Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Replies 237
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

Kavi arunasalam

ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

ஈழப்பிரியன்

ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அநுரவை தேசியத் தலைவருக்கு நிகரானவர் என்று வர்ணித்து வணங்குவதும், வேறு சிலர் அவரை தமிழர்களின் காவலன் என்று கூறுவதும், மீதிப்பேர் இவரை இதுவரை இலங்கை கண்டிராத நேர்மையான, இனபேதமற்ற இலங்கையன் என்று போற்றிப் புகழ்வதும் நடக்கிறது. இக்கட்சியின் உண்மையான முகம் எப்படிப்பட்டது, அக்கட்சியின் கடந்தகால தமிழர் விரோத செயற்பாடுகள் எப்படியானவை என்பதை நன்கு தெரிந்துகொண்டபோதிலும், அவற்றை மறைத்து, மறந்து, எதுவுமே நடவாததுபோல அவரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்று தமிழரின் இருப்பிற்கான போராட்டத்தில் பெரும்பகுதியில் வாழ்ந்த முதியோரும் (புலிகளினால் தமது எழுத்துக்களுக்கு பாரட்டைப் பெற்றவர்கள் உட்பட), 2009 இற்கு முன்னரான சரித்திரத்தை அறிந்திராத அல்லது அரசியல் ரீதியில் தமிழ்த் தேசியத்திலிருந்து வேண்டுமென்றே விலத்தி வழிநடத்தப்பட்ட இளையோரும் அநுரவின் பின்னால் குருடர்களாக இழுபட்டுச் செல்லுதல் நடக்கிறது.

நடந்தவை தெரிந்தும், அநுரவை ஆதரித்தே தீருவது என்று கங்கணம் கட்டி நிற்கும் முதியோருக்காகவோ அல்லது, தேசிய நீக்கம் செய்து, சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் இனவிரோதிகளுக்காகவோ இத்தொடரை நான் பதியவில்லை. மாறாக இவ்வகையானவர்களினால் தவறான சரித்திரத்தை உண்மையென்று நம்பி, நமக்கிழைக்கப்பட்ட வரலாற்று அநியாயங்களை அறியாமல் சிங்கள இனவாதியொருவரை தமது நாயகனாக நம்பி பின்னால்ச் செல்லும் இளைய தலைமுறை இவற்றை அறியவேண்டும் என்பதற்காகவே இதனைப் பதிகிறேன்.

பதிவு

இறுதிப் போரில் தமிழினக்கொலையில் முனைப்புடன் செயற்பட்ட போர்க்குற்றவாளியான சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராக நியமித்த அதே தமிழர்கள் வண‌ங்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க‌
23 புரட்டாதி 2024

240923%20Thuyacontha.jpg

இலங்கை ஜனாதிபதியாக தான் பதவியேற்றுக்கொண்டதும் செய்த முதலாவது பணிகளில் ஒன்று இறுதி யுத்தகாலத்தில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியாகத் திகழ்ந்த தளபதி சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராக நியமித்ததுதான். இந்த சம்பத் எனும் போர்க்குற்றவாளி முள்ளிவாய்க்கால் தமிழினக் கொலையினை தனது யுத்தவெற்றியாகப் பறைசாற்றி வெளிப்படையாகவே பேசிவந்தவன். இவனை தனது பாதுகாப்புச் செயலாளராக அநுர நியமித்திருப்பதன் மூலம் அவரை நம்பி, தெய்வம் என்று வழிபடும் தமிழ் பக்தகோடிகளுக்கு அவர் கூறும் செய்தி என்ன?

04-Inside-01.jpg

இறுதி யுத்தகாலத்தில் சம்பத் தூயகொந்த இலங்கை விமானப்படையில் உலங்குவானூர்திப் படையணியின் 9 ஆவது பிரிவின் விங் கொமாண்டராகப் பணியாற்றியவன். தாக்குதல் உலங்குவானூர்தியின் கட்டளைத் தளபதியாக இறுதியுத்ததில் ஈடுபாட்டுடன் பணியாற்றிய இவன் குறைந்த 400 வான் தாக்குதல்களை தமிழர்கள் மீது மேற்கொண்டதாக வெளிப்படையாகவே கூறிப் பெருமைப்பட்டிருக்கிறான். 

இவனும் இவனது சகாக்களும் ஆடி முடித்த தமிழினக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்டார்கள். இவனது வான்படை தமிழர் தாயகத்தின் வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள், யுத்த சூனிய வலயங்கள் என்று தெளிவாக அடையாளம் காணப்பட்ட சிவிலியன் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி, மக்களை அதிகளவில் கொன்றொழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே பணியாற்றியது. 

"வன்னிப் போர்க்களத்தில் நாம் அவர்களை ஓடவிட்டோம், கதிகலங்க அடித்தோம்" என்று இனவழிப்புப் போர் முடிந்த கையோடு சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் இனவழிப்பில் தனது பங்கினை மெச்சிப் பேசியிருந்தான். இறுதி யுத்த காலத்தில் தான் மட்டுமே 60 தாக்குதல்களில் நேரடியாகப் பங்குகொண்டு பலரைக் கொன்றதாகப் பெருமைப்பட்டிருக்கிறான். 

Sri_Lanka_Military_0037.jpg

இவனது தாக்குதல் உலங்குவானூர்திப் படையணி மொத்தமாக 19,762 80 மில்லிமீட்டர் ராக்கெட்டுக்களை தமிழர்கள் மீது வீசியிருக்கிறது என்று அவன் இச்செவ்வியில் கூறியிருக்கிறான்.இவற்றிற்கு மேலதிகமாக தனது தாக்குதல் வானூர்தியில் பொருத்தப்பட்டிருந்த 23 மில்லிமீட்டர் இரட்டைக் குழல் தானியங்கித் துப்பாக்கி, 12.7 மில்லிமீட்டர் கட்லிங் இயந்திரச் சுழத் துப்பாக்கி, 30 மில்லிமீட்டர் கனொனன் ரக ஏவுகணைகளையும் தாம் பாவித்ததாகப் பெருமைப்பட்டிருக்கிறான்.  இவற்றுள் இவனது உலங்குவானூர்தியில் இருந்து கொட்டப்பட்ட ஒவ்வொரு குண்டினதும் நிறை குறைந்தது 250 கிலோ ஆகும்.

"இரண்டு எம் ஐ 24 தாக்குதல் வானூர்திகளைக் கொண்டே அவர்களுக்கு மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தினோம்". சித்திரை 2009 இல், புதுக்குடியிருப்பில் தான் பங்குகொண்ட தாக்குதல் ஒன்றுபற்றி அவன் பேசும்போது, "எதிரிகளைத் தேடித்தேடி அழிக்கும் நடவடிக்கையில் நாம் இரவு பகலாக‌ அயராது செயற்பட்டோம். புதுவருடம் பிறக்கும் இரவில் நடக்கும் வானவேடிக்கைகள் போல வன்னி வானம் இரவில்க் காட்சியளித்தது" என்று தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனக்கொலையினை அவனால் இரசித்து விபரிக்க முடிந்தது.

இனக்கொலை முடிந்த பின்னல், மற்றைய போர்க்குற்றவாளிகளைப் போல சம்பத்தும் வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றிற்கு அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டான். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டே இவனைப்போன்றவர்களை நாட்டின் இராஜதந்திரப் பதவிகளுக்கு கோட்டாபயலின் அரசாங்கம் நியமித்து வந்தது. தூயகொந்தாவும் இதே காரணத்திற்காக பாக்கிஸ்த்தானில் இயங்கும் இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்ற அதே கோட்டாபயலினால் அனுப்பிவைக்கப்பட்டான். 

இறுதி இனக்கொலை யுத்தத்தில் இலங்கையின் பேர்பெற்ற போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவுக்கு நிகரான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இன்னொரு அரக்கக் குணம் கொண்ட போர்க்குற்றவாளியான கமல் குணரட்ணவின் இடத்திற்கே இப்போர்க் குற்றவாளியான சம்பத் தூயகொந்தாவும் நியமிக்கப்பட்டிருக்கிறான்.

இவனை தனது பாதுகாப்புச் செயலாளராக அநுர நியமித்து அழகுபார்ப்பதனூடான அவர் தன்னை வணங்கிப் பிந்தொடரும் தமிழ் பக்த கோடிகளுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்னவாக இருக்கும்? அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

https://www.tamilguardian.com/content/another-accused-sri-lankan-war-criminal-appointed-defence-secretary

 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கண்ட தமிழ் கார்டியனின் கட்டுரையை இணைத்த ரஞ்சித்,   கந்தன் கருணை மேற்கொள்ளப்பட்ட  படுகொலையை செய்த அருணாவுக்கு எதிராக அவரது பதவி குறைப்பை தவிர வேறு சட்ட நடவடிக்கைகள் தமிழர் தரப்பால் எடுக்கபாடாமையை கண்டித்து தமிழ் கார்டியன் எழுதிய கட்டுரையையும்,  1990 ல் இலங்கை ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில்  ஆயுதமின்றி  சரணடைந்த  600 பொலிசாரை சுட்டு படுகொலை செய்த யுத்த குற்றத் தைப் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபடாமை குறித்த தமிழ் கார்டியனின் கண்டன பதிவை,  அல்லது அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தி எழுதிய கட்டுரையையும்  இணைப்பார் என எதிர் பார்ககிறேன். (இவை இரண்டும் சிறிய உதாரணங்கள் மட்டுமே) 

அவ்வாறு இணைக்கப்பட்டால் தமிழ் கார்டியன் சாதாரண செய்திகளுக்கு உள்நோக்கம் கற்பித்து எழுதி ஒரு தலைப்பட்ட அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடாத நடுநிலை ஏடு என்பதும் அதில் வரும் செய்திகள் ஒருதலை சார்பற்ற வரலாறு என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். 

தாயகத்தில் தமிழ் தேசியம் காக்கவென தமது பிள்ளைகள் முதல் அனைத்தையும் கொடுத்த தமிழ் மக்கள் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி தாயகத்தில் தமது  இருப்பை  காப்பாறுவதற்கான அரசியலை செய்ய முற்படுகையில் வெளி நாடுகளில் தமது வெற்று கோஷ அரசியலாளர்களால் அதை குழப்பி தாயக அரசியலை  மீண்டும் கொதி நிலையில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அங்குள்ள பல்கலைகழக  மாணவர்களை போராட தூண்டும் இவர்கள்,  தமது  பிள்ளைகளை வெளி நாடுகளில் மிக சிறந்த பலகலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்க வைக்கிறார்கள். 

இவர்களது அரசியல் மூலம்  தாயகத்தில் மக்களின்  பலம் குறைந்து வருவதையிட்டோ  தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருபது குறித்தோ முன்பு 11  உறுப்பினரை கொண்ட யாழ் தேர்தல் மாவட்டம் மக்கள் தொகை இழப்பால் 6 ஆக குறைக்கப்பட்டு இருபது  குறித்தோ இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மக்கள் இல்லாமல் தேசியம் இல்லை என்பது இவர்களுக்கு தெரியாதா?  அல்லது  நாம் வாழும்வரை எமது தேசிய வியாபாரம் நடந்தால் போதும் அதன் பின்னர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, island said:

மேற்கண்ட தமிழ் கார்டியனின் கட்டுரையை இணைத்த ரஞ்சித்,   கந்தன் கருணை மேற்கொள்ளப்பட்ட  படுகொலையை செய்த அருணாவுக்கு எதிராக அவரது பதவி குறைப்பை தவிர வேறு சட்ட நடவடிக்கைகள் தமிழர் தரப்பால் எடுக்கபாடாமையை கண்டித்து தமிழ் கார்டியன் எழுதிய கட்டுரையையும்,  1990 ல் இலங்கை ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில்  ஆயுதமின்றி  சரணடைந்த  600 பொலிசாரை சுட்டு படுகொலை செய்த யுத்த குற்றத் தைப் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபடாமை குறித்த தமிழ் கார்டியனின் கண்டன பதிவை,  அல்லது அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தி எழுதிய கட்டுரையையும்  இணைப்பார் என எதிர் பார்ககிறேன். (இவை இரண்டும் சிறிய உதாரணங்கள் மட்டுமே) 

அவ்வாறு இணைக்கப்பட்டால் தமிழ் கார்டியன் சாதாரண செய்திகளுக்கு உள்நோக்கம் கற்பித்து எழுதி ஒரு தலைப்பட்ட அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடாத நடுநிலை ஏடு என்பதும் அதில் வரும் செய்திகள் ஒருதலை சார்பற்ற வரலாறு என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். 

தாயகத்தில் தமிழ் தேசியம் காக்கவென தமது பிள்ளைகள் முதல் அனைத்தையும் கொடுத்த தமிழ் மக்கள் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி தாயகத்தில் தமது  இருப்பை  காப்பாறுவதற்கான அரசியலை செய்ய முற்படுகையில் வெளி நாடுகளில் தமது வெற்று கோஷ அரசியலாளர்களால் அதை குழப்பி தாயக அரசியலை  மீண்டும் கொதி நிலையில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அங்குள்ள பல்கலைகழக  மாணவர்களை போராட தூண்டும் இவர்கள்,  தமது  பிள்ளைகளை வெளி நாடுகளில் மிக சிறந்த பலகலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்க வைக்கிறார்கள். 

இவர்களது அரசியல் மூலம்  தாயகத்தில் மக்களின்  பலம் குறைந்து வருவதையிட்டோ  தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருபது குறித்தோ முன்பு 11  உறுப்பினரை கொண்ட யாழ் தேர்தல் மாவட்டம் மக்கள் தொகை இழப்பால் 6 ஆக குறைக்கப்பட்டு இருபது  குறித்தோ இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மக்கள் இல்லாமல் தேசியம் இல்லை என்பது இவர்களுக்கு தெரியாதா?  அல்லது  நாம் வாழும்வரை எமது தேசிய வியாபாரம் நடந்தால் போதும் அதன் பின்னர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா? 

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் இந்த அநுர குமார திசாநாயக்க

 20 புரட்டாதி 2024

Anura-K.jpg 

தேசிய மக்கள் சக்தி எனும் பெயரினுள் மறைந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி எனும் அதே பழைய சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்களின் தலைவரும், 2000 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஆசனத்தினூடாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் வந்தவரே இந்த அநுர குமார திசாநாயக்க எனும் நபர். ஆரம்பத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தை ஆதரித்து வந்தபோதிலும், பின்னர் தீவிர சிங்கள பெளத்த இனவாதக் கட்சிகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு 2002 இல் விடுதலைப் புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பி யுத்தத்திற்குள் நாட்டைத் தள்ளுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட போலி மார்க்ஸிஸ்ட்டுக்களின் கட்சியின் முக்கிய உறுப்பினர் இவர். யுத்த நிறுத்தத்திற்கெதிராகவும், சமாதானப் பேச்சுக்களிற்கெதிராகவும் சிங்கள மக்களிடையே பிரச்சாரம் செய்து அதனூடாக அரசியலின் முன்னணிக்கு வந்த இவரது கட்சி 2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ எனும் போர்க்குற்றவாளியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எனும் பொதுச் சிங்கள இனவாத முன்னணியைத் தோற்றுவித்தது.

இவர் தலைமை தாங்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைகளை ஆரம்பத்திலிருந்தே முற்றாக நிராகரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிரப்போவதில்லையென்று வெளிப்படையாகவே கூறிவரும் இவர்கள் தமிழ் மக்களுக்கெதிரான இனக்கொலையில் இலங்கை இராணுவத்தின் பின்னால் நின்று பூரண ஆதரவினை வழங்கியவர்கள்.

13 ஆவது திருத்தத்திற்கு ஆரம்பமுதல் எதிர்ப்புத் தெரிவித்து வருபவர்

அநுர குமார திசாநாயக்க பதவிக்கு வந்தவுடன் பாராளுமன்றத்தை உடனடியாகவே கலைப்பேன் என்று உறுதி வழங்கியிருந்தார்.  இவ்வருடம் சித்திரையில் வடக்குக் கிழக்கிற்கு தேர்தல்ப் பிரச்சாரங்களுக்காகச் சென்றிருந்தவேளை "நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக அரசியல் யாப்பில் மாற்றங்களைச் செய்வேன் என்று உங்களிடம் கூறவே வந்திருக்கிறேன். 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன் என்று உங்களிடம் உறுதியளிப்பதற்காக நான் இங்கு வரவில்லை" என்று மிகத் தெளிவாகவே தமிழ் மக்களுக்கு தனது எண்ணத்தைக் கூறிவிட்டு வந்தவர். 

"எனக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்க நான் இங்கு வரவில்லை. 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன், அதற்குப் பிரதியுபகாரமாக எனக்கே வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்கவும் நான் இங்கு வரவில்லை. உங்களிடம் வாக்குக் கேட்பதற்காக சமஷ்ட்டி முறை தீர்வை உங்களுக்குத் தருவேன் என்று கூறுவதற்காகவும் நான் வரவில்லை. நான் வந்திருப்பது இலங்கை இன்றிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து அதனை மீட்டெடுக்க என்ன செய்யலாம் என்று கலந்தாலோசிப்பதற்காகத்தான்" என்று பெரும்பாலான தமிழர்கள் வாழும் இம்மாவட்டங்களுக்கு அவர் வந்தபோது அவர் கூறினார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அவர் கடுமையாக எதிர்த்து வந்தபோதிலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் பேசும்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை தனது ஆட்சி நடைமுறைப்படுத்துவது குறித்துச் சிந்திக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், 13 ஆவது திருத்தத்தினை அது உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே எதிர்த்தும், வடக்குக் கிழக்கு இணைப்பை எதிர்த்தும், மாகாணசபைகள் அமைப்புக் கலைக்கப்படவேண்டும் என்றும் கூறி வரும் ஒரு கட்சியின் தலைவர் இவ்வாறு கூறுவது அக்கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்தான 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ளாது இரு அரசுகளின் நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டது. இவ்வொப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் அமைப்பின் மூலம் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட முடியும் என்று கூறப்பட்டது. இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணசபைகள் ஊடாக காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் அவ்வொப்பந்தம் பரிந்துரை செய்திருந்தது.

"பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஒரு அரசியற் கட்சி என்கிற வகையில் நாம் எதிர்க்கிறோம். எத்தனை உயிர்கள் காவுகொள்ளப்பட்டாலும்கூட இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் எமது கட்சி பாதுகாத்தே தீரும்" என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கூறியிருந்தார். "எமது இந்த நிலைப்பாடு இதுவரையிலும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை" என்றும் அவர் கொழும்பு பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். "இந்த நாட்டின் சரித்திரத்தில் அதன் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க தொடர்ச்சியாக உறுதியான நிலைப்பாட்டினை எடுத்து வந்திருக்கிறோம்.  அதனைக் கட்டிக் காப்பதற்கு நாம் உறுதிபூண்டிருக்கிறோம். இதுகுறித்த எமது நிலைப்பாடு என்றைக்குமே  மாறப்போவதில்லை. எமது கொள்கைகளில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு எங்களால் உறுதியாகக் கூறமுடியும்" என்று அவர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசாங்கத்திற்கெதிராக இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. முதலாவது 1970 களில், இரண்டாவது 1980 களின் இறுதிப்பகுதியில். இதில் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி முழுக்க முழுக்க இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆம் சட்டத்தினூடாக வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு எதிராக நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இந்தக் கிளர்ச்சியின்போது கொல்லப்பட்டார்கள். இந்த தீவிர இடதுசாரி இனவாதிகளின் தலைவரான ரோகண் விஜேவீர 1986 ஆம் ஆண்டு தான் எழுதிய "தமிழ் ஈழப் போராட்டத்திற்கான எனது தீர்வுகள்" எனும் புத்தகத்தில் தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையினை அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களைப் பேண புனையப்பட்ட சதி என்று குறிப்பிட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளராக இருந்த விஜித்த ஹேரத் தி ஐலண்ட் எனும் சிங்கள இனவாதிகளின் ஆங்கில ஊதுகோலுக்கு வழங்கிய செவ்வியில், "மக்கள் விடுதலை முன்னணி சமஷ்ட்டி ஆட்சிக்கு எதிரானது. தமிழ் மக்களின் இன்னல்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் அதேவேளை, சமஷ்ட்டி முறையினூடாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பதை எமது கட்சி முழுமையாக நிராகரிக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை எமது கட்சியே நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரித்தது. இதற்காக மூன்று தனியான வழக்குகளை நாம் தாக்கல் செய்திருந்தோம்" என்று அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினர் தாக்கல் செய்த வழக்கினையடுத்து வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்று கூறிய மூன்று நீதிபதிகளும், அவை உத்தியோகபூர்வமாக பிரிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியிருந்தனர். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து தமிழர்களின் தாயகமான வட மாகாணமும், கிழக்கு மாகாணமும் நிரந்தரமாகவே பிரிக்கட்டுப் போயின.

அநுர திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் "இலங்கை நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் எந்தவிட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது கட்சியினால் காக்கப்ப‌டும்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மக்கள் விடுதலை முன்னணியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவாரான சுனில் ஹந்துநெட்டி பேசும்போது "தற்போதிருக்கும் மாகாணசபை முறையினை தமது கட்சி தொடர்ந்து கடைப்பிடித்தாலும், நீண்டநாட்களுக்கு அதனை தொடரும் எண்ணம் இல்லை" என்று கூறினார். சிங்கள இனவாதிகளுடனும், தேசியத்துடனும் மக்கள் விடுதலை முன்னணி காட்டும் நெருக்கமும் தமிழர்களுக்கெதிரான அக்கட்சியின் நிலைப்பாடும் இவர்கள்  குறித்த சந்தேகங்களை தமிழர்களிடையே நீண்டகாலமாகத் தோற்றுவித்து வந்திருக்கின்றன.

2010 ஆம் ஆண்டில் அநுர குமார திசாநாயக்க பேசும்போது, தமது கட்சி "வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க அரசு முற்படுமாயின் தமது கட்சி அதனை எதிர்க்கும்" என்று கூறியிருந்தார். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனவழிப்பிற்கான மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு

2004 ஆம் ஆண்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பங்காளிக்கட்சியாகவிருந்த மக்கள் விடுதலை முன்னணி, தமிழரின் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே சரியானது என்று தொடர்ச்சியாக கோரி வந்தது. சமாதான தீர்விற்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்புக்களுக்கு விடாப்பிடியாக முட்டுக்கட்டைகளைப் போட்டுவந்த இக்கட்சி ஈற்றில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பிற்கும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தது.

 FootMarch_2.jpg

2003 இல் மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட சமாதானத்திற்கெதிரான பேரணியில் அநுரவும் கலந்துகொண்டிருந்தார்

 சமாதான முயற்சிகளுக்கெதிரான கடுமையான நிலைப்பாடு, யுத்த முஸ்த்தீபுகளுக்கான தொடர்ச்சியான ஆதரவு, தமிழர்களுடன் அதிகாரப் பகிர்விற்கான எதிர்ப்பு, வடக்குக் கிழக்கு இணைப்பை பிரித்தமை, சமஷ்ட்டிக்கு எதிர்ப்பு ஆகிய தீவிர தமிழர் விரோத செயற்பாடுகளால் மக்கள் விடுதலை முன்னணி தென்மாகாணங்களில் கிராமப்புர மக்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெறத் தொடங்கியது.  தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் நலன்காக்கும் சதியே என்று தெற்கின் சிங்கள மக்களை நம்பவைத்த ரோகண‌ விஜேவீர, ஈழத்தமிழருக்கெதிராக‌ சாதாரண சிங்கள மக்களை நீண்டகாலப்போக்கில் இனவன்மம் ஏற்றுவதில் வெற்றிகண்டார். இருமுறை அரசாங்கத்திற்கெதிரான ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களின் கொலைகளுக்குக் காரணமாகவிருந்தபோதிலும் கூட மக்கள் விடுதலை முன்னணி ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்து அனுதாபத்தினையோ அல்லது அவர்களின் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவினையோ ஒருபோதும் கொடுக்க நினைத்ததில்லை. தமிழரின் போராட்டக் காலம் நெடுகிலும் மக்கள் விடுதலை முன்னணி செய்ததெல்லாம் அவர்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தி, அவர்களுக்கான அதிகாரங்களைத் தொடர்ச்சியாகக் கொடுக்க மறுத்து வந்தமை மட்டும்தான். இக்கட்சியிலிருந்தே இலங்கையின் சரித்திரம் கண்ட பல சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வந்தார்கள் என்றால் அது மிகையில்லை. 

2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்தம் கைச்சாத்திட்ட‌வேளை பாராளுமன்றத்தில் இதனைக் கடுமையாகச் சாடிய ஒரு சிலரில் அநுரகுமார திசாநாயக்கவும் ஒருவர். "புலிகள் இலங்கையில் தனிநாடு ஒன்றினை நிறுவ அடித்தளம் இட்டுவிட்டார்கள்" என்று அவர் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டார்.

பாராளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயும் அநுர குமார திசாநாயக்க சமாதான முயற்சிகளுக்கெதிராக கடுமையான எதிர்ப்புணர்வைக் காட்டிவந்தார். மக்கள் விடுதலை முன்னணியினர் ஒழுங்குசெய்த பல பேரணிகளுக்குத் தலைமைதாங்கியதோடு, 2003 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் ஒழுங்குசெய்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கெதிராக கண்டி முதல் கொழும்பு வரையான ஐந்துநாள், 116 கிலோமீட்டர்கள் கொண்ட நடைபயண ஆர்ப்பாட்டப் பேரணியை அநுர குமாரவே முன்னின்று நடத்திச் சென்றார்.

2004 ஆம் ஆண்டில் யுத்த நிறுத்தத்திற்கெதிராகவும், சமாதான முயற்சிகளுக்கெதிராக அநுரவும் அவரது கட்சியினரும் மேற்கொண்டுவந்த பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியொன்றினை உருவாக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. இக்கூட்டணி ஆட்சியில் அநுரவுக்கு விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசண அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. 

அவ்வருடம் இடம்பெற்ற இந்துசமுத்திர சுனாமி இயற்கை அநர்த்தத்தின்போது இலங்கையில் சுமார் 35,000 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் மூன்றில் இரு பங்கினர் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த‌ தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க புலிகளுடன் இணைந்து அமைப்பொன்றினை உருவாக்க அரசு எத்தனித்தபோது அநுர குமார திசாநாயக்க அதனைக் கடுமையாக எதிர்த்து நிறுத்தினார். இதனால் வடக்குக் கிழக்கிற்கென்று வெளிநாடுகளில் இருந்து வழங்கப்பட்ட பெருமளவு நிதியும் நிவாரணப் பொருட்களும் கொழும்பிலேயே தங்கிவிட்டன.

"நாம் அரச சார்பற்ற அமைப்புக்களை வீதியில்க் கண்டால் அவர்கள் மேல் காறி உமிழவேண்டும். உதவி வழங்கும் நாடுகளும் அவர்களது உதவி அமைப்புக்களும் எமது நாட்டை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. அவர்களே இப்போது புலிகளுடன் இணைந்து நிவாரணப் பொறிமுறை ஒன்றை அமைக்கும்படி வற்புருத்துகிறார்கள்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் அன்றைய பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச 2005 இல் கொழும்பு கூட்டமொன்றில் பேசும்போது முழங்கியிருந்தார்.

அக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கென்று உதவி வழங்கும் நாடுகளால் அனுப்பிவைக்கப்பட்ட நிதி மற்றும் பொருட்களை இலங்கை அரசாங்கம் போரில் ஒரு கருவியாகப் பாவித்து தமிழ் மக்களைத் தண்டிக்கிறது என்று சர்வதேசத்திடமிருந்து கடுமையான விமர்சன‌ங்கள் எழுந்திருந்தன. 2005 மார்கழியில் இலங்கைக்கு விஜயம் செய்த‌ ஐ நா செயலாளர் நாயகம் கொபி அனான் வடக்குக் கிழக்கிற்கும் செல்ல‌ முயன்றபோது மக்கள் விடுதலை முன்னணியினரின் அழுத்ததுடன் இலங்கையரசு அதற்கு அனுமதி தர மறுத்து விட்டது.

நடந்துகொண்டிருந்த சமாதானப் பேச்சுக்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை என்கிற காரணத்தைக் காட்டி அநுர குமாரவும் ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவருடத்தின் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டனர். பின்னர் யுத்தநிறுத்தத்தை நிறுத்தியே தீருவது, போரை மீளவும் ஆரம்பித்து இராணுவத் தீர்வு நோக்கி நகர்வது என்று மகிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிக்கத் தொடங்கியபோது அநுரவும் அவரது  கட்சியும் இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே மகிந்தவுக்கு 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கொடுக்க முன்வந்தனர்.  

யுத்த நிறுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து, இராணுவ ரீதியில் புலிகளைத் தோற்கடிக்கவென்று 2006 இல் மக்கள் விடுதலை முன்னணியினால்  "நாட்டைக் காக்கும் இணைந்த முன்னணி" எனும் அமைப்பின் உருவாக்கப்பட்டபோது அநுரவும் அதில் பங்காற்றியிருந்தார். 

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான போருக்கெதிராக மகிந்த ராஜபக்ஷ மிகப்பெரும் அளவில் யுத்தத்தினை ஆரம்பித்தபோது, மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கு பலத்த ஆதரவினை வழங்கியதோடு, சிங்கள மக்களை போருக்கு ஆதரவாக அணிதிரட்டும் கங்கரியத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது.

 சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேசத்தின் கோரிக்கைகளை உதாசீனம் செய்துகொண்டு மகிந்த போரைத் தீவிரமாக நடத்திவருகையில், அவரது அரசாங்கத்திற்கு ஆதரவாக கொழும்பில் அமைந்திருந்த அனைத்து மேற்குநாட்டு தூதரகங்களுக்கும் முன்னால் பாரிய கண்ட ஆர்ப்பாட்டங்களை அநுரவின் மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாக நடத்திவந்தது.

anti_peace_demo_1_230402.jpg 

jvp_demo_04_10_06_01.jpg

jvp_demo_04_10_06_03.jpg

22_03_07_jvp_protest_04_60572_200.jpg

2002, 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் சமாதானத்திற்கெதிராகவும், போரை வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்குசெய்த ஆர்ப்பாட்டங்களில் சில.

 இரத்திணபுரியில் இராணுவ அதிகாரிகளுக்கு முன்னிலையில் பேசும்போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர் லால்காந்த, "ஜாதிக்க ஹெல உறுமயவின் தீவிரவாத எண்ணம் கொண்ட பெளத்த பிக்குகளும், மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாமும் இணைந்து நடத்திய செயற்பாடுகளாலேயே பிரிவினைவாதிகளின் பயங்கரவாதத்தை எம்மால் முற்றாக அழிக்க முடிந்தது" என்று கூறினார்.

 "சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ, பொதுஜன பெரமுனவோ அல்லது எந்தக் கட்சியோ போரை முடிவிற்குக் கொண்டுவரவில்லை. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நாமும், ஜாதிக்க ஹெல உறுமயக் கட்சிட்யினரும் இணைந்து எடுத்த தீர்மானமான "நாம் தமிழரின் பிரச்சினையினை போரின் மூலமே தீர்க்கவேண்டு, ஏனென்றால் அதற்கு வேறு தீர்வுகள் கிடையாது என்பதற்கமைய போரில் வெற்றிகொண்டோம்" என்று அவர் மேலும் கூறினார்.

போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பேன் என்கிற சூளுரை

 aruna%20jayasekara.jpg

போர்க்குற்றவாளி அருனா ஜயசேகர‌

இலங்கை இராணுவம் ஆடிமுடித்த தமிழினக் கொலையில் 167, 679 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். போர்வலயத்தில் அகப்பட்டிருந்த மக்களுக்கான உணவையும், அத்தியாவசிய மருந்துப்பொருட்களையும் அரசு தடை செய்தது. வைத்தியசாலைகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தால் இலக்குவைக்கப்பட்டன. தமிழ்ப் பெண்களுக்கெதிரான மிகவும் காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்புணர்வுகளை பரந்துபட்ட அளவில் போர்காலம் முழுவதும் இலங்கை இராணுவம் நிகழ்த்தியது. சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இனக்கொலையில் நடத்தப்பட்ட பாரிய மனிதவுரிமைகள் மற்றும் மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் பல தீர்மானங்கள் இலங்கை அரசிற்கெதிராக நிறைவேற்றப்பட்டன. அப்படியான இன்னொரு தீர்மானம் இப்போதும் ஐ நா சபையில் கொண்டுவரப்படவிருக்கிறது.

 இத்தீர்மானங்களும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் சர்வதேச விசாரணைப்பொறிமுறை ஒன்றின் ஊடாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, பாரியளவில் குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரி வந்தன.

ஆனால் சர்வதேசத்தினதும் தமிழ் மக்களினதும் இக்கோரிக்கைகளை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமார திசாநாயக்க, "போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றோ, மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்றோ எவரையுமே நாங்கள் தண்டிக்க அனுமதிக்கப்போவதில்லை" என்று ஆவணி 2024 இல் தேர்தல் பிரச்சார மேடையொன்றில் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.  

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், அரசியல் இராணுவத் தலைமைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவரும் நிலையில் "பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட போர்க்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று கோரவில்லை" என்று சிங்கள மக்களிடையே பொய்யான பிரச்சாரத்தினை அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டார்.

அதேவேளை, அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, போர்க்குற்றவாளிகள் என்று அறியப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதிகளை தமது பாதுகாப்புக் கொள்கை வகுப்பில் இணைத்து வருகின்றனர். உதாரணத்திற்கு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அருன ஜயசேகர என்பவன் தமது பாதுகாப்புக் கொள்கைகளை வகுப்பதில் பிரதானியாக அநுர குமார திசாநாயக்க அமர்த்தியிருக்கிறார். இந்த அருண ஜயசேகர என்பவன் ஹெயிட்டி நாட்டிற்கு அமைதிகாக்கும் சேவையில் ஐ நா வினால் அமர்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் மூன்றாம் படையணிக்குக் கட்டளை அதிகாரியாக இருந்தவன். இவனது படைப்பிரிவே 2004 முதல் 2007 வரையான காலப்பகுதியில் சிறுவயதுச் சிறுமிகளை பாலியல்த் தொழிலுக்காகக் கடத்திவந்ததாகப் பரவலாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Justin said:

சிங்கள, ஆங்கில, தென்னிலங்கை ஊடகங்களில் இருந்து பெற்று, வடிகட்டிய பின்னர் வெளியிடுகின்றன என்பதே சரியானது.

தமிழ்நெற்றில் வருபவை எல்லாம் "வரலாற்று உண்மைகள்" என்றால் "லங்கா புவத்தில்" சிங்கள தரப்பு சொல்வதும் உண்மைகள் என்று ஏற்றுக் கொண்டு "முள்ளிவாய்க்காலில் மக்களைக் காக்க சிறிலங்கா யுத்தம் செய்தது" என்பதும் வரலாற்று உண்மையாகி விடும்.

தமிழ்நெற் தமிழர் பக்க ஊதுகுழல், லங்காபுவத் சிங்கள ஊதுகுழல். இந்த வேறுபாடு தெரியாமல் நீங்கள் சிறந்த நகைச்சுவையாளராக வலம் வருகிறீர்கள்!

லங்கா புவத் பாதுகாப்புபடையினரை மேற்கோள் காட்டியே செய்தி வெளியிடுவதாக கூறுவதுண்டு, ஊடகங்கள் தாமாக செய்திகளை உருவாக்கவோ திரிக்கவோ நடைமுறையில் முடியாது, ஒரு கட்சியினையோ அல்லது தனி நபர்கெதிராக போலியான செய்திகளை வெளியிட சிங்கள ஆங்கில ஊடகங்களால் முடியுமா ?

சிங்கள ஊதுகுழல் ஊடகங்களில் வருவதை வடிகட்டி எழுதினால் அது எப்படி தமிழர் பக்க ஊது குழல் ஊடகம் ஆகிவிட முடியும்? நீங்கள் வேடிக்கையானவர் மட்டுமல்ல விசித்திரமானவராகவும் இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய எதிர்ப்பு நிலை

anura-in-india.jpg

 மக்கள் விடுதலை முன்னணி இயல்பிலேயே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டினை உடையது. 1987 ஆம் ஆண்டு அக்கட்சி நடத்திய இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியே தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க இந்தியா வந்திருக்கிறது, ஆகவே அதனை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. தமிழர் விரோத, இந்திய விரோத உணர்வினை தெற்கின் பாமர மக்களிடையே வளர்த்துவிட்டே 1987 முதல் 1990 வரையான இரத்தக்குளியலை மக்கள் விடுதலை முன்னணி அரங்கேற்றியது.

image_992ac7decc.jpg 

இக்கட்சி முன்னர் மலையகத் தமிழர்களை, "இந்தியா ஆக்கிரமிப்பின் ஐந்தாவது கருவிகள்" என்றே அழைத்து வந்தது. இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் எந்த வர்த்தகச் செயற்பாடுகளையும், இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக இந்தியாவினால் எடுக்கப்படும் முயற்சி என்றே இக்கட்சி பார்த்தது.

 Sri%20Lanka%20CEPA%20protest%20May%202010.jpg

இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணியினர்

 கட்சியின் இந்திய விரோத நிலைப்பாடு அநுரவிற்கும் இருந்தது. 2008 இல் பாராளுமன்றத்தில் பேசும்போது, "கச்சதீவை இந்தியாவிற்குத் தாரை வார்க்கும் செயற்பாடுகள் நடப்பதாக உணர்கிறேன், ஆனால் எமது கட்சி இருக்கும்வரை அது ஒருபோது நடவாது, எவ்விலை கொடுத்தாவது இம்முயற்சி வெற்றிபெறுவதை நாம் தடுப்போம்" என்று சூளுரைத்திருந்தார்.

 அண்மையில்க் கூட கச்சதீவு விவகாரம் தில்லியில் பேசப்பட்டாலும் கூட, அநுரவை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இந்தியாவிற்கு மேற்கொள்ளுமாறு இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இந்தியாவால் அழைப்பு விடுக்கப்பட்டது. அநுரவின் இந்திய விஜயம் மக்கள் விடுதலை முன்னணியின் அதி தீவிர இந்திய எதிர்ப்பை சற்று களையும் அரசியல் மாற்றத்தின் அறிகுறியென்றும், இந்தியா தேவைக்கதிகமாகவே அநுரவுக்கு வளைந்துகொடுக்கிறது என்கிற தோற்றத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய விஜயத்தின்போது அநுர குமாரவும் அவரது பரிவாரங்களும் இந்தியாவின் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்த அமைப்புக்களின் உறுப்பினர்களையும் சந்தித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீள்பரிசீலினை செய்தல்

Screenshot-117.png?fit=1200%2C677&ssl=1 

2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொருளாதாரச் சிக்கலின்பொழுது, அன்றைய ஜனாதிபதியாகவிருந்த கோட்டாபயலின் அரசாங்கம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை சிக்கலில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டிருந்தது.

ஆனால், இலங்கையின் கடன் அடைக்கும் வரலாறு கத்திமுனையில் நடப்பதற்கு நிகரானது என்பதை சர்வதேச நாணய நிதியம் அறிந்தே இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் இயக்குநர், ஜூலி கொசாக் கடந்த வாரம் பேசுகையில் மூன்றாம் கட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படு முன்னர் புதிய ஜனாதிபதியுடன் பேசவேண்டியிருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஆனால், கடன் நிபந்தனைகளை மீள அமைக்கவேண்டும் என்று அநுர குமார பேசத் தொடங்கியிருக்கிறார்.இதனையே சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை மீளச் செலுத்தும் வரலாறு குறித்து எச்சரிக்கை செய்திருந்தது. 

இலங்கையின் இராஜாங்க நிதியமைச்சர் செகான் சேமசிங்க பேசும்போது, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, மூன்றாவது கட்ட கடனுதவியான 350 மில்லியன் டொலர்கள் வழங்கப்படாதுவிட்டால் நாடு மீண்டும் ஒரு பொருளாதாரச் சிக்கலைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தினை இரத்துச் செய்வதால் நாட்டில் இடம்பெற்றுவரும் சிக்கலில் இருந்து மீளுதல் முயற்சிகள் தடைப்பட்டு நின்றுவிடும் என்றும், நாடு பழையபடி 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குள் சென்றுவிடும் என்று எச்சரித்தார். "சர்வதேச நாணய நிதியத்திடம் நான் ஒத்துக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது" என்று பத்திர்க்கையாளர்களிடம் பேசும்போது சேமசிங்க மேலும் கூறினார்.

"இது நடக்குமாக இருந்தால் 2022 இல் இலங்கை எதிர்கொண்ட அதே நெருக்கடிக்குள் மீண்டும் சென்றுவிடும்" என்று அவர் எச்சரித்தார்.

தமிழர் தாயகத்தில் நடந்துவரும் இராணுவமயமாக்கல் குறித்துப் பேச மறுக்கும் அநுர குமார திசாநாயக்க‌

 Co6GuvKWYAAuRIJ.jpg

அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வடக்குக் கிழக்கில் இடம்பெற்றுவரும் இராணுவமயமாக்கலினால் தமிழ் மக்கள் அடைந்துவரும் துன்பங்கள் குறித்து எதுவுமே பேசவில்லை.

அதற்கு மாறாக காணிகளை பகிர்ந்தளிப்பதில் சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளினால் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தனியார்மயமாக்கலை மட்டுமே கருத்திற்கொண்டு பேசியிருக்கிறார். மேலும், தமது கட்சி ஆட்சிக்கு வருமிடத்து காணிப்பிரச்சினைகள் தொடர்பாக விரைவானதும், நீதியானதுமான தீர்வுகளை வழங்கும் என்று கூறுகிறார். தற்போது வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவமும், கடற்படையும் அடாத்தாக ஆக்கிரமித்து வருவதால் தமிழ் மக்கள் காணி அபகரிப்பு எனும் பிரச்சினையினை எதிர்நோக்கி வருகிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுர குமார திசாநாயக்க ஒரு உறுதியான சிங்கள பெளத்த இனவாதி

 Image

அனைவருக்கும் பொதுவான வேட்பாளரைக் களமிறக்குகிறோம் என்று மக்கள் விடுதலை முன்னணி  கூறினாலும், அநுர எப்போதுமே சிங்கள பெளத்த இனவாதிகளை நோக்கியே தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அண்மையில் மகரகமவில் 1500 பெளத்த பிக்குகள் முன்னால் பேசுகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் பெளத்த மதத்திற்கு மற்றைய மதங்களைக் காட்டிலும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிடும் 9 ஆவது அத்தியாயத்தினை தனது கட்சி ஒருபோதும் மாற்றாது என்று உறுதியளித்தார். பெளத்த மதத்தின் புனிதத்தனமையினை அரசுத்தலைவர் தனது தலையாய‌ கடமையாக வரிந்து பேணுதல் அவசியம் எனும் சரத்தை தான் தவறாது கடைப்பிடிப்பேன் என்று அவர் அங்கு உறுதியளித்தார்.

Image

அங்கு பேசிய இன்னொரு மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர் நலிந்த ஜயதிஸ்ஸ, "இது ஒரு பெரும்பான்மைச் சிங்கள பெளத்த நாடு. ஆகவே எமது கட்சி அத்தியாயம் 9 இனை முழு மூச்சுடன் பாதுகாக்கும். பெளத்த மதத்தினை மெருகூட்டி, போஷித்து, வளப்படுத்தும் நடவடிக்கைகளில் எமது அரசாங்கம் ஈடுபடும். அத்தியாயம் 9 இனைப் போற்றிப் பின்பற்றுவதென்பது இந்த நாட்டில் ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததில்லை" என்று குழுமியிருந்த 1500 பெளத்த பிக்குகளிடம் உறுதி வழங்கினார்.

Image

 

தமிழர்களிடம் பேசும்போது எச்சரிக்கை விடுத்த அநுர குமார திசாநாயக்க‌

2024-04-11%20-%20AKD.jpg

 "எமது வெற்றியில் யாழ்ப்பாணத் தமிழர்களும் பங்குதாரர்கள் ஆக வேண்டும். இந்தப் பாரிய மாற்றத்தை எதிர்த்தவர்கள் என்று நீங்கள் அழைக்கப்படுவதைத் தவிருங்கள். இந்த மாற்றத்தின் பங்குதாரர் ஆகுங்கள்.......நீங்கள் இந்த மாற்றத்தை எதிர்ப்பீர்கள் என்று நாம் காணும் பட்சத்தில், தெற்கு மக்கள் உங்களைப்பற்றி என்னை நினைப்பார்கள் என்று சிந்தியுங்கள். யாழ்ப்பாண மக்கள் இந்த மாற்றத்தை விரும்பாதவர்கள் என்று தெற்கில் அடையாளப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?  இந்த மாற்றத்தை எதிர்த்தவர்கள் என்று பார்க்கப்படுவதை விரும்புகிறீர்களா? வடக்கு இவ்வாறு அடையாளப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/10/2024 at 17:56, Kandiah57 said:

இது தெரிந்த விடயம் தான்    

தீர்வை எப்படி பெறலாம் என்பதை சொல்லுங்கள்??   

அது தான் இன்றைய தேவை 

தமிழ் மக்கள் தங்களது வாக்கை   தமிழ் கட்சிகளுக்கு போடலாமே வழமை போல இதனால் எந்த பிரயோஜனம் இல்லை

இந்த முறை ஜேவிபி க்கு போடலாம??   இது புதிய முயற்சி   

நீங்கள் ஒரு கட்சியின் உறுப்பினராக இருந்தால் அந்த கட்சிக்கு கட்டுப்பட்டவராக இருப்பீர்கள் ஆனால் அதே கட்சியுடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு பேரம் பேசும் வலு இருக்கும் (நான் கூறுவது எமது அரசியல்வாதிகள் வாங்கும் பெட்டிகள் அல்ல), அதே போல நீங்கள் ஆழுங்கட்சிக்கு வாக்கழித்தால்  அவர்கள் இல்லை என்பதனை தந்துவிடுவார்களா? 

உங்களுக்கு ஒரு முகவராக உங்கள் பிரதிநிதிகள் செயற்பட்டு உங்களுக்கு தேவையானவற்றை பெற முயற்சிப்பார்கள், இதில் பூகோள அரசியலும் பங்கு வகிக்கும், இலங்கை பூகோள ரீதியாக முக்கியமான இடத்தில் உள்ளது, மாறிவருகின்ற உலக ஒழுங்கு எமக்கு சாதகமாக இருந்தால் எதுவும் நடக்கலாம்.

என்னதான் அனுரா தலையால் குத்துக்கரணம் அடித்தாலும் அதிக பட்சமாக ஒரு கூட்டணிக்கட்சிகளின் உதவியுடன் கூட்டாட்சியினையே செய்யமுடியும், அந்த நேரத்தில் உங்கள் பிரதிநிதிகள் கூட்டணிக்கட்சியில் இருப்பதுதான் இலாபம், ஆழுங்கட்சியில் இருந்தால் எந்த பிரஜோசனமும் இல்லை.

On 6/10/2024 at 19:29, விளங்க நினைப்பவன் said:

இது ஒரு நல்ல கேள்வி
அதுவும் 21 ம் திகதி அவர் வெற்றி பெற்ற பின்பு எப்படி இவ்வளவு நம்பிக்கை வந்தது? சிங்கள மக்கள் தான் வழிகாட்டிகள்  தமிழர்கள் அவர்களை பின்பற்றுவார்களா
ஒரு தமிழ் வீடியோ வட்சப்பில் அனுப்பி வைத்திருக்கிறார்கள் ஒரு தமிழர் சொல்கிறார் எங்களுக்கு ஐயர்மார்கள் வேண்டாம் அந்த ஆண்டவனே நேரடியாக எமக்கு அனுப்பிவைத்த பிள்ளை தான் அநுரகுமார திசாநாயக அந்த பிள்ளையை  ஆதரிப்போம் 😭

------------------------------------------
1982 ஜனாதிபதி தேர்தலிலேயே அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியை ஆரம்பித்த அவர் தலைவர் போட்டியிட்டுள்ளார்
ஜே.ஆர்.ஜெயவர்தன -ஐக்கிய தேசிய கட்சி 52.91 வீதம்
ஹெக்டர் கொப்பேகடுவ - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 39.07 வீதம்
ரோஹன விஜேவீர - ஜேவிபி 4.19  வீதம்
https://en.wikipedia.org/wiki/1982_Sri_Lankan_presidential_election
 

நாடுளுமன்ற தேர்தல் முடிவுடன் மீண்டும் வழமைக்கு திரும்பிவிடும், அதனால் கவலைப்படத்தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, ரஞ்சித் said:

அரசியலமைப்புச் சட்டத்தில் பெளத்த மதத்திற்கு மற்றைய மதங்களைக் காட்டிலும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிடும் 9 ஆவது அத்தியாயத்தினை தனது கட்சி ஒருபோதும் மாற்றாது என்று உறுதியளித்தார். பெளத்த மதத்தின் புனிதத்தனமையினை அரசுத்தலைவர் தனது தலையாய‌ கடமையாக வரிந்து பேணுதல் அவசியம் எனும் சரத்தை தான் தவறாது கடைப்பிடிப்பேன் என்று அவர் அங்கு உறுதியளித்தார்.

இவரிடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன்😁, இவரது ஆட்சிக்காலம்தான் கோட்டபாயாவின் ஆட்சிக்கால்த்தினை விட இலங்கையின் பொற்காலமாக இருக்கப்போகிறது போல இருக்கிறது😭.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

ஆனால் அதே கட்சியுடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு பேரம் பேசும் வலு இருக்கும் (

ஆமாம் இதை தான்  ஜி ஜி. பென்னம்பலம். பயன்படுத்தி 

கங்கேசன்துறை  சீமெந்து தொழில்சாலை 

பரந்தன். இரசாயன தொழில்சாலை  

வழைசேனை காகித தொழில்சாலை. 

ஒரே ஆட்சியில் பெற்றுக் கொண்டார். இது அவரது திறமை 

ஆனால்   சுயாட்சி 

தனிநாடு    பெறவில்லை திறமையிருந்தும்.  பெற முடியாது 

தரமாட்டார்கள் 

1 hour ago, vasee said:

என்னதான் அனுரா தலையால் குத்துக்கரணம் அடித்தாலும் அதிக பட்சமாக ஒரு கூட்டணிக்கட்சிகளின் உதவியுடன் கூட்டாட்சியினையே செய்யமுடியும்,

எப்படி உறுதியாக கூற முடியும்??  ஐனதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட.  கூடுதல் வாக்குகள் கிடைக்கும் 

சிலநேரம். தனித்து எவராது உதவியின்றி ஆட்சி அமைப்பார்கள்  என்று நான் நம்புகிறேன் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

அந்த நேரத்தில் உங்கள் பிரதிநிதிகள் கூட்டணிக்கட்சியில் இருப்பதுதான் இலாபம், ஆழுங்கட்சியில் இருந்தால் எந்த பிரஜோசனமும் இல்லை.

எங்கே இருந்தாலும் 

சுயாட்சி 

தனிநாடு  கிடைப்பது  கடினம்.  இன்றைய நிலையில் அனுர   சட்டத்தின் முன்  இன. மத.  போதமின்றி அனைவரும் சமன்  என்று  ஆட்சியை தந்தால். போதும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழர்கள் யூதர்களை படிக்கணும்.. தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்ட யூதர்கள் எப்படி எப்பவுமே புரட்சி செய்து அழிந்துபோகாமல் வாழ்ந்து படித்து பணத்தை இனத்தை பெருக்கி தேவையான நேரத்தில் அதை செய்து இன்று நாடடைந்த வல்லமையான இனமான கதையை தமிழர்களும் குறிப்பாக முட்டள்தனமாக அதிதீவிர தமிழ்தேசியம் பேசுபவர்கள் கேட்கணும்.. குறிப்பாக 10 வது நிமிடத்தில் இருந்து கேட்கணும்.. தக்கனதான் பிழைக்கும்.. அது தெரியாமல் வெற்று வீரம் பேசும் மூடர்கள் தாமும் அழிந்து தன் சந்ததியையும் அழிப்பார்கள்…

 

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, vasee said:

லங்கா புவத் பாதுகாப்புபடையினரை மேற்கோள் காட்டியே செய்தி வெளியிடுவதாக கூறுவதுண்டு, ஊடகங்கள் தாமாக செய்திகளை உருவாக்கவோ திரிக்கவோ நடைமுறையில் முடியாது, ஒரு கட்சியினையோ அல்லது தனி நபர்கெதிராக போலியான செய்திகளை வெளியிட சிங்கள ஆங்கில ஊடகங்களால் முடியுமா ?

சிங்கள ஊதுகுழல் ஊடகங்களில் வருவதை வடிகட்டி எழுதினால் அது எப்படி தமிழர் பக்க ஊது குழல் ஊடகம் ஆகிவிட முடியும்? நீங்கள் வேடிக்கையானவர் மட்டுமல்ல விசித்திரமானவராகவும் இருக்கிறீர்கள்.

பலர் அம்மணமாக உலவும் கடற்கரையில் உடுப்பு போட்டவன் விசித்திரமாகத் தான் தெரிவான்.

அப்படியே மேலே போய் ஐலண்ட் எழுதியிருப்பதையும் பார்த்து "ஒரு பக்கப் பார்வையை பிரச்சாரம் செய்யும் ஊதுகுழல் ஊடகம்" என்பதன் அர்த்தம் புரிகிறதா என்று முயற்சியுங்கள்😎.

இங்கே ஊதுகுழல் ஊடகங்களை - தமிழோ, சிங்களமோ- நம்புவோரின் பிரச்சினை, சம்பவங்கள் நடக்கும் போது தாயகத்தில் இருக்காமல், இந்த ஊது குழல் ஊடகங்களில் மட்டும் பார்த்து கேட்டு அப்படியே "சாப்பிட்டிருப்பார்கள்"! யாரும் எதையும் அப்படியே  சாப்பிடலாம், ஆனால் சாப்பிட்டதை இங்கே கொண்டு வந்து உண்மை வரலாறு எழுதுகிறேன் என்று வரலாறு எழுதுவோரை அவமானம் செய்யக் கூடாது😂!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தீவிர சிங்கள இன‌வாத மக்கள் விடுதலை முன்னணியின் சகோதர அமைப்பான ஜாதிக்க சங்க சம்மேளனய அமைப்பு நோர்வே நாட்டுக் கொடியை அந்நாட்டின் கொழும்பு தூதரகத்தின் முன்னால் எரித்தது.

செவ்வாய்க்கிழமை, 24 மார்கழி, 2002

Buddhist monks demonstrate in Colombo

தீவி சிங்கள இனவாதக்  கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் சகோதர அமைப்பும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கிளைகளையும் உறுப்பினர்களையும் கொண்டதுமான தேசிய பிக்குகள் முன்னணி (ஜாதிக்க சங்க சம்மேளனய) சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நோர்வே நாட்டு இராஜதந்திரியான ஜொன் வெஸ்ட்பேர்க் இனை நாட்டை விட்டு உடனடியாக விரட்ட வேண்டும் என்று கோரி கொழும்பில் இருக்கும் நோர்வேத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. 

ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் நோர்வே நாட்டின் இரு கொடிகளை தூதரகத்தின் முன்னால் எரித்ததுடன், அங்கிருந்து ஜனாதிபதிச் செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்று ஜனாதிபதி சந்திரிக்காவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் பிக்கு கலேவெலகலே சந்தலோக்கவிடமிருந்து மகஜரை ஜனாதிபதிக்கான மேலதிகச் செயலாளர் பெற்றுக்கொண்டார். 

Buddhist monks demonstrate in Colombo

அண்மையில் நோர்வேயிட‌மிருந்து புலிகளுக்குத் தருவிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொலைத்தொடர்புக் கருவிகள் தொடர்பாகவே மக்கள் விடுதலை முன்னணியின் பிக்குகள் அமைப்பு இப்போராட்டத்தை நடத்தியிருந்தது.

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நோர்வேத் தூதரகத்தின் நடவடிக்கைகளில் தலையீடு செய்து நாட்டைக் காப்பற்றுங்கள், இல்லாதுவிடில் புலிகளின் பலம் அதிகரித்து விடும்‍ - சந்திரிக்காவை எச்சரித்த மக்கள் விடுதலை முன்னணி

திங்கள் , 30 மார்கழி 2002

vimal_weerawansa.jpg

தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி சந்திரிக்காவைச் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகள், உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து படையினரை விலக்கிக் கொள்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவே இப்பேச்சுக்கள் இடம்பெற்றன. 

மேலும் நோர்வே தூதரகத்தினூடாக புலிகளுக்குக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும் தொலைத்தொடர்புக் கருவிகள், ஒலிபரப்புக் கருவிகள் தொடர்பாகவும் விமல் வீரவன்சவினால் கேள்வியெழுப்பப்பட்டது. புலிகளுக்கு ஆதரவாக நோர்வே தூதரகம் செயபட்டு வருவதாக இச்சந்திப்பின்போது வீரவன்ச சந்திரிக்காவிடம் முறையிட்டார்.
ஆகவே நாட்டைக் காப்பதற்காக, ஜனாதிபதி இவ்விடயத்தில்   தலையீடு செய்து , புலிகள் பலம்பெறுவதைத் தடுக்க ஆவண செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Edited by ரஞ்சித்
குழுவினர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராணுவத்தினரின் நடவடிக்கைகளை வெகுவாக ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி, ரணிலின் அரசைக் கவிழ்த்துவிடப்போவதாகவும் மிரட்டல்

திங்கட்கிழமை, 6, தை 2003

alt

இலங்கையின் பலமான இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் ரணில் அரசின் உயர் பாதுகாப்பு வலயங்களை விட்டு நீங்கி மக்கள் அப்பகுதிகளுக்குத் திரும்ப வழிவிடவேண்டும் என்கிற கோரிக்கையினை நிராகரித்திருப்பது குறித்து இராணுவத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறது. மேலும் புலிகளுடன் இணைந்து நாட்டைப் பிளவுபடுத்தும் சதிச்செயலில் பிரதமர் ரணில் இறங்கியிருப்பதாகவும் அது பிரதமரைக் கடுமையாகச் சாடியிருக்கிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியே பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

Wimal Weerawanse.
கொழும்புநகரின் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை நடத்திய மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச பேசும்போது, "ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் வடக்கில் இருக்கும் உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இராணுவத்தினரை விலக்கிக்கொள்வதாக புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தார்" என்றும், "ஆட்சிக்கு வந்தவுடன் தான் அன்று செய்த ஒப்பந்தத்தினை அமுல்ப்படுத்த முனைகிறார்" என்றும் சாடினார். 

SIHRN_3.jpg

மேலும் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்ட நோர்வே தூதரகத்தின் அதிகாரியான ஜொன் வெஸ்ட்போர்க் தனது கட்சியினதும், ஜனாதிபதி சந்திரிக்காவினதும், பெளத்த பிக்குகளின் தொடர் போராட்ட அழுத்தங்களினாலேயே நாட்டை விட்டு விரட்டப்பட்டார் என்றும் அவர் உரிமை கோரினார். 

"யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவது தொடர்பான விடயத்தில், அவ்வாறு விலகுவதில்லை என்கிற  மிகத்துணிவான நிலைப்பாட்டினை இராணுவத்தினர் எடுத்திருக்கிறார்கள். ஆனால், புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் பேச்சுக்களில் இதுதொடர்பாக எட்டப்படும் தீர்மானங்களின்படி, இராணுவத்தினரின் இந்த துணிகர நிலைப்பாடு மாற்றப்பட்ட அழுத்தம் கொடுக்கப்படுமா என்று எனக்குக் கூறத் தெரியவில்லை"  என்று வீரவன்ச கூறினார்.
"புலிகளின் தலைவரின் பாணியைப் பின்பற்ற ரணில் விரும்புவது போல் எனக்குத் தெரிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு ரணில் உரையாற்றும்போது அவர் பின்னால் காணப்பட்ட மேடையலங்காரத்தையும், அமைப்பையும் பார்க்கும் ஒருவருக்கு கடந்த கார்த்திகை மாதத்தில் புலிகளின் தலைவர் ஆற்றிய மாவீரர் தின உரையின் மேடையமைப்பே நினைவிற்கு வந்திருக்கும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"ரணில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய விதத்தினைப் பார்க்கும்போது அவரது அரசு கடுமையான சிக்கலில் மாட்டியிருப்பதாக‌வே எனக்குத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்த கடந்த ஒருவருடத்தில் நாட்டு மக்களுக்காக அவர் எதனையும் செய்யவில்லை" என்றும் அவர் கூறினார். 

மக்கள் விடுதலை முன்னணியினால் பேச்சுவார்த்தைகளுக்கெதிராகவும், விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்கல் ஆகியவற்றிற்கெதிராகவும் கொழும்பில் நடக்கவிருக்கும் "ஜன பல" போராட்டம் பற்றிய தகவல்களை அறிவிக்கவே இம்மாநாடு மக்கள் விடுதலை முன்னணியினால் கூட்டப்பட்டிருந்தது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8108

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 hours ago, vasee said:

இவரிடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன்😁, இவரது ஆட்சிக்காலம்தான் கோட்டபாயாவின் ஆட்சிக்கால்த்தினை விட இலங்கையின் பொற்காலமாக இருக்கப்போகிறது போல இருக்கிறது😭.

வசி,

பார்க்கலாம், இவரது ஆட்சியில் என்னதான் தமிழருக்குக் கிடைக்கிறதென்று.

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமாதானப் பேச்சுக்களை நிறுத்தவேண்டும் என்று கோரி கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய மாபெரும் கண்டனப் பேரணி

புதன்கிழமை, 8 தைமாதம், 2003

Massive JVP rally

விடுதலைப் புலிகளுக்கும், ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக தனது முழுப் பலத்தையும் காட்டும் வகையில் தீவிர இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இன்று கொழும்பின் முக்கிய சந்தியொன்றில் சுமார் 25,000 ஆதரவாளர்களைக் கூட்டி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகான தீர்வைத் தேடுவதாகக் கூறி நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் நாட்டைப் பிளவுபடுத்து மேற்குலக ஏகதிபத்தியவாதிகளின் சதி என்று பேரணியில் பேசிய அனைத்து முக்கியஸ்த்தர்களும் குறிப்பிட்டார்கள்.

Massive JVP rally

மாகாண நகரங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் செந்நிறத்தில் ஆடையணிந்து கொழும்பு நகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான தீவிரவாத இடதுசாரிகள் நகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து நகர் மையத்தில் இருக்கும் லிப்டன் சதுக்கம் நோக்கிப் பேரணியாகச் சென்றார்கள். 

"புலிகளுக்கும் யானைகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் சதியைத் தோற்கடிப்போம்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுசெயலாளர் டில்வின் சில்வா ஆவேசமாகப் பேசினார். இப்பேரணிக்கு "ஜன பலய" (மக்கள் பலம்) என்று ஜே வி பி பெயரிட்டிருந்தது. 

Massive JVP rally

பேரணியில் பேசிய அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, ரணிலின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக வேறு கட்சிகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். 

நோர்வே நாட்டவர்கள் இலங்கை விடயத்தில் தேவையில்லாது தலையிட்டு வருகிறார்கள் என்று அவர் கண்டித்தார். நோர்வே நாட்டுத் தூதுவர் ஜொன் வெஸ்ட்போர்க் புலிகளுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து வரும் கடுமையான எதிர்ப்பினையடுத்து ரணில் அரசாங்கம் அதிர்ந்த்துபோய் அச்சத்தில் உறைந்திருக்கிறது என்று அவர் மேலும் கூறினார். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8123

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழ் நெற் நடுநிலையானது என்பதை நிரூபிக்க ரஞ்சித் நான் சொன்ன படியான கட்டுரைகளை இணைத்திருக்கலாம். அந்த இலகுவான வழி இருக்க  அதை விடுத்து வீணாக கஷரப்பட்டு  நீண்ட கதை வசனம் எழுதி  முழக்கி……… பின்னர் அதை நீக்கி  ரொம்ப தான் அறுத்தாலும் கூட தமிழ் நெற் ஒரு தலைப் பட்டமற்றது என்பதை நிரூபிக்க முடியவில்லை. 😂😂 

அறிவுடை சமூகம் அறிவியல் ரீதியான நிருபணத்தையே ஏற்றுக்கொள்ளும். கதைகளையும் புராணங்களையும்  வைத்து அனுதாபங்களை தேடிக்கொள்வது பலவீனமான அணுகுமுறை . 

புலிகளுக்கு  பெறுமதியான தொலைதொடர்பு சாதனங்களை வழங்கியதை அன்றைய ஜேவிபி எதித்தது என்று புலம்பும் இவர்கள் நோர்வேயை கண்டாலும் எரிக் சோல்ஹைமை கண்டாலும் எரிந்து விழுவார்கள் என்பது வேடிக்கை. இதே ஆக்கோஷத்துடன் நோர்வேயும் திட்டுவார்கள். சமாதானத்துக்கு அனுசரணை வழங்க வந்த நோர்வே இரு தரப்பையும் சமாளித்து சமாதானத்துக்கான சூழ்நிலையை உருவாக்க பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற் கொண்ட வேளையில் யுத்த சூழ் நிலைக்கான வேலைகளை அதாவது அன்றைய ஜேவிபி விரும்பிய வேலைகளை இனவாதிகளுடன் இணைத்து கன கச்சிதமாக செய்து முடித்ததில் இவ்வாறான தமிழ் தேசியர்களுக்கு  முக்கிய பங்கு உள்ளது. இப்படி அன்றைய ஜேவிபி இனவாதிகள் என்ன விரும்பினார்களோ அதை தமே செய்து முடித்துவிட்டு இன்று  அன்றைய ஜேவிபியின் செயல்களை வைத்து புலம்பி இனவாதித்தை தூண்டி தமிழ் மக்களை மீண்டும் தமது பழைய அழிவுப் பதையை நோக்கி திருப்புவதே இவர்களின் நோக்கம். 

 தமது தவறுகளை மூடி மறைக்க அடுத்தவர்கள் மீது முழு பழியையும் சுமத்தி  திட்டித் தீர்ப்பதும் காலா காலமாக பகைமை உணர்வை உருவாக்குவது தான் இவர்களது அரசியல் தந்திரமாம். 

அரசியல் தந்திரமல்ல அது இவர்களின் வியாபார தந்திரம். தமது வியாபாரத்துக்காக தமிழ் மக்களின் இருப்பு வடகிழக்கில் அழிந்தாலும் பரவாயில்லை என்பது இவர்களின் அணுகுமுறை. 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரஞ்சித் said:
On 7/10/2024 at 05:31, vasee said:

இவரிடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன்😁, இவரது ஆட்சிக்காலம்தான் கோட்டபாயாவின் ஆட்சிக்கால்த்தினை விட இலங்கையின் பொற்காலமாக இருக்கப்போகிறது போல இருக்கிறது😭.

வசி,

பார்க்கலாம், இவரது ஆட்சியில் என்னதான் தமிழருக்குக் கிடைக்கிறதென்று

தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதை உடைக்க முயல்வார்கள்.

தலைவரின் இடத்துக்கு இவரைக் கொண்டுவர முயற்சிகள் நடக்கும்.

முடிந்தபின் வேதாளம் முருங்கைமரம் ஏறும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/10/2024 at 10:16, ரஞ்சித் said:

அரசியல் ரீதியில் தமிழ்த் தேசியத்திலிருந்து வேண்டுமென்றே விலத்தி வழிநடத்தப்பட்ட இளையோரும் அநுரவின் பின்னால் குருடர்களாக இழுபட்டுச் செல்லுதல் நடக்கிறது.

உண்மை ...இதை வெற்றியடைய பண்ண பல முயற்சிகள் நடைபெறுகிறது ....
குட்டிமணி இவரின்ட தலைவருக்கு (தோழர் எண்டு சொல்ல வேணும்  கண்டியளோ ) தோழர் ரோகண விஜய வீராவுக்கு உடுக்க தன்னுடைய சாரத்தை கிழித்து கொடுத்தவராம் என பாடுகிற‌ யூ டியுப் தோழர்களும் உண்டு....
 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/10/2024 at 13:09, Kandiah57 said:

சுயாட்சி 

தனிநாடு    பெறவில்லை திறமையிருந்தும்.  பெற முடியாது 

தரமாட்டார்கள் 

சுயாட்சி 

தனிநாடு  கிடைப்பது  கடினம்.

இங்கு என்னை மாதிரி பலருக்கு தமிழ் ஈழம் இனியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் இருக்கவில்லை ஆக கூடியது சஷ்டிக்கு முயற்சிக்கலாம் என்றே இருந்தது ஆனால் நீங்கள் மட்டும்  இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்து  தமிழர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் மீன் கொள்ளைகாரர்களை ஆதரிப்பதற்காக  தமிழ்நாட்டு மீன் கொள்ளையர்களை தடுத்தால் இந்தியா கவலை அடைந்துவிடும் இந்தியாவை திட்டிக்கொண்டு  பகைத்துக்கொண்டு சுயாட்சி தமிழ்ஈழம் பெற முடியாது  இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான்  இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் கிடைக்கும் மீன் கொள்ளையர்களை அனுமதிக்க வேண்டும் என்று செப்டம்பர் 21 2024 வரை சொல்லி கொண்டிருந்தீர்கள். அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றதும் அவரை ஆதரிப்பதற்காக  இப்போது   தமிழ் ஈழம்  பெறமுடியாத ஒன்று  முடியாது என்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, putthan said:

குட்டிமணி இவரின்ட தலைவருக்கு (தோழர் எண்டு சொல்ல வேணும்  கண்டியளோ )தோழர் ரோகண விஜய வீராவுக்கு உடுக்க தன்னுடைய சாரத்தை கிழித்து கொடுத்தவராம் என பாடுகிற‌ யூ டியுப் தோழர்களும் உண்டு....

AKD 💪 💪💪 ❤️ ❤️ ❤️




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.