Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த சில விடயங்கள் வருமாறு:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது. நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் – நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் – எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள்.

தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம்.

இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றேன். இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டேன்.” – என்றார்.

https://thinakkural.lk/article/311909

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சுமந்திரன் தான்... சொன்ன வாக்கில் உறுதியாக இருப்பார் என்றால் வரவேற்கத்தக்கது. 
ஆனால்... அவரின் கடந்த கால செயல்கள், அப்படியாக தெரியவில்லை. 
அடிக்கடி... தான் கூறியதையே, வார்த்தை ஜாலங்களால்  மாற்றிக் கதைக்கும் சுபாவம் உடையவராகவே அவரை அடையாளப் படுத்தி உள்ளது. வாய் சுத்தம் இல்லாத,   பொய் பேசும் மனிதன்தான் சுமந்திரன்.  கொழும்பில் ஒரு கதையும், வடக்கில் ஒரு கதையும் கதைத்து... மக்களை ஏமாற்றும் நபர்தான் இவர். 

மைத்திரி ஆட்சியில், இவர்கள் அரசுடன் ஒட்டி உறவாடிக் கொண்டு இருக்கும் போது... அந்த அரசு தமிழர்களுக்கு தீர்வு வழங்கவில்லை என்றால்... அரசியலில் இருந்தே விலகி விடுவேன் என்று அறிக்கை  விட்டவர் தான் சுமந்திரன். மைத்திரி அரசும் ஒரு  தீர்வும் கொடுக்காமல் போன பின்பும்... இன்னும் பிலாக்காய்ப் பால் மாதிரி, ஒட்டிக் கொண்டு இருப்பதை பார்க்கவே... இவர் எவ்வளவு சுத்துமாத்து பொய்யன் என்று விளங்கும்.

தாயக மக்களே... சுமந்திரனை அரசியலில் இருந்து அகற்ற, அவருக்கு வாக்குப் போடாதீர்கள். 🙏
நீங்கள் வாக்குப் போடாவிட்டால்   அவராகவே விலகிச் செல்வதாக சுய வாக்குமூலம் தந்துள்ளார். 
இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். 😂

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Haha 3
Posted

மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த சில விடயங்கள் வருமாறு:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது. நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் – நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் – எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள்.

தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம்.

இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றேன். இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டேன்.” – என்றார்.

https://thinakkural.lk/article/311909

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

 கொழும்பில் ஒரு கதையும், வடக்கில் ஒரு கதையும் கதைத்து... மக்களை ஏமாற்றும் நபர்தான் இவர். 

அதுமட்டுமா, காலையில் ஒன்று, மாலையில் வேறொன்று சொல்வார். வடக்கின் வசந்தத்தின் அடுத்த பக்கம் இவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தலில் தோற்றால் ஆதராவாளர்கள் வற்புறுத்திக் கேட்டதால் தேசியப்படட்டியல் ஆசனத்தை ஏற்கிறேன் என்று அறிக்கை விடுவார். சுமத்திரனின் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!ஏனெ;றால் இர்போதைய தமிழரசுக்கட்சி சுமத்திரனின் ஆதரவாளர்கள் மட்டும்தான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கள்ள வோட்டில் அவ்வளவுக்கு நம்பிக்கை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ஏராளன் said:

தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

ஐயோ நீங்கள் வர்வில்லை என்றால் யாரப்பா சட்ட பாடம் எடுக்கிறது சிறிலங்கா தேசியவாதிகளுக்கு ...அனுராவே உங்களை நம்பித்தான் இருக்கின்றார் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பெருமாள் said:

அடேங்கப்பா… சுமந்திரனுக்கு பிரதம மந்திரி ஆசையும் இருக்குது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆறு நாட்களுக்கு முன்.... நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால் 
தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என வீறாப்பு பேசியவர்,

இப்ப என்னத்துக்கு நாக்கை தொங்கப்  போட்டுக் கொண்டு மருத்துவர் வைத்திலிங்கத்துடன் மல்லு கட்டுக்கின்றார்.

இவ்வளவிற்கும்...  மருத்துவர் வைத்திலிங்கம், இவரது சுத்துமாத்து செயல்களுக்கு எல்லாம் பொதுக்குழுவில் இவருக்கு ஆதரவாக இருந்தவர்.  

சுமந்திரன் எந்தக் காலத்திலும் எவருடனும் நட்பாக இருந்தது கிடையாது. 
தனது காரியம் முடிந்தவுடன் ஆட்களை கழட்டி விட்டு... குழியும் பறிக்கின்ற கெட்ட சிந்தனை உடைய மனிதன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட்சப்பில் வந்த மீம் ஒன்று

thankam.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் - சுமந்திரன்

image

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கட்சி என்ன தீர்மானம் எடுக்கும் என நான் முன்கூட்டியே தெரிவிக்க முடியாது, கட்சியினது முடிவு இறுதியானதாகயிருக்கும். நான் கட்சியின் சகல முடிவுகளிற்கும் கட்டுப்பட்டவனாகாயிருக்கின்றேன். இந்த விடயத்தில் நான் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கின்றேன்.

மக்கள் முன்வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படாத நிலையில் தேசியபட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதை நான் விரும்பவில்லை என்பதை நான் தெளிவாக தெரிவித்திருக்கின்றேன்.

https://www.virakesari.lk/article/198881

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, ஏராளன் said:

466147124_1292009555293193_3444639074355

சுமந்திரன் மானஸ்தன்.
சொன்ன சொல்லை, காப்பாறுவார் என நம்புகின்றோம்.

தமிழரசு  கட்சியும்.. சுமந்திரனுக்கு கரைச்சல் கொடுக்காமல், 
வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை கொடுக்கவும். ✔️

சுமந்திரனை  மீண்டும் தமிழரசு  கட்சி பின்கதவால் பாராளுமன்றம் அனுப்பினால் 
வருகின்ற உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல்களில் எல்லாம் மக்கள் மூர்க்கமாக... தமிழரசு  கட்சியை தோற்கடித்து, ஆறடி குழியில் புதைத்து விடுவார்கள். யோசித்து முடிவு எடுங்கோ.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

466147124_1292009555293193_3444639074355

சுமந்திரன் மானஸ்தன்.
சொன்ன சொல்லை, காப்பாறுவார் என நம்புகின்றோம்.

தமிழரசு  கட்சியும்.. சுமந்திரனுக்கு கரைச்சல் கொடுக்காமல், 
வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை கொடுக்கவும். ✔️

சுமந்திரனை  மீண்டும் தமிழரசு  கட்சி பின்கதவால் பாராளுமன்றம் அனுப்பினால் 
வருகின்ற உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல்களில் எல்லாம் மக்கள் மூர்க்கமாக... தமிழரசு  கட்சியை தோற்கடித்து, ஆறடி குழியில் புதைத்து விடுவார்கள். யோசித்து முடிவு எடுங்கோ.

பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்னர் பாராளுமன்றத்திற்கு கட்சியினால் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் புதிய சட்டவமைப்பு தொடர்பில் சுமந்திரன் தன்னாலான உதவிகள் செய்ய முடியும் என தொனிபட கூறியதாக வாசித்த நினவுள்ளது, அந்த இடத்திற்கு தற்போது தமிழரசுக்கட்சியில் சட்டத்தரணியாக வேறு எவரும் இல்லாத பட்சத்தில் கட்சி அவரையே தெரிவு செய்ய 99.999% வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன்.

ஆனால் புதிய சட்டவமைப்பில் தமிழரசுக்கட்சி உண்மையில் ஒன்றும் செய்யப்போவதில்லை ஆனால் சட்டத்திருத்தத்தம் தொடர்பான பாராளுமன்ற நிகழ்வில் தமிழரசுகட்சியினை தன்னால் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யமுடியும் என அழுத்தத்தினை உருவாக்கி இலகுவாக சுமந்திரன் தேசிய பட்டியலிலூடாக பாராளுமன்றம் சென்றுவிடுவார் அதனை உங்களால் தடுக்க முடியாது.😁

யாழ்களத்தில் யாராவது புதிய கருத்துக்கணிப்பு ஒன்றினை இது தொடர்பாக ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

தமிழ் சிறி அதனை நீங்கள் ஆரம்பிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

//யாழ்மாவட்டத்தைப்பொறுத்த வரை நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட கயேந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார் அரசியலமைப்பு வரைபை அக்கு வேறாக பிரித்து மக்களுக்கு கூறக்கூடிய அவரிடம் மக்கள் அதற்கான பொறுப்பை வழங்கியுள்ளனர் அதனை அவர் செய்வார் என நம்புறன் - சுமந்திரன் பேட்டி//
நன்றி @விசுகு

@vasee சுமந்திரன் அந்தப் பொறுப்பை கஜேந்திரகுமாரிடம் கொடுத்து விட்டார் என மேலே உள்ள பதிவில் உள்ளது. அத்துடன்... ஸ்ரீலங்காவில் சுமந்திரன் மட்டும்தான் லோயர் இல்லை கண்டியளோ... 😂

9 minutes ago, vasee said:

---யாழ்களத்தில் யாராவது புதிய கருத்துக்கணிப்பு ஒன்றினை இது தொடர்பாக ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

தமிழ் சிறி அதனை நீங்கள் ஆரம்பிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

வசி... கடந்த இரு மாதமாக ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், யாழ்.கள தேர்தல், யாழ்.கள கருத்துக் கணிப்பு என்று... செய்திகளை தேடி சேகரித்து வாசித்து, காணொளி பார்த்து... 
என்ரை மண்டை எல்லாம்... விண் விண் என்று வலிக்குது. இனியும் ஒரு கருத்துக் கணிப்பா... வேண்டாம் சாமீ. 
animiertes-gefuehl-smilies-bild-0048🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

//யாழ்மாவட்டத்தைப்பொறுத்த வரை நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட கயேந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார் அரசியலமைப்பு வரைபை அக்கு வேறாக பிரித்து மக்களுக்கு கூறக்கூடிய அவரிடம் மக்கள் அதற்கான பொறுப்பை வழங்கியுள்ளனர் அதனை அவர் செய்வார் என நம்புறன் - சுமந்திரன் பேட்டி//
நன்றி @விசுகு

@vasee சுமந்திரன் அந்தப் பொறுப்பை கஜேந்திரகுமாரிடம் கொடுத்து விட்டார் என மேலே உள்ள பதிவில் உள்ளது. அத்துடன்... ஸ்ரீலங்காவில் சுமந்திரன் மட்டும்தான் லோயர் இல்லை கண்டியளோ... 😂

இல்லை அது பக்கத்து இலைக்கு பாயசம் என்பது போல, தமிழரசு கட்சி சார்பில் சட்ட நிபுணர்கள் இல்லை என்பதால் தனனை தேசிய பட்டியலில் செல்வதற்கு பரிந்துரை செய்வதாகும்.

இந்த கருத்துக்கணிப்பு ஒரு சுவாரசியமாக இருக்கலாம், ஒரு சின்ன முயற்சி, அத்துடன் களத்தில் உறுப்பினர்களை ஆர்வமாக பங்கேற்க வைக்கும் நிகழ்வுகளுக்கு நீங்கள் முன் மாதிரியாக இருப்பதால் அவ்வாறு கூறினேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.