Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும்; இந்தியாவிலிருந்து அனுரவுக்கு வந்த கடிதம்

தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நல்லெண்ண மற்றும் நேச சமிக்ஞையாக இலங்கை ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அவர்களின் அனைத்து படகுகளையும் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அவ்வாறான நடவடிக்கை இலங்கைக்கு ஒரு புதிய திசையை வழங்கும் அவரது நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதியை சேர்ந்த 37 மீனவர்களையும் விடுதலை செய்வதன் மூலம் சிறந்த ஆரம்பத்தை வழங்க முடியும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்80 மீனவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளுடன் தனது கடல்எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது ஆனால் எந்த நாடும் இலங்கையை போல தனது அயல்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொள்வதில்லை ,கைதுசெய்வதில்லை,அபராதம் விதிப்பதில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தரப்பின் சீற்றம் கொள்ளவைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன,பிராந்தியத்தின் பொறுமையும் அமைதியும் சோதனை செய்யப்படுகின்றது,வங்களா விரிகுடா போன்ற பொதுக்கடலில் மீனவர்களை குற்றவாளிகள் போல நடத்த முடியாது என இலங்கை ஜனாதிபதிக்கான கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அது கடந்தகாலத்தில் இடம்பெற்றது தற்போது நீங்கள் ஆட்சிபொறுப்பில் இருக்கின்றீர்கள் புதிய ஆரம்பம் குறித்து வாக்களித்துள்ளீர்கள்,உங்கள் அதிகாரத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/309912

  • கருத்துக்கள உறவுகள்
Posted

”உங்களுக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்திய மீனவர்களை விடுதலை செய்யுங்கள்" - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்

25 SEP, 2024 | 01:50 PM
image
 
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயக்க தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நல்லெண்ண மற்றும் நேச சமிக்ஞையாக இலங்கை ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அவர்களின் அனைத்து படகுகளையும் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அவ்வாறான நடவடிக்கை இலங்கைக்கு ஒரு புதிய திசையை வழங்கும் அவரது நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதியை சேர்ந்த 37 மீனவர்களையும் விடுதலை செய்வதன் மூலம் சிறந்த ஆரம்பத்தை வழங்க முடியும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் 80 மீனவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

tamil__fishermen.jpg

இந்தியா பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளுடன் தனது கடல் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஆனால் எந்த நாடும் இலங்கையை போல தனது அயல்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொள்வதில்லை, கைதுசெய்வதில்லை, அபராதம் விதிப்பதில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தரப்பின் சீற்றம் கொள்ளவைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன, பிராந்தியத்தின் பொறுமையும் அமைதியும் சோதனை செய்யப்படுகின்றது, வங்களா விரிகுடா போன்ற பொதுக்கடலில் மீனவர்களை குற்றவாளிகள் போல நடத்த முடியாது என இலங்கை ஜனாதிபதிக்கான கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அது கடந்தகாலத்தில் இடம்பெற்றது தற்போது நீங்கள் ஆட்சிபொறுப்பில் இருக்கின்றீர்கள் புதிய ஆரம்பம் குறித்து வாக்களித்துள்ளீர்கள், உங்கள் அதிகாரத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194761

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, ஏராளன் said:

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயக்க தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீனவர்களை விட்டுப்போட்டு நாடாளுமன்ற வெற்றிவாய்ப்பை இழக்கவேண்டியநிலையை எதிர்கொள்ள வேண்டுமா என்று புதிய சனாதிபதி சிந்திக்கமாட்டார் என்று எப்படி இந்த இந்திய அரசியல்வாதிகள் யோசிக்கிறார்கள். இருதரப்பும் முழுமையாக ஆய்வுசெய்து சரியானதொரு புரிந்துணர்வோடும், இருபகுதி மீனவர்களது நலன்களும் பாதிக்காத வகையிலும் சிந்திக்காது ஒரு இலக்கற்று வெற்றுக் கடிதங்களோடு விடுதலையைக் கோருவது  சாத்தியமா? முதலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவித்தைத் தமிழக மற்றும் ஒன்றிய அரசுகள் தடை செய்யவேண்டும். எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான பொறிமுறைகள் கண்டறியப்பட்டு ஒரு நிரந்தரமான தீர்வு நோக்கி நகரவேண்டும்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயக்க தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீண்டும் மீண்டும் இவர்கள் தாங்கள் படித்த முழு முட்டாள்கள் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்களே?

எல்லை தாண்டாமல் மீனை பிடித்தால் ஏன்தான் அடுத்த நாட்டுக்காரன் கைது செய்யப் போகிறான்.

Posted

நீங்கள் கைது செய்து இருக்கும் கொள்ளைக்காரர்களை விடுதலை செய்து, அவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய அனைத்து வாகனங்களையும் விடுவித்து மீண்டும் அவர்கள் கொள்ளையிட வாய்ப்புகளை தந்து நீங்கள் ரொம்ப நல்லவர், அச்சாப் பிள்ளை சனாதிபதி என்று காட்டவும்.

இப்படிக்கு
சுதா
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் 

Posted
3 hours ago, ஏராளன் said:

இந்தியா பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளுடன் தனது கடல் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஆனால் எந்த நாடும் இலங்கையை போல தனது அயல்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொள்வதில்லை, கைதுசெய்வதில்லை, அபராதம் விதிப்பதில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எல்லை ஏற்கனவே உள்ளது. எல்லையை தாண்டி  எமது கடலில்  சட்ட விரோதமாக மீன்பிடித்துக் கொண்டு அவர்களை விடுவிக்க கேட்பது என்ன நியாயம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாடாளுமன்ற உறுப்பினருக்கு இது ஒரு Law and Order சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனை என்று தெரியாதா? 

அதுசரி அவர் ஒரு இந்தியர்தானே .... இப்படிச் சிந்திப்பதில் ஆச்சரியம் இல்லை. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, Kapithan said:

நாடாளுமன்ற உறுப்பினருக்கு இது ஒரு Law and Order சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனை என்று தெரியாதா? 

அதுசரி அவர் ஒரு இந்தியர்தானே .... இப்படிச் சிந்திப்பதில் ஆச்சரியம் இல்லை. 

🤣

தனது நாட்டிலும் அயலிலும் அடுத்தவனின் சொத்துக்களை சூறையாடி பழகிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முந்தாநாள் இது ஒரு செய்தியாக நியூஸ் 18 இல் போய்க் கொண்டிருந்தது. செய்தியில் இவர் இன்னும் அதிகமாகச் சொன்னதாகாச் சொல்லியிருந்தார்கள். தமிழக மீனவர்கள் தெரிந்தே எல்லை தாண்டுவதில்லை என்றும், சமீபத்தில் இலங்கை மீனவர்கள் இருவர் காணாமல் போயிருந்த பொழுது மயிலாடுதுறை மீனவர்கள் சேர்ந்து தேடி உதவினார்கள் என்றும் சொல்லியிருந்தார்.................. அப்படியான மயிலாடுதுறை மீனவர்களை நீங்கள் கைது செய்து வைத்திருக்கின்றீர்களே என்றும் கேட்டார்...........🫢.

பொறுப்பு மிக்க இடங்களில் இருப்பவர்கள் கூட இப்படி அரைகுறையாக இருந்தால், விடயங்களை தெரிந்து வைத்திருந்தால் என்ன தான் செய்வது, எப்படி பிரச்சனைகளை தீர்ப்பது....... சமூக ஊடகங்களில் சும்மா பொழுது போக எழுதும் நாங்களே எவ்வளவு கவனித்து எழுதிக் கொண்டிருக்கின்றோம்............... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

   வெறும்.. மீன் என்டா   கூட ஐயோ பாவம் என்டு விடலாம் நால் புறமும் கடலால் சூழபட்ட இலங்கைக்கு தூள் எப்படி போகுது.? அங்கே இருந்து தங்கம் எப்படி வருது ரெல் மீ ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:

இந்தியா பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளுடன் தனது கடல் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஆனால் எந்த நாடும் இலங்கையை போல தனது அயல்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொள்வதில்லை, கைதுசெய்வதில்லை, அபராதம் விதிப்பதில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

முழுமையான பொய். பாக்கிஸ்தான் பக்கம் இந்திய மீனவர்கள் கொள்ளையடிக்க செல்ல முடியுமா? அயல் மாகாணங்களுக்கே தமிழ்நாட்டு மீனவர்கள் கொள்யடிகக செல்ல முடியாது . தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யாவருமே இலங்கை தமிழ் மீனவர்கள் நலன்களை பற்றி அக்கறை கொள்வது இல்லை தமிழ்நாட்டு மீன் கொள்ளையர்களை ஆதரவு கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.