Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கையில் இடம்பெற்ற போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு தொடர்ந்தும் காலம் அவகாசம் கோரி வருகிறது.

எனினும், இலங்கைக்கு எதிரான பிடியை விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவுடன், நீண்டகாலமாக நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இன்று வரை வலியுறுத்தி வருகின்றன.

தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றன.

அந்தவகையில் இலங்கையில் வரலாற்று ரீதியான ஆட்சியை கைப்பற்றியுள்ள அநுரகுமார திசாநாயக்க அரசு, சர்வதேச பொறிமுறையின் ஊடாக தமிழர்களுக்கான உள்ளக விசாரனையை ஆரம்பிக்க புதிய நகர்வை கையாள திட்டமிட்டுள்ளதாக அரசியல் தற்போது வட்டாரங்களில் சில கருத்துக்கள் மேலோங்கியுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ், சர்வதேச பொறிமுறை என்பது அநுர அரசால் கையாள திட்டமிடப்பட்டுள்ள அதிமுக்கிய செயற்பாடு என சுட்டிக்காட்டினார்.

மேலும் , இவ்வாறான விடயங்கள், புலம் பெயர் அமைப்புக்களுக்கு சவாலை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/government-challenges-diaspora-organizations-1733156459

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக் காய்வாளர்கள்..தொல்லை பெரும் தொல்லையப்பா...பிரியாணிக்கடை விளம்பரம் மாதிரி

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழர்களே தங்கள் அரசியல்வாதிகளையும்,புலம்பெயர் அமைப்புகளையும் நம்புவதில்லை மதிப்பதில்லை.😎

காரணம் அவ்வளவு செயல் திறன். :cool:


இப்படியிருக்க சிங்களவன் இவர்களை எப்படி மதிப்பான்? 😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, alvayan said:

இந்தக் காய்வாளர்கள்..தொல்லை பெரும் தொல்லையப்பா...பிரியாணிக்கடை விளம்பரம் மாதிரி

 

கலாநிதி அரூஸ் எந்த துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்? இவரை வைத்து தமிழ்வின் ஓடுது. பெருமாள் போன்றோரின் ஆசான் போலும். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, நியாயம் said:

 

கலாநிதி அரூஸ் எந்த துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்? இவரை வைத்து தமிழ்வின் ஓடுது. பெருமாள் போன்றோரின் ஆசான் போலும். 

எங்கே, எந்த துறையில் கல்லா நிதி பட்டம் எடுத்தார் என தெரியவில்லை.

அருஸ் இவர் புனைபெயர் என நினைக்கிறேன்.

போர்க் காலத்தில்….வேல்சில் இருந்து அரூஸ் என்ற பீடிகையோடு….  ஏதோ இரணமடு பண்டில் ஏறி நிண்டு பார்த்தவர் போல இக்பால் அத்தாஸ் முதல் கிழமை சண்டே டைம்சில் எழுதியதை + தன் கற்பனை சேர்த்து அள்ளி விட்ட வாய்வாளர் இவர்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நியாயம் said:

 

கலாநிதி அரூஸ் எந்த துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்? இவரை வைத்து தமிழ்வின் ஓடுது. பெருமாள் போன்றோரின் ஆசான் போலும். 

பெருமாளுக்கும்  இவரை பிடிக்காது .

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

வேல்சில் இருந்து அரூஸ் என்ற பீடிகையோடு….

2009 இல் இயக்கம் ஆமியை உள்ளுக்க விட்டு அடிக்கப் போகுது என்றும் பெரிய பிளான் போடுகிறார்கள் என்றும் அதற்கு Second world war படங்களில் பார்த்த விஷயங்களை எல்லாம் எழுதி என்று புருடா விட்டவர் தான் இவர்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

எங்கே, எந்த துறையில் கல்லா நிதி பட்டம் எடுத்தார் என தெரியவில்லை.

அருஸ் இவர் புனைபெயர் என நினைக்கிறேன்.

போர்க் காலத்தில்….வேல்சில் இருந்து அரூஸ் என்ற பீடிகையோடு….  ஏதோ இரணமடு பண்டில் ஏறி நிண்டு பார்த்தவர் போல இக்பால் அத்தாஸ் முதல் கிழமை சண்டே டைம்சில் எழுதியதை + தன் கற்பனை சேர்த்து அள்ளி விட்ட வாய்வாளர் இவர்.

எப்படி வந்தவர் இன்று எப்படி அழைக்கப்படுகிறார். சும்மா அதிருதில்ல....?😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் பற்றிய தகவல்களை வழங்கிய யாழ்கள உறவுகளுக்கு நன்றி.
பிரித்தானியா இராணுவத்திற்கே ஆலோசனை வழங்குகின்ற மாதிரி இவர் பில்டப் 🙆‍♂️

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலாநிதி பிரபாகரன் என்று LANAKSRI ல் போட்டார்கள்.
படித்தவர்கள் எல்லோரும் சிறந்த ஆய்வாளர்களாக இருப்பதில்லை. கள்ளு கடையில் சிறப்பான அரசியல் ஆய்வுகள்நடைபெறுவதாக கேள்விபட்டதுண்டு. ஆனால 2009 ல் இவரின் ஆய்வு கட்டுரைகள் பலரை ஏமாற்றத்துக்கு உட்படுத்தியது.
இவரின் கல்வி தகைமை தெரிந்தால்நல்லதுவே.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.