Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

எதிர்வரும் நவம்பர் 14ம் நாள் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் எடுக்கப்பட்ட தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்காவின் 1972, 1978ம் ஆண்டுகால அரசியலமைப்புக்களுக்கு தமிழ்மக்கள் சம்மதம் கொண்டிருக்கவில்லை. இரண்டு அரசியலமைப்புக்களும் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். 

எனவே அந்த அரசியலமைப்பின் கீழ் நடத்தப்படும் ஆட்சி சட்டரீதியான ஆட்சியல்ல. நிராகரிக்கப்பட்ட அந்த அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமும், நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் கீழ் நடைபெறுகின்ற தேர்தல்களும் தமிழ்மக்கள் தொடர்பாக சட்ட அதிகாரம் அற்றவை.

எனிலும் சிறிலங்காவினால் நடாத்தப்படுகின்ற தேர்தல்களையும், நாடாளுமன்றத்தினையும் தமிழீழ விடுதலைக்கான களங்களாக, கருவிகளாக கையாளவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. 

தற்போதைய சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் இடைக்கால தேர்தல்முறை இல்லை. நாம் தேர்தல் முறையினை புத்திகூர்மையுடன் கையாள்வதன் மூலம் சிங்களபௌத்த பேரினவாதத்திற்கு நெருக்கடியினை ஏற்படுத்துவதன் மூலம் உலகின் கவனத்தினை நாம் ஈர்க்க முடியும்.

தமிழர் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்பவர்கள் சிங்கள நாடாளுமன்றத்தினை எவ்வாறு தமிழீழ விடுதலைக்காக பயன்படுத்துவார்கள் என்பதனை முன்னரேயே மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

சிங்கள பேரினவாதம் முள்ளிவாய்க்கால் இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க முயன்று வருகின்றது. 

எனவேதேசிய மக்கள் சக்தி தற்காலத்தில் முன்வைக்கும் தனிநபர் சமத்துவம், இலங்கையர்கள் என்ற கோட்பாடுகள் என்பன, கோத்தா முன்வைத்த கோட்பாடுகள். ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட 15 ஆண்டுகளின் பின்னரும் சிங்கள பேரினவாத கட்சிகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை தொடர்ச்சியாக பேணி வருவதானது, தமிழ் மீதான அடக்குமுறைக்கு சான்றாக அமைகின்றது.

கூட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டாலே தனிநபர் உரிமைகளை அனுபவிற்பதற்கான சூழல் உருவாகும். இன்று சிங்கள பேரினவாதம் பேசும் சமத்துவம் என்பது அரசியல் ஆய்வறிஞர் மு.திருநாவுக்கரசு கூறுவது போல், சின்ன மீனும் பெரிய மீனும் சமன் என்று கூறாலம். 

ஆனால் யாதார்தத்தில் பெரிய மீனே சின்ன மீனை விழுங்கும். சிங்கள பேரினவாதம் பேசும் சமத்துவம், இனங்களுக்கு இடையிலான சமத்துவம் அல்ல.

சிங்கள தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்காது நிராகரிப்பது தமிழர் நலன் நோக்குநிலில் இருந்து அவசியமானது உட்பட சிங்களத் தேசியக்  கட்சிகள் முன்வைக்கும் அரசியல் ஈழத் தமிழர் தேசத்தின் இருப்பை மறுதலிப்பதுடன், சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தலைமையேற்றுச் செய்யும் கட்சிகளாக இவை இருக்கின்றன் இருக்கப் போகின்றன. இத்தகைய சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பின், அது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானதாகும்.

மேலும் தமிழ்பிரதிநிதிகளாக செல்பவர்கள் தமிழீழ தேசியத்தினை பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் தேசம், பாரம்பரியத் தாயகம், சுயநிர்ணயம் போன்ற நிலைப்பாடுகளில் சொல்லிலும் செயலிலும் உறுதியாக இருக்கும் வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

அரசியல், சமூக வாழ்வில் தூய்மையானவர்களாகவும், சமூக நீதி  வழி நின்று செயற்படுபவர்களாகவும், பெண்கள்,  இளையோர் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுப் வகையிலும் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பிரதிநிதித்துவம் அமைதல் வேண்டும்.

ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு பொதுவாக்கெடுப்பு, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையூடாக நீதி கோரல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளும் மக்கள் வாக்களிக்கும்போது கவனத்திற் கொள்ள  வேண்டியவை.

நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்படும் தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழர் தேசத்தின் அரசியல், சமூக, பொருளாதார, சூழலியல் மேம்பாட்டுக்கு எத்தகைய செயற்திட்டத்தின் அடிப்படையில் இயங்கப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும்.

தேர்தல் அரசியலில் ஈடுபடாத, தமிழ்த் தேச வளர்ச்சிக்கு  செயற்படக்கூடிய தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாக உள்ளது. 

இத்தகையதொரு, தேசியப் பேரியக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் காலதாமதமின்றி ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/198396

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா என்ன ஒரு சத்தத்தையும் காணோமே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது இன்னுமொரு பெரிய திட்டத்தோடு வந்துவிட்டீர்கள்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடங்க முதல் உங்கடை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னத்தை இதுவரை சாதித்துள்ளது என சொல்லமுடியுமா? நீங்களும் நாடு கடந்து என்னும் மிஞ்சி இருக்கிறவரையும் நாடு கடத்தி போட்டு உங்கடை பேரியக்கத்தை தொடங்கிற யோசனையா இது.

  • கருத்துக்கள உறவுகள்

குட் மோர்ணிங் சேர். 

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமார் மிக நீண்டகாலமாக எம் தாயகபோராட்ட அமைப்பின் ஓர் அங்கமாக இருந்து இன்று புலிகளின் நினைவாய் எஞ்சியிருக்கும் மிச்சங்களிலொன்று. எம் தாயக போராட்ட அமைப்புக்கு நெடுங்காலம் சட்டரீதியாக தன் போராட்ட பங்களிப்பய் செய்த நன்றிக்குரிய போராளி.

ஆளுமைமிக்க நீங்கள் இந்த நாடுகடந்த அரசை கலைத்துவிட்டு, புலம்பெயர் தேச எமதுமக்கள் அமைப்புக்கள் தொழிலதிபர்களை இணைத்து எம் தாயக மக்களுக்கான அரசியல் பொருளாதார கல்வி ஆலோசனை நடவடிக்கைகளில் மறைமுக சக்தியாய்  ஈடுபடலாம்.

நாடுகடந்த எம்பிக்கள் என்று இருந்தார்கள், அவர்களில் ஒரு சிலர் என்ன செய்கிறார்கள் என்று நன்கறிதிருக்கிறேன். கியூபா போய் மூக்குமுட்ட குடித்து அழகிகளுடன் ஹில்மா பண்ணி கழுதையில் ஏறி சவாரி போன ஒருவரையும் நானறிவேன்..

இவர்கள் தராதரத்திற்கும் புலிகள் அமைப்பின் மறுவடிவ உங்கள் அமைப்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?

தற்போதைய தாயக நிலவரம் பார்த்தால் கண்முன்னே கூட்டம் கூட்டமாக எம் மக்கள் மீண்டுமொருமுறை சிங்களவனிடம் சரணடவது தெரிகிறது.

முள்ளிவாய்க்கால் முடிவில் சரணடந்தது ஆபத்தானதல்ல, ஏனென்றால் அது விரும்பாமலே சரணடைந்தார்கள், இன்று விரும்பி சரணடைகிறார்கள்

எமது பிரதிநிதிகள் எனப்படுகிறவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து போனதால்  தமிழருக்கென்றொரு தனித்துவபகுதி அரசியல் என்பதையெல்லாம் தள்ளி வைக்க தயாராகிவிட்டார்களென்பது பொருள்.

இலங்கை தமிழ்மக்கள் தமிழகம் போன்று சினிமா செம்பு குத்துவிளக்கு குவாட்டர் பிரியாணிக்கான வாக்காளர்களல்ல,

அடுத்துவரும் ஐந்து வருடங்களில் அநுர தமிழர்கட்சிகள்போலவே ஏமாற்றிக்கொண்டிருந்தால் அடுத்த தேர்தலில் மறுபடியும் தமிழர் தலைமைகளை நோக்கி வருவார்கள், அப்போதிருக்கபோகும் தமிழ் தலைமைகள் இப்போதிருந்தவர்களாக இருக்க கூடாது என்பதே அவா.

அதற்கான எத்தனங்களின் பின்னால் மறைமுகமாக உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்பதே அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அமைப்பினை கலைத்தாலே உங்களுக்கு புண்ணியமாக போகும் .....முடியல உங்கட அலப்பறை 

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கூத்தமைப்பும் நட்டு கழண்ட அரசாங்கமும் ஒன்னுக்கொன்னு சளைத்ததில்லை. சர்.... நானும் இருக்கேன் என்று சவுண்டு விட்டு காட்றாப்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

எல்லாம் நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் விட்ட தவறுகளின் பலாபலன்கள் தான் இந்த மாற்றுத்தேர்வு எண்ணங்கள்.😡

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மறக்க விடமாட்டீர்கள் போல......... இந்த மாதம் வந்தால் அப்படியே வெளியே வந்து நிற்கிறீர்களே.........

ட்ரம்ப் அதிபராக வந்ததன் ஒரு அனுகூலம் உங்களிடமிருந்தும் மற்றும் இங்கிருக்கும் இன்னும் சில அமைப்புகளிடமும் இருந்து இங்கிருப்போர் தப்பியது.................

சமஷ்டி எல்லாம் சரிப்பட்டு வராது, தனிநாடு மட்டுமே ஒரே ஒரு தீர்வு, இந்தா காங்கிரஸிற்கு போகின்றோம், அந்தா செனட்டுக்கு போகின்றோம், இதோ புதிய அரசியலமைப்பை எழுதிக் கொண்டிருக்கின்றோம்.......... இப்படியான கதைகள் அடுத்த நாலு வருடங்களுக்கு இங்கு அவ்வளவாக எடுபடாது.  

  • கருத்துக்கள உறவுகள்

அட இது நமது பிரதமர் உருத்திரனல்லோ,? 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இங்கே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீது விமர்சனங்களை வைப்பவர்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். அவ்வாறு ஒன்று உருவானபோது அன்றைய சூழ்நிலையில் நீங்கள் அதற்காக என்ன செய்தீர்கள்?? நான் உட்பட.

என்னைப் பொறுத்தவரை ஒன்று உருவான போது அதை உருவாக விடாமல் உருப்படவிடாமல் செயலாற்றிவிட்டு இன்று அது வலுவற்றதாகி விட்டபின் அதை நக்கல் நையாண்டி செய்வது எந்த வகையில் நியாயம்??? 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

அண்ணை குறை நினைக்காமல் இவர்கள் இது வரை காலமும் என்ன செய்தார்கள் என்று விளக்கமாய் சொல்லுங்க ஏனென்றால் எனக்கு விளக்கம் சில இடங்களில் குறைவு .

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

அண்ணை குறை நினைக்காமல் இவர்கள் இது வரை காலமும் என்ன செய்தார்கள் என்று விளக்கமாய் சொல்லுங்க ஏனென்றால் எனக்கு விளக்கம் சில இடங்களில் குறைவு .

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவான சூழ்நிலையில் (புலிகளின் கட்டமைப்புக்கள் முற்றிலும் சிதைவடைந்த காலப்பகுதியில்) அதற்கு நாம் கொடுத்த ஆதரவு என்ன?? மாறாக என்னைப் பொறுத்தவரை அதனை இயங்க விடாமல் செய்த தடைகளே அதிகம். (நான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளன் அல்ல) ஆனால் நியாயத்தை நிஜத்தை பேசணும். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவான சூழ்நிலையில் அதற்கு நாம் கொடுத்த ஆதரவு என்ன?? மாறாக என்னைப் பொறுத்தவரை அதனை இயங்க விடாமல் செய்து தடைகளே அதிகம். (நான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளன் அல்ல) ஆனால் நியாயத்தை நிஜத்தை பேசணும். 

மீண்டும் குறை நினைக்க வேணாம் என் கேள்விக்கு பதில் என்ன ?

நானும் ஆதரவு கொடுத்தேன் பலன் ௦ தான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

மீண்டும் குறை நினைக்க வேணாம் என் கேள்விக்கு பதில் என்ன ?

நீங்கள் செய்ய விடாத ஒன்றை நோக்கி ஏதாவது செய்ததா என்ற கேள்வியை எப்படி எழுப்ப முடியும்???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நீங்கள் செய்ய விடாத ஒன்றை நோக்கி ஏதாவது செய்ததா என்ற கேள்வியை எப்படி எழுப்ப முடியும்???

எனக்கு இதுக்கு மேல் முடியாது உங்களின் தமிழ் தேசிய பற்று மகிழ்கிறேன் நன்றி இத்துடன் டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

குடித்து அழகிகளுடன் ஹில்மா பண்ணி கழுதையில் ஏறி சவாரி போன ஒருவரையும் நானறிவேன்..

அழகிகளுடன் ‘ஹில்மா’ பண்ணிட்டு எதுக்காக கழுதையில் ஏறினார் என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்+
13 hours ago, valavan said:

உருத்திரகுமார் மிக நீண்டகாலமாக எம் தாயகபோராட்ட அமைப்பின் ஓர் அங்கமாக இருந்து இன்று புலிகளின் நினைவாய் எஞ்சியிருக்கும் மிச்சங்களிலொன்று. எம் தாயக போராட்ட அமைப்புக்கு நெடுங்காலம் சட்டரீதியாக தன் போராட்ட பங்களிப்பய் செய்த நன்றிக்குரிய போராளி.

ஆளுமைமிக்க நீங்கள் இந்த நாடுகடந்த அரசை கலைத்துவிட்டு, புலம்பெயர் தேச எமதுமக்கள் அமைப்புக்கள் தொழிலதிபர்களை இணைத்து எம் தாயக மக்களுக்கான அரசியல் பொருளாதார கல்வி ஆலோசனை நடவடிக்கைகளில் மறைமுக சக்தியாய்  ஈடுபடலாம்.

நாடுகடந்த எம்பிக்கள் என்று இருந்தார்கள், அவர்களில் ஒரு சிலர் என்ன செய்கிறார்கள் என்று நன்கறிதிருக்கிறேன். கியூபா போய் மூக்குமுட்ட குடித்து அழகிகளுடன் ஹில்மா பண்ணி கழுதையில் ஏறி சவாரி போன ஒருவரையும் நானறிவேன்..

இவர்கள் தராதரத்திற்கும் புலிகள் அமைப்பின் மறுவடிவ உங்கள் அமைப்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?

தற்போதைய தாயக நிலவரம் பார்த்தால் கண்முன்னே கூட்டம் கூட்டமாக எம் மக்கள் மீண்டுமொருமுறை சிங்களவனிடம் சரணடவது தெரிகிறது.

முள்ளிவாய்க்கால் முடிவில் சரணடந்தது ஆபத்தானதல்ல, ஏனென்றால் அது விரும்பாமலே சரணடைந்தார்கள், இன்று விரும்பி சரணடைகிறார்கள்

எமது பிரதிநிதிகள் எனப்படுகிறவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து போனதால்  தமிழருக்கென்றொரு தனித்துவபகுதி அரசியல் என்பதையெல்லாம் தள்ளி வைக்க தயாராகிவிட்டார்களென்பது பொருள்.

இலங்கை தமிழ்மக்கள் தமிழகம் போன்று சினிமா செம்பு குத்துவிளக்கு குவாட்டர் பிரியாணிக்கான வாக்காளர்களல்ல,

அடுத்துவரும் ஐந்து வருடங்களில் அநுர தமிழர்கட்சிகள்போலவே ஏமாற்றிக்கொண்டிருந்தால் அடுத்த தேர்தலில் மறுபடியும் தமிழர் தலைமைகளை நோக்கி வருவார்கள், அப்போதிருக்கபோகும் தமிழ் தலைமைகள் இப்போதிருந்தவர்களாக இருக்க கூடாது என்பதே அவா.

அதற்கான எத்தனங்களின் பின்னால் மறைமுகமாக உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்பதே அபிப்பிராயம்.

🫡🫡

4 hours ago, பெருமாள் said:

அண்ணை குறை நினைக்காமல் இவர்கள் இது வரை காலமும் என்ன செய்தார்கள் என்று விளக்கமாய் சொல்லுங்க ஏனென்றால் எனக்கு விளக்கம் சில இடங்களில் குறைவு .

கனடாவில் தமிழ் கொடி (!?) என்றொரு நாளை கொண்டுவந்தவங்களாக்கும்....

பி.கு. இவங்களுக்கு நான் எதுவித ஆதரவுமில்லை 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.