Jump to content

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதலை தொடர்ந்தது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலகத் தலைவர்கள் பலர் எச்சரித்தனர். இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்து ஈரானுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க தீவிர ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர் ஈரானுக்கு எதிரான எவ்வித தாக்குதலிலும் தாங்கள் இணையப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் மக்கள் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்ததுடன், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமினிடமும் தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை கேட்டறிந்தார். மேலும், போர்ப் பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனும் தொலைப்பேசியில் ஸ்டார்மர் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310282

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த‌ ப‌ய‌ம் இருக்க‌னும்...................

 

யாழில் வாலி அண்ண‌ ஈரான் செத்த‌ கிளி என்று ந‌க்க‌ல் அடித்தார்

 

ஈரானின் ஒரு அடியோட‌ பொத்திட்டின‌ம்

 

இவ‌ர்க‌ள் ப‌ய‌ப்பிடுவ‌து ஈரான் மீது கை வைத்தால் பெற்றோலுக்கு த‌ட்டு பாடு வ‌ரும் விலை ஏற்ற‌ம் கூடும் ........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்காறன் போட்டு தாக்கப்போறான். இவர்கள் அந்த அழிவில் தங்கள் பங்கு இல்லை என்று பின்வாங்குவதே அழிவு எப்படி இருக்க போகிறது என்பதற்கு சான்று. ஈரானை போற்றுகிறவர்கள் பார்த்து நடவுங்கள். உலகம் அதிரப்போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மிசேல‌ ஏவி இர‌ண்டு நாள் ஆக‌ போகுது

இஸ்ரேல் பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்க‌னுக்கு அடி ப‌னிந்து அமைதியாய் இருக்கின‌ம்

ஈரான் மீது இஸ்ரேல் கை வைத்தால் 200மிசேலுக்கு ப‌தில் 500 மிசேல் ஒரே நேர‌த்தில் இஸ்ரேல் எங்கும் வ‌ந்து விழும்

 

ஈரானின் மிசேல் தாக்குத‌லில் இஸ்ரேல் விமான‌த்த‌ள‌ம் உடைந்து விட்ட‌து

ச‌ட்லையிட் ப‌ட‌ம் மூல‌ம் உண்மை வெளியில் வ‌ந்து விட்ட‌து...................மொசாட் இருக்கும் இட‌ங்க‌ளும் சேத‌ம்😁...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் மற்றும் பிரான்சின் இந்த முடிவுகள் புரிந்துகொள்ளக்கூடியவை தான். இருவருக்கும் உள்நாட்டில் பலஸ்தீனாவுக்கு ஆதரவான குடியேறிகள் அதிகம். இது உள்நாட்டிற்குள் தேவையில்லாத கலகங்களை கொண்டுவரும். 
ஏற்கனவே 1008 பிரச்சனை. இதுக்குள்ள எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று விலகியிருப்பார்கள். இந்த முடிவு தான் ஜெர்மனியும் எடுக்கும் என்று நம்பலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஊர்க்காவலன் said:

பிரிட்டன் மற்றும் பிரான்சின் இந்த முடிவுகள் புரிந்துகொள்ளக்கூடியவை தான். இருவருக்கும் உள்நாட்டில் பலஸ்தீனாவுக்கு ஆதரவான குடியேறிகள் அதிகம். இது உள்நாட்டிற்குள் தேவையில்லாத கலகங்களை கொண்டுவரும். 
ஏற்கனவே 1008 பிரச்சனை. இதுக்குள்ள எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று விலகியிருப்பார்கள். இந்த முடிவு தான் ஜெர்மனியும் எடுக்கும் என்று நம்பலாம். 

இவ‌ர்க‌ள் தேவை இல்லாம‌ மூக்கை நுழைக்காட்டி இஸ்ரேல் தானாக‌ திருந்தும்.......................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர்க‌ள் தேவை இல்லாம‌ மூக்கை நுழைக்காட்டி இஸ்ரேல் தானாக‌ திருந்தும்.......................

 

 

ஈரானிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுக்கவிருக்கின்ற நாடுகளை நினைத்து தான் இஸ்ரேல் தடுமாறுகிறது என்று நினைக்கிறன். அதே வேளை இஸ்ரேலிற்கு அமெரிக்காவை தவிர வேறொரு  நாடும் ஆக்கபூர்வமான ஆதரவை வெளிப்படுத்தவில்லை ஐ.நா. உட்பட.  

வெறுமனே ஈரானும் இஸ்ரேலும் ஒன்றோடு ஒன்று மோதுமாயின் ஈரானிற்கு சக்கை அடி விழும். இஸ்ரேலின் தொழில்நுட்பம் அப்படி. 

Edited by ஊர்க்காவலன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

இப்படியான "திட்ட வட்டமான அறிவிப்பு" எங்கே வெளியிடப் பட்டதாம்? யாராவது இணைப்பைத் தர முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஊர்க்காவலன் said:

ஈரானிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுக்கவிருக்கின்ற நாடுகளை நினைத்து தான் இஸ்ரேல் தடுமாறுகிறது என்று நினைக்கிறன். அதே வேளை இஸ்ரேலிற்கு அமெரிக்காவை தவிர வேறொரு  நாடும் ஆக்கபூர்வமான ஆதரவை வெளிப்படுத்தவில்லை ஐ.நா. உட்பட.  

வெறுமனே ஈரானும் இஸ்ரேலும் ஒன்றோடு ஒன்று மோதுமாயின் ஈரானிற்கு சக்கை அடி விழும். இஸ்ரேலின் தொழில்நுட்பம் அப்படி. 

அவேன்ட‌ தொழிநுட்ப‌த்தை ஜ‌டோம்மை தான்டி போய் தான் இஸ்ரேலில் ஈரான் ஏவிய‌ மிசேல்க‌ள் விழுந்து வெடிச்ச‌து

 

ஈரான் ம‌ட்டும் தொழிநுட்ப‌த்தில் வ‌ள‌ர‌ வில்லையா......................ஈரானால் அணுகுண்டு செய்யும் திற‌மை அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் போது ஏன் அமெரிக்கா குறுக்க‌ ம‌றுக்க‌ போய் ஈரான் அணுகுண்டு செய்ய‌ கூடாது என்று ம‌ண்டியிடுகின‌ம்.....................................

 

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேர‌டி மோத‌ல் வ‌ந்தால் இஸ்ரேலும் பெருத்த‌ அழிவை ச‌ந்திக்கும்

 

போன‌ வ‌ருட‌ம் இஸ்ரேல் அர‌சிய‌ல் வாதி சொல்ல‌ வில்லையா அணுகுண்டு வீச‌னும் என்று.....................கோழைக‌ள் தான் அணுகுண்டை கையில் எடுப்பார்க‌ள்😁..................................

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவேன்ட‌ தொழிநுட்ப‌த்தை ஜ‌டோம்மை தான்டி போய் தான் இஸ்ரேலில் ஈரான் ஏவிய‌ மிசேல்க‌ள் விழுந்து வெடிச்ச‌து   ஈரான் ம‌ட்டும் தொழிநுட்ப‌த்தில் வ‌ள‌ர‌ வில்லையா......................ஈரானால் அணுகுண்டு செய்யும் திற‌மை அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் போது ஏன் அமெரிக்கா குறுக்க‌ ம‌றுக்க‌ போய் ஈரான் அணுகுண்டு செய்ய‌ கூடாது என்று ம‌ண்டியிடுகின‌ம்.....................................   ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேர‌டி மோத‌ல் வ‌ந்தால் இஸ்ரேலும் பெருத்த‌ அழிவை ச‌ந்திக்கும்   போன‌ வ‌ருட‌ம் இஸ்ரேல் அர‌சிய‌ல் வாதி சொல்ல‌ வில்லையா அணுகுண்டு வீச‌னும் என்று.....................கோழைக‌ள் தான் அணுகுண்டை கையில் எடுப்பார்க‌ள்😁..................................
    • The Sun/Son shines                                                                                                        -  சுப.சோமசுந்தரம்                  திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது தொடர்பாக எனது எண்ணவோட்டத்தைப் பதிவு செய்ய விழைவு. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வோ, என்னவோ ! எனவே பெரிய அளவில் எவ்விதச் சலசலப்பும் பொதுவெளியில் நிகழவில்லை எனலாம் - ஏதோ ஒன்றிரண்டு எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமது வயிற்றெரிச்சலைக் கொட்டியது தவிர. அதுவும் இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது ஏதோ இதற்கு முன் நிகழாத புதுமை போல.                 திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பொதுவாக வாரிசு அரசியலில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். அது ஒரு முதிர்ச்சியற்ற ஜனநாயகம் என்பதையே பிரதிபலிப்பதாக எண்ணுபவன் நான். அந்த முதிர்ச்சியின்மை அரசியல்வாதிகள் சார்ந்தது என்பதை விட மக்கள் சார்ந்தது என்பதுவே சாலப் பொருத்தம். ஒரு மருத்துவரின் மகனோ மகளோ மருத்துவர் ஆவதில் எனக்கு மாறுபாடு இல்லை. அதே போலவே ஒரு ஆசிரியருக்கும் இன்ன பிற தொழில் முனைவோருக்கும். இவ்வளவு ஏன், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தீவிர அரசியலில் இறங்குவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் ஒரு தலைமை மருத்துவரின் மகன் அல்லது மகள் மருத்துவரான கையோடு எடுத்த எடுப்பில் தலைமை மருத்துவர் ஆக்கப்படுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றோ, அவ்வாறே ஒரு ஆட்சியாளரின் மகன் அல்லது மகள் எத்தனையோ காலம் கொள்கை பிடிப்புடன் அக்கட்சியில் அல்லது ஆட்சியில் பணியாற்றியோரை ஓரங்கட்டி ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்படுவது ஏற்புடையதன்று. இவை எல்லாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகத்தில், அரசியல் முதிர்ச்சி பெற்ற மக்கள் சமூகத்தில், கொள்கைப் பிடிப்புடன் முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு கட்சிக்குப் பொருந்தி வருவது. இன்றைய அரசியல் சூழலில் நான் முன்னர் குறிப்பிட்ட பண்பட்ட அரசியல் பொருந்தி வருமா என்பது ஐயப்பாடே !                  திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டினை அநேகமாக அத்துணைத் துறைகளிலும் முன்னேற்றிக் காட்டியது தமிழ் நிலத்திற்கான பேறு. திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பெருகியதாகவும், மாநிலம் சீர்கேடு அடைந்ததாகவும் மாற்றார் கூக்குரலிடலாம். பூமிதானில் யாங்கணும் துலங்கிய ஊழல் இந்தியத் துணைக்கண்டத்தில் பல்கிப் பெருகியமை உள்ளங்கை நெல்லிக்கனி. இதனால் எல்லாம் ஊழலை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்பது ஒரு புறம். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சீரழிந்ததாகச் சொல்வதெல்லாம் முழுப் பொய் அன்றி வேறென்ன ? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவ்விருவரையும் சிறந்த வழிகாட்டிகளாக எண்ணும் நான் பெரிய அளவில் திமுக வின் ஆதரவாளன் என்று சொல்வதற்கில்லை. எக்காலத்திலும் அதிமுகவின் ஆதரவாளனாய் இருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. இருப்பினும் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார், தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு வகையில் நன்றிக் கடன் பட்டுள்ளேன். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களாகத் தேசியக் கட்சி எதுவும் தமிழ் நிலத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்வதைக் கனவிலும் நினைக்க முடியாமல் செய்தார்களே ! தேசியக் கட்சிகள் இங்கு ஆட்சி செய்வதில் அப்படி என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் வந்தால் நான் தேசியம் எனும் நீரோட்டத்தில் கரைய வேண்டி இருக்குமே ! தேசிய நீரோட்டத்தில் நீந்துவது ஏற்படைத்து. கரைவதை எங்ஙனம் ஏற்பது ? நான் ஏன் எனது மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழந்து இந்தியன் எனும் ஒற்றைத் தன்மையில் நிற்க வேண்டும் ? உலக அரங்கில் பன்மைத்துவம்தானே இந்தியத் திருநாட்டின் தனித்துவமாக இருக்க முடியும் ? 'ஒற்றுமை உன்னதம், ஓர்மை பாசிசம்' என்பதே இந்திய அரசியலமைப்பு நமக்குச் சொல்லித் தருவது; உலகுக்கும் சொல்வது. வேற்றுமையிலேயே ஒற்றுமையை நிலை நாட்டுவதில் திமுகவும் அதிமுகவும் தம் பங்கினை நெடுங்காலம் செவ்வனே நிறைவேற்றின. ஆனால் அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் அனைத்து அணியினரும் தங்கள் சுயநலம் சார்ந்து ஒரு பாசிச அரசிடம் தம்மையும் நம்மையும் அடகு வைப்பதிலேயே குறியாய் இருப்பதாய்த் தெரிகிறது. இத்தகைய சூழலில் மதவாத, வகுப்புவாத பாசிசத்திடமிருந்து நம்மைக் காக்க மக்கள் ஆதரவுடன் உள்ள ஒரே கட்சி - நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் - திமுக என்றே தோன்றுகிறது. எனவே திமுக மேலும் உரம் பெற்றுத் திகழ்வது - அச்சங்கிலித் தொடர் தற்போது பாதகமின்றித் தொடர்வது -  தமிழினத்தைப் பொறுத்தமட்டில் காலத்தின் கட்டாயமாகிறது. அதனைத் தொடர திமுகவில் வேறு தலைவர்கள் இல்லையா என்ற கேள்விக்கு, மக்கள் ஆதரவு பெற்றோர் வேறு இல்லை என்று ஆணித்தரமாய்ச் சொல்வதைத் தவிர வேறு வழி, ஒளி தெரியவில்லையே ! தோழமைக் கட்சிகளில் திறமையானோர், நேர்மைத் திறமுடையோர் உண்டு. இடதுசாரிகளில் உண்டு; தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் உண்டு. ஆனால் அவர்களும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் அடிபட்டுப் போகிறார்களே ! சாதி பேதம் இன்றி அனைத்து சமூகத்தினருக்கான தலைவர் தொல்.திருமா என்றே சொல்லலாம். அவரையெல்லாம் 'வையத் தலைமை கொள்' என்று அழைப்பதற்குத் தமிழ் மக்கள் தம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த நிதர்சனங்களைப் புரிந்து, மற்றுப்பற்று இல்லாத மக்கட் பற்றாளராய் தொல்.திருமாவளவன் மற்றும் இடதுசாரித் தோழர்கள் தமிழ் அரசியலில் வலம் வருவது நமக்கான பேறு.                  திமுக அரசியலில் இன்று முன்னணியில் உள்ள ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி இம்மூன்று கலைஞர் கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அரசியல் முகங்களும் பண்பட்டதாகவே தோன்றுகின்றன. உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சமீபத்தில் சங்கிகள் ஓலமிட்டது பெரும் நகைப்பானது. அவர் சநாதனம் பற்றிப் பேசியது ஒரு முதிர்ந்த திராவிட அரசியலே ? வெள்ள நிவாரணம் தொடர்பாகப் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு என்ன ஏடிஎம் மெஷினா, கேட்டவுடன் பணம் கொடுக்க ?" என்று தரம் தாழ்ந்து கூறியதற்குப் பதிலடியாக உதயநிதி, "அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் ? தமிழ் மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம் ?" என்று கேட்டது கூட ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் பதிலாகவே வெளிப்படுகிறது.             எனவே சூழல்களைக் கருத்தில் கொண்டு மாற்றார்தம் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, எத்தனை குறை கொண்டிருந்தாலும் இன்றைக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் திராவிட முன்னேற்றக் கழகமே ! நம் நம்பிக்கை வானில் உள்ள ஒளிக்கீற்று உதயநிதி ஸ்டாலின் மட்டுமே ! போகிற வரை போகட்டும்; ஆகிற வரை ஆகட்டும்.              இதனை எழுதி முடித்து மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் எனக்கே நான் ஒரு திமுக காரனாகத் தோன்றுகிறேன். அதற்கு நான் என்ன செய்து தொலைக்க ?               
    • இங்கே உள்ள பலர் இன்னும் கற்காலத்தில் வாழ்வதாகத்  தெரிகிறது.  உங்கள் குடும்பங்களில் இப்படி ஒரு  சம்பவம் இடம்பெற்றால் அதை செய்தியாக்கி பத்திரிகைகளில் வலம் வர எத்தனைபேர் விரும்புவர்? 
    • இப்படியான "திட்ட வட்டமான அறிவிப்பு" எங்கே வெளியிடப் பட்டதாம்? யாராவது இணைப்பைத் தர முடியுமா?
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.