Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20241118-010633-Chrome.jpg

சிந்திக்க‌ வைக்கும் ப‌திபு🤔.........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அப்படியிருக்க தெலுங்கர்கள் மட்டும் தேவதாசிகள் என்று பிராமண பிரிவை சேர்ந்த ’ஆச்சாரமான’’ கஸ்தூரி எவ்வாறு கூறினார்

கஸ்தூரி சொல்லி  இருப்பது தெலுங்கு ஆண்களை தானே குறிக்கிறது (அந்தப்புர மகளிருக்கு சேவை)

அந்தப்புர மகளிர் அரசிக்கு சேவை.

அதில் பொதுவாக, ஆண்களே அந்தப்புர மகளிருக்கு பல கடின வேலைகளை செய்வது.
 
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

நீங்கள் முந்தி, சரோஜாதேவி, இன்பநிலா, திரைச்சித்திரா போன்ற சஞ்சிகைகளின் சந்தாதாரராக இருந்தீர்களா?

இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

மனிதரில் நிறம்பார்க்காத என் தலைவனின் ஆதரவாளராயிருந்துகொண்டு மனிதரில் குலம் பார்க்கும் கஸ்தூரியின் செயல் மன்னிக்கப்பட முடியாத குற்றமே.

நன்றாக சொன்னீர்கள்  அவர் யார் ஆதரவாளராக இருந்தால் என்ன மனிதரில் சாதி பார்க்கும் அவர் கைது செய்யபட்டு தண்டிக்கபட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நன்றாக சொன்னீர்கள்  அவர் யார் ஆதரவாளராக இருந்தால் என்ன மனிதரில் சாதி பார்க்கும் அவர் கைது செய்யபட்டு தண்டிக்கபட வேண்டும்.

உற‌வே த‌மிழ் நாட்டில் உண்மையும் நேர்மையுமாய் ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மைய‌ செய்யுதா..........உங்க‌ட‌ ம‌ன‌சாட்ச்சிய‌ தொட்டு சொல்லுங்கோ....................இதே க‌ஸ்தூரி

திமுக்கா க‌ட்சியில் இருந்து சொல்லி இருந்தால் சிறைக்குள் அடைத்து இருப்பின‌மா...............................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

இதே க‌ஸ்தூரி

திமுக்கா க‌ட்சியில் இருந்து சொல்லி இருந்தால் சிறைக்குள் அடைத்து இருப்பின‌மா...............................

உறவே அவர் திமுக கட்சியில் இருந்தால் என்ன வேறு கட்சியில் இருந்தால் என்ன அவருடைய தவறான சாதி பேச்சுக்கு கைது செய்யபட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது வாராத கோபம்  தன் இனத்தை பற்றி பேசிய போது வருகிறதென்றால் .....
அதன் பெயர் திராவிடம்.

Bild

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kadancha said:

கஸ்தூரி சொல்லி  இருப்பது தெலுங்கு ஆண்களை தானே குறிக்கிறது (அந்தப்புர மகளிருக்கு சேவை)

அந்தப்புர மகளிர் அரசிக்கு சேவை.

அதில் பொதுவாக, ஆண்களே அந்தப்புர மகளிருக்கு பல கடின வேலைகளை செய்வது.
 
 ஆம் கடஞ்சா நீங்கள் சொல்வதே சரி,

ஆனாலும் ஆணோ பெண்ணோ ஒரு இனத்தை அசிங்கபடுத்தியிருக்கிறார் என்பதே பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது வாராத கோபம்  தன் இனத்தை பற்றி பேசிய போது வருகிறதென்றால் .....
அதன் பெயர் திராவிடம்.

Bild

நியாயமான கேள்வி 

467472353_8528346957213403_5884192184269942748_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=tdfypV5QOukQ7kNvgF_1LAs&_nc_zt=23&_nc_ht=scontent-ord5-2.xx&_nc_gid=AOKEweB_3L_S-svvcZNuHjg&oh=00_AYB513YSWm_puLFp56FctLkYB1TI6hJ0qA58ZknUJpstlw&oe=6740702A467521852_8528347887213310_8563870757004080581_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=_02TReIr6jYQ7kNvgGNbyOC&_nc_zt=23&_nc_ht=scontent-ord5-2.xx&_nc_gid=AOKEweB_3L_S-svvcZNuHjg&oh=00_AYBpKqcj38v9DIWfeSPjC_2JqLU2I10QhTtjWRzPD9thIQ&oe=674085FF

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது வாராத கோபம்  தன் இனத்தை பற்றி பேசிய போது வருகிறதென்றால் .....
அதன் பெயர் திராவிடம்.

Bild

அப்போது கோபம்  வரவில்லை என்று எதை வைத்து கூறுகின்றீர்கள். அது நடந்த போது சீமானின் ஆதரவுடன்  ஈழத்தாய் அல்லவா தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்.  

அது நடந்த போது ஈழத்தாயைடன் சேர்ந்து செல்ல மகன் சீமான் அதற்கெதிராக  என்ன செய்தார்? 

 சீமானின் சித்தப்பா பச்சை தமிழன் எடப்பாடி ஆட்சியில் தமிழ் நாட்டிலேயே போராட்டம் செய்த  தமிழர்கள் பொலிஸாரால் குருவிகள் போல் சுட்டுக்கொல்லப்பட்டார்களே! 

அது நடந்த பின்னரும் எந்த கோபமும் வராமல் சித்தப்பா சித்தப்பா என்று சீமான் பாசமழையை பொழிந்தாரே! 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

கோவில் தொண்டு செய்யவும், நடன மாதுக்களாகவும், பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்களாகவும் நித்ய சுமங்கலிகளாகவுமென பிரிவுகள் ஆந்திரா ஒடிசா கர்நாடகா உத்தர பிரதேசம் என பல மாநிலங்களிலும் 1947 வரை  ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயரில் இருந்ததாகவும் பின்னரே அது படிப்படியாக ஒழிக்கப்பட்டதாகவும், இன்றும் கர்நாடகாவில் சில இடத்தில் நடைமுறையிலிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அந்நாளில் மன்னர்கள் ,சிற்றரசர்கள், பண்ணையார்கள் அவர்களை ஜமீன்தார்கள் தமது அந்தப்புரநாயகிகளாக பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள் 

தமிழகத்தில் பிராமணர் வேளாளர், மறவர்என அனைத்து  குலங்களிலிருந்தும் தேவதாசிகள் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன,

இது மற்றத்திரியில் சொல்லிய இசை வெள்ளாளர் என்ற சாதியின் தோற்ற வரலாறோடு  கிட்டத்தட்ட  ஒத்து வருகிறது.

ஆனால் 20 ம் நூற்றாண்டிலும் எப்படி நடந்தது?

வறுமையினால்?

ஆங்கிலேயரும், தடை செய்துவிட்டு, மற்றப்பக்கம் பார்த்துக்கொண்டு, ஆங்கிலேயரும் இந்த பெண்களை பாலியலுக்கு பாவித்து இருக்கலாம்.

சிங்களம் சிங்கள  ஆண்களை, பெண்களை சிறுவர், சிறுமியரை ஆங்கிலேயருக்கு பாலியலுக்கு பாவிக்க  கொடுத்தது போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்?; ஆதரவு குரல் கொடுத்த சீமான்

kasthori.jpg

தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

பின்னர், நேற்று ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை பொலிஸார் சென்னை அழைத்து வந்தனர். அவருக்கு, வரும் நவம்பர் 29 -ம் திகதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நடிகை கஸ்தூரியின் கைது அவசியமில்லாத ஒன்று. அவர் பேசியதில் காயம்படவோ, வேதனைப்படவோ ஒன்றுமில்லை. வேண்டுமென்றே பழிவாங்குகின்றனர்.

அவர் பேசியது காயமடைந்துள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால், தமிழ் பேரினத்தை, திராவிடம் என்று பல நூற்றாண்டுகளாக சொல்லும்போது நாங்கள் எவ்வளவு காயம் அடைந்திருப்போம்.

அவர் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டார். இருந்தாலும் தனிப்படை அமைத்து, வேறு மாநிலத்துக்கு சென்று கைது செய்யும் அளவுக்கு அப்படி என்ன தவறு செய்தார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

https://akkinikkunchu.com/?p=299650

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, island said:

அது நடந்த போது சீமானின் ஆதரவுடன்  ஈழத்தாய் அல்லவா தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்.  

அது நடந்த போது ஈழத்தாயைடன் சேர்ந்து செல்ல மகன் சீமான் அதற்கெதிராக  என்ன செய்தார்? 

 சீமானின் சித்தப்பா பச்சை தமிழன் எடப்பாடி ஆட்சியில் தமிழ் நாட்டிலேயே போராட்டம் செய்த  தமிழர்கள் பொலிஸாரால் குருவிகள் போல் சுட்டுக்கொல்லப்பட்டார்களே! 

அது நடந்த பின்னரும் எந்த கோபமும் வராமல் சித்தப்பா சித்தப்பா என்று சீமான் பாசமழையை பொழிந்தாரே! 

தகவல்களுக்கு நன்றி.

2 hours ago, கிருபன் said:

கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்?; ஆதரவு குரல் கொடுத்த சீமான்

சாதி இன அவதூறு  பேசிவிட்டு ஹைதராபாத் என்ற ஊரில் ஓடி ஒளித்து கொண்ட நடிகை  கஸ்தூரியின் சாதி இன அவதூறு பேச்சில் காயம்படவோ  வேதனைப்படவோ ஒன்றுமில்லை  கைது செய்யும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்றும்  சீமான் கேட்கின்றாரே   🙄  புல்லு அரிக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தகவல்களுக்கு நன்றி.

சாதி இன அவதூறு  பேசிவிட்டு ஹைதராபாத் என்ற ஊரில் ஓடி ஒளித்து கொண்ட நடிகை  கஸ்தூரியின் சாதி இன அவதூறு பேச்சில் காயம்படவோ  வேதனைப்படவோ ஒன்றுமில்லை  கைது செய்யும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்றும்  சீமான் கேட்கின்றாரே   🙄  புல்லு அரிக்கின்றது

க‌ஸ்தூரி பேசின‌தை விட‌ திமுக்கா அதிக‌ம் பேசி இருக்கு

ஜ‌யா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை நினைவு ப‌டுத்துகிறார்

விருப்ப‌ம் இருந்தால் காணொளிய‌ பாருங்கோ உண்மைக‌ள் ப‌ல‌ வெளிய‌ தெரியும்..............................

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்தூரி என்றொரு நடிகை பற்றி இப்போதுதான் அறிகின்றேன். ஆனால் இங்குள்ள கருத்தாளர்கள் பலரும் இவர் பற்றி ஏற்கனவே நல்ல பரீட்சயம் உள்ளவர்கள் என்பதை அறிய ஆச்சரியமாக உள்ளது. எல்லாரும் இந்திய தொலைக்க்காட்சி/சினிமா/சீரியல் உலகத்தில் உள்ளார்களோ? அல்லது கூகிழ்/விக்கியில் வாசித்துவிட்டு வந்து கருத்து போடுகின்றார்களோ?

இது எப்படி சாத்தியம்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

கஸ்தூரி மிஸ் தமிழ்நாடு  ஆகவும் இருந்திருக்கிறார் , இது போதாதா ...😀

கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1992 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 00:34, சாமானியன் said:

அவரது வயதும் இங்கு கருத்து எழுதக்கூடியவர்களின் வயதும் கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றது. அழகுராணி என்றால் வாய்த்தடிப்பம் வழமைதான் போல. 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 01:27, நியாயம் said:

கஸ்தூரி என்றொரு நடிகை பற்றி இப்போதுதான் அறிகின்றேன். ஆனால் இங்குள்ள கருத்தாளர்கள் பலரும் இவர் பற்றி ஏற்கனவே நல்ல பரீட்சயம் உள்ளவர்கள் என்பதை அறிய ஆச்சரியமாக உள்ளது. எல்லாரும் இந்திய தொலைக்க்காட்சி/சினிமா/சீரியல் உலகத்தில் உள்ளார்களோ? அல்லது கூகிழ்/விக்கியில் வாசித்துவிட்டு வந்து கருத்து போடுகின்றார்களோ?

இது எப்படி சாத்தியம்? 😁

ஒரு வேளை எங்கேயும் வாசிக்காமல், எதையும் பார்க்காமல் - இருந்த இடத்தில் இருந்து ஞான திருஸ்டியில் தகவல் அறியும் வல்லமை அவர்களுக்கு இருக்குமோ🤣.

கஸ்தூரி நடிகை மட்டும் அல்ல, ஆங்கிலத்தில் socialite என்பார்களே அப்படி தமிழில் ஒரு சமூக-பிரபலம்.

அவரை பற்றி அறிந்திருப்பது அதிசயமல்ல, அறியாமல் இருப்பதுதான் வழமைக்கு மாறானது.

On 19/11/2024 at 05:34, சாமானியன் said:

கஸ்தூரி மிஸ் தமிழ்நாடு  ஆகவும் இருந்திருக்கிறார் , இது போதாதா ...😀

கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1992 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

அப்பெல்லாம் நாங்கள் ஷாட்ஸ் போட்டு ஸ்கூல் போற டைம்.

மிகவும் மெல்லிதாக, எடுப்பான முக இலட்சணத்தோடு, டஸ்கி கலரில் பாலுமகேந்திரா ஹீரோயின் வெட்டில், மிஸ்மெட்டிராஸ் எண்டு கஸ்தூரியை குமுதம், விகடன் எமக்கு அறிமுகம் செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு வேளை எங்கேயும் வாசிக்காமல், எதையும் பார்க்காமல் - இருந்த இடத்தில் இருந்து ஞான திருஸ்டியில் தகவல் அறியும் வல்லமை அவர்களுக்கு இருக்குமோ🤣.

கஸ்தூரி நடிகை மட்டும் அல்ல, ஆங்கிலத்தில் socialite என்பார்களே அப்படி தமிழில் ஒரு சமூக-பிரபலம்.

அவரை பற்றி அறிந்திருப்பது அதிசயமல்ல, அறியாமல் இருப்பதுதான் வழமைக்கு மாறானது.

அப்பெல்லாம் நாங்கள் ஷாட்ஸ் போட்டு ஸ்கூல் போற டைம்.

மிகவும் மெல்லிதாக, எடுப்பான முக இலட்சணத்தோடு, டஸ்கி கலரில் பாலுமகேந்திரா ஹீரோயின் வெட்டில், மிஸ்மெட்டிராஸ் எண்டு கஸ்தூரியை குமுதம், விகடன் எமக்கு அறிமுகம் செய்தது.

நானும் பயில்வான் தான் என்று வந்து சொல்லைக் கொடுத்து வாங்கிக் கட்டுவது என்பது இதனைத்தானா??

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 02:27, நியாயம் said:

கஸ்தூரி என்றொரு நடிகை பற்றி இப்போதுதான் அறிகின்றேன்.

இவாவை  நானும் இப்போது தான் அறிகிறேன். சாதி இன அவதுறு செய்துவிட்டு ஓடி ஒளித்து கொள்கிறா பொலிஸ் கைது செய்ய போனதிற்கு அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்கின்றார்  யார்  அடுத்த தமிழ்நாட்டின் முதல்வராக வரபோவதாக உறவு வீரபையனால் நம்பபடும் தலைவர்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஒரு வேளை எங்கேயும் வாசிக்காமல், எதையும் பார்க்காமல் - இருந்த இடத்தில் இருந்து ஞான திருஸ்டியில் தகவல் அறியும் வல்லமை அவர்களுக்கு இருக்குமோ🤣.

கஸ்தூரி நடிகை மட்டும் அல்ல, ஆங்கிலத்தில் socialite என்பார்களே அப்படி தமிழில் ஒரு சமூக-பிரபலம்.

அவரை பற்றி அறிந்திருப்பது அதிசயமல்ல, அறியாமல் இருப்பதுதான் வழமைக்கு மாறானது.

அப்பெல்லாம் நாங்கள் ஷாட்ஸ் போட்டு ஸ்கூல் போற டைம்.

மிகவும் மெல்லிதாக, எடுப்பான முக இலட்சணத்தோடு, டஸ்கி கலரில் பாலுமகேந்திரா ஹீரோயின் வெட்டில், மிஸ்மெட்டிராஸ் எண்டு கஸ்தூரியை குமுதம், விகடன் எமக்கு அறிமுகம் செய்தது.

ஓ அப்படியா? நாம் அப்போது அகதியாக அங்குமிங்குமாய் ஓடிய்திரிந்த நேரம். அப்போதைய ஈழநாதத்தில் இதுபற்றி பிரசுரம் செய்ய இல்லை என நினைக்கின்றேன்.

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இவாவை  நானும் இப்போது தான் அறிகிறேன். சாதி இன அவதுறு செய்துவிட்டு ஓடி ஒளித்து கொள்கிறா பொலிஸ் கைது செய்ய போனதிற்கு அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்கின்றார்  யார்  அடுத்த தமிழ்நாட்டின் முதல்வராக வரபோவதாக உறவு வீரபையனால் நம்பபடும் தலைவர்

காய் முத்தி இப்போதுதான் சந்தைக்கு வருகின்றது போல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

ஓ அப்படியா? நாம் அப்போது அகதியாக அங்குமிங்குமாய் ஓடிய்திரிந்த நேரம். அப்போதைய ஈழநாதத்தில் இதுபற்றி பிரசுரம் செய்ய இல்லை என நினைக்கின்றேன்

ஈழநாதமும் படிக்கோணும், குமுதமும் படிக்கோணும் - Saturday Review வும் படிக்கோணும். இல்லாவிடின் 40, 50 வயசில கஸ்தூரியை கூகிள் பண்ணி பார்க்கும் அவல நிலை ஏற்படும்🤣.

அது சரி 1991 ஆம் ஆண்டு புத்தளம் முகாம்களில் ஈழநாதம் கிடைத்ததா? ஆச்சரியமாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.