Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணிக்கு இடையூறு

யாழ். போதனா வைத்தியசாலையின்  பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, பணிக்கு இடையூறு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

  • Replies 140
  • Views 8.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யானை... தனக்கு தீங்கு செய்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்...   நினைத்து வைத்து பழிவாங்குமாம். 😂 அதே குணம் கொண்டவர்தான்,  வைத்தியர் அர்ச்சுனா...  என்று சொல்கிறார்கள். 🤣 ஆக... சத்தியமூர்த்திக்

  • அர்ச்சுனாவை இன்னும் ஆதரிக்கும், அவர் மீது நம்பிக்கை வைக்கும் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு இது சமர்ப்பணம். சத்தியமூர்த்தி, எந்த ஒரு பா.உ வின் கீழும் இருக்கும் ஊழியர் அல்ல. பா.உ வுக்கு முறைப்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு... டக்ளஸ் தேவானந்தா, திறந்த வீட்டிற்குள் நுழைந்த 
🐕  நாலுகால்  பிராணி 🐕‍🦺 மாதிரி போகாத அலுவலகமா? கல்விக்கூடமா? வைத்தியசாலையா...?
அப்போ... ஒருவரும் காவல்துறையிடம் முறையிடவில்லையே, ஏன்..ஏன்... ஏன்...? 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முன்பு... டக்ளஸ் தேவானந்தா, திறந்த வீட்டிற்குள் நுழைந்த 
🐕  நாலுகால்  பிராணி 🐕‍🦺 மாதிரி போகாத அலுவலகமா? கல்விக்கூடமா? வைத்தியசாலையா...?
அப்போ... ஒருவரும் காவல்துறையிடம் முறையிடவில்லையே, ஏன்..ஏன்... ஏன்...? 😂

சத்தியமூர்த்தி    ஏழரை சனி தொடங்கி விட்டது   இதுவரை நடந்த ஊழல்   அம்பலம் ஆகப் போகிறது என்று கவலைப்படுகிறார் அவரிடம்  [டக்ளஸ் ]

துப்பாக்கி இருந்தது 

அடிபெடி இருந்தது 

அரசாங்கம் இருந்தது  

அருச்சுனாவிடம். என்ன உண்டு   ???   பயப்பட.  இன்னும் கொஞ்ச நாள்  சிறையில் போட விரும்புகிறார்கள்   ஆனால் இந்த சாவகச்சேரி மக்கள்   எனது தொகுதி மக்கள்   அர்ச்சுனாவை   கடவுளாக. பாரக்கிறார்கள 🤣🤣.  எனவே… சத்தியமூர்த்தி  வெல்ல முடியாது   தோல்வி நிச்சயம் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

சத்தியமூர்த்தி    ஏழரை சனி தொடங்கி விட்டது   இதுவரை நடந்த ஊழல்   அம்பலம் ஆகப் போகிறது என்று கவலைப்படுகிறார் அவரிடம்  [டக்ளஸ் ]

துப்பாக்கி இருந்தது 

அடிபெடி இருந்தது 

அரசாங்கம் இருந்தது  

அருச்சுனாவிடம். என்ன உண்டு   ???   பயப்பட.  இன்னும் கொஞ்ச நாள்  சிறையில் போட விரும்புகிறார்கள்   ஆனால் இந்த சாவகச்சேரி மக்கள்   எனது தொகுதி மக்கள்   அர்ச்சுனாவை   கடவுளாக. பாரக்கிறார்கள 🤣🤣.  எனவே… சத்தியமூர்த்தி  வெல்ல முடியாது   தோல்வி நிச்சயம் 

animiertes-elefant-bild-0278

யானை... தனக்கு தீங்கு செய்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்...  
நினைத்து வைத்து பழிவாங்குமாம். 😂
அதே குணம் கொண்டவர்தான்,  வைத்தியர் அர்ச்சுனா...  என்று சொல்கிறார்கள். 🤣
ஆக... சத்தியமூர்த்திக்கு, "ஏழரை" ஸ்ரார்ட் பண்ணி விட்டது. 😂 🤣  animiertes-gefuehl-smilies-bild-0048

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
 
 
The 10 Best 'Tom and Jerry' Cartoons
 
வைத்தியர் அர்ச்சனாவும் -வைத்தியர் சத்தியமுர்த்தியரும்.🤭

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர் சத்தியமூர்த்திக்கு மடியில் கனம் இருக்கிறது. யாழ் மருத்துவமனைக்கு என சேர்க்கப் பட்ட நன்கொடைகளை தன்னுடைய தனியார் மருத்துவ மனைக்குப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. கிடைத்த நன்கொடை பற்றிய தகவல்களை வெளியிட்டே இந்த குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிக்கலாம்.

சிறு குழந்தையின் கை அகற்றப் பட்ட கேஸ் பற்றிய விசாரணைக்கு என்ன ஆயிற்று?

எல்லாவற்றையும் மௌனம் மூலம் மறக்கடிக்க முயற்சிக்கிறார் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, யாயினி said:
 
வைத்யர் அர்ச்சனாவும் -வைத்தியர் சத்தியமுர்த்தியரும்.🤭

running away tom and jerry GIF - Find & Share on GIPHY  Tom And Jerry Tom In Love GIFs | Tenor  200w.gif?cid=6c09b95288ku476uoeqio0c159w

வருட இறுதியில் இரண்டு பேருக்கும் நல்ல போட்டி ஆரம்பமாகி இருக்கு.
நத்தார்,  புதுவருடம்,  தைப்பொங்கல்... எல்லாம் சேர்த்து 
பிரமாண்டமான ஸ்பெஷல் தயாரிப்பு ஒன்று  நடக்கப் போகுது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அருச்சுனாவிடம். என்ன உண்டு   ???   பயப்பட.  இன்னும் கொஞ்ச நாள்  சிறையில் போட விரும்புகிறார்கள்   ஆனால் இந்த சாவகச்சேரி மக்கள்   எனது தொகுதி மக்கள்   அர்ச்சுனாவை   கடவுளாக. பாரக்கிறார்கள 🤣🤣.  எனவே… சத்தியமூர்த்தி  வெல்ல முடியாது   தோல்வி நிச்சயம் 

🤣....................

மக்கள் தேவை இருந்தால் கடவுளாகப் பார்ப்பார்கள். தேவை முடிந்தவுடன், கோவில் கதவையே உடைத்தும் விடுவார்கள்....................

இங்கே என்ன வெற்றியும், தோல்வியும்................. முடிவில்லாத அஞ்சலோட்டம் போல தடியை மாற்றி மாற்றிக் கொடுத்து ஓடிக் கொண்டேயிருப்பார்கள்.........

சும்மா இருந்த கேதீஸ்வரன் மீதே போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்றார் என்று போகிற போக்கில் ஒரு குண்டைத் தூக்கிய வீசிய அர்ச்சுனா (அதையும் பலர் நம்பி சமூக ஊடகங்களில் கொண்டு திரிந்தனர்..............🫣), இன்னும் ஏன் சத்தியனை மட்டும் விட்டு வைத்திருகின்றார், இத்தனைக்கும் சத்தியன் மீது பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே இருக்கின்றன................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, RishiK said:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, பணிக்கு இடையூறு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

முன்பே சொல்லிப்போட்டு வந்தால் எப்படி கள்ளரை பிடிப்பது? 

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கன் Trump 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

சிறீலங்கன் Trump 🤣

எப்படி??    நான் முகநூல் ஊடாக அறிந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  பணியாற்றும் பலர்  [எண்ணிக்கை மறந்து விட்டேன் ] நிரத்தர நியமனம்   ஒழுங்காக போதிய ஊதியம் இன்றி   பல வருடங்களாக வேலை வங்கப்படுகிறார்கள் .....இவர்களின் வளர்ச்சிக்கு சத்தியமூர்த்தி   தடையாக இருகிறார்  இது சம்பந்தமாக  அண்மையில்   ஊழியர்கள் கொழும்பில் சுகாதார அமைசசில். கலந்துரையாடி விட்டு   யாழ்ப்பாணம் திருமபினார்கள்.  இவர்களிடமிருந்து நாங்கள் சுயவிருப்பில். தான் சேவைகள் செய்கிறோம்  என்று சத்தியமூர்த்தி   கடிதம் வேண்டி வைத்துள்ளார்   இதை அறிந்து தான்  அர்ச்சுனா  யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு வந்தார்    செய்தி உண்மை எனில்   மிகவும் கேவலமான விடயமும். கவலைப்பட வேணடியதுமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கே பதில் சொல்ல மறுக்கும் சொல்ல முடியாது போ என மிரட்டும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!!😡
அங்கே சிகிச்சை பெறுகின்ற மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற பொழுது அவர்களுக்கு பதில் அளிப்பாரா???
இல்லை என்பதை இதன் மூலம் நமக்கு தெளிவாக தெரிகின்றது 🥹🥹🥹.
இவ்வாறான யாழ் போதன வைத்தியசாலை பணிப்பாளராக இவ்வளவு காலம் பணியாற்றுகிறார் என்றால் அவர்கள் பின்னால் அரசியல் செல்வாக்கு இருக்கின்றது என்றே பொருள்படும்.
வைத்தியர் Mp Archchuna Ramanathan கேட்க்கும் வினாவுக்கு அவர் பதில் சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்சினை வராது.
நாயை வெளியேற்றுவது போல் பாதுகாப்பு அதிகாரியை பணிக்கின்றார் உண்மையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உரிய மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும் யாராக இருந்தாலும்😡😡.
வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் தொடர்பான பிரச்சனை தொடர்பாக வினாவுவதற்காக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால்!!!!😡 ஒரு அநீதி இடம்பெறும் போது அதனை கேள்வி கேட்க வினாவுவதற்கு பொதுமக்களுக்கு உரிமை இருக்கின்றதா இல்லை!!!😡
சிகிச்சையின் போது இடம்பெறுகின்ற கொலைகள் எந்த கணக்கில் காட்டப்படுகின்றதோ?? ஒவ்வொரு உயிரிழப்புக்கு பின்னால் அவர்களது குடும்பம் படுகின்ற வேதனைகள் சொல்லன்னா துயரங்கள் அவர்களை நம்பி இருக்கின்ற குடும்பத்தின் நிலை யாராவது எண்ணி பார்த்து இருக்கிறீர்களா??🥹🥹🥹
யாழ் போதானா வைத்தியசாலை பணிப்பாளரின் இவருடைய மனநிலையில் குறைபாடு இருக்கின்றது💉. வைத்தியசாலை பணிப்பாளருக்கு உரிய மரியாதை அவர் அனைவரிடமும் எதிர்பார்ப்பது போல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை கொடுத்துத்தான் ஆக வேண்டும் இல்லை என்று அடம் பிடிப்பது எவ்வாறு???
பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு வைத்தியரை வெளியேற்ற முயல்வதா அவரது செயற்பாடு!!!! உரியவர்கள் வினாவுகின்ற பொழுது அதற்குரிய பதிலை கொடுத்திருக்க வேண்டும் அல்லவா???
ஒரு பதவி நிலை அதிகாரியாக இருந்தால் சரியான முறையில் பதில்களை வழங்குதல் வேண்டும்..
அனைவருக்கும் இதனை பகிர்வதன் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்......

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின்,  வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ். போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா,  தான் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், தன்னை “சேர்” என்று அழைக்குமாறும் கூறி எம்மோடு முரண்பட்டார். 

அவரை சேர் என்று அழைக்க முடியாது என்று பதிலளித்ததற்கு, என்னை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், நாடாளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் கூறினார். 

அத்தோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பம் விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது. 

மீண்டும் ஒருமுறை அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு  குழப்பம் விளைவிக்க முற்படுவராயின் அவர் வாசலிலேயே வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

 
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பணிப்பாளருக்கு ஈகோ பிரச்சனையோ. 

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினரை சேர் என்று அழைக்கவேண்டும் என்ற எந்தவொரு அவசியமுமில்லை.  வைத்திய நிர்வாக சேவையின்  மூப்பு அடிப்படையில் சத்தியமூர்த்தியைத் தான் அர்ச்சுனா சேர் என்று அழைக்கவேண்டும். கடைசியில் அர்ச்சுனா கட்டக் கோவணங்கூட இல்லாமல் ஓடப்போகின்றார். அரியத்தை பப்பாவில் ஏத்தின கோஶ்டி இவரையும் பப்பாவில ஏத்திவிட்டுட்டு நிக்குதுகள். ஏறினால் பிறகு  அதுகள் ஓடீடுங்கள். தங்கம் கூட கிட்ட நிக்காது! 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வாலி said:

நாடாளுமன்ற உறுப்பினரை சேர் என்று அழைக்கவேண்டும் என்ற எந்தவொரு அவசியமுமில்லை.  வைத்திய நிர்வாக சேவையின்  மூப்பு அடிப்படையில் சத்தியமூர்த்தியைத் தான் அர்ச்சுனா சேர் என்று அழைக்கவேண்டும். கடைசியில் அர்ச்சுனா கட்டக் கோவணங்கூட இல்லாமல் ஓடப்போகின்றார். அரியத்தை பப்பாவில் ஏத்தின கோஶ்டி இவரையும் பப்பாவில ஏத்திவிட்டுட்டு நிக்குதுகள். ஏறினால் பிறகு  அதுகள் ஓடீடுங்கள். தங்கம் கூட கிட்ட நிக்காது! 😂

இருக்கட்டும் வழக்கின் முடிவை பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனாவை இன்னும் ஆதரிக்கும், அவர் மீது நம்பிக்கை வைக்கும் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு இது சமர்ப்பணம்.

சத்தியமூர்த்தி, எந்த ஒரு பா.உ வின் கீழும் இருக்கும் ஊழியர் அல்ல. பா.உ வுக்கு முறைப்பாடு யாழ் மக்களிடமிருந்து கிடைத்தால், அவர் நேரே முறைப்பாடு கிடைத்த இடத்திற்குப் போகலாம் என்று இலங்கை அரசியல் அமைப்பில் எழுதியிருக்கும் என நான் நம்பவில்லை. அர்ச்சுனா செய்திருக்க வேண்டியது, ஒரு கடிதம் அல்லது சந்திப்பு மூலம் சத்தியமூர்த்தியின் மேலதிகாரியான சுகாதார அமைச்சுக்கு அறிவிப்பது தான்.

யாராவது மெர்வின் சில்வாவிற்கு ரூபவாகினியில் நடந்ததை அர்ச்சுனா அவர்களுக்கு நினைவூட்டினால் நல்லது என நினைக்கிறேன்.

பி.கு: இது சத்தியமூர்த்தியின் செயலின்மையை ஆதரிக்கும் கருத்தல்ல. ஆனால், அவர் இந்த விடயத்தில் அர்ச்சுனாவை நடத்திய விதம் சட்ட விதிகளின் படி சரியானது.  

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறினால் நடவடிக்கை எடுப்போம்! அர்ச்சுனாவை எச்சரிக்கும் வைத்தியர் சத்திய மூர்த்தி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நாடாளுமன்ற உறுப்பினரை சேர் என்று அழைக்கவேண்டும் என்ற எந்தவொரு அவசியமுமில்லை.  வைத்திய நிர்வாக சேவையின்  மூப்பு அடிப்படையில் சத்தியமூர்த்தியைத் தான் அர்ச்சுனா சேர் என்று அழைக்கவேண்டும். கடைசியில் அர்ச்சுனா கட்டக் கோவணங்கூட இல்லாமல் ஓடப்போகின்றார். அரியத்தை பப்பாவில் ஏத்தின கோஶ்டி இவரையும் பப்பாவில ஏத்திவிட்டுட்டு நிக்குதுகள். ஏறினால் பிறகு  அதுகள் ஓடீடுங்கள். தங்கம் கூட கிட்ட நிக்காது! 😂

🤣.............

இது தான் இவரைத் தேர்தெடுத்த மக்கள் இவரிடம் எதிர்பார்த்தது.............. உண்மையிலேயே. இவர் இப்படியே கைதட்டல்களுக்காக ஒரு வித்தைக்காரர் போல மரங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்க வேண்டியது தான்..............🫣.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் வந்தால் காவலர்கள் மூலம் வாயிலில் பிடித்து போலிசிடம் ஒப்படைப்போம். இது யாரோ தனியார் வைத்தியசாலை பணிப்பாளர் விடுகின்ற எச்சரிக்கையோ? என்ர வீட்டு வளவுக்கை வந்தால் போலிசை கூப்பிடுவன். அரசாங்க வைத்தியசாலை பொறுப்பதிகாரிக்கு காணப்படவேண்டிய நல்ல பண்பு இது? 

மக்களின் தெரிவை சகிக்க முடியாதவர்கள் குத்தி முறிகின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

யாராவது மெர்வின் சில்வாவிற்கு ரூபவாகினியில் நடந்ததை அர்ச்சுனா அவர்களுக்கு நினைவூட்டினால் நல்லது என நினைக்கிறேன்.

large.IMG_7881.jpeg.24c87cc77ae53dd9390d

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில் குந்திக்கொண்டு இருந்த ஆட்களுக்கு, பள்ளிக்கூடத்தைக் கட்டி,  சீருடை கொடுத்து, புத்தகம் பென்சில் கொடுத்து,  உயர் கல்வியை இலவசமாகக் கொடுத்து, அங்கே கற்பதற்கு பணமும் கொடுத்து, படிப்பு முடிய வேலையும் கொடுத்துவிட, கல்வி என்பது தன்னைப் பண்படுத்துவதற்குப் பதிலாக  அந்தக் கல்வித் தகமையை கொழுத்த சீர்தனத்திற்கு மூலதனமாகப் பாவித்த யாழ்ப்பாணீஸ் க்கு இதுவும் தேவை. இதற்கு மேலும் வரும்

யாழ்ப்பாணீஸ்  இப்போ தலையில் கை வைத்தபடி,........

🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நியாயம் said:

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் வந்தால் காவலர்கள் மூலம் வாயிலில் பிடித்து போலிசிடம் ஒப்படைப்போம். இது யாரோ தனியார் வைத்தியசாலை பணிப்பாளர் விடுகின்ற எச்சரிக்கையோ? என்ர வீட்டு வளவுக்கை வந்தால் போலிசை கூப்பிடுவன். அரசாங்க வைத்தியசாலை பொறுப்பதிகாரிக்கு காணப்படவேண்டிய நல்ல பண்பு இது? 

மக்களின் தெரிவை சகிக்க முடியாதவர்கள் குத்தி முறிகின்றார்கள். 

யாழ்ப்பாண பா.உ யாழ் மருத்துவமனைகளுக்குள் வரலாம். பா.உ மட்டுமல்ல, எவரும் வெளிநோயாளர் போகக் கூடிய இடம் வரை வரலாம். ஆனால், மருத்துவமனைப் பொறுப்பாளரின் அனுமதியில்லாமல் விடுதியுட்பட்ட உள் பகுதிகளுக்கு யாரும் போக முடியாது. ஏன்? அந்தக் கட்டிடத்திற்குள் இருப்போரின் நலனுக்கு பொறுப்பாளர் தான் பொறுப்பு. "சந்திப்பு நேரம் நியமித்த பின்னர் வாருங்கள்" என்கிறார் சத்தியமூர்த்தி. அதுவே முறை.

சாதாரண மக்களை விட, பா.உக்களுக்கு ஏராளமான சலுகைகள் (privileges) பாராளுமன்றத்தின் உள்ளேயும், பா. உ கடமையை செய்யும் போது பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருக்கின்றன. சும்மா திறந்திருக்கும் கட்டிடங்களுக்குள் நுழைந்து பா.உக்கள் "கடமை செய்கிறேன்" என்று "சலுகை" கேட்க முடியாது.

உண்மையில், அர்ச்சுனாவைப் பாராளுமன்றம் அனுப்பிய வாக்காளர்கள் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். Elections have consequences😎!

  • கருத்துக்கள உறவுகள்


பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.