Jump to content

ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை

ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 SEP, 2024 | 02:56 PM
image

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தினரால் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக தாய் நாடு திரும்பிய இந்திய இளைஞர்கள் கூறியுள்ளனர்.

ரஷ்யாவில் பாதுகாவலர் வேலை, உதவியாளர் வேலை என மோசடி கும்பல் இங்குள்ள 60 இளைஞர்களை ரஷ்யாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் தனியார் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலர் டிரோன் தாக்குதலில் இறந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஹமில் என்பவர் டிரோன் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அபாயமான சூழலில் சிக்கியுள்ளதை அறிந்த தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன் என்பவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வெளியுறவுத் துறை முயற்சி: இதையடுத்து ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அந்நாட்டு அரசிடம்வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. தற்போது ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 4 பேர் தற்போது நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன், கர்நாடகாவைச் சேர்ந்த சையத் இலியான் உசைனி ஆகியோர் கூறியதாவது:

வேலை மோசடி: வெளிநாட்டு வேலை எனக் கூறி இந்தியாவில் இருந்து 60-க்கும்மேற்பட்ட இளைஞர்கள் மோசடியாக கடந்தாண்டு ரஷ்யா அனுப்பப்பட்டோம். நாங்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டோம். காலை 6 மணியிலிருந்து தொடர்ந்து 15 மணி நேரம் எங்களுக்கு ஓய்வின்றி வேலை கொடுக்கப்பட்டது.

பதுங்கு குழிகள் தோண்டுவது, துப்பாக்கி சுடுவது, கையெறிகுண்டுகளை வீசுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறைவான உணவு அளிக்கப்பட்டு கடினமான வேலைகள் வழங்கப்பட்டன. நாங்கள் சோர்வடைந்தால் துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவர். செல்போன்களை பறித்து வைத்துக்கொள்வர். அதிக மனஅழுத்தமான சூழ்நிலையில் நாங்கள் உக்ரைன் போரில் பணியாற்றினோம். எங்களுடன் வந்த குஜராத்தைச் சேர்ந்தஹமில் ட்ரோன் குண்டு தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்தது, எங்களைஉலுக்கியது. இதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தினரை தொடர்புகொண்டு மீட்பதற்கு வேண்டுகோள் விடுத்தோம். நாங்கள் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுத்தார், இவ்வாறு அவர்கள் கூறினர்.

https://www.virakesari.lk/article/193854

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசியர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வரும்  வட இந்திய  மாணவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாய் தெரியாது முன்பின் தெரியாதவர்களிடம் எடுத்த எடுப்பிலே  ஹிந்தியிலே கதைக்க தொடங்குவார்கள் அதே விளையாட்டை ரஷ்யர்களிடம் தொடங்கி இருந்து இருப்பார்கள் வாங்கி கட்டிக்கொண்டு நாடு திரும்பி இருப்பார்கள் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ரசியர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்????

இராணுவத்தில் என்ன அரசர்கள் போலா நடத்துவார்கள்? 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரிலுள்ள சைபர் கிரைம் முகாமிலும் இப்படித்தான் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேலைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்த நாடுகளுக்கு எல்லாம் எவரும் வேலைகளுக்கு போகலாமா............. ரஷ்யா, மியன்மார், வட கொரியா, ஈரான்,.............இப்படியான நாடுகளுக்கு ஆதரவாக இன்டெர்நெட்டில், சமூக ஊடகங்களில் எழுதலாம். ஆனால் அங்கே தப்பித்தவறியும் போய் விடக்கூடாது........ 

Edited by ரசோதரன்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

இராணுவத்தில் என்ன அரசர்கள் போலா நடத்துவார்கள்? 

😁

உண்மைதான்! இராணுவத்தில் நிலவரம் எப்போதும் பாதகமாக இருப்பதனாலேயே அதிக கட்டுப்பாடு கொண்ட துறையாக இருக்கிறது, 
வட இந்தியர்களுடன் வேலை செய்த அனுபவத்தில் அவர்கள் ஒரு வித்தியாசமானவர்கள்.நாங்கள் ஒரு புதிய உற்பத்தியினை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தோம், நான் தலைமை பொறுப்பு எடுப்பதில்லை இருந்தும் என்னை இந்த மாதிரியான சிக்கலில் மாட்டி விடுவார்கள், அப்படித்தான் அந்த உற்பத்தி முயற்சியில் வேலை செய்யும் போது என்னுடன் ஒரு வட இந்தியர் ஒரு பாகிஸ்தானியருடன் வேலை செய்ய வேண்டியிருந்தது அவர்களின் மத அனுட்டானங்களின் பிரகாரம் பலதடைவை வழிபட வேண்டும் அதனை உணர்ந்தமையால் அவர்கள் கழிவறைக்கு செல்வதாக கூறி ஒவ்வொரு முறையும் கூறும் போது எனக்கு அதனை பற்றி சொல்லத்தேவை இல்லை நீங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சென்று வாருங்கள் என கூறியிருந்தேன்.

ஒரு கட்டத்தின் பின் இருவரையும் காணவில்லை ஒரு மணித்தியாலம் ஒன்றைரை மணித்தியாலம் என நேரம் செல்ல செல்ல முழு வேலையின் அழுத்தங்களையும்  நானே பார்க்க வேண்டியதாக இருந்தது (பல பரிசோதனைகள் செய்யவேண்டும்), ஆனால் அந்த இருவரையும் காணவில்லை! எமக்கு உதவியாக இருந்த இயந்திரவியலாளர் நிலமையினை உணர்ந்து எனக்கு உதவ முயன்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துவிட்டார்.

இந்த மாதிரியானவர்கள் இந்திய இராணுவத்தில் பயிற்சிக்காலத்திற்குக்கூட தாக்குப்பிடிக்கமாட்டார்கள்.

முன்னர் 86 களில் புலிகள் அமைப்பில் இணைய விரும்புகின்றவர்களை முதலில் சென்றியில் விடுவதுண்டு பின்னர் அந்த நிலைகளின் பக்கமாக துப்பாக்கியால் சுடுவார்களாம் அதில் பெரும்பாலானோர் அலறி அடித்துக்கொண்டு ஓடி விடுவார்களாம், அதில் நிற்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வார்களாம்.

போர் அழுத்தம் நிறைந்த ஒன்று ஆனால் தலமை தாங்குபவர்கள் அந்த அழுத்தத்தின் தீவிரத்தினை அணி வீரர்களுக்கு கடத்தக்கூடாது என்பார்கள் அப்படி கடத்தினால் அணிவீரர்கள் மனதளவில் அழுத்ததிற்குள்ளாவார்கள் அது அவர்களை இலகுவாக சோர்வடைய செய்துவிடும், மோசமான தளபதிகள் தமது இயலாமையினை அணிவீரர்களின் மேல் இறக்கி வைத்துவிடுவார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

ரஷ்ய ராணுவத்தினரால் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக தாய் நாடு திரும்பிய இந்திய இளைஞர்கள் கூறியுள்ளனர்.

உங்கட பருப்பு எல்லா இடமும் அவியாது கண்டியளோ......உங்கட நாட்டில இருக்கிற சக பிரஜைகளை சமமாக நடத்த பாருங்கோ.....அதுக்குப்பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்கலாம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உண்மைதான்! இராணுவத்தில் நிலவரம் எப்போதும் பாதகமாக இருப்பதனாலேயே அதிக கட்டுப்பாடு கொண்ட துறையாக இருக்கிறது, 
வட இந்தியர்களுடன் வேலை செய்த அனுபவத்தில் அவர்கள் ஒரு வித்தியாசமானவர்கள்.நாங்கள் ஒரு புதிய உற்பத்தியினை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தோம், நான் தலைமை பொறுப்பு எடுப்பதில்லை இருந்தும் என்னை இந்த மாதிரியான சிக்கலில் மாட்டி விடுவார்கள், அப்படித்தான் அந்த உற்பத்தி முயற்சியில் வேலை செய்யும் போது என்னுடன் ஒரு வட இந்தியர் ஒரு பாகிஸ்தானியருடன் வேலை செய்ய வேண்டியிருந்தது அவர்களின் மத அனுட்டானங்களின் பிரகாரம் பலதடைவை வழிபட வேண்டும் அதனை உணர்ந்தமையால் அவர்கள் கழிவறைக்கு செல்வதாக கூறி ஒவ்வொரு முறையும் கூறும் போது எனக்கு அதனை பற்றி சொல்லத்தேவை இல்லை நீங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சென்று வாருங்கள் என கூறியிருந்தேன்.

ஒரு கட்டத்தின் பின் இருவரையும் காணவில்லை ஒரு மணித்தியாலம் ஒன்றைரை மணித்தியாலம் என நேரம் செல்ல செல்ல முழு வேலையின் அழுத்தங்களையும்  நானே பார்க்க வேண்டியதாக இருந்தது (பல பரிசோதனைகள் செய்யவேண்டும்), ஆனால் அந்த இருவரையும் காணவில்லை! எமக்கு உதவியாக இருந்த இயந்திரவியலாளர் நிலமையினை உணர்ந்து எனக்கு உதவ முயன்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துவிட்டார்.

இந்த மாதிரியானவர்கள் இந்திய இராணுவத்தில் பயிற்சிக்காலத்திற்குக்கூட தாக்குப்பிடிக்கமாட்டார்கள்.

முன்னர் 86 களில் புலிகள் அமைப்பில் இணைய விரும்புகின்றவர்களை முதலில் சென்றியில் விடுவதுண்டு பின்னர் அந்த நிலைகளின் பக்கமாக துப்பாக்கியால் சுடுவார்களாம் அதில் பெரும்பாலானோர் அலறி அடித்துக்கொண்டு ஓடி விடுவார்களாம், அதில் நிற்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வார்களாம்.

போர் அழுத்தம் நிறைந்த ஒன்று ஆனால் தலமை தாங்குபவர்கள் அந்த அழுத்தத்தின் தீவிரத்தினை அணி வீரர்களுக்கு கடத்தக்கூடாது என்பார்கள் அப்படி கடத்தினால் அணிவீரர்கள் மனதளவில் அழுத்ததிற்குள்ளாவார்கள் அது அவர்களை இலகுவாக சோர்வடைய செய்துவிடும், மோசமான தளபதிகள் தமது இயலாமையினை அணிவீரர்களின் மேல் இறக்கி வைத்துவிடுவார்கள்.

ஏன் இந்தியனை மரியாதையாக நடாத்த வேண்டும்? 

யாராவது ஒரு காரணம் சொல்லுங்கோ,..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

ஏன் இந்தியனை மரியாதையாக நடாத்த வேண்டும்? 

யாராவது ஒரு காரணம் சொல்லுங்கோ,..🤣

 இந்தியா அகிம்சை தேசமாம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

மியன்மாரிலுள்ள சைபர் கிரைம் முகாமிலும் இப்படித்தான் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேலைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்த நாடுகளுக்கு எல்லாம் எவரும் வேலைகளுக்கு போகலாமா............. ரஷ்யா, மியன்மார், வட கொரியா, ஈரான்,.............இப்படியான நாடுகளுக்கு ஆதரவாக இன்டெர்நெட்டில், சமூக ஊடகங்களில் எழுதலாம். ஆனால் அங்கே தப்பித்தவறியும் போய் விடக்கூடாது........ 

ஏன் அவை உங்கையெல்லாம் போகப்போயினம். நல்ல பாதுகாப்பான நாடுகளுக்குப்போய் இருந்துகொண்டு கண்ணாடிக்கு கல்லெறிஞ்சுகொண்டெல்லே நிக்கினம்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாலி said:

ஏன் அவை உங்கையெல்லாம் போகப்போயினம். நல்ல பாதுகாப்பான நாடுகளுக்குப்போய் இருந்துகொண்டு கண்ணாடிக்கு கல்லெறிஞ்சுகொண்டெல்லே நிக்கினம்!😂

நீங்கள் ச்சொல்லுறதும் சரிதான். 

இலங்கையில் குண்டு விழும்போது எல்லாரையும் அம்போ என்று விட்டுவிட்டு இங்க ஓடுவந்து ஒழிஞ்சுகொண்டு, ஈழத்திலிருப்பவர்களை அடியடா, வெட்டடா என்று உசுப்பிவுடுகிற ஆட்களெல்லோ நாங்கள்.  உந்த ரத்தத்தில இருக்கிற குணம் என்னெண்டு விட்டுப்போகும்?   

என்ன நாஞ்சொல்லுறது சரிதானே,...😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

நீங்கள் ச்சொல்லுறதும் சரிதான். 

இலங்கையில் குண்டு விழும்போது எல்லாரையும் அம்போ என்று விட்டுவிட்டு இங்க ஓடுவந்து ஒழிஞ்சுகொண்டு, ஈழத்திலிருப்பவர்களை அடியடா, வெட்டடா என்று உசுப்பிவுடுகிற ஆட்களெல்லோ நாங்கள்.  உந்த ரத்தத்தில இருக்கிற குணம் என்னெண்டு விட்டுப்போகும்?   

என்ன நாஞ்சொல்லுறது சரிதானே,...😁

ஓம் நீங்கள் சொல்றது நூற்றுக்கு நூறு வீதம் சரி.

குறிப்பு: நான் முதல் வெடி வெடிக்கமுதலே ஓடிவந்து அசைலம் அடிச்சிட்டு அடுத்தவனை உசுப்பேற்றி விடுற ஆள் இல்லை. 2009 வரை தாயகதில் வாழ்ந்துவிட்டு 2010 இன் பின்னர் எல்லா வெடிச் சத்தமெல்லாம் நிண்டாப் பிறகு முறையாக சட்டரீதியாக குடும்பத்தோடு இங்கு வந்து குடியேறிய ஆள்! என்பதனையும் கவனத்தில் கொள்க.😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஏன் இந்தியனை மரியாதையாக நடாத்த வேண்டும்? 

யாராவது ஒரு காரணம் சொல்லுங்கோ,..🤣

மற்றவர்கள் மதிகும்படி பல நல்ல நல்ல காரியங்கள் செய்வதால்.😁

2 hours ago, வாலி said:

குறிப்பு: நான் முதல் வெடி வெடிக்கமுதலே ஓடிவந்து அசைலம் அடிச்சிட்டு அடுத்தவனை உசுப்பேற்றி விடுற ஆள் இல்லை. 2009 வரை தாயகதில் வாழ்ந்துவிட்டு 2010 இன் பின்னர் எல்லா வெடிச் சத்தமெல்லாம் நிண்டாப் பிறகு முறையாக சட்டரீதியாக குடும்பத்தோடு இங்கு வந்து குடியேறிய ஆள்! என்பதனையும் கவனத்தில் கொள்க.😏

பந்தி முடியிற நேரம் வந்திருக்கியல், சரி பரவாயில்லை! திரும்ப ஊர் போக கொஞ்சம் லேட்டாகும் அவ்வளவுதான்😁.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

குறிப்பு: நான் முதல் வெடி வெடிக்கமுதலே ஓடிவந்து அசைலம் அடிச்சிட்டு அடுத்தவனை உசுப்பேற்றி விடுற ஆள் இல்லை. 2009 வரை தாயகதில் வாழ்ந்துவிட்டு 2010 இன் பின்னர் எல்லா வெடிச் சத்தமெல்லாம் நிண்டாப் பிறகு முறையாக சட்டரீதியாக குடும்பத்தோடு இங்கு வந்து குடியேறிய ஆள்! என்பதனையும் கவனத்தில் கொள்க.😏 

அதாகப்பட்டது, தாங்கள்  அங்கே இருந்துகொண்டே அடியடா வெட்டடா என்றீர்கள், நாங்களெல்லோரும் இங்கே இருந்துகொண்டே அடியடா வெட்டடா என்று கூவினோம் என்கிறீர்களா,.....😉

Just now, vasee said:

மற்றவர்கள் மதிகும்படி பல நல்ல நல்ல காரியங்கள் செய்வதால்.😁

அந்தப் பல நல்ல காரியங்களில் ஒரு நல்ல காரியத்தை ஒருக்காச் சொல்லுங்கோ , போற வழிக்குப்  புண்ணியமாகப் போகும்,.🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளுடன் சேர்ந்து ஜே.வி.பி. போரிட்டு இருந்தால்… இன்று நிச்சயம் ஊழலற்ற ஒரு சுபீட்சமான இரு நாடுகள் ஶ்ரீலங்காவில் தோன்றியிருக்கும் என நினைக்கின்றேன். இவரின் கொள்கையை சிங்கள மக்கள் எத்தனை பேர் ஆதரிக்கின்றார்கள், ஜனாதிபதி தேர்தலில் எத்தனை வீதமான வாக்குகளை எடுக்கின்றார் என்று அறிய ஆவலாக உள்ளது.
    • தகவலுக்கு நன்றி சுமா. பூட்டினின் கதையை விழுந்தடித்து பார்த்தவர்கள் இந்தக் கதையை கேட்க தயாராக இல்லையோ?
    • ""சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎 அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁"" 👆இதற்கு இன்னும் பதிலைக் காணோம்…பிசியா  😁
    • North America வில் விற்கப்படும் electronic உபகரணங்கள் மட்டும்தான் இனிப் பாதுகாப்பானவையாக இருக்கும்.   
    • ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣. இன்று எங்களின் இருப்பை தக்க வைக்க நாங்கள் போராடும் வாழ்வாதார விடயங்களையே வரிசைப்படுத்தியிருந்தேன். இவை யாரால் - சிங்கள மக்கள், இஸ்லாமிய மக்கள், தமிழக மீனவர்கள்/முதலாளிகள் - எங்களுக்கு எதிராக செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து எம்மக்கள் எதிர்ப்பு காட்டுவதோ அல்லது தவிர்ப்பதோ என்றில்லை. இவை மிக அடிப்படையானவை, இவை எல்லாவற்றுக்கும் ஒரே விதமான எதிர்ப்பே எங்களால் காட்டப்படுகின்றது. கடலில் மட்டும் அவர்களின் சுயநன்மை கருதி இலங்கை கடற்படை செய்யும் செயல்கள் இன்று எங்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது. ஆனால், எங்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் எங்களின் நிலைப்பாடு என்றும் மாறப்போவதும் இல்லை. தமிழக மீனவர்களின் தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம் என்று தான் நான் எழுதியிருந்தேன். மற்றவர்கள் கூட செம்புள்ளி, கரும்புள்ளி என்று எழுதியது ஒரு உணர்ச்சிகரமான வெளிப்பாடே தவிர உண்மையான, மனமொத்த நிலைப்பாடு இல்லை என்றே நான் நினைக்கின்றேன். ஆதவன் செய்திகளுக்கு இருக்கும் அதிகூடிய வரவேற்பை பாருங்கள். அப்படி பொதுவெளியில் செய்திகளையும், கருத்துகளையும் எழுதுவது தான் இன்றைய எழுத்து முறை. பலதும் பொருளற்ற அல்லது பொருள் கொள்ளாத சொலவடைகள். செம்புள்ளி கரும்புள்ளியும் அப்படியே.         
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.