Jump to content

ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

தம்பி காமடி கீமடி பண்ணேலை தானே ? ஊழலில் பெரும்பான்மையானதுநீங்களும் உங்கள் சார்ந்தவர்களும் செய்தது தானே.

அது வந்து "ஒழிப்பு கோசத்தை" தான் 3 ஆண்டுகளுக்குள் நிறுத்தப் போகிறார்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம்; சஜித் பிரேமதாச!

03 SEP, 2024 | 11:34 AM
image
 

அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன்.      

நிறைவேற்று ஜனாதிபதி என்பது வரி செலுத்துகின்ற மக்களிடத்தில் தங்கி இருக்கின்ற ஒருவராகும். அதனால் அதில் சார்ந்திருப்பதிலிருந்து விலகி நிற்பேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மிஹிந்தலை பிரகடனம் வெளியீட்டு வைபவம் நேற்று திங்கட்கிழமை (02) மிஹிந்தலை ரஜ மஹா விஹாராதிபதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மகா சங்கரத்தினருக்கு மத்தியில் மிஹிந்தலை நகரில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.     

அங்கு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில்,    

நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன். நிறைவேற்று ஜனாதிபதி என்பது வரி செலுத்துகின்ற மக்களிடத்தில் தங்கி இருக்கின்ற ஒருவராகும்.  

அதனால் அதில் சார்ந்திருப்பதிலிருந்து விலகி நிற்பேன். அந்த வட்டத்துக்குள் இருந்து வெளியேறி, புதிய சிந்தனையோடு வங்குரோத்தடைந்த நாட்டை வங்குரோத்து நிலைமையிலிருந்து கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன். நாட்டுக்கு சாதகமான விடயங்களுக்காக அந்த அதிகாரத்தை பயன்படுத்துவேன். அதன் ஊடாக நாட்டுக்கு தேவையான வளங்களையும் சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன். 

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த விதத்திலும் மக்களுக்கு சுமையாக இருக்காது.  ஒரு முன்னுதாரணமான அரசாட்சி ஒன்று நடத்தப்படும். மக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு முன்னர் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தசராஜ தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு முன்மாதிரியான பணிவான செவிசாய்க்கக்கூடிய அரசாட்சி ஒன்று எமது நாட்டுக்குத் தேவை. அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். 

எமது நாட்டில் அனைவருக்கும் கிடைக்கின்ற வகையில் சுபிட்சமான, அனைவரும் அனுபவிக்க கூடிய பொருளாதார அபிவிருத்தியோடு, புத்த தர்மத்தை கேந்திரமாகக் கொண்டு ஏனைய மதங்களுக்கும் பலத்தை கொடுக்கும் வகையில் ஒழுக்கமான, நியாயமான, பண்புள்ள, நாகரீகமான விழுமியங்களை பேணக்கூடிய, சமாதான விருத்தியைக் கொண்ட, வளமான நாடொன்றை கட்டியெழுப்ப கூடிய யுகத்தை உருவாக்குவோம்.  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலோடு மக்களின் ஆசீர்வாதத்தோடு தற்காலிக பொறுப்பை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பொறுப்பேற்று, அந்தக் காலத்தில் கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு வழங்கிய பிரேரணைகளுக்கு அமைய செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டு மக்கள் வீழ்ந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்டெடுப்போம்.  

எமது நாடு வர்த்தக ரீதியில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்துள்ளது. அனைவருக்கும் அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் கொண்டு வருகின்ற நீர்ப்பாசன கலாச்சாரத்தின் ஊடாக, செழிப்பான வயல் நிலங்களுடன் கூடிய மகிழ்ச்சிகரமான வாழ்க்கை ஒன்றை எதிர்பார்க்கும் பிரகடனம் இந்த மிஹிந்தலை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  

நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. துன்பத்தில் இருக்கின்ற மக்களை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து சுபீட்சத்தை நோக்கி செல்வோம். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமாக உருவாகின்ற ஒற்றுமையின் ஊடாக நாட்டை வெற்றியின் பக்கம் எடுத்துச் செல்வது எமது நோக்கமாகும். 

மதங்களுக்கான புனித ஸ்தலங்களை அபிவிருத்தி செய்து, நீதியும் நற்பண்புகளும் நிறைந்த பரம்பரை ஒன்றை உருவாக்கும் தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம். அதன் ஊடாக வெளிப்படுகின்ற நற்பண்புகள் சமூகத்திற்கான அறநெறி விழுமியங்களை வெளிப்படுத்தி, அந்தந்த மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்கின்ற நாட்டை கட்டியெழுப்பும் வேலை திட்டத்திற்கான அடித்தளத்தை முன்னெடுப்போம். 

மதத் தலைவர்களுடைய எச்சரிக்கைகள், ஆலோசனைகள், பிரேரணைகள், விமர்சனங்கள், என்பனவற்றுக்கு செவி சாய்த்து சிறந்த மனோநிலையுடன் அந்த பிரேரணைகளை நாட்டின் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்துவோம்.  

பல்வேறுபட்ட மக்கள் பல மதங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பலத்தை உருவாக்குவோம். பல்லின மக்கள் வாழ்கின்ற எமது நாட்டின் அபிவிருத்திக்கான பிரதான அடித்தளமான இந்த ஒற்றுமையின் ஊடாக உருவெடுக்கின்ற மிகப்பெரிய சக்தியின் மூலம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுப்போம். 

விகாரைகள், தேவாலயங்கள் என அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு பெரும்பான்மையானோரின் கருத்துக்கமைய இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்றார். 

WhatsApp_Image_2024-09-03_at_10.33.02.jp

WhatsApp_Image_2024-09-03_at_10.33.00__1

WhatsApp_Image_2024-09-03_at_10.32.54.jp

WhatsApp_Image_2024-09-03_at_10.32.53.jp

WhatsApp_Image_2024-09-03_at_10.32.52.jp

WhatsApp_Image_2024-09-03_at_10.32.54__1 

WhatsApp_Image_2024-09-03_at_10.33.04.jp

https://www.virakesari.lk/article/192712

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தபால்மூல வாக்களிப்பு பெறுபேறுகள் : சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி போலியானது : பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு - தேர்தல்கள் ஆணைக்குழு

05 SEP, 2024 | 09:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளோம். எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கு உரிய தபால்மூல வாக்களிப்பு நேற்று (4) ஆரம்பமானது. 1500 அதிகமான வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அரச சேவையாளர்கள் வாக்களித்துள்ளனர். தபால்மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட மூன்று தினங்கள் இன்றுடன் நிறைவடையும்.

இந்த மூன்று தினங்களில் வாக்களிக்காதவர்கள்  எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தமது சேவை பிரதேசத்தில் உள்ள  மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும்.

தபால்மூல வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அமைதியான சூழல் காணப்பட்டது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள் ஏதும் இடம்பெறுமாயின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் முறைப்பாடளிக்கலாம்.

சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களால் அவர்கள்  ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.ஆகவே அனைவரும் பொறுப்புடன் தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது. எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை  வாக்கெடுப்பு நிறைவடைந்து அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளோம். தவறான செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்துவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/192953

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து அம்ச கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் ரணிலுக்கு ஆதரவு

adminSeptember 7, 2024
IMG_8204-1170x658.jpg

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்  கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றைய தினம்(6)   திறந்து வைக்கும்  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

யுத்தத்திற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும் தமிழ் அரசியல் தலைவர்களோ புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை அவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்க வில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக் கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  உறுதியளித்துள்ளார்.

இதன் அடிப்படையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரம சிங்க விற்கு ஆதரவளிப்பதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_8188-800x450.jpgIMG_8195-800x450.jpg
 

https://globaltamilnews.net/2024/206519/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் 

08 SEP, 2024 | 04:27 PM
image
 

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (8) வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் மணிவண்ணன், முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், ஜதீந்திரா, யோதிலிங்கம், தமிழரசு கட்சியின் மகளிர் அணி தலைவி விமலேஸ்வரி மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

download__5_.jfif

download__4_.jfif

https://www.virakesari.lk/article/193151

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை

தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளி போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் (P.Ariyanethran) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் (Vavuniya) இன்று (08) தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று பரவலாக பேசப்படுகின்ற மூன்று தென் பகுதி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளி கொட்டுவதற்கு சமமாகவே இருக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தி

இதில் சஜித் பிரேமதாச ஆயிரம் பன்சாலைகளை கட்டுவதாக தெரிவித்து இருக்கின்றார். இந்த நிலையில் யாரோ ஒரு கட்சி கூறுகின்றது என்பதற்காக நீங்கள் அவருக்கு அளிக்கின்ற வாக்கானது பன்சாலைகளுக்கு வைக்கின்ற ஒவ்வொரு கல்லாக தான் இருக்கும்.

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை | Tamil Candidate Speech Vavuniya Election Campaign

அதேபோல் ரணில் விக்ரமசிங்கவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கானது இருக்கின்ற நிலங்களை இன்னும் இழந்து செல்வதாகவே அமையும். ரணில் விக்கிரமசிங்கவே ஒரு கட்டமைப்பாக ஒரு தேசமாக ஒரு இனத்தின் விடுதலைக்காக இருந்த எம்மை சிதைத்த பெருமை அவரைத் தான் சாரும்.

அதே போல் அநுரகுமார திசாநாயக்க எமது இணைந்த வடக்கு கிழக்கை பிரித்தவராக இருக்கின்றார்.

இவ்வாறானவர்களை தென்பகுதியில் இருந்து அழைத்து வந்து மாலை போட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்கின்ற ஒரு வெட்கம் கெட்ட சமூகமாக நாம் மாறி வருகின்றோம்.

ஆகவே இந்த பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தியை சொல்வதற்காகவே நான் வந்திருக்கின்றேனே தவிர ஒரு ஜனாதிபதியாக வருவதற்கு அல்லது நிறைவேற்றி அதிகாரம் கொண்ட அந்த கதிரையை தட்டி படிப்பதற்காகவும் இல்லை.

விடுதலைக்கான புள்ளடி

ஈழ மண்ணில் இழந்த உரிமைகளை மீட்பதற்காகவும் நாங்கள் நாங்களாகவே இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் தென் இலங்கைக்கு ஏன் ஒன்பதாவது ஜனாதிபதியாக வர இருக்கின்றவருக்கும் அந்தத் தகவலை நாங்கள் கொடுக்க இருக்கின்றோம்.

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை | Tamil Candidate Speech Vavuniya Election Campaign

எங்களுடைய வடக்குக் கிழக்கில் ஒரு இனமாக ஒரு தேசமாக ஒன்றிணைந்த கட்டமைப்புக்குள் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை பெறுவதற்காக எங்களுடைய இனம் ஒன்றிணைந்து தனது ஆதரவை தெரிவிக்கின்றது என்கின்ற ஒரு செய்தியை நாங்கள் அவர்களுக்கு சொல்லி இருக்கின்றோம்.

இந்த 13 நாட்களுக்கு பல போலியான செய்திகள் என்னை பற்றி வரலாம். இருபதாம் திகதி கூட அரியனேந்திரன் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார் என்ற செய்தி கூட இந்த சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளிவரலாம்.

ஆனால் நான் எந்த விதமான மாற்றத்திற்கு உட்பட போவதில்லை. ஆகவே நீங்களும் போடுகின்ற புல்லடியானது எமது இனத்திற்கான புள்ளடி எமது விடுதலைக்கான புள்ளடி எமது மண்ணுக்கான மண் மீட்புக்கான புல்லடி என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

https://ibctamil.com/article/tamil-candidate-speech-vavuniya-election-campaign-1725803923#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யாரோ ஒரு கட்சி கூறுகின்றது என்பதற்காக நீங்கள் அவருக்கு அளிக்கின்ற வாக்கானது பன்சாலைகளுக்கு வைக்கின்ற ஒவ்வொரு கல்லாக தான் இருக்கும்.

தமிழரசுக் கட்சிதான் கூறுகிறது. அப்படியாயின் அந்தக் கட்சிக்குள் அரியம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை | Tamil Candidate Speech Vavuniya Election Campaign

எதுவுமே ஒருவரால் தான் தொடங்கப்படுகிறது. இந்த மக்கள் கூட்டம் நிச்சயமாக நம்பிக்கை தரும். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கும் அனுரவுக்கும் இடையில் ஒப்பந்தம் என்கிறார் சஜித்!

adminSeptember 10, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 2ம் விருப்பு வாக்கு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முதல் சுற்றிலேயே தனது கட்சி வெற்றி பெறும் என்பதால், 2வது விருப்புரிமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலைப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதிக்கு கடவுச்சீட்டு அல்லது வீசா வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசாங்கத்தினால் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரேமதாச, கடவுச்சீட்டு மற்றும் வீசா வழங்குவதில் ஏற்பட்டுள்ள கடுமையான தாமதங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கு தடையாக மாறி, ஆடைத் துறை மற்றும் சுற்றுலாத்துறையை பாதித்துள்ளது. அரசாங்கத்தின் ஊழல் ஒப்பந்தங்களே இந்த தாமதங்களுக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

அனுரவுடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்துமாறும், கடவுச்சீட்டு மற்றும் வீசா வழங்கும் நடைமுறைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் பிரேமதாச கோரியுள்ளார். இந்த நபர்களுக்கு நாட்டின் பொறுப்பு வழங்கப்படுமானால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என தெரிவித்த அவர், ரணில்-அநுரவின் பெரும் சதியை முறியடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

 

https://globaltamilnews.net/2024/206596/

ரணில் தனது நண்பர் இல்லை என கூறுகிறார் அனுர!

adminSeptember 10, 2024
ranil-anura-sajith.jpg

பல அரசியல்வாதிகள் கூறுவது போன்று  ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதற்கோ அல்லது அவருடன் இணைந்து செயற்படுவதற்கோ விக்ரமசிங்கவுடன் ஏதேனும் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தால், இருவரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டிருக்க தேவையில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் உண்மையில், விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தன்னை தோற்கடிக்க ஒன்றிணைந்துள்ளதாக தான் கருதுவதாகவும். விக்கிரமசிங்க தன்னை ‘அவரது நண்பர்’ என்று தொடர்ந்து அழைக்கிறார். ஆனால்  தாம்  நண்பர்கள் அல்ல, அரசியல் போரில் தாம்  போட்டியாளர்கள் என அனுரகுமார  திஸாநாயக்க கூறியுள்ளார்.

அண்மைக் காலங்களில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவில்லை என்றும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தனது பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் NPP தலைவர் மேலும் தெரிவித்தார். விக்கிரமசிங்க மற்றும் SJB ஆகிய இரு பக்கங்களும் தங்களுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே ஜனாதிபதி தன்னுடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக வதந்திகளைப் பரப்புவதாக அவர் கூறினார்.

இப்போது விக்ரமசிங்கவுடன் இருக்கும் SLPP உறுப்பினர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்களால் மக்களால் நிராகரிக்கப்பட்டதால், அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை என்றும் திஸாநாயக்க மேலும் கூறினார். “அப்படிப்பட்டவர்களுடன் தான் எப்படி வேலை செய்ய முடியும்?” என திஸாநாயக்க கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்மைக்காலமாக விக்கிரமசிங்கவுக்கும் திஸாநாயக்கவுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு விக்கிரமசிங்க திஸாநாயக்கவிடம் கேள்விகளை முன்வைத்துள்ளார். NPP விஞ்ஞாபனத்தில் அறிவிக்கப்பட்ட திறந்த வர்த்தக உடன்படிக்கைகளை நீக்குவதன் மூலம் திஸாநாயக்கவால் எவ்வாறு ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியும் என்று அவர் கேட்டார்.

“எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் திறந்த வர்த்தக சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்துள்ளார். அதே நேரத்தில், ஏற்றுமதியை அதிகரிக்க உறுதியளித்தார். FTA இல்லாமல் ஏற்றுமதியை எப்படி ஊக்குவிக்க முடியும். என் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பின்னர் அறிந்தேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று விக்கிரமசிங்க கூறினார்.

SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், விக்ரமசிங்கவும் திஸாநாயக்கவும் தனக்குத் தடையாக இருக்க இரகசியமாகச் செயற்படுவதாகக் கூறி இந்த நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2024/206599/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் கோட்டைக்குள் மகனுக்கு கல் வீச்சு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் குழந்தை ஒன்று காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர். கூட்ட அரங்கின் மீது சுமார் மூன்று கற்கள் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹிந்தவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஹம்பாந்தோட்டையில், நாமலுக்கு இவ்வாறு கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

https://thinakkural.lk/article/309297

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஹம்மது இல்யாஸுக்கு வழங்கப்படும் வாக்குகள் என்ன ஆகும்?; தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி காலமானதையடுத்து வாக்குச் சீட்டில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

முஹம்மது இல்யாஸ் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அதன் பின்னர் 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.

அதன்படி, நான்காவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருந்த முஹம்மது இல்யாஸ் கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி காலமானார்.

முஹம்மது இல்யாஸ் காலமானதையடுத்து அவருடைய இடத்திற்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்ததுடன், அவருடைய இடத்திற்கு இன்னொரு பெயரை முன்மொழிவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் கடந்த செப்டம்பர் ஐந்தாம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாயின் அந்த வேட்பாளர், முன்னாள் அல்லது தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 31 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

31(1) சனாதிபதி பதவிக்கெனத் தேர்ந்தெடுக்கக்கூடிய தகைமை கொண்ட எந்தப் பிரசையும்

(அ) அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியற் கட்சியினால், அல்லது

(ஆ) அவர், நடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவராயின் அல்லது முன்னர் பதவி வகித்திருந்தால், வேறேதேனும் அரசியற் கட்சியினால் அல்லது ஏதேனும் தேர்தல் இடாப்பில் தமது பெயரைப் பதிந்துள்ளவரான ஒரு தேருநரால், அத்தகைய பதவிக்கான வேட்பாளராகப் பெயர் குறித்து நியமிக்கப்படலாம்.

இதன்படி, முஹம்மது இல்யாஸின் வெற்றிடத்திற்கு முன்னாள் அல்லது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக மறைந்த முஹம்மது இல்யாஸின் மனைவி முகமது இல்யாஸ் ஜமீனாவிடம் factseeker வினவிய போது, உரிய வெற்றிடத்திற்கு தனது பெயரை முன்மொழிந்ததாகவும், எனினும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய தனக்கு போட்டியிட முடியாத காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கையை நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அல்லது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எமது தரப்பில் இல்லாத காரணத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு யாரையும் பரிந்துரைக்கவில்லை என முகமது இல்யாஸ் ஜமீனா தெரிவித்தார்.

இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் factseeker வினவிய போது, தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரின் வெற்றிடத்திற்கு எவரையும் முன்னிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், ஒரு சுயேச்சை வேட்பாளரின் வெற்றிடத்தை முன்னாள் அல்லது தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரால் மட்டுமே நிரப்ப முடியும் என்றார்.

மேலும், வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஐதுரூஸ் முஹம்மட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இருந்து நீக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்ட அவர், எவ்வாறு இருப்பினும் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸுக்கு கிடைக்கும் வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும் எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் ஊசி சின்னத்துடன் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் என்ற அவரது பெயர் இடம்பெற்றுள்ளது என்பதையும் அவருக்கான வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும் என்பதையும் factseeker பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகின்றது

நன்றி – factseeker

https://thinakkural.lk/article/309307

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் 13,417 வாக்குச்சாவடிகள்; 18 ஆம் திகதியுடன் பிரசாரத்துக்கு தடை - தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேபோல், 21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4:30 வரையில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் 13,417 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு செய்ய முடியும். தேர்தலில் வெற்றி ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு பத்து முதல் 12 நாட்களில் நாடாளுமன்றை கலைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடாளுமன்றை கலைத்து 35 முதல் 44 நாட்கள் வரையிலான காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் தேர்தல் நடாத்துவதற்காக அதிகபட்சமாக 52 முதல் 66 நாட்களை எடுத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப நாடாளுமன்றை கலைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்லது தற்போதைய நாடாளுமன்றின் பதவிக்கால நிறைவடையும் வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/309394

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்டுவோம்; க.வி.விக்னேஸ்வரன்!

14 SEP, 2024 | 10:11 AM
image
 

தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே சென்று சங்கு சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.         

பருத்தித்துறை - சுப்பர்மடம் பொது மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13)  மாலை 05.00 மணிக்கு இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற நமக்காக நாம் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், 

எனக்கு இருதய சத்திரசிகிச்சை பொருந்துமா அல்லது Stent என்னும் உறைகுழாய் பொருத்தப்படுதல்  பொருந்துமா  என்று  மருத்துவர்கள்  ஆராய்ந்து  கொண்டிருக்கும் இந்தச்  சந்தர்ப்பத்தில்  இங்கு  உங்களுடன்  இணைந்து  பொது  வேட்பாளரை ஆதரிக்கும்  கூட்டத்தில்  பங்கு  பற்ற  வந்திருக்கின்றேன்  என்றால்  எந்த  அளவுக்கு பொது  வேட்பாளருக்கு  மக்களின்  ஏகோபித்த  ஆதரவு  கிடைக்க  வேண்டும்  என்று ஆவலாய் இருக்கின்றேன் என்பது உங்களுக்குப் புரியவரும்.  

எமது  வடகிழக்கு  மாகாணங்கள்  பறிபோய்க்  கொண்டிருக்கின்றன. இது  உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? நேற்று எனக்குக் கிடைத்த ஆய்வு விபரங்களின் படி (இன்று அவை பத்திரிகைகளிலும் வந்துள்ளன)  திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறும் காணி ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது அம் மாவட்ட சனத்தொகையில் 27 சதவிகிதமானோர் சிங்கள மக்கள் என்றும் அம் மாவட்டத்தின் மொத்த  நில  விஸ்தீரணத்தில் 36 சதவிகிதத்தை அம் மக்கள்  தம்  கைவசம் வைத்துள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையைத்  தந்துள்ளவர்கள் கலிபோர்ணியாவில்  இருந்து  கடமையாற்றும்  ஓக்லண்ட்  நிறுவனத்தார்.  

அவர்களின் ஆய்வாளர்கள்  இங்கு  வந்து  நிலைமையை  அறிந்தே  தமது  ஆய்வறிக்கையைத் தந்துள்ளார்கள். இதைவிட  மிகவும்  ஆபத்தான  ஒரு  விடயம்  வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாணத்தையும்  கிழக்கு  மாகாணத்தையும்  இணைக்கும்  திருகோணமலையின் குச்சவெளிப்  பிரதேசம்  கடந்த  பத்து  ஆண்டுகளில்  மிக  மோசமான  மாற்றங்களைச் சந்தித்துள்ளது.   

அப்பிரதேசத்தின்  50  சதவீத  நிலங்கள்,  அதாவது  41,164 ஏக்கர் காணிகள், பல அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காகவும்  அரசாங்க  திணைக்களங்களால்  கையேற்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த மக்கள் விரட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 3887 ஏக்கர் கையேற்க்கப்பட்ட  காணிகளில்  26  பௌத்த  விகாரைகள்  கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

அத்துடன்  இவ்வாறான  மிகவும்  செழிப்பான  காணிகளிலும்  கரையோரப் பிரதேசங்களிலும்  இருந்து  வந்த  தமிழ்  மற்றும்  முஸ்லீம்  மக்கள்  தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. விரட்டப்பட்ட மக்கள் தமது  காணிகளுக்குப்  போக  முடியாதபடி  இராணுவம்  அங்கு  நிலை கொண்டிருக்கின்றது  என்றும்  கூறப்பட்டுள்ளது.  இராணுவத்தினரின்  நாடு  பூராகவும் உள்ள  பிராந்திய தலைமையகங்கள்  ஏழில்  ஐந்து  தலைமையகங்கள்  வடக்கு  கிழக்கில் குடிகொண்டிருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.  

இது நடைபெறுவது இன்றைய ஜனாதிபதி பதவி வகிக்கும் காலகட்டத்தில் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது. பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்ட வேண்டும் என்று  தீர்மானம்  கொண்டு  வந்தவர்  சஜித்  பிரேமதாச  அவர்கள்.  சேர்ந்திருந்த வடமாகாணத்தையும்  கிழக்கு  மாகாணத்தையும்  நீதிமன்றம்  மூலம்  பிரிக்க நடவடிக்கை  எடுத்தவர்  அனுரகுமார  அவர்கள்.  மூவருமே  ஒரே  குட்டையில்  ஊறிய மட்டைகள். 

நாமல்  பற்றிக்  கூறவே  தேவையில்லை.  ராபக்சக்களின் மோசமான  இனவாத  தோற்றத்திற்கு  அவர்  மெருகூட்டி  வருகின்றார்.  எந்த  சிங்கள வேட்பாளர்  வந்தாலும்  வடக்குக்  கிழக்கின்  நிலங்கள்  கையேற்கப்படுவதுடன் அவற்றின்  தொடர்ச்சி  துண்டிக்கப்படுவதும்,  அங்கு  சிங்களக்  குடியேற்றங்கள் தொடர்ந்து  நடைமுறைப்படுத்தப்படுவதும்  பௌத்த  கோவில்கள்  கட்டப்படுவதும் ஓயாமல்  நடக்கப்  போகின்றன.   

எமது  இளைஞர்கள்,  படித்தவர்களும்  பாமரர்களும், நாளாந்தம்  வெளிநாடுகளுக்கு  செல்ல  ஆயத்தமாகி  வருகின்றார்கள்.  எமது சனத்தொகை  இதனால்  குறையப்  போகின்றது.  ஆகவே  சிங்கள  வேட்பாளர் ஒருவருக்கு  எம்  மக்கள்  வாக்களிப்பது  இவ்வாறான  தமிழர்  எதிர்ப்பு  செயல்களை முடக்கி விடப்போகின்றது என்பதில் சந்தேகமில்லை.  

இதனால்த்தான்  எமது  தமிழ்  வேட்பாளருக்கு  உங்கள்  மேன்மையான  வாக்குகளை அளியுங்கள்  என்று  கேட்கின்றோம்.  அவரால்  இவ்வாறான  காணி  ஆக்கிரமிப்புகளை நிறுத்த  முடியுமா  என்று  கேட்பீர்கள்.  முடியும்  என்பது  எனது  பதில்.    

எமது  மக்கள் ஒன்றிணைந்து  தமது  தனித்துவத்தைக்  காட்டும்  வண்ணம்  தமிழ்  பொது வேட்பாளருக்கு  வாக்களித்தால்,  ஆறு  இலட்சத்துக்கு  மேல்  எமது  மக்களின் வாக்குகள் பதியப்பட்டால், நாம் உலக அரங்கிலே எமது தனித்துவத்தையும் எமக்கு நேர்ந்த  கதியையும்  தற்போது  எமக்கெதிராக  நடக்கும்  நடவடிக்கைகளையும் கோடிட்டு  சொல்லமுடியும்.   

 எமது  பொது  வேட்பாளரும்  அவருடன்  சேர்ந்தவர்களும் உலகநாடுகளிலே மற்றும் ஐக்கிய நாடுகளிலே தற்போதைய அவலங்கள் பற்றியும், தொடர்ந்து  வந்த  சிங்கள  அரசாங்கங்கள்  எமக்கு  செய்து  வரும்  அநியாயங்கள் பற்றியும் கூற முடியும்.   

நான் 2018ல் புதிய கட்சியைத் தொடங்கிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக வர வேண்டும்  என்ற  எண்ணம்  எனக்கு  இருக்கவில்லை.  2020ல்  எனக்கு  81  வயது ஆகியிருந்தது.  எனினும்  உலக  நாடுகளில்  உள்ள  அரச  அலுவலர்களிடம் இணையத்  தொடர்புகள்  மூலம்  எமது  நிலை  பற்றிக்  கூறி,  எம்  மக்களுக்கான சேவைகளைச்  செய்து  கொண்டு  போக  முடியும்  என்று  நினைத்திருந்தேன்.   

அப்பொழுது  எனது  நண்பர்கள்  ஒன்றைக்  கூறினார்கள்.  நீங்கள்  நீதியரசராக இருந்திருக்கலாம்.  முதலமைச்சராக  இருந்திருக்கலாம்.  ஆனால்  வெளிநாட்டு  அரச அதிகாரிகளுடன்  பேசும்  போது  இப்பொழுது  நீங்கள்  யார்  என்று  கேட்பார்கள். நீங்கள்  பாராளுமன்ற  உறுப்பினர்  என்று  கூறும் போது  மக்களின் பிரதிநிதி  நீங்கள் என்ற  ரீதியில்  உங்கள்  கூற்றுக்களுக்கு  வலு  இருக்கும்  என்றார்கள்.  ஆகவேதான் நானும் தேர்தலில் போட்டியிட்டேன்.  

அதேபோல்த்தான்  திரு.அரியநேத்திரன்  அவர்களுக்கு  எமது  மக்கள்  வெகுவாக வாக்களித்தால் அந்த வாக்குகளுக்கு ஒரு மதிப்புண்டு மாண்புண்டு! அதை வைத்து அவரை  தமிழ்  மக்களின்  ஒரு  அடையாளமாகக்  காட்டி  எமக்கு  நடந்து  வரும் அநியாயங்கள் பற்றி நாடுகளுக்குக் கூறி இலங்கை அரசாங்கம் எமக்கு தொடர்ந்தும் இன்னல்களை  விளைவிப்பதைத்  தடுக்கலாம்.    

தற்போது  வெளிநாடுகள்  எமது அரசாங்கத்திற்கு  எதிராக  பல  குற்றச்சாட்டுக்களை  சுமத்தி  வருகின்றன.  ஐக்கிய நாடுகளின்  அறிக்கைகள்  இலங்கையை  சரிவர  எடை  போடுவதாகவே அமைக்கப்பட்டு  வருகின்றன.    

இந்நிலையில்  தமிழ்  மக்கள்  ஒருமித்து  தமது ஒற்றுமையை,  தேசியத்தை,  ஒருங்கிணைந்த  குறிக்கோள்களை  இந்த  ஜனாதிபதித் தேர்தலில்  வெளிப்படுத்தியுள்ளார்கள்  என்ற  செய்தி  எமது  அரசாங்கத்தை விழித்தெழச் செய்யும். அதனால்த்தான் எமது தமிழ் பொது வேட்பாளருக்கு நீங்கள் உங்கள் வாக்கினை அளிக்க வேண்டும் என்று தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம். 

எமது  ஒற்றுமை  ஒன்றே  எம்மை  இரட்சிக்கும்.  எமது  ஒற்றுமையைச்  சிதைக்கும் வகையில்  படித்த  முட்டாள்கள்  சிலர்  நடந்து  வருகின்றார்கள்.  சிலர்  சிங்கள வேட்பாளர்களுடன்  கைகோர்க்க  வேண்டும்  என்கின்றார்கள்.  மற்றும்  சிலர் தேர்தலைப்  பகிஸ்கரிக்கக்  கோருகின்றார்கள்.    

சிங்கள  வேட்பாளர்களுடன் கைகோர்ப்பது  குறித்த  அரசியல்வாதிகளுக்கு  அமைச்சர்  பதவிகளை  வழங்க இடமளிக்கலாம்.  அதனால்  தமிழ்ப்  பேசும்  மக்களுக்கு  என்ன  இலாபம்?  நல்லாட்சி அரசாங்கத்தை  ஆதரித்து  இந்தா  தீர்வு  வருகின்றது.  அந்தா  தீர்வு  வருகின்றது என்று  திரு.சம்பந்தன்  அவர்கள்  நம்பிக்கையுடன்  கூறிவந்தார்.  

ஆனால்  தீர்வு வந்ததா?  அவருக்கு  எதிர்க்கட்சித்  தலைவர்  பதவியும்  உத்தியோகபூர்வ வாஸஸ்தலமும் கிடைத்தன. தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. எனவே பெரும்பான்மையின வேட்பாளர்களை ஆதரிப்பது தமிழ்ப்பேசும் அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட நன்மைகளைத் தரும். ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.  

பகிஸ்கரிப்பவர்கள் ஏன் நாம் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கேள்வியைத் தம்மைத் தாமே  கேட்க  வேண்டும்.  புலிகள்  முன்னர்  பகிஸ்கரித்தார்கள்  ஆகவே  நாமும் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் சூழலையும் கால கட்டத்தையும் மறந்து பேசுகின்றார்கள்.  அன்று  புலிகளுக்குப்  பலம்  இருந்தது.  அன்று  மலையக மக்களுக்கு  அவர்களின்  அரசியல்  போராட்டங்களின்  போது  தொழிற்சங்க  பலம்  இருந்தது.  இன்று  இவர்களுக்கு  என்ன  பலம்  இருக்கின்றது?    

இவர்கள் பகிஸ்கரித்தால்  அது  யாருக்கு  நன்மை?  எவருக்கும்  இல்லை.  யாருக்குப்  பாதிப்பு? எவருக்கும்  இல்லை.  சிங்கள  வேட்பாளர்களுக்கு  வாக்களிக்க  வேண்டாம்  என்று தொடங்கிய  இந்த  பகிஸ்கரிப்பாளர்கள்  இப்பொழுது  தமிழ்  வேட்பாளரையும் பகிஸ்கரியுங்கள்  என்கின்றார்கள்.  ஏன்  என்றால்  திரு.அரியநேத்திரன்  அவர்கள் சிங்கள  வேட்பாளர்களுடன்  கூட்டுச்  சேர்ந்துள்ளார்  என்ற  அப்பட்டமான  பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.    

அரியநேத்திரன்  அவர்கள்  தனது  கட்சியுடன் முரண்டே  பொது  வேட்பாளராக  நிற்கின்றார்.  அவர்  தமது  வருங்கால  அரசியல் வாழ்க்கையைத்  தியாகம்  செய்தே  பொது  வேட்பாளராக  நிற்கின்றார்.  இந்தத் தேர்தலில்  அவருக்கு  தனிப்பட்ட  ரீதியில்  எந்த  நன்மையும்  கிடையாது. 

அவர் தேர்தலில்  வெல்லப்  போவதும்  இல்லை.  அப்பேர்ப்பட்ட  ஒருவரை  இழிவாகப்  பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி இந்த பகிஸ்கரிப்பாளர்கள் தங்களை தமிழ் மக்கள் மனதில் தாழ்த்தியே வருகின்றார்கள்.  

அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் இம் மாதம் 21ந் திகதியன்று  காலையிலேயே  நேரத்துடன்  வாக்குச்  சாவடிகளுக்குச்  சென்று  சங்கு சின்னத்திற்கு  வாக்களிக்க  வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.    

சுப்பர்மடம் கடற்றொழிலாளர்களுடன் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்காக சங்குச் சின்னத்தில் வாக்களிக்க கோரி இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரணியேஸ் மரியாம்பிள்ளை, புலம்பெயர் செயற்பாட்டாளர் பீற்றர், சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூ.சங்க நிர்வாகிகள் மற்றும் அவ்வூர் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

IMG-20240913-WA0210.jpg

IMG-20240913-WA0211.jpg

https://www.virakesari.lk/article/193641

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்டுவோம்; க.வி.விக்னேஸ்வரன்!

large.IMG_7011.jpeg.1e92ce74b2226dc6f13d

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் - 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமைதியான காலப்பகுதியில் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் பிரசாரங்கள்

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதோடு, 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் அமைதியான காலகட்டமாக காணப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் - 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம் | Sl President Election 2024 Social Media Banned

இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவதூறு பிரச்சாரங்கள்

இந்த பிரச்சாரங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் - 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம் | Sl President Election 2024 Social Media Banned

அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி சமூக ஊடகங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் போன்றவற்றை நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

அமைதியான காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் முறை ஒன்றை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/sl-president-election-2024-social-media-banned-1726320709#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 பேரடங்கிய குழுவை தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியது சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு

Published By: DIGITAL DESK 3   14 SEP, 2024 | 08:33 PM

image

(நா.தனுஜா)

சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு 10 பேரடங்கிய அதன் தேர்தல் கண்காணிப்புக்குழுவை இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

மிகமுக்கிய தருணத்தில் நடைபெறும் இம்முறை ஜனாதிபதித்தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் எனவும் அவ்வமைப்பு எதிர்வுகூறியுள்ளது.  

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது. அதற்கமைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்ததுடன், அவை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பித்துள்ளன. அதேபோன்று சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைiயிலான 13 பேரடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு இன்றைய தினம் (15) நாட்டை வந்தடையவுள்ளது. அதுமாத்திரமன்றி பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பின் (சார்க்) அங்கத்துவ நாடுகளையும், ரஷ்யாவையும் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அவர்களது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு அதன் தேர்தல் கண்காணிப்பாளர்களைக் கடந்த 11 ஆம் திகதி முதல் இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. இக்கண்காணிப்பாளர்களில் தேர்தல் செயன்முறை ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள் நாடளாவிய ரீதியில் 7 மாகாணங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், 14 பிரதான நகரங்களையும், அவற்றைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களையும் இலக்காகக்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது தேர்தல் செயன்முறையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ள அவர்கள், தேர்தல் பிரசார நடவடிக்கைகள், வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் செயன்முறை, தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம் என்பவற்றைப் பரந்துபட்ட அளவில் கண்காணிக்கவுள்ளனர்.

அதன்படி இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு, 'பொருளாதார ஸ்திரமின்மை, உயர் பணவீக்கம், மக்கள் மத்தியிலான அதிருப்தி ஆகியவற்றுக்கு நாடு முகங்கொடுத்திருந்த நிலையில், தீர்மானம் மிக்கதொரு தருணத்தில் இந்த ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மிகமுக்கிய பங்காற்றும்' எனத் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/193691

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

தேர்தலில் தாம் வாக்களிக்கும் வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட கூடாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கும் வேட்பாளரைப் பற்றி யாரேனும் ஒருவரிடம் கேட்பதும் சட்டவிரோதமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான உத்தரவு

கடந்த தேர்தல்களிலும் இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்

தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு | No Permission To Ask About Voting Candidate

https://tamilwin.com/article/no-permission-to-ask-about-voting-candidate-1726378271

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்குத் தேர்தல் முடிவுகளை வழங்க மாட்டோம் - தேர்தல் ஆணைக்குழு

17 SEP, 2024 | 10:56 AM
image
 

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வழங்க மாட்டோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் அல்லது கடைப்பிடிக்காத ஊடக நிறுவனங்களுக்கு எதிராகத் தேர்தல் ஆணைக்குழுவினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தாலும் அத்தகைய ஊடகங்களிடமிருந்து விலகி இருக்க முடியும்.

மின்னஞ்சல், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்கள் ஊடாக அனைத்து ஊடக நிறுவனங்களுக்குத் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முடிவுகள் பகிரப்பட்டு வருகின்றது. 

ஊடக நிறுவனங்களுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193903

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இணைய ஊடகத்தில் வெளியான கணொளியும் இலங்கையர்களது கருத்துக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 2   17 SEP, 2024 | 03:18 PM

image
 

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகையில்,  

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தொகை 2 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் நபர்களுக்கு ஓராண்டுக்கு குறையாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் உரிய சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/193925

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் திரள்வோம்: யாழ்.பல்கலைக்கழக சமூகம் அழைப்பு

தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை ஆதரித்து இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தமிழ் மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தேசமாக பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து எழுச்சியடைவதிலிருந்தும் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில், தமிழ் மக்கள் நாங்கள் சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ் அரசியற்கட்சிகளையும் உதிரிகளாக்கி எங்களின் கூட்டு – மனவலுவைத் தகர்த்தெறிவதில் சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனக்கச்சிதமாக செய்து முடித்துள்ளன.

தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் திரள்வோம்: யாழ்.பல்கலைக்கழக சமூகம் அழைப்பு | Jaffna University Community Calling Jafna People 

பொருளாதார நல்லிணக்க மாயைகள்

பொருளாதார நல்லிணக்க மாயைகள் சூழ்ந்த இவ்வாறான சூழ்நிலைகளில் தமிழ் அரசியல் தரப்புக்கள் ஏற்ற உத்தரவாதங்களோ வாக்குறுதிகளோ இன்றி சிங்கள வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை அடகு வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதனை பல்கலைக்கழகச் சமூகத்தினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழியென்றும், 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தினுள்ளும், ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பின் உள்ளும் தமிழ் மக்களின் அரசியலை சுருக்குவதில் சிங்கள தலைமைகளிற்கு விலைபோன தமிழ் அரசியல்வாதிகள் முயன்று வருவதையும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்த செயற்பாடுகளினையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகச் சமூகத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.  

https://tamilwin.com/article/jaffna-university-community-calling-jafna-people-1726587740#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; தேசிய அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைப் பகுத்தாராய்ந்து வாக்களியுங்கள் - 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தல்

Published By: VISHNU  18 SEP, 2024 | 07:21 AM

image
 

நாம் எமது ஜனாதிபதித்தெரிவினை மேற்கொள்ளும்போது தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார சூழ்நிலை குறித்துப் பகுத்து ஆராய்வது அவசியமாகும். தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலாநிதி ஏ.அந்தோனிராஜன், கலாநிதி எஸ்.அறிவழகன், பேராசிரியர் பி.ஐங்கரன், கலாநிதி எஸ்.ஜீவசுதன், கலாநிதி ஏ.கதிர்காமர், பேராசிரியர் ஆர்.கபிலன், கலாநிதி என்.ராமரூபன், கலாநிதி எம்.சர்வானந்தன், என்.சிவகரன், பேராசிரியர் ஆர்.ஸ்ரீகரன், கலாநிதி ஆர்.தர்ஷன், கலாநிதி எம்.திருவரங்கன், கலாநிதி என்.வரதன், பேராசிரியர் கே.விக்னரூபன் மற்றும் எஸ்.விமல் ஆகிய 15 புத்திஜீவிகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக உருவான மக்கள் எழுச்சிப்போராட்டங்களின் பின்னர் நாடு சந்திக்கும் முதலாவது மிகமுக்கிய தேர்தல் இதுவாகும்.

 கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இந்நாட்டில் வாழ்க்கைச்செலவு கடந்த இரு வருடங்களில் பன்மடங்காக உயர்வடைந்திருக்கிறது. வறுமையும், வேலையின்மையும் மக்களை வாட்டுகிறது. உரம் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான மானியக்குறைப்பின் காரணமாக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வட்டிவீத அதிகரிப்பு சிறு முயற்சியாளர்களின் வருமானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.  கட்டடத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியினால் நகர்ப்புற முறைசாரா மற்றும் கிராமப்புற மக்களின் தொழில்வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து, எரிபொருள், மின்கட்டண அதிகரிப்பினால் சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைகளை நாம் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான வாழும் நாட்டின் வட, கிழக்குப் பகுதிகளிலும் அவதானிக்கிறோம். போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆயுதக்கலாசாரம், வன்முறைகள், இந்திய இழுவைப்படகுப் பிரச்சினை போன்றனவும் வடக்கை வெகுவாகப் பாதித்திருக்கின்றன.

இவ்வாறு நிலைமை மோசமடைந்து செல்கையில் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஊழலில் ஈடுபட்டு நாட்டின் வளங்களையும், செல்வத்தையும் கொள்ளையிட்டவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவற்றால் மக்கள் வெகுவாக அதிருப்தியுற்றிருக்கிறார்கள். இத்தகு பின்னணியில் 2022 இல் மக்கள் எழுச்சியின் அடிப்படையாகக் காணப்பட்ட 'கட்டமைப்பு மாற்றம்' என்ற கோஷம் தற்போது குறிப்பாக தென்னிலங்கையில் ஓங்கி ஒலிப்பதனைக் காணமுடிகிறது. போராட்டத்தின் மூலம் ஏற்படாத மாற்றங்களைத் தேர்தலின் மூலமாகவேனும் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தெற்கு மக்கள் ஆர்வமாக இருப்பதை உணரமுடிகிறது.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் மிகக்கவனமாகவும், புத்திசாதுரியமாகவும் கையாளவேண்டியது அவசியமாகும். தென்னிலங்கையில் பல தசாப்தங்களின் பின்னர் இனவாதத்தினை முன்னிறுத்தாத தேர்தல் பிரசாரத்தினை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்துவருவதாக அறிகிறோம்.

மக்களின் நலனை முன்னிறுத்தும் பொருளாதார ரீதியான மாற்றங்கள், ஆட்சி முறைமையில் மாற்றம், ஊழல் ஒழிப்பு போன்ற கோஷங்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் பின்னால் தென்னிலங்கை மக்கள் பெருமளவில் திரள்வதையும் நாம் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பார்க்கிறோம்.

 எனவே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் மாற்றத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் மக்களுடன் இம்முறைத்தேர்தலில் பயணிப்பது குறித்து ஆராயவேண்டும். அதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளியவர்களைத் தோற்கடிப்பதும் அவசியம்.

 இனப்பிரச்சினைக்கான தீர்வு, மதச்சார்பற்ற அரசினை உருவாக்குதல், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் பிரதான வேட்பாளர்கள் முற்போக்கான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாமை குறித்து நாம் சுட்டிக்காட்டுகின்றோம். அதேவேளை பொருளாதார நெருக்கடியும், ஊழலினால் ஏற்படும் பொருளாதார, அரசியல் சீர்கேடுகளும் சிறுபான்மை சமூகங்களையும் மோசமாகப் பாதித்துள்ளன என்பதை மனதிலிருத்தி இம்முறைத் தேர்தலில் நாம் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது அவசியம்.

சர்வதேசத்தினால் தான் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை குறித்து நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் நாம் எமது தேர்தல் தெரிவுகளை மேற்கொள்வது அரசியல் ரீதியாக உள்நாட்டில் எம்மை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.

இவ்வாறான காரணங்களால் தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

பொருளாதார ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எமது சமூகங்களும், ஊழல் மற்றும் ஏனைய சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள எமது பொது நிறுவனங்களும் முன்னேறுவதற்கு இந்தத் தேர்தல் ஏதாவதொரு வழியில் சந்தர்ப்பங்களைத் திறக்குமா என நாம் சிந்திக்கவேண்டியது அவசியம். தென்னிலங்கையில் இனவாதம் சற்று அடங்கியிருக்கும் இவ்வேளையிலே, ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனநாயகத்தன்மை மிக்க, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இந்தத் தேர்தலை நோக்குவது பொருத்தமானதாக இருக்கும் என நாம் கருதுகின்றோம். 

அதன்படி தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, முற்போக்கானதும், ஊழலுக்கு எதிரானதும், பொருளாதார மீட்சியில் அக்கறை கொண்டதும், முற்போக்கான அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கான கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியதும், நம்பகத்தன்மை வாய்ந்ததும், இனங்களை ஒற்றுமைப்படுத்தக்கூடியதுமான ஒரு வேட்பாளருக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/193969

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; தேசிய அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைப் பகுத்தாராய்ந்து வாக்களியுங்கள் - 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தல்

குழப்பி அடிக்க தானே தமிழ் பொது வேட்பாளர் இறங்கி உள்ளார்.அவருக்கு போடுகின்ற  ஒவ்வொரு  வாக்குகளும் வீணாணவை

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 SEP, 2024 | 01:26 PM - இலங்கை குடியரசில் மூவினத்தவர்களுக்கும் சமவுரிமை - போரினால் சகலருக்கும் ஒரே விதமான பாதிப்பு - மன்னித்து முன்னோக்கிச் செல்வோம் முப்­பது வரு­ட­கால போரில் தமி­ழர்கள் மாத்­தி­ர­மன்றி சிங்­க­ள­வர்­களும், முஸ்­லிம்­களும் உயி­ரி­ழந்­தனர்.  அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழப்­ப­தனால் ஏற்­படக் கூடிய வலியை நான் புரிந்துக் கொள்­கிறேன். இருப்­பினும் அந்த வலி இரு­த­ரப்­புக்­கு­மா­னது என்­பதை நீங்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். நாம் அனை­வரும் ஒரே வித­மான பாதிக்­கப்­பட்டோம். நாம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிப்­ப­ளித்து முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும். அதே­போன்று இந்த மண்ணில் பிறி­தொரு போர் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்கக்கூடாது என்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். அதே­போன்று இலங்கை குடி­ய­ரசின் அதி­கா­ரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிர­ஜை­க­ளுக்கும் சம­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. நீங்கள் சிங்­கள, தமிழ்,  முஸ்லிம், மலே, கிறிஸ்­தவ, சமூ­கங்­களில் எதனை சார்ந்­தி­ருப்­பினும் இந்­நாட்டில் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சம­மான உரி­மைகள் உண்டு. அவ்­வா­றி­ருக்­கையில் யாருக்கும் எம்மால் விசேட அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். வீர­கே­ச­ரியின் 'ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரிடம் கேளுங்கள் - 2024' எனும் தலைப்பில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­களால் தொடுக்­கப்­பட்ட வினாக்­களில் முக்­கிய வினாக்­க­ளுக்கு பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நாமல் ராஜ­பக்ஷ அளித்­துள்ள பதில்கள் வரு­மாறு, கேள்வி இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு தமிழ் சமூகம் நீண்­ட­கா­ல­மாக முயற்­சித்து வரு­கின்­றது. இனங்­க­ளுக்கு இடையில் நிலை­யான அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உங்கள் நிர்­வாகம் எவ்­வா­றான முயற்­சி­களை மேற்­கொள்ளும்? குறிப்­பாக, சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சியல் தீர்வை ஏற்­றுக்­கொள்­வது தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு என்ன? பதில் இக்­கு­டி­ய­ரசின் அதி­கா­ரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிர­ஜை­க­ளுக்கும் சம­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.  நீங்கள் சிங்­கள, தமிழ், முஸ்லிம், மலே, கிறிஸ்­தவ, சமூ­கங்­களில் எதனை சார்ந்­தி­ருப்­பினும் இந்­நாட்டில் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சம­மான உரி­மைகள் உண்டு. அவ்­வா­றி­ருக்­கையில் யாருக்கும் எம்மால் விசேட அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது. இப்­பின்­ன­ணியில் இன சமூ­கங்­களை பெரும்­பான்மை அல்­லது சிறு­பான்மை என முத்­தி­ரைக்­குத்­து­வது தவ­றாகும்.இது ஒரு மேற்­குல சிந்­த­னை­யாகும். நாம் சகல பிர­ஜை­க­ளுக்­கு­மான சமத்­துவ இறை­யாண்­மையை கொண்ட ஒரு­மித்த குடி­ய­ர­சாவோம். வடக்கில் வாழும் ஒரு தமிழ் பிர­ஜைக்கு சிங்­கள அல்­லது முஸ்லிம் பிர­ஜைக்­குள்ள அதே சிவில் உரி­மைகள் உண்டு. இருப்­பினும் அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான அர­சாங்கம் என்ற ரீதியில் நாம் அனைத்து இன குழு­மங்­க­ளி­னதும் கலாச்­சார அடை­யா­ளங்­களை பாது­காப்­ப­துடன் மாத்­தி­ர­மன்றி,  எமது நாட்டின் பல்­லி­னத்­தன்­மையை கொண்­டா­டுவோம்.வடக்கில் வாழும் மக்­களின் உண்­மை­யான கரி­ச­ணைகள் தெற்கில் வாழும் மக்­களின் கரி­ச­ணை­களை ஒத்­த­வை­யாகும்.  ஆவர்கள் அவர்கள் அனை­வ­ருக்கும் பொரு­ளா­தார வளர்ச்சி, சமூக மேம்­பாடு, மற்றும் நிலை­பே­றான சூழல் என்­பவே தேவை­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.அவை  எவ்­வித இன­பா­கு­பா­டு­க­ளு­மின்றி சக­ல­ருக்கும் கிடைப்­பதை நாம் உறு­திப்­ப­டுத்­துவோம். கேள்வி இறு­திக்­கட்­டப்­ போரில் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் கடத்­தப்­ப­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டி­ருக்கும் பொறுப்­புக்­கூறல் குறித்த உங்­க­ளது நிலைப்­பாடு என்ன? நீங்கள் ஆட்­சி­பீ­ட­மேறும் பட்­சத்தில் மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான மிக­மோ­ச­மான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்­ட­வி­ரோத படு­கொ­லைகள் பற்­றிய குற்­றச்­சாட்­டுக்­களை எவ்­வாறு அணு­கப்­போ­கின்­றீர்கள்? பதில் சுமார் 30 வரு­ட­காலம் நீடித்த போரில் இறு­திக்­கட்ட யுத்­தத்தை பற்றி மாத்­திரம் ஒரு­வரால் பேச முடி­யாது அது இலங்கை அர­சாங்­கத்­துக்கும் ஆயு­த­மேந்­திய பயங்­க­ர­வாத குழு­வுக்­கு­மி­டையில் நடைப்­பெற்ற போராகும்.  அந்­நீண்­ட­கால பகு­தியில் ஆயி­ர­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­தனர். அவர்­களில் தமி­ழர்கள் மாத்­தி­ர­மன்றி, சிங்­க­ள­வர்­களும்,  முஸ்­லிம்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இருப்­பினும் நாம் தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள், துப்­பாக்கிச் சூடு, கொலைகள்,  மற்றும் விடு­தலை புலிகள் இயக்­கத்­தி­னரால் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட தற்­கொலை குண்­டு­தா­ரிகள், சிறுவர் போரா­ளிகள் என சக­ல­வற்­றையும் முடி­வுக்கு கொண்டு வந்தோம்.அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழப்­ப­தனால் ஏற்­படக் கூடிய வலியை நான் புரிந்துக் கொள்­கிறேன்.இருப்­பினும் அந்த வலி இரு­த­ரப்­புக்­கு­மா­னது என்­பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.நாம் அனை­வரும் ஒரே வித­மான பாதிக்­கப்­பட்டோம். ஒரு நாடு என்ற ரீதியில் நாம் பெரு­ம­ளவு உயிர்­களை இழந்து விட்டோம்.நாம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிப்­ப­ளித்து முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும்.அதே­போன்று இந்த மண்ணில் பிறி­தொரு போர் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்க கூடாது. கேள்வி நாட்டில் போர் சூழ்­நிலை இல்­லாத பின்­ன­ணி­யில்,  வரவு செலவுத் திட்­டத்தில் பாது­காப்­புத்­து­றைக்­கான செல­வி­னத்தை குறைப்­ப­தற்கு உங்­க­ளது நிர்­வாகம் நட­வ­டிக்கை எடுக்­கு­மா? பதில் எமது நாட்­டுக்கு எதி­ரான உள்­ளக மற்றும் சர்­வ­தேச சக்­தி­களின் அச்­சு­றுத்­தல்கள் இன்­னமும் தொடர்­கின்­றன. ரஷ்ய – உக்ரைன் மோதல், இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் மற்றும் ஐரோப்­பாவில் வன்­முறை எழுச்சி என்­பன உள்­ள­டங்­க­ளாக உல­க­ளா­விய ரீதியில் பல்­வேறு வன்­முறை மோதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­வ­தனை பார்க்க முடி­கி­றது. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மிகப் பாரிய இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.அதே­போன்று 2022 இல் உள்­ளக பாது­காப்பு பொறி­மு­றையின் தோல்­வியின் கார­ண­மாக  வன்­முறை எழுச்சி ஒன்று உரு­வா­னதை பார்த்தோம். எனவே பாது­காப்பு துறைக்­கான செல­வி­னத்தை எம்மால் குறைக்க முடி­யாது. இருப்­பினும் பாது­காப்பு வீரர்­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­துடன், எமது பாது­காப்பு துறைசார் தொழில்­நுட்­பங்­களை மேம்­ப­டுத்­து­வதை முன்­னி­றுத்தி பணி­யாற்றி வரு­கிறோம்.அது அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் பாது­காப்­பினை இலக்­காகக் கொண்­ட­தாகும் அதனை நாம் தொடர்ந்து முன்­னெ­டுப்போம். கேள்வி அர­ச­துறை செல­வி­னங்கள் மற்றும் வரி­களைக் குறைப்­பதை இலக்­கா­கக்­கொண்டு அரச ஊழி­யர்­களின் எண்­ணிக்­கையைக் குறைப்­பது தொடர்பில் நீங்கள் கொண்­டி­ருக்கும் நிலைப்­பாடு என்ன? 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ­சியம் என்று நீங்கள் கரு­து­கி­றீர்­களா? அல்­லது இந்த எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தற்­கான நகர்­வு­களை நீங்கள் மேற்­கொள்­வீர்­களா? பதில் பிர­ஜை­களின் எண்­ணிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிப்­பது என்­பது நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கு உகந்­த­தாகும். பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வாகும் உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்­களின் தொகு­தியை மாத்­தி­ர­மன்றி நாட்டின் சகல பிர­ஜை­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு உண்டு. ஒரு சிங்­கள பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கிறேன்.ஒரு தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அத­னையே செய்ய வேண்டும். இந்த இன மைய அர­சி­யலை விடுத்து ஒட்­டு­மொத்த நாட்­டி­னதும் அபி­வி­ருத்­திக்­காக அனை­வரும் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற வேண்டும். ஏனைய வேட்­பா­ளர்­களை போன்று வரிக்­கு­றைப்பு தொடர்பில் நாம் இலக்­கி­டப்­பட்ட தொகை­களை அறி­விக்­க­வில்லை. அவர்கள் மக்­களை ஏமாற்­று­கி­றார்கள். நாம் 2019இல் வரிக்­கு­றைப்பு தொடர்பில் இலக்­கங்­களை அறி­வித்து இத­னையே செய்தோம். இருப்­பினும் பின்னர் அது எமக்கு எதி­ராக பயன்­ப­டுத்­தப்­பட்­டது. எனவே அதன்­மூலம் நாம் பாடம் படித்­தி­ருக்­கிறோம். எவ்­வா­றி­ருப்­பினும் மக்­க­ளுக்கு நியா­ய­மான நிவா­ர­ணத்தை வழங்­கு­வ­தாக நாம் உறு­தி­ய­ளிக்­கிறோம். பல்­வேறு வித­மாக பெய­ரி­டப்­பட்­டி­ருக்கும் வரி­களை நாம் நிச்­ச­ய­மாக குறைப்போம். அது வரி செலுத்­து­ப­வர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும். தற்­போது அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­வற்றில் 'நாமல் இலக்கு' மாத்­தி­ரமே நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மான கொள்கைத் திட்­ட­மாகும். கேள்வி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கி, மீண்டும் பாரா­ளு­மன்ற ஆட்சி முறைமைக் கொண்­டு­வ­ரு­வது குறித்த உங்கள் நிலைப்­பாடு என்ன? பதில் நாம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்தால்,  அந்த நிறை­வேற்­ற­தி­கார வகி­பா­கத்தை வழங்கக் கூடிய பிறி­தொரு கட்­ட­மைப்பு எமக்கு தேவைப்­படும். பாரா­ளு­மன்றம் என்­பது சட்­டங்கள் என்ற வடி­வத்தில் தீர்­மானம் எடுக்கும் ஒரு கட்­ட­மைப்­பாகும். அதனை நாம் சட்­ட­வாக்கம் என கூறு­கிறோம். அவ்­வா­றெனில் அந்த சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி, அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் மற்றும் நிறை­வேற்று பொதுச்­சேவை ஆகிய மூன்று கட்­ட­மைப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. இங்கு சட்­ட­வாக்­கத்­துக்கும் நிறை­வேற்­ற­தி­கா­ரத்­துக்கும் இடையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும். இல்­லா­விடின் ஒரே கட்­ட­மைப்பே அவை  விரும்­பி­யது போன்று சட்­டங்­களை இயற்றி அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்தும். அது எதேர்ச்­ச­தி­கா­ர­மா­னது. தற்­போ­தைய நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறைமை அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்­துடன்  பினைந்­துள்­ளது. எனவே நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்தால் மாகாண சபை முறை­மையும் ஒழிக்­கப்­படும். எனவே இது சாதா­ர­ண­மாக கலந்­து­ரை­யா­டப்­பட முடி­யாத ஒரு பார­து­ர­மான விட­ய­மாகும். எனவே  தற்­போது அர­சி­ய­ல­மைப்பில் தலை­யீடு செய்­வ­தற்கு நான் முன்­னு­ரி­மை­ய­ளிப்­ப­தில்லை. மாறாக அத­னூ­டாக நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கே முயற்­சிக்­கிறேன். கேள்வி நீங்கள் வெற்­றி­யீட்­டினால் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் செயற்­திட்­டத்­தின்கீழ் தொடர்ந்து செயற்­ப­டு­வீர்­களா? பொது­மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான நிவா­ர­ணங்­களை வழங்கும் அதே­வே­ளைஇ சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிபந்­த­னை­க­ளையும் பூர்த்­தி­செய்­வதில் எவ்­வாறு சம­நி­லையைப் பேணு­வீர்கள்? மின்­சா­ரம், நீர் மற்றும் எரி­வாயு போன்ற பயன்­பாட்டு சேவை­கள் இலா­ப­மீட்ட வேண்­டும் அல்­லது செல­வு­களை ஈடு­கட்ட வேண்டும் ஆகிய இரண்டில் உங்­க­ளது அபிப்­பி­ராயம் என்ன? மேலும்,  பொதுப்­போக்­கு­வ­ரத்து சேவை மற்றும் ஸ்ரீலங்கன் விமா­ன­சேவை என்­ப­வற்றின் முறை­யற்ற நிர்­வா­கத்தை எவ்­வாறு சீர­மைக்­கப்­போ­கின்­றீர்கள்? பதில் சர்­வ­தேச நாணய நிதியம் பெரு­ம­ள­வுக்கு அர­சாங்க வரு­மா­னத்­திலும்,  செல­வி­னத்­தி­லுமே கவனம் செலுத்­து­கி­றது. இருப்­பினும் அத­னூ­டாக மாத்­திரம் பொரு­ளா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்ய முடி­யாது. நாம் இவ்­வொட்­டு­மொத்த செயற்­திட்­டத்தை மாற்­றி­ய­மைப்­பது குறித்து மீளக் கலந்­து­ரை­யா­ட­மாட்டோம்.  அர­சாங்க வரு­மானம்,  மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் கடன் வீதம் போன்ற முக்­கிய இலக்­குகள் வர­வேற்­கத்­தக்­க­தாகும்.  எமக்கும் அவ்­வி­லக்­குகள் உண்டு. இருப்­பினும் அவ்­வி­லக்­கு­களை அடை­வ­தற்­கான எமது அணு­கு­முறை வேறுப்­பட்­ட­தாகும்.  உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வரி­களை அதி­க­ரித்தல்,  தோல்­வி­ய­டைந்த உத்­தி­யாகும்.  நல்­லாட்சி அர­சாங்கம் அதனை செய்­த­துடன் பொரு­ளா­தா­ரத்தை அழித்­தது. அதே விடயம் தற்­போது மீண்டும் நடை­பெ­று­கி­றது. பொரு­ளா­தார வளர்ச்சி இல்­லாத போது அங்கு வரு­மானம் குறை­வ­டை­வ­துடன் அது வரி வரு­மா­னத்­திலும்  வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும்.  எனவே இவற்றில் ஒரு சம­னி­லையை பேண வேண்டும். அதுவே எமது உத்­தி­யாகும் .இதனை நாம் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தசாப்­த­கால ஆட்­சியில் செய்தோம். அதனை எம்மால் மீண்டும் செய்ய முடியும். அர­சுக்கு சொந்­த­மான கட்­ட­மைப்­புக்கள் உள்­ள­டங்­க­ளாக அரச சொத்­துக்­களை நாம் விற்­பனை செய்­ய­மாட்டோம். மாறாக அவற்­றுக்கு பொருத்­த­மான தலை­மைத்­து­வத்தை நிய­மிப்­பதன் ஊடா­கவும் சர்­வ­தேச முகா­மைத்­துவ செயன்­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் ஊடா­கவும் அவற்றை செயற்­திறன் மிக்க சொத்­துக்­க­ளாக மாற்­றி­ய­மைப்போம். அதனை எம்மால் செய்ய முடியும் என நிரூ­பித்­தி­ருக்­கிறோம். செவ­ன­கல சீனித் தொழிற்­சாலை அதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும். கோட்­ட­பய ராஜ­ப­க்ஷவின் வெறும் இரு­வ­ருட ஆட்­சியில்,  அதிலும் குறிப்­பாக கொவிட் தொற்­றுக்கு மத்­தியில் நாம் அதனை இலா­ப­மீட்டும் கைத்­தொ­ழி­லாக மாற்­றினோம். அக்­கா­லப்­ப­கு­தியில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறு­வன கடன்­க­ளையும் குறிப்­பி­டத்­தக்க அளவில் குறைத்தோம் எனவே எம்மால் இதனை செய்ய முடியும். எமது  முயற்­சி­யாண்­மை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு அனு­பவம் வாய்ந்த இளம் தொழில் படை அவ­சி­ய­மாகும். நான் அத்­தகு நபர்­களின் ஆத­ர­வினை பெற்­றி­ருக்­கிறேன். கேள்வி மலை­யக தமிழ் சமூகம் குறிப்­பி­டத்­தக்க சமூக பொரு­ளா­தார சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. அவர்­களின் சம்­ப­ளம்,  நில உரி­மை­கள், வீடு­கள், சுகா­தாரம் மற்றும் கல்வி மேம்­பாடு போன்ற அடிப்­படை வச­தி­க­ளுக்­கான அணு­கலை மேம்­ப­டுத்த உங்கள் நிர்­வாகம் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும்? பதில் எமது கொள்கை பிர­க­ட­னத்தில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளு­டைய வேதன விட­யத்­துக்கு பரஸ்­பர உடன்­பாட்டின் அடிப்­ப­டையில் முக்­கி­யத்­துவம் கொடுப்போம்.  சம்­பள அதி­க­ரிப்பின் ஊடாக மாத்­திரம் அவர்­க­ளது வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்த முடி­யாது. அதே­நரம் உற்­பத்திச் செலவை அதி­க­ரிக்கும் பட்­சத்தில் உலக சந்­தையில் தேயி­லைக்­கான கேள்வி வீழ்ச்­சி­ய­டையும். இது தேயிலை உற்­பத்தி துறையில் வேலை­வாய்ப்­பின்மை ஏற்­படும். இதனால் தொழி­லா­ளர்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள். எனவே இந்த விட­யத்தில் ஒருங்­கி­ணைந்த இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் தீர்வு காண வேண்டும். நாட்டின் ஏனைய மக்­களை போன்று இந்த மக்­க­ளு­டைய வரு­மான மூலங்­களை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யு­மென நம்­பு­கிறேன். அதே­நேரம் பெருந்­தோட்­டத்­து­றை­களில் சகல வச­தி­க­ளையும் கொண்ட பாட­சா­லை­களை உரு­வாக்­குவோம். தேயிலை உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு தேவை­யான தொழில்­நுட்ப தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். மேலும் உயர் தொழில் தகை­மை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கு­ரிய பயிற்­சிளை வழங்கி தொழில் வாய்ப்­பு­களை பெற்­றுக்­கொ­டுப்போம். கேள்வி நாட்டில் பல்­வேறு துறை­களில் ஊழல் மோச­டிகள் மேலோங்­கி­யி­ருக்­கின்­றன. அதனை எதிர்த்­துப்­ போ­ராட உங்கள் நிர்­வாகம் எத்­த­கைய வழி­மு­றை­களை கையாளும்? பொது­நி­தியை முறை­கே­டாகப் பயன்­ப­டுத்தி பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு வித்­திட்ட அர­சி­யல்­வா­திகள் மற்றும் அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? மேலும் இது­போன்ற பொரு­ளா­தாரக் குற்­றங்­களில் ஈடு­பட்ட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? பதில் ஒவ்­வொரு பிர­ஜையும் குற்றம் நிரூ­பிக்­கப்­படும் வரை நிர­ப­ரா­தி­களே. குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன்­பாக ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பிக்­கப்­பட வேண்டும். அந்­த­வ­கையில் எனது குடும்­பத்தார் மீது இது­வரை எந்த குற்­றச்­சாட்­டுக்­களும் எதுவும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. இவை அனைத்தும் எமது எதி­ரா­ளி­க­ளது கீழ்­த­ர­மான செயற்­பா­டுகள். என்­னு­டைய நகர்­வுகள் பிழை­யென்றால் இன்று ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­கு­ரிய ஆத­ரவை பெற்­றி­ருக்க முடி­யுமா? மக்கள் எம்மை நன்கு அறிந்­து­வைத்­துள்­ளார்கள்.  நாம் ஊழலை  கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான பொறி­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­துவோம். தனித்­துவ அடை­யாள அட்டை முறை­மையை நடை­மு­றைப்­ப­டுத்­துவோம். வெளிப்­ப­டை­யான கணனி தொழில்­நுட்ப முறை­மையை கொண்­டு­வ­ருவோம். இந்த தொழில்­நுட்­பங்கள் ஆரம்­பத்தில் பயன்­பாட்டில் இருக்­க­வில்லை. என்­னு­டைய அர­சாங்­கத்தில் எந்த குற்­றச்­சாட்­டுக்­களும் எழு­வதை நான் விரும்­ப­வில்லை. என்­னு­டைய அர­சாங்­கத்தில் தவ­றான செயற்­பா­டு­க­ளுக்கு கண்­டிப்­பான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சர்­வ­தேச ரீதி­யி­லான தட­வியல் கணக்­காய்­வுகள் இறுக்­க­மாக முன்­னெ­டுக்­கப்­படும்.  குறித்த அறிக்­கைகள் வெளிப்­ப­டை­யாக மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­படும். இது­போன்ற காலத்­துக்­கேற்ற வாக்­கு­று­தி­களை வழங்கும் ஒரே­வேட்­பா­ள­ராக நானே காணப்­ப­டு­கிறேன். காரணம் என்­னு­டைய குடும்­பமே 30 ஆண்­டு­கால யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­ட­வந்­தது. அதே­போன்று நானும் மூன்­றாண்­டு­க­ளுக்குள் ஊழலை நவீன தொழில்­நுட்ப உத­வி­யோடு முடி­வுக்­கட்­டுவேன். கேள்வி மத சிறு­பான்­மை­யினர் திட்­ட­மிட்டு ஓரங்­கப்­ப­டு­வ­து­டன்,  பல்­வேறு ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்­ளனர். உங்கள் நிர்­வாகம் மத நல்­லி­ணக்­கத்தை வலுப்­ப­டுத்தும் என்றும் எதிர்­கா­லத்தில் இது­போன்ற சம்­ப­வங்கள் நடை­பெ­றாமல் தடுக்கும் என்றும் உங்­களால் உத்­த­ர­வாதம் அளிக்க முடி­யுமா? பதில் நான் இத­னுடன் உடன்­ப­ட­வில்லை. உல­க­ளா­விய ரீதியில் உயர் வரு­மானம் பெறும் சில நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் உயர் மத சுதந்­தி­ரத்தைக் கொண்­டி­ருக்கும் நாடு­களில் ஒன்­றாக இலங்கை இருக்­கி­றது. பௌத்­தர்­களும் இந்­துக்­களும் பல நூற்­றாண்டு கால­மாக அமை­தி­யாக ஒரு­மித்து வாழ்ந்து வரு­கின்­றனர். பௌத்த விகா­ரை­களை பாருங்கள் அவற்­றுக்குள் இந்து வழி­பாட்டு பகு­திகள் உள்­ளன. தெற்கில் உள்ள இந்து கோயில்­களில் அவர்­க­ளது பண்­டி­கை­களை கொண்­டா­டு­வ­தற்­கான சுதந்­திரம் உள்­ளன.  மோதல்கள் தொடர்பில் ஆங்­காங்கே சில சம்­ப­வங்கள் எப்­போதும் இருக்கும் சட்­டங்கள் மற்றும் தண்­ட­னை­களின் ஊடாக மாத்­திரம் எம்மால் ஒரு முழு நிறை­வான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. மத தலை­வர்­க­ளுக்கு அவர்­களை பின்­பற்­றுவோர் மத்­தியில் நம்­பிக்­கைகள் சார்ந்த பரஸ்­பர புரிந்­து­ணர்வு மற்றும் சகிப்புத் தன்­மையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பொறுப்­புண்டு வடக்கை பாருங்கள். அங்கே சாதி ஒடுக்­கு­மு­றைமை கார­ண­மாக இந்­துக்­களை உள்ளே அனு­ம­திக்­காத சில கோயில்கள் இருக்­கின்­றன. அது அர­சாங்க முறை­மை­யினால் ஏற்­பட்ட பிர்­சி­ச­னை­யல்ல மாறாக அது வடக்கின் கலாச்­சார ரீதி­யி­லான பிரச்­சி­னை­யாகும். அதனை இந்து மத தலை­வர்­களே தீர்க்க வேண்டும்.  அதில் அர­சாங்கம் தலை­யிட்டால் அவர்கள் தமது மத சுதந்­திரம் பறிக்­கப்­ப­டு­வ­தாக கூறு­வார்கள்.  நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்­ள­வாறு அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான மத சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்தி பாது­காப்போம். இது குறித்த தனித்த பிரிவு எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ளது. கேள்வி சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பயன்­பாடு என்­பன அதி­க­ரித்து வரு­வது நாட்டின் சிறுவர் மற்றும் இளைஞர் சமு­தா­யத்­துக்குப் பாரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­தி­ருக்­கி­றது. பாதாள உல­கக்­கு­ழுக்­க­ளும்,  அர­சி­யல்­வா­தி­களும் இத­னுடன் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாகப் பொது­மக்கள் நம்­பு­கின்­றனர். எனவே இவற்றைத் தடுப்­ப­தற்­கும்,  சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டவும் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பீர்கள்? பதில் அரச பாது­காப்பை குறைக்க முடி­யாது என்­ப­தற்கு இது சிறந்த உதா­ரணம். திக­மான சட்­ட­வி­ரோ­த­மான போதைப்­பொருள் வர்த்­தகம் சர்­வ­தேச வர்த்­த­கர்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.இவற்றை முறி­ய­டிப்­ப­தற்கு பாது­காப்பு படை­களை பலப்­ப­டுத்த வேண்டும். இதனை நாம் செய்ய முற்­ப­டும்­போது தமிழ் அர­சி­யல்­வா­திகள் நாம் வடக்கை இரா­ணுவ மயப்­ப­டுத்­து­வ­தாக முறை­யி­டு­கின்­றனர்.இது இலங்கை முழு­வதும் உள்ள கரி­ச­னை­யாகும்.நங்கள் பாதாள உலக செயற்­பா­டுகள் போதைப்­பொருள் மற்றும் பயங்­க­ர­வாதம் ஆகி­யவை தொடர்பில் நாம் பொறுமை காக்க மாட்டோம் என்­பதை எனது விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்ளேன். கேள்வி இலத்­தி­ர­னி­யல்,  மருத்­து­வ­மனை மற்றும் பிளாஸ்டிக் கழி­வுகள் உள்­ளிட்ட வெளி­நாட்டு கழி­வு­களை கொட்டும் இட­மாக மாறு­வது உட்­பட கடு­மை­யான சுற்­றுச்­சூழல் நெருக்­க­டியை இலங்கை எதிர்­கொண்­டுள்­ளது. இந்த சூழ­லியல் சவால்­களை எதிர்­கொள்­ள­வும்இ கால­நிலை மாற்­றத்தின் தாக்­கங்­களைக் குறைக்­கவும் உங்கள் நிர்­வாகம் கொண்­டி­ருக்கும் உறு­தி­யான திட்­டங்கள் என்ன? பதில் சுற்­றாடல் நிலை­பேண்­தகு என்­பது எமது அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டத்தின் மிக­முக்­கி­ய­மாக கருத்­திட்­ட­மாகும்.நாம் நாட்டின் இயற்கை அழகை தொடர்ந்தும் பாது­காப்போம்.ஆனால் மக்கள் மிக விரை­வான பொரு­ளா­தார வளர்ச்­சியை கோரு­கின்­றனர் என்­பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார வளர்ச்சி எனும் போது அங்கு சுற்­றாடல் ரீதி­யான விலை ஏற்­ப­டக்­கூடும்.அதிக பொரு­ளா­தார வளர்ச்சி உள்ள நாடு­களில் சுற்­றாடல் மாசு­டைவு மிகப்­பா­ரி­ய­ளவில் உள்­ளது.நாம் எமது விவ­சா­யத்தில் நூறு சேத­ன­ப­சளை திட்­டத்­துக்கு செல்ல முற்­பட்டோம்.ஆனால் விவ­சா­யிகள் அதற்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.எனவே மஹிந்த சிந்­தனை திட்­டத்தில் உள்­ள­வாறு நாம் இர­சாய உர நிகழ்ச்சித் திட்­டத்தை தொடர தீர்­மா­னித்­துள்ளோம்.ஆனால் எமது நாட்டை வேறு நாடு­களின் கழி­வு­களை கொட்டும் மைதா­ன­மாக உரு­வா­கு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். கேள்வி இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­க­ளை, குறிப்­பாக உயர் திற­மை­யான வேலை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான உங்கள் நீங்கள் உத்­திகள் எவை? இளை­ஞர்கள் மத்­தியில் எத்­த­கைய திறன்கள் அவ­சி­ய­மா­னவை என நீங்கள் கரு­து­கின்­றீர்கள்? அவற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பீர்கள்? பதில் மஹிந்த ராஷ­ப­க்ஷவின் யுகத்தில் இலங்கை சுதந்­தி­ரத்தின் பின்னர் மிகப்­பெ­ரிய மற்றும் விரை­வான பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­பட்­டது. 24 பில்­லியன் டொலர்­க­ளாக இருந்த மொத்த தேசிய உற்­பத்தி 80 பில்­லியன் டொலர்­க­ளாக 9 வரு­டங்­களில் உயர்­வ­டைந்­தது. மஹிந்த சிந்­தனை தசாப்­தத்­தி­லேயே இலங்கை ஐக்­கிய நாடுகள் மனித அபி­வி­ருத்தி சுட்­டெண்ணில் இலங்கை மிகப்­ பெ­ரிய இடத்தை பிடித்­தது. நீங்கள் எந்த சர்­வ­தேச தர நிலை­களை பார்த்­தாலும்  இதுதான் கதை­யாகும். இது ஏன்? காரணம் நாம் மஹிந்த சிந்­த­னையின் கீழ் தேசிய விட­யங்­களை நோக்­க­மா­கக்­கொண்டு நவீ­ன­தொ­ழி­நுட்­பங்­களின் அடிப்­ப­டை­யி­லான செயற்­பாட்டு ரீதி­யான கொள்­கை­களை பின்­பற்­றினோம். 2015ஆம் ஆண்டு பின்னர் இது தொடர்ந்­தி­ருந்தால் எமது நாடு அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடாக அடைந்­தி­ருக்கும்.அந்­த­வி­டயம் நிறுத்­தப்­பட்­டி­ருந்த இடத்­தி­லி­ருந்து நவீன தொழிற்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி இந்த பொரு­ள­தாh­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது எனது இலக்­காகும்.பாரம்­ப­ரிய ஏற்­று­ம­தி­க­ளுக்கு நாம் ஆத­ர­வ­ளிப்­ப­து­டன சர்­வ­தேச சேவைத்­து­றை­களான் கல்வி மற்றும்  சுகா­தா­ரத்­துறை போன்­ற­வற்றில் புதிய முத­லீ­டு­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மி­டு­கிறேன். புதிய தொழில்­வாய்­பு­களை உரு­வாக்க­வேண்டும். இலங்­கையில் உயர்­மட்ட தொழில்­நுட்ப உற்­பத்­தி­களை முன்­னெ­டுப்­பது தொடர்பில் நான் ஏற்­க­னவே சர்­வ­தேச பங்­க­ளார்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்ளேன்.நவீன தொழில் நுட்­பத்தை பயன்­பத்தி பொரு­ள­தா­ரத்தை வளல'ச'சஜ­யடை செய்­வதை தவிர எமக்கு வேறு­வ­ழி­யில்லை.எந்­த­வொரு பிரச்­சி­னையும் தீர்ப்­ப­தற்கும் அதன் தன்மை நீங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். இலங்­கையை பொருத்­த­மட்டில் பிர­தான பிரச்­சி­னை­யாக இருப்­பது வெளி­நாட்டு கடன்­க­ளாகும்.பல்­த­ரப்பு கடன்­களை நாம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கிறோம். 2027ஆம் ஆண்டு வரை இரு­த­ரப்பு கடன்கள் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.பிணை­முறி கடன்கள் மீள செலுத்தப்படு­வ­தில்லை. அவை இன்னும் மறு­சீ­ர­மைக்­கப்­ப­டவும் இல்லை. எனவே, நாடு இன்னும் நெருக்­க­டியில் இருக்­கி­றது.பிணை­முறி கடன்­களில் அதி­க­ளவு பெறு­ம­தியை யார் பெற்­றது.நல்­லாட்சி அர­சாங்­கமே 12.5 பில்­லியன் டொலர்­களை பெற்­றுள்­ளது. இங்கு தான் நெருக்­க­டியே இருக்­கி­றது.தற்­போது இதற்கு என்ன தீர்வு? நாம் மற்­ற­வர்­களை குறைக் கூறிக் கொண்­டி­ருக்க முடி­யாது. நாம் அந்த கடன்­களை மிக­வி­ரை­வாக மீள செலுத்த ஆரம்­பிக்க வேண்டும்.வெளி­நாட்டு வரு­மா­னத்தை பெறு­வதே அதற்கு இருக்கும் ஒரே வழி­யாகும். இதற்கு நாம் சுற்­று­லாத்­து­றையை விரி­வுப்­ப­டுத்­து­வ­துடன் வரு­ட­மொன்­றுக்கு 80 மில்­லியன் சுற்­றுலா பய­ணி­களை வர­வ­ழைக்க வேண்டும்.அந்­நிய செலா­வணி வரு­மா­னத்தை அதி­க­ரிக்­க­செய்ய வேண்டும்.பெரிய மற்றும் நடுத்­தர அள­வி­லான முத­லீ­டு­களை அதி­க­ரிப்­ப­த­துடன் புதிய வர்த்­த­கங்­க­ளு­ட­னான ஏற்­று­ம­தி­களை அதி­க­ரிப்­பது அவ­சி­ய­மாகும். அதே­நேரம் ரூபா வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­துடன் உள்­நாட்டு கடன்­களை செலுத்­தவும் வெளி­நாட்டு நாண­யங்­களை கொள்­வ­னவு செய்­யவும் ரூபா வரு­மா­னத்தை அதி­க­ரித்துக் கொள்ள வேண்டும்.சுருக்­க­மாக இதுவே எமது பொரு­ளா­தார கொள்­கை­யாகும். மேல­திக விரி­வான விட­யங்­களை எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கேள்வி வேலை­வாய்ப்பு மேம்­பாடு மற்றும் தொழில்­நுட்ப - நடை­முறை திறன்­களை உள்­ள­டக்­கிய நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட கல்­வித்­திட்­டத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான உங்கள் திட்டம் என்ன?  பதில் இரண்டு பிர­தான கோணங்­களில் நாம் கல்­வித்­து­றையை பார்க்­கிறோம்.முத­லா­வது மக்கள் சேவைக்­கான அர­சாங்க கல்வி மற்றும் சர்­வ­தேச சேவைக்­கான கல்­வி­யாகும்.மஹிந்த சிந்­தனை யுகத்­தி­லேயே இலங்­கையின் கல்­வித்­து­றையில் மிகப்­பெ­ரிய வளர்ச்சி ஏற்­பட்­டது.நாம் உள்­நாட்டு பாட­சா­லை­களை தொடர்ந்தும் அபி­வி­ருத்தி செய்வோம். அதே­ச­மயம் சமூ­கத்­துக்கும் சந்­தைக்கும் தற்­போது தேவை­யான வகையில் ஒரு வரு­டத்­துக்குள் சகல பாடத்­திட்­டங்­க­ளையும் மீளாய்வு செய்வோம். கற்­பிப்­ப­வர்­க­ளுக்­காக நாம் செய­லாக்க முகா­மைத்­துவ முறை ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­துவோம். அதன் ஊடாக அவர்­க­ளது ஊக்­கு­விப்­புகள் அவர்­க­ளது செய­லாக்­கத்தின் ஊடாக தீர்­மா­னிக்­கப்­படும். இலங்­கையை அமை­தி­யான சர்­வ­தேச கல்வி நிலை­ய­மாக முன்­னேற்­று­வ­தற்கு எம்­மிடம் விரி­வான திட்டம் உள்­ளது. கேள்வி கர்ப்­பி­ணித்­தாய்­மார் மற்றும் குழந்­தை­களின் ஊட்­டச்­சத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நீங்கள் முன்­னெ­டுக்­க­வுள்ள நட­வ­டிக்­கைகள் எவை? குழந்­தைகள் மத்­தியில் அதி­க­ரித்­தி­ருக்கும் மந்­த­போ­சணை மற்றும் வளர்ச்சி குன்றல் ஆகி­ய­வற்றை சீர்­செய்­வ­தற்கு எத்­த­கைய திட்­டங்­களை வைத்­தி­ருக்­கின்­றீர்கள்? பதில் சிறு­வர்­களே நாட்டின் எதிர்­காலம். அவர்கள் எமது நாட்டின் எதிர்­கா­லத்தை வடி­வ­மைக்­கி­றார்கள். எனவே சிறு­வர்­க­ளுக்கு சம­நி­லை­யான போசாக்கு வெற்­றிக்­கொள்ளும் ஆளுமை மற்றும் ஒலி இசை­வாக்கம் போன்­ற­வற்றை வழங்­கு­வதே எமது பொறுப்­பாக இருக்­கி­றது.கிராம சிறுவர் பிர­சவ சிகிச்சை நிலை­யங்கள் ஊடாக கர்ப்­பி­ணித்­தாய்­மார்­க­ளுக்கும் பிறந்த குழந்­தை­க­ளுக்கு திரி­போஷ விட்­டமின் உண­வு­க­ளையும் வழங்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சமுர்த்தி திட்டம் ஊடாக குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­களின் பிள்­ளை­க­ளுக்கு ஆரம்ப பாட­சாலை கல்­விக்கு மானியம் வழங்­கப்­படும். இலங்­கையில் தாய்­மார்கள் வெளி­நா­டு­களில் பணி­பு­ரிதல், தந்தைமார் குடி மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமைஇ பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்தல், பிள்ளை­களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளுவது என்பது மிக வேகமாக அதிகரிக்கும் சோக நிலைமையாக இருக்கி­றது. அவ்வாறான குழந்தைகளுக்கு முறையான பெற்றோருக்குரிய பாதுகாப்பு முறை ஒன்று அறிமுக்கப்படுத்தப்படுவதுடன் அதன் ஊடாக தேவையான வசதிகளும் கவனிப்பும் வழங்கப்படும். அவ்வாறான குழந்தைகளுக்கு மாதாந்தம் உதவிகளை வழங்குவதற்கு உள்நாட்டில் உள்ள மற்றும் வெளிநாட்டில் உள்ள பரோபகாரிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். அந்த உதவிகளின் ஊடாக மிக நெருக்கமாக கண்காணிக்கப்படும் ஒரு தொழில் செயற்பாடு அமுல்படுத்தப்படும். அதாவது இந்த குழந்தைகளுக்கு உணவு தயாரித்தல் மற்றும் கவனிப்புகளை செய்வதற்காக சமுர்த்தி உதவிப்பெறும் தாய்மார்கள் தொண்டர்களாக செயற்படுவார்கள். கேள்வி விவசாயத்தை இலாபகரமான மற்றும் நிலைபேறான துறையாக மாற்ற உங்கள் திட்டங்கள் என்ன? தேயிலை, இறப்பர், தென்னை,  கறுவா,  மிளகு,  வெற்றிலை உள்ளிட்ட ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பீர்கள்? பதில் விவசாயத்துக்கு தேவையான நீர், விதைகள் மற்றும் உரம் என்பன உத்தரவாத விலைக்கேற்ப, தேவைக்கேற்ப விளைநிலங்களுக்கு விநியோகிக்கப்படும். இதன் ஊடாக விவசாயிகளின் முதலீட்டுக்குரிய வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும். நவீன தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். இதன் ஊடாக உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பில் விவசாய கூட்டுறவு வலுபெறும். இதனால் சிறிய மற்றும் பாரியளவிலான ஏற்றுமதி இனங்காணப்பட்ட வேறுபாட்டை தவிர்க்கலாம். காரணம் தற்போது கறுவா, மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற உற்பத்திகள் பாரிய உற்பத்திகளான தேயிலை,  தெங்கு மற்றும் இறப்பர் உற்பத்தியோடு சந்தையில் போட்டியிடுகின்றன. கேள்வி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் ஒடுக்குமுறைத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு உங்கள் நிர்வாகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன? பாதிக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் குற்ற­வாளிகளுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றை எவ்வாறு உறுதிசெய்வீர்கள்? பதில் இந்த உதவிகள் பெண் தலைமைதாங்கும் குடும்­பங்கள் பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட பெண்க­ளுக்கு வழங்கப்படும். இதன் ஊடாக பெண்கள் சிறிய­விலான மற்றும் நடுத்தர வர்த்தகத்­தில் ஈடு­படக்கூடிய வாய்ப்பு கிட்டும். மேலும் பெண்களுக்கான சமஉரிமை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படுகிறது.அதேவேளை பெண்களது பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உதவியளிக்கும் வகையில் விசேட துரித எண்கள் மற்றும் தொலைபேசி பயன்பாடு என்பன ஏற்படுத்திக்கொடுக்கப்படும். கேள்வி பால்புதுமையின சமூகத்தினரின் உரிமைகள்இ  கருக்கலைப்பு மற்றும் தெரிவுசெய்வதற்கான உரிமை என்பன தொடர்பில் உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்? பதில் இரண்டாயிரம் ஆண்டுகளில் நாமே நாகரிகமான வரலாற்றை ஏற்படுத்துகிறோம். நாம் முதுமை கலா­சாரத்தை மதிக்க வேண்டும். மேலைத்தேய சித்தாந்­தங்­களை போன்று எமது கலாசாரத்தை மாற்றியமைக்க முடியாது.ஆனால் நாம் வேறுபட்ட மத கலாசாரங்களை மதிக்கி­றோம். ஆகவே எமது நாட்டின் சட்டத்திட்டத்­துக்­கேற்ப சமத்துவம் நிலைநாட்டப்படும் என்பதை நம்புகிறோம். https://www.virakesari.lk/article/194012
    • எங்கள் கைகளில் ரத்தம் இல்லை! நாங்கள் அப்பாவிகள்! – நாமல் ராஜபக்ச. ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸதெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“  ‘நாம் ஏனோ தனோவென்று  வீதிகளை அமைக்கவில்லை. அதேபோன்று குடியிருப்புகளையும் நிர்மாணிக்கவில்லை. முதலீட்டாளர்களும் கொண்டுவரப்படவில்லை. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டமும் தொலைநோக்கு பார்வையும் எங்களிடம் இருந்தது. செய்யப்படும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் நாங்கள் பொறுப்பு. வாங்கிய ஒவ்வொரு கடனும் இந்த பூமிக்கு ஒரு மதிப்பைக் கொடுத்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பெறப்பட்ட அனைத்து கடன்களுக்கும் நாமே பொறுப்பு. திருடிவிட்டோம் என்று யாராவது சொன்னால், உலகில் எந்த நீதிமன்றத்துக்கும் சென்று நிரபராதி என்பதை நிரூபிக்கத் தயார் என்று சவால் விடுகிறோம். போராட்டத்துக்குப் பிறகு இந்தத் தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகிறோமா? என்று சமீபத்தில் எங்களிடம் கேட்கப்பட்டது. எங்கள் கைகளில் ரத்தம் இல்லை. எந்த தவறும் செய்யப்படவில்லை. எங்களைப் பற்றி வேறுவிதமான புரிதல் இருக்கலாம், ஆனால் மக்கள் முன் வந்து வாக்கு கேட்கும் வலிமை எம்மிடம் உள்ளது. நாம் அப்பாவிகள் என்பதாலும், நாம் உருவான அரசியல் சூழலாலும் அந்த சுய பலம் நமக்காக கட்டமைக்கப்பட்டது. அதைத்தான் நான் சொல்கிறேன் நான் சவால்களை விரும்புகிறேன். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது மற்றும் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பது போன்ற சவாலையும் நான் விரும்புகிறேன். அந்த சவாலை நான் வெல்வேன்’ இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1400013
    • பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்! பழம்பெரும் நடிகையான  ‘சி.ஐ.டி சகுந்தலா  மாரடைப்பு காரணமாக தனது 85 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா,தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399906
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மிட்செல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா வைரஸின் புதிய திரிபால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாக, எக்ஸ் சமூக வலைதள பயனர்கள் தெரிவிக்கின்றனர். குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த வைரஸ் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்த திரிபால் மனிதர்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கோவிட் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்களுக்கு பிரிட்டன் சுகாதார அமைப்பான என்.ஹெச்.எஸ் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குகிறது. சமீப கால புதிய கொரோனா திரிபுகளுக்கு ஏற்ப தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. XEC எனும் இந்த புதிய திரிபு, முந்தைய ஒமிக்ரான் திரிபிலிருந்து உருவானதாகும். லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் மரபியல் மையத்தின் இயக்குநராக உள்ள பேராசிரியர் ஃபிராங்காயிஸ் பால்லாக்ஸ் பிபிசியிடம் கூறுகையில், “கோவிட் வைரஸின் முந்தைய திரிபுகளைவிட இந்த புதிய திரிபு வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் இதற்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றும்” என்றார். இந்த புதிய திரிபு குளிர்காலத்தில் அதிகளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்தார். அலையாக மாறுமா? கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் டிரான்ஸ்லேஷனல் மையத்தின் இயக்குநர் எரிக் டோபோல், “இந்த புதிய திரிபு தற்போதுதான் தொடங்கியுள்ளது” என கூறினார். “இது ஓர் அலையாக மாறுவதற்கு பல வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட ஆகலாம்,” என அவர் LA டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பரிசோதனைகள் குறைந்துள்ளதால் தொற்று பாதிப்பை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது (சித்தரிப்புப் படம்) அறிகுறிகள் என்ன? முந்தைய திரிபுகளை போன்றே சளி அல்லது காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாக உள்ளன. அதிக உடல் வெப்பம் உடல் வலி சோர்வு இருமல் அல்லது வறண்ட தொண்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வைரஸ்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு புதிய திரிபு ஏற்படுவது சாதாரணமானதுதான் என்கின்றனர் நிபுணர்கள் (சித்தரிப்புப் படம்) பாதிப்பு ஏற்பட்ட சில வாரங்களில் பெரும்பாலானோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் நீண்ட நாட்களுக்கு பிறகே குணமடைவர். இந்த புதிய திரிபின் தாக்கம் டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் அதிகம் இருப்பதாக, எக்ஸ் பக்கத்தில் கோவிட் தரவுகள் குறித்து ஆராய்ந்துவரும் மைக் ஹனி தெரிவித்துள்ளார். முன்பைவிட தற்போது குறைவான பரிசோதனைகளே செய்யப்படும் நிலையில், எவ்வளவு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமை (UKHSA) கூறுகையில், வைரஸ்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு, புதிய திரிபுகள் தோன்றுவது வழக்கமானதுதான் என தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என என்.ஹெச்.எஸ் கூறியுள்ளது (சித்தரிப்புப் படம்) பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையின் துணை இயக்குநர் டாக்டர் காயத்ரி அமிர்தலிங்கம் கூறுகையில், “மரபியல் ரீதியாக வைரஸ்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறுவது சாதாரணமானதுதான். பிரிட்டன் மற்றும் உலகளவில் பரவும் கோவிட்டின் திரிபுகள் குறித்து UKHSA அனைத்து தரவுகளையும் கண்காணித்து வருகிறது, எங்களிடம் உள்ள தரவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். கோவிட் 19 தொற்றுக்கு எதிராக தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து தடுப்பூசிகள் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.” என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7xnjg7v4wo
    • வரலாறு காணாத வறட்சி – 700 உயிரினங்களை கொன்று மக்களுக்கு வழங்க திட்டம். தென் ஆப்பிரிக்காவின் பல பிரதேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உள்ளடங்கலாக சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது. இந்நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளை கொன்று இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1399926
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.