Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ் மக்களின் ஒப்பற்ற நம்பிக்கை சந்திக்கின்ற இரண்டாவது முள்ளிவாய்க்காலாக இந்தத் தேர்தல்களத்தில் தமிழரசுக் கட்சியின் பரிதாப நிலையைப் பார்க்கமுடிகின்றது.

ஏன் இந்த அவலநிலை?

என்ன நடந்தது தமிழரசுக் கட்சிக்கு?

எப்படி இந்தத் தாழ்புள்ளிக்கு வந்துசேர்ந்தது தமிழரசுக் கட்சி?

தமிழரசுக் கட்சியின் இன்றைய அவலநிலைக்கு யார் காரணம்?

இந்தவிடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: 

https://tamilwin.com/article/inside-stories-of-tamil-politics-by-tamil-people-1729593302

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜபக்‌ஷக்களின் ஆத்ரவு டீம் மும்முரமாகக் களத்தில் இறங்கிவிட்டது போல உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

animiertes-schlangen-bild-0059.gif    Cartoon house Stock Photos, Royalty Free Cartoon house Images |  Depositphotos   M._A._Sumanthiran.jpg     animiertes-schlangen-bild-0036.gif animiertes-schlangen-bild-0013.gif

வீட்டிற்குள் விஷப் பாம்பு நுழைந்தால்... பெரிய கொட்டன் தடி எடுத்து...  
அடித்துக் கொன்று,  மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த வேண்டும். 😂

மாறாக.... அதற்கு பால் ஊற்றி கொஞ்சிக் கொண்டு இருந்தால்...
மற்ற ஆட்களையும் அந்த விஷப் பாம்பு கொத்தி, மனிதருக்கு மரணத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் உயிருடன்  இருக்க வேண்டும் என்றால், விஷப் பாம்பை ஒழிக்க வேண்டும்
ஆகவே, தாமதிக்காமல்... அந்தப் பாம்பை அடித்து விரட்டுங்கள்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

இந்த வகை பாம்பை கொட்டானால்.  அடித்தால்.  கொட்டானுக்குத் தான்  பதிப்பு     பாம்புக்கு எந்தவொரு பதிப்பும். வராது”    

இந்த பாமபை  வாக்கு சீட்டுகளால். தான் அடிக்க. வேண்டும்   வாககுகளை பாம்புக்கு. போடமால்.  விடலாம்   

ஆனால்  போனாஸ்.  மூலம்   பாராளுமன்றம் புகுத்து விடும்

ஒரே வழி  தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்வது மட்டுமே   

1,.போனாஸ் ஆசனத்துக்கு   மீண்டும் தேர்தல் வைத்து தெரிவு செய்வது  தோல்வியடைந்த. அந்த கட்சியின் அனைவரும் போட்டி இடலாம் 

2,..ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பாராளுமன்றம் செல்ல தடை விதிப்பது 

3,.60 வயதுக்கு மேலுள்ளவர்கள். தேர்தலில் போட்டி இட முடியாது 

அதாவது 65 வயதுக்கு மேற்பட்டோர் பாராளுமன்றத்தில் பதவி  வகிக்கக்கூடாது  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kandiah57 said:

3,.60 வயதுக்கு மேலுள்ளவர்கள். தேர்தலில் போட்டி இட முடியாது

6௦ வயதுக்கு மேல் உள்ளவர்கள் சாட்சி கையெழுத்து போட முடியாதாம் இலங்கையில்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பெருமாள் said:

6௦ வயதுக்கு மேல் உள்ளவர்கள் சாட்சி கையெழுத்து போட முடியாதாம் இலங்கையில்.

உண்மையா ??   இன்று தான் அறிகிறேன்  நன்றி 

2 minutes ago, பெருமாள் said:

6௦ வயதுக்கு மேல் உள்ளவர்கள் சாட்சி கையெழுத்து போட முடியாதாம் இலங்கையில்.

அப்ப. எப்படி பாராளுமன்றம் போகலாம்??? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kandiah57 said:

உண்மையா ??   இன்று தான் அறிகிறேன்  நன்றி 

அப்ப. எப்படி பாராளுமன்றம் போகலாம்??? 

இங்கு பலமுறை இந்த கதையை எழுதி விட்டேன் விசபாம்புக்கு  வாலாட்டும் கூட்டம் தேவை அற்ற கருத்துக்களை போட்டு மூடி விட்டனர் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பெருமாள் said:

6௦ வயதுக்கு மேல் உள்ளவர்கள் சாட்சி கையெழுத்து போட முடியாதாம் இலங்கையில்.

இதற்கு ஆதாரம் ஏதும் உங்களிடம் உள்ளதா அல்லது சும்மா அளக்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த காணொளியில் சுமந்திரனை ஒரு கட்சி விரோதியாக கூறப்பட்டுள்ளது, அதற்காக  கூறப்படுகின்ற காரணமாக கட்சியின் அடிப்படை கொளகையான தேசிய கொள்கையிலிருந்து வேறுபட்டுள்ளமையால் அந்த கொள்கை சார்ந்த (தமிழ் தேசிய ) அரசியல்வாதிகளை அகற்றுவதனால் கட்சி பலவீனமாகிறது என்பதாக பொருள்படுகிறது ( காணொளியினை சரியாக புரிந்து கொண்டேனா என தெரியவில்லை).

இந்த தமிழ் தேசிய நீக்க அரசியல் என்பதன் மூலம் சுயாட்சி ( இரு அரச நிர்வாக மட்டத்தில் மத்திய அரசு மற்றும் பிராந்திய அரச மட்டத்தில் அதாவது மாகாணசபை ஊடாக) அதிக அதிகாரங்கள் கொண்ட காணி, காவல், நிதி மற்றும் சட்டத்தினை மத்திய மானில அரசுகள் தமக்கிடையே பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க முடியும் என நம்புகிறார்) இனை பெற முடியும் என கூற முற்படுகிறார் என நினைக்கிறேன் (சுமந்திரன்).

இது எந்தளவிற்கு நடைமுறை சாத்தியம் என தெரியவில்லை.

அதற்கு விலையாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கிடைக்க வேண்டிய நியாத்தினை விட்டுக்கொடுப்பது, காணாமல் போன தமது உறவுகள்  தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலவரம் மற்றும் இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட இனக்கொலையினை  வெளிகொணராமல் இருப்பது என்பதனை விலையாக செலுத்துவதுடன், இதற்கு மேலே சென்று உரிமைக்காக போராடிய போராளிகளை பயங்கரவாதிகளாக்குவதன்  மூலம் அதனால் இலங்கை அரசின் இனவழிப்பினை நியாப்படுத்த விழைகின்றாரா என கேள்வி எழுகிறது.

ஆனால் திரு சுமந்திரன் கூறுவது போல அதிகாரங்களை பெறுவதற்காக இவற்றினை செய்வது என்பது மேலும் அதிகாரத்திற்கான சமரச முயற்சியில் ஒரு பலவீனமான நிலையினையே ஏற்படுத்தும் என கருதுகிறேன்.

உங்களது இறுதி பேரம் பேசும் விடயங்களாக உள்ளவற்றை கைவிடுவது, மற்றும் இனப்பிரச்சினை இல்லை என்பதான உருவமைப்பு எவ்வாறு தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் பேரம் பேசும் ஆற்றலை அதிகரிக்கும்?

உரிமையினை பெறுவதற்காக சுமந்திரன் பயன்படுத்தும் உத்தியாக தமிழ் தேசிய நீக்கம் மற்றும் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என இணக்க அரசியலை பயன்படுத்துகிறார்.

Edited by vasee
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

இதற்கு ஆதாரம் ஏதும் உங்களிடம் உள்ளதா அல்லது சும்மா அளக்கிறீர்களா? 

இலங்கைநீதி மன்றங்களில் 6௦ வயதுக்கு மேற்பட்ட சாட்சிகளின் கையெழுத்து மறுக்கபடுவது தெரியாமல்த்தான் இவ்வளவு அரசியல் அலப்பறையுமா நம்ப முடியலை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, பெருமாள் said:

ஏன் இந்த அவலநிலை?

என்ன நடந்தது தமிழரசுக் கட்சிக்கு?

சும்  இந்த விமர்சனத்தின் பின்னராவது திருந்துவாரா?

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, nochchi said:

சும்  இந்த விமர்சனத்தின் பின்னராவது திருந்துவாரா?

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

திருந்த மாற்றார்... தமிழ் தேசிய நீக்கம் அவர்து இலட்சியம்....ஆனால் தமிழர்கள்  தமிழ் தேசியத்தை நீக்கினாலும் சிங்கள தோழர்கள் இன்னும் இரண்டு வருடத்தில் மீண்டும் தமிழர்கள் தமிழ் தேசியத்தை நோக்கி செல்லும் செயலில் நிச்சயம் ஈடுபடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, putthan said:

திருந்த மாற்றார்... தமிழ் தேசிய நீக்கம் அவர்து இலட்சியம்....ஆனால் தமிழர்கள்  தமிழ் தேசியத்தை நீக்கினாலும் சிங்கள தோழர்கள் இன்னும் இரண்டு வருடத்தில் மீண்டும் தமிழர்கள் தமிழ் தேசியத்தை நோக்கி செல்லும் செயலில் நிச்சயம் ஈடுபடுவார்கள்

வலையொளித் தளங்களில் தமிழரே, தமிழரை இனவாதிகள் என்று எழுதும் அளவுக்குச் சிங்கள இனவாதம் தேய்ந்துபோய்விட்டதாக அல்லவா, சிங்கள்தால் ஏற்பட்ட காயம் மாறாத கைகளால் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, nochchi said:

சும்  இந்த விமர்சனத்தின் பின்னராவது திருந்துவாரா?

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

"கெடு குடி சொல் கேளாது."
சுமந்திரனை... தமிழரசு கட்சியில் கொண்டு வந்து சேர்த்த,
சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் கூட... 
சுமந்திரனால் அவமானப்பட்டு நொந்து போனதுதான் மிச்சம்.  
அதிலை ஒருத்தர் செத்துப் போனார், இன்னொருத்தர் ஆஸ்பத்திரியிலை படுத்து கிடக்கிறார்.

யமனை... பச்சடி போட்ட ஆள்தான்,  சுத்துமாத்து சுமந்திரன்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

"கெடு குடி சொல் கேளாது."
சுமந்திரனை... தமிழரசு கட்சியில் கொண்டு வந்து சேர்த்த,
சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் கூட... 
சுமந்திரானால் அவமானப்பட்டு நொந்து போனதுதான் மிச்சம்.  
அதிலை ஒருத்தர் செத்துப் போனார், இன்னொருத்தர் ஆஸ்பத்திரியிலை படுத்து கிடக்கிறார்.

சும்முக்குள் மனித உணர்வு இருந்தால் இப்போதாவது ஒதுங்கித் தன்னைச் சுயவிமர்சனம் செய்தகொண்டு  நேர்மையாளனாக மாறலாம் அல்லவா? மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருந்தால், தமிழ்தேசிய நீக்கம்தான் உண்மையான நோக்கமென்றால் மாறவாய்ப்பில்லை.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, nochchi said:

சும்முக்குள் மனித உணர்வு இருந்தால் இப்போதாவது ஒதுங்கித் தன்னைச் சுயவிமர்சனம் செய்தகொண்டு  நேர்மையாளனாக மாறலாம் அல்லவா? மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருந்தால், தமிழ்தேசிய நீக்கம்தான் உண்மையான நோக்கமென்றால் மாறவாய்ப்பில்லை.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

சும்முக்கு... மனித நேயமாவது, மண்ணாங்கட்டியாவது. 😎
சிங்களத்தின் அதிரடிப்படையுடன் ஊருக்குள் 32 பல்லையும்  காட்டிக் கொண்டு வலம் வந்து  பந்தா காட்டுவதற்காக,   தன்னை  கொல்ல  சதி  என்று.. ஊனமுற்ற  முன்னாள் போராளிகளை மீண்டும்  சிறையில் அடைக்க எந்த மனிதனாவது யோசிப்பானா? 
பெரும்பாலான  கள்வர்கள்... சாகும் மட்டும் கள்ளக் குணத்துடனேயே இருப்பார்கள். 😂
அதுகள்... திருந்துறது எண்டால், கல்லில் நார் உரிக்கிறதுக்கு சமன். 🤣

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

இலங்கைநீதி மன்றங்களில் 6௦ வயதுக்கு மேற்பட்ட சாட்சிகளின் கையெழுத்து மறுக்கபடுவது தெரியாமல்த்தான் இவ்வளவு அரசியல் அலப்பறையுமா நம்ப முடியலை .

உங்கள் கூற்றிற்கு ஆதாரம் இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

உங்கள் கூற்றிற்கு ஆதாரம் இருக்கிறதா? 

இதற்கெல்லாம் ஆதாரம் எதிர்பார்க்கிறீர்களே😂? வரும், பொறுத்திருங்கள்😎!

5 hours ago, nochchi said:

சும்  இந்த விமர்சனத்தின் பின்னராவது திருந்துவாரா?

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

தமிழ்வின், 2015 இலும், 2020 இலும் இதை விட மோசமான விமர்சனங்களுடன் தாக்கியது. இரு தேர்தல்களிலும் சுமந்திரனுக்கு மக்கள் வாக்களித்து வெல்ல வைத்தனர். இதன் பின்னராவது தமிழ்வின் போன்ற ரொய்லெற் ஊடகங்கள் ஏன் திருந்தவில்லை என்றும் கேட்டு வையுங்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Justin said:

இதற்கெல்லாம் ஆதாரம் எதிர்பார்க்கிறீர்களே😂? வரும், பொறுத்திருங்கள்😎!

தமிழ்வின், 2015 இலும், 2020 இலும் இதை விட மோசமான விமர்சனங்களுடன் தாக்கியது. இரு தேர்தல்களிலும் சுமந்திரனுக்கு மக்கள் வாக்களித்து வெல்ல வைத்தனர். இதன் பின்னராவது தமிழ்வின் போன்ற ரொய்லெற் ஊடகங்கள் ஏன் திருந்தவில்லை என்றும் கேட்டு வையுங்கள்😂!

உண்மைதான். இதுபோன்ற ரொய்லெற் ஊடகங்களும் இல்லையென்றால் சும் போன்றவர்களது ஊத்தைகள் வெளிவராதுதான்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

12 hours ago, தமிழ் சிறி said:

சும்முக்கு... மனித நேயமாவது, மண்ணாங்கட்டியாவது. 😎
சிங்களத்தின் அதிரடிப்படையுடன் ஊருக்குள் 32 பல்லையும்  காட்டிக் கொண்டு வலம் வந்து  பந்தா காட்டுவதற்காக,   தன்னை  கொல்ல  சதி  என்று.. ஊனமுற்ற  முன்னாள் போராளிகளை மீண்டும்  சிறையில் அடைக்க எந்த மனிதனாவது யோசிப்பானா? 
பெரும்பாலான  கள்வர்கள்... சாகும் மட்டும் கள்ளக் குணத்துடனேயே இருப்பார்கள். 😂
அதுகள்... திருந்துறது எண்டால், கல்லில் நார் உரிக்கிறதுக்கு சமன். 🤣

அப்ப மரத்துப்போன மனிதரென்று முடிவெடுத்துவிட்டீஙகளா?

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nochchi said:

உண்மைதான். இதுபோன்ற ரொய்லெற் ஊடகங்களும் இல்லையென்றால் சும் போன்றவர்களது ஊத்தைகள் வெளிவராதுதான்.

சும் தவிர்ந்த மிகுதி அனைவர்ரும் டமில் தேசியவாதிகள் என்கிறீர்கள்? 

தங்கள் ரசனைக்கு Iron Chef Award கொடுக்கலாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, nochchi said:

உண்மைதான். இதுபோன்ற ரொய்லெற் ஊடகங்களும் இல்லையென்றால் சும் போன்றவர்களது ஊத்தைகள் வெளிவராதுதான்.

சும் பற்றி உங்கள் "உண்மை விளம்பி ஊடகங்கள்😎" சொன்ன பொய்கள் எதுவும் இது வரை தாயக வாக்காளர்களை மாற்றவில்லை. புலம் பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைத் தாமே சொறிந்து இன்பங்காண மட்டுமே இந்த ஊடகங்கள் உதவுகின்றன. பலருக்குச் சுகமாக இருக்கும் இந்த ஊடகங்கள் முதுகைச் சொறிந்து விடும் போது😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kapithan said:

சும் தவிர்ந்த மிகுதி அனைவர்ரும் டமில் தேசியவாதிகள்

😂

வெளிநாட்டில் தமிழ்தேசியம்பேசிய பலர் அனுரகுமார திசநாயக்கவை தலைவராக ஏற்கொண்டுள்ளதோடு அவருக்கு ஒரே புகழ்  பாட்டு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

😂

வெளிநாட்டில் தமிழ்தேசியம்பேசிய பலர் அனுரகுமார திசநாயக்கவை தலைவராக ஏற்கொண்டுள்ளதோடு அவருக்கு ஒரே புகழ்  பாட்டு தான்.

வியாபாரிகளுக்கு எங்கே முதலிட வேண்டும் என்பது தெரியும். அவர்களுக்கு தேசியமும் புண்ணாக்கும் வியாபாரப் பண்டமே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/10/2024 at 01:22, Justin said:

இதற்கெல்லாம் ஆதாரம் எதிர்பார்க்கிறீர்களே😂? வரும், பொறுத்திருங்கள்😎!

தமிழ்வின், 2015 இலும், 2020 இலும் இதை விட மோசமான விமர்சனங்களுடன் தாக்கியது. இரு தேர்தல்களிலும் சுமந்திரனுக்கு மக்கள் வாக்களித்து வெல்ல வைத்தனர். இதன் பின்னராவது தமிழ்வின் போன்ற ரொய்லெற் ஊடகங்கள் ஏன் திருந்தவில்லை என்றும் கேட்டு வையுங்கள்😂!

வகுப்பில் குழப்படிகாரரை மாணவ தலைவனாக நியமித்தால் பிரச்சினை வராது எனும் உத்தியாக இருக்குமோ?😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Justin said:

சும் பற்றி உங்கள் "உண்மை விளம்பி ஊடகங்கள்😎" சொன்ன பொய்கள் எதுவும் இது வரை தாயக வாக்காளர்களை மாற்றவில்லை. புலம் பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைத் தாமே சொறிந்து இன்பங்காண மட்டுமே இந்த ஊடகங்கள் உதவுகின்றன. பலருக்குச் சுகமாக இருக்கும் இந்த ஊடகங்கள் முதுகைச் சொறிந்து விடும் போது😂

இந்த ரொய்லெற் ஊடகங்கள் புகழ்பாடேக்கை ரொய்லெற் ஊடகங்கமாத் தெரியவில்லை.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.