Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, goshan_che said:

ரஸ்யாவை நம்பினோர்….

பூ ஹா ஹா ஹா

அமெரிக்காவை நம்பினோர் கைவிடப்படார்...
புர்ர்ர்ர்ர்......சர்ர்ர்ர்ர்ர்....உர்ர்ர்ர்ர்....சடார்....புடார்...டிசும்,,,,டிசும் 

  • Replies 60
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ஈராக் லிபியா போல் வரும்.இதே போல் சவூதியிலும் ஜோர்தானிலும் புரட்சிகள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தங்களுக்குள் அடிபட்டு சாவார்கள்.

  • குமாரசாமி
    குமாரசாமி

    என்ன விசுகர்? பொசுக்கெண்டு உப்பிடி சொல்லிப்போட்டியள்? நீங்கள் சொல்லுற மாதிரி எல்லா நாடுகளும் சண்டை சச்சரவில்லாமல் சந்தோசமாக வாழ வெளிக்கிட்டால் உங்கடை ஆக்கள்(அமெரிக்கா,பிரான்ஸ்,ஜேர்மனி,பெரீய பிரித்தானி

  • குமாரசாமி
    குமாரசாமி

    👍🏼👍🏼👍🏼 என் மண்ணும் என் இனமும் என் மதமும் என் பெற்றோரும் என் ஆசான்களும் என் உடன் பிறப்புகளும் என் கல்விகளும் என் சூழலும் என் சுற்றாடலும் என் நண்பர்களும் நீங்கள் சொன்னதையே அறிவு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ரஸ்யாவை நம்பினோர்….

பூ ஹா ஹா ஹா

 

5 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவை நம்பினோர் கைவிடப்படார்...
புர்ர்ர்ர்ர்......சர்ர்ர்ர்ர்ர்....உர்ர்ர்ர்ர்....சடார்....புடார்...டிசும்,,,,டிசும் 

May be a doodle of text

இன்னுமா... இந்த உலகம், நம்மள நம்புது... ? ? ? 😂
அது... அவங்க விதி.  
🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

May be a doodle of text

இன்னுமா... இந்த உலகம், நம்மள நம்புது... ? ? ? 😂
அது... அவங்க விதி.  
🤣

பெயர்தான் வேறு வேறே தவிர வல்லூறு அரசு எப்போதும், எங்கும் வல்லூறு அரசுதான்.

90 இல் இப்படிதான் இந்தியா வரதராஜபெருமாளுக்கும் செய்தது.

ஆனால் இந்த வல்லூறுகளை அடியோடு பகைக்கவும் முடியாது. அப்பவும் அழிப்பார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவை நம்பினோர் கைவிடப்படார்...
புர்ர்ர்ர்ர்......சர்ர்ர்ர்ர்ர்....உர்ர்ர்ர்ர்....சடார்....புடார்...டிசும்,,,,டிசும் 

நீங்கள் தனியே எழுதுவதோடு மட்டும் நில்லாமல் மற்றையவர் எழுதுபவற்றை வாசிக்கவும் வேண்டும் என்பது என் பணிவான விண்ணப்பம்.

இங்கே உக்ரேன் ஆதரவாக எழுதும் எவரும் அமெரிக்கா பாசத்தின் உறைவிடம் என்றோ உக்ரேனை எப்போதும் கைவிடாது என்றோ எழுதியதில்லை.

நாம் எழுதும் சமயத்தில் அமரிக்கா ஆப்கானை கைகழுவிய ஈரம் கூட காயவில்லை.

ஆகவே அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்குவரின் உக்ரேன் பாடு கஸ்டம்தான் என்பதை இங்கே உக்ரேன் ஆதரவாளர்கள் பலரும் பலதடவை எழுதியுள்ளனர்.

அதுதான் நடக்கிறது.

அதே போல் ஆக்டோபர் 2023 இல் காசா போர் ஆரம்பமாக முதலே @வாலி இது மத்திய கிழக்கில் எப்படி எதிரொலிக்கும், என்ன நடக்கலாம் என்பதையும் சொல்லி இருந்தார்.

அவர் சொன்னது போலவே ஹாமாசின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புலாவின் பல்லு புடுங்கபட்டுள்ளது, பக்கத்தில் இருந்தும் அசாத்தை காப்பாற்ற முடியாதவாறு ஈரான் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவாவது அறிவித்து விட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது, புட்டின் வெட்ககேடாக கையறு நிலையில் சிரியாவில் நிற்கும்படி ஆகியுள்ளது.

ஆகவே கண்ணை மூடி கொண்டு உங்கள் மேற்கு வெறுப்பை மந்திர உச்சாடனம் செய்யாமல் - ஏனையோர் எழுதுவதை தயவு செய்து வாசியுங்கள்🙏.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விசயம் @குமாரசாமி அண்ணை, நீங்கள் மேற்கை போல அல்ல, ரஸ்யா கூட்டாளிகளை கைவிடாது என்ற தொனிப்பட எழுதினீர்கள். 1989 இல் ஆப்கானிஸ்தானில் ரஸ்யா என்ன செய்தது என்பதை மறந்துவிட்டு.

ஆனால் இப்போ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

ஆகவே கண்ணை மூடி கொண்டு உங்கள் மேற்கு வெறுப்பை மந்திர உச்சாடனம் செய்யாமல் - ஏனையோர் எழுதுவதை தயவு செய்து வாசியுங்கள்🙏.

நான் இங்கே மேற்கு வெறுப்பரசியல் செய்வதில்லை. அதை நீங்கள் முதலில் கவனத்தில் எடுக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நான் இங்கே மேற்கு வெறுப்பரசியல் செய்வதில்லை. அதை நீங்கள் முதலில் கவனத்தில் எடுக்கவும்.

OK

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் இங்கே மேற்கு வெறுப்பரசியல் செய்வதில்லை. அதை நீங்கள் முதலில் கவனத்தில் எடுக்கவும்.

ஒருபக்கச் செய்திகளை மட்டும் கேட்டு அதனை அப்படியே நம்புவதும் மற்றவர்கள் அதனை மட்டும் நம்ப வேண்டும் என்று வற்புறுத்துவதும் மற்றைய தரப்புச் செய்திகளை இணைப்போரை எதிரிகளாகக் கொள்வதும்   சரியான அணுகுமுறை அல்ல என்பது எனது உறுதியான நம்பிக்கை. 

ஆனால் ஒரு சிலர் தாங்கள் பொலிடோல் குடித்தால் மற்றவர்களும் பொலிடோல் குடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவின் கிளர்ச்சியாளர்களிற்கு உக்ரைன் ஆளில்லா விமானங்களை வழங்கியது – வோசிங்டன் போஸ்ட்

13 DEC, 2024 | 08:11 AM
image
 

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை பதவிகவிழ்ப்பதற்கு முன்பாக உக்ரைன் அவர்களிற்கு 150 ஆளில்லா விமானங்களையும் அவற்றை இயக்குவதற்காக 20 பேரையும் வழங்கியிருந்தது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் இராணுவநடவடிக்கைகளுடன் நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் இதனை தெரிவித்துள்ளது.

மத்தியகிழக்கில் ரஸ்யாவையும் அதன் சிரிய சகாவையும் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியாக உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் நான்கு ஐந்து வாரங்களிற்கு முன்னர் ஆளில்லா விமானங்களை வழங்கியிருந்தனர் என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் புலனாயவு பிரிவின் முகவர்கள் சிரியாவின் இட்லிப்பில் காணப்படுகின்றனர் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்கேய் லவ்ரோவ் செப்டம்பர் மாதம் சிரிய செய்தித்தாள் ஒன்றிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனின் முகவர்கள் புதிய தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்,கிளர்ச்சிக்காரர்களை சேர்க்கின்றனர் என அவர் தெரிவித்திருந்தார்.

உக்ரைனின் பிரதான புலனாய்வு பிரிவு சிரியாவின் இட்லிப்பில் காணப்படுகின்றனர் என கடந்த மாதம் சிரியாவிற்கான ரஸ்யாவின் விசேட பிரதிநிதி தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/201126

  • கருத்துக்கள உறவுகள்

https://www.investopedia.com/terms/s/seigniorage.asp#:~:text=Seigniorage allows governments to earn,loss instead of a gain.

சில எண்ணெய் வள  நாடுகள் பெற்றோ டொலரினை கைவிட முடிவெடுத்த பின்னணியில் அமெரிக்காவின்  பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய அமெரிக்க ஏகாதிபத்திய நிலையில் இருந்து பல்துருவ உலக ஒழுங்கு மாற்றத்திற்கு மிக சிறந்த உதாரணமாக துருக்கி தனது உலக எண்ணெய் வழங்கலின் கேந்திரமாக மாறுவதற்கு (HUB) சிரியாவில் துருக்கியின் ஆதிக்கம் முக்கியமாக உள்ளது.

இந்த நிலை அமெரிக்காவின் அதிக கடன் பொருளாதார சுமையில் அமெரிக்கா துருக்கியின் ஆதரவுடன் மீண்டும் பெட்ரோ டொலருக்கு சாதகமான சூழ்நிலையினை உருவாக்குவதற்கு விரும்பக்கூடும், அதே வேளை இரஸ்சியாவிற்கு மத்திய கிழக்கில் சிரியாவில் உள்ள தளங்கள் இராணுவ, பொருளாதார நலனை கொடுப்பதால் துருக்கியுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்தாக வேண்டும், சிரியாவில் உள்ள அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கான ஆதரவினை அமெரிக்கா விலக்குவதற்கு துருக்கி கோரினால் அதனை அமெரிக்காவினால் தட்ட முடியாது எனும் நிலையிலேயே அமெரிக்காவின் தற்போதய சூழ்நிலை உள்ளது.

உக்கிரேன் இரஸ்சிய போர் வருவதற்Kஉ முன்னர் இப்படி ஒரு நிலை வரும் என யாராவது நினைத்தாவது பார்த்திருபார்களா? தற்போதுள்ள நிலை பனிப்போர் காலத்திலும் நிலவாத  சிக்கலான நிலையாக மாறிவருகின்றது.

இந்த உலக மாற்றத்தில் எவ்வாறு எமது  நலனை நிலை நிறுத்த முடியும் என ஆராய வேண்டும்.

ஆனால் இந்த துருக்கிய ஆதரவு கிளர்ச்சியாளர்களினால் சிரியாவில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலையினை இந்த அமெரிக்க மற்றும் இரஸ்சிய வல்லரசுகள் வேடிக்கை பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2024 at 05:51, விசுகு said:

 

எனது உறவினர்களே இங்கிருந்து குவைத்தில் சொத்து வாங்கி விடுகிறார்கள். எனவே நம்பிக்கை தரும் இடமாக உள்ளது அல்லவா?

எப்படி குவைத்தில் வாங்கினவர்கள்😂; விளக்க முடியுமா???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.