Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேர்தலில் எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி ஏற்படலாம். ஜனாதிபதி முதல் திசைகாட்டியில் இருக்கும் ஆட்சியாளர்கள் யாருக்கும் அனுபவம் இல்லை என்பது தற்பாேது நிரூபணமாகியுள்ளது. அதனால் ஆட்சி செய்த அனுபவமுள்ள சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்  என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை (10) மருதானையில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இருந்த அனைத்து வரிசைகளையும் நாங்கள் நிறுத்தினோம். நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அனைத்து கடன்களையும் முகாமைத்துவம் செய்துகொண்டாேம். 2028ஆம்போது நாங்கள் கடனை செலுத்துவதற்கு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு 2042வரை காலம் இருக்கிறது. கடன் செலுத்தவில்லை என்றால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டிவரும்.

ஜனாதிபதி இதுவரை பொருளாதார இலக்கு தொடர்பில் தெரிவிக்கவில்லை. அதனால் பாரிய நிச்சியமற்ற நிலை இருந்துவருகிறது. தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு, தேங்காயின் விலை தேங்காய் மரத்தைவிட உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை தாமரைக்கோபுரம் போன்று உயர்ந்து செல்கிறது. முட்டை விலை அதிகரித்து செல்கிறது. இதற்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு முடியுமா?

இந்த அரசாங்கம் நாணய நிதியத்துடன்  எவ்வாறு கலந்துரையாடுகிறது? ஜனாதிபதி தேர்தலில் வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கையை கொண்டுவந்தார்கள். அவற்றை செயற்படுத்த முடியுமா? வரி நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலின்போது தெரிவித்தார். அவை கிடைக்கிறதா இல்லையா? என தெரிவிக்க வேண்டும்.

நாடு முன்னுக்கு செல்வதாக இருந்தால் நூற்றுக்கு 8வீத வருடாந்த பொருளாதார அபிவிருத்தி இருக்க வேண்டும். இவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது? சிறிலங்கன் விமான சேவையை வைத்துக்கொள்வதா எனதெரிவிக்க வேண்டும். திசைகாட்டி முன்வைத்திருக்கும் பொருளாதார வேலைத்திட்டத்துக்கு என்ன நடந்திருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார வேலைத்திட்டத்துக்கு அமைய அரசாங்கத்தை நிர்வகிக்க முடியுமா? தேசிய மக்கள் சக்தியில் வியத்மக வைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஜனாதிபதி போட்டாபயவை இல்லாமலாக்கினார்கள். இவர்களையும் இல்லாமலாக்க அவர்கள் தற்போது திசைகாட்டியில்  போட்டியிடுகின்றனர்.

நாட்டுக்கு திறந்த பொருளாதாரம் இருக்க வேண்டும். நான் எப்போதும்  பொருளாதாரத்தை திறந்து விட்டிருந்தேன். திசைகாட்டியில் இருக்கும்  திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. அது தொடர்பில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் நாங்கள் அறிமுகப்படுத்திய பயணத்தில் செல்லுங்கள். இந்த பயணத்தில் இருந்து தூரமாக வேண்டாம். அவ்வாறு இடம்பெற்றால் இந்த பொருளாதாரத்தை கையாள முடியாது.

மேலும் உதய செனவிரத்ன அறிக்கையை செயற்படுத்த, திசைகாட்டி அரச ஊழியர்கள் ஏன் எதிர்ப்பு? இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும். திசைகாட்டியின் பொருளாதார சபையில் வேலை செய்ய முடியாது. அந்த சபையில் வணிகக் கல்வி தொடர்பில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். வியாபார முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் தொடர்பில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். சமஸ்கிருத மொழி தெரிந்தவர்களும் இருக்கிறார்களாம். என்றாலும் பொருளாதாரம் தொடர்பில் அவர்களுக்கு என்ன தெரியும்.?

இது அறியாதவர்கள் இருக்கின்ற அனுபவமில்லாத  அரசாங்கமாகும். ஜனாதிபதி முதல் யாருக்கும் அனுபவமில்லை. அவர்களின்  வேட்பாளர்கள் யார் என்று தெரியுமா? மறைந்திருக்கும் வேட்பாளரை கண்டுபிடித்து உறுப்பினராக்குமாறு தெரிவிக்கிறார்கள். அதனால் அனுபமில்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதா?

அதனால் தற்போது இருப்பது எல்போட் அரசாங்கம். எல்போட் அரசாங்கமும் எல்போட் பாராளுமன்றமும் இருந்தால் பாரிய பிரச்சினை ஏற்படும். நாடு சீரழிந்துவிடும். எனவே நாங்கள் எல்போட் அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதா? பாராளுமன்றத்தை  சிலிண்டருக்கு கொடுத்தால் ஏதாவது ஒன்றை செய்ய முடியும். அதனை நாங்கள் நடைமுறையில் காட்டி இருக்கிறோம். பொருளாதாரத்தை பாதுகாக்க சிலிண்டரில் போட்டியிடுபவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள். குப்பைகளை அகற்றுவதற்கு திசைகாட்டியை அபான்சுக்கு அனுப்புங்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/198463

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அதனால் தற்போது இருப்பது எல்போட் அரசாங்கம். எல்போட் அரசாங்கமும் எல்போட் பாராளுமன்றமும் இருந்தால் பாரிய பிரச்சினை ஏற்படும். நாடு சீரழிந்துவிடும். எனவே நாங்கள் எல்போட் அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதா?

வர வர வாயால் வாந்திபேதி போகிறது போல இருக்கின்றது ரணிலின் மேடைப் பேச்சுகள்................🫣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரசோதரன் said:

வர வர வாயால் வாந்திபேதி போகிறது போல இருக்கின்றது ரணிலின் மேடைப் பேச்சுகள்................🫣.

இவர்களின் கட்சி முதன்முதல் ஆட்சியமைக்கும்போது இவர்கள் எல்போட் தானே அண்ணை?

Edited by ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடின கால்களும் பாடின வாயும் சும்மா இருக்காதாம்!  

  • கருத்துக்கள உறவுகள்

மலையக தமிழரின் வாக்குரிமையை பறித்ததும்  இவரின் முன்னோர்களின் “எல் போட்” பாராளுமன்றம் தானே! 

1948 ல் சுதந்திரம் என்றால் 1949 ல் எல் போட் பாராளுமன்றம் தானே இருந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

"எல்போர்ட் " ஒன்றும் சும்மா குடுப்பதில்லை ...... பரீட்சையில் பாசாகிய பின்தான் குடுக்கப் படுகின்றது . ......!

நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து பல தசாப்தங்களாக அனுபவமிக்கவர்களால் கௌரவமாக வழிநடத்திக் கொண்டுவரப்பட்ட ஐ . தே .கட்சியும் அந்தப் பெரிய யானையும் இப்ப உங்கள் காலத்தில்  இருக்குமிடம் தெரியவில்லை . .......!

  • கருத்துக்கள உறவுகள்

பின்கதாவால் ஜனாதிபதியாகிய நரிக்கு பேச்சப்பாரு

(வசிவுக்கரசி, காந்திமதி குரலில் வாசிக்கவும்). 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

நாட்டில் இருந்த அனைத்து வரிசைகளையும் நாங்கள் நிறுத்தினோம். நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அனைத்து கடன்களையும் முகாமைத்துவம் செய்துகொண்டாேம். 2028ஆம்போது நாங்கள் கடனை செலுத்துவதற்கு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு 2042வரை காலம் இருக்கிறது. கடன் செலுத்தவில்லை என்றால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டிவரும்.

இதை.  நான் கூட செய்வேன் 🤣   அதாவது கடனை.  பிறகு தரலாம்.  என்று தவணை   எடுப்பது    ஒரு அனுபசாலி   ரணில்   தேவையில்லை   ஆனால்   சமையல் செய்ய  16. சமையல்காரர்   நியமித்துவிட்டு    விதம் விதமாக சாப்பிட. ரணில் தேவை தான்    

இவர் ஒரு ஏமாற்றி.   பேய்க்காட்டி    என்பது பேச்சிலும் மிக நன்றாகவே தெரிகிறது   முன்பு  செயலை கூட   தெரியமால். செய்த மிகத்திறமையானவர்.  

இவரை தமிழர்கள் நம்பியிருந்த காலமும் உண்டு    

2042   இலும். நாடு கடனுடன் தான் இருக்கும்    இவர் ஆண்டாலும். வரிசை யுகம்  வரத்தான்.  செய்யும்   

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அந்த நரி கோட்டை கழட்டனும் ரணில் என்ற நரி இலங்கையை விட்டு வேறு உலகளவில் எங்குமே பட்டம் பெறவில்லை என்கிறார்கள் உண்மையா ?

அந்த வெக்கையிலும் ரணிலும் சுமத்தும் சம்பத்தும் தான் கோட் போட்ட ஆட்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

ரணில் என்ற நரி இலங்கையை விட்டு வேறு உலகளவில் எங்குமே பட்டம் பெறவில்லை என்கிறார்கள் உண்மையா ?

இவர் இலங்கையில் மட்டும் தான் படித்து பட்டம் பெற்றார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் ஒன்றை பின்னர் வழங்கியிருந்தது.

ஆக்ஸ்ஃபோட்டில் கேட்டார்கள், கேம்பிரிட்ஜில் கேட்டார்கள்............ என்று 'கரகாட்டக்காரன்' கோவை சரளா போல அவரது ஆதரவாளார்கள் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்...........🫣.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

2042   இலும். நாடு கடனுடன் தான் இருக்கும்    இவர் ஆண்டாலும். வரிசை யுகம்  வரத்தான்.  செய்யும்   

எந்த காலமும் எண்டாலும் தமிழருக்கு தேவையானது என்ன அதை கொடுத்ததால் ஒரு பிரச்னையும் இல்லை தமிழர் சுய உரிமையுடன் வாழத்தானே போராடுகிறார்கள் உங்கள் அரசியல் வாதிகள் தானே தேவை அற்று இந்த தீவை நாசமாக்கினார்கள் ?

இப்பவே என்றாலும் இந்த அனுரா உண்மையான பிரச்சனையை அறிந்தால் நாடு சுபிட்சமாகும்  இல்லா விட்டால் சுடு காடாகும் 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

உங்கள் அரசியல் வாதிகள் தானே

என்னது   என்னுடைய அரசியல்வாதிகளா.    ???  என்னிடத்தில் அப்படி ஒரு பொருள் இல்லை       

இலங்கை அரசியல்வாதிகள் என்று சொல்லுங்கள்   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இவர் இலங்கையில் மட்டும் தான் படித்து பட்டம் பெற்றார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் ஒன்றை பின்னர் வழங்கியிருந்தது.

ஆக்ஸ்ஃபோட்டில் கேட்டார்கள், கேம்பிரிட்ஜில் கேட்டார்கள்............ என்று 'கரகாட்டக்காரன்' கோவை சரளா போல அவரது ஆதரவாளார்கள் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்...........🫣.  

ஒப்பீட்டளவில் ஒரு யூகே மாணவன் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போவதை விட சற்றும் கடினமானதல்ல இலங்கை மாணவன் ஒருவன் பல்கலை கழகம் போகும் வழி.

போனபின், நல்ல பல்கலை கழகம் எதுவென்றால் அது வேற கேள்வி.

ஆனால் எனது அனுபவத்தில் யூகேயில் முதல் 10,15 யூனிக்கு போவதும், இலங்கையில் எந்த ஒரு யூனிக்குப் போவதும் ஒரே அளவு கஸ்டமான விடயம்தான்.

யூகேயில் மத்திய, கீழ தர வரிசை யூனிக்கெல்லாம் படுத்து கொண்டே போகலாம்🤣.

ஆனால் நரி LLB (பல்கலை படிப்பு) இல்லை என நினைக்கிறேன் Attorney At Law (சட்ட கல்லூரி படிப்பு) மட்டும்தான்?  

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

ஒப்பீட்டளவில் ஒரு யூகே மாணவன் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போவதை விட சற்றும் கடினமானதல்ல இலங்கை மாணவன் ஒருவன் பல்கலை கழகம் போகும் வழி.

போனபின், நல்ல பல்கலை கழகம் எதுவென்றால் அது வேற கேள்வி.

ஆனால் எனது அனுபவத்தில் யூகேயில் முதல் 10,15 யூனிக்கு போவதும், இலங்கையில் எந்த ஒரு யூனிக்குப் போவதும் ஒரே அளவு கஸ்டமான விடயம்தான்.

யூகேயில் மத்திய, கீழ தர வரிசை யூனிக்கெல்லாம் படுத்து கொண்டே போகலாம்🤣.

ஆனால் நரி LLB (பல்கலை படிப்பு) இல்லை என நினைக்கிறேன் Attorney At Law (சட்ட கல்லூரி படிப்பு) மட்டும்தான்?  

அவர் இலங்கைப் பல்கலைக்கழகம் போய், பின்னர் சட்டக் கல்லூரி பரீட்சை எழுதினார் என்று தான் விபரங்கள் இருக்கின்றது, கோஷான்.

நீங்கள் சொல்வது சரியானதே, இலங்கையில் பல்கலைக்கழகம் போவதென்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இன்றாவது ஓரளவு பரவாயில்லை, பல வருடங்களின் முன்னர் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

இலங்கையில் நான்கு வருட பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் ஒரு சில மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதியும், காமன்வெல்த் நிதியுதவியும் கிடைக்கும். உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் பொறியியல் பீடத்தில் இருந்து ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். பேராசிரியர் துரைராஜா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன போன்றோர் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு கேம்பிரிட்ஜ் பல்கலையில் மேற்படிப்பை படித்தவர்கள்.

இந்த வகையில் வருடத்தில் ஒரே ஒருவர் என்னும் போது அதற்கு தகுதியடைபவர் மிகச் சிறப்பானவர் என்று இலங்கையில் கருதப்படுகின்றது. ரணிலையும் இந்த வகைக்குள் கொண்டுவர முயற்சிப்பதையே நான் மேலே சொல்லியிருந்தேன்...............  

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் வெளிநாட்டில் படித்தாரா இல்லையா ? 

இல்லை 

இதுதானே பதில் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

ரணிலின் பட்டபடிப்பு தகவலுக்கு நன்றி.

அவர் வெளிநாட்டில் படிக்கவில்லை என்பது ஓரளவு ஊகிக்க கூடியதே, ஏன் என்றால் 24 வயதிலோ என்னமோ எம்பி ஆகிவிட்டார்.

நீங்கள் ஒரு வாட்சப் செய்தியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். 

அதில் அவர் பற்றி சொல்லப்பட்டவை டமால், டுமீல் ரகம்தான்🤣.

ஆதரவாளர்கள் என்றால் அப்படித்தானே🤣.

இப்போ நம்மட சிறிதரனின் கைப்பொடியளை எடுங்கோ, சாராய பிர்மிட் பணத்தை, இலண்டனில் எம்மூலம் முதலிட்டார் என்பதையா சொல்லுவர்கள், இல்லைதானே.

அவர் அஞ்சா நெஞ்சன், அரசியல் ஆலமரம்,  ராஜதந்திர பப்பா மரம் எண்டுதானே எடுத்து விடுவினம்🤣.

அது போல் ஒரு அரசியல் தாமாசுதான் இந்த ரணில் சம்பந்தமான பட்டியலும்.

அதில் ரணிலை அமரிக்கா ஜனாதிபதியாக கேட்டடார்கள் என்பதை தவிர மீதி எல்லாம் இருக்கு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

அதில் அவர் பற்றி சொல்லப்பட்டவை டமால், டுமீல் ரகம்தான்🤣.

🤣.........

அதுவே தான், கோஷான். அவர் மெத்தப் படித்தவர், உலக ராஜதந்திரி அப்படி இப்படி என்று.........

ஆனால் அந்த ஆளோ அட்ரஸ் கேட்டு விட்டு, அடுத்தவன் சட்டையை கிழித்து எறிகின்ற நிலைக்கு இப்ப வந்துவிட்டார்.............. சிங்கள மக்கள் சிலிண்டருக்கு வாக்கும் போடப் போவதில்லை...........  அடுத்த கிழமை ஆள் முழுப்பைத்தியம் ஆகப் போகின்றார்...............  

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இப்பொழுதெல்லாம் இவர் ஒரு முதிர்ந்த அரசியல்வாதி போல் பேசுவதில்லை. மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். இவருடையா மாமாதான் ஜே ஆர் அவர்மூலம் 24 வயதில் அரசியலுக்கு வந்தவர். 17 தடவைகள் தோற்றும் இன்னும் திருந்தவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடக்க வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

ரணில் 1949 மார்ச் 24 இல் எசுமண்ட் விக்கிரமசிங்க, நளினி விக்கிரமசிங்க (விஜேவர்தன) ஆகியோருக்கு கொழும்பில் பிறந்தார். வழக்கறிஞரான தந்தை,[23] ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் சிரில் விக்கிரமசிங்க, டி. ஆர். விஜயவர்தனா ஆகியோர் ஆவர். ரணில் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் கல்வி கற்றவர்களில் அனுரா பண்டாரநாயக்கா, தினேஷ் குணவர்தன குறிப்பிடத்தக்கவர்கள். பாடசாலைக் கல்வியை முடித்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்தில் பட்டம் பெற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1972 இல் வழக்கறிஞரானார்.[24] 2017 இல் பொருளாதாரம், கல்வி, மனித உரிமைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக விக்கிரமசிங்கவிற்கு ஆத்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் ரணிலுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியது.[25]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ரணில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து, 1970களின் நடுப்பகுதியில் களனி தொகுதிக்கான கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரானார். பின்னர் பியகமை தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, 1977 தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஜே. ஆர். ஜெயவர்தனாவின் புதிய அமைச்சரவையில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சராகவும், பின்னர் இளைஞர் விவகார, வேலைவாய்ப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இலங்கையின் வயதில் குறைந்த அமைச்சர் என்ற பெயரையும் இதன் மூலம் பெற்றுக் கொண்டார்.[26] 1989 பெப்ரவரியில் ரணசிங்க பிரேமதாசாவின் அமைச்சரவையில் தொழிற்றுரை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் ரணில் பியகமை சிறப்புப் பொருளாதார வலயத்தை உருவாக்கினார்.[27] 1990-இல்லறிவியல், தொழிநுட்பத்துக்கான அமைச்சுப் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. அரசுத்தலைவர் பிரேமதாசாவிற்குப் போட்டியாக கட்சியில் செயற்பட்ட லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்கா ஆகிய மூத்த அரசியல்வாதிகளிடம் இருந்து ரணிலுக்கும் போட்டி இருந்து வந்தது.[28]

1988-1990 காலப்பகுதியில், ஜேவிபியின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை அடக்குவதற்கான அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொழும்பிற்கு வெளியே பட்டலந்த குடியிருப்பு மற்றும் கைத்தொழில் வளாகத்தில் இருந்த சட்டவிரோத தடுப்பு முகாம் ஒன்றின் பின்னணியில் அப்போது அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இருந்துள்ளார் என்று மக்கள் கூட்டணி அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்டது.[29][30] சந்திரிகா குமாரதுங்கவின் மக்கள் கூட்டணி அரசாங்கம், பட்டலந்த முகாமின் நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக சிறப்பு சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது. 1997 செப்டெம்பர் 3 அன்று விக்கிரமசிங்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார்.[31][32] ஆணைக்குழுவின் அறிக்கை 1998 ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்டது.[33] ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, "பட்டலந்தா வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடுகளில் சட்டவிரோத சித்திரவதை அறைகளைப் பராமரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மூத்த காவல்துறை அதிகாரி நளின் டெல்கொடவுக்கும் மறைமுகப் பொறுப்பு" இருந்ததாகக் கூறப்பட்டது.[34][35] அத்துடன், "வீட்டு வளாகத்தில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் அங்கீகரிக்கப்படாத கூட்டங்களை நடத்தினார் நடத்தினார், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இக்குற்றச்சாட்டுகளுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.[29]

https://ta.wikipedia.org/wiki/ரணில்_விக்கிரமசிங்க

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஒப்பீட்டளவில் ஒரு யூகே மாணவன் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போவதை விட சற்றும் கடினமானதல்ல இலங்கை மாணவன் ஒருவன் பல்கலை கழகம் போகும் வழி.

போனபின், நல்ல பல்கலை கழகம் எதுவென்றால் அது வேற கேள்வி.

ஆனால் எனது அனுபவத்தில் யூகேயில் முதல் 10,15 யூனிக்கு போவதும், இலங்கையில் எந்த ஒரு யூனிக்குப் போவதும் ஒரே அளவு கஸ்டமான விடயம்தான்.

யூகேயில் மத்திய, கீழ தர வரிசை யூனிக்கெல்லாம் படுத்து கொண்டே போகலாம்🤣.

ஆனால் நரி LLB (பல்கலை படிப்பு) இல்லை என நினைக்கிறேன் Attorney At Law (சட்ட கல்லூரி படிப்பு) மட்டும்தான்?  

இதைத் தான் நானும் சொல்ல வந்தேன். எதிரி என்பதற்காக படிப்பை மட்டம் செய்வது நல்லழியன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இதைத் தான் நானும் சொல்ல வந்தேன். எதிரி என்பதற்காக படிப்பை மட்டம் செய்வது நல்லழியன்று. 

அதே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.