Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யாவால் உக்ரேனை கைப்பற்ற முடியவில்லை என  ஒரு பக்கம் வீர வசனம் பேசிக்கொண்டு.....
மறு பக்கம் ஐரோப்பிய ஒன்றிய நேட்டோ நாடான போலந்து விழும் என எழுதுவது எனக்கு விளங்கிக்கொள்ள  கொஞ்சம் தர்ம சங்கடமாக இருக்கின்றது. :cool:

சரி விளங்கபடுத்துகிறேன். 

1. புட்டின் எதிர்பார்த்தபடி முழு உக்ரேனையும் குறைந்த நாட்களில் பிடிக்க முடியாமல் போனது அவரின் தோல்வியே.

இந்த தோல்விக்கு இரு பெரும் காரணங்கள்.

அ. உக்ரேனிய படைகளின் + மக்களின் ஓர்மம், செலன்ஸ்கியின் தலைமை

ஆ. நேட்டோவின் உதவி.

இந்த இரெண்டில் ஒன்று இல்லாவிடினும், புட்டினின் உக்ரேனை முழுமையாக பிடிக்கும் என்ணம் வெற்றியாகி இருக்கும்.

இதே போலவே போலந்தும்.

உக்ரேனை அடுத்து, மோல்டோவா, அடுத்து லத்வியா, லித்துவேனியா, போலண்ட் தான் அவரின் குறி. அப்படி இந்த நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டால்

1. இவர்கள் ஓர்மமாக ரஸ்யாவை எதிர்பார்கள். ஆனால் தனியே இது மட்டும் போதாது.

2. இவை நேட்டோ உறுப்பு நாடுகள் ஆக இருக்கும் பட்சத்தில் - நேட்டோ நாடுகள் முழுவதும் இறங்கி ரஸ்யாவை சாத்தும்.

ஆனால் நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலகினால்?

நேட்டோவே கிடுகிடுத்து விடும்.

ஜேர்மனி - பொருளாதாரம் இருக்கும் அளவுக்கு பலம் இல்லை. மிஞ்சுவது பிரான்ஸும், யூகேயுமே.

இவர்களால் ரஸ்யாவை ஒரு அளவுக்கு மேல் ஈடு கட்ட முடியாது.

ஆகவே சேர்ம்பளின் ஹிட்லரோடு செய்த உடன்படிக்கை போல் விட்டு கொடுப்பார்கள். முன்பை போல போலந்தை தியாகம் செய்வார்கள்.

அல்லது சண்டைக்கு போவர்கள்.

விட்டு கொடுப்போ, சண்டையோ இரெண்டுமே நம் எல்லாருக்கும் ஆப்புத்தான்.

இதுதான் நேட்டோவில் இருந்து அமரிக்கா விலகினால் மேற்கு ஐரோப்பாவின் கெதி.

இதனால்தான் ஒவ்வொரு திரியிலும் நேட்டோ ஐரோப்பாவின் பாதுகாப்பு வேலி என எழுதினேன்.

டிரம்ப் விலக நினைத்தால் அமெரிக்காவின் ஆழ-அரசு அதை தடுக்கும் என்கிறார்கள்.

பார்ப்போம் நேட்டோவில் இருந்து அமெரிக்காவை விலக்குவாரா இல்லையா என.

விலக்கினால், டக்கெண்டு ஆர்ஜெண்டினா, கியூபா, பொலிவியா எண்டு போய்விட வேண்டும்🤣

  • Thanks 1
  • Replies 174
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷ

vasee

நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால

குமாரசாமி

பொய்யான அரசியல் என்றுமே நிலைப்பதில்லை என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் நல்ல உதாரணம். இது போல் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம். கேடு கெட்ட உக்ரேன் ஊத்தை அரசியல் இனியும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, விசுகு said:

யாரு? எனக்கு சண்டை பயிற்சியாளராகத்தான் டிரம்ப் அறிமுகமானார்.. ஐந்தில் வளையாதது ? தொட்டில் பழக்கம் ???

டொனால்ட் ரம்ப் சண்டையை விரும்பாதவர், மனித அழிவுகளை விரும்பாதவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷொப்பிங் பையோடு போனால் C-17 விமானத்தில் அத்திலாந்திக்கைத் தாண்டி வட அமெரிக்கா வந்து விடலாம். பிறகு இங்கால இருந்து "சீ..இதெல்லாம் ஒரு நாடோ?" என்று புதிதாக ஆரம்பிப்பினம் என நம்புகிறேன்😂.

சீரியசாகப் பார்த்தால்:

KFC க்கு வாக்குப் போட்ட கோழிகள் நிலை தான்.

ட்ரம்பும், வான்சும் அன்றாடம் போட்டுத் தாக்கிய இனக்குழுக்கள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒன்று வாக்களிக்காமல் விட்டிருக்கிறார்கள், அல்லது டரம்புக்கே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணமாக, 20 வருடங்களாக முழு நீலமாக இருந்த என் மாநிலம் (கமலா வென்றாலும்) பெருவாரியாக ட்ரம்புக்கு வாக்களித்திருக்கிறது. வாக்களித்தது யார் என்று பார்த்தால் ஸ்பானிய அடி அமெரிக்கக் குடிகள். அனேகமாக, மெக்சிக்கரையும், ஏனைய ஸ்பானிய குடியேறிகளையும் ட்ரம்ப் அள்ளு கொள்ளையாக நாடுக் கடத்தும் போது இவையள் மகிழ்வினம் என நம்புகிறேன்.

அதே போல, கறுப்பின மக்களில் ஆண்கள் கமலாவுக்கு அவ்வளவு வாக்களிக்கவில்லை. ஏன்? "பெண் எங்களை ஆள்வதா?" என்ற மேலாதிக்க மனநிலை. அத்தோடு "சட்ட விரோதக் குடியேறிகள் உங்கள் தொழில்களைப் பறிக்கீனம்" என்று ட்ரம்ப் சொல்ல நம்பி விட்டார்கள். பகிடி என்னவென்றால் இதை நம்பிய பலர் வேலை வாய்ப்புகள் இருந்தும் வேலைக்குப் போய் உழைக்காமல் தெருமுனையில் நின்று ஈயோட்டிய "குடி மக்கள்"😎.

அடுத்த பகிடி: அரபு அமெரிக்கர்கள். "ட்ரம்ப் சமாதானம் தருவார்" என்று நம்பியதாக வெளியே சொல்லிக் கொண்டு தான் இவர்கள் ட்ரம்பை நோக்கிச் சாய்ந்தார்கள். ஆனால், இவர்களின் உண்மையான காரணம், பெண் வெறுப்பு வாதம், ஒரு பால் உறவு, இடைப்பாலினர் மீதான வெறுப்பு என்பதாக இருக்கிறது. மோடி வாலா இந்திய அமெரிக்கர்களும், பலஸ்தீன/அரபு அமெரிக்கர்களும் ட்ரம்போடு ஒரே கட்டிலில்: The strangest bedfellows!

தென்னிந்திய/சிறிலங்கா வழி அமெரிக்கர்களின் இலக்கோ பங்கு மார்க்கெட்டில் இப்போது வருவதை விட இன்னும் இலாபம் வர வேண்டும், அதை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுலா, ரெஸ்லா, மான்ஷன் வீடு என்று ஜாலியாக இருக்க வேண்டும் என்பதாக எனக்குப் புரிகிறது. வீட்டில் இருக்கும் பெண்  பிள்ளைகள், மனைவி, தங்களுடைய மண்ணிறத் தோல் கொண்ட வம்சாவழியினருக்கு, தாம் இறந்த பிறகும் நீடித்திருக்கும் ஆப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பது புரியாமலே ட்ரம்பை ஆதரித்திருக்கிறார்கள்.   

அருமையான கருத்து.

அதிலும் ஜெருசலேமுக்கு தூதரகத்தை மாற்றிய டிரம்பை இஸ்லாமியர்/அரேபியர் ஆதரித்தது,  ஈழ தமிழர்களே பொறாமைப்படும் அளவுக்கு “கெட்டித்தனம்”🤣.

இஸ்ரேல் இனி licence to kill உடன் லெபனான், காசாவில் களமிறங்கும் போது,மேற்குகரையில் வகை தொகை இன்றி புதிய குடியேற்றங்களை கட்டும் போது,  அமெரிக்கா ஈரானை போட்டு வாங்கும் போது, வீதியில் இறங்கி கத்துவார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, goshan_che said:

1. புட்டின் எதிர்பார்த்தபடி முழு உக்ரேனையும் குறைந்த நாட்களில் பிடிக்க முடியாமல் போனது அவரின் தோல்வியே.

இந்த தோல்விக்கு இரு பெரும் காரணங்கள்.

அ. உக்ரேனிய படைகளின் + மக்களின் ஓர்மம், செலன்ஸ்கியின் தலைமை

ஆ. நேட்டோவின் உதவி.

நேட்டோவின் பலம் இருக்கும் போது புட்டின்(ரஷ்யா அல்ல) எப்படி அயல் நாடுகளை கைப்பற்ற முடியும்? அதன் அவசியம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, vasee said:

நான் கூறியதுதான் நடந்தது நடக்கவில்லை என்பதனை பற்றி கவலைப்படுகின்ற ஆள் கிடையாது ( பாடசாலை முறைமைகளினூடாக எப்போதும் சரியாக இருத்தல்), தவறாக சொல்வதால் எந்த இழப்பும் தனிப்பட ஏற்படுவதில்லை, ஆனால் தவறை நியாயப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என புரிந்ததனால் தவறாக இருந்தால் அதற்காக இலகுவாக ஒரு மன்னிப்புடன் முன்னேற முடியும் அந்த தவறுகளை நியாயப்படுத்தி அதே இடத்தில் தேங்கி விட விருப்பம் இல்லை, அதனால் தவறை நியாயப்படுத்தும் ஆளும் கிடையாது.

😁

நல்லது. இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

டொனால்ட் ரம்ப் சண்டையை விரும்பாதவர், மனித அழிவுகளை விரும்பாதவர்.

சண்டையை விரும்பாதவர் என்றால் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வை தரச் சொல்லுங்க பார்ப்போம். ரசியாவை பிடிக்கும் ஆனால் ஈரானை அடிக்க வேண்டும்??

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

டொனால்ட் ரம்ப் சண்டையை விரும்பாதவர், மனித அழிவுகளை விரும்பாதவர்.

ஓம்…அவரே வியட்நாம் போரின் போது சண்டைக்கு போகாமல்  எஸ் ஆகும் அளவுக்கு சமாதான விரும்பி எங்கள் டிரம்ப் பிரான் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷொப்பிங் பையோடு போனால் C-17 விமானத்தில் அத்திலாந்திக்கைத் தாண்டி வட அமெரிக்கா வந்து விடலாம். பிறகு இங்கால இருந்து "சீ..இதெல்லாம் ஒரு நாடோ?" என்று புதிதாக ஆரம்பிப்பினம் என நம்புகிறேன்😂.

சீரியசாகப் பார்த்தால்:

KFC க்கு வாக்குப் போட்ட கோழிகள் நிலை தான்.

ட்ரம்பும், வான்சும் அன்றாடம் போட்டுத் தாக்கிய இனக்குழுக்கள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒன்று வாக்களிக்காமல் விட்டிருக்கிறார்கள், அல்லது டரம்புக்கே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணமாக, 20 வருடங்களாக முழு நீலமாக இருந்த என் மாநிலம் (கமலா வென்றாலும்) பெருவாரியாக ட்ரம்புக்கு வாக்களித்திருக்கிறது. வாக்களித்தது யார் என்று பார்த்தால் ஸ்பானிய அடி அமெரிக்கக் குடிகள். அனேகமாக, மெக்சிக்கரையும், ஏனைய ஸ்பானிய குடியேறிகளையும் ட்ரம்ப் அள்ளு கொள்ளையாக நாடுக் கடத்தும் போது இவையள் மகிழ்வினம் என நம்புகிறேன்.

அதே போல, கறுப்பின மக்களில் ஆண்கள் கமலாவுக்கு அவ்வளவு வாக்களிக்கவில்லை. ஏன்? "பெண் எங்களை ஆள்வதா?" என்ற மேலாதிக்க மனநிலை. அத்தோடு "சட்ட விரோதக் குடியேறிகள் உங்கள் தொழில்களைப் பறிக்கீனம்" என்று ட்ரம்ப் சொல்ல நம்பி விட்டார்கள். பகிடி என்னவென்றால் இதை நம்பிய பலர் வேலை வாய்ப்புகள் இருந்தும் வேலைக்குப் போய் உழைக்காமல் தெருமுனையில் நின்று ஈயோட்டிய "குடி மக்கள்"😎.

அடுத்த பகிடி: அரபு அமெரிக்கர்கள். "ட்ரம்ப் சமாதானம் தருவார்" என்று நம்பியதாக வெளியே சொல்லிக் கொண்டு தான் இவர்கள் ட்ரம்பை நோக்கிச் சாய்ந்தார்கள். ஆனால், இவர்களின் உண்மையான காரணம், பெண் வெறுப்பு வாதம், ஒரு பால் உறவு, இடைப்பாலினர் மீதான வெறுப்பு என்பதாக இருக்கிறது. மோடி வாலா இந்திய அமெரிக்கர்களும், பலஸ்தீன/அரபு அமெரிக்கர்களும் ட்ரம்போடு ஒரே கட்டிலில்: The strangest bedfellows!

தென்னிந்திய/சிறிலங்கா வழி அமெரிக்கர்களின் இலக்கோ பங்கு மார்க்கெட்டில் இப்போது வருவதை விட இன்னும் இலாபம் வர வேண்டும், அதை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுலா, ரெஸ்லா, மான்ஷன் வீடு என்று ஜாலியாக இருக்க வேண்டும் என்பதாக எனக்குப் புரிகிறது. வீட்டில் இருக்கும் பெண்  பிள்ளைகள், மனைவி, தங்களுடைய மண்ணிறத் தோல் கொண்ட வம்சாவழியினருக்கு, தாம் இறந்த பிறகும் நீடித்திருக்கும் ஆப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பது புரியாமலே ட்ரம்பை ஆதரித்திருக்கிறார்கள்.   

நாங்கள் வெறுமனே டிரம்ப் என்பவர் மீது தனிமனித  வெறுப்பின் காரணமாகவோ அல்லது அவரின் Right wing Ideology மீது பிடிப்பின்மை காரணமாகவோ இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடலாம், ஆனால் left wing அரசியல் பொதுவான மக்களிடம் மதிப்பிளந்து வருகின்றதை நாம் கவனிக்காமல் போய் விட முடியாது. 

Left wing அரசியலின் போலித்தனமும் அது குடும்ப அமைப்பு மீது செலுத்தும் அழுத்தமும் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்தையும் பாதித்து உள்ளதை நேர்மையுடன் உணரத் தவறியதால் தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. கனடாவிலும் அதுவே நிலை 

Right here right nowஎன்ற ஒரு புத்தகம் முன்னால் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அவர்களால் சில வருடங்கள் முன்னம் வெளியிடப் பட்டது. அதில் இந்த populism வளரக் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாதது.  முடிந்தால் எல்லோரும் அதை வாங்கி வாசியுங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

நேட்டோவின் பலம் இருக்கும் போது புட்டின்(ரஷ்யா அல்ல) எப்படி அயல் நாடுகளை கைப்பற்ற முடியும்? அதன் அவசியம் என்ன?

நான் மேலே சொன்ன விபரிப்பு, அமேரிக்கா நேட்டோவில் இருந்து விலகினால் என்ன நடக்கும் என்பதை.

அமெரிக்கா இல்லாத நேட்டோ ரஸ்யாவை எதிர்க்கலாம் ஆனால் வெல்ல முடியாது.

அமெரிக்கா நேட்டோவில் இருந்து விலகாவிட்டால் நேட்டோ நாடுகளை பார்த்து புட்டின் வாயூறுவார் ஆனால் தொடார்.

1 minute ago, பகிடி said:

நாங்கள் வெறுமனே டிரம்ப் என்பவர் மீது தனிமனித  வெறுப்பின் காரணமாகவோ அல்லது அவரின் Right wing Ideology மீது பிடிப்பின்மை காரணமாகவோ இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடலாம், ஆனால் left wing அரசியல் பொதுவான மக்களிடம் மதிப்பிளந்து வருகின்றதை நாம் கவனிக்காமல் போய் விட முடியாது. 

Left wing அரசியலின் போலித்தனமும் அது குடும்ப அமைப்பு மீது செலுத்தும் அழுத்தமும் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்தையும் பாதித்து உள்ளதை நேர்மையுடன் உணரத் தவறியதால் தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. கனடாவிலும் அதுவே நிலை 

Right here right nowஎன்ற ஒரு புத்தகம் முன்னால் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அவர்களால் சில வருடங்கள் முன்னம் வெளியிடப் பட்டது. அதில் இந்த populism வளரக் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாதது.  முடிந்தால் எல்லோரும் அதை வாங்கி வாசியுங்கள்.

ஓம்.

பெண்ணுரிமை, LGBT உரிமை இவற்றை தாண்டி, ஆண் நான் பெண் என சுயமாக தாமே அடையாளப்படுத்தும் உரிமை, மட்டற்ற குடியேற்றம் இவற்றால் மக்கள் இடது சார்பு அரசியலின் மீது வெறுப்படைகிறார்கள் என்பது மிகவும் உண்மை.

பிரெக்சிற்றும் இப்படி பட்ட வெறுப்புகள், culture wars பண்பாட்டு யுத்தங்கள் மூலமே வெல்லப்பட்டது.

குடியேற்றம் பலரை கலவரப்படுத்துகிறது.

அவுஸ்ரேலியாவை தவிர வேறு எந்த மேற்கு நாட்டு இடது சாரிகளும் இதன் ஆபத்தை உணர்ந்தாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, விசுகு said:

சண்டையை விரும்பாதவர் என்றால் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வை தரச் சொல்லுங்க பார்ப்போம். ரசியாவை பிடிக்கும் ஆனால் ஈரானை அடிக்க வேண்டும்??

இரு பிரச்சனைகளையும் சேர்த்து சாம்பார் ஆக்காமல் ஒரு பிரச்சனையை மட்டும் கதைக்கலாம்.
ஈரான் அரசியல் நிலை எப்படியாகினும் ஒரு விடுதலை மண்ணுக்கு ஆதரவாக நிற்கின்றது. அது பெரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

. பகிடி என்னவென்றால் இதை நம்பிய பலர் வேலை வாய்ப்புகள் இருந்தும் வேலைக்குப் போய் உழைக்காமல் தெருமுனையில் நின்று ஈயோட்டிய "குடி மக்கள்"

இதில் தான் ஒரூ பக்கத்தை நீங்கள் பார்க்கவில்லை.

இந்த மக்கள் உழைப்புக்கு போனாலும், வாழ்க்கை paycheck to paycheck, அடுத்த நாள் கூழுக்கு என்ன கதி  என்ற வாழ்க்கை.

இவர்களுக்கு டிரம்ப் சொல்லுவதின் சாத்தியக்கூறுகளை  பகுத்து அறியும் பக்குவம் இல்லை. தேவையும் இல்லை அவர்களை பொறுத்தவரையில்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

ஓம்…அவரே வியட்நாம் போரின் போது சண்டைக்கு போகாமல்  எஸ் ஆகும் அளவுக்கு சமாதான விரும்பி எங்கள் டிரம்ப் பிரான் 🤣.

உலகில் மிகப்பெரும் மனித அழிவுகளை செய்து விட்டு நான் வியட்நாம் போரில் பங்குபற்றினேன் என சொல்லி வாக்கு கேட்பதை விட.... அழிவுகளை செய்யாமல் அழிவுகள் வேண்டாம் என சொல்லி வேட்பாளாராக நிற்பதில் ஒரு பெருமை உண்டு.

↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯

குப்பன்:- அது சரி அமெரிக்கா வியட்நாம் நாட்டை அழிக்குமளவிற்கு அந்த பாவப்பட்ட நாடு அமெரிக்காவிற்கு என்ன கெடுதல் செய்தது?

சுப்பன்:- அதைப்பற்றியெல்லாம் நாம் பேசப்படாது.அழிக்கும் தொழில் எமது தொழில்.அதை மட்டுமே நாம் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, குமாரசாமி said:

டிரம்ப் வியட்நாம் போரில் பங்கு பெறாமல் ஓடியது உயிர்பயத்தில். உன்னத எண்ணத்தில் அல்ல.

நீங்கள் சொன்ன உன்னதமான காரணத்தை காட்டி போருக்கு போக மறுத்து தண்டனை பெற்ற பல மனிதநேயர்கள் அப்போதும் இருந்தார்கள்.

இன்னும் பலர் அமெரிக்காவில் போராடி படைகளை அழைப்பதில் வெற்றியும் கண்டார்கள்.

இதில் எதிலும் துளிகூட டிரம்ப் பங்கெடுக்கவில்லை.

பிகு

குப்பனோ, சுப்பனோ - எவருக்கும் புட்டின், சீமான், டிரம்ப் வகையறா ஆண்கள் மீது ஈர்ப்பு இருக்கலாம், அது எந்த வயதிலும் வரலாம் - அதற்காக ஒருவரை பற்றி மாயபிம்பங்களை பொதுவெளியில் பரப்ப்பகூடாது.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, goshan_che said:

புட்டின் எதிர்பார்த்தபடி முழு உக்ரேனையும் குறைந்த நாட்களில் பிடிக்க முடியாமல் போனது அவரின் தோல்வியே

முழு உக்ரேனையும் பிடிப்பது பூட்டினின் எண்ணம் இல்லை என்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

முழு உக்ரேனையும் பிடிப்பது பூட்டினின் எண்ணம் இல்லை என்றே எண்ணுகிறேன்.

இல்லை. ரஸ்யாவின் வரலாற்றை பார்த்தால், புட்டின் தன்னை எந்த ரஸ்ய சார் மன்னர்களுடன் ஒப்பிடுகிறார் என பார்த்தால், புட்டின் எண்ணம் என்ன என புரியும்.

Putin elaborated on his imperial vision during a June 9 event in Moscow to mark the 350th birthday of Russian Czar Peter the Great. He spoke admiringly of Czar Peter’s achievements during the Great Northern War and drew direct parallels to his own contemporary expansionist policies. The lands taken from Sweden during the Great Northern War were historically Russian and Peter was merely returning them to their rightful owners, Putin stated. “Apparently, it is now also our responsibility to return (Russian) land,” he said in a clear reference to the ongoing invasion of Ukraine.

https://www.atlanticcouncil.org/blogs/ukrainealert/putin-admits-ukraine-invasion-is-an-imperial-war-to-return-russian-land/

புட்டின் மற்றும் அவரின் தத்துவாசிரியர் டுகின் ஆகியோரின் பேச்சுக்கள் எழுத்துக்களை பார்த்தால் புரியும், அவர்களை பொறுத்தவரை ஜேர்மனியன் சில பகுதிகள் உட்பட்ட கிழக்கு ஐரோப்பா முழுவதுமே “ரஸ்ய நிலம்தான்”. ஏனைய நாடுகள் பெலரூஸ் போல் அடங்கி இருக்கலாம் - இல்லை எனில் ஆக்கிரமித்து அடக்கப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ஈழப்பிரியன் said:

முழு உக்ரேனையும் பிடிப்பது பூட்டினின் எண்ணம் இல்லை என்றே எண்ணுகிறேன்.

ஒம் முழு உக்ரேனையும்.  புட்டின். பிடிக்கவில்லை      ஆகையால்   அவருக்கு அந்த எண்ணம் இருக்கவில்லை தான் 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, ஈழப்பிரியன் said:

முழு உக்ரேனையும் பிடிப்பது பூட்டினின் எண்ணம் இல்லை என்றே எண்ணுகிறேன்.

அதுதான் உண்மை. இவையெல்லாம் ஏதோ பிபிசி சிஎன்என் மாதிரி பெரிய பில்டெப் குடுத்து ஒரு மாயைய உருவாக்கீனம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பகிடி said:

நாங்கள் வெறுமனே டிரம்ப் என்பவர் மீது தனிமனித  வெறுப்பின் காரணமாகவோ அல்லது அவரின் Right wing Ideology மீது பிடிப்பின்மை காரணமாகவோ இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடலாம், ஆனால் left wing அரசியல் பொதுவான மக்களிடம் மதிப்பிளந்து வருகின்றதை நாம் கவனிக்காமல் போய் விட முடியாது. 

Left wing அரசியலின் போலித்தனமும் அது குடும்ப அமைப்பு மீது செலுத்தும் அழுத்தமும் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்தையும் பாதித்து உள்ளதை நேர்மையுடன் உணரத் தவறியதால் தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. கனடாவிலும் அதுவே நிலை 

Right here right nowஎன்ற ஒரு புத்தகம் முன்னால் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அவர்களால் சில வருடங்கள் முன்னம் வெளியிடப் பட்டது. அதில் இந்த populism வளரக் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாதது.  முடிந்தால் எல்லோரும் அதை வாங்கி வாசியுங்கள்.

பகுதியளவில் ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால், யார் தீவிர இடதுசாரிகள் அமெரிக்காவில் பதவியில் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தால் Bernie, AOC இனைத் தவிர வேறு யாரும் எனக்குத் தெரிய இல்லை. பேர்னியெல்லாம் நாட்டின் தலைமைக்கு வரமுடியாது என்று மக்கள் தீர்ப்பளித்த பின் மிதவாதிகளான பைடன், கமலா ஆட்சியில் தீவிரமாக இடது சார்பு இருக்கவில்லை. ஆனால், இனவாதம், கிறிஸ்தவ அடிப்படை வாதம் (நான் கிறிஸ்தவ தலிபான்கள் என்பேன்), வெள்ளையினத் தேசியவாதம் இவையெல்லாம் இணைந்த தீவிர வலதுசாரி அமைப்புகள், அமெரிக்காவைப் பொறுத்த வரை இடதுசாரிகளுக்கான பின்விளைவாக உருவாகவில்லை.

"குடும்பங்களில் விளைவுகள்" என்பதன் மூலம் நீங்கள் ஒரு பால் திருமணம், இடைப்பாலினர் போன்ற விடயங்களைத் தொடுகிறீர்களென ஊகிக்கிறேன். பழைய காலத்தில் ஒதுக்கல் சட்ட பூர்வமாக இருந்த நிலை மாறி, சாதாரணமான ஏற்றுக் கொள்ளல், அத்தோடு தீவிர வலதுசாரிகளிடமிருந்து பாதுகாக்க சட்டப் பாதுகாப்பு என்பன உருவானது இயற்கையாகவே நிகழவேண்டிய ஒரு சமூக மாற்றம் என்று தான் நான் நினைக்கிறேன்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

நல்லது. இணைந்திருங்கள்.

நன்றி!

பிரித்தானியாவின் முன்னால் பிரதமர், போரிஸ் ஜோன்ஸனை சனல் 4 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிகழ்ச்சியில் பாதியிலேயே அவருடைய புத்தகத்தினை விளம்பரப்படுத்தியமைக்காக வெளியேற்றி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அந்த புத்தகத்தில் உலக அரசியல் பற்றிய பல எதிர்வுகூறல்கள் உள்ளதாம்? வாசித்து வீட்டீர்களா?

கார்டியன் இணையச்செய்தி கூகிள் மொழிமாற்றம் மூலம்.

தனது புத்தகத்தை விளம்பரப்படுத்தியதற்காக போரிஸ் ஜான்சனை அமெரிக்க தேர்தல் நிகழ்ச்சியில் இருந்து சேனல் 4 'நீக்கம் செய்தது' என்று இணை தொகுப்பாளர் கூறுகிறார்

முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி 'அதைத் தள்ளிவிடுங்கள்' என்று எச்சரிக்கப்பட்ட போதிலும் தனது நினைவுக் குறிப்பைக் கொண்டு வந்தார், பின்னர் டிவி பேனலில் மாற்றப்பட்டார்

பிஏ மீடியா
புதன் 6 நவம்பர் 2024 12.15 AEDT
 
நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளரான கிருஷ்ணன் குரு-மூர்த்தியின் கூற்றுப்படி, போரிஸ் ஜான்சன் அமெரிக்கத் தேர்தல் தொடர்பான சேனல் 4 இன் கவரேஜில் விருந்தினராக தோன்றியபோது "தனது புத்தகத்தைப் பற்றி முட்டி மோதியதற்காக" நீக்கப்பட்டார்.

நிகழ்ச்சியிலிருந்து ஜான்சன் வெளியேறுவது திட்டமிடப்பட்டதா அல்லது அவர் முன்கூட்டியே புறப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கிருஷ்ணன் குரு-மூர்த்தி: "இப்போது, இங்கே ஸ்டுடியோவில் எங்களிடம் ஒரு புதிய பேனல் உள்ளது - போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி அதிகம் பேசியதற்காக நீக்கப்பட்டார்" #C4AmericaDecides pic.twitter.com/k64MosGctX

— டேவிட் (@Zero_4) நவம்பர் 5, 2024 "}}">

கிருஷ்ணன் குரு-மூர்த்தி: "இப்போது, இங்கே ஸ்டுடியோவில் எங்களிடம் ஒரு புதிய பேனல் உள்ளது - போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி அதிகம் பேசியதற்காக நீக்கப்பட்டார்" #C4AmericaDecides pic.twitter.com/k64MosGctX

— டேவிட் (@Zero_4) நவம்பர் 5, 2024

நிகழ்ச்சியின் போது, முன்னாள் இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா முடிவு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் என்ற தலைப்பில் நேரலை நிகழ்ச்சியில் சில நிமிடங்களில் தனது நினைவுக் குறிப்பைப் பிடித்துக் கொண்டு அதைச் செருகியதற்காகக் கூறப்பட்டார் .

சேனல் 4 செய்தி வாசிப்பாளரான குரு-மூர்த்தி ஜான்சனிடம் "அதைத் தள்ளிவிடுங்கள்" மற்றும் "நிறுத்துங்கள் போதும்" என்று கூறினார், அவர் தனது புதிய புத்தகத்தை இரண்டு முறை குறிப்பிட்டு அதை பார்வையாளர்களுக்கு பிடிக்க முயன்றார். முன்னாள் பிரதமரின் நடவடிக்கைகள் "மிகவும் மலிவானவை" என்று குரு-மூர்த்தி விவரித்தார்.

ஜான்சன் பதிலளித்தார்: "என்னைத் தடுக்க உங்களால் எதுவும் செய்ய முடியாது ... எனது புத்தகத்தை இணைக்க எனக்கு அனுமதி உண்டு."

🚨 புதியது: போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தை இன்றிரவு சேனல் 4 அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பில் சில தருணங்களில் செருகியுள்ளார் pic.twitter.com/fZnpwRfIhi

— அரசியல் UK (@PolitlcsUK) நவம்பர் 5, 2024 "}}">

🚨 புதியது: போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தை இன்றிரவு சேனல் 4 அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பில் சில தருணங்களில் செருகியுள்ளார் pic.twitter.com/fZnpwRfIhi

— Politics UK (@PolitlcsUK) நவம்பர் 5, 2024

பின்னர் குழு விவாதத்தின் போது, ஜான்சன் ஜூலை மாதம் படுகொலை செய்ய முயற்சித்த பின்னர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை சந்தித்ததாகக் கூறினார். "இதை நான் குறிப்பிடத் தவறினால், எனது புத்தகம் அன்லீஷ்டுக்கு விளம்பரம் செய்கிறேன், உக்ரைனைப் பற்றி அவருடன் பேசினேன்," என்று அவர் கூறினார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அரசியல் ரீதியாக மீண்டும் ட்ரம்ப் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது பற்றி அவரிடம் கேட்டபோது, ஜான்சன் கூறினார்: "அன்லீஷ்டில் இந்த விஷயத்தைப் பற்றிய முழு விவாதத்தையும் நீங்கள் காண்பீர்கள், அதற்கான பதில் வெளிப்படையாக உள்ளது."

இணை தொகுப்பாளர் எமிலி மைட்லிஸ் அவரிடம் கூறினார்: "நாங்கள் அனைவரும் உங்கள் புத்தகத்தைப் படிக்கப் போவதில்லை, எனவே எங்களிடம் கூறுங்கள், நீங்கள் அரசியல் ரீதியாக மீண்டும் வர விரும்புகிறீர்களா … உங்களால் ஒரு கேள்விக்கு உண்மையில் பதிலளிக்க முடியாது."

ஜான்சன் பதிலளித்தார்: “எமிலி உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இரவு முழுவதும் பதிலளித்தேன். தற்போது நான் எனது புத்தகத்தை விளம்பரப்படுத்துவதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளேன், இது அனைத்து நல்ல புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது.

பின்னர் நிகழ்ச்சியில், ஜான்சனுக்கு பதிலாக சேனல் 4 குழுவில் மைக்கேல் கோஹன் நியமிக்கப்பட்டார், அவர் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் வழக்கறிஞராக பணியாற்றினார். குரு-மூர்த்தி பார்வையாளர்களிடம் கூறினார்: "போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி களமிறங்கியதற்காக நீக்கப்பட்டுள்ளார்."

சனல் 4 இன் பிரதிநிதி ஒருவர் கருத்துக்காக PA ஊடகத்தால் தொடர்பு கொள்ளப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

ஆனால் உக்ரேனில் - இப்போ இருக்கும் எல்லையோடு ஒரு போர் தவிர்ப்பை, கொரியாவில் இருப்பது போல, கொண்டு வர டிரம்ப் பிரயத்தனம் படுவார் என நினைக்கிறேன்.

இப்படி ஒரு தீர்வு வேண்டும் என்பதே போர் ஆரம்பித்த நாளில் இருந்து என் தனிப்பட்ட ஆசையாக இருந்தது. உக்ரேன் போர் திரியில் அதை பலதடவை எழுதியும் உள்ளேன்.

அது அப்படி ஒன்றும் உக்ரேனுக்கு மோசமான தீர்வாகவும் இராது.

ஊரில் அடாத்தா காணியை பிடித்தவனுக்கு அதில் ஒரு பங்கை எழுதி கொடுத்து மீதியை மீட்பது போலத்தான் இதுவும். மற்றும் இவை ரஸ்ய மொழி பெரும்பான்மை இடங்கள் வேறு.

இதே போல் (கரலினா?) ஒரு பெரும் நிலப்பரப்பை முன்பு பின்லாந்தும் ரஸ்யா பூதத்தின் ஆக்கிரமிப்பு பசிக்கு விலையாக கொடுத்து, மீதி பின்லாந்தை காப்பாற்றியது.

"I don't think that Trump would agree to peace only on Russia's terms, as this would look like a defeat for the US, and his advisers understand this," Mr Fesenko told Reuters news agency.

உக்கிரேனிய அரசியல் ஆய்வாளரின் (பெசண்கோ) கருத்தின்படி அமெரிக்கா உக்கிரேனின் விடயத்தில் ட்ரம்ப் நினைப்பது போல செய்ய முடியாது என்பதாக, அவ்வாறு நிகழ்ந்தால் அது அமெரிக்காவின் தோல்வியாகிவிடும் என.

உக்கிரேனியர்கள் கூட இந்த போர் தொடரலாம் என நினைக்கிறார்கள் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, Justin said:

பகுதியளவில் ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால், யார் தீவிர இடதுசாரிகள் அமெரிக்காவில் பதவியில் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தால் Bernie, AOC இனைத் தவிர வேறு யாரும் எனக்குத் தெரிய இல்லை. பேர்னியெல்லாம் நாட்டின் தலைமைக்கு வரமுடியாது என்று மக்கள் தீர்ப்பளித்த பின் மிதவாதிகளான பைடன், கமலா ஆட்சியில் தீவிரமாக இடது சார்பு இருக்கவில்லை. ஆனால், இனவாதம், கிறிஸ்தவ அடிப்படை வாதம் (நான் கிறிஸ்தவ தலிபான்கள் என்பேன்), வெள்ளையினத் தேசியவாதம் இவையெல்லாம் இணைந்த தீவிர வலதுசாரி அமைப்புகள், அமெரிக்காவைப் பொறுத்த வரை இடதுசாரிகளுக்கான பின்விளைவாக உருவாகவில்லை.

"குடும்பங்களில் விளைவுகள்" என்பதன் மூலம் நீங்கள் ஒரு பால் திருமணம், இடைப்பாலினர் போன்ற விடயங்களைத் தொடுகிறீர்களென ஊகிக்கிறேன். பழைய காலத்தில் ஒதுக்கல் சட்ட பூர்வமாக இருந்த நிலை மாறி, சாதாரணமான ஏற்றுக் கொள்ளல், அத்தோடு தீவிர வலதுசாரிகளிடமிருந்து பாதுகாக்க சட்டப் பாதுகாப்பு என்பன உருவானது இயற்கையாகவே நிகழவேண்டிய ஒரு சமூக மாற்றம் என்று தான் நான் நினைக்கிறேன்.

உடன்படுகின்றேன்.

டிரம்ப் வெற்றி அடைய நான் அவதானித்த சில விடயங்கள் இவை  

இந்த முறை டிரம்ப்க்கு வாக்களித்த பலரில் லத்தீன் அமெரிக்கர்களும் கருப்பின மக்களும் அடங்கும். அதுவும் இதுவரைக்கும் ஜனநாயக கட்சியின் வாக்காளறாக இருந்தவர்கள் கூட டிரம்ப் க்கு வாக்களித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் ஆண்கள் என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெண்களும் உள்ளார்கள் 

Black life matter என்ற ஒரு சுலோகத்தோடு போன முறை நடைபெற்ற புரட்சி(?) உண்மையில் கருப்பின மக்களின் பிரச்னைகளை வெளிக்கொணர்ததை விட பாதிக்கப்படும் கறுப்பின மக்களின் பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவே பயன் பட்டது. பல கறுப்பின கனவான்கள் அதை அப்பொழுதே உணரத் தலைப்பட்டனர். 

இங்கே வந்து minimum salary க்கு வேலை செய்து கடினமாக உழைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறும்  புலம் பெயர் மக்களில் பெரும்பான்மையானோர்  குடியரசுக் கட்சி பக்கம் சாய்கின்றனர். 

வேலைக்குப் போகாமல் அரசு கொடுக்கும் வீட்டில் இருந்துகொண்டு வேலை இல்லை என்பதற்கு காரண காரியங்களை சொல்லிக்கொண்டு சோம்பேறி ஆகி போதைக்கு அடிமைப்பட்டு பின்னர் homeless நிலைக்கு ஆளாகும் மக்களின் அவல நிலைக்கு புறக்காரணிகள் மட்டுமே காரணம் என்றும் பாதிக்கபடுபவர்கள் வெறும் victims என்றும் அவர்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றளவுக்கு liberalism செயல்படுகின்றது.எந்த பெரிய நகரத்தின் Downtown பக்கமும் இப்பொழுது நிம்மதியாக போக முடிவதில்லை.இதனை உழைக்கும் மக்கள் ரசிப்பதில்லை.

இதுவரைக்கும் சரி என்று நம்பிக்கொண்டு இருந்த விழுமியங்கள் left wing ideology பேசுவோரால் அசுர பலம் கொண்டு தாக்கப்படும் பொழுது  கேள்விக்கு உடப்படுத்தப் படும் பொழுது  எதிர்ப்பு வருவதை நிறுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் நேரம் கொடுக்கப்பட வேண்டும். முக்கியமாக நாம் சரி என்று நம்பும் விஷயங்கள் பிழையோ அல்லது இதை வேறு பரிமாணத்தில் பார்க்கலாமோ என்று எண்ண பக்குவப்பட்ட மனநிலை தேவைப்படுகிறது. இதற்க்கு திணிக்கப்படும் இடது சாரி அரசியல் உதவப் போவதில்லை.

இதைத் தவிர கட்டுப்பாடு அற்ற illegal immigrants, மத்திய கிழக்கு மற்றும் ukraine போருக்கு அளிக்கப்படும் அபரிமிதமான நிதிஉதவி ஆகியவை நிஜமாகவே மத்திய தர குடும்பங்களை பாதித்து உள்ளது.

Edited by பகிடி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, vasee said:

நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், இரண்டு அதிகாரங்களுக்கிடையான போரில் அமெரிக்கா தனது நிலையினை தக்க வைக்க செய்யும் பிரயத்தனமே இந்த போர், ஆனால் இனி வரும் காலங்களில் அமெரிக்காவினது போரிற்காக ஐரோப்பா அதன் செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் அவ்வளவுதான் வித்தியாசம் போர் தொடரும் நிலையே காணப்படும் (அந்த செலவினை அமெரிக்கா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.).

உக்கிரேன், இரஸ்சியா போரினால் அழிவடையும் நிலை தொடரும், உலகம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையும் தொடரும்.

இதை போலவே எனது சிந்திப்பும்.

இப்பொது ஓர் பூரண யுத்தமாக (total war) மாறிவிட்டது - அதாவது பொருளாதாரம், அரசியல், பலம், வளம் , பூகோள செல்வாக்கு, இலட்சிய கோட்பாடுகள் (சனநாயகம், தாராளவாதம், அனல் அவை வெளிப்போர்வையாக  போர்வையாக பாவிக்கப்படுகிறது) போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய யுத்தமாக.

டிரம்ப் விட விரும்பினாலும், deep state, trump ஐ விடாது (என்றே சிந்திக்கிறேன்) நேட்டோ, உக்கிரைன்,  தைவான் போன்ற  விடயங்களில்,  வெளிநாட்டு விடயங்களில், யுத்தத்தை தவிர,  அமெரிக்கா அதிபருக்கு ஏறத்தாழ ஏகபோக அதிகாரம் இருந்தாலும். 

ஏனெனில் விட்டால், இதன் பாதிப்பு அமெரிக்கா மேலாண்மையை ஆகக்குறைந்தது தோற்றத்தையாவது பகுதியாக துடைத்து எறியும். அனால் அதை தக்க வைப்பதே அமெரிக்காவின் கேந்திர இலக்கு.

மற்றது, பெரும்பாலும் அமெரிக்கா hedge funds உக்கிரனுக்குள் கொட்டி இருக்கும் பணம். 

ருஷ்யா பிடித்த பகுதியே உக்கிரைன் இன் ஏறத்தாழ முழு இயற்கை வளம் உள்ள பகுதி. 

மற்றது, ருசியா சொல்லும் நிபந்தனைகள்.

கூட்டி கழித்து பார்க்கும் போது, trump இதில் கட்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்.
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Kadancha said:

அதே.

இது ஒரு இடியாப்ப சிக்கல். எந்த ஒரு தனி நபரோ நாடோ தனி முடிவுகளை எடுத்து தள்ளி நிற்க முடியாது. கூட்டு முயற்சியை விட்டு தனித்தலின் மறுபக்கம் அவர்களையே புதைத்து விடும். 

நேட்டோவில் கூட அவ்வாறு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, Justin said:

பகுதியளவில் ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால், யார் தீவிர இடதுசாரிகள் அமெரிக்காவில் பதவியில் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தால் Bernie, AOC இனைத் தவிர வேறு யாரும் எனக்குத் தெரிய இல்லை. பேர்னியெல்லாம் நாட்டின் தலைமைக்கு வரமுடியாது என்று மக்கள் தீர்ப்பளித்த பின் மிதவாதிகளான பைடன், கமலா ஆட்சியில் தீவிரமாக இடது சார்பு இருக்கவில்லை. ஆனால், இனவாதம், கிறிஸ்தவ அடிப்படை வாதம் (நான் கிறிஸ்தவ தலிபான்கள் என்பேன்), வெள்ளையினத் தேசியவாதம் இவையெல்லாம் இணைந்த தீவிர வலதுசாரி அமைப்புகள், அமெரிக்காவைப் பொறுத்த வரை இடதுசாரிகளுக்கான பின்விளைவாக உருவாகவில்லை.

"குடும்பங்களில் விளைவுகள்" என்பதன் மூலம் நீங்கள் ஒரு பால் திருமணம், இடைப்பாலினர் போன்ற விடயங்களைத் தொடுகிறீர்களென ஊகிக்கிறேன். பழைய காலத்தில் ஒதுக்கல் சட்ட பூர்வமாக இருந்த நிலை மாறி, சாதாரணமான ஏற்றுக் கொள்ளல், அத்தோடு தீவிர வலதுசாரிகளிடமிருந்து பாதுகாக்க சட்டப் பாதுகாப்பு என்பன உருவானது இயற்கையாகவே நிகழவேண்டிய ஒரு சமூக மாற்றம் என்று தான் நான் நினைக்கிறேன்.

அமெரிக்கவை பற்றி தெரியவில்லை.

ஆனால் பொதுவாகவே மேற்கில் இடது மிதவாதிகள் கூட கொஞ்சம் ஓவராக போய்விட்டார்கள் என்ற எண்ணம் எனக்குள்ளது.

பொருளாதார அணுகுமுறை அல்ல, பண்பாட்டு யுத்தங்களை (cultural wars) சொல்கிறேன்.  2000ம்களில் பெண்ணியம், எதிர்பாலின ஈர்ப்பு உள்ளோர் போன்ற விடயங்களில் வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீராம் - பெரும்பான்மை மக்களுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை.

ஆனால் - தொடர்ந்து ஒரு பாலின உறவை civil partnership என திருமண நிகர் உறவாக்கி, இப்போ இரு பாலினத்தவர் திருமணமே செய்யலாம் எனும் நிலை உருவாகியுள்ளது.

இது மட்டும் அல்ல, பல நகரங்களில் குடியேற்றம் அதன் இனப்பரம்பலை முழுவதுமாக மாற்றி சில இடங்களில் வெள்ளையினத்தவரே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இதே போல் ஆணுக்குரிய அத்தனை அம்சங்களை வைத்துக்கொண்டு, நான் பெண்ணாக உணர்கிறேன் என்பவரும் தமக்கு பென்னுரிமை வேணும் என்கிறார்கள்.

இவற்றில் பல உங்களுக்கு, எனக்கு, நம் போன்றோருக்கு, dare I say முற்போக்கு சிந்தனை உள்ளோருக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் மேற்கில் பலருக்கு இது திகட்டி விட்டது.

இதை அதி வலதுசாரிகள் நன்றாக பயன்படுத்துகிறார்கள்.

டிரம்ப் வெல்ல பிரதான காரணம் பொருளாதாரம்தான். இரெண்டாவது கமலா பெண் என்பது. ஆனால் இந்த பண்பாட்டு யுத்த கூறுகளும் பங்காற்றின. குறிப்பாக குடிவரவு.

குடிவரவை கட்டுப்படுத்தாத எந்த அரசும் இனிமேல் மேற்கில் தூக்கி எறியப்படும். இதுதான் யதார்த்தம்.

மேற்கின் இடதுசாரிகள் கட்டிலாம் எழும்பி கோப்பியை மணக்க வேண்டிய தருணம் இது.

6 hours ago, vasee said:

நன்றி!

பிரித்தானியாவின் முன்னால் பிரதமர், போரிஸ் ஜோன்ஸனை சனல் 4 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிகழ்ச்சியில் பாதியிலேயே அவருடைய புத்தகத்தினை விளம்பரப்படுத்தியமைக்காக வெளியேற்றி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அந்த புத்தகத்தில் உலக அரசியல் பற்றிய பல எதிர்வுகூறல்கள் உள்ளதாம்? வாசித்து வீட்டீர்களா?

கார்டியன் இணையச்செய்தி கூகிள் மொழிமாற்றம் மூலம்.

இல்லை…வாசிப்பதாயும் இல்லை. கொஞ்சம் காசு கொடுத்தால் கோஷான் தான் அடுத்த உலக ஜனாதிபதி என எழுதக்கூடிய ஆள்.

குருமூர்த்தி ஆள் கறார் பேர்வழி, ஜோன்சனை துரத்தியது சரியே.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, vasee said:

"I don't think that Trump would agree to peace only on Russia's terms, as this would look like a defeat for the US, and his advisers understand this," Mr Fesenko told Reuters news agency.

உக்கிரேனிய அரசியல் ஆய்வாளரின் (பெசண்கோ) கருத்தின்படி அமெரிக்கா உக்கிரேனின் விடயத்தில் ட்ரம்ப் நினைப்பது போல செய்ய முடியாது என்பதாக, அவ்வாறு நிகழ்ந்தால் அது அமெரிக்காவின் தோல்வியாகிவிடும் என.

உக்கிரேனியர்கள் கூட இந்த போர் தொடரலாம் என நினைக்கிறார்கள் என கருதுகிறேன்.

இந்த ஆய்வை வேறு எந்த அமரிக்க ஜனாதிபதிக்கு என்றால் நானும் ஏற்பேன்.

ஆனால் டிரம்ப் வேறு வகை. உண்மையில் அவர் ஒரு சூழ்நிலைக்கைதி.

3 hours ago, பகிடி said:

வேலைக்குப் போகாமல் அரசு கொடுக்கும் வீட்டில் இருந்துகொண்டு வேலை இல்லை என்பதற்கு காரண காரியங்களை சொல்லிக்கொண்டு சோம்பேறி ஆகி போதைக்கு அடிமைப்பட்டு பின்னர் homeless நிலைக்கு ஆளாகும் மக்களின் அவல நிலைக்கு புறக்காரணிகள் மட்டுமே காரணம் என்றும் பாதிக்கபடுபவர்கள் வெறும் victims என்றும் அவர்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றளவுக்கு liberalism செயல்படுகின்றது.

மிகவும் தெளிவான அவதானிப்பு, விளக்கம்.

பெனிபிட்டில் இருந்து ஆட்கள் செய்யும் களவுகளை பார்க்க முற்போக்கான சிந்தனை உள்ளவர்க்கே மண்டை வேர்க்கும் போது, சராசரி குடிமகன் வலது பக்கம் சாய்வதில் வியப்பேதும் இல்லை.

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.