Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21+

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதியும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் - அஷாட்டின் தந்தையுமான ஹபீஸ் அல் - அசாட்டின் கல்லறையைக் கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து அழித்துள்ளனர். 

54 ஆண்டு கால ஆட்சியைக் கவிழ்ந்துள்ள கிளர்ச்சியாளர்கள், முன்னாள் ஜனாதிபதியின் சொந்த ஊரில் உள்ள கல்லறையையே இவ்வாறு அழித்துள்ளனர். 

அதேநேரம், ஆட்சி கவிழ்க்கப்பட்ட சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் - அஷாட், ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். 

ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் இதனை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். 

இவ்வாறான பின்னணியில் சிரியாவில் உள்ள பல ஆயுத களஞ்சிய சாலைகளை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
 
https://www.hirunews.lk/tamil/390530/சிரிய-முன்னாள்-ஜனாதிபதியின்-தந்தை-கல்லறையை-தீ-வைத்து-அழித்த-கிளர்ச்சியாளர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்து முறைப்படி… ஈமச்சடங்கு செய்துள்ளார்கள் போலுள்ளது. 🥸

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

இந்து முறைப்படி… ஈமச்சடங்கு செய்துள்ளார்கள் போலுள்ளது. 🥸

அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும்.

அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும்.

அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.

May be an image of 2 people and temple

அல்லாரும்... ஒண்ணுக்க ஒண்ணா இருந்தா... ஒலகத்தில சண்டை ஏது, சச்சரவு  ஏது. 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, கிருபன் said:

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதியும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் - அஷாட்டின் தந்தையுமான ஹபீஸ் அல் - அசாட்டின் கல்லறையைக் கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து அழித்துள்ளனர். 

கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு இப்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் நினைவிடம், சிலை, கல்லறை என்று வைத்தால், பின்னர் என்றோ ஒரு நாள் அவை அழிக்கப்படும் போல................

தாங்கள் கொடுங்கோலர்கள், மக்கள் விரோதிகள் என்று அறியாமல் ஒரு மாய உலகத்துக்குள்ளேயே வாழ்ந்து இருக்கின்றார்கள்.................... 

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ரசோதரன் said:

கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு இப்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் நினைவிடம், சிலை, கல்லறை என்று வைத்தால், பின்னர் என்றோ ஒரு நாள் அவை அழிக்கப்படும் போல................

தாங்கள் கொடுங்கோலர்கள், மக்கள் விரோதிகள் என்று அறியாமல் ஒரு மாய உலகத்துக்குள்ளேயே வாழந்து இருக்கின்றார்கள்.................... 

உண்மைதான்.

ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தாலும், இடித்தாலும் மக்களுக்காக மரணித்தவர்கள் அவர்கள் மனங்களில் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

மாற்றான் அழித்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்கும் ஐயா…

ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை

மண்ணில் அனலே முளைக்கும் ஐயா….

-புதுவை இரத்திரதுரை-

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

உண்மைதான்.

ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தாலும், இடித்தாலும் மக்களுக்காக மரணித்தவர்கள் அவர்கள் மனங்களில் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

மாற்றான் அழித்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்கும் ஐயா…

ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை

மண்ணில் அனலே முளைக்கும் ஐயா….

-புதுவை இரத்திரதுரை-

👍...............

ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍.

மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள்.

சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்.

இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, goshan_che said:

ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தாலும், இடித்தாலும் மக்களுக்காக மரணித்தவர்கள் அவர்கள் மனங்களில் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

ஆக்கிரமிப்பாளர்களாயினும் சரி ஆட்சியாளர்களாயினும் சரி அவரவர்களுக்கென வீரர்களும் ஆதரவாளர்களும் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, குமாரசாமி said:

ஆக்கிரமிப்பாளர்களாயினும் சரி ஆட்சியாளர்களாயினும் சரி அவரவர்களுக்கென வீரர்களும் ஆதரவாளர்களும் இருப்பார்கள்.

நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே?

ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள்.

39 minutes ago, ரசோதரன் said:

மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள்.

❤️❤️❤️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே?

ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள்.

அனுர காலமல்ல ஜேஆர் காலத்திற்கு முன்பாக இருந்தே சிங்கள கட்சிகளுக்கு தமிழர் பிரதேசங்களில் கணிசமான வாக்குகளும் ஆதரவுகளும் இருந்துள்ளதை மறக்க/ மறைக்க முடியாத துர்ப்பாக்கய வரலாறு தமிழர்களுக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

அனுர காலமல்ல ஜேஆர் காலத்திற்கு முன்பாக இருந்தே சிங்கள கட்சிகளுக்கு தமிழர் பிரதேசங்களில் கணிசமான வாக்குகளும் ஆதரவுகளும் இருந்துள்ளதை மறக்க/ மறைக்க முடியாத துர்ப்பாக்கய வரலாறு தமிழர்களுக்கு உண்டு.

உண்மைதான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு  கிடைத்ததற்கு  - அசாத்தும், தகப்பனும் காரணம்.

அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின்  மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை  நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும்.

சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால்.

அசாத் வென்று  இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும்  உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட)

மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை  தூக்கி பிடிக்கிறது.  

(அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக  கைது செய்து  போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை -  மறுக்க  முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து  இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?)

ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.

  • Like 1
  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, Kadancha said:

அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக  கைது செய்து  போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை -  மறுக்க  முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து  இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?)

இதை யாழ்களத்தில் fact-check பண்ண, மறுத்துரைக்க ஒருவரும் இல்லையா?

பழையகாய் ஒன்று பச்சை வேறு குத்தியுள்ளார்🤷‍♂️.

@valavan @ரஞ்சித்

Edited by goshan_che
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க ஒரு விதமான மனம் வேண்டும்!

இப்போது  சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியர் நல்லவர்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் அசாத்தை விட மோசமானவர்களாக இருக்கப்போவதில்லை என்று சிரிய மக்களே சொல்கின்றார்கள்.

  • Like 4
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடப் பாவிகளா................ அசாத் போன்ற ஒருவருக்காகவும் நியாயம் கதைப்பீர்களா.............. இங்கு நீங்கள் அசாத்திற்காக நியாயம் சொல்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு தீராத வெறுப்பு வேறு எங்கோ ஒரு இடத்தில் இருக்கின்றது என்று பொருள்........................🫣.

அது உள்ளிருந்தே கொல்லும்.........

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, கிருபன் said:

இப்போது  சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியர் நல்லவர்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் அசாத்தை விட மோசமானவர்களாக இருக்கப்போவதில்லை என்று சிரிய மக்களே சொல்கிறார்கள்,

"சிறீலங்கன் ஆமி நல்லம்" என்று சிங்களவர்கள் சொல்வதுபோல இருக்கிறது  மேற்படி கூற்று,.🤣

ஜிஹாதிக்கள் நல்லவர்கள் என்று சிரிய குர்திஸ் இன மக்களும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பாகப் பெண்களும் சொல்ல வேண்டும்.

குறிப்பு:  ஒவ்வொருவருடைய உண்மையான நிறங்கள் வெளிச்சத்திற்கு வருவது நன்மையானதே. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, Kapithan said:

"சிறீலங்கன் ஆமி நல்லம்" என்று சிங்களவர்கள் சொல்வதுபோல இருக்கிறது  மேற்படி கூற்று,.🤣

அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan.

நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kadancha said:

பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக  கைது செய்து  

மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு. 

ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான்.

4 hours ago, goshan_che said:

இதை யாழ்களத்தில் fact-check பண்ண, மறுத்துரைக்க ஒருவரும் இல்லையா?

பழையகாய் ஒன்று பச்சை வேறு குத்தியுள்ளார்🤷‍♂️.

@valavan @ரஞ்சித்

புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை.

அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு.

பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல,

அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை.

அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை. 

புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே.

அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்?

நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா?

சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல்.

பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் ,

இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, கிருபன் said:

அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan.

நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.

நன்றி கிருபன், 

யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, valavan said:

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்?

நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா?

சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல்.

பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் ,

இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?

முதலில் உங்கள் தெளிவான, நீண்ட பதிலுக்கும், மேலே புலிகள் மீது சொல்லப்பட்ட ஆதாரமற்ற கருத்துக்கு நீங்கள் கொடுத்த மறுத்தானுக்கும் நன்றி.

உங்கள் இருவரையும் சுட்ட காரணம் உண்டு.

1. யாழை ஆரம்பகாலத்தில் இருந்து வாசிப்பவன் என்ற வகையில் - ஒரு காலத்தில் இங்கே பல புலிகளின் பிரச்சார பீரங்கிகள் இருந்தார்கள். கால ஓட்டத்தில் அவர்கள் குண்டுகள் எல்லாம் புஸ்ஸாகி விட்டது. எனக்கு தெரிய இப்போ புலிகள் மீது தவறான கருத்து எழுந்தால் - நீங்கள் இருவரும்தான் பதில் எழுதுகிறீர்கள். நான் வரலாற்றின் தரவுகள் என சிலதை திருத்தி எழுதுவதுண்டு. எவரும் எழுதாவிட்டால் விசுகு அண்ணை எழுதுவார்.

நான் என்றும் புலிகளின் ஆதரவாளன் என்ற profile இல் யாழில் எழுதியதில்லை. அவர்கள் தியாகங்களை மதிக்கும் இயக்கங்களுக்கு பொதுவான மனிதனாகிய நான் எழுதுவதை விட, இதற்கான பதில் அவர்களின் ஆதரவாளர்களான உங்களிடம் இருந்து வருவது சிறப்பு என எண்ணினேன்.

2.  ஆர்பரிக்கவில்லை. ஆனால் நிச்சயம் உங்கள் பக்கம் இருந்தே நானும் இதை அணுகுகிறேன். அதனால்தான் fact-check பண்ண எவரும் இல்லையா என கேட்டேன்.

அசாத்துக்கு வெள்ளை அடிக்கும் ஆர்வத்தில், புலிகள் சக இயக்கங்கள் மீது செய்த வன்முறை மிகவும் பெருப்பித்து காட்டப்பட்டது மட்டும் இல்லாமல் குடும்பங்களை கைது செய்தார்கள் என்ற நடக்காத தகவல் கூட எழுதப்படுகிறது.

புலிகள் மிக மோசமான முறையில் சக போராளிகளை 86-87 இல் அழித்தார்கள் மறுக்கவில்லை. ஆனால் அசாத் எதிர்க்கும் போராளிகளை மட்டும் அல்ல, அவர்களின் ஊர்களையே அழித்தார். இரசாயன குண்டுகள் போட்டார். பல்லாயிரக்கணக்கில் மக்களை சிறை வைத்தார். பல நூறு மனித படுகொலை கூட்டு புதைகுழிகளை நாட்டில் விதைத்துளார் (mass graves). இவை எதையும் புலிகள் செய்யவில்லை. இவை எல்லாவற்றையும் வெள்ளை அடிக்க, புலிகளும் இதையே செய்தார்கள் என்ற தரவு-பிழை கையாளப்படுகிறது.

3.  முன்பும் எழுதியுள்ளேன், எம்மை மேற்கு மீதான ஒரு வெறுப்பு நிலையில் வைத்திருக்க எவரோ விரும்புகிறார்கள். அது சீனாவோ ரஸ்யாவோ அல்ல. அவர்கள் எம்முடன் மினெக்கெடுவதில்லை. 

ஜெய் ஹிந்த்!

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan.

நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.

ஆறுதலாக வாசித்து, கிரகித்த காரணத்தால்தான் சிறுபான்மையினர் கொண்டாட வேண்டும் என்று எழுதியிருந்தேன்.  😁

யார் கொண்டாடுகிறார்கள் என்பது முக்கியமல்லவா? 

கழுத்தை அறுக்கும் பெரும்பான்மை  சுனி முஸ்லிம்கள் கொண்டாடுவதால் என்ன பயன்? 

2 hours ago, valavan said:

மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு. 

ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான்.

புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை.

அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு.

பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல,

அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை.

அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை. 

புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே.

அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்?

நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா?

சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல்.

பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் ,

இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?

விபு க்கள் இலங்கை அரச சார்பு, இந்தியா சார்பு  உளவாளிகள், போராளிக் குழுக்கள் பலவற்றின் குடும்ப உறுப்பிணர்களைக் கது செய்து (?) அல்லது கூட்டிக்கொண்டுபோய்  இரவிரவாக இந்தியாவிற்கு நாடு கடத்தியிருந்தார்கள், பாஸ் கொடுத்து வடக்கு கிழக்கிற்கு வெளியே அனுப்பியிருந்தார்கள். 

இது வரலாறு. பலருக்கும்  இது தெரியும்.  எனக்கும் தெரியும். 

சிலர் இவற்றை அறியாமல் இருக்கலாம். 

ஆனால் விடயம்  உண்மை. 

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kadancha said:

குடும்பங்கள் விடுக்கப்ட்டது

1 hour ago, Kapithan said:

விபு க்கள் இலங்கை அரச சார்பு, இந்தியா சார்பு  உளவாளிகள், போராளிக் குழுக்கள் பலவற்றின் குடும்ப உறுப்பிணர்களைக் கது செய்து (?) அல்லது கூட்டிக்கொண்டுபோய்  இரவிரவாக இந்தியாவிற்கு நாடு கடத்தியிருந்தார்கள், பாஸ் கொடுத்து வடக்கு கிழக்கிற்கு வெளியே அனுப்பியிருந்தார்கள். 

இது வரலாறு. பலருக்கும்  இது தெரியும்.  எனக்கும் தெரியும். 

மேலே பொத்தாம் பொதுவாக கடஞ்சா புலிகள் குடும்பங்களை  கைது செய்து பின்னர் விடுவித்தார்கள் என்று சொல்லியிருந்தார், நீங்கள் தெள்ள தெளிவாக அவர்களை வடக்கு கிழக்கைவிட்டு வெளியே அனுப்பினார்கள் என்று சொல்கிறீர்கள், 

ஆக கடஞ்சாவைவிட புலிகளால் வெளியே அனுப்பப்பட்ட  மாற்று இயக்க போராளி  சில குடும்பங்கள் , அவர்களின் விபரங்களாவது நீங்கள் துல்லியமாக தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு.

அதில் ஒன்றிரண்டையாவது சொல்வீர்களா? இது உங்கள் கருத்தின்மேல் சந்தேகமோ அல்லது உண்மை தன்மையை பரிசோதிக்கும் முயற்சியோ அல்ல, மாறாக ஒரு விடயத்தை ஐயம் திரிபுற அறிந்தவர்களிடம் தகவல் பெற்றுக்கொள்ளும் முயற்சி மட்டுமே.

அவர்கள் விபரங்களில் ஒன்றிரண்டை வெளியிடுவதால் அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் பாதுகாப்பு பிரச்சனையும் வந்துவிடபோவதில்லை, ஏனென்றால் இன்று புலிகளும் இயங்கு நிலையில் இல்லை, மாற்று  இயக்கங்களும் இலங்கை அரசு சாசனத்தையும் சார்பையும் ஏற்றுக்கொண்டு எவ்வளவோ காலமாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

இதை யாழ்களத்தில் fact-check பண்ண, மறுத்துரைக்க ஒருவரும் இல்லையா?

பழையகாய் ஒன்று பச்சை வேறு குத்தியுள்ளார்🤷‍♂️.

@valavan @ரஞ்சித்

புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர்.

அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.