Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை

adminSeptember 5, 2024
 
யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையதம்பி ஜெயக்குமார் எனும் முதியவரே அவ்வாறு கோரியுள்ளார்.

குறித்த முதியவர் ஒரு காலை இழந்து, நோய்வாய்ப்பட்டு ஆதரவற்ற நிலையில் மானிப்பாய் உதயதாரகை சன சமூக நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தஞ்சமடைந்துள்ளார்.

அவரை அப்பகுதி மக்கள் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்க முயற்சிகளை எடுத்தனர். முதியோர் இல்லங்கள் அவரை ஏற்க மறுத்த நிலையில் , கிராம சேவையாளரின் சிபாரிசு கடிதத்துடனும் முயற்சிகளை மேற்கொண்ட  நிலையில் எந்த முதியோர் இல்லமும் அவரை சேர்க்கவில்லை

அந்நிலையில் பிரதேச செயலரின் சிபாரிசு கடிதத்துடன் பளையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக தமது செலவில் வாகனம் ஒன்றில் அவரை ஊரவர்கள் அழைத்து சென்ற போதிலும் , அங்கும் அவரை சேர்த்துக்கொள்ள நிர்வாகம் மறுத்துள்ளது.

அதனால் மீண்டும் தமது சனசமூக நிலையத்திற்கே அவரை அழைத்து வந்திருந்தனர்.

எந்தவொரு முதியோர் இல்லங்களோ , அமைப்புக்களோ , நிறுவனங்களோ தன்னை பொறுப்பேற்கததால் , தன்னை கருணை கொலை செய்து விடுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
 
https://globaltamilnews.net/2024/206463/

  • கருத்துக்கள உறவுகள்

சேவை மனப்பான்மையுடன் இயங்கும்  முதியோர் இல்லங்கள் இவரை சேர்ப்பதற்கு ஏன் தயங்குகின்றன. சிலவேளை குழப்படிகாரராக இருப்பாரோ.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

சேவை மனப்பான்மையுடன் இயங்கும்  முதியோர் இல்லங்கள் இவரை சேர்ப்பதற்கு ஏன் தயங்குகின்றன. சிலவேளை குழப்படிகாரராக இருப்பாரோ.

சேவை செய்ய காத்திருப்போருக்கு பொறுப்பெடுத்து செய்வதானால் பணமும் வேண்டுமல்லவா?

ஒரு நாளைக்கு உணவுக்கு மாத்திரம் 500-1000 ரூபா வேண்டுமே?

அவரைப் பராமரிக்க செலவு?

கொண்டுபோய் தள்ளிவிட்டால் சரியோ?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

சேவை செய்ய காத்திருப்போருக்கு பொறுப்பெடுத்து செய்வதானால் பணமும் வேண்டுமல்லவா?

ஒரு நாளைக்கு உணவுக்கு மாத்திரம் 500-1000 ரூபா வேண்டுமே?

அவரைப் பராமரிக்க செலவு?

கொண்டுபோய் தள்ளிவிட்டால் சரியோ?

இந்த கருத்துகள்  கவலையை. தருகிறது  இலங்கையில் இருந்து இருந்தால் எங்களுக்கும் இந்த நிலமை.  தான்   

ஆகவே  இலங்கையில் வாழும் ஆதரவு அற்ற முதியோர்களு    ஓய்வு ஊதியம் உடனாடியாக வழங்கப்பட வேண்டும்   அத்துடன் தீபாவளி தைப் பொங்கல் ஆங்கில புது வருடம்  தமிழ் புது வருடம்   நத்தார் பண்டிகை   பிறந்த நாள்,.........போன்ற நாள்களுக்கு  விஷேட கொடுப்பனவு  வழங்க வேண்டும்     உறவினர்கள் பிள்ளைகள் வைத்து பார்ப்பார்கள்   🙏😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சேவை செய்ய காத்திருப்போருக்கு பொறுப்பெடுத்து செய்வதானால் பணமும் வேண்டுமல்லவா?

ஒரு நாளைக்கு உணவுக்கு மாத்திரம் 500-1000 ரூபா வேண்டுமே?

அவரைப் பராமரிக்க செலவு?

கொண்டுபோய் தள்ளிவிட்டால் சரியோ?

அநேகமான காப்பகங்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பது தெளிவாகிறது. 😭

29 minutes ago, விசுகு said:

அநேகமான காப்பகங்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பது தெளிவாகிறது. 😭

விதி விலக்குகள் உண்டு.

என்னுடன் படித்த இருவர், இருவரும் மருத்துவர்கள் முதியோர் காப்பகங்களை கொழும்பில் / தெற்கில் நடாத்தி வருகின்றனர். என் நண்பர்களின் வயதான தந்தைமார்கள் சிலர் அங்கு தான் இருக்கின்றனர். ஊரில் அவர்களது உறவினர்கள், தந்தைமார்களின் சகோதரங்கள் பலர் இருப்பினும், இக் காப்பகங்களில் தான் உள்ளனர். மிகவும் தரமான, சுத்தமான காப்பகங்கள் இவை. வயோதிபர்களை நன்றாக பராமரிக்கின்றனர். இங்குள்ள (கனடா) காப்பங்களை விட நன்றாக உள்ளன.

அண்மையில் மாமியார் மருமகள் பிரச்சனைகளால் என் நண்பர் ஒருவரின் அம்மாவை இங்கிருந்து அங்கு தான் கொண்டு போய் விடும் நிலை ஏற்பட்டது. தாயார் பம்பர்ஸ் கட்ட மறுத்து வீடு முழுக்க மலசலம் கழிப்பார். நண்பனும், அவன் மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது அவரின் கழிவுகள் தான் வரவேற்கும். இப்ப அங்கு போய், பம்பர்ஸ் அணிகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

அநேகமான காப்பகங்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பது தெளிவாகிறது. 😭

ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு பணமும் தேவை தானே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஆகவே  இலங்கையில் வாழும் ஆதரவு அற்ற முதியோர்களு    ஓய்வு ஊதியம் உடனாடியாக வழங்கப்பட வேண்டும்.

அண்ணை 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் கொடுப்பனவு 3000 ரூபாவிற்கு கொஞ்சம் கூட அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் மதிய உணவுப் பார்சல் 250 ரூபா, காலை, மாலை உணவிற்கு 250 ரூபா, சவர்க்காரம், பற்பசை, உடுப்புத் தோய்க்க சவர்க்காரத் தூள் 17000 - 18000 ரூபா வரை குறைந்த பட்சம் மாதம் தேவை.

கைதடியில் மாகாண சபையால் நடத்தப்படும் இலவச முதியோர் காப்பகம் உள்ளது. அங்கு டிசம்பர் வரை பராமரிப்பு பணிகள் இடம்பெறுவதால் புதிதாக ஒருவரையும் சேர்க்கவில்லை என தந்தையார் கூறினார். எமது கிராமத்தில் திருமணஞ் செய்யாத நடமாடித் திரியக் கூடிய முதியவர் ஒருவர் இருக்கிறார். அவரை கிராமசேவகர் ஊடாக கைதடி முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்றபோது மேலுள்ள தகவல் கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

புலர் ஊடாகவும் முதியோர் பராமரிப்பு இருக்கிறது என்று படித்ததாக நினைவு..சாப்பாடு , சவர்க்காரம் என்று கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தால் சரியாகுமா..கோவிக்க கூடாது..மனதில் பட்டதை அப்படியே கேட்கிறேன். ஏன் இப்படியான ஆதரவற்றவர்களையும் பார்க்க இயலாது..கருணைக் கொலைக்கு மனுப் பண்ணும் அளவுக்கு அறிவு இருக்கும் ஒருவர் ஏன் வாழ்வதற்கு வழி தேடக் கூடாது..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

அண்மையில் மாமியார் மருமகள் பிரச்சனைகளால் என் நண்பர் ஒருவரின் அம்மாவை இங்கிருந்து அங்கு தான் கொண்டு போய் விடும் நிலை ஏற்பட்டது. தாயார் பம்பர்ஸ் கட்ட மறுத்து வீடு முழுக்க மலசலம் கழிப்பார். நண்பனும், அவன் மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது அவரின் கழிவுகள் தான் வரவேற்கும். இப்ப அங்கு போய், பம்பர்ஸ் அணிகின்றார்.

இது எனக்கு ஒரு உளவியல் பிரச்சனையாக தெரிகிறது .

நல்ல மன நல மருத்துவர் இதை சரி செய்து இருப்பார் .

இனி புலம்பெயர் கூட்டம்  இவற்றை விரும்பியோ விரும்பாமலோ ஏற்கத்தான் வேணும் 8௦ களுக்கு  பிறகு பிறந்த வடகிழக்கு  கூட்டம்  குறைவு .

திடீர் என பூமியில் இருந்து பிடுங்கப்பட்ட மக்கள் கூட்டம் போல் புலம்பெயர் வாழ்க்கை அமைய போவுது அதற்கு நாங்க மனதளவில் தயாராகணும் , இன்று அவர்களுக்கு நடப்பது தான் நாளை உங்களுக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

8௦ களுக்கு பிறகு வந்தவங்கள் கனடா குளிரை லண்டன் குளிரை பார்த்து பயந்து மறுபடியும் அந்த தீவை நோக்கி ஓடுன்றான்கள்.

அங்கு ச்சினியும் விசமாகது இயற்கை உரங்களும் பொய் பெயரில் குலவை அடிக்குது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

புலர் ஊடாகவும் முதியோர் பராமரிப்பு இருக்கிறது என்று படித்ததாக நினைவு..சாப்பாடு , சவர்க்காரம் என்று கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தால் சரியாகுமா..கோவிக்க கூடாது..மனதில் பட்டதை அப்படியே கேட்கிறேன். ஏன் இப்படியான ஆதரவற்றவர்களையும் பார்க்க இயலாது..கருணைக் கொலைக்கு மனுப் பண்ணும் அளவுக்கு அறிவு இருக்கும் ஒருவர் ஏன் வாழ்வதற்கு வழி தேடக் கூடாது..

புலரின் தற்காலிக செயற்பாட்டிமாக முதியோர் சங்க கட்டிடத்தை பாவிக்கிறோம் அக்கா.
அங்கே மதிய உணவு மட்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முதியோர்களுக்கு கொடுக்கினம். அதற்கு முதியோர்கள் பலர் இணைந்து தனியான நிர்வாகம் செய்கிறார்கள். எனது தந்தையார் தலைவராக இருக்கிறார். வெளிநாட்டு, உள்நாட்டு மக்களின் நன்கொடைகளால் முதியோர் சங்கம் செயற்படுகிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு பணமும் தேவை தானே.

ஈழப்பிரியரே! கருணைக் கொலைக்கும் காசு தேவையா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஈழப்பிரியரே! கருணைக் கொலைக்கும் காசு தேவையா? 

ஓம் ஐயா, விச ஊசி மருந்து ஏற்ற காசு வேணும் தானே?!
இலங்கையில் கருணைக்கொலை சட்டமாக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

ஈழப்பிரியரே! கருணைக் கொலைக்கும் காசு தேவையா? 

சாதாரண கொலைக்கு கொஞ்சகாசு போதும்

கருணைக் கொலைக்கு கூடுதலான பணம் தேவை.

பெரியவர் பார்க்க ஆள் இல்லை என்பதாலேயே கருணைக் கொலை கேட்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/9/2024 at 16:11, விசுகு said:

அநேகமான காப்பகங்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பது தெளிவாகிறது. 😭

இளம் சொந்த பந்தங்களுக்குள்ளேயே பணம் பேசு பொருளாக இருக்கும் போது......
வயோபத்திலும், வயோதிப மடத்திலும்  பண பேரங்கள் இல்லாமல் இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

புலரின் தற்காலிக செயற்பாட்டிமாக முதியோர் சங்க கட்டிடத்தை பாவிக்கிறோம் அக்கா.
அங்கே மதிய உணவு மட்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முதியோர்களுக்கு கொடுக்கினம். அதற்கு முதியோர்கள் பலர் இணைந்து தனியான நிர்வாகம் செய்கிறார்கள். எனது தந்தையார் தலைவராக இருக்கிறார். வெளிநாட்டு, உள்நாட்டு மக்களின் நன்கொடைகளால் முதியோர் சங்கம் செயற்படுகிறது.
 
பாவங்கள்..என்னத்தை சொல்வது என்றே தெரியவில்லை.இப்படி ஒரு பதில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை..மேற்கொண்டு இதைப் பற்றி கேட்க, பேச விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

இதைப் பற்றி கேட்க, பேச விரும்பவில்லை.

யாயினி அவர்களே! நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கையில் கருணக் கொலைக்கான காப்புறுதி நிறுவனம் ஒன்று உருவாகும் என நம்பலாம், கவலை வேண்டாம்.😋

On 6/9/2024 at 16:11, விசுகு said:

அநேகமான காப்பகங்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பது தெளிவாகிறது. 😭

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.