Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!

701702412.jpg

வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை(11) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; குறித்த கூட்டத்தில் சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினர்.

அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். (ச)

https://newuthayan.com/article/சுழிபுரத்தில்_சுமந்திரனின்_கூட்டத்தில்_குழப்பம்_-_தலையிட்ட_பொலிஸார்!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

701702412.jpg

நடுவில இருக்கிற தம்பி அடுத்த தவிசாளருக்கு முயல்கிறார் போல!
அவர் தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருப்பார்.

தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம்

image_b8e128d636.jpg

நிதர்ஷன் வினோத்

வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில், திங்கட்கிழமை (12)  நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினர்.

அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அவரை அனுப்பி வைத்தனர்.

image_d642848643.jpgimage_c318aea74d.jpgimage_a38bccbbae.jpgimage_ace79161af.jpgimage_698f8f1e76.jpgimage_9738e2fcaa.jpg

https://www.tamilmirror.lk/செய்திகள்/சுமந்திரனின்-கூட்டத்தில்-குழப்பம்/175-346983

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்  இணுவிலில் நடத்திய பிரச்சார  கூட்டத்திற்கு  ஐந்து பேர் மட்டுமே போயிருக்கின்றார்களாம்.😂

பங்கு பற்றியோர் விபரம்.
1)  பந்தல் ஓனர்.
2) லைட் ஓனர்.
3) கதிரை ஓனர்.
4) ஒலிபெருக்கி ஓனர்.
5) சுமந்திரனின் வாகன சாரதி.

சுத்துமாத்து  சுமந்திரன்.... கம்பத்தின் உச்சியில் நின்று "குறளி வித்தை" காட்டினாலும், 
காசு வாங்க... கீழே இறங்கித்தான் வர வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அவரை அனுப்பி வைத்தனர்.

ஏராளன் இதைத் தவிர செவிவழி செய்தி ஏதாவது தெரியுமா?

1 hour ago, கிருபன் said:

சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர்.

கேள்வி கேட்டவர்கள் எப்படியான கேள்விகள் கேட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

@ஏராளன் ... இது உங்களுடைய ஏரியா தானே...
கூழ்  முட்டை, அழுகின தக்காளிப் பழம், கல்லு, பீ  முட்டி... போன்றவற்றை 
சப்ளை  பண்ணியிருக்கலாமே.   
animiertes-gefuehl-smilies-bild-0090

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

@ஏராளன் ... இது உங்களுடைய ஏரியா தானே...
கூழ்  முட்டை, அழுகின தக்காளிப் பழம், கல்லு, பீ  முட்டி... போன்றவற்றை 
சப்ளை  பண்ணியிருக்கலாமே.   
animiertes-gefuehl-smilies-bild-0090

ஓ அப்ப குழப்பியவர்கள் ஏராளனின் ஆட்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ அப்ப குழப்பியவர்கள் ஏராளனின் ஆட்களா?

ஏராளன்.... டாக்டர் அர்ஜுனாவின் வலது கை  என்று எமது புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. 😂
அப்ப... கூட்டிக் கழித்துப் பார்க்க, புலநாய்வு அங்கைதான்  போய் நிற்குது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏராளன் இதைத் தவிர செவிவழி செய்தி ஏதாவது தெரியுமா?

எனக்கு செய்தி பார்த்து தான் கூட்டம் பற்றி தெரியும் அண்ணை!

10 minutes ago, ஈழப்பிரியன் said:

கேள்வி கேட்டவர்கள் எப்படியான கேள்விகள் கேட்டார்கள்?

மேலுள்ள காணொளியில் ஒருத்தர் கேக்கிறார், சரியாக விளங்கவில்லை.

போனமுறை தும்புபறக்க ஒருத்தர் கேட்டவர், இப்ப அவர் உயிரோடை இல்லை.

9 minutes ago, தமிழ் சிறி said:

@ஏராளன் ... இது உங்களுடைய ஏரியா தானே...
கூழ்  முட்டை, அழுகின தக்காளிப் பழம், கல்லு, பீ  முட்டி... போன்றவற்றை 
சப்ளை  பண்ணியிருக்கலாமே.   
animiertes-gefuehl-smilies-bild-0090

ஐயையோ

7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ அப்ப குழப்பியவர்கள் ஏராளனின் ஆட்களா?

சத்தியமாக எனக்குத் தெரியாதண்ணை.

2 minutes ago, தமிழ் சிறி said:

ஏராளன்.... டாக்டர் அர்ஜுனாவின் வலது கை  என்று எமது புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. 😂
அப்ப... கூட்டிக் கழித்துப் பார்க்க, புலநாய்வு அங்கைதான்  போய் நிற்குது. 🤣

Rajeshwaran~ராஜேஸ் on X: "வடிவேலு டுடே கெட்அப்: உயிரே உயிரே தப்பிச்சு  எப்படியாவது ஓடிவிடு,ஐயையோ வரானே ட்ரீட் கேக்க வரானே....🎂🎂🎂 #HBDVadivelu  https://t.co ...

எஸ்கேப்....

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு எங்க கூட்டம் போட வேணும் எண்ட அறிவில்லை….

இணுவில் கொஞ்சம் சாப்ட் டைப்…வராமலே விட்டு விடுவார்கள்…

சுழிபுரம்….வந்து வெளுப்பார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

சுமந்திரனுக்கு எங்க கூட்டம் போட வேணும் எண்ட அறிவில்லை….

இணுவில் கொஞ்சம் சாப்ட் டைப்…வராமலே விட்டு விடுவார்கள்…

சுழிபுரம்….வந்து வெளுப்பார்கள்🤣

ஏனண்ணை இந்தக் கொலவெறி!
வன்முறைகளில் மிகமிக குறைவாக அல்லது அறவே ஈடுபடுவதில்லை இப்பகுதி மக்கள், சமீபகால வாள்வெட்டுக் குழு செய்திகளில் எப்பவாவது பார்த்திருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சுமந்திரனுக்கு எங்க கூட்டம் போட வேணும் எண்ட அறிவில்லை….

இணுவில் கொஞ்சம் சாப்ட் டைப்…வராமலே விட்டு விடுவார்கள்…

சுழிபுரம்….வந்து வெளுப்பார்கள்🤣

32 minutes ago, ஏராளன் said:

ஏனண்ணை இந்தக் கொலவெறி!
வன்முறைகளில் மிகமிக குறைவாக அல்லது அறவே ஈடுபடுவதில்லை இப்பகுதி மக்கள், சமீபகால வாள்வெட்டுக் குழு செய்திகளில் எப்பவாவது பார்த்திருக்கிறீர்களா?

சங்கானை ஆட்கள் வந்து… சுழிபுரத்தில் குழப்பம் விளைவித்து இருப்பார்களோ… 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஏனண்ணை இந்தக் கொலவெறி!
வன்முறைகளில் மிகமிக குறைவாக அல்லது அறவே ஈடுபடுவதில்லை இப்பகுதி மக்கள், சமீபகால வாள்வெட்டுக் குழு செய்திகளில் எப்பவாவது பார்த்திருக்கிறீர்களா?

வாள்வெட்டு எல்லாம் சண்டித்தனம், சுழிபுரம் அப்படி இல்லை,

ஆனால் ஆண்களும் பெண்களும் தனிமனித தைரியம் உடையவர்கள். 

அனுபவத்தில் சொல்கிறேன்.

பேய்காட்ட முடியாது.

வடகம்பரை அம்மன் கோவிலில் கிருபாநந்தவாரியாரையே குறுக்கு கேள்வி கேட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா..இப்பவே

7 hours ago, கிருபன் said:

701702412.jpg

கள்ளவோட்டு எப்படி எடுக்கிறது என்று ..போனை நோண்டுகின்றார்....அய்யனுக்கு மச்சம் எங்கையோ இருக்கு

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் இவ்வளவு கேவலமாய் அசிங்கபட்டு மக்களிடம் பேச்சு வாங்கி கேவலமான அரசியல் செய்து அடிவாங்காத குறையாக புலம்பெயர் தேசங்களில் திரத்தப்ட்ட அரசியல் வாதி சுத்துமாத்து சுமத்திரன் ஆகத்தான் இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

நான் நினைக்கிறேன் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் இவ்வளவு கேவலமாய் அசிங்கபட்டு மக்களிடம் பேச்சு வாங்கி கேவலமான அரசியல் செய்து அடிவாங்காத குறையாக புலம்பெயர் தேசங்களில் திரத்தப்ட்ட அரசியல் வாதி சுத்துமாத்து சுமத்திரன் ஆகத்தான் இருக்கும் .

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படும் போதே....
கள்ளா...  கள்ளா.... என்ற  கோஷத்துடன் தானே, சுத்துமாத்து  சுமந்திரன்  தெரிவானவர். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஏனண்ணை இந்தக் கொலவெறி!
வன்முறைகளில் மிகமிக குறைவாக அல்லது அறவே ஈடுபடுவதில்லை இப்பகுதி மக்கள், சமீபகால வாள்வெட்டுக் குழு செய்திகளில் எப்பவாவது பார்த்திருக்கிறீர்களா?

அவசரப்பட்டு மறுப்பறிக்கை விடுறத பார்த்தா சந்தேகமாத்தான் இருக்கு 🤪

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படும் போதே....
கள்ளா...  கள்ளா.... என்ற  கோஷத்துடன் தானே, சுத்துமாத்து  சுமந்திரன்  தெரிவானவர். 😂

இதுவே ஒரு சாதாரன ரோசம் மானம் சோத்தில் உப்பு போட்ட மனிதர்களுக்கு நடந்து இருந்தால் தனக்கு தானே தூக்கு போட்டு செத்திருப்பான் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படும் போதே....
கள்ளா...  கள்ளா.... என்ற  கோஷத்துடன் தானே, சுத்துமாத்து  சுமந்திரன்  தெரிவானவர். 😂

திருடா திருடா படத்தை சும், சாணாக்ஸ் சை வைத்து ஈழத்தில் ரிமேக் செய்தால்…கள்ளா…கள்ளா என பெயர் வைக்கலாம்🤣.

ஹீரா வுக்கு பதில் ஆரை போடலாம் @வாலி சார்😀.

@நிழலி யின் பள்ளித்தோழரின் வேட்பாளர் மைத்துனியை?🤣.

———-

ஆனால் சுமந்திரன்-லவ்வர்ஸ் என வாஞ்சையாக அழைக்கபடும் குழுவினருக்கு, 15 ம் திகதி ஒரு டெலிகேட் பொசிசன் வரப்போகுது இப்பவே தயார் ஆகவும்.

அது என்னெவென்றால்….

இந்த முறை ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் மிகவும் ஒழுங்கு முறையுடன் நடக்கும்…

ஆகவே சிங்களவனோடு சேர்ந்து சுமந்திரன் சுத்து மாத்து செய்துபோட்டார் என்ற ரீலை ஓட்ட முடியாது…

புதிதாக எதையாவது இப்பவே ஒட்டி வைக்கவும்😆.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ஒரு சுத்து மாத்து நான் அடிக்கிறது போல் பாய்வன் நீ விலகுவது போல் விலகனும் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் மறைவாக தண்ணியடிக்கும் இடங்களில் முடிவு செய்வது அவர்கள்தான் .

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

———-

ஆனால் சுமந்திரன்-லவ்வர்ஸ் என வாஞ்சையாக அழைக்கபடும் குழுவினருக்கு, 15 ம் திகதி ஒரு டெலிகேட் பொசிசன் வரப்போகுது இப்பவே தயார் ஆகவும்.

புதிதாக எதையாவது இப்பவே ஒட்டி வைக்கவும்😆.

சில ஐடியாக்கள் சுமந்திரன் லவ்வர்சுக்கு:

1. மோகன் 15 முதல் 17 வரை யாழ் பராமரிப்புக் காரணமாக தடங்கலுக்குள்ளாகும் என்கிறார். "நான் சும் வாக்கு மாற்றிய வீடியோ 15 ஆம் திகதி இணைத்தேன், பராமரிப்பில் போய் விட்டது" என ஒரு கயிறு திரிக்கலாம்.

2. இப்பவே "யாழ் அரச அதிபர்  நேர்மையான தேர்தல் அலுவலர் அல்ல.." என்று கதையைக் கட்டி விடலாம்

3. சுமந்திரனோடு "பிஸ்ரல் ஏந்தி வந்த கடை வாயிற்காப்பாளர்" வாக்கை மாற்றி விட்டார் என்று இன்னொரு இணையத்தில் பொறுக்கிய படத்தை இறக்கி விடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

திருடா திருடா படத்தை சும், சாணாக்ஸ் சை வைத்து ஈழத்தில் ரிமேக் செய்தால்…கள்ளா…கள்ளா என பெயர் வைக்கலாம்🤣.

ஹீரா வுக்கு பதில் ஆரை போடலாம் @வாலி சார்😀.

@நிழலி யின் பள்ளித்தோழரின் வேட்பாளர் மைத்துனியை?🤣.

சபாஷ் நல்ல சாய்ஸ். மிதிலைச் செல்விக்கும் முக்கிய பாத்திரம் குடுக்கவேணும்!

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் எப்படியும் சுத்து மாத்து பண்ணி உள்ளே வந்து விடுவார் என்று பலவாரங்களுக்கு முன்னே எழுதி விட்டேன் இப்ப என்ன புதுசா எழுதுவது இப்பவும் சொல்கிறேன் அவர் தமிழ் மக்களின் மேல் சவாரி செய்ய வந்த கொள்ளைக்காரன் புலத்திலும் சரி நிலத்திலும் சரி தமிழ் மக்களால் வெறுக்கப்பட்ட ஒருவர் இந்திய இலங்கை அதிகார சக்தி களால் வெல்ல வைக்கபட்ட ஒரு கோடாலி காம்பு இம்முறையும் அவர் வெல்வார் அவர் வெல்லாமல்  போனால் உண்மையிலே தேர்தல் நடந்து இருக்குது என்று அர்த்தம் அதோடை அவரின் சொல் போல் அமைதியாக அரசியல் ஓய்வு போக சொல்லுங்க இல்லாவிடின் அவரின் ஒவ்வொரு கூட்டம்களும் தமிழ்  மக்களின் கல்லெறி வாங்கும் கூட்டமாக இருக்கும் .

Edited by பெருமாள்
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Justin said:

சில ஐடியாக்கள் சுமந்திரன் லவ்வர்சுக்கு:

1. மோகன் 15 முதல் 17 வரை யாழ் பராமரிப்புக் காரணமாக தடங்கலுக்குள்ளாகும் என்கிறார். "நான் சும் வாக்கு மாற்றிய வீடியோ 15 ஆம் திகதி இணைத்தேன், பராமரிப்பில் போய் விட்டது" என ஒரு கயிறு திரிக்கலாம்.

2. இப்பவே "யாழ் அரச அதிபர்  நேர்மையான தேர்தல் அலுவலர் அல்ல.." என்று கதையைக் கட்டி விடலாம்

3. சுமந்திரனோடு "பிஸ்ரல் ஏந்தி வந்த கடை வாயிற்காப்பாளர்" வாக்கை மாற்றி விட்டார் என்று இன்னொரு இணையத்தில் பொறுக்கிய படத்தை இறக்கி விடலாம்!

😀 ஐடியாக்கள் பலே பலே

13 minutes ago, வாலி said:

சபாஷ் நல்ல சாய்ஸ். மிதிலைச் செல்விக்கும் முக்கிய பாத்திரம் குடுக்கவேணும்!

குடுத்திட்டா போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல்வாதியை பார்த்து கேள்வி கேட்பது குற்றமா ?

அனால் அங்கு நடந்தது என்ன கேள்வி கேட்டவர்களை கூட்டத்தில் இருந்து போலிஸ் வெளியேற்றி உள்ளது இதை அங்குள்ள புதிய விருசுவானம் அனுரா ஏன் அந்த போலீஸ்காரர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை அவர் எடுக்கமாட்டார் என்பதும் நமக்கு தெரியும் இதன் பின் அங்கு ஒழுங்கான தேர்தல் நடந்தது என்று யார் நம்புவார்கள் ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.