Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிட்சர்லாந்திலிருந்து வருகைதந்திருந்த குறித்த பெண்ணின் வீட்டை இன்று புதன்கிழமை (20) அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த நபர்கள், பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து இரண்டு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள்,  1 1/4 பவுண் தங்க சங்கிலி மற்றும்  29,000 ரூபா இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .

இது பற்றி தெரியவருவதாவது

கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோணேஸ்வரி 1990 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்ற குடியேறியுள்ளார். அங்கு அவர் தாதியாக பணியாற்றுவதோடு கணவன் பொறியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் தாதி சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கையிலுள்ள தனது வீட்டை பார்ப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்து வீட்டில் தற்காலிகமாக தனிமையில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று (20) அதிகாலை 12 மணியளவில் வீட்டின் குளியலறை பகுதியில் யன்னல் கதவை உடைத்து உள்நுழைந்த  திருடர்கள் குறித்த பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த அலுமாரியை உடைத்து  72 ஆயிரம் ஸ்விஸ் பிராங் (இரண்டு கோடி 40 இலட்சம்) மற்றும் 1 1/4 பவுண் தங்க சங்கிலியும் 29,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு  காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தலைமையில சென்ற பொலிஸார், தடயவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=196176

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வளவு பணம் மற்றும் பொருட்களுடன் தனியே??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்கு தெரிந்தவர்கள்... (ஆளை வைத்து)  செய்த களவு போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, தமிழ் சிறி said:

நன்கு தெரிந்தவர்கள்... (ஆளை வைத்து)  செய்த களவு போலுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் வேலை செய்து ஓய்வூதியம் வழங்கும்போது ஒரு தொகை பணமும் கொடுக்கப்படும். இதை தெரிந்து தகவல் கொடுத்துள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

சுவிட்சர்லாந்தில் வேலை செய்து ஓய்வூதியம் வழங்கும்போது ஒரு தொகை பணமும் கொடுக்கப்படும். இதை தெரிந்து தகவல் கொடுத்துள்ளனர். 

அந்த மனிசி... ஏன் அந்தக் காசை  கொண்டு வீட்டு அலுமாரியில் வைத்தது.
காத்தான்குடியையும்... சுவிஸ் போல ஒழுக்கமான இடம் என நினைத்து விட்டது போலுள்ளது.

இவ்வளவு காலமும் சுவிஸில் வேலை செய்தும்,  உலக அறிவு... ஹ்ஹும்.
மனிசியின் 34 வருட உழைப்புக்கு நாமம் போட்டு விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, விசுகு said:

சுவிட்சர்லாந்தில் வேலை செய்து ஓய்வூதியம் வழங்கும்போது ஒரு தொகை பணமும் கொடுக்கப்படும். இதை தெரிந்து தகவல் கொடுத்துள்ளனர். 

8 minutes ago, தமிழ் சிறி said:

நன்கு தெரிந்தவர்கள்... (ஆளை வைத்து)  செய்த களவு போலுள்ளது. 

ஊரில் போய் இருக்க போகிறீர்களா???   பலரும் வீடுகள் கட்டிகொண்டு இருகிறார்கள்   போய்   இருப்பதற்க்கு   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

ஊரில் போய் இருக்க போகிறீர்களா???   பலரும் வீடுகள் கட்டிகொண்டு இருகிறார்கள்   போய்   இருப்பதற்க்கு   

animiertes-hund-bild-0081  Dog Barking GIFs | Tenor

நான்  ஊரில் போய் இருந்தாலும்... 
இந்த மொக்கு மனிசி மாதிரி... காசை அலுமாரியில் அடுக்கி வைக்க மாட்டேன்.

எனது ஊர்  அலுமாரியில்... ஒரு சோடி  சாரமும், ஒரு சோடி   கால் சட்டையும், 
இரண்டு சோடி சேர்ட் மட்டுமே இருக்கும். 

வளவுக்குள் கால் வைக்கிறவனின்... ஈரல் குலையை புடுங்கி எடுக்க,  
வீட்டுக்கு வெளியில்... இரண்டு அல்சேஷன் நாய் நிற்கும். 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, விசுகு said:

இவ்வளவு பணம் மற்றும் பொருட்களுடன் தனியே??

அண்ணை, இவ்வளவு சுவிஸ் பிராங்கை உத்தியோகபூர்வமாக நாட்டிற்குள் கொண்டுவர முடியாதென நினைக்கிறேன்.

Persons departing from or arriving in Sri Lanka

Persons departing from or arriving in Sri Lanka may carry any amount of foreign currencies in the form of currency notes, bank drafts, cheques, travel cards, etc. However, a person shall make a declaration to the Sri Lanka Customs

        if that amount exceeds USD 15,000 or its equivalent in any other foreign currency; or

        if he/she arriving in Sri Lanka intends to take back foreign currency notes exceeding USD 10,000 or its
        equivalent in any other foreign currency.

https://www.dfe.lk/web/index.php?option=com_content&view=article&id=142:gold-trade&catid=81&lang=en

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஏராளன் said:

உண்மை தான் 

ஆனால் சுவிஸ் பென்சன் காரர் என்றால் பணம் வந்திருக்கும் என்பதையே குறிப்பிட்டேன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, தமிழ் சிறி said:

அந்த மனிசி... ஏன் அந்தக் காசை  கொண்டு வீட்டு அலுமாரியில் வைத்தது.
காத்தான்குடியையும்... சுவிஸ் போல ஒழுக்கமான இடம் என நினைத்து விட்டது போலுள்ளது.

இவ்வளவு காலமும் சுவிஸில் வேலை செய்தும்,  உலக அறிவு... ஹ்ஹும்.
மனிசியின் 34 வருட உழைப்புக்கு நாமம் போட்டு விட்டார்கள். 

அப்படி இல்லை அண்ணை இப்ப காத்தான் குடி கல்லடி வரைக்கும் போய் விட்டது மட்டக்களப்பு மக்களுக்கு இத்தேர்தலுடன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தேன் காரணம் பிள்ளையான் இருக்கும் வரைக்கும் அவர்கள் காணி வாங்கி உள்வரவில்லை ( விடவில்லை) இப்ப கிஸ்புல்லா மீண்டும் தெரிவாகி உள்ளார் இனி கல்லடியும் காத்தான் குடிதான் காத்தான் குடியில் இல்லாத பொலிஸ் நிலையமே காத்தான் குடியில் இருக்கு என்று சொல்கிறார்கள் (மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையல் இருப்பது) தற்போது கல்லடி இசைநடனக்கல்லூரிக்கு அருகாமையில் குடிவந்துள்ளார்கள் முஸ்லீம்கள் அப்ப மட்டக்களப்பானுக்கு வாழ்த்து சொல்லத்தானே வேண்டும் 

சிலமாதங்களுக்கு முன்னர் கல்லடி பாலத்துக்கு அருகாமையில் காணியை பிடிக்க அடித்து நொருக்கி ஓடவிட்டார்கள் இனிமேல் அதற்கு ஆள் இல்லை  சாணாக்கியனும் , சிறிநேசனும் , பிரவும் புட்டும் தேங்காய் பூ கதையும் சொல்வார்கள் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

சிலமாதங்களுக்கு முன்னர் கல்லடி பாலத்துக்கு அருகாமையில் காணியை பிடிக்க அடித்து நொருக்கி ஓடவிட்டார்கள் இனிமேல் அதற்கு ஆள் இல்லை  சாணாக்கியனும் , சிறிநேசனும் , பிரவும் புட்டும் தேங்காய் பூ கதையும் சொல்வார்கள் 

இந்த... புட்டும் தேங்காய்ப்பூவும் கதை... 
இராசதுரை காலத்தில் இருந்து கேட்டு கிழக்கை  பெருமளவு  இழந்து விட்டோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

இந்த... புட்டும் தேங்காய்ப்பூவும் கதை... 
இராசதுரை காலத்தில் இருந்து கேட்டு கிழக்கை  பெருமளவு  இழந்து விட்டோம். 

அவர்களுக்கு பெரிதாக காணி இல்லை சனத்தொகை பெருக்கம் அதிகம் என்பதால் திட்டமிட்டு குடியேற்றத்தை நகர்த்துகிறார்கள் தற்போது நாவலடி அதாவது ஓட்டமாவடி அருகில் இருக்கும் அரச காணிகள் அனைத்தும் களவாடப்பட்டு வருகிறது வாகரை வரைக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுக்கு பெரிதாக காணி இல்லை சனத்தொகை பெருக்கம் அதிகம் என்பதால் திட்டமிட்டு குடியேற்றத்தை நகர்த்துகிறார்கள் தற்போது நாவலடி அதாவது ஓட்டமாவடி அருகில் இருக்கும் அரச காணிகள் அனைத்தும் களவாடப்பட்டு வருகிறது வாகரை வரைக்கும் 

உண்மைதான்... உலகம் எங்கும் இவர்களால் பல்வேறு பிரச்சினைகள்.
எங்கும் இவர்களது சனத்தொகை அளவு கணக்கு இல்லாமல் எகிறிக் கொண்டுள்ளது.
இங்குள்ள ஆஸ்பத்திரி... பிள்ளை பெறும் பகுதி 60% முஸ்லீம் பெண்களால் நிரம்பி இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான்... உலகம் எங்கும் இவர்களால் பல்வேறு பிரச்சினைகள்.
எங்கும் இவர்களது சனத்தொகை அளவு கணக்கு இல்லாமல் எகிறிக் கொண்டுள்ளது.
இங்குள்ள ஆஸ்பத்திரி... பிள்ளை பெறும் பகுதி 60% முஸ்லீம் பெண்களால் நிரம்பி இருக்கும். 

ம்ம்  சிறு வயதில் கல்யாணம் அதிக பிள்ளைகள்  கேட்டால் அல்லா கொடுக்கிறான் என்பார்கள்  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

அண்ணை, இவ்வளவு சுவிஸ் பிராங்கை உத்தியோகபூர்வமாக நாட்டிற்குள் கொண்டுவர முடியாதென நினைக்கிறேன்.

Persons departing from or arriving in Sri Lanka

Persons departing from or arriving in Sri Lanka may carry any amount of foreign currencies in the form of currency notes, bank drafts, cheques, travel cards, etc. However, a person shall make a declaration to the Sri Lanka Customs

        if that amount exceeds USD 15,000 or its equivalent in any other foreign currency; or

        if he/she arriving in Sri Lanka intends to take back foreign currency notes exceeding USD 10,000 or its
        equivalent in any other foreign currency.

https://www.dfe.lk/web/index.php?option=com_content&view=article&id=142:gold-trade&catid=81&lang=en

இரண்டு இடங்களிலும் ( Departure & Arrival ) Declaration செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

அண்ணை, இவ்வளவு சுவிஸ் பிராங்கை உத்தியோகபூர்வமாக நாட்டிற்குள் கொண்டுவர முடியாதென நினைக்கிறேன்.

அமெரிக்காவிலிருந்து 9000 டாலர்கள் சொல்லாமல் வெளியே கொண்டு போகலாம்.

இலங்கையில் இறங்கும்போது வெளிநாட்டு பாஸ்போட்டுக்கு இமிகிரேசன் படிவம் மட்டுமே கேட்கிறார்கள்.

இலங்கைப் புத்தகத்துடன் போகும்போதே கொண்டுபோகும் சாமான்கள் பணம் என்பன எழுத வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான்... உலகம் எங்கும் இவர்களால் பல்வேறு பிரச்சினைகள்.
எங்கும் இவர்களது சனத்தொகை அளவு கணக்கு இல்லாமல் எகிறிக் கொண்டுள்ளது.
இங்குள்ள ஆஸ்பத்திரி... பிள்ளை பெறும் பகுதி 60% முஸ்லீம் பெண்களால் நிரம்பி இருக்கும். 

ஏன் பொறமை படுகிறீர்கள்    ??   உங்களை எவரும் தடுக்கவில்லை   

நீங்களும்   நன்றாகவே முயற்சிகள் செய்யலாம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழக்கில் முஸ்லீம்களுக்கு அருகில் வாழும் தமிழர்கள் உல்லாச பிரயாணிகளாக  அங்குவரும் இஸ்ரேலியர்களுக்கு அவர்கள் வீடுகள் விடுதிகளை வாடகைக்கு கொடுங்கள் தற்காலிகமாக குடியமர்த்துங்கள்.

அவர்கள்மேல் முஸ்லீம்கள் கை வைத்தால் சிங்களவன் நொங்கு எடுப்பான், இவர்களை முழு கண்காணிப்பின்கீழ் கொண்டுவருவான். 

எம் நிம்மதியை கெடுத்தால் ஏதாவது ஒருவழியில் அவர்கள் நிம்மதியை கெடுக்கலாம் தப்பில்லை

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பண விடயத்தில் சொந்த உறவினர்களையே நம்ப முடியாத இந்தக்காலத்தில் தனிமையில் இருக்கும் போது இவ்வளவு ரொக்க பணத்தை என்ன தைரியத்தில் வைத்திருந்தார்?

நான் சிலோனுக்கு போறதாய் இருந்தால் ஒரு சாறமும் ஒரு துவாயும் மட்டும் கொண்டு போவன். 😂

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.