Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 NOV, 2024 | 08:20 PM
image
 
நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார்.

அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சீன தூதுவருக்கு சிறிய தெளிவு படுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை. 

அரசியல் கைதிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள்.

அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன தவிர தமிழர் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள்.

இன்று வரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள். அண்மையில் இடம்பெற்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது.

வெறுமனே பாராளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல அதையும் தாண்டி உள்ளது. ஆகவே இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக அதனை குறிப்பிட்டுள்ளது.  

கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்ற வகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை என்ற வகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை நட்பு நாடும் இல்லை என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது. அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக இருக்கின்றோம்.

தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள் . கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். 

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தான் இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்ரீதியாக மாத்திரமன்றி பண்பாடுரீதியாக பொருளாதாரரீதியாக  மேற்கொள்ளப்படுவது ஆகும்  என்றார்.

https://www.virakesari.lk/article/200021

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவினை மாத்திரம் அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா (China) கணிப்பிட முடியாது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள், மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன், 

"சீன தூதுவருக்கு சிறிய தெளிவுபடுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமால் ஆக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் 

தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன. தவிர தமிழ் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள்.

சீன தூவரின் கருத்திற்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் | Uoj Students Tirade Chinese Ambassador S Opinion

இன்றுவரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள். அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது.

வெறுமனே நாடாளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல. அதையும் தாண்டி உள்ளது. ஆகவே, இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக அதனை குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மக்களின் நிலை

ஆகவே, இன்றுவரை தமிழ் மக்களின் பிரச்சினை, காணாமல் ஆக்கபட்டோர் பிரச்சினை இன்றுவரை எமக்கு பிரச்சினையாக உள்ளது. இந்த விடயங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம்.

சீன தூவரின் கருத்திற்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் | Uoj Students Tirade Chinese Ambassador S Opinion

கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்றவகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை என்றவகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை. நட்பு நாடும் இல்லை என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது.

அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக இருக்கின்றோம். தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தான் இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர் ரீதியாக மாத்திரமன்றி பண்பாடு ரீதியாக பொருளாதார ரீதியாக மேற்கொள்ளப்படுவது  ஆகும்” என தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/uoj-students-tirade-chinese-ambassador-s-opinion-1732896524?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களுக்கென்று நியாயமான கோரிக்கை ஒன்று இருக்கின்றது.இது 70 வருடங்களுக்கு மேலாக அரசியல் போராட்டமாக இருக்கின்றது.ஆயுத போராட்டமாகவும் இருந்துள்ளது.
அந்த இருவகை போராட்டத்திலும் தமிழர் உரிமைகள் மட்டுமே வலியுறுத்தப்பட்டது. 
இது சீன கொள்கையாளகளுக்கு தெரிந்தேயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலை கழகங்கள் ஒரு சமூகத்தின் ஆய்வுகூடங்கள்.

தனியே அறிக்கை அரசியல் செய்யாமல் - இதில் இருந்து ஒரு காத்திரமான தலைமையை உருவாக்க இந்த மாணவர்கள் முன்வர வேண்டும்.

அது தீபச்செல்வன், கஜேந்திரன் போல அல்லாமல் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை அரசியல் கலம்காலமாக பழகிப் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண பலகலைக்கழகத்தின் வரலாற்றில் அது ஒரு Intellectual ஆன சமூகமாக என்றுமே இருந்ததில்லை.  அதனால் நீண்டகால திட்டமிடலான அறிவுபூர்வ தமிழ் அரசியலை அது என்றுமே பேசவில்லை.  அதை வளர்தெடுக்கவும் முயலவில்லை. தமக்குள்ளே  தர்ககபூர்வமான விவாதங்களை நடத்துவதும் இல்லை. சகிப்புதன்மையற்ற one way typ சமூகமாகவே யாழ்பல்கலைக்கழக சமூகம் உள்ளது.  

குறுகிய வட்டத்தில் மாணவர்களை உணர்சசி வசப்படுத்துவதும்  தூண்டுதல் செய்வதும் பின்னர் பின்னர் pass out பண்ணி வெளியே போனதும் எல்லாவற்றையும் மறந்து  அரசாங்கத்தில்  அல்லது வெளிநாடுகளில் வேலை தேடு செல்லுவதே இவர்களின் அரசியல் இவர்களின்  ஆகவே இவர்களது அறிக்கைகளை பெரிசுபடுத்தவேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் உள்ளவர்களும் அறிக்கை விடக் கூடாது 

தாயகத்தில் உள்ளவர்களையும் அறிக்கை விடக்கூடாது என்றால் இதில் யார் திருந்தணும்??

இந்த சிங்கள தேசியவாதிகளின் எடுபிடி தாங்கமுடியல சாமி....

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகளை வைத்து அது தமிழ்மக்கள் சிங்கள தலைமைகளை ஏற்று வாழ தயாராகிவிட்டார்களென்றோ, அல்லது தமிழர்களின் தேசிய உணர்வை  மறந்து விட்டார்களென்றோ பல்கலைகழக மாணவர்களும் ஊடக சந்திப்பு நடத்த  தேவையில்லை, சீன தூதுவரும் அறிக்கைவிட தேவையில்லை.

சிங்கள கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட பெரும் வாக்குகள்  சிங்கள கட்சிகளின் மேல் கொண்ட அன்பினால் அல்ல தமிழ்கட்சிகள் மேல் கொண்ட வெறுப்பினால் என்பதே யதார்த்தம். 

எம் மக்கள் எந்தவித ஆசை வார்த்தைகளுக்கும் சலுகைகளுக்கும் இனத்தை அடைவு வைக்க மாட்டார்களென்பதற்கு வடக்கிலிருந்து கிழக்குவரை புயல் பெருவெள்ளம் இடி மின்னல் நடுவே முழங்காலளவு தண்ணீருக்குள் நின்றபடி எம் இன மானம் காத்தவர்களை சாரை சாரையாக அணிவகுத்து வந்து நினைவு கூர்ந்ததே சாட்சி.

அதேபோல சிங்கள கட்சிகளும் தமிழர்கள் இனிமே நிரந்தரமாக எம் பக்கம் என்று எக்காலமும் நினைத்திடலாகாது, வெறும் வாக்கு வங்கிகளாக நீங்கள் எம்மைபயன்படுத்தலாம் என்று கனவிலும் எண்ணக்கூடாது.

அது மாவீரர் மண், அது எதற்காகவும் இனமானத்தை யாருக்கும் விற்காது என்பதற்கு பெருமெடுப்பில் நடந்த நிகழ்வேந்தலும், தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டமும், பெரும் எண்ணிக்கையில் மாவீரர், மற்றும் தலைவரை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் எண்ணிக்கையில் கைதாகும் எம் இளைஞர்களும் சாட்சி.

இந்த ஐந்தாண்டு காலத்தில் இன அர்ப்பணிப்புள்ள உறுதியான தமிழ்தலைமை ஒன்று தமிழர் மத்தியில் உருவானால் அடுத்த தேர்தலில் யாழ்ப்பாணம் ஒட்டுமொத்தமா அநுர அரசை வடக்கிலிருந்து அகற்றிவிடும்.

அப்படி ஒரு அர்ப்பணிப்புள்ள தமிழ்தலைமையோ அல்லது இன்று எஞ்சியிருக்கும் தமிழ்கட்சிகளோ இன்னமும் கடந்தகால வரலாற்றில் பாடம் படிக்காமல் ஊர் சுத்தி திரிஞ்சால் அடுத்த தேர்தலில் அநுர ஆறு ஆசனங்களையும் பெறும் வாய்ப்பிருக்கிறது அதையும் மறுப்பதற்கில்லை.

அதுகூட அநுரதான் கடவுள் என்று அவர்கள் கொள்ளபோகும் அர்த்தமல்ல, நமக்கு வாய்த்ததுகள் இயமனுகள் என்ற வெறுப்புத்தான்.

தமிழர் மான தேசியத்தையும், தமிழர் தேசியம் என்று பேசி திரிந்து எம் முதுகில் குதிரையோடிய தமிழர் கட்சிகளையும்  எம் மக்கள் ஒன்றாக்கி பார்க்கவில்லையென்பதே மாவீரர்நாள் நிகழ்வுகளும்  இந்த தேர்தலில் அநுரவின் வடபகுதியின் அமோக வெற்றியும்.

அவர்களை பொறுத்தவரை அவர்களுக்கும் கடல்கடந்துவிட்ட எமக்கும்  தேவை இனமான தேசியம், இனத்தை விற்று தமிழ்கட்சிகள் நடத்திய யாசகம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

அருமை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.