..

Radiotherapy பெறும்

Cancer patient ஆக்கி

சிறுகச் சிறுக சாகடிப்பவள்.

instant ஆக

அன்பைப் பொழிகின்ற

ATM மிசீனாகி இருந்தவள்

கிரடிட் கார்ட் எக்ஸ்பயர் ஆக

ATM போல என்னையே

Reject பண்ணுபவள்.

இயற்கையின் வனப்பில்

இருந்த என்னை..

ஆசை வார்த்தை காட்டி

செயற்கையின் போலிக்குள்

செல்ல வைத்து

என் உடலை செழிப்புடன்

வைத்திருக்க ஊக்குவிக்கும்

Fitness கருவியாகி

தினமும் தசைநார்களை

அளவுக்கு மிஞ்சி

இழுக்க வைத்து

சேதம் பண்ணி

விரைந்து முதுமைக்குள்

தள்ளி விட்டு

என்னை Ex ஆக்கி

இன்னொன்றை

use பண்ண

many boy friends தேடுபவள்.

டயல் அப் வேகத்தில்

உலகை பிரவுஸ் பண்ணிய என்னை

டிஜிட்டல் கேபிள் வேகத்திற்கு

மாற்றிவிட்ட Modem மாகி

பொன்னான என் பொழுதுகளை

தன்னோடே கணணியில்

கழிக்க வைக்க

என் வாழ்வை சீரழிக்க

சதி செய்பவள்.

அடுத்து என்ன செய்யப் போறேன்

அடுத்து என்ன செய்யப் போறேன்

என்று வழி தெரியாது நான்

தனித்து நின்று தவித்தபோது..

ஸ்டெப் பை ஸ்டெப் ஆக

என்னை வழிநடத்திச் செல்லும்

ஓர் அழகிய Wizard Window ஆக வந்து

என்னைக் கவர்ந்து

மெய்மறக்க வைத்து

இடையில் fault message தந்து

Mental Hospital க்கு அனுப்புபவள்.

என் வாழ்க்கையையும்

ஓர் தரித்திரமாக்கி

மற்றவர் முன்னால்

தன்னால் வந்த அசிங்கத்தின்

அழகினை

அழகிய முறையில்

விளம்பரம் செய்யும்

பிரசண்டேசன்

Power point Slides..

உலகத்தில் உள்ள

கண்ட கண்ட குப்பைகள்

எனது மனதினை ஆக்கிரமித்து

சேதப்படுத்தாது இருக்க

என்னை கண்ணிமை போல்

காவல் செய்யும் Firewall..

போல வந்து

என் வாழ்க்கையையே

தன் வீட்டு Walls குள் அடக்கி

வார்த்தைகளால் Fire யை கக்கி

என்னை தினமும் எரிப்பவள்.

நான் விரும்பும் நேரங்களில்

எனது இதயத்தில் இனிய

கீதங்களை ஒலிக்கின்ற

windows media player யராகி

வாழ்வின் இன்னிசையாகி

மகிழ்வைத் தந்த

Winamp player

மறக்கப் பண்ணியவள்..!

சமயத்திற்கு தகுந்தபடி

எல்லாருக்கும் விளங்கக் கூடிய

யுனிக்கோர்டில் என்

உள்ளத்தின் உணர்வுகளை

வெளிப்படுத்த உதவும் சுரதா Keyman ஆக்கி

தன் கெட்டித்தனங்களுக்கு

கொட்டமடிக்க

என்னை அடிமையாக்கி

ஆள்பவள்.

விதம் விதமாக தினமும்

நல்ல பல நிகழ்ச்சிகளை

என்மனத்திரையில் காண்பிக்கும்

Satellite channels ஆகி

"mid night" சனல்களால்

தன் அடங்காக செக்ஸுக்கு

என் வாழ்வை இரையிட்டவள்.

வாழ்வில் நான் செய்யும்

ஒவ்வொரு Transaction இலும்

எனக்கு போனசாய் கிடைக்கின்ற

Air miles யாய் இருந்து

விடுப்புப் பார்த்து விட்டு

தினமும்

Junk mail ளாய் பொரிந்து தள்ளுபவள்.

மொத்தத்தில்..

இந்த உலகத்தை

எனக்கு சுத்திக்காட்டும்

SAS விமானசேவை யாகி வந்து

ஸ்கண்டிநேவியன் குளிருக்குள்

என் வாழ்க்கையை உறைய வைத்தவள்.

கண்ணே கண்மணியே காதலியே..

எல்லாமே எனக்கு நீ தானடி!!

எவர் சொன்னாலும்..

சொல்லாவிட்டாலும்..

நீ தானடி இவ்வுலகத்தின்

மொடேர்ன் காதலி!!!

:lol::o

Edited by nedukkalapoovan

ஜெனரலும் நம்ம நெடுக்ஸ்தாத்தாவும் நல்லா தான் கவிதை எழுதீனம் :lol: .......இரண்டு பேரிற்கும் இரு வித்தியாசமான அநுபங்கள் போல காதலில் :lol: !!மொடர்ன் காதலி எப்படி இருந்தாலும் "காதல்" புனிதமாக இருந்தா காணும் தானே!! :o

யாழ்கள் ஜாக்கின் கவிதை!!

மொடேர்ன் காதலி இப்படியேன நெடுக்ஸ் தாத்தா கவி வடிக்க

ஜெனரல் இவ்வாறு கவி வடிக்க!!

காதல் அழகை பார்த்து வருவதில்லை

மக்டோனால்சை பார்த்து வருவதில்லை...!!

இரு உள்ளங்கள் புரிந்து வருவது

சில உள்ளங்கள் அதை அறியாம தவிர்பது

சில உள்ளங்கள் அறிந்தும் அறியாமல் போல் இருப்பதும்!!

சில உள்ளங்கள் மட்டுமே காதலை சுவாசிக்கின்றன!! :(

இந்த இரு கவிதைகளையும் வாசித்த வண்ணம்

ஜம்மு பேபி தன் இதய நாயகிக்கு!!

இதயத்தால் கொடுத்தான் முத்தம்!!

கவிதை எழுதுவது ஒரு சுகம்

அதை வாசிப்பது இன்னோர் சுகம்

அதை விட சுகம் காதலியை

இதயத்தால் நேசிப்பது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

பி.கு -நிஜமா கவிதை தான் எழுதினேன் கவிதை போல இல்லாட்டி வெறி சாறி ஆனா காதலி இதய தேவதை எல்லாம் கவிதைக்கு ஒரு ரைமிங் கொடுக்க தான் :lol: .........பிறகு பேபியை தப்பா நினைக்க கூடாது :) ........முக்கியமா புத்துமாமோய் ஒன்லி கவிதை தான்!! :lol:

  • தொடங்கியவர்

:o:lol: ஓ உங்கள் காதலி அப்படி ரொம்ப மோசமோ? எனது காதலி அப்படி இல்லை.. :lol:

உங்கள் மனதில் பட்ட காயம் ஆறுவதற்கு புதிய.. ஏதாவது nano technology மூலம் சிகிச்சை ஏதாவது செய்தால் தான் பலன் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

:o:lol: ஓ உங்கள் காதலி அப்படி ரொம்ப மோசமோ? எனது காதலி அப்படி இல்லை.. :lol:

உங்கள் மனதில் பட்ட காயம் ஆறுவதற்கு புதிய.. ஏதாவது nano technology மூலம் சிகிச்சை ஏதாவது செய்தால் தான் பலன் உண்டு.

எனக்கு காதல்.. காதலி மேல எல்லாம் நம்பிக்கை இல்லை.. எல்லாம் ஏமாற்று மொழிகள்..! :lol:

ஆனா கண்டிருக்கன்.. ஊர் உலகத்தில.. இப்படி இருக்கிறவை நிறையப் பேர...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு மாப்பு உங்க காதலியைத் தான் எல்லோரும் காதலிக்கினம்

அப்ப ஒரே நேரத்தில் பலருக்கு பதில்சொல்லக் கூடியவள்.

நாறிப்போக.

நல்லா முத்திட்டு எல்லாருக்கும்..உங்களுக்கெல்ல

எங்கே செல்லும் இந்த பாதை..யாரோ யாரோ அறிவார் :o:lol:

நெடுக்ஸ் தாத்தா கலைஞன் என்ன பிரச்சனை உங்கள் இரண்டு பேருக்கும்?? சின்ன வயசில பெண்களால ரொம்ப பாதிக்கப்பட்டனீங்களோ?? என்னட்ட சொல்லுங்கோ முடிஞ்சா உதவி செய்றன். [இப்பிடிக் கேக்கலாம் தானே உங்களிட்ட?? அடிக்க மாட்டிங்கள் தானே?]

Edited by Snegethy

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தாத்தா கலைஞன் என்ன பிரச்சனை உங்கள் இரண்டு பேருக்கும்?? சின்ன வயசில பெண்களால ரொம்ப பாதிக்கப்பட்டனீங்களோ?? என்னட்ட சொல்லுங்கோ முடிஞ்சா உதவி செய்றன். [இப்பிடிக் கேக்கலாம் தானே உங்களிட்ட?? அடிக்க மாட்டிங்கள் தானே?]

தாத்தாவட்டக் கேட்டியள் பிள்ள பறுவாயில்லை.. ஆனா பிள்ளைக்கு என்னாச்சு.. இப்படிப் போட்டிருக்கிறீங்களே கையெழுத்தில..

"காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம்...!"

நெருப்பில.. தெரிஞ்சு கொண்டும் இறங்கி.. நடனமாடி.. உயிரை உருக்கி.. வாழ்க்கைப் பயணத்தையே தொலைச்சிடாதேங்க.. நெருப்பு ஆபத்தானது கையாள்வதும் கடினம்.. அதைத்தான் நாங்களும் சொல்லுறம்..! :lol::o

Edited by nedukkalapoovan

சீ அடிக்க மாட்டினம் சினேகிதி!

ஆனால் இன்னும் டபுளா கவிதைகள் வரும்...பாருங்களேன்..கடைசி வசனங்கள் ஆவது வரும்.

சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது :-) அதுக்காக நாங்களும் பெடியங்களை மெசினுகளுக்கு ஒப்பிட்டுக்கொண்டு இருக்கிறதோ?? எவ்வளவு காதலர்கள் சந்தோசமா இருக்கினம் உங்களுக்கு ஒத்து வரேல்ல என்டதுக்கா நீங்கள எப்பிடி இப்பிடி நக்கலாக் கவிதை எழுதலாம். காதல் பாவம். அது அச்சாப்பிள்ளை அதை அதன் போக்கில விடுங்கோவன்..

Edited by Snegethy

  • தொடங்கியவர்

என்ன சினேகிதி நக்கலா? நான் எவ்வளவு உணர்வுபூர்வமாக கவிதை கவிதை ஒன்றை எழுதி இருக்கிறன், அதைப் பாராட்டாமல் இப்படி கேட்கிறீங்கள்? கவிஞர் வைரமுத்து இல்லாட்டி வேறு யாராவது சினிமாப் பாட்டு எழுதுபவர்கள் இப்படி எழுதினால் கேட்பீங்கள், நாங்கள் சொன்னால் கேட்கமாட்டீங்களோ?

பெண்களை கத்தரிக்காய், வாழைகாய், வெண்டிக்காய், கரட், பீற்றூட், மற்றும் பழவகைகள், நிலவு, வானம், சூரியன்.. இப்படி எல்லாவற்றுக்கும் ஒப்பிடும்போது ATM மிசீனுக்கு ஒப்பிடுவதில் என்ன தவறு உள்ளது? கவிதை என்றால் கற்பனை தானே?

மற்றது, எனது அழகிய கவிதைக்கு வேறு அர்த்தம் கற்பித்து, வேறு வழியில் உங்களை திசைதிருப்பும் நெடுக்காலபோவானை மிச்சம் கேளுங்கோ. வலைஞனின் பாஷையில் சொன்னால் இது நெடுக்காலபோவானின் இன்னொரு கருத்துத்திணிப்பு.. :lol::lol:

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இப்ப மொடர்னா கவிதை எழுதுறாங்க

வைரமுத்து என்ன என்ர அண்ணாவா தாத்தாவா அவரிட்ட ஏன் நான் கேக்கப் போறன்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு பேரும் சோக்கான ஆக்களப்பா :lol: நான் சொன்னது நெடுக்ஸ் சாமியையும் மாப்புவையும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது :-) அதுக்காக நாங்களும் பெடியங்களை மெசினுகளுக்கு ஒப்பிட்டுக்கொண்டு இருக்கிறதோ?? எவ்வளவு காதலர்கள் சந்தோசமா இருக்கினம் உங்களுக்கு ஒத்து வரேல்ல என்டதுக்கா நீங்கள எப்பிடி இப்பிடி நக்கலாக் கவிதை எழுதலாம். காதல் பாவம். அது அச்சாப்பிள்ளை அதை அதன் போக்கில விடுங்கோவன்..

அந்தக் காலம் தொடங்கி இந்தக் காலம் வரை பொடியளை ஒன்றுக்கும் உதவாததுகளாத்தான் பாக்கிறீனமே தவிர எங்க ஒப்பிடினம். எந்தப் பெண்ணாவது ஆணை உவமித்துப் பாடி இருப்பாளா..???!

பெண்களை மட்டும் மானே தேனே மயிலே நிலவே சொர்க்கமே சுகந்தமே என்று.. அவங்களைப் பற்றி பொய்யா அளந்தே அவையைப் பற்றி ஒரு பொய்யான இமேஜை வளர்த்து பொடியங்களை நாசம் பண்ணினதுதானே மிச்சம்.

இப்ப பொடியள் நவீனத்தோட ஒப்பிட்டு.. விசயத்தை தெளிவாக்கி அலேட் ஆகிக்கிறாங்க. அதற்கு நம்மளப் போல தாத்தாக்களும் அனுபவங்களைப் பகிர்ந்து உதவிக்கிறம். :lol::lol:

Edited by nedukkalapoovan

இது மிகவும் வரவேற்கத் தக்கது. மொடேன் technologyஓடு பெண்ணை compare பண்ணுவது. மிகவும் வித்தியாசமாகவுள்ளது.

செல்போன் போல சிரிப்பவளே

உன் கண்கள் என்ன கம்கோடரா?

என் மனதில் நிலைகொள்ளும் கனவுகளை

நீ zoom பண்ணி சொல்கிறாயெ..

ஒவ்வொரு நாளும் MSNஇல்

வந்து வந்து போகிறாயே

24/7 ம் computerல் - என்னை

இருத்தி வைத்து கொல்கிறாயே

உன் திருமுகம் கண்ட என் monitor

தவியாய் கிடந்து தவிக்கிறதே

webcam செய்த புண்ணியவானை

என் வாழ்நாள் முளுதும் மறவேனே

என்ன தாத்தா நீங்கள் பெண்களைப் பற்றி வாற பாடல்கள் மட்டும்தான் கேப்பிங்கிளோ?? ஆண்களை வர்ணிச்சு எத்தின பாடல்கள் இருக்கு..உதாராணத்து ஒன்று சொல்றன் :

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா யூலை காற்றில் யுபிட்ரில்...ஆறடி உயரம் அழகிய உருவம் அப்பிள் போல இருப்பானே"

அழகு நீ நடந்தால் நடையழகு! இப்பிடி எத்தின பாட்டிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தாத்தா நீங்கள் பெண்களைப் பற்றி வாற பாடல்கள் மட்டும்தான் கேப்பிங்கிளோ?? ஆண்களை வர்ணிச்சு எத்தின பாடல்கள் இருக்கு..உதாராணத்து ஒன்று சொல்றன் :

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா யூலை காற்றில் யுபிட்ரில்...ஆறடி உயரம் அழகிய உருவம் அப்பிள் போல இருப்பானே"

அழகு நீ நடந்தால் நடையழகு! இப்பிடி எத்தின பாட்டிருக்கு!

ஆண்களை ஆண்களே வர்ணிக்கிறது... வஞ்சகப் புகழ்ச்சி.. வியாபாரப் புகழ்ச்சி..!

பெண்கள் உளப்பூர்வமா வர்ணிக்கிறாங்களா.. கிடையாது. உளப்பூர்வமா... திட்டிக்கிறதைத் தவிர... குறை பிடிக்கிறதைத் தவிர.. அவங்களால வர்ணிக்கிறதென்பது முடியாது... அதற்கு அவங்க மனசு இடம் கொடாது.

ஆண்களைப் பாருங்க.. பெண்களை மொடேன் ரெக்னோலொஜி கூட வர்ணிக்கிற அளவுக்கு பெண்களின்ர "திறனை???" மதிப்பிட்டுள்ளாங்க..! :lol::lol:

Edited by nedukkalapoovan

பெண்கள் உளப்பூர்வமா வர்ணிக்கிறாங்களா.. கிடையாது. உளப்பூர்வமா... திட்டிக்கிறதைத் தவிர... குறை பிடிக்கிறதைத் தவிர.. அவங்களால வர்ணிக்கிறதென்பது முடியாது... அதற்கு அவங்க மனசு இடம் கொடாது.

ஏன் அப்படி சொல்றீங்கள் நெடுக்ஸ்தாத்தா!

பெண்களுக்குள்ள அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு அதுகளில் ஒன்று ஆண்களை பகிரங்கமாக புகழ்வதை தடுக்கலாம் இல்லையா? ஏன் இந்த யாழில் எந்த பெண்ணும் ஆணண புகழ்ந்து கவி வடிக்கலையா?

அதை விட்டால் சினிமாவில்...பெண் கவிஞர்கள் குறறவு! நான் என்ன செய்ய அதுக்கு :(

சினிமாவை விட்டு நிஜ வாழ்வில்...மனைவி கணவனையும், காதலி காதலனையும் புகழ்வார்கள்.

அது நடப்பது தானே...ஏன் உங்கள் வீட்டில் நடக்கலையா :lol: :lol:

கலைஞன், கவிதை நல்லாருக்கு, பாட்டு மாதிரி இருக்கு :lol:

சினிமாவை விட்டு நிஜ வாழ்வில்...மனைவி கணவனையும், காதலி காதலனையும் புகழ்வார்கள்.

அது நடப்பது தானே...ஏன் உங்கள் வீட்டில் நடக்கலையா :icon_mrgreen::lol:

நெடுக்ஸ் தாத்தா எப்பவும் ஊர் உலகத்தில் நடக்கிறதைத் தானே சொல்லுவார் சகி .....அப்படி ஒண்டும் ஊர் உலகத்தில் நடக்கையில்லை போல ....... :lol::lol:

  • தொடங்கியவர்

அனிதா... நேரம் கிடைக்கும்போது இதை பாடல் ஆக்க விரைவில் முயற்சி செய்கின்றேன்.. நன்றி!

(நான் எழுதியவற்றை மட்டும், நெடுக்காலபோவான் எழுதியதை அல்ல.. :lol: )

Edited by கலைஞன்

காதல் கிங் மீண்டும் ஒரு மொடேர்ன் காதலிக்கான கவிதையை வடிச்சதன் மூலம் நெடுக் அண்ணாவிம் மனக்குமுறலுக்கான கவிதைக்கும் உதவி புரிந்திருக்கிறீங்க.

காதல் கிங் கலைஞன் வாழ்க.

நெடுக் அண்ணா ஏன் தான் இப்படி பொண்ணுக மீது வெறுப்போ தெரியல்லை. நல்ல காலம் நான் இப்பவும் நெடுக் அண்ணாவுக்கு சுட்டிக்குழந்தையாகவே இருப்பதால் தப்பிட்டேன். இல்லையாண்ணா?

அனிதா... நேரம் கிடைக்கும்போது இதை பாடல் ஆக்க விரைவில் முயற்சி செய்கின்றேன்.. நன்றி!

(நான் எழுதியவற்றை மட்டும், நெடுக்காலபோவான் எழுதியதை அல்ல.. :lol: )

ஆஹா ....

ஹும் செய்யுங்கள் ....பாடலுக்கு நல்லாயிருக்கும்....! :lol:

Edited by அனிதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.