Jump to content

கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்

Recommended Posts

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மற்றும் 1981 ஆம் ஆண்டு இலக்கம் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 வது பிரிவின் விதிகளின்படி ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை 2024 நவம்பர் 21 ஆம் திகதி கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேதியாகவும் அது நிர்ணயிக்கிறது.

வர்த்தமானி அறிவித்தல் மேலும் அக்டோபர் 04 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11, 2024 நண்பகல் 12 மணிக்கு முடிவடையும் காலத்தை வேட்பு மனுக்களாகக் குறிப்பிடுகிறது, இதன் போது வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் பெறப்படும்.

https://www.dailymirror.lk/breaking-news/Parliament-dissolved/108-292378#

Edited by zuma
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி இதுகள் தொடங்கியிடுங்கள்! எத்தனை தரம் செருப்பாலை அடிசாலும் அந்த நாலும் வராது இதுகளுக்கு!

Edited by வாலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, zuma said:

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை 2024 நவம்பர் 21 ஆம் திகதி கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேதியாகவும் அது நிர்ணயிக்கிறது.

கல்லோ கல்லோ தமிழ் கட்சிகள்

செய்தி கிடைத்ததோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

கல்லோ கல்லோ தமிழ் கட்சிகள்

செய்தி கிடைத்ததோ?

நான் முதலில் தமிழ் கட்சி என்று வாசித்து என்னை நானே நுள்ளி பார்த்தேன். அப்படி நடக்குமா என்ன? நடக்கத் தான் விட்டு விடுவமா????

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

கல்லோ கல்லோ தமிழ் கட்சிகள்

செய்தி கிடைத்ததோ?

3 minutes ago, விசுகு said:

நான் முதலில் தமிழ் கட்சி என்று வாசித்து என்னை நானே நுள்ளி பார்த்தேன். அப்படி நடக்குமா என்ன? நடக்கத் தான் விட்டு விடுவமா????

பாராளுமன்றத் தேர்தல் இவ்வளவு விரைவில் வரும் என எதிர்பார்க்கவில்லை.
தமிழ் அரசியலில்… எத்தனை தலை உருளப் போகுதோ…

இப்ப கண்டபடி… “சவுண்டு” குடுத்துக் கொண்டு இருக்கின்ற ஆட்களின் முகத்தை வடிவாக பார்த்துக் கொள்ளுங்கள். வரும் தேர்தலுடன் காணாமல் போகலாம். 

போன தேர்தலில்… மாவைக்கு நடந்தது, இந்தத் தேர்தலில்.. பிரபல சுத்துமாத்துக்கு நடக்கும் என்று, பட்சி சொல்லுது. 😂 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

போன தேர்தலில்… மாவைக்கு நடந்தது, இந்தத் தேர்தலில்.. பிரபல சுத்துமாத்துக்கு நடக்கும் என்று, பட்சி சொல்லுது.

வந்தவேலை முடிந்தது தானே என்று

சயித்தோடு சேர்ந்து கொழும்பில் இறங்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, zuma said:

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை 2024 நவம்பர் 21 ஆம் திகதி கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேதியாகவும் அது நிர்ணயிக்கிறது.

வர்த்தமானி அறிவித்தல் மேலும் அக்டோபர் 04 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11, 2024 நண்பகல் 12 மணிக்கு முடிவடையும் காலத்தை வேட்பு மனுக்களாகக் குறிப்பிடுகிறது, இதன் போது வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் பெறப்படும்.

https://www.dailymirror.lk/breaking-news/Parliament-dissolved/108-292378#

இது தான் நிர்வாக வித்தியாசம்............👍.

இதுவே பழைய ஆட்சியாளர்கள் என்றால்:

  • தேர்தலுக்கு நிதி வேண்டும் என்பார் தேர்தல் ஆணையாளர்
  • திறைசேரியை கேட்க வேண்டும் என்பார் நிதி அமைச்சர்
  • மத்திய வங்கி ஆளுனருக்கும் இதில் ஒரு கருத்து இருக்கும்
  • எப்படியும் இந்த மாதக் கடைசிக்குள் ஒரு முடிவு எடுத்து விடுவோம் என்று எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள்
  • அதற்கிடையில் யாரோ ஒருவர் நீதிமன்றில் தேர்தல் திகதி சம்பந்தமாக வழக்கு ஒன்றை போடுவார்
  • தேர்தல் திகதி சொல்லவே ஒரு மாதம் எடுத்திருக்கும்..............🤣.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கும் எமக்கும் தொடர்பு இல்லை அது இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் ஜனாதிபதி தேர்தல் அதை புறக்கணிகயுங்கள் என்று பிரச்சாரம் செய்த தேசியக் கும்பலும், பொது வேட்பாளர் என்றும் தாயகம் தன்னாட்சி என்று வீர உரைகள் ஆற்றி மக்களை உசுப்பேற்றிய  தேசிய கும்பல்களும் ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி பாராளுமன்றம் செல்ல தமக்குள் அடிபடும் நாள் நெருங்குகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலையும் சயித்தையும் ஒன்றாக்கி அனுராவை தோற்கடிக்க இந்தியா எவ்வளவோ முயற்சி செய்து தோற்றுப்போனது.

அடுத்த தேர்தலில் அனுரா கட்சியினரை பெரும்பான்மையாக வரவிடாமல் பண்ண மீண்டும் ரணிலையும் சயித்தையும் ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்யலாம்.

அவர்கள் எவ்வளவு காலம் பதவி வகிக்க வேண்டும் என்பதை சரவதேசமே முடிவு பண்ணணும்.

உதாரணம் கோத்தபையன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை பழம்பெரும் தமிழ்த் தலைவர்கள் ஓய்வெடுத்து புதிய மும்மொழி/இருமொழி ஆற்றலுள்ள இளையோரை தேர்தலில் நிறுத்தி 15-20 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முயற்சிக்கலாமே?!!!!

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

இது தான் நிர்வாக வித்தியாசம்............👍.

இதுவே பழைய ஆட்சியாளர்கள் என்றால்:

  • தேர்தலுக்கு நிதி வேண்டும் என்பார் தேர்தல் ஆணையாளர்
  • திறைசேரியை கேட்க வேண்டும் என்பார் நிதி அமைச்சர்
  • மத்திய வங்கி ஆளுனருக்கும் இதில் ஒரு கருத்து இருக்கும்
  • எப்படியும் இந்த மாதக் கடைசிக்குள் ஒரு முடிவு எடுத்து விடுவோம் என்று எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள்
  • அதற்கிடையில் யாரோ ஒருவர் நீதிமன்றில் தேர்தல் திகதி சம்பந்தமாக வழக்கு ஒன்றை போடுவார்
  • தேர்தல் திகதி சொல்லவே ஒரு மாதம் எடுத்திருக்கும்..............🤣.

ஒரே வாங்கில் இருந்தபடியால் 

நீங்கள் அவர்களாகவே மாறிவிட்டீர்கள்.

1 minute ago, ஏராளன் said:

இந்தமுறை பழம்பெரும் தமிழ்த் தலைவர்கள் ஓய்வெடுத்து புதிய மும்மொழி/இருமொழி ஆற்றலுள்ள இளையோரை தேர்தலில் நிறுத்தி 15-20 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முயற்சிக்கலாமே?!!!!

சகல கட்சிகளையும் கலைத்துவிட்டு பொதுக்கட்டமைப்பை கட்சியாக்கி இளையவர்களை உள்வாங்கி ஒன்றாக களமிறங்கலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

இந்தமுறை பழம்பெரும் தமிழ்த் தலைவர்கள் ஓய்வெடுத்து புதிய மும்மொழி/இருமொழி ஆற்றலுள்ள இளையோரை தேர்தலில் நிறுத்தி 15-20 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முயற்சிக்கலாமே?!!!!

அரசியல் வாதிகளுக்கு ஓய்வு என்பதே இல்லை.
தள்ளாத வயதிலும்… கட்டையில் போகும் மட்டும், தமது மக்களுக்கு அலுப்பு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். 😂
தரி*திரம் பிடிச்சவன்கள். 🤣

Edited by தமிழ் சிறி
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரே வாங்கில் இருந்தபடியால் 

நீங்கள் அவர்களாகவே மாறிவிட்டீர்கள்.

🤣...............

ஒரே வாங்கில் இல்லை, அண்ணை, இருவரும் வெவ்வேறு பீடங்கள்......

மேலும், அநுர வகுப்புகளுக்கு போயிருப்பார் என்றும் நான் நம்பவில்லை.............😜. ஏனென்றால் அவர் இரண்டு வருடங்கள் பிந்தித்தான் பாஸாகி வெளியே வந்திருக்கின்றார்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

இது தான் நிர்வாக வித்தியாசம்............👍.

இதுவே பழைய ஆட்சியாளர்கள் என்றால்:

  • தேர்தலுக்கு நிதி வேண்டும் என்பார் தேர்தல் ஆணையாளர்
  • திறைசேரியை கேட்க வேண்டும் என்பார் நிதி அமைச்சர்
  • மத்திய வங்கி ஆளுனருக்கும் இதில் ஒரு கருத்து இருக்கும்
  • எப்படியும் இந்த மாதக் கடைசிக்குள் ஒரு முடிவு எடுத்து விடுவோம் என்று எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள்
  • அதற்கிடையில் யாரோ ஒருவர் நீதிமன்றில் தேர்தல் திகதி சம்பந்தமாக வழக்கு ஒன்றை போடுவார்
  • தேர்தல் திகதி சொல்லவே ஒரு மாதம் எடுத்திருக்கும்..............🤣.

அதோட உங்கட தோழருக்கு சொல்லி புதிய யாப்பு உருவாக்கும்போது 2 தடவைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது எனவும் ஓய்வூதியம், பா.உ வாக இருக்கும்போது கொடுக்கும் சலுகைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டுகோள் விடுங்க அண்ணை.

தானாகவே பல தொல்லைகள் நீங்கிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, island said:

தேசியக் கும்பலும், பொது வேட்பாளர் என்றும் தாயகம் தன்னாட்சி என்று வீர உரைகள் ஆற்றி மக்களை உசுப்பேற்றிய  தேசிய கும்பல்களும் ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி பாராளுமன்றம் செல்ல தமக்குள் அடிபடும் நாள் நெருங்குகிறது.  

சங்கு வேலைக்காகது என்று இந்த முறை முரசு கொண்டு வந்து, ‘கொட்டு முரசே’ என்று சொல்லி அடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அதோட உங்கட தோழருக்கு சொல்லி புதிய யாப்பு உருவாக்கும்போது 2 தடவைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது எனவும் ஓய்வூதியம், பா.உ வாக இருக்கும்போது கொடுக்கும் சலுகைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டுகோள் விடுங்க அண்ணை.

தானாகவே பல தொல்லைகள் நீங்கிவிடும்.

இப்படியானவற்றை உண்மையிலேயே செய்யலாம். பலநாடுகளில் இருக்கும் வெற்றிகரமான நடைமுறைகளையும் ஆராய்ந்து, அதில் இருக்கும் குற்றம் குறைகளை தவிர்த்து, எங்களின் நாட்டிற்கு பொருத்தமான முடிவுகளை நீண்டகால நோக்கில் எடுக்கலாம்..............👍.

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு, அப்படியே வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியவர்களிடமிருந்து ஒரு தொகையை மீட்கப் போகின்றோம் என்று ஒரு திட்டம் கொண்டு வராமல் இருக்க வேண்டும்.............🤣. எங்களின் முகத்தைக் கண்டால், அப்படி ஒரு திட்டம் அவர்களின் மனதில் தோன்றினாலும் தோன்றக்கூடும்............😜.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

அதோட உங்கட தோழருக்கு சொல்லி புதிய யாப்பு உருவாக்கும்போது 2 தடவைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது எனவும் ஓய்வூதியம், பா.உ வாக இருக்கும்போது கொடுக்கும் சலுகைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டுகோள் விடுங்க அண்ணை.

தானாகவே பல தொல்லைகள் நீங்கிவிடும்.

2016இல் ரம்பும் இதைப்பற்றி கதைத்தார்.

அவர்கள் கட்சியிலிருந்தே ஆதரவில்லாமல் கைவிட்டுட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

அதோட உங்கட தோழருக்கு சொல்லி புதிய யாப்பு உருவாக்கும்போது 2 தடவைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது எனவும் ஓய்வூதியம், பா.உ வாக இருக்கும்போது கொடுக்கும் சலுகைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டுகோள் விடுங்க அண்ணை.

தானாகவே பல தொல்லைகள் நீங்கிவிடும்.

அத்துடன் ஒரு துறைசார் அமைச்சர் அந்த துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் என்பதும் தேவையானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

இந்தமுறை பழம்பெரும் தமிழ்த் தலைவர்கள் ஓய்வெடுத்து புதிய மும்மொழி/இருமொழி ஆற்றலுள்ள இளையோரை தேர்தலில் நிறுத்தி 15-20 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முயற்சிக்கலாமே?!!!!

தாயகத்தில் இளைஞர்கள் பலர் இவ்வாறு இணையங்களில் கோரிக்கை வைத்து வெளியேற்ற வேண்டிய சிலரது பெயர்களையும் புதிய இளைஞர்கள் சிலரது பெயர்களை பிரேரித்தும் செயற்படுவதை காணமுடிந்தது. இது பற்றி????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரசோதரன் said:

🤣...............

ஒரே வாங்கில் இல்லை, அண்ணை, இருவரும் வெவ்வேறு பீடங்கள்......

மேலும், அநுர வகுப்புகளுக்கு போயிருப்பார் என்றும் நான் நம்பவில்லை.............😜. ஏனென்றால் அவர் இரண்டு வருடங்கள் பிந்தித்தான் பாஸாகி வெளியே வந்திருக்கின்றார்.........

பாவம் வறுமையில் வாழ்ந்த பொடியன்     🙏. உங்கள் போன்ற பணக்காரங்களுக்கு. கவலையில்லை 🤣😂

31 minutes ago, ரசோதரன் said:

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு, அப்படியே வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியவர்களிடமிருந்து ஒரு தொகையை மீட்கப் போகின்றோம் என்று ஒரு திட்டம் கொண்டு வராமல் இருக்க வேண்டும்..........

கவலைப்படதீங்கள். இப்ப அப்படி திட்டங்கள் வாராது  

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும்   😂🤪.   காசை கண்டபடி செலவு செய்யமால். சேரந்து வைத்திருக்கவும். 🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

பாவம் வறுமையில் வாழ்ந்த பொடியன்     🙏. உங்கள் போன்ற பணக்காரங்களுக்கு. கவலையில்லை 🤣😂

🤣......

நம்மட கதை....... அதை இங்க எவர் கேட்கப் போகின்றார்கள், கந்தையா அண்ணை........

புலம்பெயர்ந்தவர்கள் பலர் பொதுவாக தங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் அந்தக் காலத்தில் அப்படிக் கஷ்டப்பட்டோம், இப்படி அலைக்கழிந்தோம் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். அதைக் கேட்ட பிள்ளைகள் 'உஷ்ஷ்....... யப்பா........' என்று ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார்கள் பாருங்கள்.......... அது விலை மதிப்பற்றது.........

இப்ப அநுர அப்படி ஒரு கதை சொல்லியிருக்கின்றார். இந்தக் கதையின் பின், 42 வீதத்திலிருந்து அடுத்த தேர்தலுக்கு ஒரு 50 வீதமாகவேனும் கூட வேண்டும்.............🤣.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும்   😂🤪.   காசை கண்டபடி செலவு செய்யமால். சேரந்து வைத்திருக்கவும். 🙏

🤣.........

வரும் தேர்தலில் தான் போடியிடப் போவதில்லை என்றும், இரண்டு வருடங்களுக்க்கு ஓய்வெடுக்கப் போகின்றேன் என்று ரணில் சொல்லியிருக்கின்றாரே........... நீங்கள் வேற இரண்டு வருடங்கள் தான் இந்த ஆட்சி என்கின்றீர்கள்.......... ரணில் வந்தால் ஜனாதிபதியாகத் தான் வருவாரோ...........😜.

** இரண்டு வருட ஓய்வு என்று ரணில் சொல்லவில்லை, நானா அடிச்சு விட்டது..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியும் சுமோவும் ஒன்று சேருவினம். வீட்டுக்குப் போடுங்கோ என்று வருவினம். அரியத்தார் நடுத்தெருவில். அவரை இழுத்து லிட்ட ஆட்களும்  பழைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பென்று ஒன்று சேருவினம்.நாங்களும் கணியைப் பார்த்து கருத்து எழுதுவம்.இவ்வளவு காலமும் யாழோடு கிடந்தது பத்ததாதா என்று வீட்டில சத்தம் போட்டாலும் கேளாத மாதிரி தேர்தல் செய்திகளில் மூழ்கிடுவம். கொஞசமாவது லீவு விடக் கூடாதா? கேப் விடாம அடிக்கிறானே!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

பின், 42 வீதத்திலிருந்து அடுத்த தேர்தலுக்கு ஒரு 50 வீதமாகவேனும் கூட வேண்டும்.............🤣.

அது சரி  எனக்கு இந்த கணக்கு விளங்கவில்லை   

மொத்த வாக்காளர்கள் 170 லட்சம்

அனுர பெற்றுக் கொண்டது  42 லட்சம்  

பாரத்தால்  100/170. *42=24,7 % வரும்     இப்படி பார்க்கும் போது   

1/4   பங்கு மக்களின் ஆதரவு தான் கிடைத்திருகிறது  😂🤪🤪

எப்படி கணக்கு?? 🙏😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

அது சரி  எனக்கு இந்த கணக்கு விளங்கவில்லை   

மொத்த வாக்காளர்கள் 170 லட்சம்

அனுர பெற்றுக் கொண்டது  42 லட்சம்  

பாரத்தால்  100/170. *42=24,7 % வரும்     இப்படி பார்க்கும் போது   

1/4   பங்கு மக்களின் ஆதரவு தான் கிடைத்திருகிறது  😂🤪🤪

எப்படி கணக்கு?? 🙏😂

நீங்கள் இப்ப இடையில் ஒரு லீவு எடுத்து, கொஞ்ச நாட்கள் ஒரு கணக்கு ட்யூசனுக்கு போனனீங்கள் தானே........... அந்தக் கணக்கு வாத்தியாரை பாவபுண்ணியம் பார்க்காமல் போட்டுத் தள்ளிவிடுங்கோ............🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.