Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

திங்கட்கிழமையாகும் போது கடவுச்சீட்டுகள் நாட்டில் இருப்பில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஒன்லைன் கடவுச் சீட்டு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/310747

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முடிவுக்கு வந்துள்ள கடவுச்சீட்டு வரிசை

இலங்கையில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும்.

இதன்மூலம் கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விரைவில் தீர்ந்துவிடும். இதனால் மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தடையின்றி கடவுச்சீட்டினை வழங்குவதற்கு தேவையான கொள்வனவு தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அது தொடர்பான தீர்வு வெளியானவுடன் ஈ-பாஸ்போர்ட் வழக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/310930

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும்.

May be an image of text

இலங்கைக்கு வந்துள்ள புதிய கடவுச் சீட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text

இலங்கைக்கு வந்துள்ள புதிய கடவுச் சீட்டு.

பழையதையும் இணைத்தாலே வித்தியாசம் காணமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

பழையதையும் இணைத்தாலே வித்தியாசம் காணமுடியும்.

sri-lankan-passport-isolated-on-a-white-   upload.wikimedia.org/wikipedia/commons/d/dd/Sri_La...  464244690_9237382706322494_8119030766893

எது வடிவாயிருக்கு. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறி புதியதில் தமிழ் கடைசிக்கு வந்துவிட்டதே?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி புதியதில் தமிழ் கடைசிக்கு வந்துவிட்டதே?

சிங்கம் பெரிதாகிக்  கொண்டு வர, எழுத்துக்கள் சிறிதாகி.. 
தமிழ்... மூன்றாம் இடத்திற்கு போய் விட்டது ஈழப்பிரியன்.

கடன் கொடுக்கும் உலக வங்கியை பந்தம் பிடிக்க, 
ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி புதியதில் தமிழ் கடைசிக்கு வந்துவிட்டதே?

இல்லையே   ஆங்கிலம் தான்   முன்னுக்கு போய்விட்டது   

[அமெரிக்கா புத்தியாகயிருக்கும்]

தமிழ் அசையாது அப்படியே இருக்கிறது  🙏🤣😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

இலங்கையின் புதிய கடவுச் சீட்டின்  6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் படம் உள்ளது.

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கடவுச்சீட்டு தொடர்பான சில தகவல்கள்.
இலங்கையில் 21.10.2024 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இராஜதந்திர கடவுச்சீட்டு, உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்கள் மூன்று வெவ்வேறு வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் சாதாரண கடவுச்சீட்டு கருமைநிறம்  புலப்படக்கூடிய வகையில் கருநீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன.

4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை
6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்
8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்
9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்
10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்
12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை
14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம்
16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி
18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம்
20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை
22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம்
24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம்
26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள்
28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம்
29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை
30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள்
31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை
32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று
34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு
35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா
36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிளாய் பறவைகள் சரணாலயம்
37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம்
38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம்
40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல்
42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை
44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு
45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை
என்பன அச்சிடப்பட்டுள்ளன.

AB Amam

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சீட்டில் ஆங்கிலம் முதலாவதாக இருப்பதே சரியானது.  மற்றய இரண்டு மொழிகளும் நடைமுறையில் 90 வீதமான நாடுகளில்  எவராலும் வாசிக்கப்படப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

கடவுச்சீட்டில் ஆங்கிலம் முதலாவதாக இருப்பதே சரியானது.  மற்றய இரண்டு மொழிகளும் நடைமுறையில் 90 வீதமான நாடுகளில்  எவராலும் வாசிக்கப்படப்போவதில்லை. 

 220px-Reisepass_2017.jpg   Frankreich Passport Dashboard | Passport Index 2024  China Passport Dashboard | Passport Index 2024

இதனை நீங்கள்... ஜேர்மன்காரனுக்கும், பிரான்ஸ் காரனுக்கும்,  ஜப்பான்காரனுக்கும், சீனாக்காரனுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். 😂
அவர்கள் விஷயம் தெரியாமல், தமது தாய்  மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர் முட்டாள்  பயலுகள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2024 at 07:42, ஏராளன் said:

7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது

எல்லா பொருளும் இறக்குமதி 

 

On 15/10/2024 at 07:42, ஏராளன் said:

இதனடிப்படையில், இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்த சோம்பேறி கூட்டத்துக்கு யார் தலைவர் ஆக வந்தாலும் ஒரு மாற்றமும் நடக்க போவதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

 220px-Reisepass_2017.jpg   Frankreich Passport Dashboard | Passport Index 2024  China Passport Dashboard | Passport Index 2024

இதனை நீங்கள்... ஜேர்மன்காரனுக்கும், பிரான்ஸ் காரனுக்கும்,  ஜப்பான்காரனுக்கும், சீனாக்காரனுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். 😂
அவர்கள் விஷயம் தெரியாமல், தமது தாய்  மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர் முட்டாள்  பயலுகள். 🤣

முதலில் அந்த முட்டாள் பயலுகள்  நாடு மாதிரி கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரமர ஆகிய விடயங்களில் முன்னேறட்டும். பிறகு பார்க்கலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-49.jpg?resize=750,375&ssl=1

புதிய நீல நிற கடவுச்சீட்டு அறிமுகம்!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக்காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நீல நிற கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முந்தைய கடவுச்சீட்டானது 64 பக்கங்களை கொண்டிருந்தது.

குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளான புதிய கடவுச்சீட்டு இப்போது 48 பக்கங்களைக் கொண்டுள்ளது.

மேலும், முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்த நிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான இலங்கையின் சிறப்பு மிக்க மற்றும் வரலாற்று சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ். நல்லூர் ஆலயம், வரலாற்று சிறப்புமிக்க காலி ஒல்லாந்தர் கோட்டை, ஸ்ரீ தலதா மாளிகை, கொழும்பின் தாமரை கோபுரம், சிகிரியா, ஒன்பது வலைவு பாலம், பொலன்னறுவையின் வரலாற்று தளங்கள் உட்பட இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் ஆகியவை புதிய கடவுச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரு நாள் சேவையின் கீழ் 20,000 ரூபா கட்டணத்துடன் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

புதிய கடவுச்சீட்டுகள் போதுமான அளவு கையிருப்பு கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் நெரிசல் குறையலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

New-Project-1-14.jpg?resize=451,600&ssl=

NALLUR.jpg?resize=600,338&ssl=1

KANDY.jpg?resize=600,338&ssl=1

DEAMODARA.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2024/1405109

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி புதியதில் தமிழ் கடைசிக்கு வந்துவிட்டதே?

கடைசியிலாவது உள்ளதே என்று ஆறுதலடைய வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, island said:

கடவுச்சீட்டில் ஆங்கிலம் முதலாவதாக இருப்பதே சரியானது.  மற்றய இரண்டு மொழிகளும் நடைமுறையில் 90 வீதமான நாடுகளில்  எவராலும் வாசிக்கப்படப்போவதில்லை. 

உண்மை தான்  நல்ல மாற்றம்   வரவேற்கப்படுகின்றன… 

சிங்களம் முதல் போடவேண்டும்

தமிழ் முதல் வரவேண்டும் 

என்று கதைத்து  கதைத்து  ... பேசி பேசி    வாழ்க்கையை.  இழந்து விட்டோம்   

1,..1ஆங்கிலம்         1,.2ஆங்கிலம் 

சிங்களம்           தமிழ் 

தமிழ்                      சிங்களம் 

2,.1சிங்களம்        2, 2 சிங்களம் 

ஆங்கிலம்       தமிழ் 

தமிழ்                ஆங்கிலம் 

3, 1தமிழ்       3,.2 தமிழ் 

சிங்களம்        ஆங்கிலம் 

ஆங்கிலம்     சிங்களம் 

  இங்கே    3,1. ,3,2    ஒருபோதும் சாத்தியமில்லை 

1,2  கூட சாத்தியமில்லை 

1,1.  இப்போது உள்ளது 

2,2,..முன்பு இருந்தது 

2,.1.   எப்படி  ????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம்

image

(எம்.மனோசித்ரா)

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு வழங்கப்படவுள்ளது. இன்று 42,000 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளதோடு, நவம்பரில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடவுச்சீட்டு பிரச்சினை கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த அரசாங்கத்தால் விலைமனு வழங்கப்பட்ட நிறுவனம் உரிய நேரத்தில் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கவில்லை. எவ்வாறிருப்பினும் நாம் அந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறை சரி செய்வதற்காக நாம் தற்போது பாடுபட்டு வருகின்றோம். கடந்த சனிக்கிழமை 7,500 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பபெற்றன. இன்று புதன்கிழமை 42,000 கடவுசீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளன. எனவே மக்கள் கலவரமடையத் தேவையில்லை. தற்போது கடவச்சீட்டுக்கு தட்டுப்பாடு இல்லை.

இவ்வாரத்துக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறும். நவம்பரில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் கொண்டு வரப்படவுள்ளன. எனவே மக்கள் அவசரப்பட்டு கொழும்புக்கு வர வேண்டிய தேவை இல்லை. மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றார்.

https://www.virakesari.lk/article/196867

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21/10/2024 at 18:48, island said:

முதலில் அந்த முட்டாள் பயலுகள்  நாடு மாதிரி கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரமர ஆகிய விடயங்களில் முன்னேறட்டும். பிறகு பார்க்கலாம். 😂

முட்டையில் மயிர் புடுங்கும் கருத்து. 🤪

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2024 at 17:48, island said:

முதலில் அந்த முட்டாள் பயலுகள்  நாடு மாதிரி கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரமர ஆகிய விடயங்களில் முன்னேறட்டும். பிறகு பார்க்கலாம். 😂

அட இப்பாவாவது  உங்களுக்கு புரிந்து இருக்கிறதே  சந்தோசம் .

  • கருத்துக்கள உறவுகள்

464035339_1029362659201477_3916935313524

பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இன்று வரை... இலங்கையின் கடவுச்சீட்டு மாறிய விதம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சீட்டுக்கான வரிசை தொடர்கிறது; நள்ளிரவு முதல் டோக்கனுக்காக மக்கள் காத்திருப்பு

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வது தொடர்கிறது.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் “டோக்கன்” வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, நள்ளிரவு முதல் டோக்கன் பெறுவதற்காக மக்கள் குறித்த பிரதேசத்தில் காத்திருக்கிறார்கள்.

இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதன் மூலம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும், டோக்கன் பெறும் நபருக்கு இரண்டு வாரங்கள் கழித்தே கடவுச்சீட்டு பெறுவதற்கான “நாள்” வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/311251

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சீட்டு என்ன சாப்பாட்டு பொருளா.ஒருக்கல் எடுத்தால் 10 வருடம் இருக்குமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டை பெற வரவேண்டாம்

அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டை பெற வரவேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 40 ஆயிரம் கடவுச்சீட்டுகளை அரசாங்கம் இரண்டு கட்டங்களாக இறக்குமதி செய்துள்ளது.

அதன் பிரகாரம் ஏற்கனவே, பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளவர்களுக்கு கடவுச்சீட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

என்றாலும், குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் தொடர்ந்து அதிகளவான மக்கள் வருவதால் வரிசைகள் இன்னமும் முடிவடையவில்லை.

இதுதொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ”கடந்த காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. புதிய முறையின் கீழ் அத்தியாவசியமான அனைத்து நபர்களுக்கும் கடவுச்சீட்டு வழங்கப்படும்.

குறிப்பிட்ட அளவான கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளன. எதிர்காலத்தில் சில இலட்சம் கடவுச்சீட்டுகள் பெறப்படும். இதனால் அத்தியாவசிய தேவையுடையவர்கள் மாத்திரம் இக்காலப்பகுதியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லாதவர்கள் பெற வேண்டாம்.” எனவும் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/311260

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.