Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 SEP, 2024 | 10:20 AM
image

ராமேசுவரம்: விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறை தண்டனைக்குப்பின் இவர்களின் வழக்கு கடந்த 5-ம் தேதி மன்னார் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் இன்னாசி, ராஜா, சசிக்குமார், மாரி கிங்ஸ்டன், மெக்கான்ஷ் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா ரூ.50 ஆயிரம் அபதாரம் செலுத்தவும் உத்தரவிட்டார். மேலும் கணேசன, சேசு, அடைக்கலம் ஆகிய 3 மீனவர்கள் இரண்டாவது முறையாக எல்லைதாண்டி வந்ததாக கூறி ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், அவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபதாரமும் கட்ட உத்தரவிட்டார்.

இதனையடுத்து 3 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு உறவினர்கள் கடன் வாங்கி 7-ம் தேதி பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் 6-ம் தேதி அபராததொகை செலுத்த வில்லை என சிறைத் துறையினர் அவர்களை கைவிலங்கிட்டு மொட்டை அடித்தும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து, வளாகத்திலுள்ள கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப் படுத்தியதாகவும், சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பின்னர் 5 மீனவர்களும் (செப்.13) காலை மெர்ஹானா முகாமில் இருந்து விமான மூலம் இரவு சென்னை வந்தடைந்ததாக கூறினர். மீனவர்கள் இன்று  பகல் 1 மணியளவில் சொந்த ஊரான தங்கச்சிமடத்துக்கு வந்து சேர்ந்தனர். மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு வந்ததை கண்ட அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் தொடர் அத்துமீறல் மற்றும் மனித நேயமற்ற செயலை கண்டித்தும், மத்திய அரசு மீனவர்கள் பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவ சங்க நிர்வாகிகள் ஜேசுராஜா, எமரிட் மற்றும் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறும்போது, “மொட்டை அடிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள் தான் என எண்ண வேண்டாம், எங்களுடைய வரிப்பணத்தில் வாழும் இலங்கை அரசு எங்கள் மீனவர்களை மொட்டை அடித்து மனித நேயமற்ற அரக்கர்களாக கொடுமைப்படுத்தி உள்ளனர். மத்திய அரசு இதையும் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. இது இந்தியாவை அவமானப்படுத்தியதாகத் தான் நாங்கள் கருதுகிறோம்.

ஆகவே, இதுவரை இலங்கை கடற்படை எங்களை அடித்து கொடுமைப்படுத்தியது, படகுகளை சிறை பிடித்தது, அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இனிமேலும் இவ்வாறான மனிதநேயமற்ற செயலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஆகவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கும் எதிராகவும் நடத்துவோம்” என்றார்.

https://www.virakesari.lk/article/193719

  • Replies 70
  • Views 4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣. இன்று எங்களின் இருப்பை தக்க

  • ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் .... அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.... கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்ப

  • நிழலி
    நிழலி

    ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்? உலகம் முழுதும் தம் உயிரு

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேலை செய்திருக்கிறானுகள்! மொட்டியடிச்சு சிறைச்சாலையையும் கிளீன்பண்ணவச்சிருக்கிறானுகள்! அதாவது கொள்ளையர்களுக்கு புனர்வாழ்வு அளித்து புதிய தொழில் ஒன்றையும் கற்றுக்கொடுத்திருக்கிறானுகள்!👏

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை அடித்தால்தான் இவர்களுக்கு ரோசம் வருமோ,...🤣

இலங்கை அரசு இவர்களுக்கு கல்வியறிவூட்டி அனுப்ப வேண்டும். அப்போதாவது ஏன் கைதுசெய்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கலாம்.

,..😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நல்லவேலை செய்திருக்கிறானுகள்! மொட்டியடிச்சு சிறைச்சாலையையும் கிளீன்பண்ணவச்சிருக்கிறானுகள்! அதாவது கொள்ளையர்களுக்கு புனர்வாழ்வு அளித்து புதிய தொழில் ஒன்றையும் கற்றுக்கொடுத்திருக்கிறானுகள்!👏

கரும்புள்ளி செம்புள்ளி குத்தினால் மேலும் நன்மையானது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பார்டா ரோசத்தை .....மீனவர்களை கொலை செய்யும் பொழுது வராத ரோசம் மொட்டையடிச்சதற்கு வந்திட்டடுது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழக உறவை இலங்கை சிறையில் மொட்டை அடித்து துன்புறுத்தல் செய்வதை ரசிக்கும் அளவுக்கு நாங்கள் மனதில் வக்கிரத்தை வளர்த்து விட்டோமா? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயம் said:

ஒரு தமிழக உறவை இலங்கை சிறையில் மொட்டை அடித்து துன்புறுத்தல் செய்வதை ரசிக்கும் அளவுக்கு நாங்கள் மனதில் வக்கிரத்தை வளர்த்து விட்டோமா? 

இலங்கைத் தமிழர் மட்டும் உறவு கொண்டாட வேண்டுமா? 

எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும்போது தாங்கள் கூறும் உறவுமுறை எங்கே போனது? 

(எங்கள் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையால் வந்த கோபம்தான் இது) 

  • கருத்துக்கள உறவுகள்

அபராதத்தொகையை குறிப்பிட்ட திகதிக்குள் கட்டாவிட்டால் தண்டனையை கடூழிய தண்டைனையாக மாற்றுவார்கள் போல. கடூழிய தண்டனையில் இந்த மாதிரியான கடுமையான வேலைகளும் கொடுக்கப்பட்டு, அத்துடன் தலைமுடியை ஒட்டவும் வெட்டி விடுவார்கள் போல.

தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம்.

எப்பவும் இதைப் பற்றிக் கருத்துச் சொல்லி, இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்கும் தமிழக அரசியல்வாதிகள், எல்லை தாண்டிப் போகாதீர்கள் என்று அவர்களுடைய மீனவர்களுக்கு ஒரு போதும் சொல்வதில்லை.  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் ....
அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்....

கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்பொழுது பிடிபட்டால் சில சமயம் உயிருக்கு ஆபத்து இருக்கின்றது என தெரிந்தும் "பணம் " சிறந்த வாழ்க்கை ... என்ற ஆசையில் எல்லை தாண்டினோம்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அப்ப பயத்தில ஓடி வரயில்ல,..🤣

அதுசரி,..சிங்கப்பூரில் பிடிபட்டு பிரம்படி வேண்டுகிற ஆட்களுக்காக நாங்கள் என்ன இரங்கினோமா,.இல்லையே,...பிறகேன் உங்க பிடிச்சு மொட்டையடித்தால் மட்டும் ரோசம் வருகுது,.😉

திருப்பதியில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது இலங்கையில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது,.. இதுக்கெல்லாம் அழலாமா,.🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

எப்பவும் இதைப் பற்றிக் கருத்துச் சொல்லி, இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்கும் தமிழக அரசியல்வாதிகள், எல்லை தாண்டிப் போகாதீர்கள் என்று அவர்களுடைய மீனவர்களுக்கு ஒரு போதும் சொல்வதில்லை.  

தமிழக அரசியல்வாதிகள் தலைவர்கள் 🙆‍♂️
எல்லை தாண்டி இலங்கைக்கு சென்று கொள்ளை அடிப்பதை ஈழ தமிழர்கள் வாழ்வாதாரத்தை அழியுங்கோ என்று ஊக்குவித்து முழக்கமிடுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரசோதரன் said:

அபராதத்தொகையை குறிப்பிட்ட திகதிக்குள் கட்டாவிட்டால் தண்டனையை கடூழிய தண்டைனையாக மாற்றுவார்கள் போல. கடூழிய தண்டனையில் இந்த மாதிரியான கடுமையான வேலைகளும் கொடுக்கப்பட்டு, அத்துடன் தலைமுடியை ஒட்டவும் வெட்டி விடுவார்கள் போல.

தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம்.

எப்பவும் இதைப் பற்றிக் கருத்துச் சொல்லி, இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்கும் தமிழக அரசியல்வாதிகள், எல்லை தாண்டிப் போகாதீர்கள் என்று அவர்களுடைய மீனவர்களுக்கு ஒரு போதும் சொல்வதில்லை.  

பெரும்பாலும் இந்த  மீனவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள், இந்த தமிழக அரசியல்வாதிகள்தான் முதலாளிகளாக இருப்பார்கள், இந்த முதலாளிகள் மீன் வளங்களை அழித்து சிறிய மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கியமையால் தற்போது கூலிக்கு எல்லை தாண்டி மீன் பிடித்தலில் ஈடுபட்டு இலங்கை கடல் வளத்தினை அழிக்கிறார்கள், இவர்களுடன் சேர்த்து அந்த தமிழக அரசியல்வாதி முதலாளிகளுக்கும் தண்டனை (முதலாளிக்கு அதிக தண்டனை விதித்தால் பிரச்சினை முடிவுக்கு வரலாம்) வழங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடல் எல்லை தாண்டி இந்தியாவுக்கு ஓடியதை மறந்துவிட்டோம் போல. வெளிநாட்டுக்கு வந்த பலர் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக சென்று பின் தூரதேசம் சென்றார்கள். இங்கே உள்ள பல கருத்துக்களை/வாதங்களை பார்த்தால் இலங்கை அகதிகள் விடயத்தை இந்தியா எப்படி கையாண்டாலும் நியாயம் கேட்கும் அருகதை எமக்கு இல்லை போல. ஏன் என்றால் சட்டவிரோதமாக புகுந்தவர்கள் எப்படி பொதுவான செளகரியத்தை/மரியாதையை எதிர்பார்க்கலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2024 at 08:17, நியாயம் said:

ஒரு தமிழக உறவை இலங்கை சிறையில் மொட்டை அடித்து துன்புறுத்தல் செய்வதை ரசிக்கும் அளவுக்கு நாங்கள் மனதில் வக்கிரத்தை வளர்த்து விட்டோமா? 

நியாயமான கேள்வி   இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

22 hours ago, Kapithan said:

இலங்கைத் தமிழர் மட்டும் உறவு கொண்டாட வேண்டுமா? 

எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும்போது தாங்கள் கூறும் உறவுமுறை எங்கே போனது? 

(எங்கள் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையால் வந்த கோபம்தான் இது) 

அழிந்துவிடாது அதாவது இலங்கையில் மக்கள் வறுமையால். உண்ணா உணவின்றி   அழிந்துவிடாது காப்பாத்திட்டார்… மோடி    இதனை மிகவும் குறுகிய காலத்தில் மறந்து விட்டது இலங்கை   

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

திருப்பதியில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது இலங்கையில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது,.. இதுக்கெல்லாம் அழலாமா,.🤣

இரண்டுக்கும். வித்தியாசம் உண்டு” 

ஒன்று விரும்பி மொட்டை அடிப்பது  இரண்டாவது கட்டாயமாக. விருப்பத்துக்கு மாறாக மொட்டை அடிப்பது   

மிகவும் கீழ்த்தர அவமானப்படுத்தும் செயல்

சண்டை காலத்தில் அடைக்கலம் தேடி எல்லை தாண்டி இந்தியா தமிழ்நாடு வந்த இலங்கை தமிழருக்கு   மொட்டை அடித்து இருக்கலாமோ  ??  

15 hours ago, putthan said:

ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் ....
அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்....

கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்பொழுது பிடிபட்டால் சில சமயம் உயிருக்கு ஆபத்து இருக்கின்றது என தெரிந்தும் "பணம் " சிறந்த வாழ்க்கை ... என்ற ஆசையில் எல்லை தாண்டினோம்....

ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்?

உலகம் முழுதும் தம் உயிருக்கு பயந்தும்,  பட்டினிச் சாவுக்கு பயந்தும்,  அக திகளாக செல்லும் மக்களும் கடற்கொள்ளையர்களும் ஒன்றா புத்தன்? 

தமிழக மீனவர்கள் , தடை செய்யப்பட்ட மீன் பிடிக்கும் முறைகளின் மூலம் கடல் வளத்தை நாசம் செய்த பின் பக்கத்து வீட்டில் இருக்கும் வளம்களை கொள்ளை அடிக்க அதே முறைகளை பயன்படுத்தி எல்லை தாண்டி வருகின்றனர். 

மொட்டை அடித்ததுடன் கரும் புள்ளி செம்புள்ளி குத்தி, கொள்ளையர்கள் என்று முகத்தில் பச்சை குத்தி அனுப்பியிருக்க வேண்டும்.

23 minutes ago, Kandiah57 said:

சண்டை காலத்தில் அடைக்கலம் தேடி எல்லை தாண்டி இந்தியா தமிழ்நாடு வந்த இலங்கை தமிழருக்கு   மொட்டை அடித்து இருக்கலாமோ  ??  

இந்தியா அகதிகள் தொடர்பான ஐ.நா சாசனத்தில் / உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஒரு நாடு.  அப்படி இருக்கும் போது,  அக திகளுக்கான அடிப்படி உரிமைகளையும் வசதிகளையும் வழங்க வேண்டியது அதன் பொறுப்பு.

ஆனால் கடல் கடந்து, உயிருக்கு பயந்து போன தாயக அகதிகளை குற்றவாளிகள் மாதிரி நடத்திய நாடு இந்தியா. அதுவும் தாயக தமிழர்களின் இன்றைய / அன்றைய நிலைக்கு உண்மையான காரணமாக தானே இருந்து கொண்டு, அதன் விளைவாக உருவான அகதிகளை கீழ்த்தரமா நடத்தியது இந்தியா.

59 minutes ago, Kandiah57 said:

நியாயமான கேள்வி   இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

அழிந்துவிடாது அதாவது இலங்கையில் மக்கள் வறுமையால். உண்ணா உணவின்றி   அழிந்துவிடாது காப்பாத்திட்டார்… மோடி    இதனை மிகவும் குறுகிய காலத்தில் மறந்து விட்டது இலங்கை   

நன்றாக இந்தியாவுக்கு சார்பாக கதைக்கின்றீர்கள்.

இந்தியா ஒன்றும் அன்பினால் இதனை செய்யவில்லை.  சீனா பக்கம் முற்றிலும் சாய்ந்து இருந்த இலங்கையை தன் பக்கம் கொண்டு வர செய்த முயற்சிகளில் ஒன்று. அத்துடன் இது 'கடன்' அல்ல. ஒரு வகையான  Credit Line.  தன் பொருதளை அங்கு சந்தைப்படுத்தலுக்கும் ஏற்றவாறே வழங்கியிருந்தது. ஆனால்  சிங்களம் மீண்டும் இவர்களுக்கு பெப்பே காட்டும் நாள் தொலைவில் இல்லை

தன் அண்டை நாடுகளுடன் சுமூக உறவை ஒரு போதும் இந்தியா பேணியதில்லை. பெரிய அண்ணண் போக்கில் அல்ல. பெரிய ரவுடி போக்கில்நடந்து கொள்ளும் நாடு.

3 hours ago, vasee said:

பெரும்பாலும் இந்த  மீனவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள், இந்த தமிழக அரசியல்வாதிகள்தான் முதலாளிகளாக இருப்பார்கள், இந்த முதலாளிகள் மீன் வளங்களை அழித்து சிறிய மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கியமையால் தற்போது கூலிக்கு எல்லை தாண்டி மீன் பிடித்தலில் ஈடுபட்டு இலங்கை கடல் வளத்தினை அழிக்கிறார்கள், இவர்களுடன் சேர்த்து அந்த தமிழக அரசியல்வாதி முதலாளிகளுக்கும் தண்டனை (முதலாளிக்கு அதிக தண்டனை விதித்தால் பிரச்சினை முடிவுக்கு வரலாம்) வழங்கவேண்டும்.

அதனால் தான் படகுகளை கைப்பற்றும் வகையில் இலங்கையில் சட்டம் கொண்டு வரப்பட்டு, பல கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் மீனவர்களின் முதலாளிகளுக்கு பல இலட்சம் இழப்பு ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நன்றாக இந்தியாவுக்கு சார்பாக கதைக்கின்றீர்கள்.

நான் கதைப்பது பிழையாக இருக்கலாம்   

தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழமால். இந்திக்காரர்கள் வாழ்ந்து இருந்தால் இலங்கை இப்படி செய்திருக்குமா.?? 

முடியாது ஒருபோதும் முடியாது  இலங்கை தமிழர்களுக்கு கிராம சபைகள்கூட  அதிகாரங்களை பெறப் போவதில்லை  ஏனெனில் அவர்களுக்கு இந்தியாவை  வளைத்து போட தெரியவில்லை நாங்கள் இந்தியாவை எதிரப்பதால்

யாருக்கு நட்டம்??

யாருக்கு லாபம்??

கண்டிப்பாக இந்தியாவுக்கு இல்லை அவர்கள் இலங்கையில் விரும்பும் எதனையும். செய்யும் பலத்துடன் இருக்கிறார்கள்  தமிழர்களால்.  இதை மாற்றியமைக்க முடியுமா?? 

4 minutes ago, Kandiah57 said:

நான் கதைப்பது பிழையாக இருக்கலாம்   

தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழமால். இந்திக்காரர்கள் வாழ்ந்து இருந்தால் இலங்கை இப்படி செய்திருக்குமா.?? 

நீங்கள் சொல்லும் வாதத்துக்கு மறுதலையாக, இலங்கையின் வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்து வரின், இந்த தமிழக மீனவ கொள்ளைக் கூட்டம்  எல்லை தாண்டுவதை நினைத்தும் பார்த்து இருக்க மாட்டாது என்றும் நாம் கேட்கலாம்.  ஏனெனில், கேரளாவில் இவர்கள் வாங்கிய அடியின் பின் கேரள கடற்கரை பக்கம் எல்லை தாண்டிப் போவதை நினைக்கவே  பயப்படுகின்றனர்.

ஆனால் நடைமுறையில் இல்லாத ஒன்றை ஊகத்தின் அடிப்படையில் முன்வைத்து பிழைகளை நியாயப்படுத்த முடியாது.

11 minutes ago, Kandiah57 said:

முடியாது ஒருபோதும் முடியாது  இலங்கை தமிழர்களுக்கு கிராம சபைகள்கூட  அதிகாரங்களை பெறப் போவதில்லை  ஏனெனில் அவர்களுக்கு இந்தியாவை  வளைத்து போட தெரியவில்லை நாங்கள் இந்தியாவை எதிரப்பதால்

உலகில் இந் தியாவை இலங்கைத் தமிழர்கள் நம்பிய அளவுக்கு வேறு எவரும்நம்பியிருப்பினமா எனத் தெரியவில்லை.  ஆனால் என்றுமே இந்தியா  ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தியதும் இல்லை, அவர்களை ஒரு பொருட்டாக மதித்ததும் இல்லை.

இந்தியாவை பொறுத்தவரைக்கும் ஈழத்தமிழினம் என்றுமே பலியாடுகள் மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

உலகில் இந் தியாவை இலங்கைத் தமிழர்கள் நம்பிய அளவுக்கு வேறு எவரும்நம்பியிருப்பினமா எனத் தெரியவில்லை.  ஆனால் என்றுமே இந்தியா  ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தியதும் இல்லை, அவர்களை ஒரு பொருட்டாக மதித்ததும் இல்லை.

உண்மை தான்  ஆனால் இன்று உலகில் இந்தியாவை எதிர்க்கும்   மிகப் பலமாக எதிர்க்கும் இனம்   ஒரு நாடு அற்ற. வெறும்  25 லட்சம் தமிழர்கள் மட்டுமே   இதனால் என்ன லாபம் உண்டு??    2  கோடி சிங்களவர்கள   இலங்கையில் காலவரையின்றி ஆட்சியில் இருக்க போகும் சிங்களவர்களை   இந்தியா எதிர்க்க விரும்பவில்லை என்பது உண்மையோ    

இலங்கை கூட. இந்தியாவை எதிர்க்கவில்லை  ஜ.ஆர்   எதிர்த்து தான்  இந்திராகாந்தி  மிக கடுமையாக நடத்து.  கொண்டவர்  வட்ட மேசை மாகநாடு வரை பேச்சுவார்த்தை நடந்தது 

அதன் தொடர்ச்சியாக ரஜிவ்.   செயல் பட்டு இந்தியா இலங்கை ஒப்பந்தம் உருவானது     ஜே.ஆர் இந்தியாவை எதிர்க்கமால் அனுசரித்து போய்யிருந்தால்.  எந்தவொரு பேச்சுவார்த்தையும். நடந்து இருக்காது   இன்று இலங்கை எதிர்ப்பதை தவிர்த்து வருகிறது”  சிங்களவர்கள்   தொடர்ந்தும் இப்படி இந்தியாவுடன் நடப்பார்களாயின்.  தமிழ் ஈழம்   ஒருபோதும் கிடையாது 

தமிழ் ஈழம் கிடைப்பது  எங்கள் பக்கத்தில் உள்ள நியயாத்தில்  தங்கி இருக்கவில்லை   

சர்வதேச சட்டங்களில். தங்கியிருக்கவில்லை 

இலங்கை இந்தியாவுடன் எப்படி நடந்து கொள்கிறது என்பதில் தான் தங்கியுள்ளது   

நாங்கள் எவ்வளவு போரடினாலும். பிரயோஜனம் இல்லை 

எனவேதான் இந்தியாவை பகைக்கமால். இருப்போம்   🙏

30 minutes ago, Kandiah57 said:

இந்தியா பலமிக்கது

எமக்கு பலம் இல்லை

இந்தியாவை பகைக்க கூடாது

ஆகவே எம் கடற்பரப்புக்குள் அத்துமீறி வந்து, எம் மீனவர்களுக்கு சொந்தமான மீன் வளத்தை கொள்ளையடிக்கும் மீனவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

இந்தியா பலமிக்கது

எமக்கு பலம் இல்லை

இந்தியாவை பகைக்க கூடாது

ஆகவே எம் கடற்பரப்புக்குள் அத்துமீறி வந்து, எம் மீனவர்களுக்கு சொந்தமான மீன் வளத்தை கொள்ளையடிக்கும் மீனவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என்கின்றீர்களா?

இல்லை ஆனால் மொட்டை அடித்தது தமிழர்கள் இல்லை  சிங்களவர்கள்    அவர்கள் வடக்கு கிழக்கு இல் வாழ்ந்து இருந்தால் மொட்டை அடிப்பார்களா??

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இல்லை ஆனால் மொட்டை அடித்தது தமிழர்கள் இல்லை  சிங்களவர்கள்    அவர்கள் வடக்கு கிழக்கு இல் வாழ்ந்து இருந்தால் மொட்டை அடிப்பார்களா??

இந்த விடயத்தில் நான் சிங்களவர்களின் பக்கம். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மட்டும் அல்ல தூர நோக்கற்ற கடல் வளங்களை சூறையாடும் சூதாடித்தனம் மற்றும் பேராசை. 

19 minutes ago, Kandiah57 said:

இல்லை ஆனால் மொட்டை அடித்தது தமிழர்கள் இல்லை  சிங்களவர்கள்    அவர்கள் வடக்கு கிழக்கு இல் வாழ்ந்து இருந்தால் மொட்டை அடிப்பார்களா??

சிங்களவர்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்து இருப்பின், இந்திய மீனவர்கள் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுத்து இருக்க மாட்டார்கள்.

வடக்கு தமிழன் அரசியல் அநாதை தானே. எவன் அவனுக்கு உதவி செய்வான் எனும் மமதையில் தான் இவர்கள் வருகின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.