Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

கிளிநொச்சி பரந்தன் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் அதன் பயனாளிகளிடம் இன்று (16) காலை கையளிக்கப்பட்டன.

கிளிநொச்சி கண்டாவளை  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் சிவபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த 05 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்காக  நிர்மாணிக்கப்பட்ட வீடு, அதன் உரிமையாளரிடம் இன்று காலை 9 மணிக்கு கையளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராமத்தில் இராணுவத்தில் பணியாற்றும் கணவன் - மனைவி மற்றும் அவர்களுடன் சேர்ந்து வாழும் மாற்றுத்திறனாளியான தாய், தந்தையரை உள்ளடக்கிய குடும்பத்துக்கான வீடொன்றும் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்போது இராணுவ உயரதிகாரிகள், இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், வீடுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள், பொதுமக்கள் என பலர் இணைந்திருந்தனர்.

IMG_20241016_093020.jpg

IMG_20241016_100637.jpg

IMG_20241016_093134.jpg

IMG_20241016_093256.jpg

IMG_20241016_094139.jpg

IMG_20241016_101630.jpg

https://www.virakesari.lk/article/196440

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல செயல், இப்படி இன்னும் பல பரிகாரங்கள் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்ய இருக்கு👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, உடையார் said:

நல்ல செயல், இப்படி இன்னும் பல பரிகாரங்கள் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்ய இருக்கு👍

இதுவும் அரசாங்க காசு தானே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, வாதவூரான் said:

இதுவும் அரசாங்க காசு தானே

அப்படித்தான் நானும் நினைக்கிறேன், மேசன் தொழிலாளர்களுக்குப் பதில் இராணுவத்தினர் வேலை செய்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுபோல் அவர்கள் பிடித்திருக்கும் வீடுகள் காணிகளையும் மக்களிடம் ஒப்படைத்தால் வரவேற்புக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வாதவூரான் said:

இதுவும் அரசாங்க காசு தானே

அரசாங்கித்திட்ட எங்கை காசு கிடக்கு?
ஏதோ ஒரு வெளிநாட்டு உதவி நிதிய வைச்சு படம் காட்டுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, வாதவூரான் said:

இதுவும் அரசாங்க காசு தானே

சுனாமி என்றும் காற்று மழை வெள்ளப்பெருக்கு என்றும் பிச்சை எடுத்த காசெல்லாத்தோடும் ஒப்பிட்டால் இது ,000000001 வீதம் கூட வராது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

சுனாமி என்றும் காற்று மழை வெள்ளப்பெருக்கு என்றும் பிச்சை எடுத்த காசெல்லாத்தோடும் ஒப்பிட்டால் இது ,000000001 வீதம் கூட வராது. 

இரண்டு வீடுகளை கட்டி கொடுத்து போட்டு இவ்வளவு படம் காட்டல்...புலம் பெயர் உறவுகள் பல வீடுகளை கட்டி கொடுத்துள்ளனர் ஆனால் விளம்பரமின்றி .. பயணாளி இராணுவத்தில் பணி புரிவதால் சில சமயம் அவருக்கு குவாட்டர்ஸ் மாதிரி கட்டி கொடுத்திருக்கலாம் ...எதுவாக இருந்தாலும்  தமிழர் பயனடையட்டும்...
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, putthan said:

இரண்டு வீடுகளை கட்டி கொடுத்து போட்டு இவ்வளவு படம் காட்டல்...புலம் பெயர் உறவுகள் பல வீடுகளை கட்டி கொடுத்துள்ளனர் ஆனால் விளம்பரமின்றி .. பயணாளி இராணுவத்தில் பணி புரிவதால் சில சமயம் அவருக்கு குவாட்டர்ஸ் மாதிரி கட்டி கொடுத்திருக்கலாம் ...எதுவாக இருந்தாலும்  தமிழர் பயனடையட்டும்...
 
இதன் மூலம் பயனடைபவர்களை எவ்வாறு தெரிவு செய்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் பெயர் சொல்லும் அளவுக்கு இருக்கிறது. பயனடைந்தவர்களுக்கு பெரிய கொடுப்பனவு. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஏராளன் said:

இராணுவத்தில் பணியாற்றும் கணவன் - மனைவி மற்றும் அவர்களுடன் சேர்ந்து வாழும் மாற்றுத்திறனாளியான தாய், தந்தையரை உள்ளடக்கிய குடும்பத்துக்கான வீடொன்றும் வழங்கப்பட்டுள்ளது. 

11 minutes ago, விசுகு said:

இதன் மூலம் பயனடைபவர்களை எவ்வாறு தெரிவு செய்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் பெயர் சொல்லும் அளவுக்கு இருக்கிறது. பயனடைந்தவர்களுக்கு பெரிய கொடுப்பனவு. 

அரசியல் வாதிகளை தம்வசம் எடுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு...இராணுவத்தில் பணிபுரிபவரை தங்கள் பக்கம் வைத்திருக்க சொல்லியா கொடுக்க வேணும்...

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, வாதவூரான் said:

இதுவும் அரசாங்க காசு தானே

அரசாங்கத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது? மக்களின் வரிப்பணம்,  போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று சர்வதேசம் வழங்கிய நிதி,  கழட்டியும் இடித்தும் கொண்டு போனவை எல்லாவற்றையும்  திரும்ப கொண்டுவந்து படம் காட்டுகிறார்கள். இதுதான் எதிரியின் தந்திரம்!  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.