Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்!

Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Iran rockets attacked Israel says Israel defense force civilians in bomb shelter ans

Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ஆதரவு போராளி ஹெஸ்பொல்லாவை குறிவைத்து, லெபனானில் நடத்தப்பட்ட தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் எரித்து, ஈரான் இப்பொது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக உடனடியாக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாக சில மணிநேரங்களுக்கு முன்பு தகவல் கிடைத்த நிலையில், இஸ்ரேல் மீது ராக்கெட் நடத்தியுள்ளது ஈரான் என்று, இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது இஸ்ரேல் பாதுகாப்பு படை. 

அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நட்பு நாடுகளும், கடந்த ஏப்ரலில் ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலை பாதுகாக்க உதவ முன்வந்தன. இது குறித்து அமெரிக்க அதிகாரி மேலும் பேசியபோது. "இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் நேரடி இராணுவ தாக்குதல், ஈரானுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தனர்.

நஸ்ரல்லாவின் கொலை இஸ்ரேலின் "அழிவை" கொண்டு வரும் என்று ஈரான் கூறியது, ஆனால் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் தெஹ்ரான், இஸ்ரேலை எதிர்கொள்ள ராணுவ வீரர்களை அனுப்பாது என்று கூறியது கூறியது. தெஹ்ரான் தான் ஈரான் நாட்டின் தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் இப்பொது ஈரான், இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதல், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் பிற உலக வல்லரசுகள் தவிர்க்க விரும்புவதாக கூறியுள்ள பரந்த பிராந்திய மோதலின் அச்சத்தை கடுமையாக கூட்டும் என்றும் நம்பப்படுகிறது. ஜனாதிபதி ஜோ பிடன் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், வடக்கு இஸ்ரேலைத் தாக்கும் ஹெஸ்பொல்லாவின் திறனைத் தகர்க்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை அமெரிக்கா எச்சரிக்கையுடன் ஆதரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன் வெளியிட்ட செய்தியில் "மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக" அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். "இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது" என்று பிளிங்கன் செவ்வாய்க் கிழமை காலை தனது மொராக்கோ பிரதிநிதி நாசர் பொரிட்டாவை வெளியுறவுத்துறையில் சந்தித்தபோது கூறினார். வாஷிங்டன் திங்களன்று மத்திய கிழக்கில் தனது படைகளை "சில ஆயிரம்" துருப்புக்களால் உயர்த்தி வருவதாகவும், புதிய பிரிவுகளைக் கொண்டு வருவதன் மூலம் ஏற்கனவே உள்ள மற்றவர்களை விரிவுபடுத்துவதாகவும் கூறியது.

 

 

https://tamil.asianetnews.com/world/iran-rockets-attacked-israel-says-israel-defense-force-civilians-in-bomb-shelter-ans-skosu7

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிற்பகல் இரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை அது கொடுத்தே ஆகவேண்டும் என இஸ்ரேல் பிரதமர் எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருக்கின்றார்.

https://x.com/IsraeliPM/status/1841234709398855899

  • கருத்துக்கள உறவுகள்

இரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேலுடன் அமெரிக்கா ஆலோசனை - கச்சா எண்ணெய் விலை உயர்வு

இஸ்ரேல்- இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் மீது இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மத்திய கிழக்கில் சமீப நாட்களாக எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதல் நிஜமாகியுள்ளது. இஸ்ரேல் மீது இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலுக்கு முன்பே எச்சரித்திருந்த அமெரிக்கா, இரானின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு உதவி புரிந்ததாக கூறியுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட படியே இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் இனி என்ன செய்யப் போகிறது? மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க ராணுவம் என்ன செய்கிறது? மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதற்றம் உலகளாவிய அளவில், குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?

இரண்டாவது தாக்குதல் இன்னும் மோசமாக இருக்கும் - இரான்

பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதை இரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதலில் ஈடுபட்டால் மேலும் தாக்குதல் தொடுப்போம் என்று இரான் மிரட்டல் விடுத்துள்ளது. இது இரான் புரட்சிகர காவல் படையின் முதல் தாக்குதல் என்று இரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கமிட்டி தலைவர் இப்ராகிம் அஸிஸி தெரிவித்துள்ளார்.

"இஸ்ரேலின் ராணுவ மையங்கள் மற்றும் தளவாடங்களே எங்கள் இலக்காக இருந்தன. கணிப்புகள் ஒருவேளை தவறானால் பொதுமக்களும் கூட பாதிப்புகளை சந்திக்கும் நிலையும் வரலாம். இஸ்ரேல் மீண்டும் தவறிழைத்தால் அடுத்தக்கட்டமாக இரண்டாவதாக நடத்தப்படும் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

இஸ்ரேல்- இரான்
படக்குறிப்பு, இரான் பயன்படுத்திய பேலிஸ்டிக் ஏவுகணைகள் தான் என்று ஏவுகணை பாதுகாப்புத் திட்ட இயக்குநர் தாமஸ் கராகோவும் கூறியுள்ளார்

பேலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் பயன்படுத்தியதா?

இஸ்ரேலை தாக்க இரான் எந்தவிதமான ஏவுகணைகளை பயன்படுத்தியது என்பது இன்னும் தெளிவாகவில்லை. அந்த ஏவுகணைகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை அறிந்து கொள்ள ராணுவ நிபுணர்களிடம் பிபிசி வெரிஃபை குழு பேசியது.

ஆயுத ஆராய்ச்சி சேவை என்ற புலனாய்வு கன்சல்டன்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளரான பேட்ரிக் சென்ஃப்ட் இதுகுறித்து பிபிசி வெரிஃபையிடம் பேசினார். ஏவுகணை சிதைவுகளை பார்க்கையில், இரான் இந்த தாக்குதலுக்கு பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தியிருப்பது போல் தெரிகிறது என்று அவர் கூறினார்.

குரூயிஸ் ஏவுகணைகளைக் காட்டிலும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை இலக்கை மிக வேகமாக தாக்கக் கூடியவை என்றார் அவர்.

இரான் பயன்படுத்திய பேலிஸ்டிக் ஏவுகணைகள் தான் என்று ஏவுகணை பாதுகாப்புத் திட்ட இயக்குநர் தாமஸ் கராகோவும் கூறியுள்ளார்.

 

200 ஏவுகணைகளை இரான் ஏவியது - அமெரிக்கா

இஸ்ரேல்- இரான்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜேக் சுல்லிவன், இரானின் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக கூறினார்

இரான் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி செலுத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜேக் சுல்லிவன், இரானின் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக கூறினார். இஸ்ரேலிய விமானங்களுக்கோ, முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உடைமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்படாத வகையில், இரானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டதாக தோன்றுவதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலை நோக்கி இரான் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியதாகவும், அவற்றை வழியிலேயே இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்க கடற்படை உறுதுணையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறிய அவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் அவர்கள் தெரிந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசித்து வருவதாகக் கூறிய அவர், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க குடிமக்களை உடனே வெளியேறுமாறு தங்கள் நாடு எந்தவொரு அறிவுறுத்தல்களையும் விடுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தரப்பில் பதிலடி தரப்படுமா என்ற கேள்விக்கு சுல்லிவன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பேலிஸ்டிக் ஏவுகணை பயன்பாட்டை ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரலில் இரான் நடத்திய தாக்குதலைப் போல இது இரு மடங்கு அதிகம் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர், இரானின் ஏவுகணைகளை வழியிலேயே தாக்கி அழிக்கும் பொருட்டு அமெரிக்காவின் 2 நாசகாரி கப்பல்கள் சுமார் ஒரு டஜன் ஏவுகணைகளை செலுத்தியதாக கூறினார்.

இரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல்- இரான்

பட மூலாதாரம்,X/ @NETANYAHU

படக்குறிப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை" என்றார்

இரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாகவும், அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இரான் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை" என்றார்.

"இரான் அதனை புரிந்து கொள்ளும். எங்களை யார் தாக்கினாலும் நாங்கள் திருப்பித் தாக்குவோம். நாங்களே வகுத்துக் கொண்ட அந்த விதிகளின் கீழ் செயல்பட நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

 

இரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் உறுதி

இஸ்ரேலிய விமானப்படை இன்றிரவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வலுவான தாக்குதலை முன்னெடுக்கும் என்று இஸ்ரேல் ராணுவத்தின் செயதி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரித்துளளார்.

இரான் செலுத்திய ஏவுகணைகளை தடுப்பதில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

"இரானின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இன்றிரவு இரான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சரியான தொடர் விளைவுகள் இருக்கும்" என்றார் அவர்.

 

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

இஸ்ரேல்- இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74.40 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74.40 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் நடுவே கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்தது.

அமெரிக்காவின் ஆற்றல் தகவல் ஆணைய தரவுகளின்படி, உலகின் ஏழாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இரான் உள்ளது. ஓபெக் எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராகவும் இரான் இருக்கிறது.

அந்த பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இரான் அருகேயுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து தடைபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஓமன் - இரான் இடையே உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே உலக வர்த்தகத்தில் 25 சதவீத கச்சா எண்ணெய் சப்ளையாகிறது.

ஓபெக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், இராக் ஆகிய நாடுகளும் கூட ஹோர்முஸ் நீரிணை வழியேதான் கச்சா எண்ணெயை உலக சந்தைக்கு கொண்டு வருகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

F240414TN03-1-1320x880-1.jpg?resize=750,

ஈரான் ஏவுகணை தாக்குதல்; இஸ்ரேலுக்கு உதவிய அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள்!

செவ்வாய்கிழமை (01) இரவு இஸ்ரேல் மீது ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் ஐக்கிய இராச்சியத்தின் ஆயுதப்படைகள் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healey) உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரிட்டிஷ் படைகள் இன்று மாலை (நேற்று) மத்திய கிழக்கில் மேலும் தீவிரமடையும் தடுக்கும் முயற்சிகளில் தங்கள் பங்கைக் கொண்டுள்ளன என்று ஹீலி ஒரு அறிக்கையில் கூறினார்.

பதில் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பிரிட்டிஷ் பணியாளர்களுக்கும் அவர்களின் தைரியம் மற்றும் தொழில்முறைக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவ‍ேளை, செவ்வாயன்று இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகளின் சரமாரியான தாக்குதலின் மீது அமெரிக்கா பல இடைமறிப்பு தாக்குதல்களை நடத்தியது என்று பென்டகன் கூறுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது வழிகாட்டுதலின் பேரில் இஸ்ரேலின் பாதுகாப்பை அமெரிக்கா “தீவிரமாக” ஆதரிப்பதாக கூறினார்.

இஸ்ரேல் மீதான ஈரானின் நேரடித் தாக்குதல் இரண்டு பிராந்திய சக்திகளுக்கு இடையிலான மோதலின் அண்மைய நடவடிக்கையாகும்.

இதற்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.

https://athavannews.com/2024/1402121

  • கருத்துக்கள உறவுகள்

ஈசல்கள் போல பாய்ந்து வந்த ஈரானின் ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகள்! திருப்பி அடிக்கத் தயராகும் இஸ்ரேல்!!

ஒலியை விட 5 மடங்கு வேகமாகப் பணிக்கக்கூடிய தனது 'பட்டா ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகளையே இஸ்ரேல் மீது ஈரான் ஏவியதாக ஈரான் அரச ஊடகங்கள் கூறுகின்றன.

எதற்காக ஈரான் நேற்றைய தினம் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தது?

ஈரானின் தாக்குதல் எந்த அளவுக்கு இஸ்ரேலைப் பாதித்து இருக்கின்றது?

இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டதால் இராணுவ ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் ஈரான் அடைந்துள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?

https://tamilwin.com/article/is-iran-use-hypersonic-ballistic-missiles-1727850693#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதன் அனைத்து உட்கட்டமைப்புகளையும் தாக்குவோம் - ஈரான்

02 OCT, 2024 | 10:41 AM
image

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அதன் அனைத்து உட்கட்டமைப்புகளையும் இலக்குவைப்போம்  என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் ஆயுதப்படையின் கூட்டு தளபதி மேஜர் ஜெனரல் முகமட் பகேரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் இந்த குற்றங்களை தொடர முயன்றால் எங்கள் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஏதாவது செய்ய முயன்றால் இன்றிரவு நடவடிக்கையை மேலும் பல மடங்கு வலுவான விதத்தில் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் அனைத்து உட்கட்டமைப்பும் இலக்குவைக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் புரட்சிகர காவலர் படையணி இன்றைய ஏவுகணை தாக்குதலை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195295

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாலி said:

இன்று பிற்பகல் இரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை அது கொடுத்தே ஆகவேண்டும் என இஸ்ரேல் பிரதமர் எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருக்கின்றார்.

https://x.com/IsraeliPM/status/1841234709398855899

 

என்ன சார் நெத்தன்யாகுவை எல்லாம் எக்ஸ் தளத்தில் பின் தொடர்கின்றீர்கள். நீங்கள் ரொம்ப பயங்கரமான ஆள்தான் போல.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கபெற்ற உத்தமர் இவர்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாலி said:

இன்று பிற்பகல் இரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை அது கொடுத்தே ஆகவேண்டும் என இஸ்ரேல் பிரதமர் எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருக்கின்றார்.

https://x.com/IsraeliPM/status/1841234709398855899

நெத்த‌னியாகு நேற்று த‌லை தெரிக்க‌ ஓடின‌ காணொளிய‌ பார்த்தீங்க‌ளா.........................நேற்றையான் ஈரானின் அடி பெடிய‌ அடி 

 

ஈரான் ஏவிய‌ மிசேல்க‌ள் இஸ்ரேலுக்குள் ப‌ல‌ இட‌ங்க‌ளில் வெடிச்சு இருக்கு....................ஜ‌டோம் ஈரானின் புதுவ‌கையான‌ மிசேலிட‌ம் ம‌ண்டியிட்டுட்டு போல் இருக்கு ஹா ஹா😁.............................

இப்படியான ஒரு வாய்ப்பிற்காக இஸ்ரேல் எத்தனை வருடங்கள் தவமிருந்தது. 

ஈரானின் அணு உலைகள், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், மின்னிலையங்கள் போன்றவற்றை இஸ்ரேல் தாக்கி ஈரானின் பொருளாதாரத்தை நாசமாக்கும் வாய்ப்பை ஈரானே இஸ்ரேலுக்கு கொடுத்து விட்டது.

முல்லாக்களின் அட்டகாசம் கன நாட்களுக்கு தொடரப் போவதில்லை.

அமெரிக்க தேர்தலில் தீவிர வலதுசாரியான ட்றம்ப் வந்தால் நிலைமை இன்னும் மோசமாகும் ஈரானுக்கு. தன் முதலாவது ஆட்சியிலேயே ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து அவர்களின் அணு விஞ்ஞானியை கொன்று இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இப்படியான ஒரு வாய்ப்பிற்காக இஸ்ரேல் எத்தனை வருடங்கள் தவமிருந்தது. 

ஈரானின் அணு உலைகள், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், மின்னிலையங்கள் போன்றவற்றை இஸ்ரேல் தாக்கி ஈரானின் பொருளாதாரத்தை நாசமாக்கும் வாய்ப்பை ஈரானே இஸ்ரேலுக்கு கொடுத்து விட்டது.

முல்லாக்களின் அட்டகாசம் கன நாட்களுக்கு தொடரப் போவதில்லை.

அமெரிக்க தேர்தலில் தீவிர வலதுசாரியான ட்றம்ப் வந்தால் நிலைமை இன்னும் மோசமாகும் ஈரானுக்கு. தன் முதலாவது ஆட்சியிலேயே ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து அவர்களின் அணு விஞ்ஞானியை கொன்று இருந்தார்.

நான் நினைக்கிறேன் இனி மத்திய கிழக்கில் ஒரேயொரு ராஜா தான். 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வீரப் பையன்26 said:

நெத்த‌னியாகு நேற்று த‌லை தெரிக்க‌ ஓடின‌ காணொளிய‌ பார்த்தீங்க‌ளா.........................நேற்றையான் ஈரானின் அடி பெடிய‌ அடி 

 

ஈரான் ஏவிய‌ மிசேல்க‌ள் இஸ்ரேலுக்குள் ப‌ல‌ இட‌ங்க‌ளில் வெடிச்சு இருக்கு....................ஜ‌டோம் ஈரானின் புதுவ‌கையான‌ மிசேலிட‌ம் ம‌ண்டியிட்டுட்டு போல் இருக்கு ஹா ஹா😁.............................

கொஞ்சம் வெய்ட்பண்ணுங்க பையன் ச்தர்।😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஈரானின் அணு உலைகள், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், மின்னிலையங்கள் போன்றவற்றை இஸ்ரேல் தாக்கி ஈரானின் பொருளாதாரத்தை நாசமாக்கும் வாய்ப்பை ஈரானே இஸ்ரேலுக்கு கொடுத்து விட்டது.

அப்படி நடந்தால் ஈரானின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகள் முதலாவது சீனா இந்தியா போன்றவை பலத்த அடி வாங்கும் அதே நேரம் நம்ம ஊரு புது ராசாவும் சீரோஆகி விடுவார்  பெற்றோல் விலை குறையுது என்று சொல்லி முடிக்கையில் திரும்பவும் விலைகள் ஆகாசத்துக்கு பறக்க போகுது .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

அப்படி நடந்தால் ஈரானின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகள் முதலாவது சீனா இந்தியா போன்றவை பலத்த அடி வாங்கும் அதே நேரம் நம்ம ஊரு புது ராசாவும் சீரோஆகி விடுவார்  பெற்றோல் விலை குறையுது என்று சொல்லி முடிக்கையில் திரும்பவும் விலைகள் ஆகாசத்துக்கு பறக்க போகுது .

இதெல்லாம் தெரிந்தது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் தாக்குதலை கண்டிக்க தவறிய ஐநா தங்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என்று இஸ்ரேல் அறிவித்து உள்ளது .

https://www.aljazeera.com/news/2024/10/2/israels-katz-bars-un-chief-from-country-over-iran-attack-response

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் பக்கமும் ஒரு நியாயம் இருக்குது தானே.......... தாங்களும் அந்த இடத்தில் ஒரு சண்டியர் என்று அவர்கள் இருந்து கொண்டு, கையாட்களும் வைத்துக் கொண்டு இருக்க,  இஸ்ரேல் அவர்களின் வீடு புகுந்து ஈரானின் கையாட்களை போட்டுத் தள்ளியது ஈரானுக்கு கொஞ்சம் மன உளைச்சலை கொடுத்து இருக்கும் தானே.......

அந்த மன உளைச்சல் தீர அணுகுண்டு செய்யப் போகின்றோம் என்று ஈரான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விட்டிருக்கலாம், ஈராக்கிற்கு மெல்லிசா அடிச்சிருக்கலாம்.......... இப்படி ஏதாவது செய்து நிலைமையை ஒப்பேற்றி இருக்கலாம். அதை விட்டுவிட்டு ஏவுகணைகளை இஸ்ரேலிற்குள்ளேயே விடுவதா...........

இஸ்ரேல் சில நிறைபோதையில் நடக்கும் மனிதர்கள் போல......... போதை உச்சிக்கு ஏறியதும் நேராக பாரிலிருந்து போய் எதிரிப் பங்காளியின் வீட்டின் கதவைத் தட்டுவார்கள்......... நமக்கேன் வம்பு என்று ஊரும் ஒதுங்கிவிடும்.............    

** இப்ப கொஞ்ச நாளா 'பார்' என்ற சொல் எங்கே போனாலும் பின்னாலேயே வந்து கொண்டிருக்கின்றது.............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஏன் உள்ளே வந்தது?

காசாவிற்கு எதிரான போரில், ஹமாஸிற்கு, ஈரான் மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக இஸ்ரேல் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தது. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குல் நடத்தியது. இதில், ஈரானை சேர்ந்த 2 அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததால், ஈரான் கடுங்கோபம் அடைந்தது.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த ஈரான், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி இஸ்ரேலை நோக்கி 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. இதன் மூலம், தங்களை சீண்டினால் நேரடியாக தாக்குவோம் என ஈரான் சுட்டிக்காட்டிய நிலையில், சிறிது நாட்கள் இஸ்ரேல் அமைதி காத்தது. ஆனால், கடந்த மே மாதம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இது பல்வேறு சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகளை எழுப்பியது.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசஸ்கியான் பொறுப்பேற்ற நிலையில், அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர்கள் டெஹ்ரானில் கொல்லப்பட்டனர். அதற்கு சில மணிநேரத்திற்கு, முன்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஃபுஆத் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டார்.

இதன் மூலம், 24 மணிநேரத்தில், ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவரையும், லெபனானில் ஹிஸ்புல்லா தலைவரையும் தாக்கி இஸ்ரேல் தனது பலத்தை காட்டியது.
இதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்-ஹிஸ்புல்லா இடையே தாக்குதல் பல்வேறு வகையில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.

குறிப்பாக, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள் வெடித்தது, வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடுத்தது என இஸ்ரேல் உக்கிரமாக இறங்கியது. இந்நிலையில், கடந்த வாரம் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையின் தளபதி அபாஸ் நில்ஃபோராஷன் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா லெபனானில் கொல்லப்பட்டனர்.

இதனால் அத்திரம் அடைந்த ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான அயதோல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தங்களது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவது அரசியல் ரீதியான அவமானமாக கருதியதால், ஈரான் தாக்குதலை தொடுத்துள்ளதாக பிபிசி தமிழ் முன்னாள் ஆசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அடிப்படை வாதத்தில் இருந்து மிதவாத போக்கிற்கு மாறும் ஈரானை, இஸ்ரேல் மறைமுகமாக சீண்டி போரின் பாதைக்கு கொண்டு வந்ததாக பேராசிரியர் கிளாட்சன் குற்றம்சாட்டியுள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட போது, ஈரான் சிறிது நாட்கள் அமைதியாக இருந்ததால், இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இதே நிலை, ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட பிறகும் இருக்கக்கூடாது என்பதால், ஈரான் உடனடியாக நேரடி தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக கருதப்படுகிறது. ஹமாஸிற்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய போர் தற்போது ஈரான் பக்கம் திரும்பியதால், அதன் போக்கை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

https://thinakkural.lk/article/310261

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.