Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார்

mup.jpg

இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார்.

1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார்.கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்த இவர், 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார்.முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
 

https://thinakkural.lk/article/311831

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் காலமானார் 

image
 

ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம்  (மு. பொ) நேற்று புதன்கிழமை (06) கொழும்பில் காலமானார்.

மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தார். 

இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.  

1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும். 

அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.

எழுத்தாளர் மு. பொன்னம்பலத்தின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கே பேரிழப்பாக கருதப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/198112

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்னாருக்கு என்னுடைய அஞ்சலிகள்!

Posted

ஒரு 25 வருடங்கள் கடந்து போயிருக்கும் உங்களை சந்தித்து.

ஆயினும் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் மு.தளையசிங்கம் பற்றி கதைக்கும் போது உங்களில் இருந்து வெளிப்படும் புன்னகை, விமர்சனங்கள், கோபங்கள் ஆகியவற்றின் நினைவுகள் என்றும் மாறாது.

குழந்தை முகமும், அறச் சீற்றமும் ஒருங்கே இணைந்த ஒருவராகவே என் நினைவுகளில் நீங்கள்..

முடிவிலியில் ஓய்வெடுங்கள்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.