Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 NOV, 2024 | 08:07 PM

image

(நா.தனுஜா)

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.

இந்நிலையில், நினைவுகூரல் தொடர்பில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, மேலும் கூறியிருப்பதாவது,

நாமனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும்போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது மிக முக்கியமானதாகும். 

அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகாலக் காயங்களை ஆற்றுவதற்குரிய மிகமுக்கிய நகர்வாகும்.

இருப்பினும் இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது. மாறாக அத்தகைய நடவடிக்கைகள் கடந்தகால வலிகளையும், தேவையற்ற பதற்றங்களையும் தோற்றுவிப்பதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச்செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன. 

வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது. மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ளமுடியும்.

அதேபோன்று தெற்கில் உள்ள கடும்போக்கு சக்திகள் இனவாதத்தைப் பரப்புவதற்கு ஏதுவான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்குவதைத் தவிர்ப்போம்.

அதேவேளை, பல்லினத்தன்மை என்பது பிரிவினைக்கு வழிவகுப்பதாகவன்றி, எமது பலமாகத் திகழக்கூடிய 'இலங்கையர்' என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி நாமனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அழைப்புவிடுத்துள்ளார். 

https://www.virakesari.lk/article/199923

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை வரையறைகளுடன் எவ்வாறு அனுஷ்டிக்க முடியும் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

28 NOV, 2024 | 04:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வரையறைகளுடன் மாவீரர் தினத்தை எவ்வாறு அனுஷ்டிக்க இடமளிக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஸ்டிக்க நேரிடும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இம்முறை வடக்கில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுபாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஆனால் வடக்கு  மக்கள்  இம்முறை போராளிகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனையும் பகிரங்கமாக நினைவு  கூர்ந்துள்ளனர்.

விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்யப்பட்டுள்ளது. உலகில் 32 நாடுகளில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை எவ்வாறு வரையறைகளுடன் அனுஸ்டிக்க இடமளிக்க முடியும். இவ்வாறான  செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் ஒசாமா பின் லேடனையும் இலங்கையில் அனுஷ்டிக்க நேரிடும்.

தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். தமிழ் மக்களின் ஆணையை அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.

நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கம் நாட்டு பற்றுள்ள இலங்கையர்களுக்கு கிடையாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையர்கள் என்ற அபிமானத்துடன் வாழ்வதற்கே விரும்புகிறார்கள். பிரிவினைவாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளே நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி அக்காணிகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு  அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் எதிர்வரும் மாதமளவில் பெருமளவான இராணுவ முகாமைகளை வடக்கில்  இருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி,  காணிகளை பகிர்ந்தளித்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் விரிவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய மீளாய்வுகளுக்கு  பின்னர் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும். இச்செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு சிறிதளவேனும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடாகும்.

இலங்கையில் 30 ஆண்டுகள் நீடித்த  பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அனைத்து இன மக்களும் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள்.வடக்கிலும்,  கிழக்கிலும்  தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருத்தல் வேண்டும் என்பதை அரசாங்கமும் அரச தலைவர்களும் மறக்க கூடாது என்றார்.

https://www.virakesari.lk/article/199946

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப விளங்குதா ஏன் முஸ்லிம்கள் அமைசரவையில் இடம் பெறவில்லை என்று ?

சிங்களவன் மறந்தாலும் இந்த கூட்டம் ஒரு போதும் மறக்காது .

  • கருத்துக்கள உறவுகள்

 எப்படியும் ஒரு  அமைச்சர் ஆகத் துடிக்கிறார் ..சப்பிரி

மகிந்த கோஸ்டிக்கு கதக்க இப்ப கதையில்லை ....ஆமியும் ..காணியும்தான் கிடக்கு..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சிங்களவன் மறந்தாலும் இந்த கூட்டம் ஒரு போதும் மறக்காது .

ஆனால் இவர்கள் வடகிழக்கு தமிழர்களுக்கு செய்த அநியாயம் இன சுத்திகரிப்பை விட மோசமானது  அதை அவர்கள் ஒரு போதும் கவலைப்பட போவதில்லை அவர்களுக்கு தந்திரமாக சிங்களவர்களுக்கு முதுகு தேய்த்து கொண்டு இலங்கையை அரபு பூமியாக்குவதே நோக்கம்  .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனரின் விடுதலைக்காக போராடும் ஹமாஸ்,ஹிஸ்புல்லா,ஈராணிய புரட்சி படை களை விட எமது போராளிகள் சிறந்தவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

சப்பிரியை விட மோசமான் பேர்வழி ... ரிசாத்து...இவ்ர் பார்லிமென்டில் முதல் முதல் புத்ய்சனாதிபதியை சந்திக்கும்போது ..கண்சிமிட்டி .சிரித்தது...விடைபெறும்போது..மீண்டும் அதேசெய்கை...மறக்க முடியாத காட்சி..

விசயம் என்னவென்றால்..இந்த ரிசாத்துப்பயல் ..செய்த அனியாயத்தை...இரண்டு முசுலிம்களே..இன்று..இலஞ்சத் திணைக்களத்தில் சுமக்க முடியாத கோவைக்கட்டுகளுடன் சென்று புகாரளித்திருக்கின்றனர்..அதில் விடயம் என்னவென்றால் ..2009 இல் எமது மக்கள் கம்பிவேலீௐகுள் ..அடைபட்டிருந்தநேரம் ....பணப்பறிப்புடன் ..பாலியல் லஞ்சமும் பெற்றார் .என்ப்து உட்ப்ட பல குற்ர்ச்சாட்டு..இதனை வீடியோவில் பார்க்க.....இங்கு செல்லவும்....இந்த இணைப்பை யாரவது  இணைக்க  முடியுமா...என்னல் இதனை இங்கு கொழுவமுடியவில்லை

மதியநேரச்செய்திகள் 28.11.2024 | Lunchtime News 📰

-2pVvN8ckC4KAE1WfvrAkNO0C2ROw8RQvO460T7t

50.6K subscribers

Subscribe

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழர்களுக்கு யார் எதிரி என இப்போதாவது விளங்குகின்றதா?
சிங்களம் இனவாதம் இல்லாமல் வாழ ஆரம்பித்தாலும் இந்த முஸ்லீம்கள்  ஏதோ ஒரு வகையில் தங்கள் இனமத துவேஷத்தை சந்தர்ப்பங்கள் வரும் போது வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

எனது முன்னோர்கள் அன்றே இந்த இனைத்தை பற்றி கணித்து வைத்தது சரியாகவே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

பலஸ்தீனரின் விடுதலைக்காக போராடும் ஹமாஸ்,ஹிஸ்புல்லா,ஈராணிய புரட்சி படை களை விட எமது போராளிகள் சிறந்தவர்கள் 

ச‌ரியா சொன்னீங்க‌ள் புத்த‌ன் மாமா👍........................

  • கருத்துக்கள உறவுகள்

03-9.jpg

(நா.தனுஜா)

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.

இந்நிலையில், நினைவுகூரல் தொடர்பில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, மேலும் கூறியிருப்பதாவது,

நாமனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும்போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது மிக முக்கியமானதாகும். 

அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகாலக் காயங்களை ஆற்றுவதற்குரிய மிகமுக்கிய நகர்வாகும்.

 இருப்பினும் இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது. மாறாக அத்தகைய நடவடிக்கைகள் கடந்தகால வலிகளையும், தேவையற்ற பதற்றங்களையும் தோற்றுவிப்பதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச்செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன. 

வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது. மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ளமுடியும்.

அதேபோன்று தெற்கில் உள்ள கடும்போக்கு சக்திகள் இனவாதத்தைப் பரப்புவதற்கு ஏதுவான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்குவதைத் தவிர்ப்போம்.

அதேவேளை , பல்லினத்தன்மை என்பது பிரிவினைக்கு வழிவகுப்பதாகவன்றி, எமது பலமாகத் திகழக்கூடிய 'இலங்கையர்' என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி நாமனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அழைப்புவிடுத்துள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

சப்பிரியை விட மோசமான் பேர்வழி ... ரிசாத்து...இவ்ர் பார்லிமென்டில் முதல் முதல் புத்ய்சனாதிபதியை சந்திக்கும்போது ..கண்சிமிட்டி .சிரித்தது...விடைபெறும்போது..மீண்டும் அதேசெய்கை...மறக்க முடியாத காட்சி..

விசயம் என்னவென்றால்..இந்த ரிசாத்துப்பயல் ..செய்த அனியாயத்தை...இரண்டு முசுலிம்களே..இன்று..இலஞ்சத் திணைக்களத்தில் சுமக்க முடியாத கோவைக்கட்டுகளுடன் சென்று புகாரளித்திருக்கின்றனர்..அதில் விடயம் என்னவென்றால் ..2009 இல் எமது மக்கள் கம்பிவேலீௐகுள் ..அடைபட்டிருந்தநேரம் ....பணப்பறிப்புடன் ..பாலியல் லஞ்சமும் பெற்றார் .என்ப்து உட்ப்ட பல குற்ர்ச்சாட்டு..இதனை வீடியோவில் பார்க்க.....இங்கு செல்லவும்....இந்த இணைப்பை யாரவது  இணைக்க  முடியுமா...என்னல் இதனை இங்கு கொழுவமுடியவில்லை

தமிழ் மக்களுக்கு சார்பாக நிற்கும்,  மன்னாரை சேர்ந்த  முஸ்லீம்  பெருமகன்.
ரிஷாட் பதியூதினின் பல ஆயிரம் கோடிக்கணக்கான ஊழல்களை வெளியே கொண்டு வருகின்றார். அனுர ஆட்சியில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவர் மீது, நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம்.

அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, alvayan said:

ரிசாத்து.

கொஞ்ச காலத்திற்கு முன்பு வீட்டில் வேலை செய்த இளம்பெண் ஒருவரை கொலை செய்திருந்தாரே? என்னாச்சு?

பணத்தைக் கொடுத்து கேஸை மூடிட்டாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்சியமைப்பில் தமிழர்களும் சிங்களவர்களும் இணக்கபாடாய் போய்விடுவார்களோ , இவர்கள் மோதலைவைத்து இதுநாள்வரை பொழைப்பு நடத்திய முஸ்லீம்கள்  நிலமை  இனி என்னாகுமோ என்று பேயறைந்ததுபோல் ஆகிவிட்ட முஸ்லீம்வெறி அரசியல் ஜந்துக்கள் பல உண்டு, 

அதில் ஒன்றுதான் இந்த அலிசப்ரி ஜந்து.

இதே ஜந்துதான் வடக்கில் அநுர வெற்றி பெற்றபின்னர் இன இணக்கப்பாடு பற்றி ஒருசிலநாள் முன்னர் பேசியது, அப்போதே தெரியும் இது உள்ளூக்குள் எரிந்தபடி ஒப்புக்கு பேசுது என்று 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.