Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

75 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்றுவதற்காக பாடுபட்ட தமிழரசுக் கட்சி தற்போது தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமாக மாறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஆகியோராலேயே வடக்கு மற்றும் கிழக்கு கட்சிகள் தற்போது துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தனிநபரின் அடாவடித்தனம்

தலைமைத்துவத்தை மதிக்காமல் தாங்களே கட்சிகளை கையிலெடுத்து செயற்படும் ஒரு எதேட்சையான போக்கு கட்சிகளில் காணப்படுகின்றது.

சுமந்திரனின் எதேட்சையதிகார தனித்துவ சிந்தனையால்தான் இன்று தமிரசுக் கட்சியானது படும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, தனிநபரின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தாத தலைமை இருந்து என்ன பயன் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தமிழரசுக்கட்சியின் தற்போதைய நிலை அத்தோடு சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சாணக்கியனின் கட்சிகள் மீதான ஆதிக்கம், பாதிக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழரசுக் கட்சியில் எதிர்காலம் மாற்றம் என்பவை தொடர்பில் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு,

https://ibctamil.com/article/the-allegation-leveled-against-sumanthiran-1728471832

  • கருத்துக்கள உறவுகள்

சாதி, சமய வெறியரான, பிரதேசவாதியான இளம்பிறை எல்லாம் ஒரு ஆளென்று அவருக்கு ஒரு பேட்டி,..😏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

சாதி, சமய வெறியரான, பிரதேசவாதியான இளம்பிறை எல்லாம் ஒரு ஆளென்று அவருக்கு ஒரு பேட்டி,..😏

நல்லூர்க் கோவிலை உடைத்து மலசல கூடம் கட்ட வேண்டுமென்ற சித்தார்த் என்றவருடன் சேரந்து இயங்கிய ஒரு பெண்ணுக்கு தேர்தலில் தமிழரசின் சார்பில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சொல்கிறாரே.

முழு காணொளியையும் கேட்க விருப்பமில்லையென்றால் 8 1/2 நிமிடத்திலிருந்து கேட்கலாம்.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடுபவர்களின் அபிப்பிராயங்கள் ஏதாவது தெரியுமா ஏராளன்?

  • கருத்துக்கள உறவுகள்

சரி, அவர்களெல்லாம் பிழையானவர்கள் தாங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டியதுதானே? உண்மையை சொல்கிறவர்கள் தவறானவர்கள், தவறு செய்கிறவர்கள்தான் சரியானவர்கள். தேர்தல் முடிவுகள் எல்லோரின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும், அப்போ உங்கள் கருத்தை எழுதி சரி பிழையை விளக்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சாதி, சமய வெறியரான, பிரதேசவாதியான இளம்பிறை எல்லாம் ஒரு ஆளென்று அவருக்கு ஒரு பேட்டி,..😏

சுமந்திரனுக்கு…. வெள்ளை அடிக்க வேணும் என்றால்,
அவரைப் பற்றி கருத்து சொல்பவர்கள் மேல்… சாதி, சமய வெறியர் என்று சொல்லி திருப்திப்பட வேண்டியது தான். 😂
சுமந்திரன் “பத்தரை மாற்று தங்கம் என்று நிறுவ”… எவ்வளவு கஸ்ரப் பட வேண்டி இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

சாதி, சமய வெறியரான, பிரதேசவாதியான இளம்பிறை எல்லாம் ஒரு ஆளென்று அவருக்கு ஒரு பேட்டி,..😏

உங்களால் இளம்பிறையன். சொன்னது பிழை என்ற வாதங்களை முன் வைக்க முடியவில்லையென்றாலும் கவலையில்லை  ஆனால் இளம்பிறையன். பற்றி ய  கருத்துகள் கவலையளிக்கிறது தேவையற்றது   அவர் எப்படி இருந்தால் தான்  என்ன  ?? தமிழ் மக்களுக்கு  எந்த கவலையுமில்லை ஆனால் 70 ஆண்டுகளாக வாக்கு போட்டு உரமேற்றி வளர்த்து எடுத்த  தமிழ் மக்களின் கட்சியை தமிழரசுகட்சியை   நேற்று பிழைக்க / உழைக்க வந்தவர்கள் அழிப்பது சகிக்க முடியாது     

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

கிறிஸ்தவர் ஆகிய  தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தமிழரசு கட்சி,
ஆபிரகாம் சுமந்திரன் என்னும் கிறிஸ்தவரால் அழிக்கப் படுவது....
காலம் செய்த கோலம் தான்.
 சுமந்திரன்.... ஒறிஜினல் கோடாலி காம்பு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:
7 hours ago, Kandiah57 said:

உங்களால் இளம்பிறையன். சொன்னது பிழை என்ற வாதங்களை முன் வைக்க முடியவில்லையென்றாலும் கவலையில்லை  ஆனால் இளம்பிறையன். பற்றி ய  கருத்துகள் கவலையளிக்கிறது தேவையற்றது   அவர் எப்படி இருந்தால் தான்  என்ன  ?? தமிழ் மக்களுக்கு  எந்த கவலையுமில்லை ஆனால் 70 ஆண்டுகளாக வாக்கு போட்டு உரமேற்றி வளர்த்து எடுத்த  தமிழ் மக்களின் கட்சியை தமிழரசுகட்சியை   நேற்று பிழைக்க / உழைக்க வந்தவர்கள் அழிப்பது சகிக்க முடியாது     

கிறிஸ்தவர் ஆகிய  தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தமிழரசு கட்சி,
ஆபிரகாம் சுமந்திரன் என்னும் கிறிஸ்தவரால் அழிக்கப் படுவது....
காலம் செய்த கோலம் தான்.
 சுமந்திரன்.... ஒறிஜினல் கோடாலி காம்பு

இங்கே கேவலத்திலும் கேவலமானது சித்தார்துடன் சுற்றித் திரிந்து தமிழ்தேசியத்தையும் புலிகளையும் மேடைபோட்டு பேசிவந்த பெண்ணை தேர்தலில் களமிறக்கியிருப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கே கேவலத்திலும் கேவலமானது சித்தார்துடன் சுற்றித் திரிந்து தமிழ்தேசியத்தையும் புலிகளையும் மேடைபோட்டு பேசிவந்த பெண்ணை தேர்தலில் களமிறக்கியிருப்பது.

சித்தார்த்துடன் சுற்றித் திரிந்த பெண்ணும், சித்தார்த்தனும் தமிழரிடையே இருக்கும் சாதித் தடிப்புகளைப் பற்றிக் குறிப்பிட்ட தகவல்கள் உண்மை தானே? அவர்களது அணுகுமுறைக்கு நான் ஆதரவில்லை, ஆனால் சாதிவாதம் பற்றிய தகவல்கள் சரியானவை. சாதிவாதம் இன்னும் இருக்கிறது என்பதற்கு சாட்சியாக விளங்குபவர் தான் இந்த இளம்பிறையன். ஒரு தீவகப் பாடசாலையில் அதிபராக வேறு சாதிக்காரர் வரக் கூடாது என்று குத்தி முறிந்த தரப்பின் தலையாரி அவர், யாழிலேயே இதைப் பற்றிக் கருத்தாடியிருக்கிறோம்.

பட்டாசு ரீமின் குணம், எந்தச் சமூகக் கிருமியையும் சுமந்திரன், சாணக்கியனைத் திட்டி, புலிகளை தலையில் தூக்கி வைத்தால் உடனே நிபந்தனையின்றி ஆதரவு! இந்தக் குணத்தாலேயே மக்கள் முன்னாட்களில் தொழுநோயாளிகளைக் கண்டு ஓடியது போல விலகி ஓடுகிறார்கள், பட்டாசு ரீமிடமிருந்து😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லூர்க் கோவிலை உடைத்து மலசல கூடம் கட்ட வேண்டுமென்ற சித்தார்த் என்றவருடன் சேரந்து இயங்கிய ஒரு பெண்ணுக்கு தேர்தலில் தமிழரசின் சார்பில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சொல்கிறாரே.

முழு காணொளியையும் கேட்க விருப்பமில்லையென்றால் 8 1/2 நிமிடத்திலிருந்து கேட்கலாம்.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடுபவர்களின் அபிப்பிராயங்கள் ஏதாவது தெரியுமா ஏராளன்?

சாதி சமய வெறியர் என்கிற எனது கருத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? 

நல்லூர்க் கோவிலை உடைத்து மலசல கூடம் கட்ட வேண்டுமென்ற சித்தார்த்தின் கூற்றை என்னால் ஆதரிக்க முடியாது. 

ஆனால், சித்தார்த் தனது சாதியினர் எப்படியெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்டனர் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று கூறினார். அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? அவரது கோபத்தின் பின்னால் இருக்கும் நியாயத்தை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? 

9 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு…. வெள்ளை அடிக்க வேணும் என்றால்,
அவரைப் பற்றி கருத்து சொல்பவர்கள் மேல்… சாதி, சமய வெறியர் என்று சொல்லி திருப்திப்பட வேண்டியது தான். 😂
சுமந்திரன் “பத்தரை மாற்று தங்கம் என்று நிறுவ”… எவ்வளவு கஸ்ரப் பட வேண்டி இருக்கு. 🤣

சுமந்திரனது பிழைகளை நான் ஒருபோதும் சரியென்று வாதிட்டதில்லை. அவர் மட்டுமல்ல வேறு யாராக இருந்தாலும் பிழையைப் பிழை என்று சுட்டும் நேர்மை எனக்கு இருக்கிறது. 

ஆனால்  ஒரு சாதி  சமய வெறியர் என்பது யாழ் களத்திலுள்ள எல்லோருக்கும் அப்பட்டமாகத் தெரியும். நிலைமை அப்படி இருக்க தாங்கள்  அதை மறுப்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

உங்களால் இளம்பிறையன். சொன்னது பிழை என்ற வாதங்களை முன் வைக்க முடியவில்லையென்றாலும் கவலையில்லை  ஆனால் இளம்பிறையன். பற்றி ய  கருத்துகள் கவலையளிக்கிறது தேவையற்றது   அவர் எப்படி இருந்தால் தான்  என்ன  ?? தமிழ் மக்களுக்கு  எந்த கவலையுமில்லை ஆனால் 70 ஆண்டுகளாக வாக்கு போட்டு உரமேற்றி வளர்த்து எடுத்த  தமிழ் மக்களின் கட்சியை தமிழரசுகட்சியை   நேற்று பிழைக்க / உழைக்க வந்தவர்கள் அழிப்பது சகிக்க முடியாது     

இளம்பிறை எப்படியானவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கும் தாங்கள், சுமந்திரனில்  மட்டும் குற்றம் பிடிக்க விளைவதன் நோக்கம் என்ன? 

நீங்கள் நேர்மையானவராக இருந்தால் இருவரிலுமல்லோ பிழை காண வேண்டும்? 

ஏன்  கஸ்ரமாக இருக்கிறதா? 🤣

4 hours ago, தமிழ் சிறி said:

கிறிஸ்தவர் ஆகிய  தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தமிழரசு கட்சி,
ஆபிரகாம் சுமந்திரன் என்னும் கிறிஸ்தவரால் அழிக்கப் படுவது....
காலம் செய்த கோலம் தான்.
 சுமந்திரன்.... ஒறிஜினல் கோடாலி காம்பு.

மாற்றம் ஒன்றே மாறாதது. 🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கே கேவலத்திலும் கேவலமானது சித்தார்துடன் சுற்றித் திரிந்து தமிழ்தேசியத்தையும் புலிகளையும் மேடைபோட்டு பேசிவந்த பெண்ணை தேர்தலில் களமிறக்கியிருப்பது.

பிழையான பாதையில் இருந்து சரியான பாதைக்கு வந்தது நல்ல விடயம்தானே? 

மண்டையன் குழுவினர் நல்லவர்களாக மாறிவிட்டனர். சித்தார்த்தன், செல்வம் எல்லோரும் மாறிவிட்டனர் ஆனால் மற்றவர்கள் மாறினால் உங்களுக்குப் பிடிக்காதோ? 

தற்போதைய சூழலில்,  கருணா பிள்ளையான்  என எல்லோரும் ஒன்று சேர்ந்தால் கூட நான் அதை வரவேற்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

சித்தார்த்துடன் சுற்றித் திரிந்த பெண்ணும், சித்தார்த்தனும் தமிழரிடையே இருக்கும் சாதித் தடிப்புகளைப் பற்றிக் குறிப்பிட்ட தகவல்கள் உண்மை தானே? அவர்களது அணுகுமுறைக்கு நான் ஆதரவில்லை, ஆனால் சாதிவாதம் பற்றிய தகவல்கள் சரியானவை. சாதிவாதம் இன்னும் இருக்கிறது என்பதற்கு சாட்சியாக விளங்குபவர் தான் இந்த இளம்பிறையன். ஒரு தீவகப் பாடசாலையில் அதிபராக வேறு சாதிக்காரர் வரக் கூடாது என்று குத்தி முறிந்த தரப்பின் தலையாரி அவர், யாழிலேயே இதைப் பற்றிக் கருத்தாடியிருக்கிறோம்.

பட்டாசு ரீமின் குணம், எந்தச் சமூகக் கிருமியையும் சுமந்திரன், சாணக்கியனைத் திட்டி, புலிகளை தலையில் தூக்கி வைத்தால் உடனே நிபந்தனையின்றி ஆதரவு! இந்தக் குணத்தாலேயே மக்கள் முன்னாட்களில் தொழுநோயாளிகளைக் கண்டு ஓடியது போல விலகி ஓடுகிறார்கள், பட்டாசு ரீமிடமிருந்து😂

25 minutes ago, Kapithan said:

ஆனால், சித்தார்த் தனது சாதியினர் எப்படியெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்டனர் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று கூறினார். அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? அவரது கோபத்தின் பின்னால் இருக்கும் நியாயத்தை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? 

எனது பதின்ம வயதிலேயே சாதிக் கொடுமைக்கு எதிராக பல போராட்டங்களில் கலந்து கொண்டவன்.எனவே சாதிக் கொடுமையைப் பற்றி எனக்கு நீங்கள் சொல்லித் தரவேண்டியதில்லை.

எனது ஆதங்கமெல்லாம் பாராளுமன்றுக்கு போவதற்கு ஒரு தகுதி வேண்டும்.ஒரு படித்த உயர்ந்த நிலையில் உலகமே மதிக்கும் ஒரு சட்டத்தரணி சுமந்திரன் தனது கட்சியில் பல பெண் தொண்டர்கள் இருக்கும் போது அவர்கள் யாரையுமே கண்டு கொள்ளாமல் நாகரீகமில்லாமல் எதிராக களமாடிய ஒருவரை எப்படி வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்.

இளம்பிறையன் சாதிக்காக குரல் கொடுக்கிறவர் என்றால் வாருங்கள் உங்களுடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

ஏன்  கஸ்ரமாக இருக்கிறதா? 🤣

இல்லை  இரண்டும்   சமன் இல்லை  சாதி வெறி ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது  அதாவது ஒவ்வொரு சாதியினரும்  தங்களுக்கு கீழே  சாதி இருக்க வேண்டும் என்று விரும்பும் அதேவேளை  தங்களுக்கு மேலே சாதி இருக்ககூடாது என விரும்புகிறார்கள்   

எனது பாடசாலை நண்பன் ஒருவனை  என்னை விட   குறைந்த சாதியைச் சேர்ந்தவனை கேட்டேன்   அவனுக்கு எனது சாதி பெண்ணை திருமணம் செய்ய விருப்பம்    நான் சொன்னேன் அவள் உன்னையும் விட சாதி கூட என்றும்   அவன் இந்த சாதி அளிக்கப்பட வேண்டும் என்றான்  

நான் கூறினேன் அது சரி தான்   உன்னால் உனக்கு குறைந்த சாதியில் திருமணம் செய்ய முடியுமா??  அவன் உடனே   மறுத்து விட்டான். மட்டுமல்ல தனக்கு சாதிக்கு குறைத்த சாதிகள் இருக்கலாம் அதில் பிரச்சனை இல்லை என்றான் 

எப்படி சாதியை அழிக்கலாம்  ?? சாதிகள் பல உண்டு”   அவை படிப்படியாக அழிகின்றன. ஆனால் சிலர்  தேவையில்லாமல் 

மீண்டும் மீண்டும் சொல்லி வளர்க்கிறார்கள்

எமக்கு மேலே சாதி இருக்க படாது  கீழே இருக்கலாம் என்ற 

சிந்தனையாலும். சாதி உடனும் அழிக்க முடியவில்லை இருந்தாலும் இது முற்றாக அழியும்  இதை விவாதங்களில் உள்நுழைந்து விவாதங்களை திசை  திருப்புகிறார்கள்.  தேவையா??

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

மண்டையன் குழுவினர் நல்லவர்களாக மாறிவிட்டனர். சித்தார்த்தன், செல்வம் எல்லோரும் மாறிவிட்டனர் ஆனால் மற்றவர்கள் மாறினால் உங்களுக்குப் பிடிக்காதோ? 

இவர்களை நான் எப்போது ஆதரித்தேன்?

இப்போது கூட தேர்தல் மேடையில் பேசக் கிடைத்தால் இவர்களுக்கு எதிராகவே பேசுவேன்.

எத்தனை பேரை போட்டுத் தள்ளியவர்கள் அழியட்டும்.

18 minutes ago, Kapithan said:

பிழையான பாதையில் இருந்து சரியான பாதைக்கு வந்தது நல்ல விடயம்தானே? 

நல்லது தொண்டனாக இருக்கட்டும்.

அதற்காக தலைவராக ஆக்க வேண்டுமா?

ஒரு கம்பனியில் உயர்பதவி யாருக்கு கொடுக்கிறார்கள்?

பைல்களை நகர்த்துபவருக்கு ஒரு உயர் பதவி கொடுத்தால் எப்படி இருக்கும்.

அடுத்த அடுத்த பதவிகளுக்கு போய்த் தான் முனனேறணும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

1) எனது பதின்ம வயதிலேயே சாதிக் கொடுமைக்கு எதிராக பல போராட்டங்களில் கலந்து கொண்டவன்.எனவே சாதிக் கொடுமையைப் பற்றி எனக்கு நீங்கள் சொல்லித் தரவேண்டியதில்லை.

2) எனது ஆதங்கமெல்லாம் பாராளுமன்றுக்கு போவதற்கு ஒரு தகுதி வேண்டும்.ஒரு படித்த உயர்ந்த நிலையில் உலகமே மதிக்கும் ஒரு சட்டத்தரணி சுமந்திரன் தனது கட்சியில் பல பெண் தொண்டர்கள் இருக்கும் போது அவர்கள் யாரையுமே கண்டு கொள்ளாமல் நாகரீகமில்லாமல் எதிராக களமாடிய ஒருவரை எப்படி வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்.

3) இளம்பிறையன் சாதிக்காக குரல் கொடுக்கிறவர் என்றால் வாருங்கள் உங்களுடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.

1) 3)

2) வேட்பாளர் நியமனத்தில் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாதபோது ஒருவரை+ ஒரு கட்சியை  மட்டுமே  விமர்சிப்பது தவறான முன்னுதாரணம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு…. வெள்ளை அடிக்க வேணும் என்றால்,
அவரைப் பற்றி கருத்து சொல்பவர்கள் மேல்… சாதி, சமய வெறியர் என்று சொல்லி திருப்திப்பட வேண்டியது தான். 😂
சுமந்திரன் “பத்தரை மாற்று தங்கம் என்று நிறுவ”… எவ்வளவு கஸ்ரப் பட வேண்டி இருக்கு. 🤣

TNA-JVP-1.jpg

இந்த படத்தைப்பற்றி நான்கு வரிகள் எழுதவும். 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனது பதின்ம வயதிலேயே சாதிக் கொடுமைக்கு எதிராக பல போராட்டங்களில் கலந்து கொண்டவன்.எனவே சாதிக் கொடுமையைப் பற்றி எனக்கு நீங்கள் சொல்லித் தரவேண்டியதில்லை.

எனது ஆதங்கமெல்லாம் பாராளுமன்றுக்கு போவதற்கு ஒரு தகுதி வேண்டும்.ஒரு படித்த உயர்ந்த நிலையில் உலகமே மதிக்கும் ஒரு சட்டத்தரணி சுமந்திரன் தனது கட்சியில் பல பெண் தொண்டர்கள் இருக்கும் போது அவர்கள் யாரையுமே கண்டு கொள்ளாமல் நாகரீகமில்லாமல் எதிராக களமாடிய ஒருவரை எப்படி வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்.

இளம்பிறையன் சாதிக்காக குரல் கொடுக்கிறவர் என்றால் வாருங்கள் உங்களுடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.

ஏன் இது அதிசயமாக இருக்கிறது உங்களுக்கு? எதிர் தரப்பில் இருந்து "வார்த்தைகளால் சுட்ட" ஒருவரை தமிழரசுக் கட்சி உள்வாங்கிக் கொள்வதையே இப்படி அதிசயத்துடன் பார்க்கிறீர்கள்.

90 கள் வரை புலிகளின் உறுப்பினர்கள், மக்கள், ஆதரவாளர்கள் என்று எல்லோரையும் ஆமியிடம் காட்டிக் கொடுத்து அந்த வருமானத்தில் திளைத்த மண்டையன் குழு, ரெலோ, புளொட் எல்லாவற்றையும் தலையில் விக்கிரகத்தைக் காவின உடனே மன்னித்து மறந்து ஏற்றுக் கொன்டு இப்போது ஆதரவு கூட கொடுக்கிறீர்களே? எப்படி😂?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

TNA-JVP-1.jpg

இந்த படத்தைப்பற்றி நான்கு வரிகள் எழுதவும். 🤣 

5JJLm8.gif  M. A. Sumanthiran - Wikipedia

நேரத்துக்கு நேரம்... நிறம் மாறும், பச்சோந்தி. 🤣
இந்தப் பிழைப்புக்கு.... சிங்களவன் கட்சியிலேயே சேர்ந்து,  கொழும்பில் நின்று தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே... என்ன  இழவுக்கு 70 வருட பாரம்பரியமான தமிழரசு கட்சியை  அழித்துக் கொண்டு இருக்குது இந்தக் கிருமி.

செத்த வீட்டில் பிணமாகாவும், கலியாண வீட்டில் மாப்பிள்ளையாகவும்... 
மாலை போட விரும்பும், விளம்பரத்துக்கு பிறந்த  ஒரு ஜீவன்.
  😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

TNA-JVP-1.jpg

இந்த படத்தைப்பற்றி நான்கு வரிகள் எழுதவும். 🤣 

 "படம் பார், பாடம் படி!" அங்கேயே நில்லுங்கோ😂!

NB: இது 2018 மே தினத்தில் எடுத்த படம், 6 வருடப் பழசு. அதை "சுமந்திரன் காதலர்கள்" கொண்டு வந்து இப்போது முன்னிலைப் படுத்தினால், "மே தினம் எப்ப கொண்டாடப்   படுகிறது" என்று தெரியாத "படம் பார் பாடம் படி" ஆட்களுக்கு குழப்பம் வருவது இயல்பு தானே😂?

Edited by Justin
கீழ் தகவல் சேர்க்கப் பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

TNA-JVP-1.jpg

இந்த படத்தைப்பற்றி நான்கு வரிகள் எழுதவும். 🤣 

இவரை பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது,......1

கொள்கை அற்றவர் / இல்லாதவர்,..........      2

கொள்ளை அடிப்பதில்.   மன்னன்.  / வின்னர். . . ..3

எந்த கட்சியின்  ஊர்வலங்களிலும். உரிமையுடன். முன்னுக்கு நிற்ப்பார். தன்  தான்  அந்த கட்சியின் தலைவர் என்ற நினைப்பு,..4

பணத்தை / பதவியை  கொடுத்தால்   நல்லூரில் சந்தனப் பெட்டுடன். கவடியுமெடுப்பார். ...................5.  🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் மூலம் இளம்பிறயன் என்று ஒரு சாதி வெறியர் தமிழ் அரசியலில் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இது தமிழர் எல்லோருக்கும் பொதுவான குணம், உங்களையும் சேர்த்துத்தான் சொல்லுறன்,...🤣

14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்கள உறவுகள் மூலம் இளம்பிறயன் என்று ஒரு சாதி வெறியர் தமிழ் அரசியலில் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது.

அவர் ஒரு செல்லாக் காசு 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

நேரத்துக்கு நேரம்... நிறம் மாறும், பச்சோந்தி. 🤣
இந்தப் பிழைப்புக்கு.... சிங்களவன் கட்சியிலேயே சேர்ந்து,  கொழும்பில் நின்று தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே... என்ன  இழவுக்கு 70 வருட பாரம்பரியமான தமிழரசு கட்சியை  அழித்துக் கொண்டு இருக்குது இந்தக் கிருமி.

செத்த வீட்டில் பிணமாகாவும், கலியாண வீட்டில் மாப்பிள்ளையாகவும்... 
மாலை போட விரும்பும், விளம்பரத்துக்கு பிறந்த  ஒரு ஜீவன்.
  😂

சிறித்தம்பி! இவர் ஒரு சட்டத்தரணி. இவரின் தொழில் பொய் சொல்லுவது.அதாவது தன் வெற்றிக்காக கோட்டுச்சூட்டு போட்டு நீதிமன்றத்தில் பொய் சொல்பவர். இவரிடம் நீதி நியாயத்தை எதிர்பார்த்தால்  அது உங்கள் தவறு. 😎

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! இவர் ஒரு சட்டத்தரணி. இவரின் தொழில் பொய் சொல்லுவது.அதாவது தன் வெற்றிக்காக கோட்டுச்சூட்டு போட்டு நீதிமன்றத்தில் பொய் சொல்பவர். இவரிடம் நீதி நியாயத்தை எதிர்பார்த்தால்  அது உங்கள் தவறு. 😎

நீங்கள் சொல்வது சரி   அந்த பொய்யுரைக்கிறதை  நீதிமன்றத்தில் மட்டும் வைத்து கொள்ளலாம்    தமிழரசு கட்சி  நீதிமன்றம் இல்லையே??   வழக்குகளும் இல்லை  ஏன் பொய் சொல்ல வேண்டும் ??   இலங்கை வாழ். தமிழ் மக்கள் இவருக்கு தண்டனை வழங்குவர்கள். 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.