Jump to content

தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார், என்ற அவர், “ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைப் பின்பற்றுவோம்,” என்றார்.

“அதாவது, ஒவ்வொரு தனிமனிதரின் கடவுள் வழிபாடு என்பது அவரவர் விருப்பம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்," என்றார் நடிகர் விஜய்.

 

10 hours ago, ஏராளன் said:

வீரமங்கை வேலுநாச்சியாரும், த.வெ.க-வின் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி த.வெ.க தான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும், சுயநலமின்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்," என்று விஜய் கூறினார்.

 

10 hours ago, ஏராளன் said:

இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,”


சேரும் கூட்டம் அத்தனையும் வாக்காகாது என்பது சிவாஜி, ரஜனி, கமல் என பலர் தமிழ் நாட்டில் காட்டிச் சென்றுள்ள அனுபவப்பாடம்.

ஆனால் எம் ஜி ஆர், விஜயகாந்த் என இதற்கு விதிவிலக்குகளும் உள்ளனர்.

விஜையும் ஒரு விதி விலக்காக அமைய வேண்டும் என்பது என் மனதார்ந்த அவா.

முன்பு யாழில் சீமானை நான் கடுமையாக விமர்சித்த போது - அவர் எப்படி பட்ட அரசியலை செய்தால் நீங்கள் வரவேற்பீர்கள் என பலர் அடிக்கடி கேட்டு, நான் பலதடவை எழுதிய பதில்….

மொழிவாரி பிரிப்புக்கு பின்,

திராவிட/பெரியாரிய கொள்கையின் தொடர்ச்சி = தமிழ் தேசியம் என சீமான் கூற வேண்டும்,

அனைவரையும் தமிழர்களாக ஏற்க்கும் வட்டத்தை பெருப்பிக்கும் அரசியல் செய்ய வேண்டும்…

குறிப்பிட்ட சில ஆதிக்க சாதியினரின் (தெலுங்கு வம்சாவழியினர் உட்பட்ட) அதிகாரத்தை மட்டுப்படுத்த, சாதிக் கணக்கெடுப்பை நடத்தில் அதன்படி ஒதுக்கீடு வழங்க கோரல் வேண்டும்.

உணர்ச்சி வயப்படுதல், அவதூறு பேசல் போன்ற அடாவடி அரசியலை கைவிட வேண்டும்…

இவ்வாறு நான் பட்டியல் இட்ட பலதை விஜை செயலில் கொண்டு வந்துள்ளார், கொள்கை விளக்கம் என்ற அடிப்படையிலாவது.

விஜை வெல்வாரா இல்லையா என்பதை விட, அவரின் கருத்துகள், கொள்கை பிரகடனம், அரசியல் செய்யப்போவதாக சொல்லும் முறை - மிக சரியாக இருக்கிறது.

கூட்டணியில் மட்டும் அல்ல, தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது எல்லாம் அரசியல் நகர்வின் அடுத்த கட்டம். நிச்சயம் திமுக கூட்டணியில் இருந்து திருமாவை கிளப்ப விஜை முயல்கிறார். முயற்சி வெற்றி பெற வேண்டும்.

அதே போல் பாரி வேந்தர், கம்யூனிஸ்ட், இன்னும் சிலரை இணைக்க முயலவேண்டும்.

மிக முக்கியமாக பிசிறு என சீமானால் கேவலப்படுத்த பட்டு உள்ளே குமைந்து கொண்டிருக்கும் காளி அம்மாள் போன்ற உத்வேகம் மிக்க தமிழ் தேசிய அரசியல்வாதிகளை சீமான் போன்ற போலிகளிடம் இருந்து விஜை தன்பக்கம் ஈர்க்க வேண்டும்.

விஜை செய்ய விழைவது தமிழ் தேசியத்தை தமிழ்நாட்டில் re branding செய்யும் முயற்சி.

திராவிட கொள்கை கருணாநிதி குடும்பத்திடமும், தமிழ் தேசியம் சின்ன கருணாநிதி சீமானிடம் சிக்கி கொண்டுள்ளன, இவை இரண்டையும் மீட்டு, காலத்துகேற்ப்ப புதுப்பித்து, நீக்க வேண்டியவை (கடவுள் மறுப்பு) நீக்கி, ஏலவே பல ஒற்றுமைகளை உடைய இரு தத்துவார்த்த வழிகளையும்  ஒன்றாக்கி பயணிக்க வேண்டியது தமிழ் நாட்டின் மீட்சிக்கு அத்தியாவசியமானது.

இந்த பெரும்பணியை விஜை என்ற தனிமனிதனால் செய்ய முடியாமல் போகலாம்….

அப்படி ஆககூடாது….

விஜை தன் முயற்சியில் வெல்ல வேண்டும் என்பது இயற்கையிடம் என் மன்றாட்டம்.

 

Edited by goshan_che
  • Like 3
Link to comment
Share on other sites

  • Replies 305
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

island

பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

பாலபத்ர ஓணாண்டி

கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்னாடி சீமான் தான் அதை பேசுபொருளாக்கி இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்திருக்கிறார்..

அதை தொடர்ந்து இன்று விஜை திராவிடமும் தமிழ்தேசியமும் தனது இருகண்கள் என்று சொல்லி இருக்கிறார்..

அவர் சொல்வது சரி பிழை வெல்வார் தோற்பார் என்பதற்கு அப்பால் ஒரு சினிமா பிரபலத்துடன் வந்திருப்பவர் ஓட்டு போடுரமோ இல்லையோ என்னதான் பேசுகிறார் என்று ஒட்டுமத்த தமிழ்மக்களும் உற்று பாத்துக்கொண்டிருக்ககூடிய ஒருவர் தமிழ்தேசியத்தை தனது வாயில் இருந்து உச்சரித்திருக்கிறார்.. தனது கொள்கைகள் இரண்டில் ஒன்று என்று சொல்லி இருக்கிறார்.. அவ்வளவு மக்களையும் தமிழ்தேசியம் என்ற சொல் சென்று சேர்ந்திருக்கும்..

உலகம் எங்கும் பரந்து வாழும் என்போன்ற உண்மையிலேயே மனசார சாதிபேதமற்ற தமிழ் தேசியத்தை நேசிக்கும் (பைத்தியக்கார கடும்போக்கு ஈழத்தமிழ் சுயநல தமிழ்தேசிய அல்லது விளக்கமில்லா விசருகள் அல்லது சுயநலத்துக்கு கடும்தேசியம் பேசும் புலம்பெயர் கூட்டத்தை அல்ல) என் போன்ற பலர் ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் இது..

 

இந்த உழைப்பு முழுவதும் சீமானை சாரும்.. அவருக்கு முன் தமிழ்நாட்டில் குழுக்களாக இயங்கிய இயங்கும் தமிழ்தேசிய இயக்கங்களையும் சாரும் என்றாலும் தமிழ் தேசியத்தை அரசியல் மயப்படுத்தியதில் சீமானைத்தான் சாரும்.. 

இப்படி இன்னும் பல தமிழ்தேசியக்கட்சிகள் இனி வரும்.. தமிழ் தேசியத்துக்கு இனி ஏறு முகம்தான்..💪

 

விஜை பெரியார் சிலைக்கு பூ போட்ட பின்னும் கூட,  பூமர் அங்கிள், கூட்டணிக்கு காத்திருக்கிறேன், மாநாட்டுக்கு அழைத்தால் போவேன் என்று வாயைவிட்டு இறைஞ்சினார்.

ஆனால் இந்த விஜை கொஞ்சமும் இரக்கமில்லாமல் திடலில் பெரியார் கட் அவுட், கொள்கையில் பெரியாருக்கு முதலிடம் கொடுத்ததும் இல்லாமல்,

மேற்கோள் காட்டி, வரலாற்றை பேசி, மேடையில் அழகு தமிழில் உரக்க பேசும் வெறுப்பரசியலையும் செய்யமாட்டோம் என பூமர் அங்கிளின் நடுமண்டையிலேயே போட்டிருக்கார்🤣.

போட்ட போடுகையில்…தம்பி தம்பி என நெஞ்சை நக்கிய அங்கிள், ஓவர் நைட்டில் பிளேட்டை திருப்பி போட்டு, 2026 இல் தனிய நிண்டு டெபாசிட் தானம் பண்ணப்போவதாக சபதம் எடுத்துள்ளார்🤣.

போலிகளை நம்பி ஏமாறாதீர்!

உங்கள் சகலவிதமான தமிழ் தேசிய அபிலாசைகளுக்கும் (தமிழ் நாட்டில்) நாட வேண்டிய ஒரே இடம் த.வெ.க.

அவர்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

திராவிடமும் தமிழ்த்தேசியமும் எப்படி ஓன்றாக முடியும்.2 தோணியில் கால்வைக்கிறார். கொள்கைத் தெளிவு இல்லை. கொள்கைக்குழப்பம்.இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் சிதறட்டும்.

பிரித்தானிய லேபர் பார்ட்டி ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் ஒரு சேர வெற்றிகரமாக கைக்கொள்ளவில்லையா? அதேபோல் இதுவும் சாத்தியமே.

ஏலவே இரெண்டும் மிக நெருங்கிய கொள்கைகளே.

தமிழ் தேசியத்தில் இருந்து தெலுங்கு வம்சாவழி வெறுப்பையும், திராவிடத்தில் இருந்து தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் மற்றும் ஊழலையும் நீக்கி விட்டால், இரு கொள்கைகளும் ஒன்றேதான்.

மீசை வைத்தால் இந்திரன் தமிழ்தேசியம், மீசை எடுதால் சந்திரம் திராவிடம்.

இன்னொரு திரியில் கருவாட்டு சாம்பார் என்றீர்கள்.

கறி இட்லியை போல் இதுவும் ஒரு வகை புதிய டிஷ் என சாப்பிட்டு பாருங்கள்🤣.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி தற்கொலைக்கு சமம்.. திராவிடத்தை கொன்று புதைப்பேன்.. விஜய் அறிவிப்பால் சீமான் ஆவேசம்

Mathivanan MaranPublished: Monday, October 28, 2024, 8:22 [IST]
 

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

சென்னை: தேர்தல் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது; அதற்கு பேசாமல் விஷம் குடித்துவிட்டே படுத்துவிடலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்த நிலையில் சீமான் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், பிளவுவாத சக்தியான பாஜகவும் ஊழல்வாதிகளான திமுகவும்தான் சித்தாந்த, அரசியல் எதிரிகள் என அறிவித்தார். மேலும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்; தவெக ஆட்சியில், அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு எனவும் அறிவித்தார். அதேபோல திராவிடமும் தமிழ்த் தேசியமும் தங்களது இரு கண்கள் என்றார் விஜய்.

நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு சிறிய கட்சிகள், கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே 'தம்பி விஜய்' என பாசமாக அழைத்து வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், நேற்றைய பேச்சைத் தொடர்ந்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

இது தொடர்பாக சீமான் கூறுகையில், தந்தை பெரியார் மட்டுமே பெண்ணுரிமைக்காக போராடவில்லை. வேலுநாச்சியார் போராடும் போது தந்தை பெரியாரே பிறக்கவில்லை. பாரதியாரைப் போல பெரியாரும் பெண் உரிமைக்காகப் போராடினார். அவ்வளவுதான். திராவிடமும் தமிழ்த் தேசியமும் தமது கண்கள் என்கிறார் விஜய். அவரது கட்சியின் கொள்கைகள் நாம் தமிழர் கட்சிக்கு ஒத்துவராதவை; எதிரானவை என்றார்.

மேலும் கூட்டணி என்பதே தற்கொலைக்கு சமமானது. கொள்கைகளில் உடன்பாடு இல்லாத போது எதற்காக கூட்டணி வைக்க வேண்டும்? கூட்டணி என முடிவெடுத்துவிட்டால் அது ஒவ்வொரு கட்சிக்கும் தற்கொலைக்கு சமமானதுதான். அதற்கு விஷம் குடித்துவிட்டு படுத்துவிடலாம். ஏன்?

உங்க தனித்துவத்தை இழந்துவிடுவீர்கள். உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் கோபித்துக் கொள்வார் என நினைத்தால் நீங்கள் என்ன பேசுவீர்கள்? நீங்க செய்கிற தவறுகளுக்கு எல்லாம் நான் வக்காலத்து வாங்கி பேசனுமா? முட்டுக் கொடுக்கனுமா? அதை ஏற்பீர்களா நீங்கள்? கூட்டணி வைத்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்கிறீர்கள்.. கட்சியை காப்பாற்றுவதுதான் லட்சியம் என்றால் எந்த லட்சியத்தை காப்பாற்ற கட்சியை தொடங்குனீங்க? எனக்கு அதில் உடன்பாடு இல்லை..

கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு நான் தோற்றுதான் போகிறேன்.. உங்களுக்கு என்ன இழப்பு? என் முன்னோர்கள் செய்த தவறை நான் செய்யமாட்டேன்.. எங்க கட்சியை உருவாக்கிய சிபா ஆதித்தனார், மபொசி என எல்லா தமிழ்த் தேசிய அரசியல் முன்னோர்கள் எல்லாம் திராவிடத்தில்தான் கரைந்தனர். அந்த திராவிட பூதம் தின்று விழுங்கிவிட்டது. நான் ஒருத்தன்தான் திராவிடத்தை கொன்று புதைக்க வந்தவன். அப்ப என்னையாவது சுதந்திரமாக விடவேண்டும். என்னை ஏன் கூட்டணிக்கு போ என்கிறீர்கள்? இவ்வாறு சீமான் கூறினார்.

 

https://tamil.oneindia.com/news/chennai/declaration-by-actor-vijay-seeman-strongly-opposes-alliance-politics-dravidian-movements-650091.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

 

டிஸ்கி: ரத்த கொதிப்பு, ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

மேற்கோள் காட்டி, வரலாற்றை பேசி, மேடையில் அழகு தமிழில் உரக்க பேசும் வெறுப்பரசியலையும் செய்யமாட்டோம் என பூமர் அங்கிளின் நடுமண்டையிலேயே போட்டிருக்கார்

அண்ணை விசை மாநாட்டிலே நான் ரசித்தது அதைத்தான். உரக்க பேசும் அரசியல் நாம்  செய்யமாட்டோம் என்று மூலம் வெளியாலை வருமளவு உரக்க பேசினதையையே. விசையின் கெத்து தி.மு.க அண்டா குண்டா சொம்பு பத்திரிக்கையாளர்களால் சுற்றப்பட்டு கொத்துபுரோட்டா போடப்படும்போதுதான் தெரியும். இன்னும் எவ்வளவோ இருக்கு. ஒரு எதிர்கட்சித்தலைவரையே காமெடிபீஸாக/குடிகாரனாக  மீம்ஸ் மெட்டீரியலாக மாற்றி சுவடே தெரியாமல் அழித்த அரசியல் களம் இது. இந்த பாம்பை பார்த்து புஸ் விடுவது அவரது சினிமாவில் வேண்டுமென்றால் நடக்கலாம். பார்ப்போம் தமிழக வெற்றிக்கழகமாக போகிறாரா இல்ல திரிஷா விஜய் கழகமாக போய் நம்ம ஆண்டவர் டார்ச்சை அணைத்து எறிந்துபோட்டு உடைஞ்ச டீ.வியையும் ரிமோட்டையும் தூக்கிட்டு திராவிடர்களிடம் ஓடியது போல ஓடுறாரா என்று         

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை விசை மாநாட்டிலே நான் ரசித்தது அதைத்தான். உரக்க பேசும் அரசியல் நாம்  செய்யமாட்டோம் என்று மூலம் வெளியாலை வருமளவு உரக்க பேசினதையையே. விசையின் கெத்து தி.மு.க அண்டா குண்டா சொம்பு பத்திரிக்கையாளர்களால் சுற்றப்பட்டு கொத்துபுரோட்டா போடப்படும்போதுதான் தெரியும். இன்னும் எவ்வளவோ இருக்கு. ஒரு எதிர்கட்சித்தலைவரையே காமெடிபீஸாக/குடிகாரனாக  மீம்ஸ் மெட்டீரியலாக மாற்றி சுவடே தெரியாமல் அழித்த அரசியல் களம் இது. இந்த பாம்பை பார்த்து புஸ் விடுவது அவரது சினிமாவில் வேண்டுமென்றால் நடக்கலாம். பார்ப்போம் தமிழக வெற்றிக்கழகமாக போகிறாரா இல்ல திரிஷா விஜய் கழகமாக போய் நம்ம ஆண்டவர் டார்ச்சை அணைத்து எறிந்துபோட்டு உடைஞ்ச டீ.வியையும் ரிமோட்டையும் தூக்கிட்டு திராவிடர்களிடம் ஓடியது போல ஓடுறாரா என்று         

உண்மைதான்.

ஆனால் என்ன தான் உபிஸ் 200 ரூபாய்க்கு ஓவர் டைம் பார்த்தாலும், மீம்ஸ் பேக்டரிகள் இயங்கினாலும்…எடப்பாடி, கமல், அண்ணாமலை, சீமான் …வஞ்சகம் இல்லாமல் மீம்ஸ்க்கு கண்டெண்ட் கொடுத்தார்கள் என்பதும் உண்மை.

விஜை இதை தன் பேச்சிலேயே, எம்மை பி டீம் என பச்சை குத்த முடியாது, மீம்ஸ் போட்டு கலாய்க்க முடியாது என கூறியது அவருக்கு விசயம் விளங்கவாவது செய்கிறது என நினைக்க வைக்கிறது.

நிச்சயம் விஜை வெல்ல இருப்பதை விட தோற்க இருக்கும் நிகழ்தகவே தற்போது அதிகம்.

ஆனால் எனக்கு அவரை எதிர்க்க ஒரு காரணமும் இன்னும் இல்லை, ஆதரிக்க பல காரணங்கள் உண்டு.

எப்படியோ திமுக பக்கம் எதிர்காலம் உதய்ணா என்பது கண்கூடு.

ஆகவே வரும் காலம்

விஜைண்ணா vs  உதய்ணா என அமைந்தால் நல்லது என நினைக்கிறேன்.

விஜையை பற்றி

மக்கா மிசி, பிரச்சனையை லெப்ட் ஹாண்டில டீலு பண்ணுற மைக்கல் ஹசி என நான் சொல்லவில்லை…/

மச்சி it’s a long way to go என்பதை நானும் ஏற்கிறேன்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che  மீண்டும் தொடங்கும் மிடுக்கு. 👍மீள்வருகை நல்வரவாகுக. 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

ஒருத்தனை அழிக்கணும் என்றால் ஒன்றில் முகத்துக்கு நேரே சண்டை போடணும் அதைவிட இலகுவான வழி கூட இருந்து  குழி பறிக்கனும் அதே திராவிடம் கடைசி சண்டையில் என்ன செய்தது ?

மானாட மயிலாட ஆட்டி கொண்டு இருந்தது

தங்கள் தலையில் தாங்களே தொடர்ந்து மண் அள்ளி போட்டுவிட்டு அடுத்தவன் வந்து உதவில்லை என்று புலம்பல். 

எல்லா தீர்மானங்களையும் தாங்களே எடுப்பினமாம். சொதப்பின உடனே அடுத்தவன் எல்லாம் தனது வேலை எல்லாத்தையும் விட்டுட்டு வந்து ஹெல்ப் பண்ணணுமாம். அதுக்குள்ள 25 நாடு வந்து  அழிசிட்டுன்று வேற புலம்பல். 

ஒருவர் எடுத்த தீர்மானத்தின் விளைவை அவர் அல்லது அவரின் தலைமுறை தான் அனுபவிக்க வேண்டும். அதிலிருந்து மீள வேண்டும். சும்மா அடுத்தவன் மீது பழி போட்டு தப்பிப்பது வீரம் இல்லை. பக்கா கோழைத்தனம். 

சரி இப்பவாவது தெரிஞ்சிட்டுது இல்ல.  இனியாவது தலையில் தாமே மண் அள்ளி போடாமல் தலைக்குள்ள இருகிற களி மண்டை cleanup பண்டீட்டு கொஞ்சமாவது அறிவை ஊட்டவேண்டும். அதுவே உய்யுறத்துக்கு வழி. 

 

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கமலை இறக்கி பார்த்தார்கள். ரஜனியை இறக்கி பார்த்தார்கள். 
இப்பொழுது விஜய்.
பொறுமை புலம்பெயர்ந்தவர்களே. ஒரு சராசரி மனிதனுக்கு புரியும் படி இப்பொழுது எந்த அரசியல் காய் நகர்த்தல்களும் இடம்பெறுவதில்லை. நாம் பார்ப்பதையும் அவர்கள் பேசுவதையும் வைத்து எந்த முடிவிற்கும் வர முடியாது.  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

எதை வைத்து மொழி உருவாக்கம் நடைபெரும்  என்று சொல்கிறீர்கள் ?

உலக வரலாற்றை வைத்து. பல மொழிகள் உருவானது ஒரு நாளில் அல்ல.  ஒன்று பலவாகியது தான் வரலாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை விசை மாநாட்டிலே நான் ரசித்தது அதைத்தான். உரக்க பேசும் அரசியல் நாம்  செய்யமாட்டோம் என்று மூலம் வெளியாலை வருமளவு உரக்க பேசினதையையே. விசையின் கெத்து தி.மு.க அண்டா குண்டா சொம்பு பத்திரிக்கையாளர்களால் சுற்றப்பட்டு கொத்துபுரோட்டா போடப்படும்போதுதான் தெரியும். இன்னும் எவ்வளவோ இருக்கு. ஒரு எதிர்கட்சித்தலைவரையே காமெடிபீஸாக/குடிகாரனாக  மீம்ஸ் மெட்டீரியலாக மாற்றி சுவடே தெரியாமல் அழித்த அரசியல் களம் இது. இந்த பாம்பை பார்த்து புஸ் விடுவது அவரது சினிமாவில் வேண்டுமென்றால் நடக்கலாம். பார்ப்போம் தமிழக வெற்றிக்கழகமாக போகிறாரா இல்ல திரிஷா விஜய் கழகமாக போய் நம்ம ஆண்டவர் டார்ச்சை அணைத்து எறிந்துபோட்டு உடைஞ்ச டீ.வியையும் ரிமோட்டையும் தூக்கிட்டு திராவிடர்களிடம் ஓடியது போல ஓடுறாரா என்று         

க‌ப்ட‌னையும்

விஜேயையும் ஒன்றாக‌ பார்ப்ப‌து த‌வ‌று

க‌ப்ட‌ன் தானாக‌வே பொல்லை கொடுத்து அடி வாங்கினார்

அதை விஜேய் செய்ய‌ மாட்டார்

ம‌க்க‌ள் ப‌ணியில் க‌வ‌ண‌த்தை காட்டி ஊட‌க‌ ச‌ந்திப்பை குறைத்து.....................ம‌க்க‌ளுக்கு சொல்ல‌ வேண்டிய‌தை ஊட‌க‌ம் மூல‌ம் சொல்லி விட்டு அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்தால் போதும்

 

க‌ப்ட‌னை வீழ்த்தின‌ மாதிரி விஜேயை திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்தால் வீழ்த்த‌ முடியாது......................விஜேய் எல்லாத்தையும் ந‌ங்கு பார்த்து விட்டு தான் அர‌சிய‌லில் குதித்து இருக்கிறார்......................... திமுக்காவின் 200ரூபாய் இணைய‌ கைகூலிக‌ளுக்கு விஜேயின் ர‌சிக‌ர்க‌ளே ச‌ரியான‌ ம‌ருந்து கொடுப்பின‌ம்........................60வ‌ருட‌ ப‌ழைமை வாய்ந்த‌ க‌ட்சி த‌ங்க‌ளின் புக‌ழ் பாட‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது க‌ல் எறிய‌ 200ரூபாய் கொடுத்து செய்ய‌ வைக்கின‌ம் என்றால் இதை விட‌ அசிங்க‌ம் வேறு என்ன‌ இருக்கு.......................ப‌ண‌ ப‌ல‌ம் எப்போதும் எல்லாத்தையும் தீர்மானிக்காது என்ப‌தை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் க‌ருணாநிதி குடும்ப‌ம் உன‌ருவின‌ம்.............................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

தங்கள் தலையில் தாங்களே தொடர்ந்து மண் அள்ளி போட்டுவிட்டு அடுத்தவன் வந்து உதவில்லை என்று புலம்பல். 

எல்லா தீர்மானங்களையும் தாங்களே எடுப்பினமாம். சொதப்பின உடனே அடுத்தவன் எல்லாம் தனது வேலை எல்லாத்தையும் விட்டுட்டு வந்து ஹெல்ப் பண்ணணுமாம். அதுக்குள்ள 25 நாடு வந்து  அழிசிட்டுன்று வேற புலம்பல். 

ஒருவர் எடுத்த தீர்மானத்தின் விளைவை அவர் அல்லது அவரின் தலைமுறை தான் அனுபவிக்க வேண்டும்.

இங்கை ஓராளுக்கு கல்லு எங்கை பட்டாலும் பின்னங்காலை தூக்கிறதே பிழைப்பாயிருக்கு. காலாகாலமா சிங்களவனுக்கு கால்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு அறிவுரை வேற! 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

100/100உண்மை🙏.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'திராவிடம், தமிழ் தேசியம், ஆட்சியில் பங்கு' - விஜய் பேச்சு பற்றி அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

தவெக மாநாடு, விஜய்

பட மூலாதாரம்,TVK

2 மணி நேரங்களுக்கு முன்னர்

“கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு”, “திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசியுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். அவருடைய கருத்துகள் குறித்து மற்ற அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், ““கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார்.

மேலும், “2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்றார்.

யாரையும் தாக்கி அரசியல் செய்யப் போவதில்லை என்றும், சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார்.

 

“ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார் அவர்.

விஜயின் இத்தகைய கருத்துகளுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். அவர்கள் என்ன கூறியுள்ளனர்?

தமிழ்நாடு அமைச்சர் எஸ். ரகுபதி கூறியது என்ன?

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “திராவிட மாடலின் கொள்கைகளை தமிழக மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை நேற்று விஜய் பேசியதில் இருந்து தெரிகிறது. அது நகல்தான். தமிழக மக்களின் இதயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கென தனி இடம் நிச்சயம் உண்டு. உழைப்பின் மற்றொரு வடிவமாக துணை முதலமைச்சர் உதயநிதி இருக்கிறார். அவருக்கும் மக்கள் மனதில் இடமுண்டு. இரவு, பகல் பாராமல் அரசியலில் உழைக்க வேண்டும், அது போகப்போக விஜய்க்கு தெரியும்” என்றார்.

 
தவெக மாநாடு, விஜய்

பட மூலாதாரம்,REGUPATHYMLA/X

படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகம், “பாஜகவின் சி டீம்” என்கிறார் அமைச்சர் எஸ். ரகுபதி

மேலும் தமிழக வெற்றிக் கழகம், “பாஜகவின் சி டீம்” என்றும் அவர் கூறினார்.

“தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ஆளுநரை எதிர்த்துப் பேசினால் தான் அரசியலில் எடுபடும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது” என்றார் அவர்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து விஜயின் கருத்து குறித்துப் பேசிய அவர், “ஆட்சிக்கு வரட்டும் பார்க்கலாம்” என்றார்.

அதிமுக குறித்து விஜய் பேசாதது குறித்து தெரிவித்த அவர், “அதிமுக தமிழகத்தில் எடுபடாது என்பது தெரிந்திருக்கிறது. அங்குள்ளவர்களை இழுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி பேசாமல் இருந்திருக்கிறார்” என கூறினார்.

திமுக ஆட்சியில் எந்த தவறுக்கும்இ டம் கொடுக்கவில்லை என்றும் பெரியார், அண்ணா, திமுக குறித்துப் பேசாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும் ரகுபதி கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கருத்து

விஜயின் கட்சி மாநாட்டால் அதிமுகவுக்கு எள்ளளவும் பாதிப்பில்லை என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக போராட்டக் களத்தின் மறுவடிவமாகவே தவெகவை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முதல் நிலையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். எங்கள் போராட்டக் களத்தின் மறு வடிவமாகத்தான் தவெக மாநாட்டை பார்க்கிறோம். எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன. எங்களுடைய எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள். மக்கள் நல சிந்தனை ஒன்றாக இருக்கிறது” என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் என்ன சொன்னார்?

“புதிய கட்சி தொடங்கியதற்காக விஜய்க்கு வாழ்த்துகள். உதயாவுக்கு ‘(உதயநிதி) எதிராக இக்கட்சி உதயமாகியிருக்கிறது. நல்ல முறையான தொண்டர்கள், எந்த வரம்பு மீறலும் இல்லை. தலைவர்களுக்கு மரியாதை, தாய், தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கியிருப்பது ஆரோக்கியமானது. மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட கருத்துகளை வரவேற்கிறேன். அம்பேத்கரை வரவேற்றதில் மகிழ்ச்சி” என்றார்.

“பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி” என விஜய் குறிப்பிட்டது குறித்து பேசிய தமிழிசை, “பாஜகவை கொள்கை எதிரி என விஜய் சொல்வதாக பிறர் கூறுகின்றனர் பிரிவினைவாதத்தை நாங்கள் பேசவில்லை. வளர்ச்சித் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அவர் சொன்ன பலவற்றை மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. இதை நான் அவரிடம் எடுத்துச் சொல்வேன். நாங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல” என்றார்.

 
தவெக மாநாடு, விஜய்
படக்குறிப்பு, அரசியல் எதிரி என விஜய் குறிப்பிட்டது திமுகவை தான் என கூறுகிறார், தமிழிசை

மேலும், பாஜக மீது தான் முன்வைக்கும் விமர்சனங்கள் உண்மையா இல்லையா என்பதில் விஜய்க்கு தயக்கம் இருக்கலாம் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

“அரசியல் எதிரி என விஜய் குறிப்பிட்டது திமுகவை தான். திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி வந்திருப்பதாக நினைக்கிறேன். இதே வீரியத்துடன் திமுக எதிர்ப்பில் விஜய் இருக்க வேண்டும்” என்றார்.

ஆளுநர் பதவியை விஜய் எதிர்ப்பது, இருமொழி கொள்கை ஆகியவை குறித்த விஜயின் கருத்துகளை எதிர்ப்பதாக தமிழிசை கூறினார்.

“ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன் என்று கூறுவது ஆரோக்கியமானது. தங்களுக்கு மாற்றே இல்லை என திமுக சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் மாற்றத்தைக் கொடுப்பேன் என வந்திருக்கிறார். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்வோம் என்று கூறியது வரவேற்புக்குரியது” என்று அவர் கூறினார்.

விஜய் பற்றி சீமான் கூறியது என்ன?

திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என விஜய் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

“இக்கருத்து தெளிவாக இல்லை. குழப்பமான மனநிலை தான் இருக்கிறது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. அது இரண்டும் கண்களாக இருக்க முடியாது, கொடிய புண்ணாகத்தான் இருக்கும். எல்லோருக்குமான அரசியல் தமிழ் தேசிய அரசியல். நான் பேசுவது பாசிசமோ, பிரிவினைவாதமோ இல்லை. நாங்கள் பேசுவது தேவையான அரசியல்” என்றார.

 
தவெக மாநாடு, விஜய்

பட மூலாதாரம்,SEEMAN

படக்குறிப்பு, “திராவிடத்தை ஏற்றுக்கொண்டு திமுகவை எதிர்க்கிறோம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது" என்கிறார் சீமான்

மேலும், திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது என்றும் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒரே தராசில் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

“திராவிடத்தை ஏற்றுக்கொண்டு திமுகவை எதிர்க்கிறோம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. எங்களின் ஒரே அரசியல் எதிரி திமுக” என்று சீமான் கூறினார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் கருத்து குறித்துப் பேசிய சீமான், “தனக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என நிரூபித்தால்தான் கூட்டணிக்கு வருவார்கள். 8.2 விழுக்காடு வாக்கு வங்கி வைத்திருக்கும் நானே கூட்டணிக்கு அழைக்கவில்லை. தன் வலிமையை காட்டிய பிறகு அழைப்பதுதான் முதிர்ச்சி” என்றார்.

கொள்கையில் ஒத்த கருத்து இல்லாமல் கூட்டணியில் இணைய முடியாது என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. கருத்து

காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், "சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது" என ஒற்றை வரியில் பதிவிட்டுள்ளார்.

விஜய் பேச்சு பற்றி விசிக நிர்வாகி கருத்து

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் விஜய். அவருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

 
தவெக மாநாடு, விஜய்
படக்குறிப்பு, அதிகாரத்தில் அனைவருக்கும் சம பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை விஜய் உணர்ந்திருப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல் என்றும் தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என்றும் அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கை ஓராளுக்கு கல்லு எங்கை பட்டாலும் பின்னங்காலை தூக்கிறதே பிழைப்பாயிருக்கு. காலாகாலமா சிங்களவனுக்கு கால்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு அறிவுரை வேற! 

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி ந‌ண்பா............................

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கை ஓராளுக்கு கல்லு எங்கை பட்டாலும் பின்னங்காலை தூக்கிறதே பிழைப்பாயிருக்கு. காலாகாலமா சிங்களவனுக்கு கால்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு அறிவுரை வேற! 

 வைத்த கருத்துக்கு தன் பதில் கருத்து வைக்கப்பட்டது.  முதல் வைத்த கருத்தையும் அதற்கு பதிலாக நான் வைத்த கருத்தையும் வாசித்து விளங்கும் தமிழறிவு முதல் தேவை உங்களுக்கு.  அதன் பின்னர் கருத்தியல் ரீதியாக பதில் தரலாம். 

அதென்னப்பா உங்க தோஸ்துகள் திருப்பி திருப்பி ஒரே விடயத்தை கூறும் போது silence mode போயிற்று,  அந்த கருத்துக்கு நான் பதில் கருத்து வைத்தவுடன் ஓடி வந்து பொங்கிறீங்க!

 நான் சொன்ன  உண்மை சுட்டுப்போட்டுதோ? 😂

நக்கி பிழைக்கும் கூட்டம் என்று நீங்கள் கையெழுத்திட அதன் க்கீழ் பையன் வந்து உங்களை நீண்ட நாள் காணவில்லை கண்டது மகிழ்சசி என்று எழுத……… 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, island said:

  நான் சொன்ன  உண்மை சுட்டுப்போட்டுதோ? 😂

போராட்டம் என்பது என்னென்றே தெரியாமல் காலாகாலமாக நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு, தான் தேர்ந்தெடுத்த கொள்கைக்காக கடைசிவரை போராடி மரணித்தவரை விமர்சிக்க எந்த தகுதியுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டியவராக மாறியுள்ள ஈழத்தின் பாடலாசிரியர்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கான உத்தியோகபூர்வ பாடல் ஒன்றை ஈழத்தின் பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் இடம்பெற்ற நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டில், குறித்த பாடலானது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பன்முக திறன்கள்

குறித்த பாடலாசிரியர் தமிழகத்திலுள்ள திருவண்ணாமலை கீழ்ப்பென்னாத்தூர் அங்காளபரமேஸ்வரிக்கும் பாடலை எழுதியுள்ளதோடு, தென்னிந்திய இசையமைப்பாளர் மற்றும் நடிகர் G V பிரகாஸ் இன் தயாரிப்பில் "நாம்" பாடல் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.

உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டியவராக மாறியுள்ள ஈழத்தின் பாடலாசிரியர்! | Lyricist Eelam Become Must Celebrate World Tamils

இவர் சிறுவயது தொடக்கம் இசையின் மீதும் கலைத்துறையின் மீதும் கொண்ட ஆர்வத்தால் சங்கீதத்தை முறையாக கற்றதோடு, தனது முயற்சிகளில் எப்போதும் பின்வாங்கியதுமில்லை.

குறித்த பாடலாசிரியர் இதுவரைக்கும் 300ற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். "செஞ்சோலை பாடல்கள் தொடக்கம் ஆனையிறவு நாயகனே" பாடல் தொட்டு ஈழத்தின் முதன்மையான ஆலயங்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் நடிகராகவும் பாடகராகவும் அறிவிப்பாளராகவும் திரைகதை எழுத்தாளராகவும் இயக்குனராகவும் மட்டுமன்றி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வு எழுத்தாளர் என பன்முக திறன்களைக் கொண்டவராகவும் விளங்கி வருகின்றார்.

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், தலைமைத்துவ பயிற்சி நெறிகள் போன்றவற்றை பாடசாலைகள் மற்றும் கிராம மட்டங்களிலும் முன்னெடுத்துள்ளார்.

https://tamilwin.com/article/lyricist-eelam-become-must-celebrate-world-tamils-1730089943#google_vignette

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Eppothum Thamizhan said:

போராட்டம் என்பது என்னென்றே தெரியாமல் காலாகாலமாக நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு, தான் தேர்ந்தெடுத்த கொள்கைக்காக கடைசிவரை போராடி மரணித்தவரை விமர்சிக்க எந்த தகுதியுமில்லை.

கருத்து களம் என்றால் அரசியல் கருத்தை தான் எழுத முடியும். நீங்கள் வேண்டுமானால் பஜனை பாடுங்கள். என்னை பஜனை பாட சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.  உலகில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.  

அரசியல் கருத்துக்களுக்கு நேர்மையான பதில் கருத்து எழுத முடியாத நேர்மையற்றவர்கள் தான் மரணித்த மாவீரர் பின்னால் ஒழிந்து கொள்வர். எனக்கு அந்த தேவை இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜேய் பீஜேப்பியின் C ரீம் 

திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் புல‌ம்ப‌ல்😁.....................

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, island said:

கருத்து களம் என்றால் அரசியல் கருத்தை தான் எழுத முடியும். நீங்கள் வேண்டுமானால் பஜனை பாடுங்கள். என்னை பஜனை பாட சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.  உலகில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.  

அரசியல் கருத்துக்களுக்கு நேர்மையான பதில் கருத்து எழுத முடியாத நேர்மையற்றவர்கள் தான் மரணித்த மாவீரர் பின்னால் ஒழிந்து கொள்வர். எனக்கு அந்த தேவை இல்லை.  

ஒரு போதும் எம‌க்காக‌ போராடி உயிர் நீத்த‌வ‌ர்க‌ளின் தியாக‌ங்க‌ளை கொச்சை ப‌டுத்த‌ வேண்டாம்.....................ஒரு நேர்மையான‌வ‌னுக்கு அழ‌கு யாழ் க‌ருத்துக‌ள‌த்தில் தொட‌ர்ந்து ஒரு பெய‌ரில் எழுதுவ‌து....................2009க்கு முத‌ல் வேறு வேச‌ம்....................இப்போது நீதிப‌தி வேச‌ம்............................எம் போராட்ட‌த்தை உயிருக்கு உயிரா நேசித்த‌வ‌ர்க‌ளுக்கு எம் போராட்ட‌த்தை நினைத்து பார்த்தால் ம‌ன‌ம் வேத‌னை ப‌டும் இவ‌ள‌வ‌த்தையும் இழ‌ந்தும் எம‌க்கு என்று நாடு கிடைக்க‌ வில்லை 

 

இப்போது என‌து விருப்ப‌ம் ஈழ‌ ம‌ண்ணில் வ‌சிக்கும் ம‌க்க‌ள் நின்ம‌தியா வாழ‌னும் என்று..................த‌மிழீழ‌ம் கிடைக்குதோ கிடைக்காம‌ போகுதோ அதை ஆண்ட‌வ‌னிட‌மே விட்டு விடுவோம்.........................ச‌ரியான‌ க‌ட்ட‌மைப்பு ச‌ரியான‌ த‌லைவ‌ர் இல்லாம‌ இனியும் நாம் பிரிவினைவாத‌ம் பேசி ந‌ம் த‌லையில் நாமே ம‌ண் அள்ளி போட‌க் கூடாது

இது என‌து பொதுவான‌ க‌ருத்து...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்குத் தலைவர் அமைந்தால் பாயசம், தலைவரே கட்சி என்றால் பாசிசம்!

Oct 28, 2024 07:00AM IST ஷேர் செய்ய : 
Fascism is a state where the leader is the party and the government

ராஜன் குறை  

மக்களாட்சி ஒரே நாளில் உருவாகவில்லை. அது வெகுகாலமாக அதிகாரக் குவிப்பிற்கும், அதிகார பகிர்விற்குமான இயங்கியலில் பரிணமித்தது.

அதிகாரப் பகிர்வு என்றால் கூட்டணி ஆட்சி என்பதல்ல. ஒரு நபரிடம் அதிகாரம்  குவியக் கூடாது என்பதுதான். ஆனாலும் ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்றால் அது ஒற்றை முடிவாகத்தான் இருக்கும். அதனை இறுதியாக எடுத்துச் செயல்படுத்தும் பொறுப்பு ஒருவரிடம் கொடுக்கப்படும். அந்த முடிவை இறுதி செய்பவராக தலைவர் என்று ஒருவர் நாட்டிற்கும், அரசுக்கும், நிறுவனத்திற்கும், எந்தவொரு குழுவிற்கும், கட்சிகளுக்கும் தேவைப்படுவார். அப்படி ஒருவர் தலைவராக இருப்பது எதைக் குறிக்க வேண்டும் என்றால் அவர் தலைமை தாங்கும் அமைப்புக்குள் பல்வேறு பார்வைகளும், அணுகுமுறைகளும், பல்வேறு நலன்களும் இருக்கும், அவற்றிற்குள் விவாதங்கள் இருக்கும்; அந்த விவாதங்களில் பயன்பெற்று ஒரு முடிவை இறுதி செய்யத்தான் தலைவர் தேவை என்பது பொருளாகும்.

சுருங்கச் சொன்னால் அரசியல் கட்சிகளுக்குத்  தலைவர் என்று ஒருவரை நியமிப்பது வசதி. அப்போதுதான் கட்சியிலுள்ள பல்வேறு தலைமைப் பண்பு கொண்டவர்களை, பல்வேறு மாறுபட்ட கருத்து நிலைகளை ஒருங்கிணைக்க முடியும். மக்களிடையே கட்சியின் ஒருமித்த முகமாக அவர் செயல்பட வேண்டும்.  அதனால் ஒவ்வொரு கட்சியும் சரியான தலைமை அமைய வேண்டும் என்று தேடுதலில் இருக்கும். பல சமயங்களில் அப்படி அமையும் தலைவர்கள் எதேச்சதிகாரமாக செயல்படத் துவங்குவதும் நடக்கும். அப்போது மெல்ல, மெல்ல கட்சியில் உற்சாகம் குன்றி, பிளவுகள் தலையெடுக்கும். மக்களிடையே அதன் செல்வாக்கு சரியும்.

இந்த வகையில் பொறுமையாக சிந்தித்தால் எந்த ஒரு நிறுவனமோ, அமைப்போ, கட்சியோ வலிமை பெறுவது என்பது எந்த அளவு பல்வேறு கருத்துநிலைகளின் விவாதத்திற்கு அது இடம் தருகிறது, எப்படி பல்வேறு அங்கங்களின் தேவைகளை, கோரிக்கைகளை மதித்து நடக்கிறது என்பதனையெல்லாம் பொறுத்துத்தான் அமையும். ஒற்றைத் தலைவரிடம் அதிகாரம் குவிவது குறுகிய காலத்திற்கு பலன் தரலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் அது பெரும் பலவீனத்திற்கே இட்டுச் செல்லும்.

Sdjvrqnt-Rajan-Kurai-2.jpg

அரசியல் கட்சி எப்படி உருவாக வேண்டும்? 

ஒரு அரசியல் கட்சி கட்டடம் கட்டுவது போல முதலில் அஸ்திவாரம் இட்டு, அதன் மேல் செங்கல்களை வைத்துக் கட்டி, சிமென்ட் பூசி, கான்கிரீட் உறுதிப்பாடு தேவையென்றால் அதனையும் அமைத்து, ஒவ்வொரு தளமாக உருவாக்கிச் செல்ல வேண்டும். கட்சியின் அஸ்திவாரம் என்பதை வேர்மட்டம் என்றும் ஆங்கிலத்தில் கிராஸ் ரூட் என்றும் சொல்வார்கள். எந்த கட்சிகளெல்லாம் வலுவான வேர்மட்ட அமைப்புகளின் மூலம் வலுப்பெறுகிறதோ அந்த கட்சிகளே நீண்ட காலம் நிலைத்து நிற்கும். எந்த கட்சியிலாவது தலைமை வலுவாக இருந்தாலும் வேர்மட்ட அமைப்புகள் கலைந்து போனால் அந்த கட்சி தாக்குப் பிடிப்பது கடினம்.

உதாரணமாகச் சொன்னால் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு பெருமளவு சீர்குலைந்தது. பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி என்ற மும்முனைப் போட்டியில் பலரும் காங்கிரஸிலிருந்து உள்ளிழுக்கப்பட்டார்கள். இன்றைக்கு பிரியங்கா, ராகுல் காந்தி போன்ற துடிப்புமிக்க தலைவர்கள் அங்கே இயங்கினாலும், கட்சி அமைப்பு சீர்குலைந்ததால் காங்கிரஸ் அங்கே காலூன்றுவது கடினமாகவே உள்ளது. வேறு பல மாநிலங்களிலும் காங்கிரஸ் இத்தகைய கட்டுமானச் சரிவை சந்தித்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்று சிறப்பு என்னவென்றால் மிக வலுவான வேர்மட்ட அமைப்புகளை அது உருவாக்கியதுதான். ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் தேநீர் கடைகளிலும், சலூன் கடைகளிலும், லாண்டரி கடைகளிலும், சைக்கிள் கடைகளிலும், கட்சிக் கிளைகளிலும், திருவள்ளுவர் மன்றங்களிலும் பலர் கூடி கட்சி ஏடுகளை வாசித்தார்கள். விவாதித்தார்கள். கட்சிக்கு என்று பெரும் லட்சியங்களும், கொள்கை, கோட்பாடுகளும் இருந்தன. தமிழ் மொழியின் பண்பாட்டுச் செழுமையினை அவர்கள் உரமாக்கிக் கொண்டார்கள். ஒரு புதிய அரசியல் சொல்லாடலை உருவாக்கினார்கள்.

zRafRvG1-Rajan-Kurai-3.jpg

அந்த வேர்கள் சமூக உளவியலில் ஆழமாகப் பற்றிப் பரவின. கவிதைகளாக, நாடகமாக, இலக்கியமாக அது பெரும் வீச்சினைக் கொண்டன. எங்களுடைய தி.மு.க துவக்க கால வரலாறு குறித்த Rule of the Commoner நூலில் காவியப் பாவலர் பண்ணன் என்ற உடுமலை நகர கிளை உறுப்பினரின் அனுபவப் பதிவுகளைக் கூறியுள்ளோம். அவருடைய வழிகாட்டியாக விளங்கிய பா.நாராயணன் அவரை கட்சி வேலைகளை நிறுத்திவிட்டு ஆனந்த விகடன் அறிவித்த இலக்கிய போட்டிக்கு நாடகம் எழுதி அனுப்பச் சொன்னதை விவரித்திருப்பார். அதற்காக கட்சி அனுதாபி ஒருவரிடம் சொல்லி அவரது தோட்டத்து வீட்டில் தங்கி முழு மூச்சாக எழுத வசதி செய்து தருகிறார். இப்படி ஆயிரம் பூக்களாக மலர்ந்த கட்சியைத்தான் சினிமா நடிகர்களால் வளர்ந்த கட்சி என்று ஒற்றைப் பரிமாணமாக பலர் புரிந்து கொள்கிறார்கள்.

அந்த சினிமா நடிகர்களின் காலத்தையெல்லாம் கடந்து நின்று இன்றும் இந்திய அளவில் திராவிட கருத்தியலை உயர்த்திப் பிடித்து சமூக நீதிக்கும், கூட்டாட்சிக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என்றால் எந்த அளவு அதன் வேர்கள் சமூகத்தில் பரவியுள்ளன என்பதை யாரும் சிந்தித்துப் பார்க்கலாம். வெறும் தேர்தல்களில் வெல்லும் சூத்திரம் அல்ல இது. மக்களாட்சி தத்துவம் என்ற மாபெரும் கனவு.

IgDGsdfI-Rajan-Kurai-4.jpg

அடித்தளம் இல்லாத கட்டடங்கள் 

ஊடகங்கள் பெருகப் பெருக, மக்களிடையே நன்கு அறிமுகமான ஒருவர் அவருடைய பிரபலத்தை முதலீடாக வைத்து கட்சி துவங்கிவிடலாம் என்று நினைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு  நாடுகளிலும்  ஊடகப் பிரபலங்கள் எதேச்சதிகார போக்கு கொண்ட தலைவர்களாக மாறுகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றால் பிரபலமானவர்தான். இவர் அதிபராக இருக்கும்போது யார் அறிவுரையையும் மதிக்காமல் முடிவுகள் எடுக்க முனைந்தவர், பாசிஸ்ட் என்று அவரிடம் பணியாற்றிய முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பாசிசம் என்பது தலைவரே கட்சி, ஆட்சி என்னும் நிலைதான். ஃபியூரர் கல்ச்சர் என்பார்கள். பெரும்பாலும் தன் பிரபலத்தை மட்டும் நம்பி கட்சி துவங்குபவர்கள் என்ன சொல்வார்கள் என்றால் நீங்கள் அனைவரும் சேர்ந்தவன்தான் நான் என்பார்கள். கர்ணன் படப் பாடலில் கிருஷ்ணன் பாடுவது போல “மன்னனும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடிகளும் நானே” என்று கூறுவார்கள்.

நாமெல்லாம் ஒன்றுபட்ட சக்தி என்று சொல்லும்போது அதுதான் பாசிசம் என்பதை உணர மாட்டார்கள். கட்சி என்றால் அதில் பல அடுக்குகளில் பொறுப்புகள் இருக்க வேண்டும். அந்த பொறுப்புகளை வகிப்பவர்களை தலைமை மதித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூற வேண்டும். அதன் பொருட்டுத்தான் மேடையில் பேசும்போது ஒவ்வொருவரின் பேரையும் கூறி “அவர்களே” என்று கூறுகிறார்கள். அதுதான் மக்களாட்சி பாயசம். அது ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் இயல்பிலேயே பாசிச மோகம் கொண்டுள்ளார் என்பது தெளிவு.

பெரும்பாலும் திரைப்பட நடிகர்கள் தமிழ்நாட்டில் கட்சி துவங்கும்போது இதுதான் நிகழ்கிறது. அவர்கள் ஒருவரை மட்டுமே, அவர்கள் பிரபலத்தை மட்டுமே முதலீடாக வைத்து கட்சி துவங்கப்படுகிறது. அவர் ஏதேதோ கொள்கைகளை எழுதி வைத்துப் படிக்கலாம். ஆனால் அவற்றை வடிவமைத்த கட்சி அமைப்பு எது. உயர்நிலைக் குழு எது, பொதுக்குழு எது என்றெல்லாம் தெரிய வேண்டும். அவர்களெல்லாரும் அந்தக் கொள்கைகளைப் பற்றிப் பேச வேண்டும்.

JLLe3FQi-Rajan-Kurai-5.jpg

நடிகர் விஜயகாந்த் மதுரையில் கட்சி துவங்கியபோது நடத்திய மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது ஆய்வு சார்ந்த களப்பணியில் இருந்ததால் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பாஸ் ஒன்றை நானும் பெற்றிருந்தேன். அதனால் விஜயகாந்த் கட்சி பெயரை அறிவித்தபோது மேடைக்கு வெகு அருகில் இருந்தேன். மக்கள் கூட்டம் அலைபோல மேடையை நோக்கி முண்டியபடி இருந்தது.  முதல் நாளே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு வளாகத்தில் குழுமியிருந்தார்கள். அவர்கள் பலருடன் உரையாடினேன். அவர்கள் அனைவரும் புதிய வரலாறு படைக்கப் போகிறோம், கேப்டனை முதல்வராக்கி தமிழ்நாட்டில் புதிய அரசியல் அத்தியாயம் துவங்கப் போகிறோம் என்று எழுச்சியுடன் பேசினார்கள். தூத்துக்குடியில் கலாசி வேலை செய்யும் ஒருவர் வட்டிக்கு ஐயாயிரம் கடன் வாங்கி மாநாட்டிற்கு நன்கொடை அளித்ததாகச் சொன்னார். நான் ஏன் என்று கேட்டேன். அப்போதுதான் மாநாட்டில் வாலண்டியராக சீருடையுடன் பங்கேற்க முடியும் என்று சொன்னார்.

உண்மையிலேயே பிரம்மாண்டமாக நடந்த அந்த மாநாடு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பிரச்சினை என்னவென்றால் அவ்வளவு பெரிய கூட்டத்திடம் பேசுவதற்கு ஆட்கள் இல்லை. மேடையில் பலர் அமர்ந்து இருந்தார்கள். ஆனால் யாருமே சிறப்பாகப் பேசக் கூடியவராக, தலைமைப் பண்பு மிக்கவராக இல்லை. விஜயகாந்த் பேச்சு மட்டுமே முக்கியமானதாக இருந்தது. இன்றுவரை அவருடைய தே.மு.தி.க கட்சித் தலைவர் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாது. விஜயகாந்த், அவர் மனைவி பிரேமலதா, மைத்துனர் சதீஷ், மகன் விஜய பிரபாகரன் என்பதைத் தாண்டி வேறு தலைவர்கள், சிந்தனையாளர்கள், நிர்வாகிகள் என்று எவர் பெயரையும் கூற முடியவில்லை. அப்படி ஒரு கட்சி தேய்ந்து வலுவிழக்காமல் என்ன ஆகும்?

பல கட்சிகளிலும் இந்த நிலைதான். கட்சியின் தலைவர் இவர் என்று இல்லாமல், இவருடைய கட்சி இது என்று சொல்லும்படியாகத்தான் இருக்கிறது. தலைவருக்காகக் கட்சிதானே தவிர, கட்சிக்காகத் தலைவர் இல்லை. இந்த நிலையில் கட்சி துவங்குவது என்பது மக்களாட்சி தத்துவத்திற்கே விரோதமானது. இந்த செல்வாக்குள்ள நபர்கள் தங்களைத் தவிர கட்சியில் வேறு யாரும் பெயர் பெறுவதையும் விரும்புவதில்லை. மேடையில் கட்சி பொறுப்பாளர்களின் பெயர்களைக் கூறுவதையும், கண்ணியமாக “அவர்களே” என்ற பின்னொட்டுடன் அவர்களை அழைப்பதையும்கூட தேவையற்ற நாடகமாக கேலி செய்யும் அளவிற்குத்தான் மக்களாட்சி குறித்த புரிதல் உள்ளது.

கலைஞர் ஒருமுறை எழுதினார். அடுக்குமொழியாகப் பேசுகிறேன் என்று சிலர் தானே சூடுபோட்டுக் கொள்கிறார்கள் என்றார். அவர் சுட்டிக்காட்டிய உதாரணம் மாற்றுக் கட்சிக்காரர் எழுதிய அடுக்குமொழி வசனம். “சர்பத்தையும் (பாம்பு) சாம்பார் வைத்து சாப்பிட்டுவிடுவேன்” என்று எழுதினாராம் அவர். அது போல பெரும் கூட்டத்தைக் கூட்டி தான் மட்டுமே பேசி அனுப்பிவைத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் “பாசிசம் பாசிசம் என்கிறார்களே, இவர்கள் மட்டுமென்ன பாயசமா?” என்று கேட்டுள்ளார்.

அவர் மக்களாட்சி என்பது பாயசம்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடெங்கும் சாமானிய மக்களுக்கு அரசியல் உணர்வூட்டி, பேச்சுப் பயிற்சி கொடுத்து, சிந்தனைத் தெளிவு கொடுத்து தலைவர்களாக்கிய மாபெரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தானொருவன் பேசினாலே மாநாடு என்று நினைக்கும் விஜய், பாசிசம் என்றால் என்னவென்று முதலில் படித்தறிய வேண்டும். தலைமைக்காக கட்சி என்பதே பாசிச வடிவம்தான் என்பதை உணர வேண்டும். முதலில் உங்கள் கட்சி நிர்வாகிகளை மதியுங்கள். அவர்களே கட்சி என உணரச் செய்யுங்கள். கதாநாயக சினிமாவில் நீங்களே திரைப்படமாக விளங்கியதுபோல, கட்சியிலும் நீங்களே கட்சியாக இருக்க முடியாது.

Rajan-Kurai-6.jpg

உண்மையில் நல்ல சினிமா என்பது என்னவென்று தெரிந்தவர்களுக்கு கதாநாயக சினிமாவே பாசிசத் தன்மையுள்ளது என்பது புரியும். அந்த சினிமா பிரபலத்தை வைத்துக்கொண்டு கட்சி துவங்குவது மட்டுமல்லாமல் “பாசிசம், பாயசம்” என்ற கிண்டல் வேறு. குறைந்தபட்சம் விஜய் அவர் சக நடிகர் பிரகாஷ் ராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். கெளரி லங்கேஷ் உயிரைக் குடித்த பாசிசம் பற்றி சொல்லித் தருவார் அல்லது சத்யராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். “மணியாட்டுபவர்கள்” உருவாக்கிய சமூகம் பற்றி சொல்லித் தருவார். பெரியார் என்பது கடவுள் மறுப்பு மட்டும் அல்லதான். ஆனால், பார்ப்பனீய சமூக அமைப்பை வாழ்நாள் முழுவதும் சாடியவர். அந்த ஒரு வார்த்தையை, பார்ப்பனீயம் என்ற வார்த்தையை, சொல்ல முடியாவிட்டால் அவர் பெயரை சொல்லும் அருகதை ஒருவருக்கு இருக்க முடியாது.
 

 

https://minnambalam.com/political-news/fascism-is-a-state-where-the-leader-is-the-party-and-the-government-article-in-tamil-by-rajan-kurai/

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று விஜயின் பேச்சை முழுமையாக கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. இது வேற லெவல் அரசியல். மற்றும் பேச்சு (இவ்வளவுக்கு பார்க்காமல் அரசியல் பேச விஜயால் முடியும் என்பதையே நம்பமுடியவில்லை)

வணக்கம் தம்பி கோசான். நல்ல மீள்வரவு. 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பழைய அரசியல்வாதிகளை தொடர்ந்தும் மக்கள் ஆட்சிசெய்ய அனுமதித்தால் 1 யூரோ பெறுமதி 500 ரூபாவுக்கும் மேலே செல்ல வைத்து, வைர விருதே வாங்கும் நிலைக்கு கொண்டுவந்திருப்பார்கள், ஐயமில்லை.🤪
    • GIGN இது எல்லைப்படையாக உருவாக்கப்பட்டது. போர் காலத்தில் மீள கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பாதுகாத்தல் மற்றும் புனரமைப்பு செய்யும் நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. போர் முடிந்த பின்னரும் இவர்கள் கலைக்கப்படாமல் அதிரடி தேவைகளுக்கு பாவிப்பானதால் நாங்க அவர்களை அதிரடிப்படை என்போம். இதுவரை தமிழர்களின் ஊர்வலங்கள் மற்றும் மண்டப நிகழ்வுகளுக்கு இவர்கள் வந்ததில்லை. அந்த அளவுக்கு தமிழர்கள் போவதில்லை. ஆரம்பத்தில் தயார் நிலையில் இருப்பார்கள். பின்னர் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் தமிழர்களின் வரம்பு மீறாத ஒழுக்கம்.  பொது வாழ்விலும் சரி என் தனிப்பட்ட வாழ்விலும் சரி இவர்களுடன் மட்டுமல்ல காவல்துறை மற்றும் நீதித்துறையுடன் கூட முட்டுப்பட்டதில்லை கண்காணிப்பில் இருந்த போதும் கூட @valavan      தூய்மையான ஃபைல் என்னுடையது. அதைத்தான் நம்மவர்கள் அதிகம் பாவித்தார்கள் என்னிடமிருந்து.
    • 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியின் வாசனையை அநுர எவ்வாறு முகர்ந்து பிடித்தார்? பாகம் 5 டி.பி.எஸ்.ஜெயராஜ் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) வுக்கும் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் 2019 நவம்பர்  ஜனாதிபதி தேர்தலும்  2020 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலும் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. ஒரு தந்திரோபாய நகர்வாகவே ஜே.வி.பி. அந்த இரு தேர்தல்களிலும் திசைகாட்டி புதிய சின்னத்தின் கீழ் புதியதொரு அரசியல் முன்னணியின் அங்கமாக  போட்டியிட்டது.  அந்த கட்சி தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த  ஒரு  முன்னணியை அமைத்துக்கொண்டது. பெயரளவில்  சமத்துவமான அமைப்புக்கள் மத்தியில் முதலாவதாக தோன்றினாலும், நடைமுறையில் தேசிய மக்கள் சக்தியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆதிக்கம் கொண்ட கட்சியாக அதுவே விளங்கியது. ஒரேயொரு எளிமையான காரணத்துக்காகவே ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி என்ற ஆடையை அணிந்துகொண்டது. தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற அது விரும்பியது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் இலங்கை அரசைத் தூக்கியெறிய ஜே.வி.பி. இரு தடவைகள் முயற்சித்தது. இரு முயற்சிகளும் தோல்வியடைந்தன. நூற்றுக் கணக்கான அர்ப்பணிப்புச் சிந்தையுடைய  செயற்பாட்டாளர்களை கொண்டிருந்த ஜே.வி.பி.யின் பொதுக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டாலும் கூட, குறிப்பிட்ட ஒரு  எல்லைக்கு அப்பால் தங்களால் வாக்குகளைப் பெறமுடியாமல் இருக்கிறது என்பதை செஞ்சட்டைத் தோழர்கள் கண்டுகொண்டார்கள். பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும் இலங்கை அரசியலில் நிலையான  மூன்றாவது சக்தியாகவும் இருக்கவேண்டியதே ஜே.வி.பி.யின் விதியாகிப் போய்விட்டது போன்று தோன்றியது. அதனால் ஜே.வி.பி. அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்ற புதிய தோற்றத்தைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. உள்ளடக்கம் ஒன்று தான் ஆனால் வடிவத்தில் அது வேறுபட்டதாக தோன்றும். தேசிய மக்கள் சக்தி என்ற தோற்றமாற்றம் இரு காரணங்களுக்காக ஜே.வி.பி.க்கு தேவைப்பட்டது. முதலாவதாக, கடந்த காலத்தில்  ஜே.வி.பி.யின் அட்டூழியங்களை அனுபவித்த பழைய தலைமுறையினர்  அவற்றை மறந்து புதிய தேசிய மக்கள் சக்தியாக மறுசீரமைப்புக்குள்ளாகிவிட்டதாக அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் ஜே.வி.பி. விரும்பியது. இரண்டாவதாக, வன்முறைக் கடந்த காலத்தை மறந்து முற்போக்கான தேசிய மக்கள் சக்தியாக மாற்றம் பெற்றுவிட்டதை காட்டுவதன் மூலமாக இளந் தலைமுறையினரை கவருவதற்கு ஜே.வி.பி. விரும்பியது. புதிய மொந்தையில் பழைய கள்ளு ஜே.வி.பி. நம்பிக்கையுடன் செயற்பட்டபோதிலும், 2019 ஆம் ஆண்டிலும் 2020 ஆம் ஆண்டிலும் தேர்த்களில் மிகவும் குறைந்தளவு வாக்குகளையே தேசிய மக்கள் சக்தியினால் பெறக்கூடியதாக இருந்தது. பெயரளவில் புதிய தேசிய மக்கள் சக்தியாக தோன்றினாலும், அது பழைய ஜே.வி.பி.யே, அதாவது புதிய மொந்தையில் பழைய கள்ளு என்றே அதை மக்கள் நோக்கினார்கள் போன்று தோன்றியது. மேலும், புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியுடன் ஒப்பிடும்போது ஜே.வி.பி.யாக  கூடுதல் வாக்குகளை பெற்றிருந்ததை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. உதாரணமாக, ஜே.வி.பி.யின் தாபகத்தலைவர் றோஹண விஜேவீர 1982 ஜனாதிபதி தேர்தலில் 273, 428 ( 4.18 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றார். அதேபோன்று நந்தன குணதிலக 1999 ஜனாதிபதி தேர்தலில் 344, 173 ( 4.08 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். இருவரும் அந்த தேர்தல்களில் மூன்றாவதாக வந்தனர். அநுர குமார திசாநாயக்க 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது 418, 553 (3.16 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றார். விஜேவீரவையும் குணதிலகவையும் விட அநுர கூடுதலான வாக்குகளைப் பெற்றபோதிலும், சதவீதம் குறைவானதாகவே இருந்தது. பல வருடங்களாக இடம்பெற்ற சனத்தொகை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மற்றைய இருவரையும் விட அநுரா கூடுதலான வாக்குகளைப் பெற்றதை விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் சதவீதம் தேசிய மக்கள் சக்தி என்ற வேடத்தில் ஜே.வீ.பி.க்கான மக்கள் ஆதரவில் ஒரு குறைவு ஏற்பட்டிருந்ததையே வெளிக்காட்டியது.  2020 பாராளுமன்ற தேர்தலில் அது மேலும் மோசமானதாக இருந்தது. தேசிய மக்கள் சக்தியினால் திசைகாட்டி சின்னத்தில் வெறுமனே 445,958 ( 3.84 சதவீதம் ) வாக்குகளை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. பெற்ற 543,944 (4.87 சதவீதம்)  வாக்குகளையும் விட குறைவானதாக இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அரைலாசியாகக் குறைந்தது. 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் நான்கு உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தேசியப்பட்டியல் மூலம் இரு ஆசனங்கள் கிடைத்தன. மொத்தம் ஆறு உறுப்பினர்கள் பாராளூமன்றம் வந்தார்கள். 2020 ஆம் ஆண்டில் இருவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுர 49,814 விருப்பு வாக்குகளை பெற்றார். 2015 ஆம் ஆண்டில் அநுரவுக்கு 65,066 விருப்பு வாக்குகள் கிடைத்த அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட விஜித ஹேரத் 37, 008 விருப்பு வாக்குகளைப் பெற்றார். தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். அநுரவுக்கு எதிரான உணர்வு தேசிய மக்கள் சக்தியாக தேர்தல்களில் போட்டியிட்ட ஜே.வி.பி.யின் பரிசேதனை எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. என்னதான் தேர்தல் தந்திரோபாயங்களை வகுத்தாலும், ஜே.வி.பி.யினால் அதன் வாக்குப்பங்கை அதிகரிக்க முடியவில்லை என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்தியாக போட்டியிட்டதோ இல்லையோ ஜே.வி.பி.யினால் மூன்றாவது சக்தி என்ற அந்தஸ்தில் இருந்து மேம்பட முடியவில்லை என்று தோன்றியது. இந்த நிலைவரங்களின் விளைவாக ஜே.வி.பி. அணிகளுக்குள் அநுராவுக்கு எதிராக சிறிய ஒரு எதிர்ப்புணர்வு தோன்ற ஆரம்பித்தது. தேசிய மக்கள் சக்தி தந்திரோபாயம் ஒரு தோல்வி என்று பொதுச் செயலாளர் தலைமையிலான செல்வாக்குமிக்க ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் குழுவொன்று உணர்ந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. தேசிய மக்கள் சக்கதியுடன் பிணைந்திருக்காமல் ஜே வி.பி. அதன் முன்னைய அந்தஸ்துக்கு திரும்ப வேண்டும் அவர்கள் விரும்பினார்கள். தேசிய மக்கள் சக்தியை அமைக்கும் யோசனையை பெரும் எண்ணிக்கையானவர்கள் ஆதரித்த போதிலும், அந்த யோசனையின் உந்துசக்தியாக இருந்தவர் அநுரவே. அது ஜே.வி.பி.யின் ஒரு கூட்டுத் தீர்மானமாக இருந்தாலும், அதை  செயல் முறையில் வழிநடத்தி சாத்தியமாக்கியதற்கு அநுரவே பெரிதும் பொறுப்பாக இருந்தார். அதனால், தேசிய மக்கள் சக்தி மீதான விமர்சனங்கள் மறைமுகமாக அநுராவை நோக்கியவையாகவே இருந்தன. எதிர்ப்புக்கு மத்தியில் அநுரா பின்வாங்கவில்லை. தலைவர் என்ற வகையில் அதற்காக அவர் மெச்சப்பட வேண்டியவர். உட்கட்சி நெருக்குதலின் கீழ் தளர்ந்துபோவதற்கு பதிலாக  அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்டு ஒருவருடமே கடந்திருக்கும் நிலையில், அந்த தந்திரோபாய மாற்றம் வெற்றியா தோல்வியா என்று தீர்ப்புக் கூறுவதற்கு மேலும் சில காலம் தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தியாக மேலும்  கொஞ்சக்காலம் தொடர்ந்து பயணிப்போம் என்று அவர் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தி கோட்பாட்டை எதிர்காலத்தில் பெரிய அளவில் ஆதரித்து ஊக்கமளிக்க  வேண்டியிருக்கும்  என்றும் என்றும் அநுர கூறினார். அவரின் நிலைப்பாட்டுக்கே வெற்றி கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியாக தொடருவதற்கு ஜே.வி.பி. இறுதியில் தீர்மானித்தது. ஒரு எதிர்க்கட்சி என்ற கருத்துக் கோணத்தில் இருந்து பார்த்தபோது  அன்றைய நிலைவரம் மனச்சோர்வைத்  தருவதாகவே இருந்தது. மிகப்பெரிய பெரும்பான்மையுடன் கோட்டாபய ராஜபக்ச  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பாராளுமன்றத்தில் 146 ஆசனங்களை கைப்பற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி மாறுவதற்கு தூண்டியதன் மூலமாக  மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டது. பாராளுமன்றத்தில் அரசியலமைப்புக்கான 20  வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்ட ராஜபக்சாக்கள் 19 வது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருந்த பல நேர்மறையான  அம்சங்களைை நீக்கினார்கள். ராஜபக்சாக்களும் அவர்களை அடிவருடிகளும் அட்டகாசமாக ஆட்சி செய்தார்கள். துடிப்பில்லாத எதிர்க்கட்சி  எதிர்க்கட்சி துடிப்பில்லாததாக இருந்ததால் ராஜபக்சாக்களுக்கு அது வசதியாகப் பே்ய்விட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 2020 பாராளுமன்ற தேர்தலில் துடைத்தெறியப்பட்டது. அதில் இருந்து பிரிந்து வந்தவர்கள் சஜித் பிரேமதாச தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியை ( சமகி ஜன பலவேகய)  அமைத்தார்கள். அதற்கு பாராளுமன்றத்தில் 54 ஆசனங்கள் கிடைத்தன. பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக வந்தார். தமிழ், முஸ்லிம் கட்சிகள் அவற்றின் சமூகங்களை பாதித்த பிரச்சினைககளில் பிரதானமாக கவனத்தை செலுத்திய நிலையில் தேசிய கவனக்குவிப்பில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டது. சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தனது கட்சியின் ஏனைய உறூப்பினர்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்காமல் அனேகமாக சகல விடயங்களிலும் அவரே பேசினார். அவரது  உரைகளில் ஆழமோ தெளிவோ இருந்ததில்லை. தந்தையாரின் பேச்சுக்களில் இருந்து முற்றிலும்  வேறுபட்டதாக இருந்தது. ரணசிங்க ஆற்றல்மிக்க ஒரு பேச்சாளர். தனது சிந்தனைகளை சபையோருக்கு உறுதியான முறையில் தெளிவாகச் சொல்வார். மறுபுறத்தில், அளவு கடந்தை  சொல் அலங்காரத்துடனான சஜித் பிரேமதாசவின் பேச்சு கேட்போரை கவருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், ஜே வி.பி./ தேசிய மககள் சக்தியின்  அநுர, ஹரினி, விஜித மூவரும் பாராளுமன்றத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக அநுர குமார திசாநாயக்க  ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சிறப்பாகச் செயற்பட்டு அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் அம்பலப்படுத்தினார். நடப்பில் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்கலாம்,  ஆனால் மெய்யான எதிர்க்கட்சி தலைவராக அநுராவே காணப்பட்டார். இதை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். முன்னணி எதிர்க்கட்சி சக்தியாக அநுர வருவதற்கு சஜித் இடமளித்துவிட்டார் என்று அவர் கூறினார். முன்மாதிரியாக பசில் ராஜபக்ச  தேசிய மக்கள் சக்தி பசில் ராஜபக்சவின் வழமுறையை பின்பற்றத் தொடங்கியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தொடங்கியபோது பசில் பாராளுமன்றத்தின் மீதோ அல்லது மாகாணசபைகள் மீதோ கவனத்தைச் செலுத்தவில்லை. மாறாக, அவர்  உள்ளூராட்சி சபைகளில் சமூகத்தின் அடிமட்டத்தில்  கிளைகளை அமைத்தார். வேட்பாளர்களாக நியமிக்கப்படக்கூடியவர்களை தெரிவுசெய்து தங்களின் " வாக்காளர்  தொகுதிகளை "  வளர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டினார். தேர்தல் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றம் வட்டாரங்களில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுடன் மேலதிகமாக விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்கள்   தெரிவு செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. தனது வேட்பாளர்களைக் கொண்டு விசேடமாக வாக்காளர்களை இலக்குவைக்க பசிலினால் இயலுமாக இருந்தது. இந்த அணுகுமுறையின் விளைவாக, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவினால் 2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்களில் 5, 006, 837 (40.47 சதவீதம்) வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது. அதனால் வட்டார அடிப்படையில் 3,265 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் இன்னொரு 181 உறுப்பினர்களுக்கும் பொதுஜன பெரமுன உரித்துடையதாகியது. அந்த கட்சி அதன் தேர்தல் ஞானஸ்நானத்தில் நாடுபூராவும் 126 உள்ளூராட்சி சபைகளின் கடடுப்பாட்டை பெற்றது. மறுபுறத்தில் ஜே.வி.பி. அந்த உள்ளூராட்சி தேய்தலில் 710, 932 (5.75 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றது. வட்டார அடிப்படையில் ஜே.வி.பி.யின் ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே தெரிவாகக் கூடியதாக இருந்தது. விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் அந்த கட்சியின் 433 உறூப்பினர்கள் தெரிவாகினர். நாட்டின் எந்தப் பாகத்திலுமே தனியொரு உள்ளூராட்சி சபையின் கட்டுப்பாட்டைக் கூட ஜே.வி.பி.யினால் பெறமுடியவில்லை. 2018 உள்ளூராட்சி தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வெற்றி அநுராவுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது. அடுத்த உள்ளூராட்சி தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டியவையாக இருந்தன. தேசிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுனவின் அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு தீர்மானித்தது. பிரதேச மட்டத்தில் வட்டாரங்களை இலக்கு வைப்பதற்கு கட்சியின் கிளைகள் மீளக் கடடமைக்கப்பட்டன. வீடுவீடாக கவனம் செலுத்தப்பட்டது. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் திட்டமிட்ட முறையில் ஒவ்வொரு வீட்டுக்கு விஜயம் செய்து ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகினார்கள். அது ஒரு குறுகிய நோக்க அணுகுமுறை. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மோட்டார் சைக்கிள்களிலும் ஸ்கூட்டர்களிலும் வீடுகளுக்கு சென்று வந்தார்கள். இது மறுபுறத்தில்  இந்த இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு வெளிநாடொன்று நிதயுதவி செய்கிறது என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது. உள்ளூராட்சி தேர்தல்கள் ஒரு வருடம் தள்ளி 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. முக்கியமான தினம் நெருங்கும்போது ஜே.வி.பி. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மாகாணங்களில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளிலும்  தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையா வாழும் வடக்கிலும் கிழக்கிலும் குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு தயாராகவும் விருப்பம் கொண்டும் இருந்தது. அந்த நேரமளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக ரணில் வி்க்கிரமசிங்க பதவிக்கு வந்தார். புதிய ஜனாதிபதி உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதை தடு்க்க சகல விதமான தந்திரங்களையும் கையாண்டார். உள்ளூராட்சி தேர்தல்ளை நடத்துவதற்கு உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்தி நீதிமன்றத்தை நாடியது. பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறூப்பினர் சுனில் ஹந்துனெத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க ஆகியோர் 2023 மார்ச் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.  சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது. இது அந்த நேரத்திலேயே தேர்தல் வெற்றியின் நறுமணத்தை தேசிய மக்கள் சக்தி முகரத் தொடங்கிவிட்டது எனபதைக் காட்டியது. ஆனால், திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தப்படவில்லை. அறகலய அனுபவம் அதேவேளை, நாடு முன்னென்றும் இல்லாத வகையில் அறகலய ( போராட்டம் ) அனுபவமொனறைச் சந்தித்தது. பொதுவில் அரசாங்கத்துக்கு எதிராகவும் குறிப்பாக ராஜபக்சாக்களுக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட சீற்றத்தை ஜே.வி.பி.யும் தனக்கு வாய்ப்பாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டியது. சஜித்தையும் விட அநுர காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு கூடுதலான அளவுக்கு ஏற்புடையவராக இருந்தார். அநுர காலிமுகத்திடலில் வரவேற்கப்பட்ட அதேவேளை சஜித் விரட்டியடிக்கப்பட்டார். ஆனால் அறகலயவை ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தலைமைத்துவ பாத்திரத்தை வகித்தது. போரட்டத்தை பொறுத்தரை  முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி ஜே.வி.பி.யை  மேவிவிட்டது. இறுதியில் கோட்டாபய பதவி விலக ரணில் ஜனாதிபதியாக வந்தார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தனது கட்சிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்தபோதிலும், அநுராவும் போட்டியிட்டார். அந்த போட்டியில் இருந்து பின்வாங்கிய சஜித், டலஸ் அழகப்பெருமவை ஆதரித்தார். அதன் மூலமாக மீண்டும  சஜித் ஒரு பலவீனமான தலைவர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. ரணில் விக்கிரமசிங்க 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவானார். அநுராவுக்கு மூன்று வாக்குகள் மாத்திரமே  கிடைத்த போதிலும், அரசியல் ரீதியில் அவர் சஜித்தை விடவும் கூடுதல் புள்ளிகளைத் தட்டிக்கொண்டார். அதன் மூலமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர   ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் போது தான் ஒரு முக்கியமான வேட்பாளராக  இருக்கப்போதை  முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொண்டார். அதேவேளை சஜித்  உறுதிப்பாடும் அரசியல் துணிச்சலும் இல்லாததன் விளைவாக ஒரு பலவீனமான - தடுமாறுகிற அரசியல்வாதியாக நோக்கப்பட்டார். 2024 ஜனாதிபதி தேர்தல் ஒரு மும்முனைப் போட்டியாக இருக்கப்போகிறது என்பது அப்போதே தெரிந்தது. ஜனாதிபதியாக ரணில்  இலங்கை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்தபோது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சிப்  பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்நிய செலாவணி அருகிப்போயிருந்த நிலையில்  பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. எங்கு பார்த்தாலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துநின்றார்கள். ஆனால் விநியோகங்கள் கிடைக்கவில்லை அல்லது போதுமானவையாக இருக்கவில்லை. மின்சக்தி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகள் நாட்டை உண்மையில் முடங்கச் செய்திருந்தன. ரணிலிடம் என்னதான் குறைபாடுகள் இருந்தாலும், அவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் ஜனாதிபதியாக ஆட்சிப்  பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் தனது துணிச்சலையும் பற்றுறுதியையும் வெளிக்காட்டினார். மேலும், உருப்படியான முறையில் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு  ராஜபக்சாக்களின் நல்லெண்ணத்திலும் பொதுஜன பெரமுனவின் ஆதரவிலும் தங்கியிருக்க வேண்டியிருந்ததால் விக்கிரமசிங்கவுக்கு  இடையூறுகள் இருந்தன. அவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே இருந்த காரணத்தினால் ராஜபக்சக்களின் தலைமையிலான " தாமரை மொட்டு " கட்சியின் உதவியுடன் கடமைகளை நிறைவேற்றுவதை தவிர விக்கிரமசிங்கவுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. ஆனால் ரணில் அதை இலங்கையினதும் அதன் மக்களினதும் நீண்டகால நலன்களுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டிய ஒரு வசதியீனமாக கருதிச் செயற்பட்டார். பொருளாதாரப் பிரச்சினையை ஒரு தேசிய நெருக்கடியாக விக்கிரமசிங்க சரியான முறையில் அடையாளம் கண்டார். நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு ஐக்கியப்பட்ட தேசிய முயற்சி ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு பாராளும்னறத்தில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளை அவர் திரும்பத் திரும்ப அழைத்தார். சகல கட்சிகளையும் உள்ளடக்கிய ஒத்துழைப்புச் செயற்பாடு அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். ஆனால், அவர் இடையறாது விடுத்த அழைப்புக்கள் தொடர்ச்சியாக அலட்சியம் செய்ப்பட்டன. முன்னேற்றத்துக்கான சந்தர்ப்பம்  சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பொருளாதார நெருக்கடியில் தாங்கள் அரசியல் ரீதியில் முன்னேறுவதற்கான வாய்ப்பைக் கண்டார்கள். விக்கிரமசிங்கவுடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக அவர்கள் விலகி இருந்துகொண்டு ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பதிலேயே தீவிர நாட்டம் காட்டினர். பொருளாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையை அவர்கள் குறைத்து மதிப்பிடவும் செய்தார்கள். நெருக்கடியின் தன்மையை  ஜனாதிபதி மிகைப்படுத்துகின்றார் என்று கூறி அநுர ஏளனமும் செய்தார். அநுரவைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல, ரணில் தான் அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று கருதினார். விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதையும் தேசிய மக்கள் சக்தி கண்டனம் செய்தது. இலங்கையில் இடதுசாரிகள்  " பிரெட்டன் வூட்ஸ் இரட்டை " என்று அழைக்கப்டுகின்ற சர்வதேச நாணய திதியம் மற்றும் உலக வங்கி மீது வெறுப்புணர்வைக் கொண்ட வரலாற்றை உடையவை. இப்போது அந்த வெறுப்புக்கு  ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி புத்தூக்கம் கொடுத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் விளைவாக  மக்கள் குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் இடர்பாடுகளை எதிர்நோக்கப் போகிறார்கள் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு பதிலாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைச் சமூகத்திடம் இருந்து பெறக்கூடிய உதவிகளின் ஊடாக பொருளாதார பிரச்சினைக்கு தங்களால் தீர்வு காணமுடியும் என்று கூட  ஜே.வி.பி.யின் பொருளாதார ' மந்திரவாதி '  சுனில் ஹந்துனெத்தி கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்பது விரைவாகவே தெளிவாகத் தெரிந்தது. ஒரு ஆரோக்கியமான விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக எடுத்ததற்கெல்லாம் பிழை கண்டுபிடிக்கும் அணுகுமுறையை அவர்கள் கடைப்பிடித்தார்கள். அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு மக்களின் ஒவ்வொரு பொருளாதார குறைபாடும் உச்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது. பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதை விக்கிரமசிங்கவினால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தபோதிலும், அவற்றை பெரும்பாலான மககளினால் வாங்க முடியாமல் இருந்தமை கூர்மையானஒரு பிரச்சினையாக விளங்கியது. வாழ்க்கைச் செலவு உயர்ந்துகொண்டு போனது, ஆனால் சம்பளங்கள் அதிகரிக்கவில்லை. தனவந்தர்கள் மேலும் தனவந்தர்களாகிக் கொண்டுபோக வறியவர்கள் மேலும் வறியவர்களானார்கள். நடுத்தர வர்க்கம் தாழ்வுற்றது. அறகலய பேராட்டம் ராஜபக்சக்களின் ஆட்சி தூக்கியெறியப்படுவதை துரிதப்படுத்தியதற்கு மேலதிகமாக அறகலய போராட்டம் பல விடயங்களை சாதித்தது. பொதுவில்  மக்கள் சக்தியினதும் குறிப்பாக இளைஞர் சக்தியினதும் வெற்றியை அது நிரூபித்தது. குடும்ப அரசியல் அதிகாரம், நெரூங்கியவர்களுக்கு சலுகை செய்யும் போக்கு மற்றும் ஊழலுக்கு எதிரான உணர்வை அது அதிகரித்தது. முறைமையில் அல்லது தற்போதுள்ள ஒழுங்கில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்ற வேட்கையுடைய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை  அறகலய வளர்த்து வளமாக்கியது. மாறிவிட்ட சமநிலையை  கணக்கில் எடுத்த தேசிய மக்கள் சக்தி ஒரு ஆய்வுச் செயன்முறையை ஆரம்பித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிந்தது. இதில் அநுர குமார திசாநாயக்க முக்கியமான பாத்திரத்தை வகித்தார். ஜனாதிபதி பதவியை இலக்குவைத்து பெரியளவில் தயாராவதன் மூலமாக தங்களது அரசியல் மேம்பாட்டுக்கு மிகவும் சாதகமான நிலைவரம் ஒன்று இருப்பதை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உணர்ந்தது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனியாக போட்டியிட வேண்டும் என்பதில் மீண்டும் அநுரா உறுதியாக இருந்தார். ஜனாதிபதி வேட்பாளராக அவரே களமிறங்குவார் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதற்கு பிறகு தேசிய மக்கள் சக்தி 2024 ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகத் தொடங்கியது. ஜனாதிபதி விக்கிரமசிங்க உரிய காலத்தில் தேர்தலை நடத்துவாரா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. அவ்வாறு அவர் நடத்த முன்வராத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை அல்லது பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி நாடுதழுவிய பாரிய அரசியல் போராட்த்தை முன்னெடுப்பதற்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக இருந்தது. ஆனால்,  ரணில் தேர்தலை நடத்துவதற்கே எப்போதும் உத்தேசித்திருந்ததால் எந்தவொரு போராட்டத்துக்கும் தேவை இருக்கவில்லை. அவர் அவ்வாறே செய்தார். வெற்றியின் கதை  ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக பிரசாரங்களை தேசிய மக்கள் சக்தி விடாமுயற்சியுடன் முன்னெடுத்தது. ஜனாதிபதி தேர்தல் போட்டியில் வெற்றியின் நறுமணத்தை முகரத்தொடங்கிய அநுர இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தன்னை காட்சிப்படுத்தினார். இந்த ' கனவு ' 2024 செப்டெம்பரில் நனவாகியது. ஜனாதிபதி தேர்தலில் அநுராவின் வெற்றியின் மருட்சியூட்டும் கதையை அடுத்தவாரம் விரிவாக எழுதுவேன். அதுவே இந்த கட்டுரைத் தொடரின் இறுதிப்  பாகமாகவும் நிச்சயமாக அமையும். https://www.virakesari.lk/article/198000
    • வன்னியர் மகன் திலீபனுக்கும் மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்
    • ஆடும் பெண்களை அவர் மேளக்காரர் என்று அழைக்கவில்லை, சகாக்கள் என்று. அனால் இது பதியப்பட்டது, ஏறத்தாழ 75 - 100 வருடங்களின் பின். தடை செய்தது அங்கியேயராக இருக்க கூடும், பல சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாக இருக்கிறது. (மற்றது, ஆங்கிலேயர் அவர்களின் புரிதலில் பதிந்து இருப்பது; இலங்கை தமிழர்களை மலபார், மற்றும் முஸ்லிம்களை moors என்ரூ குறித்து போல.) அவர் இரு பகுதியையும் (ஆடும் பெண்கள், மேளக்காரர்) ஒரே மக்கள் கூட்டம் என்று அவரின் விளக்கம், அவர்கள் ஒன்றோடு ஒன்றாக தொழில் செய்வதால். கோயில்கள் பெரும்பணம் புழங்கும் இடமாக இருந்தன, மற்றது காலம் செல்ல மேளக்காரருடனும் உறவு வைத்து இருக்கலாம். அனல், நடந்தது சுருக்கமாக சொல்லியது, ஏனெனி அவர்களின்  விபச்சார அடையாளதை மறைப்பதற்கு ( கோயிலில் பிராமணர் பாதுகாப்பில் இருக்கும் வரையும் அது  விபச்சாரமாக நோக்கப்படவில்லை, பிராமணர் அவர்களை பெண் தெய்வமாக மட்டும் பாவித்தது என்பது நம்பக்கூடியது ஒன்றல்ல)     அப்படி ஒரு பிரிவு உருவாகியதை ஆங்கிலேயர் அறியாமல் இருந்து இருக்கலாம்.  70 - 80 ஆய்வுகளில் தான்  இந்த விடயம்  வெளியில் தெரிய வருகிறது,  ஆய்வு செய்தவர், ஏறத்தாழ மொத்தமாக 12-14 மாதங்கள், வேறு வேறு காலங்களில் அவர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கியிந்து தான் ஆய்வு நடந்தது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.