Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதங்கள் குவிப்பு; பலமான நிலையில் அவுஸ்திரேலியா

15 DEC, 2024 | 04:51 PM
image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 405 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தபோது முதல் 3 விக்கெட்கள் மதிய போசன இடைவேளைக்கு முன்னர் வீழ்த்தப்பட்டது.

உஸ்மான் கவாஜா (21), நேதன் மெக்ஸ்வீனி (9), மானுஸ் லபுஷேன் (12) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

எனினும் இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 241 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் பலனான அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்தது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் சதம் குவித்த சூட்டுடன் 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.

தனது 112ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவன் குவித்த 33ஆவது சதம் இதுவாகும். அத்தடன் 18 மாதங்களின் பின்னர் அவர் குவித்த முதலாவது சதமாகும்.

அவரை விட மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து 152 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ட்ரவிஸ் ஹெட் சதம் குவித்து அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

மத்திய வரிசையில் அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும் பெட் கமின்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த இரண்டாவது 5 விக்கெட் குவியல் இது என்பதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவுசெய்த 12ஆவது 5 விக்கெட் குவியலாகும்.

https://www.virakesari.lk/article/201358

  • Replies 106
  • Views 6.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣. டி 20 உலகக் கோ

  • ரசோதரன்
    ரசோதரன்

    🤣............ கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன்

  • ரசோதரன்
    ரசோதரன்

    பையன் சார்,  அரிஸ்டாட்டில், பிளேட்டோ வரிசையில் ஒரு தத்துவஞானியாக வளர்ந்து வருவோம் என்று பார்த்தால், கவுண்டமணி செந்திலுக்கு பின்னர் ஒரு இடைவெளி வந்து விட்டது, அங்கே தான் நான் நிற்கின்றேன் என்று நீ

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸி 445 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 

இந்தியா 22 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய துடுப்பாட்டக்காரர்களினால் Gabba போன்ற உயிர்ப்பான ஆடுகளங்களில் பெரிதாக சாதிக்கமுடியாது. மட்டையான ஆடுகளங்களில் வெளுத்து வாங்குவார்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2024 at 10:20, vasee said:

இங்கு கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியர்கள் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் இந்தியர்கள் அதனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் அணி தோற்றால் செத்த வீடு மாதிரி இருக்கும் வித்தியாசமான மனிதர்கள்.

இவர்கள் வெளிநாடுகளில் ஆடி தோற்றுவிட்டால், இந்திய விமான நிலையத்தில் எதிர்ப்பை சமாளிக்க சாதாரணமாக மக்கள் வெளியேறும் பாதையை தவிர்த்து முக்கிய.பிரமுகர்கள் செல்லும் பாதையால் வெளியேறி விடுவார்கள். இல்லையென்றால்; சாணாக வீச்சுத்தான் இவர்கள்மேல். அதிலும் பாகிஸ்தானோடு விளையாடி வென்றுவிட்டால்; ஒரே வெடி கொழுத்தல் ஆரவாரந்தான். அது அவர்களின் மானப்பிரச்சனை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் கடும் நெருக்கடியில் இந்தியா

16 DEC, 2024 | 02:28 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா குவித்த 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா, மழையினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 4 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

1612__josh_hazlewood.png

முதல் இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்கள் மீதம் இருக்க, இந்தியா 394 ஓட்டங்களால் பின்னிலையில் இருக்கிறது.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (4), ஷுப்மான் கில் (1), விராத் கோஹ்லி (3), ரிஷாப் பான்ட் (9) ஆகிய நால்வரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் நடையைக் கட்டினர்.

போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் கே.எல். ராகுல் 33 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

1612__mitchell_starc.png

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 405 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களைப் பெற்றது.

தனது துடுப்பாட்டத்தை 45 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அலெக்ஸ் கேரி 70 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

1612__alex_carey.png

ட்ரவிஸ் ஹெட் (156), ஸ்டீவன் ஸ்மித் (101) ஆகிய இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தில் சதங்கள் குவித்து அசத்தியிருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 97 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

43ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜஸ்ப்ரிட் பும்ரா இப் போட்டியில் தனது 12ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். 

https://www.virakesari.lk/article/201416

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா

கிரிக்கெட் வீரர் பும்ரா இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2வது ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியும் வெற்றிப் பெற்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் எடுத்தது.

pumra-kapildeve.jpg

இதனையடுத்து, 2வது நாள் ஆட்டம் நேற்று (டிச.15) நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 152 ஓட்டங்களும் ஸ்டீவ் ஸ்மித் 101 ஓட்டங்களும் எடுத்தனர். மேலும், அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களுடனும் ஸ்டார்க் 7 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த தொடரின் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். பும்ரா டெஸ்ட் இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இது 12வது முறையாகும். அதே சமயம் அவர் ஆசிய கண்டத்துக்கு வெளியே இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 10வது நிகழ்வாகும். இதற்கு முன்பு இந்திய பவுலர்களில் கபில்தேவ், ஆசியாவுக்கு வெளியே 9 முறை 5 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

https://thinakkural.lk/article/313804

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைநிலை ஆட்டக்காரர்களால் ஃபலோ ஒன்னைத் தவிர்த்தது இந்தியா

17 DEC, 2024 | 04:52 PM
image
 

 (நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைநிலை ஆட்டக்காரர்களின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டங்களால் ஃபலோ ஒன்னை (Follow on) இந்தியா தவிர்த்துக்கொண்டது.

பல தடவைகள் மழையினால் பாதிக்கப்பட்ட இப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்களிலிருந்து  இந்தியா  தொடர்ந்தது.

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் வீழ்ந்துகொண்டிருக்க, மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கே.எல். ராகுல் 5ஆவது விக்கெட்டில் ரவிந்த்ர ஜடேஜாவுடன் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சற்று தைரியத்தைக் கொடுத்தார்.

ராகுல் 84 ஓட்டங்களையும் ஜடேஜா 76 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கை 213 ஓட்டங்களாக இருந்தபோது ஜடேஜா 9ஆவதாக ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்தியா பலோன் ஒன் முறையில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், கடைநிலை வீரர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (10 ஆ.இ.), ஆகாஷ் தீப் (27 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் பலோ ஒன்னைத் தவிர்த்தனர்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலிய முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களைக் குவித்தது.

ட்ரவிஸ் ஹெட் 152 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 101 ஒட்டங்களையும் அலெக்ஸ் கேரி 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியில் ஒரு நாள் மாத்திரம் மீதம் இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி பெரும்பாலும் வெற்றிதோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1712_kl_rahul__ind_vs_aus_3rd_test.png

1712_akash_deep_and_jasprit_bumrah_save_

https://www.virakesari.lk/article/201530

  • கருத்துக்கள உறவுகள்

சினம் கொண்ட சிங்கத்த சாய்த்து போட்டீர்களே...

mnb.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா?

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

பிரிஸ்பேனில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

கடைசி நாளான இன்று பிற்பகலுக்கு பின் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, 3வது டெஸ்ட் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த டெஸ்டின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பந்துவீச்சாளர் பும்ரா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

கடைசி நாளில் என்ன நடந்தது?

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 260 ரன்கள் சேர்த்து பாலோ-ஆனைத் தவிர்த்தது. 185 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய நிலையில், 2.1 ஓவர்களில் 8 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. நீண்டநேரமாகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. மைதானத்தில் வெளிச்சமும் குறைவாக இருந்ததால் ஆட்டத்தை முடிப்பதாக நடுவர்கள் அறிவித்தனர்.

கடைசி நாளான இன்று வெறும் 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 8 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவின் வியூகம் என்ன?

இந்திய அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்திய பின், விரைவாக ஒரு பெரிய ஸ்கோரை அடித்து பெரிய இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்க வேண்டும். கடைசி நாளில் ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக இருப்பதால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து வீழ்த்திவிடலாம் என்று ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டிருந்தது. அந்த திட்டத்தின் அடிப்படையில்தான் ஆஸ்திரேலிய பேட்டர்கள் அதிரடியாக பேட் செய்து, ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் ஆடினர்.

புதிய பந்தில் ஆடுகளம் வேறுவிதமாக செயல்படும் என்பதைத் தெரிந்தும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் தங்கள் விக்கெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் பேட் செய்தனர். 18 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 89 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. மீதமுள்ள 54 ஓவர்களில் 275 ரன்களை இலக்காக நிர்ணயித்து இந்திய அணியை சுருட்ட ஆஸ்திரேலிய அணி வியூகம் அமைத்தது. ஆனால், மழை காரணமாக இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 2.1 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது.

அடுத்ததாக வரும் 26-ஆம் தேதி மெல்போர்னில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'பாக்ஸிங் டே டெஸ்டை எதிர்பார்க்கிறோம்'

போட்டி முடிந்த பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "போட்டியின் இடையே மழையின் இடையூறுகள் இருந்தன. மெல்போர்னில் அடுத்த டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். 1-1 என்ற சமநிலையில் இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் மெல்போர்ன் டெஸ்டை எதிர்கொள்வோம். அணியில் ஏதாவது ஒருவீரர் நிலைத்து நின்று, ஆட்டத்தை கொண்டு செல்ல விரும்பினோம்.

ஜடேஜா, ராகுல் இருவரும் பொறுப்புடன் பேட் செய்தனர். பந்துவீச்சில் பும்ரா, ஆகாஷ் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஆகாஷ் பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதியவர் என்றாலும், பல விஷயங்களை ஆகாஷ் கற்றுக்கொடுத்தார். மற்ற 2 பந்துவீச்சாளர்கள் அவருக்கு துணையாக இருந்து அவருக்கு உதவி செய்தனர்" எனத் தெரிவித்தார்

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, இரு அணிகளின் நிலையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. இந்திய அணி 17 போட்டிகளில் 9 வெற்றி, 6 தோல்வி ,2 டிராவுடன் 114 புள்ளிகளுடன் 55.89 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்தில் நீடிக்கிறது.

ஆஸ்திரேலிய அணி 15 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி, 4 தோல்வி, 2 டிராவுடன் 106 புள்ளிகளுடன், 58.89 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி ஒரு டிராவுடன் 76 புள்ளிகளுடன், 63.33 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி 3-வது முறையாக தகுதி பெறுமா?

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 3வது முறையாக விளையாட அடுத்து வரும் 2 டெஸ்ட் போட்டிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டும். அப்போது இந்திய அணியின் வெற்றி சதவீதம் 60க்கு மேல் உயரும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றினாலும் அந்த அணியால் பைனலுக்கு தகுதி பெற இயலாது.

இந்திய அணி அடுத்துவரும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்று, மற்றொன்றை டிரா செய்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெறும். அதற்கு இலங்கை அணி உதவ வேண்டும். அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்று, மற்றொன்றை இலங்கை டிரா செய்தால் இந்திய அணி பைனலுக்குச் செல்லும். இந்திய அணி கடைசி இரு டெஸ்ட்களிலும் தோற்றால் பைனல் வாய்ப்பு சாத்தியமில்லை.

ஒருவேளை கடைசி இரு டெஸ்ட்களில் இந்திய அணி ஒன்றில் வென்று, மற்றொன்றில் தோல்வி அடைந்தால். இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை 2-0 என தோற்கடிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் வேண்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால், இந்திய அணி பைனலுக்குச் செல்லும்.

தென் ஆப்பிரிக்க அணி பைனலுக்குள் செல்ல ஒரு வெற்றி மட்டுமே தேவை. பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்றாலும் தென் ஆப்பிரிக்கா பைனலுக்குச் சென்றுவிடும்.

ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என தொடரை இழந்தால், இந்திய அணி பைனலுக்குள் செல்ல இன்னும் ஒரு வெற்றி மட்டும் பெற்றால் போதுமானது. இலங்கை-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முடிவு பைனலில் ஆடும் 2வது அணி யார் என்பதை முடிவு செய்யும்.

ஆதலால், இந்திய அணி 3வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. இந்திய அணி ஒரு வெற்றி பெற்றால்கூட பைனலுக்கு முன்னேறலாம். ஆனால், அதற்கு பிற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவுக்கு காத்திருக்க வேண்டியிருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

பாரத் அணிக்கு வாய்ப்பே இல்லை! பொக்ஸிங் டே மட்சில் பாரத் அணியை காடாத்துறம் இருந்து பாருங்கோ!😂

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2024 at 03:32, வாலி said:

பாரத் அணிக்கு வாய்ப்பே இல்லை! பொக்ஸிங் டே மட்சில் பாரத் அணியை காடாத்துறம் இருந்து பாருங்கோ!😂

இந்தியாவின் மானத்தை வாங்கும் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி, அவுஸ்ரேலிய ஊடகத்துறையினை புறக்கணிக்கும் இன்னொரு கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்தியணியின் இந்த தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் உடந்தையாக இருகிறதா என தோன்றுகிறது.

மெல்பேர்ண் ஆடுகளம் சிட்னி ஆடுகளத்திற்கு நெருக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது, தற்போது நிலவும் அதிக வெப்பத்தினால் கடுமையாக இருக்க வாய்ப்பு அதிகம என்பதால் பந்து விரைவாக அதன் சுவிங், சீம் அனுகூலம் இலகுவாக இழக்கப்பட்டுவிடலாம் என கருதப்படுகிறது, 

அதனால் சுழல் பந்து வீச்சாலர்களின் பங்களிப்பும் இந்த போட்டியில் காணப்படும், முதல் நாள் ஆட்ட நாளில் வெப்பம் 40 பாகை வெப்பத்தினையும் அடுத்துவரும் நாள்களில் 20 களின் மத்தியில் வெப்பம் காணப்படும் என கூறப்படுகிறது, நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுபெடுதாடும் என கருதப்படுகிறது.

அவுஸ்ரேலிய அணியில் மக்சுவேனி (புதிய தொடக்க ஆட்டக்காரர்) இற்கு பதிலாக சாம் கொன்ஸ்டாஸும் கேசல்வூட்டிற்கு பதிலாக பந்து வீச்சாளராக போலன்ட் களமிற்ங்கிகின்றனர், போலன்ட் இனது ஊர் மைதானம் இதுவாகும் இதில் அவர் முன்னர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த இரண்டு போட்டித்தொடர்களிலும் இந்தியாவே வென்றுள்ளதால் இந்தியர்கள் இந்தியணியே வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இந்திய பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணி மேலாதிக்கத்துடன் இருப்பதால் அவுஸ்ரேலிய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம், இந்த போட்டியில் மழை குறுக்கிடாது என கருதப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்ன் ஆடுகளம் முன்னர் கூறியது போல நாணய சுழற்சியில் வெல்லும் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்யும் எனும் கூற்று தவறாக வாய்ப்புள்ளது.

அண்மையில் இடம் பெற்ற மழை காரணமாக ஆடுகளம் மூடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள், அதனால் ஆடுகளத்தில் ஈரப்பதன் காணப்படும் அத்துடன் புற்களும் காணப்படும், மைதான நிர்வாகிகள் இந்த ஆடுகளத்தின் புற்கள் வழமையாக உள்ளதை விட அதிகமாக  விட்டு வெட்ட உள்ளதாக கூறுகிறார்கள் 12MM புல் கொண்ட ஆடுகளத்தில் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டினை செபீல்ட் போட்டியில் எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலமைகளை வைத்து பார்க்கும் போது நாணய சுழற்சியில் வெல்லும் அணி பந்து வீச்சினை தெரிவு செய்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது, ஏனெனில் இந்த மைதானத்தில் முதல் இனிங்க்ஸில் ஓட்ட்டங்களை எடுப்பது இலகு ஆனால் இரண்டாம் இனிங்ஸில் ஓட்டங்கள் எடுப்பது கடினம் என்பதால், துடுப்பாட்டத்தினை  தேர்வு செய்யாமல் பந்து வீச்சினை தெரிவு செய்வதுதான் தற்போதய சூழ்நிலையில் சரியான முடிவாக இருக்கும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?

இந்தியா -   ஆஸ்திரேலியா, பாக்ஸிங்டே டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி பாரம்பரியம் கொண்ட மெல்போர்ன் நகரில் உள்ள எம்சிஜி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 5 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. காபா டெஸ்ட் மழையால் டிரா ஆனதால், அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியைக் காண எம்ஜிசி மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய டெஸ்ட் போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய தூண்டுகோலாக அமையும்.

 

இந்திய அணியின் கவலைகள்

இந்திய அணியைப் பொருத்தவரை பாக்ஸிங் டே டெஸ்ட் மிகவும் முக்கியமானது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே பார்டர் கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைக்க முடியும். ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால், 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த தொடரை கைப்பற்றும் முனைப்பில் முன்னேறும்.

அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறவும் இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு முக்கியமானது.

இந்திய அணியைப் பொருத்தவரை, அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ள மெல்போர்ன், சிட்னி ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு ஒரளவு ஒத்துழைக்கும் நிலையில் அஸ்வின் இல்லாதது உண்மையில் பலவீனம்தான். அஸ்வின் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஒரு வீரரை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த 3 டெஸ்ட்களிலும் டாப்ஆர்டர் பேட்டிங் கவலைக்குரியதாக காட்சி தந்தது. ஜெய்ஸ்வால் கடந்த 2 டெஸ்ட்களிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. டாப்ஆர்டரில் வழக்கமாக பேட் செய்யும் ரோஹித் சர்மாவை மீண்டும் தொடக்க வீரராக களமிறக்கி ராகுலை மூன்றாவது வீரராக இறக்கவும் இந்த டெஸ்டில் முயற்சிக்கலாம்.

சுப்மான் கில் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பெரிதாக ரன் ஏதும் சேர்க்கவில்லை. அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்படலாம். மெல்போர்ன் ஆடுகளம் கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறக்கூடும் என்பதால் தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் அல்லது ஜடேஜாவுடன் சேர்ந்து வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது

இந்தியா -   ஆஸ்திரேலியா, பாக்ஸிங்டே டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தனுஷ் கோட்டியான்

கோலி, ரோஹித் சிறப்பாக ஆடுவார்களா?

நிதிஷ் குமார் ரெட்டி கடந்த 3 டெஸ்ட்களிலுமே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சுப்மான் கில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் நிதிஷ் ரெட்டி இடம் உறுதியாகும். மற்றவகையில் இந்திய அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.

மெல்போர்ன் ஆடுகளத்தில் சதம் அடித்த வகையில் விராட் கோலி மட்டுமே அனுபவமானவர். அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கோலி ஒரு சதம் தவிர இந்தத் தொடரில் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

ரோஹித் சர்மா கடந்த 2 டெஸ்ட்களிலும் சரியாக பேட் செய்யவில்லை. இதனால் 4வது டெஸ்டில் அவர் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக் கூடும்.

இவர்கள் தவிர ரிஷப் பந்த், ராகுல் ஆகியோரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக மெல்போர்னில் தோற்காமல் பயணித்துவரும் இந்திய அணி அதைத் தக்கவைக்குமா என்பது பெரிய எதிர்பார்ப்பாகும்.

இந்தியா -  ஆஸ்திரேலியா, பாக்ஸிங்டே டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடைசி இரு நாட்கள் ஆடுகளத்தில் வரக்கூடிய விரிசல்கள், மெல்போர்னில் நிலவும் கடும் வெயில் ஆகியவை ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணி எப்படி?

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மெக்ஸ்வீனிக்குப் பதிலாக கோன்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர லாபுஷேன், உஸ்மான் கவாஜா இருவருமே கடந்த டெஸ்ட்களில் பெரிதாக ரன் சேர்க்காததும் அந்த அணிக்கு கவலையாக உள்ளது. இந்திய அணியைப் போன்று ஆஸ்திரேலிய அணியிலும் டாப்ஆர்டர் தலைவலியாகவே இருப்பதால், மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.

நடு வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் நம்பிக்கையளிக்கிறார்கள். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் முதுகெலும்பாக டிராவிஸ் ஹெட் இருந்து வருகிறார்.

இவரை மட்டும் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் ஆட்டமிழக்க செய்தால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை நிலைகுலைந்துவிடும்.

காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் அடுத்த இரு டெஸ்ட்களிலும் விலகியது அந்த அணிக்கு பின்னடைவுதான். ஹேசல்வுட்டுக்கு பதிலாக போலந்த் அல்லது ஹெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரில் ஒருவர் அணிக்குள் வரலாம். சுழற்பந்துவீச்சில் நேதன் லயன் தவிர வேறு எந்த வீரரையும் ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்யாது என்றே தெரிகிறது. கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக ஹெட்டை பயன்படுத்தலாம்.

ஒப்பீட்டளவில், ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி பலமாகத் தெரிந்தாலும் ஆட்டத்தின் நடுவே காய்களை நகர்த்துவதில் ஆஸ்திரேலிய அணி வேகமாக இருக்கிறது.

இந்தியா -  ஆஸ்திரேலியா, பாக்ஸிங்டே டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் முதுகெலும்பாக டிராவிஸ் ஹெட் இருந்து வருகிறார்.

ஆஸ்திரேலிய அணி(உத்தேசம்)

உஸ்மான் கவாஜா, சாம் கோன்டாஸ், லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கெரே, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலந்த் அல்லது ஹெய் ரிச்சார்ட்ஸன்

இந்திய அணி (உத்தேசம்)

ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது தனுஷ் கோட்டியான், ஆகாஷ் தீப், அல்லது நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

மெல்போர்ன் மைதானம் எப்படி?

மெல்போர்ன் மைதானம் பாரம்பரியமாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் ஏதுவாகத்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், 2017-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பின் ஆஸ்திரேலியாவின் சிவப்புநிற கூக்கபுரா பந்துக்கு ஏற்றபடி, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது.

இந்த மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் விதத்திலும், சீமிங் செய்ய ஏதவாகவும், பந்து விரைவாக தேயாமல் இருக்கும் வகையில் ஆடுகளம் தயார் செய்யப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டு வரை எம்சிஜி மைதானத்தில் அதிகபட்சமாக 624 ரன் வரை ஆஸ்திரேலிய அணியால் குவிக்க முடிந்தது. ஆனால், ஆடுகளத்தை மாற்றி அமைத்த பின் 400க்கும் அதிகமான ரன்களைக் கடப்பதே கடினமாகிவிட்டது.

டாஸ் யார் வெல்வது? முதலில் யார் பேட் செய்வது? என்ற போட்டி இந்த மைதானத்தில் கடுமையாக இருக்கும். முதலில் பேட்செய்து ஓரளவுக்கு பெரிய ஸ்கோர் செய்துவிட்டால் ஆட்டத்தை கையில் எடுத்துவிடலாம் என்பதால் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.

பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும், பேட்ஸ்மேனை நோக்கி பந்து வேகமாக வரும் என்பதால் பேட்ஸ்மேன்களை சோதிக்கும் களமாகவே ஆடுகளம் இருக்கும். பேட்ஸ்மேன் நிதானமாக பேட் செய்து நங்கூரமிட்டால் நல்ல ஸ்கோர் செய்யலாம்.

2021-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தில் 10 மி.மீ வரை புற்களை வளர விட்டிருந்தார்கள். இதனால், வேகப்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரியாக ஆடுகளம் மாறியது. அந்த டெஸ்டில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

இந்திய அணிக்கு எதிராக 6 மிமீ அளவுக்கு புற்களை விடவும் ஆடுகள வடிவமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதில் ஒரே ஆறுதல்தரும் அம்சம், மெல்போர்னில் தற்போது 40 டிகிரி வரை வெயில் இருப்பதால், 3 நாட்களுக்குப்பின் ஆடுகளத்தில் விரிசல் ஏற்படலாம், அப்போது பேட்டிங்கிற்கு சாதகமாகவும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் ஆடுகளம் மாறக்கூடும்.

ஆடுகள வடிவமைப்பாளர் மேட் பேஜ், தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "டெஸ்ட் போட்டியை த்ரில்லாக மாற்றும் விதத்தில் ஆடுகளத்தை மாற்றியுள்ளோம். பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பிட்சை மாற்றியிருக்கிறோம். ஆடுகளத்தில் புற்களின் அளவை மாற்றி அமைத்து நாங்கள் பரிசோதித்து வருகிறோம். புற்களை லேசாக வளர அனுமதித்தால்தான் ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கும். அதைத்தான் ரசிகர்களும் விரும்புவார்கள்" எனத் தெரிவித்தார்.

இந்தியா -  ஆஸ்திரேலியா, பாக்ஸிங்டே டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மெல்போர்ன் எம்ஜிசி மைதானம்

மெல்போர்னில் இதுவரை நடந்த போட்டிகள் எப்படி இருந்தன?

மெல்போர்ன் எம்ஜிசி மைதானத்தில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இதில் கடைசி 9 ஆட்டங்கள் பாக்ஸிங் டே அன்று நடந்துள்ளன. இந்த 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 4 வெற்றிகளையும், ஆஸ்திரேலிய அணி 8 வெற்றிகளையும், 2 ஆட்டங்கள் டிராவிலும் முடிந்துள்ளன.

பாக்ஸிங் டே ஆட்டங்களில் இந்திய அணி 5 தோல்விகளையும், இரு வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது. 2014ம் ஆண்டுகளுக்குப்பின் 10 ஆண்டுகளில் மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி தோல்வி அடையாமல் இருந்து வருகிறது.

இந்த மெல்போர்ன் மைதானத்தில் இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர்(116), வீரேந்திர சேவாக்(195), விராட் கோலி(169), புஜாரா(106) ரஹானே(147, 112) ஆகியோர் மட்டுமே சதம் அடித்துள்ளனர். இதில் விராட் கோலி மட்டுமே தற்போது இந்திய அணியில் இருக்கிறார்.

1977ம் ஆண்டு நடந்த டெஸ்டில்தான் இந்திய அணி மெல்போர்னில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சுனில் கவாஸ்கரின் சதம், சந்திரசேகரின் 12 விக்கெட் ஆகியவற்றால் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மெல்போர்ன் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 449 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் பும்ரா, கும்ப்ளே இருவரும் தலா 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த மைதானத்தில் இந்திய அணி அதிகபட்சமாக 2014-15ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் 465 ரன்கள் குவித்தது.

இந்த மைதானத்தில் கோலி 316 ரன்கள் சேர்த்துள்ளார், பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அணி வீரர்களுக்கு ஊக்கமாகத் திகழ்கிறார்கள்.

இந்தியா -  ஆஸ்திரேலியா, பாக்ஸிங்டே டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த மைதானத்தில் கோலி 316 ரன்கள் இதுவரை சேர்த்துள்ளார்.

பாக்ஸிங் டே டெஸ்ட் வரலாறு

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும் ஆட்டமாகும். இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளும் நடத்துகின்றன.

பாரம்பரியம் கொண்ட மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகள் புத்தாண்டு அன்று அதாவது ஜனவரி ஒன்றாம் தேதிதான் நடந்துள்ளன. 1950-51 ஆஷஸ் டெஸ்ட் தொடர்கூட டிசம்பர் 22 முதல் 27வரை நடந்துள்ளது. அந்த டெஸ்டில் 4வது நாள்தான் பாக்ஸிங் டே அன்று நடந்துள்ளது. 1950க்கு முன், 1953 முதல் 1967 வரை பாக்ஸிங் டே டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி அன்று நடத்தப்படவில்லை.

ஆனால் 1974-ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற நவீன பாரம்பரியம் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து 1980-ஆம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் நடத்துவதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முறைப்படுத்தி, அந்த போட்டியை ஒளிபரப்பும் உரிமைகளை விற்பனை செய்து கிரிக்கெட் விளையாட்டை ஊக்கப்படுத்தியது.

இந்த பாக்ஸிங் டே அன்று ஆஸ்திரேலிய மக்கள் ஏராளமானோர் போட்டியை காண வருவதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்து நடத்தத் தொடங்கியது.

2013-ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியைக் காண 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

இந்தியா -  ஆஸ்திரேலியா, பாக்ஸிங் டே டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1999இல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பாக்ஸிங்டே டெஸ்டை காண வந்த ரசிகர்கள்

இறுதிப்போட்டியில் இடம் யாருக்கு?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த இரு அணிகள் விளையாடப் போகின்றன என்பது இன்னும் உறுதியாகவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தைப் பிடிப்பது யார், இரண்டாவது இடத்தைப் பிடிப்பது யார் என்பது சஸ்பென்ஸாகவே தொடர்ந்து வருகிறது. இறுதிப்போட்டியில் மூன்றாவது முறையாக பங்கேற்க இந்திய அணிக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு இந்திய அணி அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும்.

இரு வெற்றிகள் இருந்தால் இந்திய அணி இறுதிப்போட்டியில் பங்கேற்பது உறுதியாகும். ஒருவேளை ஒரு வெற்றி, ஒரு டிரா இருந்தால் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியதிருக்கும்.

ஆஸ்திரேலிய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தீவிரமாக முயன்று வருகிறது. மெல்போர்ன், சிட்னி டெஸ்டில் அந்த அணி கட்டாய வெற்றி பெற்றால் அதற்கான வழி எளிதாகும் என்பதால் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிக்காக கடினமாகப் போராடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

19 வயது பையன்பா… கோலி வேண்டுமென்றே மோதியதாக குற்றச்சாட்டு!

Dec 26, 2024 12:27PM IST ஷேர் செய்ய : 
QQJGMWmy-virat.jpg
 

ஆஸ்திரேலிய வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (டிசம்பர் 26) தொடங்கியுள்ளது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. 19 வயதே நிரம்பிய அறிமுக வீரரான சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

அதிரடியில் மிரட்டிய சாம் கொன்ஸ்டாஸ் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ஓவரில் சிக்ஸர் அடித்தார். பும்ராவின் 4,483 பந்துகளுக்கு பிறகு அவரது பந்து சிக்சருக்கு பறந்துள்ளது. அறிமுக டெஸ்டில் அரைசதம் விளாசி மிரட்டினார். 65 பந்துகளை எதிர்கொண்ட சாம் கொன்ஸ்டாஸ் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களுடன் எடுத்து ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டத்தின் போது, இந்திய பேட்ஸ்டேன் விராட் கோலி சாம் கொன்ஸ்டாஸுடன் வேண்டுமென்றே மோதியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. சாம் கொன்ஸ்டாஸின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையில் கோலி நடந்து கொண்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் வேண்டுமென்றே கோலி இந்த செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, விராட் கோலிக்கு போட்டிக்கான ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கிரிக்கெட்டில் களத்தில் தேவையில்லாமல் பிசிக்கல் கான்டக்ட் செய்வது மிகுந்த குற்றத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

 

https://minnambalam.com/sports/icc-will-punish-virat-kohli-for-shouldering-sam-konstas/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலிய வீரர் மீது மோதிய விராட் கோலிக்கு என்ன தண்டனை?

விராட் கோலி - கான்ஸ்டாஸ் மோதல் : பும்ராவின் பந்தில் சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் மீது வேண்டுமென்றே மோதினாரா கோலி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 10வது ஓவருக்குப் பிறகு விராட் கோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸ் இடையே மோதல் ஏற்பட்டது.
26 டிசம்பர் 2024, 09:27 GMT
 

மெல்போர்னில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் நாளிலேயே, பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பும்ரா உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களைத் திணற வைத்த ஆஸ்திரேலியாவின் இளம் வீரருக்கும் இந்தியாவின் விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மைதானத்துக்கு உள்ளேயே உடல் ரீதியாகவும், வார்த்தைகளாலும் நடந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர கள நடுவர் தலையிட வேண்டியிருந்தது.

இந்த மோதல் தொடர்பாக பெரும்பாலும், விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து விராட் கோலிக்கு போட்டியின் சம்பளத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. ஒரு தகுதிக் குறைப்பு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

 

மைதானத்துக்குள் என்ன நடந்தது?

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4-வது டெஸ்ட் வியாழக்கிழமை மெல்போர்னில் தொடங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

சாம் கான்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியாவுக்காக இன்னிங்ஸை தொடங்கினர். இது சாம் கான்ஸ்டாஸின் முதல் டெஸ்ட். 19 வயதான அவர், தனது பேட்டிங் திறனுக்காக உள்ளூர் போட்டிகளில் பிரபலமானவர்.

சாம் கான்ஸ்டாஸ் ஆரம்பத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை திறமையாகச் சமாளித்து ஆடினார். ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விராட் கோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸ் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர கள நடுவர் தலையிட்டு விசாரித்தார்

ஆறாவது ஓவரில் பும்ராவின் பந்தில் 2 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடித்து இந்திய அணியை அச்சுறுத்தினார் கான்ஸ்டாஸ். இந்த சிக்சருக்கு முன்புவரை டெஸ்ட் போட்டிகளில் 4,562 பந்துகளை சிக்சர் விட்டுக்கொடுக்காமல் வீசியிருக்கிறார் பும்ரா. அதனால் பும்ராவின் பந்தில் சிக்சர் அடிக்கவே முடியாது என்ற பெருமை அவருக்கு இருந்தது. இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் சிட்னியில் நடந்த டெஸ்டில் கேமரன் கிரீன் சிக்சர் அடித்திருந்தார்.

தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை பும்ரா விட்டுக் கொடுத்ததும் இந்த ஓவரில்தான். அதில் 18 ரன்கள் எடுக்கப்பட்டன.

"பும்ராவை சமாளிக்க என்னிடம் திட்டம் இருக்கிறது" என்று போட்டிக்கு முன்னரே கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் கான்ஸ்டாஸ்.

கான்ஸ்டாஸின் ஆக்ரோஷமான பேட்டிங் காரணமாக இந்தியா தரப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கான்ஸ்டாஸின் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்தது.

இந்தியாவுக்காக முகமது சிராஜ் 10-வது ஓவரை வீசினார். அந்த ஓவர் முடிந்த பிறகுதான் கோலிக்கும் கான்ஸ்டஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பத்தாவது ஓவர் முடிந்த பிறகு கான்ஸ்டாஸ் தனது சக வீரர் உஸ்மான் கவாஜாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி, கான்ஸ்டாஸின் தோளில் மோதினார். பின்னர் இருவரும் கோபமாக வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, நடுவர் தலையிட்டு இருவரையும் கலைந்து போக வைத்தார்.

கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விராட் கோலி தவறு செய்து விட்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்

இந்த மோதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இப்போது விவாதம் கோலி தற்செயலாக கான்ஸ்டாஸுடன் மோதினாரா அல்லது அவர் வேண்டுமென்றே அதைச் செய்தாரா என்பதுதான்.

சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோலியின் நடத்தையை விமர்சித்துள்ளனர். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், போட்டி நடுவர் நிச்சயமாக இந்த விஷயத்தை ஆராய்வார் என்று கூறியிருக்கிறார். கோலி பெருமை கொள்ளத் தகாத வகையில் நடந்து கொண்டதாக அவர் கூறினார்.

"கான்ஸ்டாஸ் தனது வழியில் சென்று கொண்டிருந்தார். விராட் தனது பாதையை மாற்றினார்" என்று கூறினார். அந்த நேரத்தில் மைக்கேல் வாகன் போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்தார். போட்டி நடுவர் இந்த விஷயத்தை ஆராய்வாரா என்று கேட்டபோது, "நிச்சயமாக" என்று கூறினார்.

தவறு விராட் கோலியின் மீதுதான் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விராட் கோலியின் இந்த நடத்தை தேவையற்றது என்று கூறியுள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டனும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரும் இந்த விஷயத்தில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். விராட் கோலி இதைத் தவிர்த்திருக்கலாம் என்று கவாஸ்கர் கூறுகிறார்.

யாராவது உங்கள் திசையில் வருவதைக் கண்டால், நீங்கள் வழிவிட்டு விலகிச் செல்லலாம், அவ்வாறு செய்வதன் மூலம் யாரும் சிறியவர்களாகிவிட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

இருப்பினும், போட்டியின்போது இப்படியெல்லாம் நடக்கும் என்றும், மைதானத்தில் என்ன நடந்தாலும் அது அதற்குள்ளே மட்டுமாகத்தான் இருக்கும் என்றும் சாம் கான்ஸ்டாஸ் பின்னர் கூறினார்.

ஆஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர் அலிசா ஹீலி, கோலியின் நடத்தையை விமர்சித்துள்ளார். மேலும் ஒரு நட்சத்திர பேட்ஸ்மேன் தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் உள்ள இளம் வீரரை குறிவைத்துள்ளார் என்றும் கூறினார்.

"இது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயம் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த மற்றும் அவரது நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரிடம் இருந்து இந்த வகையான நடத்தையை எதிர்பார்க்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

விராட் கோலி மீது என்ன நடவடிக்கை?

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐசிசியின் நடத்தை விதிகளின்படி விராட் கோலிக்கு தடை விதிக்கப்படலாம்

ஐசிசி நடத்தை விதிகளின்படி, கிரிக்கெட்டில் எந்தவொரு பொருத்தமற்ற 'உடல் ரீதியான மோதலும்' தடைசெய்யப்பட்டுள்ளது.

ஒரு வீரர் வேண்டுமென்றே அல்லது அவரது அலட்சியம் காரணமாக எந்த வீரருடனோ அல்லது நடுவருடனோ மோதினால், அது நடத்தை விதிகளை மீறுவதாகக் கருதப்படும்.

போட்டி நடுவர் அதை லெவல்-2 குற்றமாகக் கருதினால், சம்பந்தப்பட்ட வீரருக்கு மூன்று முதல் நான்கு அபராதப் புள்ளிகள் (Demerit points) வரை விதிக்கப்படலாம்,

இந்த அடிப்படையில் விராட் கோலிக்கு போட்டியின் சம்பளத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் ஒரு தகுதிக் குறைப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின்போது, ககிசோ ரபாடா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த வழக்கில் ரபாடா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு எதிராக மூன்று பெனால்டி புள்ளிகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், பின்னர் அவரது மேல்முறையீட்டின் பேரில் பெனால்டி தள்ளுபடி செய்யப்பட்டது.

கான்ஸ்டாஸின் அதிரடி ஆட்டம்

சாம் கான்ஸ்டாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சாம் கான்ஸ்டாஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார்

விராட் கோலியுடனான மோதலுக்குப் பிறகு கான்ஸ்டாஸ் மிகவும் கோபமாகத் தெரிந்தார். அடுத்த ஓவரிலேயே ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை அவர் அடித்தார்.

போட்டியின் 11-வது ஓவரில் கான்ஸ்டாஸ் 18 ரன்கள் எடுத்தார். தனது முதல் டெஸ்டை விளையாடிய கான்ஸ்டாஸ், வெறும் 52 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

போட்டியின் 20வது ஓவரில் 60 ரன்கள் எடுத்த பிறகு அவர் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

கான்ஸ்டாஸ் வெறும் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.

பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இதுவரை நடந்தது என்ன?

தற்போதைய பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்காக இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துவிட்டன. ஒரு டெஸ்ட் போட்டி டிரா ஆனது, இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வலுவான மறுபிரவேசம் செய்து ஸ்கோரை சமன் செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

இந்தத் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற, இந்தியா இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும்.

இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தற்போதைய டெஸ்ட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளன.

தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா இந்தத் தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளது.

இதுவரை ஜஸ்பிரித் பும்ரா இந்தத் தொடரில் இந்தியாவின் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். முதல் டெஸ்டில், தனது தலைமையில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், அவர் அற்புதமாகப் பந்து வீசினார்.

அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (21) வீழ்த்தியுள்ளார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பேட்டிங்கில் கே.எல். ராகுல் இந்தியாவுக்காக அதிகபட்சமாக 235 ரன்கள் எடுத்துள்ளார், அதே நேரத்தில் ஜெய்ஸ்வால் 193 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அதிக ரன்கள் (409) எடுத்துள்ளார். அவர் இந்திய அணிக்கு ஒரு பெரிய தலைவலியாக இருக்கிறார்.

இந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் இந்தியா திரும்பியுள்ளார், அவருக்குப் பதிலாக தனுஷ் கோட்டியன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேவலங்கெட்ட செயலில் ஈடுபட்ட கேவலங்கெட்ட (uncultured) பாரத வீரர் விராட் கோலி சிட்னி டெஸ்டில் தடைசெய்யப்படவேண்டும்.  

https://www.cricket.com.au/videos/4190673/konstas-kohli-clash-in-middle-of-mcg

  • கருத்துக்கள உறவுகள்

 

 

                                        பும்ராவின் பந்துக்கு விளாசிய 19 வயது  Sam Konstas                              

 

கோலி அவ்விளையஞரை தோழால் தாக்கும் காட்சி

 

கோலி அவ்விளையஞரை தோழால் தாக்கும் காட்சி. அச்சம்பவத்துக்கு  சுவாரசியமாக பதிலளிக்கும் சாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சாம் கொன்ஸ்டாஸை இன்னொரு ரிக்கி பொன்டிங் என்கிறார்கள் கிரிக்கட் வல்லுனர்கள். வாழ்த்துக்கள்!👋

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

பொக்ஸிங் டே டெஸ்ட்: MCG இல் இரண்டாம் நாள் மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அவுஸ்ரேலிய அணி 454 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்திருந்தது. களத்தில் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களுடனும் மிட்சல் ஸ்டார்க்  ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களுடனும் உள்ளனர்.

இன்னும் 100 ஓட்டங்களை பெற்று தேநீர் இடைவேளைக்கு பின்னர் பாரத் அணியை  குறைந்தது 20 ஓவர்கள் ஆடுமாறு செய்தால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

காம்பீரும் ஒரு சுமந்திரன்தான்.. இந்தியன் கிரிக்கட்டிற்கு முடிவு கட்டாமல் பதவி விலகமாட்டார்...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது?

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க.போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 27 டிசம்பர் 2024, 10:50 GMT

மெல்போர்னில் நடந்து வரும் பாக்ஸிங் டே டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை அபாரமாக முடித்தது. ஆனால், இந்திய அணி பதிலடி தர முடியாமல் திணறி வருகிறது.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல்நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்திருந்த ஆஸ்திரேலிய அணி இன்று 163 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்தது.

இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களுடன் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. ரிஷப் பந்த் 6 ரன்களிலும், ஜடேஜா 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

 

இரண்டாவது நாளில் கவனம் ஈர்த்தவை

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருப்பதால் இந்தப் போட்டியும், அடுத்து வரும் சிட்னி டெஸ்ட் போட்டியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி 3வது முறையாகத் தகுதி பெறுவதற்கு இரு டெஸ்ட் வெற்றிகள் தேவை என்பதால், இந்த டெஸ்ட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஸ்மித்தின் 34வது டெஸ்ட் சதம், இந்திய அணிக்கு எதிராக (11) அதிக சதம் அடித்து ஜோ ரூட்டின்(10 சதம்) சாதனையை முந்தியது, ஜெய்ஸ்வால் சதத்தைத் தவறவிட்டது, ஜெய்ஸ்வாலை ரன்-அவுட் ஆக்கிய கோலி, மூன்றாவது செஷனில் ஆட்டம் முடிய கடைசி 25 நிமிடங்கள் இருக்கையில் 6 ரன்களுக்குள் இந்திய அணி மளமளவென 3 விக்கெட்டுகளை இழந்தது ஆகியவை இரண்டாவது நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்தியாவுக்கு எதிராக ஸ்மித்தின் மைல்கல்

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் 34 வயதான ஸ்டீவ் ஸ்மித் பெர்த் டெஸ்டை தொடர்ந்து மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து 140 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் அரங்கில் 34வது சதத்தைப் பதிவு செய்த ஸ்மித், இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய இங்கிலாந்தின் ஜோ ரூட் சாதனையை (10 சதம்) முறியடித்து 11வது சதத்தைப் பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் டெஸ்ட் அரங்கில் 10,000 ரன்களை எட்டவும் ஸ்மித்துக்கு இன்னும் 51 ரன்கள்தான் தேவைப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடியும் முன்பாக ஸ்மித் அந்த மைல்கல்லை எட்டுவார் எனத் தெரிகிறது.

ஸ்மித் 68 ரன்களுடன் இன்றைய 2வது நாள் ஆட்டத்தைத் தொடங்கி, 167 பந்துகளில் தனது 34வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். ஸ்மித்துக்கு துணையாக ஆடிய கேப்டன் கம்மின்ஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இன்று ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஸ்மித்தும், கம்மின்ஸும் வேகமாக ரன்களை சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய ரன்ரேட் சீரான வேகத்தில் உயர்ந்தது. பும்ரா ஓவர் தவிர மற்ற எந்த இந்திய பந்துவீச்சாளர்களும் ஸ்மித்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பந்துவீசவில்லை. கம்மின்ஸும் ஒரு கட்டத்தில் நிலைத்து ஆடத் தொடங்கி அரைசதத்தை நெருங்கினார். இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் கம்மின்ஸ் 4வது டெஸ்ட் அரைசதத்தை நிறைவு செய்திருப்பார். ஆஸ்திரேலிய அணி, முதல் 23 ஓவர்களில் 143 ரன்களை வேகமாகச் சேர்த்தது.

கடைசி வரை களத்தில் இருந்த ஸ்மித் 140 ரன்கள் (13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) சேர்த்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் போல்டானார். ஸ்மித் ஆட்டமிழந்தது துரதிர்ஷ்டமானது. ஆகாஷ் தீப் வீசிய பந்தை விலகி வந்து ஆஃப் திசையில் ஸ்மித் அடிக்க முயன்றபோது, பந்து பேட்டில் பட்டு, அவரின் கால்காப்பில் பட்டு பிறகு ஸ்டெம்பில் பட்டது. இதுபோன்று போல்டானதை ஸ்மித் சற்றும் எதிர்பாராததால் மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஒருவேளை ஸ்மித் ஆட்டமிழக்காமல் இருந்தால், 150 ரன்களுக்கு மேல் குவித்திருப்பார்.

கடந்த 2023 ஜூன் மாதத்துக்குப் பின் டெஸ்ட் அரங்கில் சதம் விளாசமல் இருந்த ஸ்மித் பெர்த் டெஸ்டில் சதம் அடித்த பின் தொடர்ச்சியாக 2வது சதத்தைப் பதிவு செய்து இழந்த ஃபார்மை மீட்டுள்ளார்.

ஆரோக்கியமான கிரிக்கெட் சம்பவங்கள்

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ராவின் பந்துவீச்சை ஸ்மித் இன்று மிகவும் ரசித்து பேட் செய்தார். பும்ராவின் துல்லியமான லென்த், ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க ஸ்மித் திணறினார். ஒரு கட்டத்தில் ஸ்மித்தால் விளையாட முடியாத வகையில் பும்ரா ஒரு ஸ்விங் பந்தை வீசினார்.

இந்தப் பந்தை எதிர்கொண்டபின் பும்ராவை பார்த்து கை கட்டைவிரலை உயர்த்தி பம்ப் செய்து ஸ்மித் பாராட்டினார். அதேநேரம் பும்ராவின் பந்தில் ஸ்மித் சிக்ஸர் விளாசியபோதும், பும்ரா சிரித்துக்கொண்டே சென்றார்.

ஸ்மித் டெஸ்ட் அரங்கில் 34வது சதம் விளாசிய நிலையில் அவரின் தோள்பட்டையில் தட்டிக்கொடுத்து விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்.

ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா?

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெய்ஸ்வால், கோலி இடையிலான பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதேநேரம், கோலியின் ஒத்துழைக்காத போக்குதான் இந்த பார்ட்னர்ஷிப் உடையக் காரணமாக இருந்ததாகவும் விவாதிக்கப்படுகிறது. மூன்றாவது விக்கெட்டுக்கு கோலி-ஜெய்ஸ்வால் கூட்டணி 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 81 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் 150 ரன்களை அடித்த ஜெய்ஸ்வால், அதன்பின் 2 டெஸ்ட்களிலும் பெரிதாக ஆடாத நிலையில் இந்த ஆட்டத்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.

இவருக்குத் துணையாக ஆடிய கோலி, 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினாலும் இருவருக்கும் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் ரன்-அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொதுவாக டெஸ்ட் போட்டியில் வேகமாக ஓடி ரன் எடுக்க வேண்டிய தேவையில்லை. ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்ய இது டி20 ஆட்டமும் இல்லை. அப்படியிருக்கும்போது ஜெய்ஸ்வால் மிட்-ஆன் திசையில் தட்டிவிட்டு கோலியை வேகமாக ஒரு ரன்னுக்கு ஏன் அழைத்தார் எனத் தெரியவில்லை. கோலியிடம் இருந்து எந்த சமிக்ஞையும் வராத நிலையில் பேட்டில் பந்து பட்டவுடனே ஜெய்ஸ்வால் ஏன் வேகமாக ஓடினார், கோலி க்ரீஸை விட்டு நகராத நிலையில் கோலியின் இடத்திற்கே ஜெய்ஸ்வால் ஏன் வந்தார் என்பது கேள்வியாக இருக்கிறது.

ஆனால், இதில் யார் மீது தவறு உள்ளது, ஏன் கோலி க்ரீஸை விட்டு நகரவில்லை, ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கிய நிலையில் நல்ல ஃபார்மில் இருக்கும்போது கோலி ஏன் விக்கெட்டை தியாகம் செய்யவில்லை என்ற கேள்வி சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

அதேவேளையில், ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது முற்றிலும் சரியான தகவல் தொடர்பு இல்லாததால் வந்த விளைவுதான் எனவும், நீடித்து ஆட வேண்டிய இருவருக்கும் இடையே சரியான தகவல் தொடர்பு இல்லாததால் வலுவான பார்ட்னர்ஷிப் உடைந்துவிட்டது எனவும் ரசிகர்கள் விவாதிக்கின்றனர்.

மந்தமான ரோஹித்தின் பேட்டிங்

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

கேப்டன் ரோஹித் சர்மா கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் நடுவரிசையில் களமிறங்கிய நிலையில் இந்த டெஸ்டில் மீண்டும் தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் புதிய பந்தில் கம்மின்ஸ் பந்துவீச்சை சமாளிக்க ரோஹித் சர்மா தொடர்ந்து திணறி வருகிறார் என்பது இந்த டெஸ்டிலும் உறுதியானது.

கம்மின்ஸ் வீசிய 2வது ஓவரிலேயே ஷார்ட் லென்த்தாக வந்த பந்தை ஃபுல் ஷாட் அடிக்க முற்பட்டு மிட்-ஆன் திசையில் போலந்திடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா இந்தப் பந்தை எதிர்கொண்டு ஆடிய விதத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தப் பந்தை ரோஹித் சர்மா ஆடாமல் விட்டிருந்தாலே விக்கெட்டை காப்பாற்றி இருக்கலாம், எந்த பந்தை விடுவது, அடிப்பது எனத் தெரியாமல் டெய்லெண்டர் பேட்டர் போல் ரோஹித் சர்மா நம்பிக்கையிழந்த வகையில் பேட் செய்ததாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை ரோஹித் சர்மா (3,6,10,3) 22 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ரோஹித் சர்மா கடந்த 14 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உள்பட 155 ரன்கள் மட்டுமே சேர்த்து 11 சராசரி வைத்துள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை நீடிக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வுகாலம் நெருங்கிவிட்டதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.

கடைசி செஷனில் மளமள விக்கெட்

இந்திய அணி மூன்றாவது செஷனில் ஆட்டம் முடிய இருக்கும் கடைசி 25 நிமிடங்களில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.

அதற்கு முன்பு வரை, 153 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என இந்திய அணி வலுவாக இருந்தது. ஆனால், ஜெய்ஸ்வால் ரன்-அவுட் ஆனதும், அடுத்த ஒரு ரன்னில் விராட் கோலி 36 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் போலந்த் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

கோலி வாக்குவாதம்

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதே மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் கோலி சதம் அடித்திருந்த நிலையில் இந்த டெஸ்டில் 36 ரன்களில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். கோலி பெவிலியன் திரும்புகையில் ரசிகர் ஏதோ கூற பெவிலியன் சென்று திரும்பி வந்து அந்த ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர் ரசிகரை அடக்கி வைத்து, கோலியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

ஆகாஷ் தீப் சிங் கடந்த டெஸ்டில் ஓரளவு சிறப்பாக பேட் செய்தார் என்பதால், நைட்வாட்ச் மேனாக களமிறக்கப்பட்டார். ஆனால் அவரும் நிலைக்காமல் போலந்து பந்துவீச்சில் ஆகாஷ் தீப் டக்-அவுட்டில் ஆட்டமிழந்தார்.

ஏற்கெனவே 2வது டெஸ்டில் நைட்வாட்ச் மேனாக டெய்லெண்டரை களமிறக்கி பேட்டர்களை பாதுகாக்கும் உத்தியைத் தவறாகக் கையாண்டு, ரோஹித் சர்மா கையைச் சுட்டுக்கொண்ட நிலையில் ஜடேஜா, ரிஷப் பந்த் இருவரையும் இந்த டெஸ்டில் ஆட வைத்திருந்தால் ஒரு விக்கெட் எஞ்சியிருக்கும். ஆனால் நைட்வாட்ச் என்ற பெயரில் ஆகாஷ் தீப் விக்கெட்டை தேவையின்றி இந்திய அணி இழந்தது.

ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்திய அணி

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆகாஷ் தீப் சிங்

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களுடன் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. ரிஷப் பந்த் 6 ரன்களிலும், ஜடேஜா 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஃபாலோ ஆனை தவிர்க்க இந்திய அணிக்கு இன்னும் 111 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்திய அணியின் கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தாலும் இதில் வாஷிங்டன், நிதிஷ் ரெட்டி மட்டுமே ஓரளவு பேட் செய்யக் கூடியவர்கள், மற்றவர்கள் பேட்டர்கள் இல்லை என்பதால் ரிஷப் பந்த், ஜடேஜா இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பது கட்டாயமாகியுள்ளது.

பும்ராவின் சாதனை விக்கெட்

பும்ரா டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமாகி விளையாடத் தொடங்கிய நாளில் இருந்து ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்சமாக 23 விக்கெட்டுகள்தான் வீழ்த்தியிருந்தார். அதைக் கடந்து இந்த டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தியுள்ளார்.

இந்த டெஸ்டிலும் பும்ரா 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, 25 விக்கெட்டுகளாக உயர்த்தினார். அதுமட்டுமல்லாமல் பும்ரா தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு போட்டியில் ஒரு இன்னிங்ஸில்கூட 100 ரன்களை விட்டுக்கொடுத்து இல்லை, அந்தச் சாதனையையும் பும்ரா தொடர்கிறார். இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பும்ரா 99 ரன்கள்தான் விட்டுக்கொடுத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மெல்பேர்ன் ஆடுகளம் கோடைகாலத்தில் கிரிகெட் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது, அது தவிரிந்த கால கட்டத்தில் இங்கு வேறு போட்டிகள் நடைபெறுவதால் இங்கு Drop pitch பயன்படுத்தப்படுகிறது.

அஃவுஸ்ரேலியா நாணய  சுழற்சியில் வென்று பந்து வீச்சினை தெரிவு செய்தது, பொதுவாக இந்த ஆடுகளத்தில் முதல் 1 மணிநேரத்திற்கு ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதன் பந்து வீச்சாளருக்கு சாதகமாக காணப்படும், ஆனால் இந்த ஆடுகளம் போட்டிக்கு முந்தய நாள்களில் ஏற்பட்ட மழைகாரணமாக ஈரப்பதன் மற்றும் பிட்ச் மூடப்பட்டு இருப்பதனால் அதற்குள் ஏற்படும் ஈரப்பதன் என பிட்சில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்த பிட்சின் ஈரப்பதன் போட்டியின் ஆரம்ப  நாளான 40 பாகை வெப்பம் மற்றும் புற்கள் 6MM அளவில் வெட்டப்பட்டமை காரணமாக பிட்ச் வேகமாக உலரத்தொடங்கியதாக கருதுகிறேன், இரண்டாம் நாள் மூன்றாம் நாள் முதல் இரண்டு செசசன்ஸ் வரை ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு மிக சாதகமாக காணப்படும்.

தனிப்பட்ட ரீதியில் அவுஸ்ரேலியா பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என நான் கருதுகிறேன், ஆனால் பந்து வீச்சாளரான அவுஸ் அணித்தலைவர் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தமைக்கு முதல் நாள் வெப்பம் 40 பாகையிலும் தொடர்ந்து வரும் நாளகளில் வெப்பம் 20 களின் நடுப்பகுதி கொண்டதாக இருக்கும் என்பதால் அவ்வாறன முடிவினை எடுத்தரோ  என நான் கருதுகிறேன்.

இந்தியாவிற்கு இது ஒரு நல்ல சாதகமான சூழல் ஆனால் அவர்கள் வழமை போல அனைத்து சாதகங்களையும் முழுமையாக பயன்படுத்தாமல் மோசமான விளையாட்டினை காட்டியுள்லனர், ஆனால் இன்று அவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது குறைந்து 375 ஒட்டங்களையாவது பெறுவதற்கு ஏற்ப நிலையில் ஆடுகளம் உள்ளது, ஆனால் அவுஸ் பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சு காணப்படுமானால் இந்தியா பரிதாபகரமான ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்கலாம்.

 

தற்போது இந்தியா 164/5 எனும் நிலையில் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா, நிதிஷ்குமார் ரெட்டி, பாக்ஸிங் டே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புஷ்பா ஸ்டைலில் கொண்டாடிய நிதிஷ் குமார் ரெட்டி கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணி்க்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று, நிதிஷ் குமார் ரெட்டியின் அற்புதமான சதம், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் ஆகியவற்றால் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பித்தது.

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தநிலையில் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுவதில் சாதகமான வாய்ப்பைப் பெறும் என்பதால் ஆட்டம் உச்சக் கட்ட பரபரப்பில் செல்கிறது.

 

சுந்தர்-நிதிஷின் நங்கூரம்

ரிஷப் பந்த்(6), ஜடேஜா (4) இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் செஷனிலேயே ரிஷப் பந்த் 36 ரன்னில் போலந்த் பந்துவீச்சிலும், ஜடேஜா 17 ரன்னில் லேயான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினர். 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க 54 ரன்கள் தேவையாக இருந்தது. நண்பகல் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்திருந்தது.

 

8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர் இருவரும் மெல்ல ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். மெல்போர்னில் நன்கு வெயில் இருந்ததால் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் நிதிஷ், சுந்தர் இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் அநாசயமாக எதிர்கொண்டு பவுண்டரிகள், சிக்ஸர் அடித்த நிதிஷ் குமார் டெஸ்டில் முதல் அரைசதத்தை நிறைவு செய்தார்.

ஆட்டத்தின் இடையே இருமுறை மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. நிதிஷ் குமாருக்கு முழு ஒத்துழைப்பு தந்து பேட் செய்த சுந்தர், பவுண்டரிகள் அடிக்காமலேயே அரைசதத்தை நெருங்கினார், அரைசதம் அடித் தபோது ஒரு பவுண்டரி மட்டுமே வாஷிங்டன் சுந்தர் அடித்திருந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா, நிதிஷ்குமார் ரெட்டி, பாக்ஸிங் டே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் கூட்டணி 127 ரன்கள் சேர்த்தனர்.

இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க 6 பந்துவீச்சாளர்களை கேப்டன் கம்மின்ஸ் பயன்படுத்தியும் முடியவில்லை. ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி, 96 ரன்கள் சேர்த்திருந்த போது, போலந்த் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து முதல் சதத்தை பதிவு செய்தார்.

8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்திருந்த போது லேயான் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த பும்ரா டக்அவுட் ஆனார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது. நிதிஷ் குமார் 105 ரன்களுடன், சிராஜ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

நிதிஷ் குமார் ரெட்டி 171 பந்துகளில் சதம் அடித்து, 105 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் குமார் ரெட்டிக்கு துணையாக பேட் செய்த தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 50 ரன் எடுத்தார். 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் கூட்டணி 127 ரன்கள் சேர்த்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா, நிதிஷ்குமார் ரெட்டி, பாக்ஸிங் டே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிதிஷ் ரெட்டி

116 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இதுவரை 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவைவிட இந்திய அணி இன்னும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது.

3வது நாளில் இன்று மாலை நேரத்தில் வெளிச்சக்குறைவு, மழை வருவது போல் இருந்ததால் ஆட்டம் 70 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முடிக்கப்பட்டது.

எடுபடாத ஆஸ்திரேலியப் பந்துவீச்சு

வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர்

மெல்போர்னில் இன்று வெயில் நன்றாகவே அடித்ததால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சுத்தமாக எடுபடவில்லை, பந்தும் எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகவில்லை.

இதனால் 2வது செஷனில் இருந்து நிதிஷ் குமார், சுந்தரைப் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பல்வேறு வகைகளில் முயன்றும் முடியவில்லை. புதிய பந்து மாற்றிய பின்பும் ஸ்டார்க், கம்மின்ஸ் பந்துவீசியும் எடுபடவில்லை.

ஆடுகளத்தில் லேசான வெடிப்புகள் வரத் தொடங்கி இருப்பதால், கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறலாம். அப்போது நேதன் லயான், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில் பெரிய துருப்புச்சீட்டாக இருக்கும்.

அணியைக் காத்த நிதிஷ் குமார்

இந்தியா - ஆஸ்திரேலியா, நிதிஷ்குமார் ரெட்டி, பாக்ஸிங் டே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் முகமது சிராஜ்

3வது நாளான இன்றைய ஆட்டம் முழுவதும் நிறைந்திருப்பது நிதிஷ் குமாரின் முதல் சதம், அரைசதம் அடித்து புஷ்பா பட பாணியில் அவரின் செயல், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் ஆகியவைதான்.

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டது நிதிஷ் குமாரின் பேட்டிங்தான். அதனால்தான் தொடர்ந்து 3 போட்டிகளிலும் நிதிஷ்குமார் ரெட்டியை அமர வைக்க எந்தவிதமான காரணமும் இன்றி தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார். முதல் டெஸ்டில் இந்திய அணி முன்னிலை பெறவும் நிதிஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் காரணமாக இருந்தது.

இந்த டெஸ்டில் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பிக்கவும் நிதிஷ்குமாரின் சதம் முக்கியப் பங்காற்றியது. இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் முன்னனி வீரர்கள் ரோஹித், கோலி, சுப்மான் கில், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோரின் பேட்டிங் சராசரி 30 ரன்களுக்கு கீழ் இருக்கையில் நிதிஷ் குமாரின் சராசரி 50 ரன்களுக்கு மேல் இருப்பது அவரின் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது.

நிதிஷ் குமார் ரெட்டியை 8-வது வரிசையில் களமிறக்குவது சரியா அல்லது நடுவரிசையில் களமிறக்கலாமா என்று அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரை சிந்திக்க வைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், போலந்த் பந்துவீச்சில் முன்னணி பேட்டர்கள் விக்கெட்டை கோட்டைவிட்டு தலைகவிழ்ந்து சென்ற நிலையில் நிதிஷ் ரெட்டி இவர்களின் பந்துவீச்சை அநாயசமாக எதிர்கொண்டு ஆடினார். கவர் டிரைவ், லாங் ஆனில் பவுண்டரி, புல் ஷாட் என அற்புதமான ஆட்டத்தை கம்மின்ஸ், ஸ்டார்க் பந்துவீச்சில் நிதிஷ் வெளிப்படுத்தினார்.

கவனிக்கப்படாத ஹீரோ வாஷிங்டன்

இந்தியா - ஆஸ்திரேலியா, நிதிஷ்குமார் ரெட்டி, பாக்ஸிங் டே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர்

இன்றைய ஆட்டத்தின் மொத்த கவனத்தையும் நிதிஷ் குமார் தனது சதத்தால் ஈர்த்துவிட்டாலும், பேசப்படாத ஹீரோ ஒருவர் இருக்கிறார் என்றால் அது வாஷிங்டன் சுந்தர்தான். நிதிஷ் குமாருக்கு துணையாக பேட் செய்து 127 ரன்கள் பார்டனர்ஷிப் அமைக்க வாஷிங்டன் முக்கியக் காரணமாக அமைந்தார். 2021ம்ஆண்டு சிட்னி டெஸ்டை வெல்ல வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் முக்கியமாக இருந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் இந்திய அணிக்கு மகுடமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அஸ்வின் ஓய்வுக்குப் பின் அணியில் தேர்வு செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தர் நிலை பல்வேறு விதங்களில் கேள்விகளை எழுப்பியது. சுப்மான் கில்லை அமரவைத்து வாஷிங்டனை தேர்வு செய்தது சரியா என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், அனைத்துக்கும் பதில் அளிக்கும் வகையில், தனது தேர்வை நியாயப்படுத்தும் வகையில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றியுள்ளார்.

122 ஆண்டு சாதனையை முறியடித்த நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிதிஷ் குமார்

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அணியில் 8-வது வீரராகக் களமிறங்கி அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை நிதிஷ் குமார்(105) ரெட்டி இன்று படைத்தார். இதற்கு முன் 1902ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ரெக்கி டப் 10-வது வீரராக களமிறங்கி 102 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை நிதிஷ் ரெட்டி முறியடித்துள்ளார்.

இந்திய அணியில் 8-வது வரிசை அதற்கு கீழாக களமிறங்கி சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையை நிதிஷ் படைத்துள்ளார். இதற்கு முன் அனில் கும்ப்ளே 2008-ஆம் ஆண்டு அடிலெய்ட் நகரில் 87 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8-வது வீரராக களமிறங்கி சதம் அடித்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் நிதிஷ் குமார் பெற்றார். இதற்கு முன் விருத்திமான் சாஹா ராஞ்சியில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 117 ரன்கள் சேர்த்திருந்தார்.

வாஷிங்டன் சுந்தர் –நிதிஷ் குமார் இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது என்பது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3வது அதிகபட்ச பார்ட்னர்ஷிபாகும். இதற்கு முன் 2013ல் சென்னையில் நடந்த டெஸ்டில் தோனி- புவனேஷ்வர் குமார் 140 ரன்களும், 2008-ஆம் ஆண்டு சிட்னி டெஸ்டில் சச்சின், ஹர்பஜன் சேர்ந்து 108 ரன்களும் சேர்த்திருந்தனர்.

மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை நிதிஷ் குமார் பெற்றார். இன்று நிதிஷ் குமார் சதம் அடித்த போது அவருக்கு 21 வயது நிரம்பி 214 நாட்கள் ஆகியிருந்தது. ஆனால், இதற்கு முன் சச்சின் 18 வயது 253 நாட்களிலும் ரிஷப் பந்த் 21 வயது 91 நாட்கள் இருந்த போது சதம் அடித்திருந்தனர்.

மெல்போர்ன் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் நிதிஷ் பெற்றார். இதற்கு முன் 1948-ஆம் ஆண்டு மன்கட் தனது முதல் சதத்தை மெல்போர்ன் மைதானத்தில் பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் 2008-ஆம் ஆண்டு கடைசியாக தென் ஆப்பிரிக்க அணியின் டுமினி தனது முதல் சதத்தை மெல்போர்னில் பதிவு செய்தார். அதன்பின் இதுவரை எந்த நாட்டு வீரரும் தங்களின் முதல் சதத்தை மெல்போர்னில் அடித்திராத நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின் நிதிஷ் குமார் இங்கு முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

புஷ்பா பாணியில் கொண்டாட்டம்

நிதிஷ் குமார் ரெட்டி 81 பந்துகளில் இன்று முதல் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அவரை சக பேட்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். நிதிஷ் குமார் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த மகிழ்ச்சியை புஷ்பா திரைப்பட பாணியில் பேட்டை கழுத்தில் வைத்து சீவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வர்ணனையாளர்களும் புஷ்பா திரைப்பட பாணியில் நிதிஷ் கொண்டாடுகிறார் என்று சிரித்தனர்.

நிதிஷ் குமார் ரெட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்த போது அவரின் தந்தை முதால்யா ரெட்டி ஆனந்த கண்ணீர் வடித்தார்

நிதிஷ் சதத்தை கண்டு ஆனந்தக் கண்ணீர்

நிதிஷ் குமாரின் ஆட்டத்தைக் காண மெல்போர்ன் மைதானத்தில் அவரின் தந்தையும் வந்திருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி போலந்த் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில் முதல் சதத்தை பதிவு செய்ததைப் பார்த்தவுடன் அவரின் தந்தை ஆனந்தக் கண்ணீர் வி்ட்டு அழுதார். கையில் தேசியக் கொடியை வைத்துக் கொண்டு நிதிஷ் குமார் ஆட்டத்தை ரசித்த அவரின் தந்தையை அருகே இருந்த ரசிகர்கள் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆட்டம் யார் பக்கம்?

ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா

இந்த டெஸ்டில் இன்னும் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியைவிட 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருக்கிறது. கடைசி விக்கெட்டுக்கு நிதிஷ், சிராஜ் களத்தில் உள்ளனர். இந்திய அணி நாளை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதல் இன்னிங்ஸ் சிராஜ் விக்கெட்டை இழந்தால் முடிவுக்கு வரலாம். எப்படிப் பார்த்தாலும் 100 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி இருக்கும்.

இந்த 100 ரன்கள் முன்னிலையை வைத்து ஆட்டத்தின் வெற்றியை ஆஸ்திரேலியா எளிதாக தீர்மானிக்க இயலும். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் நாளை முழுவதும் ஆஸ்திரேலிய அணி பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் அடித்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு இலக்கு வைத்து கடைசி நாளை முழுவீச்சில் எதிர்கொண்டால் ஆட்டத்தில் ஸ்வரஸ்யம் அதிகரிக்கும்.

கடைசி நாளில் ஆட்டம் யார் பக்கம் செல்லும், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து ஆட்டத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும். இப்போதுள்ள நிலையில் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் நிலையில் ஆஸ்திரேலியஅணிதான் இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது அவுஸ்ரேலியா தனது இரண்டாவது இனிங்ஸினை விளையாடுகிறது, 47/2 .

இந்தியாவின் அற்புதமான பந்து வீச்சு, அதனை எதிர்கொள்ள திணறுகின்ற அவுஸ்ரேலிய மட்டையாளர்கள், முதல் இனிங்ஸில் பரபரப்பு ஏற்படுத்திய சாம் அவுட்டாகி விட்டார், அவுஸ்ரேலிய துடுப்பாட்டக்காரர்களின் கால்களை நகர்த்தி விளையாடத குறைபாடுகளை வர்ணனையாளர்கள் குறிப்பிட்டார்கள்.

ஆனாலும் இந்தியாவின் பந்து வீச்சு குறிப்பாக புல் லெந்த் பந்து nip ஆகும் அற்புதமான பந்து வீச்சிற்கு இன்றைய ஆட்டம் ஒரு சிறந்த டெஸ்ட் மட்ச் உணர்வை ஏற்படுத்துகிறது.

152 ஓட்டங்கள் முன்னிலையில் அவுஸ்ரேலியா உள்ளது பந்து தனது உறுதியினை இழந்தால் இந்த சிறப்பான பந்து வீச்சு தொடராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
LIVE
4th Test, Melbourne, December 26 - 30, 2024, India tour of Australia
Australia FlagAustralia        (70 ov) 474 & 189/9
India FlagIndia                             369

Day 4 - Session 3: Australia lead by 294 runs.

Current RR: 2.70 • Min. Ov. Rem: 19 • Last 10 ov (RR): 28/1 (2.80)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.