Jump to content

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட ரீதியில் சிலர் எடுத்த முடிவானது தமிழரசுக் கட்சி விட்ட மாபெரும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு, சிலர் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துவிட்டு கட்சியின் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்குழு கூட்டம் 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியில் நாங்கள் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் குறித்து மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இவ்வாறு, மக்கள் விரக்தியின் அமுக்கம்தான் தமிழ் பொது வேட்பாளர் என்றவொரு வடிகாலை திறந்து வைத்துள்ளது.

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம் | Srilanka 2024 President Election Updates

இவ்வாறு தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவுகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சி தன்னிச்சயாக முடிவுகளை எடுத்தால் அது தமிழரசுக் கட்சியின் உள்ளக மோதல்களை மட்டும் அல்ல கட்சியிலிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் செயற்பாடாகும்.

இவ்வாறு இருக்கையில், வவுனியாவில் கூடிய மத்திய செயற்க்குழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah), சிவஞானம் சிறீதரன், சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), மருத்துவர் சத்தியலிங்கம் (Sathyalingam), சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மேயர் என ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபனங்கள்

தென்பகுதி வேட்பாளர்களுடைய தேர்தலில் விஞ்ஞாபனங்கள் வெளிவந்ததும் அதில் எந்த கட்சி தமிழர்களுக்காக சிந்திக்கும் நோக்குடன் இருக்கின்றதோ அவர்களுக்கான ஆதரவு தொடர்பில் பரிசீலனை செய்யும் நோக்கில் குறித்த குழு நியமிக்கப்பட்டது.

ஆனால் அவ்வறான சிறப்புக் குழு கூடாமல் எவ்வாறான ஆலோசனைகளும் நடத்தாமல் நான் பிரித்தானியாவிற்கு (United Kingdom) சென்றிருந்த வேலை அவசர அவசரமாக குறித்த கூட்டமானது நடத்தப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம் | Srilanka 2024 President Election Updates

இந்தநிலையில், நினைத்து இருந்தால் 18 ஆம் திகதிக்கு முன்பதாக கூட அனைவரும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் இருப்பினும் அவசரமாக எடுக்கப்பட்ட குறித்த முடிவினால் கட்சியின் எதிர்காலமானது பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எடுக்கப்பட்ட இந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.

எடுக்கப்பட்ட முடிவு

நான் நடைப்பெற்ற அனைத்து கூட்டங்களிலும் தமிழ் பொது வேட்பாளருக்கு எனது ஆதரவினை தெரிவித்திருந்ததுடன் பிரித்தானியா சென்ற போதும் அதனை எழுத்து மூலமாக அறிவித்திருந்தேன்.

இந்தநிலையில், இது தொடர்பாக நாளை (16) சிறப்புக்குழுவுடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம்.

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம் | Srilanka 2024 President Election Updates

சுமந்திரன் எடுத்த முடிவானது அந்த நேரத்தில் அவரால் எடுக்கப்பட்ட முடிவு, நியமிக்கப்பட்ட விசேட குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரே மத்தியகுழுவில் தீர்மானம் எடுத்து நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத்தவறியது கட்சி விட்ட மாபெரும் தவறு. எனவே தமிழ் இனத்திற்காக தமிழ் பொது வேட்ப்பாளருக்கே நான் ஆதரவை வழங்குகின்றேன்.

இந்தநிலையில், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் பொது வேட்ப்பாளருக்கு ஆதரவளித்து தங்களுடைய நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு அறியத்தர வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/srilanka-2024-president-election-updates-1726405952

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட ரீதியில் சிலர் எடுத்த முடிவானது தமிழரசுக் கட்சி விட்ட மாபெரும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தல் வருதென்று தெரிந்தும் நாசூக்காக நழுவிவிட்டு இப்போ மூக்கால் அழலாமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் வருதென்று தெரிந்தும் நாசூக்காக நழுவிவிட்டு இப்போ மூக்கால் அழலாமா?

அப்பன் குதிருக்குள் இல்லை

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் வருதென்று தெரிந்தும் நாசூக்காக நழுவிவிட்டு இப்போ மூக்கால் அழலாமா?

இவர் நடிகர் சிவாஜியை வென்று விட்டார் இவர் லண்டனுக்கு வரும்போதே ஏதோ நடக்க போகுது என்று சாதாரண யுடுப் அரசியல் ஆய்வாளரே புட்டு புட்டு வைத்து விட்டார் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலமைக்கேற்ற ஆளுமையோ பக்குவமோ இல்லாதவர். கட்சிக்குள் இருந்து பேச வேண்டிய, போராட வேண்டிய விடயங்களை வெளியே வந்து பேசுகிறார் என்றால் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது. பேசாமல் இவரும் பொதுக்கட்டமைப்போடு சேர்ந்து கொள்ளலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

பேசாமல் இவரும் பொதுக்கட்டமைப்போடு சேர்ந்து கொள்ளலாம்.

பொது வேட்பாளர் மாபெரும் வெற்றியீட்டப் போகிறார் என தெரிந்து அவர்களின் ஆதரவாளராகி விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார் லைசென்ஸ், தரணி சுப்பர் மார்க்கெற், கிளிநொச்சி உட்பட நாட்டின் பலபாகங்களில் சொத்து பத்து என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு டப்பு குடுக்குமளவுக்கு வளர்ந்து விருட்சமாகி நிக்கிற மனுசனுக்கு இந்த நடிப்பெல்லாம் யுயுப்பி..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பார் லைசென்ஸ், தரணி சுப்பர் மார்க்கெற், கிளிநொச்சி உட்பட நாட்டின் பலபாகங்களில் சொத்து பத்து என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு டப்பு குடுக்குமளவுக்கு வளர்ந்து விருட்சமாகி நிக்கிற மனுசனுக்கு இந்த நடிப்பெல்லாம் யுயுப்பி..

சுமந்திரனுக்கு மூன்று பார் லைசன்ஸ், அதில் ஒன்று வல்வெட்டித்துறையில் உள்ளது. சாணக்கியனுக்கு கல்லடியில் ஒரு பார் லைசன்ஸ் உள்ளது. அங்கஜன், டக்ளஸ் என்று எல்லோருக்கு அண்மையில் பார் லைசன்ஸ் கொடுக்கப் பட்டுள்ளது. 
ஆக இங்கு உத்தமர்கள் என்று எவருமே இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு மூன்று பார் லைசன்ஸ், அதில் ஒன்று வல்வெட்டித்துறையில் உள்ளது. சாணக்கியனுக்கு கல்லடியில் ஒரு பார் லைசன்ஸ் உள்ளது. அங்கஜன், டக்ளஸ் என்று எல்லோருக்கு அண்மையில் பார் லைசன்ஸ் கொடுக்கப் பட்டுள்ளது. 
ஆக இங்கு உத்தமர்கள் என்று எவருமே இல்லை.

அப்ப சுமந்திரன் சாணக்கியன் அங்கயன் டக்ளஸ் சிறியர் எல்லாம் செய்தது சரி எண்டுறியள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்ப சுமந்திரன் சாணக்கியன் அங்கயன் டக்ளஸ் சிறியர் எல்லாம் செய்தது சரி எண்டுறியள்..

சரி  எண்டு யார் சொன்னது.
நீங்கள் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு சொல்லும் போது, மற்றையவர்களையும் அம்பலப் படுத்த வேண்டிய தேவை உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

சரி  எண்டு யார் சொன்னது.
நீங்கள் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு சொல்லும் போது, மற்றையவர்களையும் அம்பலப் படுத்த வேண்டிய தேவை உள்ளது.

அது சரி..

சிறியரின் நான் அறிஞ்ச இன்னுமொரு வீரப்பிரதாபம்..

புலோப்பளை, கேரதீவு காற்றாலை மின்சார திட்டத்திற்கு எதிராக ஆள்களை ஆர்ப்பாட்டம் செய்வித்தார்…

பின்பு 8% வாங்கி திட்டம் நிறைவேற விட்டார்…

இப்படி நிறைய டீல்கள் மூலமாக கோடான கோடி உழைத்து விட்டார்... இப்படி சிறிதரனின் டீல் அரசியல் மற்றைய தமிழ் அரசியல் திருடர்களைவிட பலமடங்கு திறமையானது.. தந்திரமானது..

ஊரில் சொல்லுவார்கள் நசுக்கிடாக்கள்ளன் எண்டு..

அந்த வார்த்தைக்கு பத்து பொருத்தமும் சரியானவர் சிறியர்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அது சரி..

சிறியரின் நான் அறிஞ்ச இன்னுமொரு வீரப்பிரதாபம்..

புலோப்பளை, கேரதீவு காற்றாலை மின்சார திட்டத்திற்கு எதிராக ஆள்களை ஆர்ப்பாட்டம் செய்வித்தார்…

பின்பு 8% வாங்கி திட்டம் நிறைவேற விட்டார்…

இப்படி நிறைய டீல்கள் மூலமாக கோடான கோடி உழைத்து விட்டார்... இப்படி சிறிதரனின் டீல் அரசியல் மற்றைய தமிழ் அரசியல் திருடர்களைவிட பலமடங்கு திறமையானது.. தந்திரமானது..

ஊரில் சொல்லுவார்கள் நசுக்கிடாக்கள்ளன் எண்டு..

அந்த வார்த்தைக்கு பத்து பொருத்தமும் சரியானவர் சிறியர்..

ஆனால் ஒண்டல்லே தமிழ்த் தேசியத்தை தன்ட தோள்களில்  தூக்கிச் சுமக்குதல்லே மனிசன்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாலி said:

ஆனால் ஒண்டல்லே தமிழ்த் தேசியத்தை தன்ட தோள்களில்  தூக்கிச் சுமக்குதல்லே மனிசன்!😂

ஆரு வில்லங்கப்பட்டது இவர்தான் சுமக்கோனும் எண்டு.. ஓராமா இறக்கிவச்சிட்டு கிளம்புறது.. 

ஆனா செய்யமாட்டார்.. பச்சைக்கிளிக்கு புல்லட்டும், தொப்பியும் வாங்கிதரவும் எண்டு தமிழ்தேசியத்தை வாசித்து காட்டியே வாழ்ந்திடும்..

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

பின்பு 8% வாங்கி திட்டம் நிறைவேற விட்டார்…

இப்படி நிறைய டீல்கள் மூலமாக கோடான கோடி உழைத்து விட்டார்... இப்படி சிறிதரனின் டீல் அரசியல் 

ஊரில் சொல்லுவார்கள் நசுக்கிடாக்கள்ளன் எண்டு..

அந்த வார்த்தைக்கு பத்து பொருத்தமும் சரியானவர் சிறியர்..

நானே சாட்சி. 😭

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு மூன்று பார் லைசன்ஸ், அதில் ஒன்று வல்வெட்டித்துறையில் உள்ளது. சாணக்கியனுக்கு கல்லடியில் ஒரு பார் லைசன்ஸ் உள்ளது. அங்கஜன், டக்ளஸ் என்று எல்லோருக்கு அண்மையில் பார் லைசன்ஸ் கொடுக்கப் பட்டுள்ளது. 
ஆக இங்கு உத்தமர்கள் என்று எவருமே இல்லை.

இலங்கையில் புதிய BAR license க்கு அனுமதி இல்லை என்று புரிதல்.

NEWS

Court order preventing Excise Dept. from issuing liquor licenses

19a4d957c367c5c8d0b60ad6c6c71e9f?s=96&d=mm&r=g

Published

 6 months ago 

on

 April 2, 2024
Court_1200px_22_10_18-1000x600.jpg

The Supreme Court today (02) has issued an interim injunction preventing the Excise Department from issuing liquor licenses in violation of the provisions of the Excise Act of Sri Lanka.

The court order will be in effect until May 10, 2024.

A three-member bench comprising Justices Yasantha Kodagoda, Janak de Silva and Arjuna Obeysekera delivered the interim injunction after taking into consideration 03 fundamental rights (FR) petitions filed by the Sri Lanka Liquor Licensees’ Association and several other parties.

Appearing on behalf of the petitioners, President’s Counsel Sanjeewa Jayawardena and several other legal counsels told the court that the Excise Department has been issuing liquor licenses in an irregular manner.

As such, the petitioning party requested the judge bench to deliver an injunction preventing the Excise Department from overriding the provisions of the Excise Act and regulations when issuing liquor licenses.

. 😉https://srilankamirror.com/news/court-order-preventing-excise-dept-from-issuing-liquor-licenses/?amp=1

Issuing of fresh liquor licenses challenged before Supreme Court

 
 

 

image_30578d02e1.jpgColombo, May 03 (Daily Mirror) - A Fundamental Rights petition has been filed before the Supreme Court seeking an order restraining authorities including the Excise Department from issuing any new excise licenses to any applicant in violation of the provisions of the Excise Ordinance.

Two members of the Sri Lanka Liquor Licensees Association filed this petition against the Commissioner General of Excise, several other officers of the Excise Department, Secretary to the Ministry of Finance, the Director General of the Department of Fiscal Policy, the Ministry of Finance and several others.

The petitioners, Dhananjaya Gunasekera and Nishantha Lakshman maintained that arbitrary and discriminatory grant of new liquor licenses are solely based on political motivations, political pressure or totally irrelevant factors.
They further stated that multiple liquor licenses have been granted to several private individuals and companies without following any rational, reasonable, objective, fair and transparent mechanisms.

https://www.dailymirror.lk/breaking-news/Issuing-of-fresh-liquor-licenses-challenged-before-Supreme-Court/108-281878

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்ரர் குண்டு வெடிக்கும்போது நாட்டை விட்டு வெளியேறி, தனது கைகள் சுத்தம் என்று  தனது கைகள் சுத்தம் என்று வாதிட்ட மைத்திரி நினைவுக்கு வருகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரன்  பேச்சாளராக இருந்த போது, ஜெனீவா கூட்டத்தொடருக்கு  போவதாக முடிவெடுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு  சுரேஷ் இந்தியாவுக்கு போன தருணத்தில் சம்பந்தரும் சுமந்திரனும் சிங்களத்தோடு கூடிக்குலாவி, சுரேஷ் இந்தியாவில் இருக்கும்போதே தாம் ஜெனீவாவுக்கு போவதில்லை என்று முடிவெடுத்து அறிவித்த வித்தகர்கள். நல்ல வேளை, ஒராள் இப்போது  குறையுது அல்லது அவரும் தன் பங்குக்கு அவிழ்த்து விட்டிருப்பார் புளுகு மூட்டையை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பார் லைசென்ஸ், தரணி சுப்பர் மார்க்கெற், கிளிநொச்சி உட்பட நாட்டின் பலபாகங்களில் சொத்து பத்து என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு டப்பு குடுக்குமளவுக்கு வளர்ந்து விருட்சமாகி நிக்கிற மனுசனுக்கு இந்த நடிப்பெல்லாம் யுயுப்பி..

அதுக்காக சுமா செய்வதை நியாயப்படுத்துகின்றீர்களா 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க  முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள்.  உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
    • வோல்ஸ்ரிட் ஜெனர்ல்ட் இல் ட்ரம்பின் தற்காலிக போர் நிறுத்த முன்வடிவம் பற்றி கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதன் படி அமெரிக்கா தொடர்ச்சியாக உக்கிரேனுக்கு அயுத வழங்கும் எனவும் அதற்கு கைமாறாக உக்கிரேன் 20 ஆண்டுகள் நேட்டோவில் இணையமாட்டேன் என உறுதிப்பிரமானம் எடுக்கவேண்டும் எனவும், அது தவிர இரஸ்சியா தற்போது ஆக்கிரமித்துள்ள பகுதிகளை இரஸ்சியா உரிமை கொள்ளலாம் இரண்டு நாட்டுக்குமிடையே 800 மைல்கள் உள்ள இராணுவ அற்ற வலயத்தினை அமெரிக்க கூட்டாளிகள் கண்காணிப்பார்கள். இதனை உக்கிரேன் ஒப்புக்கொள்ளாவிட்டால் உக்கிரேனுக்கான ஆயுத வழங்கல் நிறுத்தப்படும், மறுவளமாக இரஸ்சியா ஒப்புக்கொள்ளாவிட்டால் உக்கிரேனுக்கு அதிக ஆயுதம் வழங்கப்படும். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://meduza.io/en/news/2024/11/07/wsj-reports-that-trump-is-reviewing-ukraine-peace-plan-options-that-cede-all-occupied-territory-to-moscow-suspend-nato-expansion-and-create-dmz https://kyivindependent.com/trump-ukraine-plan-wsj/ இதனை இரஸ்சியா ஏற்றுக்கொண்டால் இலங்கையில்  நோர்வே பேச்சுக்காலத்தில் ஒரு தரப்பினை பலப்படுத்தி அதற்கான கால அவகாசத்தினை பேச்சுவார்த்தை என்பதன் மூலம் பெற்றுக்கொண்டு பின்னர் போரினை ஆரம்ம்பித்து மறு தரப்பினை தோற்கடித்தது போல ஒரு சூழ்நிலை உருவாகும்.  மறுவளமாக இரஸ்சியா 2022 முன்னர் செய்த ஒப்பந்தத்தினை ஏற்று கொள்ள விரும்பும் அதற்காக தற்போது கைப்பற்றிய இடங்களையும் விட்டுக்கொடுக்கும், உக்கிரேன் நிரந்தரமாக நேட்டோவில் இணைய கூடாது உக்கிரேன் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேணப்பட வேண்டும் எனும் நிபந்தனைகளை வலியுறுத்தலாம். அது உக்கிரேனும் அணுகூலம் இரஸ்சிய பாதுகாப்பிற்கும் அனுகூலம் எல்லையில் மேற்கு நாட்டு அமைதி படைகளை அனுமதிப்பது என்பது இரு நாடுகளுக்கும் ஆபத்தான விடயமாகும். இவற்றை பார்க்கும் போது போர் முடிவடையாது இன்னும் மோசமாக தொடர்வதற்கே வாய்ப்பு அதிகம், பைடன் அரசினை விட ட்ரமின் ஆட்சிக்காலத்தில் போர் மேலும் உலகெங்கும் தீவிரமடையலாம்.
    • இராசவன்னியர் அவர்களின் மகன் திலீபனுக்கும், மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்1!
    • அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின்(Donald trump) பதவியேற்பதற்கு முன்னதாக, உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை பாதுகாப்பு உதவியாக வழங்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் அரசாங்கத்தை வலுப்படுத்தும் நம்பிக்கையுடன், ஜோ பைடன்(Joe Biden) ஜனவரி மாதம் பதவி விலகுவதற்கு முன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளை மாளிகை தொடர்பிலும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் கீழ் ஜனாதிபதி உக்ரைன் வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்திற்கான ஆதரவின் எதிர்காலம் தொடர்பிலும் கடந்த காலங்களில் ட்ரம்ப் விமர்சித்திருந்தார். பைடனின் உதவி இதில் உக்ரைனுக்கான பைடனின் உதவியை ட்ரம்ப் மேற்கோள்காட்டியிருந்தார். மேலும், கடந்த ஆண்டு இடம்பெற்ற சந்திப்பொன்றில் உக்ரைன் - ரஷ்ய மோதல் அமைதிபெற ஜெலன்ஸ்கி விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். உக்ரைன் அரசாகங்ம் எனினும் அதை உக்ரைன் அரசாங்கம் மறுத்திருந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகளை புதிய அமெரிக்க ஜனாதிபதி கட்டுபடுத்தினால் உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://tamilwin.com/article/us-ready-to-provide-aid-to-ukraine-1730957383#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.