Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கந்தர்மடம் பகுதிக்கு அண்மையில் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டு அறையில் அவனது கட்டிலுக்கு கீழ் இருந்து 19 வயது பிரபல பாடசாலை மாணவி ஒருவர் நிர்வாண நிலையில் பிடிக்கப்பட்டார்.

குறித்த மாணவனின்அறைக்கு இவ்வாறு பல மாணவிகள் பல தடவைகள் வந்து சென்றுள்ளார்கள் எனவும் இது தொடர்பாக குறித்த வீட்டின் சொந்தக்காரியான வயோதிப மாதுவுக்கு அயலவர்கள் புகார் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் மூதாட்டி அது தொடர்பாக அக்கறை செலுத்தாது தொடர்ச்சியாக மாணவன் தங்குவதற்கு அனுமதித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் மாஸ்க்ஸ் அணிந்தவாறு பெண் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் தனது றுாமுக்கு கொண்டு செல்வதை அயலவர்கள் அவதானித்துள்ளார்கள். அதன் பின்னரே அயலவர்கள் சிலர் சேர்ந்து குறித்த மாணவனின் அறைக்குள் நுழைந்து நிலத்தில் போடப்பட்டிருந்த மெத்தைக்கு கீழ் நிர்வாண நிலையில் மறைந்து படுத்திருந்த மாணவியை பிடித்ததுடன் குறித்த மாணவனையும் நையப்புடைத்துள்ளனர்.

அயல்வீட்டுப் பெண்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மாணவி பின்னர் அவளது பெற்றோர் வரவழைக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகத் தெரியவருகின்றது.

ஏ.எல் பாடத்தில் வர்த்தகப் பிரிவுக்கு தனிப்பட்ட வகுப்புகள் கொடுப்பதாகக் கூறியே குறித்த பல்கலைக்கழக மாணவன் தனித்தனியே பெண்களை தனது றுாமுக்கு கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மாணவி உடலுறவு கொள்வதற்கு முன்னரே  காப்பாற்றப்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.  (ப)

நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கண்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதுகளைக் கவனிக்க மாட்டினமோ! அவையள் இப்ப எலக்சனில பிஸி போலை!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாலி said:

எங்கண்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதுகளைக் கவனிக்க மாட்டினமோ! அவையள் இப்ப எலக்சனில பிஸி போலை!

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக  ஜனநாயகரீதியிலான   போராட்டங்களை  இணைந்து முன்னெடுக்க ஆதரவு கோரி அரகலய அமைப்பின் சார்பில் வசந்த முதலிகே நேரில் வந்து கேட்ட போது உங்களுடன் இணைந்து எதுவும் செய்ய மாட்டோம் தனி தவில் தான் அடிப்போம் என்று அவரை அவமதித்து அனுப்பிய அளவுக்கு அரசியல் அறிவுள்ளவர்கள் இவர்கள்.  இத்தனைக்கும் இச்சட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியாதது இதுதான்  👉 இந்த விடயமெல்லாம் எப்படி ஒரு  செய்தி என்கிற நிலைக்குள் வருகிறது? 

அந்த மாணவன் பிள்ளைகளைத் துஸ்பிரயோகம் செய்கிறான் என்றால் அவனை உள்ளே தள்ளுவதற்கு வழி பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு  ""கட்டிலுக்கடியில் நிர்வாணமாக பிடிபட்ட"" என்று எழுதும் அளவிற்கு எமது இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததா? 

இந்தச் செய்தியை அந்தப் பிள்ளையின் காதுகளுக்கு எட்டினால் அந்தப் பிள்ளை வாழ்நாள் முழுதும் கூனிக் குறுகாதா? 

சிங்களம் இறந்த பெண் போராளிகளை புணர்ந்ததற்கும் இந்த விடயத்தை செய்தியாக்கிய உதயனின் செயலுக்கும் இடையே  பெரிய வேறுபாடு எதுவும்  இல்லை. 

😡

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்+

என்னப்பா செய்திகள் எல்லாம் இவ்வளவு கீழ்தரமாக வருகிறது... 🤨😬

ஆனாலும் வாசிக்க சிரிப்பாக இருக்கிறது.... 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

எனக்கு புரியாதது இதுதான்  👉 இந்த விடயமெல்லாம் எப்படி ஒரு  செய்தி என்கிற நிலைக்குள் வருகிறது? 

அந்த மாணவன் புள்ளைகளைத் துஸ்பிரயோகம் செய்கிறான் என்றால் அவனை உள்ளே தள்ளுவதற்கு வழி பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு  கட்டிகுக்கடியில் நிர்வாணமாக பிடிபட்ட என்று எழுதும் அளவிற்கு எமது இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததா? 

இந்தச் செய்தியை அந்தப் பிள்ளையின் காதுகளுக்கு எட்டினால் அந்தப் பிள்ளை வாழ்நாள் முழுதும் கூனிக் குறுகாதா? 

சிங்களம் இறந்த பெண் போராளிகளை புணர்ந்ததற்கும் இந்த விடயத்தை செய்தியாக்கிய உதயனின் செயலுக்கும் இடையே  பெரிய வேறுபாடு எதுவும்  இல்லை. 

😡

கண்டிப்பாக இது ஒரு செய்திதான்.

ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட இருவர் தம் சுயவிருப்பிற்கிணங்க உடலுறவு கொள்வதை மூர்க்கத்தனமாக தடுக்கின்ற, அதை எதிர்க்கின்ற ஒரு சமூகமாகவே இன்னும் யாழ் / தாயக சமூகம் உள்ளது என்பதை இந்த செய்தி மீண்டும் தெளிவாக காட்டுகின்றது.

இதில் சம்பந்தப்பட்ட அயலவர்களை தூக்கி உள்ளே போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

குறித்த மாணவனின்அறைக்கு இவ்வாறு பல மாணவிகள் பல தடவைகள் வந்து சென்றுள்ளார்கள்

இதில் என்ன தவறு இருக்கிறது? அவனுக்கு கிடைத்தது தனக்கு கிடைக்கவில்லையே என்ற எரிச்சலா?  ஒரு மாணவியின் வாழ்க்கையை வீணாக்குவதைத் தவிர வேறு எதைக் காணப் போகிறார்கள்?  நாங்கள் இன்னமும் மாறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இதில் சம்பந்தப்பட்ட அயலவர்களை தூக்கி உள்ளே போட வேண்டும்

நான் எழுத நினைத்தேன்”   இடம் கந்தர்மடம்.   என்றபடியால். தவிர்த்து விட்டேன்       

அங்கே ஒருவர் பசியில்.  வடியிருந்தால்.  திரும்பியும்.  பார்த்து இருக்கமாட்டார்கள்     

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இளைஞனின் அறைக்கு ஒரு மாணவி வந்து போவதற்கும் பல மாணவிகள் வந்து போவதற்கும் உள்ள வித்தியாசம் நிறையவே உள்ளது.
காதலுக்கும் காம வேட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் எம்மிடம் இன்னும் அதிகமானோர் உள்ளனர். சில வேளைகளில் போதை மருந்துகளின் நடமாட்டங்களும் இருக்கலாம்.ஏனென்றால் நாட்டு நிலவரங்கள் அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்போது இது தான் முன்னேற்றம் போகப் போக  அதாவது காலம்  போக  மாணவி.  தனது அறைக்கு. பல மாணவர்களை அழைத்து வருவார்  

குறிப்பு,....இந்த இன்ரயநெற்றை   அறுத்து. எறிந்து விடுங்கள்   எல்லாம் நல்லபடி நடக்கும் ..இந்த நிகழ்ச்சிக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை   மாணவிகள் பலத்தகரப்படுத்தபடவில்லை என்பதை கவனிக்கவும்.   ஒருவர் இந்த திரிப் பக்கமும் வரவில்லை   வைத்தியசாலையில் போய் படுத்து விட்டார??? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

எங்கண்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதுகளைக் கவனிக்க மாட்டினமோ! அவையள் இப்ப எலக்சனில பிஸி போலை!

உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒன்றியம் வாசிக்கவில்லை என்றவுடன் இப்படி எல்லாம் எழுத வேண்டி உள்ளது.

அடுத்தவர் சிரிப்பு குறி இட்டவர். 

“ மாணவி உடலுறவு கொள்வதற்கு முன்னரே  காப்பாற்றப்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள். 

இது ரெம்ப முக்கியம்.. 

7 hours ago, island said:

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக  ஜனநாயகரீதியிலான   போராட்டங்களை  இணைந்து முன்னெடுக்க ஆதரவு கோரி அரகலய அமைப்பின் சார்பில் வசந்த முதலிகே நேரில் வந்து கேட்ட போது உங்களுடன் இணைந்து எதுவும் செய்ய மாட்டோம் தனி தவில் தான் அடிப்போம் என்று அவரை அவமதித்து அனுப்பிய அளவுக்கு அரசியல் அறிவுள்ளவர்கள் இவர்கள்.  இத்தனைக்கும் இச்சட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே. 

ஒரு மானஸ்தன் இப்படியும் எழுதி உள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

கலாச்சாரக் காவலர் வந்துவிட்டார். 

பராக் பராக் பராக்,... 😁

இதுவும் இந்தியன்ர சதி🤣

Start….. 

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் வழங்கும் செய்தியின் அடிப்படையில் கருத்து கூறமுடியுமா என்பதே முதல் வினா.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

ஒரு மானஸ்தன் இப்படியும் எழுதி உள்ளார்

இதில் என்ன முரண்பாட்டை கண்டீர்கள் மீரா.

தமிழ் மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடும் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்மக்களை மிக அதிகம் பாதிக்கும் ஒரு சட்டதிற்கெதிராக ஒரு போராட்டதை கூட்டுணைந்து செய்ய வந்த அழைப்பை தமது சுயநலத்திற்காக புறக்கணித்துள்ளனர். குறைந்த பட்சம் அதிகார பீடங்களுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பை செய்வதற்கான தொடர்சியான தொடர்பாடல்களை வளர்பதற்கான, தமது அரசியல் தலைமைத்துவ அறிவை வளர்பதற்கான வேலைத்திட்டங்களில் கூட பங்கேற்க மனமின்றி  சுலநலமாக சிந்தித்துள்ளார்கள். ஆகவே இவர்களை போன்ற சுய நலவாதிகளின் அறிக்கைகளை விமர்சனமின்றி  மக்கள் அப்படியே ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சரி தானே! 

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, island said:

இதில் என்ன முரண்பாட்டை கண்டீர்கள் மீரா.

நிர்வாணம் என்றால் ஞான நிலை

அனைத்து பற்றுகளையும் துறந்த நிலை என்று பொருள்
அதாவது மனதில் நிர்வாணம், உலக பற்றுகளில் நிர்வாணம்,
பந்த பாசங்களில் இருந்து நிர்வாணம் 
பால் உணர்விலிருந்து நிர்வாணம் 
என அனைத்து செயல்கள்
அனைத்து உணர்வுகள் 
எல்லாவற்றையும் விட்டு விலகி ஞான நிலையினை
அடைந்த நிலையாகும்.
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

இதுவும் இந்தியன்ர சதி🤣

Start….. 

சாரி புரோ,.....அது எனது தவறான புரிதல் என்பதால் உடனே அழித்துவிட்டேன. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

இதில் என்ன முரண்பாட்டை கண்டீர்கள் மீரா.

தமிழ் மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடும் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்மக்களை மிக அதிகம் பாதிக்கும் ஒரு சட்டதிற்கெதிராக ஒரு போராட்டதை கூட்டுணைந்து செய்ய வந்த அழைப்பை தமது சுயநலத்திற்காக புறக்கணித்துள்ளனர். குறைந்த பட்சம் அதிகார பீடங்களுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பை செய்வதற்கான தொடர்சியான தொடர்பாடல்களை வளர்பதற்கான, தமது அரசியல் தலைமைத்துவ அறிவை வளர்பதற்கான வேலைத்திட்டங்களில் கூட பங்கேற்க மனமின்றி  சுலநலமாக சிந்தித்துள்ளார்கள். ஆகவே இவர்களை போன்ற சுய நலவாதிகளின் அறிக்கைகளை விமர்சனமின்றி  மக்கள் அப்படியே ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சரி தானே! 

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறிவிட்டீர்களே அவர்களுக்கு அரசியல் தெரியாது என.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

நிர்வாணம் என்றால் ஞான நிலை

அனைத்து பற்றுகளையும் துறந்த நிலை என்று பொருள்
அதாவது மனதில் நிர்வாணம், உலக பற்றுகளில் நிர்வாணம்,
பந்த பாசங்களில் இருந்து நிர்வாணம் 
பால் உணர்விலிருந்து நிர்வாணம் 
என அனைத்து செயல்கள்
அனைத்து உணர்வுகள் 
எல்லாவற்றையும் விட்டு விலகி ஞான நிலையினை
அடைந்த நிலையாகும்.

இது நல்ல விளக்கம்  🤣

இப்படி எல்லோரும் இருந்து விட்டால்   500 ஆண்டுகளுக்கு பின்னர்  உலகில் மனித [ர்கள்] இனமே    இருக்கமாட்டார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21/10/2024 at 19:57, பிழம்பு said:

கண்டிப்பாக இது ஒரு செய்திதான்.

ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட இருவர் தம் சுயவிருப்பிற்கிணங்க உடலுறவு கொள்வதை மூர்க்கத்தனமாக தடுக்கின்ற, அதை எதிர்க்கின்ற ஒரு சமூகமாகவே இன்னும் யாழ் / தாயக சமூகம் உள்ளது என்பதை இந்த செய்தி மீண்டும் தெளிவாக காட்டுகின்றது.

இதில் சம்பந்தப்பட்ட அயலவர்களை தூக்கி உள்ளே போட வேண்டும்.

நீங்கள் தந்தையாக இருந்து உங்கள் பெண் பிள்ளையை  பொது வெளியில் பல பெண்களுடன் தொடர்புள்ள ஒருவருடன்  பழக விடுவீர்களா? அல்லது பாலியல் இச்சையை தீர்க்க எந்த நடவடிக்கைகளிலும் இறங்குவீர்களா?

நிற்க....

நான்கு வருடங்களிற்கு முன்பு  யாழ்ப்பாண திருநெல்வேலி வாடகை வீட்டிலிருந்து ஒரு பல்கலைக்கள மாணவன் தன் சக வகுப்பு தோழியுடன் அதுவும் கட்டிலிக்கடியில் இருந்து உடலுறவு கொள்ளும் காணொளியை உலகம் முழுவது பரப்பி விட்டிருந்தான்.
இதெல்லாம் தெரியுமா தெரியாதா?

அல்லது இது செய்தியாயின் விவாதிக்கலாம் வாருங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் தந்தையாக இருந்து உங்கள் பெண் பிள்ளையை  பொது வெளியில் பல பெண்களுடன் தொடர்புள்ள ஒருவருடன்  பழக விடுவீர்களா? அல்லது பாலியல் இச்சையை தீர்க்க எந்த நடவடிக்கைகளிலும் இறங்குவீர்களா?

அல்லது இது செய்தியாயின் விவாதிக்கலாம் வாருங்கள். 

அதென்ன பழக விடுவீர்களா?நடவடிக்கையில் இறங்குவீர்களா எனும் கேள்விகள்?

18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைத்து அவர்களின் தெரிவுகளில் என் செல்வாக்கை செலுத்தும் அளவுக்கு மூடன் கிடையாது நான்.

மிகச் சிறந்த கல்வியும், அறிவும், சமூக பிரக்ஞையுடனும், பிரச்சனைகளை நேராக எதிர்கொள்ளும் துணிவுடனும் என் பிள்ளைகள் வளர்கின்றன. சில விடயங்களில் அவர்களின் கருத்தையும் ஆலோசனைகளையும் நான் கேட்கும் நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே அவர்களின் தெரிவுகளில் என் செல்வாக்கு அவசியம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பிழம்பு said:

அதென்ன பழக விடுவீர்களா?நடவடிக்கையில் இறங்குவீர்களா எனும் கேள்விகள்?

18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைத்து அவர்களின் தெரிவுகளில் என் செல்வாக்கை செலுத்தும் அளவுக்கு மூடன் கிடையாது நான்.

மிகச் சிறந்த கல்வியும், அறிவும், சமூக பிரக்ஞையுடனும், பிரச்சனைகளை நேராக எதிர்கொள்ளும் துணிவுடனும் என் பிள்ளைகள் வளர்கின்றன. சில விடயங்களில் அவர்களின் கருத்தையும் ஆலோசனைகளையும் நான் கேட்கும் நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே அவர்களின் தெரிவுகளில் என் செல்வாக்கு அவசியம் இல்லை.

பல பெண்களுடன் தொடர்புடைய ஒருவனுடன் இன்னொரு பெண்ணையும் பழக அனுமதிப்பவர்களுக்கு மனம் ஆகாயத்தை விட பெரியது.
பெரிய மனதிற்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஆங்கிலத்தில் fonication என்று சொல்வார்கள். அதாவது வேசித்தனம்!

எப்பிடியும் வாழலாம் என்று வந்தாப்பிறகு முழங்கால் நனைஞ்சால் என்ன முக்காடு நனைஞ்சால் என்ன!

எமகென்று சில values இருக்கின்றது! விரும்பினால் பின்பற்றலாம். விரும்பாது போனால் நாண்டுகொண்டு நிற்கலம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

பல பெண்களுடன் தொடர்புடைய ஒருவனுடன் இன்னொரு பெண்ணையும் பழக அனுமதிப்பவர்களுக்கு மனம் ஆகாயத்தை விட பெரியது.
பெரிய மனதிற்கு வாழ்த்துகள்.

நேரம் பொன்னானது. யாழில் உள்ள மிக மட்டமான கருத்தாளருடன் என் நேரத்தை செலவழிப்பதை விட செய்வதற்கும் வாசிப்பதற்கும் வேறு நல்ல விடயங்கள் உள்ளன.

டொட்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் குற்றத்திற்கு இடமில்லை. பலாத்காரமும் இல்லை.  அதேநேரம் அயலவர்களும் தவறான ஒன்று தங்கள் அயலில் நடப்பதை தொடராது தடுத்திருக்கிறார்கள். சமுதாய பொறுப்பு வரவேற்கப்பட வேண்டியதே. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.