Jump to content

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன.

உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதியுங்கள்.   

@Kandiah57 அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க... வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற தகவலை, ஊர்ப்புதினம் செய்திகளில் இருந்து திரட்டியவற்றை... கீழே பதிந்துள்ளேன். சில விடுபட்டு  இருக்கலாம். அதனை தயவு செய்து... நீங்கள் மேற்கொண்டு இணைத்து விடுங்கள்.

1)  தமிழரசு கட்சி, (ஸ்ரீதரன், சுமந்திரன்.....) (சின்னம்: வீடு)
 
2)  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்...) (சின்னம்: சைக்கிள்.) 
 
3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா ரவிராஜ்....) (சின்னம்: சங்கு)

4) தமிழ் மக்கள் கூட்டணி, (சி.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஆனால் அவர் போட்டியிடவில்லை... வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்) , வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்...) (சின்னம்: மான்)
 
5) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி: கிழக்கில் மட்டும், கருணா என்னும் முரளிதரன்.
 
6) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்:  கிழக்கில் மட்டும், பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன்.
 
7) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி: (வடக்கு, கிழக்கு, கொழும்பு) டக்ளஸ் தேவானந்தா.  (சின்னம்: வீணை)
 
# தேசிய மக்கள் சக்தி: அனுரவின் கட்சி, (மருத்துவர் எஸ் சிறிபவானந்தராஜா, இளங்குமரன், மோகன், வெண்ணிலா) (சின்னம்: திசைகாட்டி) 

# மற்றும்.... சஜித், ரணில், மகிந்த ஆகியோரின் கட்சிகளும் போட்டியிடும்.
 
# அங்கஜன் இராமநாதன்  எந்தக் கட்சியில்  நிற்கப் போகிறார் என்று தெரியவில்லை.
 
# அத்துடன் முன்னாள் போராளிகளும் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள் என நினைக்கின்றேன்.
 
# சிறீரெலோ என்னும்  கட்சி, வன்னியில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது.

# சில முஸ்லீம் கட்சிகளும் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன.

உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதியுங்கள்.   

@Kandiah57 அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க... வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற தகவலை, ஊர்ப்புதினம் செய்திகளில் இருந்து திரட்டியவற்றை... கீழே பதிந்துள்ளேன். சில விடுபட்டு  இருக்கலாம். அதனை தயவு செய்து... நீங்கள் மேற்கொண்டு இணைத்து விடுங்கள்.

1)  தமிழரசு கட்சி, (ஸ்ரீதரன், சுமந்திரன்.....) (சின்னம்: வீடு)
2)  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்) சின்னம் சைக்கிள். 
இதன்போது கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் 
3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன்,  பிரேமச்சந்திரன்,சசிகலா ரவிராஜ்....) (சின்னம்: சங்கு)
4) தமிழ் மக்கள் கூட்டணி, (சி.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஆனால் அவர் போட்டியிடவில்லை... வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்) , வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்...) (சின்னம்: மான்)
5) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி: கிழக்கில் மட்டும், கருணா என்னும் முரளிதரன்.
6) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்:  கிழக்கில் மட்டும், பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன்.
7) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி: (வடக்கு, கிழக்கு, கொழும்பு) டக்ளஸ் தேவானந்தா.  (சின்னம்;வீணை)
😎 தேசிய மக்கள் சக்தி: அனுரவின் கட்சி, (மருத்துவர் எஸ்.சிறிபவானந்தராஜா) (சின்னம்: திசைகாட்டி) 

# மற்றும்.... சஜித், ரணில், மகிந்த ஆகியோரின் கட்சிகளும் போட்டியிடும்.
# அங்கஜன் இராமநாதன்  எந்தக் கட்சியில்  நிற்கப் போகிறார் என்று தெரியவில்லை.
# அத்துடன் முன்னாள் போராளிகளும் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள் என நினைக்கின்றேன்.
# சிறீரெலோ என்னும்  கட்சி, வன்னியில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது.

பத்து கட்சிகளுக்கு மேல் உள்ளது   மொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை   25.  வருமா?? வடக்கு   கிழக்கில்   

திரியை திறந்து தேர்தல் செய்திகளை வழங்கும் தமிழ் சிறிக்கு. 

நன்றிகள் பல கோடி    🙏🙏🙏.     

பாராளுமன்றம் போக ஏன்.??   கடுமையாக போட்டி போடுகிறார்கள்??   நல்ல வருமானம் தரும் தொழிலா ?? 

தேர்தல் தினம் வீட்டில் இருந்து   கள்ளு குடித்து புழுங்கல். அரிசி சோறு  சாப்பிடால்.  ஒரு சந்தோசமாக இருக்கும்   வாக்கு போடத்தேவையில்லை 

5% க்கு குறைந்த வாக்குகள் எல்லா கட்சிக்கும் கிடைக்க வேண்டும்  அனைத்து கட்சிகளையும். தடை செய்து விடலாம் 🤣😂🤪😂 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

பத்து கட்சிகளுக்கு மேல் உள்ளது   மொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை   25.  வருமா?? வடக்கு   கிழக்கில்   

சென்ற பாரளுமன்றத்தில் இருந்த  உறுப்பினர்களின் அடிப்படையில்....

திருகோணமலை மாவட்டம்: (4  இடங்கள்.) 2 முஸ்லீம், 1 தமிழ். (குகதாசன்.), 1 சிங்களம்.

மட்டக்களப்பு  மாவட்டம்: (5  இடங்கள்.)  4 தமிழ், ( சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், வியாளேந்திரன், பிள்ளையான்)   1 முஸ்லீம்.

யாழ்ப்பாண மாவட்டம்: (7 இடங்கள்)  (அங்கஜன், சுமந்திரன், விக்னேஸ்வரன், ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன்.

வன்னி மாவட்டம் : (6 இடங்கள்) 2 முஸ்லீம்,  4 தமிழ்.(அடைக்கலநாதன், திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், நோகராதலிங்கம்.) 

தேசியப் பட்டியல்:  சுரேன் ராகவன்,  செல்வராசா கஜேந்திரன், தவராஜா கலை அரசன்.

திகாமடுல்ல எனப்படும் அம்பாறை மாவட்டத்தில்... (7 இடங்கள்)  4 முஸ்லீம், 3 சிங்களம்.  
அங்கு  தமிழர்கள் இரண்டு பேர் வரக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும்....  ஒற்றுமை இன்றி பிரிந்து நின்று பல தமிழ் கட்சிகளில் போட்டியிடுவதால், அங்குள்ள தமிழர்களின் வாக்குப் பிரிந்து ஒரு தமிழரும் வெல்ல முடியவில்லை என்பது சோகம்.

சென்ற பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து  தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் 16 பேர். 
தேசியப் பட்டியல் 3 பேர். மொத்தம் 19 பேர்.

மலையகத்தையும் சேர்த்தால்.... 25 தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருக்கலாம் என நினைக்கின்றேன். 
அவர்கள் தமிழ் என்று நாம் பெருமைப்படலாமே தவிர... ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கொள்கை உடையவர்கள். 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

58 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாண மாவட்டம்: (7 இடங்கள்)  (அங்கஜன், சுமந்திரன், விக்னேஸ்வரன், ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன்.

யாழ் மாவட்டத்தில் 7 என்று இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை, போதிய சனத்தொகை இல்லாமையால் 6 ஆக குறைத்து விட்டார்கள் என அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

யாழ் மாவட்டத்தில் 7 என்று இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை, போதிய சனத்தொகை இல்லாமையால் 6 ஆக குறைத்து விட்டார்கள் என அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது.

தகவலுக்கு நன்றி நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

வைத்தியர் அர்ச்சுனாவையும் சேர்ததுக் கொள்ளலாம்.

அர்ச்சனாவின் முதல் சட்ட ஆலோசகாரக இருந்த செலஸ்டீன் அவர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கையெப்பமிட்டு இருக்கிறார்.

அப்புறம் இன்னுமொரு சட்டக்கல்லூரி பெண் பிள்ளை..

Celestine Stanislaus 

14h  · 
 
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

பத்து கட்சிகளுக்கு மேல் உள்ளது   மொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை   25.  வருமா?? வடக்கு   கிழக்கில்   

large.IMG_7190.jpeg.cecabc579d26a64b7ec8

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மதியத்துடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற இருக்கின்றது.

நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும்… 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 349 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

யாழ்கள. பாராளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்த இருக்கும்.... 
@கந்தப்பு அவர்களுக்கு மேலுள்ள தகவல்கள் பிரயோசனப் படலாம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

அப்புறம் இன்னுமொரு சட்டக்கல்லூரி பெண் பிள்ளை..

Celestine Stanislaus 

large.IMG_7191.jpeg.fcb661d4e1d4b90f3846

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

கல்வி கற்ற இளையவர்... அரசியலில் முன்மாதிரியாக இருப்பார் என்று பார்த்தால், 
ஆரம்பத்திலேயே  சுத்துமாத்து செய்ய வெளிக்கிட்டு விட்டார். 
போற போக்கில் சுமந்திரனையே... தூக்கி சாப்பிட்டு விடுவார் போலுள்ளது. 
😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித் பிரேமதாசாவின் கட்சி) முன்னாள் எம்.பி முருகேசு சந்திரகுமார் அவர்களை முதன்மை வேட்பாளராக கொண்டு  வடக்கில் தேர்தலை சந்திக்கின்றது. (சின்னம்: ரெலிபோன்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

462099332_122199905816022530_84933834310

சட்டமானி  அல்ல சட்டமாணி  என்பதே சரி.
தமிழ் proof reading கூட பார்க்க நேரமில்லாத தமிழரசு கட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஜனநாயக தேசிய கூட்டணியில்

இது யாருடைய கட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இது யாருடைய கட்சி.

ஜனநாயக தேசிய கூட்டணி என்று   இணையத்தில் தேடிப் பார்த்தேன், கண்டு பிடிக்க முடியவில்லை ஈழப்பிரியன்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

ஜனநாயக தேசிய கூட்டணி என்று   இணையத்தில் தேடிப் பார்த்தேன், கண்டு பிடிக்க முடியவில்லை ஈழப்பிரியன்.

நான்நினைக்கிறன் இது வியாழேந்திரனின் கட்சியென்றுநினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

நான்நினைக்கிறன் இது வியாழேந்திரனின் கட்சியென்றுநினைக்கிறன்

நன்றி வாதவூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுஜன பெரமுன (மகிந்தவின் கட்சி) கீதநாத் காசிலிங்கம்…
(சின்னம்:  தாமரை மொட்டு)

நல்லூர் கோவிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்ற அருண் சித்தாத்தும் தனது குழுவுடன் போட்டியிடுகின்றான்(ர்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனா தனது குழுவினருடன் சுயேச்சையாக போட்டியிடுகின்றார். 
சின்னம்: மருத்துவர் ஏற்றும் ஊசி 💉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு, ( சுமந்திரனின் செய்கைகளால்  தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள்) ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவண், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன்.... (சின்னம்: மாம்பழம்.) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாதவூரான் said:

நான்நினைக்கிறன் இது வியாழேந்திரனின் கட்சியென்றுநினைக்கிறன்

பிரபா. கணேசன்   தலைமையிலான கட்சி என்று பார்த்த நினைவு உண்டு”    

1 hour ago, தமிழ் சிறி said:

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு, ( சுமந்திரனின் செய்கைகளால்  தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள்) ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவண், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன்.... (சின்னம்: மாம்பழம்.) 

மாம்பழத்தை விட  வாழைப்பழம் நல்ல சின்னம் அல்லவா??? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

 மாம்பழத்தை விட  வாழைப்பழம் நல்ல சின்னம் அல்லவா??? 🤣

தமிழர் மத்தியில்.... வாழைப்பழத்தை விட மாம்பழத்துக்குத்தான்  அதிக மதிப்பு உண்டு. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2024 at 04:39, தமிழ் சிறி said:

3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா ரவிராஜ்....) (சின்னம்: சங்கு)

டெலோ வும் இந்த கூட்டணி என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.