Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்களை புறந்தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களுடன் களமிறங்கியுள்ளோம். 

இந்த தேர்தல் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படுகிறது.

தென்னிலங்கை மக்கள் பழைய ஆட்சியாளர்களை துடைத்தெறிந்து, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதிகளை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளார்கள். அதனால், தென்னிலங்கையில் இருக்கக்கூடிய பல மூத்த அரசியல்வாதிகள் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். ஆனால், வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து போட்டியிட வேண்டும் என்ற பேரார்வத்துடன் காணப்படுகின்றனர். 

வடக்கில் எமது கட்சித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரம் தான் தேர்தலில் இருந்து விலகி இளையோரிடம் கையளித்துள்ளார். மற்றையவர்கள் 15 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றில் இருந்தும் மக்களை எதுவும் செய்யாத நிலையிலும் தொடர்ந்தும் ஆசைப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் இருந்தவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். வடக்கிலும் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதனால் தான் கற்றறிந்த இளையோரை நாங்கள் களமிறக்கியுள்ளோம். தமிழ் மக்கள் எங்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் தர வேண்டும்.

நாங்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் செயற்படுவோம்.  

தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் ஆளுமைமிக்க ஆற்றல் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

தமிழ் மக்களின் உரிமைகள் ஒரு கண் எனில் நீடித்த பொருளாதாரமும் மற்றைய கண்ணாக இருக்க வேண்டும். இரண்டு கண்களும் தமிழ் மக்களுக்கு தேவையானது. நாம் இரண்டையும் சேர்த்தே முன்னெடுத்துச் செல்வோம். 

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றை நிர்வகித்துள்ளோம். அதில் எங்களுடைய நிர்வாக ஆளுமைகளை காட்டியுள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னெடுத்துச் சென்ற அதேவேளை, பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் சென்றோம். 

நாம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றில் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில்தான் கொரோனா தொற்றும் அதை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டன. அவ்வாறான இடர் மிகுந்த காலப்பகுதியில் நாங்கள் 45 உறுப்பினர்களை கொண்ட மாநகர சபையில் 10 உறுப்பினர்களுடன் வினைத்திறனுடன் செயற்பட்டோம். 

நாடு தற்போதும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளாத போதிலும் தற்போதும் தென்னிலங்கை கட்சிகள் இனவாத சிந்தனைகளுடன்தான் காணப்படுகின்றன. எனவே தென்னிலங்கை கட்சிகள் வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது என மேலும் தெரிவித்தார். 

அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் அக்கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி உமாகரன் இராசையா கருத்து தெரிவிக்கும்போது, 

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை கைவிட்டு விட்டு, பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்து செல்லும்போது தமிழ் மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். ஆனால், அவர்களிடம் அரசியல் பலம் அன்று இருக்கவில்லை. பின்னரான கால பகுதியில் தமிழர்களிடம் கல்வியுடன் பொருளாதார பலமும் காணப்பட்டது. அப்போதும் அவர்களிடம் அரசியல் பலம் இல்லாததால் தான் கல்வி, பொருளாதாரம் என அனைத்தையும் இழக்க வேண்டி ஏற்பட்டது. தற்போதும் எமக்கான அரசியல் பலம் போதாது. எமக்கான தனித்துவமான அரசியல் பலம் வேண்டும். 

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை இழந்தும் இலட்சக்கணக்கான மக்களை இழந்து ரில்லியன் கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளோம். அப்பேற்பட்ட நிலையில் எங்கள் இலட்சியங்களை தூக்கி ஏறிய முடியாது. 

தற்போதைய அரசாங்கம் இனவாதம் பேசவில்லை என கூறுகின்றார்கள். ஆனால் அடுத்து வருவோரும் அவ்வாறு இருப்பார்கள் என்றில்லை. மீண்டுமொரு இனக்கலவரமோ, தனி சிங்கள சட்டமோ கொண்டுவரப்பட்டால் நாம் எமக்கான தனித்துவமான அரசியல் பலம் இல்லாது அதனை எவ்வாறு கையாள்வது? ஆகவே மாற்றத்தை விரும்புவோர் எமக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிழம்பு said:

வடக்கில் எமது கட்சித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரம் தான் தேர்தலில் இருந்து விலகி இளையோரிடம் கையளித்துள்ளார்

விக்கி அய்யா விக்கி அய்யா என்று பட்டாசு கோஷ்டி விதந்தோற்றிய விக்கி, பல பார்களின் உரிமையாளரான அபலைப் பெண்ணின் வாழ்வாதாரத்துக்காக சிபாரிசு கடிதம் கொடுத்திராவிட்டால் இப்ப அவர்தான் முதன்மை வேட்பாளர்!😂

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் பதவிக்காக யார்காலையும் பிடிப்பார். கட்சித்தலைமையை மீறி ஈபிடிபியுடன் நகூட்டுச்சேர்ந்து மாநகரசபை மமேயரான கதை எல்லோருக்கும் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் பரப்பில் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் - மணிவண்ணன் 

image

தமிழ் அரசியல் பரப்பில் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் கூட்டணியினர் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். 

4__3_.jpg

தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் சக வேட்பாளர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (18) காலை நல்லை ஆதீனத்துக்கு சென்று, குருமுதல்வர்  ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

4__5_.jpg

அதனை தொடர்ந்து, ஆயர் இல்லத்துக்கு சென்றவர்கள் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதுடன், கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். 

இந்த சந்திப்பின் பின்னர், மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டோம். அவருடனான கலந்துரையாடலின்போது, அவர் தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், அவர்களின் போக்குகள் மாறிவிட்டதாகவும் எம்மிடம் குறைபட்டுக்கொண்டார். 

மேலும், தமிழ் அரசியல் பரப்பில் மாற்றம் ஒன்று நிகழ வேண்டும் என தான் விரும்புவதாக சொன்னார். 

அவரை தொடர்ந்து யாழ். ஆயரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினோம். அவரும் முற்று முழுதான மாற்றத்தையே விரும்புகிறார். நாமும் அதனை வரவேற்று , எமது வேட்பாளர்கள் தொடர்பிலும் அவர்களின் தகைமைகள், ஆளுமைகள் தொடர்பிலும் எடுத்துக்கூறி இருந்தோம். 

மத தலைவர்கள் போன்று தமிழ் மக்களும் மாற்றத்தையே விரும்புகிறார்கள். அதனால் எமக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மணிவண்ணன் தெரிவித்தார். 

மேலும், மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் இன்றைய தினம் முதல் எமது கட்சியினர் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/196597

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பிழம்பு said:

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்களை புறந்தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

சகல கட்சிகளிலும் இளையோர்கள் களமிறங்கியுள்ளார்கள்.

யாரை ஆதரிப்பது?மக்களுக்கு ஒரோ குழப்பமாக உள்ளது.

இன்றுவரை இவருக்கு வாக்கு போடலாம் என்று எவரையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நல்லகாலம் வாக்கு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/10/2024 at 23:16, புலவர் said:

மணிவண்ணன் பதவிக்காக யார்காலையும் பிடிப்பார். கட்சித்தலைமையை மீறி ஈபிடிபியுடன் நகூட்டுச்சேர்ந்து மாநகரசபை மமேயரான கதை எல்லோருக்கும் தெரியும் 

எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு இன ஆசையை விட கதிரை ஆசை கூடி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமக்கு போட்டியானவர்களை தொடர்ந்து ஓரங்கட்டிக்கொள்வது. கேட்டால்; பதவியாசையில் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலைகிறார்கள் என்று தங்கள் அநாகரிக பாஷையில் விமர்சிப்பது.  தாங்கள் தொடர்ந்து இருப்பது மட்டும் ஞானி குடில்,. உண்மையை சொல்பவர்களை இழிவு படுத்துவது, கேள்வி கேட்பவர்களை விரட்டுவது. தம்மை மறைத்து முந்திக்கொண்டு மற்றவரை குற்றவாளியாக்குவது. கட்சியின் கொள்கைகளை கடைப்பிடிக்காதவர்கள், உடன் அங்கத்தவரின் உரிமைகளை மறுக்கிற சர்வாதிகாரிகள் எப்படி மக்களைப்பற்றி சிந்திப்பார்கள் என நாம் எதிர்பாக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

சகல கட்சிகளிலும் இளையோர்கள் களமிறங்கியுள்ளார்கள்.

யாரை ஆதரிப்பது?மக்களுக்கு ஒரோ குழப்பமாக உள்ளது.

இன்றுவரை இவருக்கு வாக்கு போடலாம் என்று எவரையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நல்லகாலம் வாக்கு இல்லை.

இதுதான் அங்குள்ள உண்மையான நிலைமை... ஒருமாயை அங்கு உருவாக்கப் படுகிறது...அதற்கு உதவியாக அலைந்து திரியும் யூ டியூப் காரர் களமிறக்கப் பட்டிருக்கினம்...அவையும் ஆகா ஓகோ என்று புழுகினம்...வடக்கில் எதற்கும் துணிந்த விடுகாலி அரசியல்வாதிகள் இருப்பதை  மறந்து...ஒரு சிலரைத்தவிர மக்கள் பெரிதாக இதை அலட்டிக் கொள்வதில்லை..என் அனுபவம்..

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு  கட்சிக்கும் ஒவ்வொரு ஆசனந்தான் வரும் போல் உள்ளது. இதனால் கட்சித்தலைமைகள் 2பேர் பழைய ஆட்களாக வைச்சுக்கொண்டு மிச்ச ஆட்களை இளைஙர்களைப் போட்டு  எங்கள் அணியில் இளைஞர்களுக்கு இடம் கொடுத்துள்ளோம் என்று மக்களைப் பேய்க்காட்டுகிறார்கள்.  அவர்களை வைத்து ப் பெறப்படும் வாக்குகளை வைத்து தேசியப்பட்டியல் மூலமாகப் பழையபடி பழையவர்கள் பாராளுமன்றத்தற்கு செல்வதே அவர்களின் திட்டம். இளைஙர்களுக்கும் இது தெரிந்தும் மாகாணசபை>உள்ளூராட்சபைத் தேர்தல்களில் நிற்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இப்பொழதெல்லாம் இந்த உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமசபைகள் இருந்த காத்தில் அங்கத்தவர்களுக்கு ஊதியம்வழங்கப்hடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

இதுதான் அங்குள்ள உண்மையான நிலைமை... ஒருமாயை அங்கு உருவாக்கப் படுகிறது...அதற்கு உதவியாக அலைந்து திரியும் யூ டியூப் காரர் களமிறக்கப் பட்டிருக்கினம்...அவையும் ஆகா ஓகோ என்று புழுகினம்...வடக்கில் எதற்கும் துணிந்த விடுகாலி அரசியல்வாதிகள் இருப்பதை  மறந்து...ஒரு சிலரைத்தவிர மக்கள் பெரிதாக இதை அலட்டிக் கொள்வதில்லை..என் அனுபவம்..

திட்டமிட்டு சில யூடியூப் காரரை களமிருக்கியிருக்கின்றனர் என்பது என்றால் உண்மை போல தான் தெரிகின்றது அதில் சிலருக்கு அரசியல் சுத்தம் ஆனால் அணுரா புராணம் நன்றாக சொல்லி கொடுத்துள்ளனர் ....தேசிய ஆதரவாக பேசிய ஒர் யூ டியுப்பரை புலனாய்வாலர்கள் எச்சரித்த சம்பவம் நடந்துள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

திட்டமிட்டு சில யூடியூப் காரரை களமிருக்கியிருக்கின்றனர் என்பது என்றால் உண்மை போல தான் தெரிகின்றது அதில் சிலருக்கு அரசியல் சுத்தம் ஆனால் அணுரா புராணம் நன்றாக சொல்லி கொடுத்துள்ளனர் ....தேசிய ஆதரவாக பேசிய ஒர் யூ டியுப்பரை புலனாய்வாலர்கள் எச்சரித்த சம்பவம் நடந்துள்ளது...

இதுதான் உண்மை...இன்னும் பலர் களமிறக்கப்படுவர்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.