Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது


டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்

December 4, 2024  05:53 pm

spacer.png

டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்

5.7 பில்லியன் ரூபா வரி மற்றும் மேலதிக கட்டணங்களை செலுத்த தவறியதன் காரணமாக டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் நாளை முதல் நிறுத்தப்படவுள்ளது.

குறித்த நிறுவனம் கலால் வரியை செலுத்தத் தவறியதன் காரணமாகவும் அது தொடர்பான 5.7 பில்லியன் ரூபா கலால் திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டியதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை நாளை (05) முதல் இடைநிறுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மதுபான உற்பத்தி செயல்முறையை 05.12.2024 முதல் இடைநிறுத்தவும், மேலும் வரி மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து கலால் மதுபான உரிமங்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நீட்டிக்கப்படாது என்றும் கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கலால் கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

https://tamil.adaderana.lk/news.php?nid=196839

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மெண்டிஸ் நிறுவனத்திற்கு சீல்!

December 5, 2024  09:00 pm

மெண்டிஸ் நிறுவனத்திற்கு சீல்!

டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனம் நாகொடை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்திற்கும் இன்று(5) சீல் வைக்கப்பட்டது.

மெண்டிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய மதுவரி மற்றும் அதற்கான 3 வீத கூடுதல் கட்டணம் உள்ளிட்ட 5.7 பில்லியன் ரூபாயை செலுத்த தவறியதன் காரணமாக  மதுவரி கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளின்படி, இன்று (5) முதல் அதன் மதுபான உற்பத்தி உரிமத்தை இடைநிறுத்துமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். 

அந்த உத்தரவின்படி மதுவரி திணைக்களம் மற்றும் கம்பஹாவின் மதுவரி அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அந்நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

ஆறு மணி நேரத்துக்கும் மேலான கண்காணிப்புக்குப் பிறகே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் டபிள்யூ. எம். மெண்டிஸ் கம்பனியின் அனைத்து உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என ஜா-எல மற்றும் கம்பஹா மதுவரி அத்தியட்சகர்கள் தெரிவித்தனர்.

வரி செலுத்த தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை கடந்த நவம்பர் 30ஆம் திகதி முதல் ரத்து செய்ய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

இத்தகைய பின்னணியில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணையின்றி நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (4) உத்தரவிட்டிருந்தது.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=196894

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இத்தனை பில்லியன்களா?? 

சரக்கு நல்லா தான் உள்ளால பாஞ்சு விளையாடியிருக்கு....???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உற்சாக பாணத்துக்கு தடையா? ஓ மை ஹொட்....இஸ்லாமிய சட்டம் வருமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசுடமையாக்கி தரமான சரக்கை தயாரித்து நியாய விலைக்கு விற்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, RishiK said:

அரசுடமையாக்கி தரமான சரக்கை தயாரித்து நியாய விலைக்கு விற்கவேண்டும்.

இந்த விலைக்கு விற்றே வரி கட்ட பணம் இல்லை என்றால் நியாய விலை எவ்வளவு??? எப்படி???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

இந்த விலைக்கு விற்றே வரி கட்ட பணம் இல்லை என்றால் நியாய விலை எவ்வளவு??? எப்படி???

வரி கட்ட மனம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, RishiK said:

வரி கட்ட மனம் இல்லை. 

அவ்வாறு குறிப்பிட்டு அரசு தப்பிக்க முடியாது. கட்டவேண்டியது பல பில்லியன்கள். அதுவரை அரச இயந்திரம் தூங்கவில்லை. தூங்க வைக்கப்பட்டுள்ளது???

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, விசுகு said:

அவ்வாறு குறிப்பிட்டு அரசு தப்பிக்க முடியாது. கட்டவேண்டியது பல பில்லியன்கள். அதுவரை அரச இயந்திரம் தூங்கவில்லை. தூங்க வைக்கப்பட்டுள்ளது???

தொழிலதிபர்கள் வரி செலுத்தத் தயங்கவில்லை, ஆனால் அவர்களின் வரிப்பணத்திற்கு என்ன நடக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே பிரச்சினை என்று அமைச்சர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, RishiK said:

தொழிலதிபர்கள் வரி செலுத்தத் தயங்கவில்லை, ஆனால் அவர்களின் வரிப்பணத்திற்கு என்ன நடக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே பிரச்சினை என்று அமைச்சர் கூறினார்.

இவ்வாறெல்லாம் வரி கட்டுபவர்கள் சொல்ல சட்டம் இடம் கொடுக்காது. 

இனி இத்தனை பில்லியன்களை கட்டி அவர்கள் தொழிலை தொடர்வது சாத்தியமற்றது மாத்திரமல்ல அது அவர்களுக்கு இலாபமும் தராது. 

பார்க்கலாம் அவர்கள் நாட்டை விரும்புகிறார்களா? வியாபாரிகளா என்று?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை.  இவ்வாறான பெரு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்து நிறுத்தி அரச வருமானத்தை அதிகரிக்க வழிசெய்யும்.  

இவ்வாறாக Corruption ஐ ஒழிப்பது நாட்டை பொருளாதார வளர்சசிக்கு இட்டு செல்வதற்கான முதல் படி. Welldone  NPP. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, island said:

பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை.  இவ்வாறான பெரு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்து நிறுத்தி அரச வருமானத்தை அதிகரிக்க வழிசெய்யும்.  

இவ்வாறாக Corruption ஐ ஒழிப்பது நாட்டை பொருளாதார வளர்சசிக்கு இட்டு செல்வதற்கான முதல் படி. Welldone  NPP. 

இதுவரை வரி ஏய்ப்புக்கு துணைபோன அதிகாரிகளை இனங்கண்டு சிறைக்கு அனுப்பவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, சுவைப்பிரியன் said:

அப்ப இனி குழந்தை பிறந்தால் 🤣

பாலர் வகுப்பு அனுமதிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப இனி குழந்தை பிறந்தால் 🤣

அதுக்கு Remy martin இருக்கு தானே! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, சுவைப்பிரியன் said:

அப்ப இனி குழந்தை பிறந்தால் 🤣

அவனவன் எல்லாம் கண்டபடி யோசிக்க தெய்வம் மட்டும் தான் நிறுத்தி நிதானிச்சு யோசிச்சிருக்கு...😎

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/12/2024 at 23:21, கிருபன் said:

 

டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்

December 4, 2024  05:53 pm

spacer.png

 

Mendis Special Ceylon Arrack 100% Pure... - Asia Mover Markt | Facebook

இனி மெண்டிஸ் குடிக்க ஏலாது போலை இருக்கே. 😲
இங்குள்ள, தமிழ் கடைகளில் உள்ள மெண்டிஸ் போத்திலை எல்லாம், 
வாங்கி... பதுக்கி வைக்க வேணும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப இனி குழந்தை பிறந்தால் 🤣

ஆமா இல்லெ.

Posted
5 hours ago, குமாரசாமி said:

அவனவன் எல்லாம் கண்டபடி யோசிக்க தெய்வம் மட்டும் தான் நிறுத்தி நிதானிச்சு யோசிச்சிருக்கு...😎

தெய்வத்துக்கு. ஞானக் கண்.🤣



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.